03-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுடைய இந்தப் புதிய மரம் மிக இனிமையானது. இந்த இனிய மரத்திற்குத் தான் புழு, பூச்சிகள் வருகின்றன. புழுக்களை அழித்து விடுவதற்கான மருந்து மன்மனாபவ.

கேள்வி:
பாஸ் வித் ஆனர் ஆகக் கூடிய குழந்தைகளின் அடையாளம் என்னவாக இருக்கும்?

பதில்:
அவர்கள் ஒரு பாடத்தில் மட்டுமல்ல, அனைத்துப் பாடங்களிலும் முழு கவனம் செலுத்து வார்கள். ஸ்தூல (சரீர) சேவையின் பாடம் கூட நன்றாக உள்ளது. அநேகருக்கு சுகம் கிடைக் கின்றது. இதனாலும் மார்க்குகள் சேமிப்பாகிறது. ஆனால் அதனுடன் கூடவே ஞானமும் வேண்டும் என்றால் நல்ல நடத்தையும் வேண்டும். தெய்வீக குணங்கள் மீது முழு கவனம் இருக்க வேண்டும். ஞானம் யோகம் முழுமையாக இருக்க வேண்டும். அப்போது பாஸ் வித் ஆனர் ஆக முடியும்.

பாடல்:
அவரும் நம்மை விட்டுப் பிரிய மாட்டார்........

ஓம் சாந்தி.
குழந்தைகள் என்ன கேட்டீர்கள்? குழந்தைகளுக்கு யாரிடம் மனம் ஈடு பட்டுள்ளது? வழிகாட்டி (கைடு) யிடம். வழிகாட்டி என்னென்ன காண்பிக்கிறார்? சொர்க்கத்திற்குச் செல்வதற் கான வாசலைக் காட்டுகிறார் குழந்தைகளுக்கு அதன் பெயரும் தரப் பட்டுள்ளது - கேட் வே டு ஹெவன் (சொர்க்க வாசல்). சொர்க்கத்தின் கதவு எப்போது திறக்கும்? இப்போதோ ஹெல் (நரகம்) இல்லையா? சொர்க்கத்தின் கதவை யார் திறக்கிறார், எப்போது? இதை குழந்தைகள் நீங்கள் தான் அறிவீர்கள். உங்களுக்கு சதா குஷி இருக்கிறது. சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வழி உங்களுக்குத் தெரியும். மனிதர்கள் சொர்க்கத்தின் வாசலுக்கு எப்படிச் செல்ல முடியும் என்று மேளா, கண்காட்சி மூலம் நீங்கள் இதைக் காட்டுகிறீர்கள். சித்திரங்களையோ நீங்கள் அநேகம் உருவாக்கி யிருக்கிறீர்கள். பாபா கேட்கிறார், இந்த அனைத்துச் சித்திரங்களுக்குள்ளும் இது சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வழி என்பதை யாருக்கும் புரிய வைக்கிற மாதிரி எந்தச் சித்திரம் உள்ளது என்று. சிருஷ்டிச் சக்கரத்தின் சித்திரத்தில் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வாசல் தெளிவாக உள்ளது. இது தான் சரியானது. மேலே அந்தப் பக்கம் உள்ளது, நரகத்திற்கான வாசல். இந்தப் பக்கம் சொர்க்கத்திற்கான வாசல். முற்றிலும் தெளிவாக உள்ளது. இங்கிருந்து ஆத்மாக்கள் அனைவரும் சாந்திதாமத்திற்கு ஓடுகின்றனர். பிறகு சொர்க்கத்திற்கு வருகின்றனர். இது வாசல். முழுச் சக்கரத்தையும் கூட வாசல் எனச் சொல்ல மாட்டார்கள். மேலே சங்கமயுகம் காட்டப் பட்டுள்ளதே, அது தான் முழுமையான வாசல். அதன் மூலம் ஆத்மாக்கள் வெளிவருகின்றனர். பிறகு புது உலகத்திற்கு வருகின்றனர் மற்ற அனைவரும் சாந்திதாமத்தில் இருந்து விடுகின்றனர். முள் காட்டுகின்றது- இது நரகம், அது சொர்க்கம் என்று. அனைத்திலும் நல்ல முதல் தரமான, புரிய வைப் பதற்கான சித்திரம் இது. மிகவும் தெளிவாக உள்ளது, சொர்க்க வாசல் (கேட் வே டு ஹெவன்). இது புத்தி மூலம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா? அநேக தர்மங்களின் விநாசம், ஒரு தர்மத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிவீர்கள், நாம் சுகதாமத்திற்குச் செல்வோம், மற்ற அனைவரும் சாந்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். வாசலோ மிகத் தெளிவாகவே உள்ளது. இந்த சிருஷ்டிச் சக்கரம் தான் முக்கிய மான சித்திரம். இதில் நரகத்தின் வாசல், சொர்க்கத்தின் வாசல் மிகவும் தெளிவாக உள்ளன. சொர்க்கத்தின் வாசலில் கல்பத்திற்கு முன் யார் சென்றார்களோ, அவர்கள் தான் செல்வார்கள். மற்ற அனைவரும் சாந்தியின் வாசலுக்குச் சென்று விடுவார்கள். நரகத்தின் வாசல் மூடப்பட்டு சாந்தி மற்றும் சுகத்திற்கான வாசல் திறந்து கொள்ளும். அனைத்திலும் முதல் தரமான சித்திரம் இதுவாகும். பாபா எப்போதுமே சொல்கிறார், திரிமூர்த்தி, இரண்டாவது சிருஷ்டிச் சக்கரம். இந்தச் சக்கரம் முதல் தரமான சித்திரமாகும். யாராவது வந்தால் அவர்களுக்கு முதலில் இந்தச் சித்திரத்தில் காட்டுங்கள்-சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வாசல் இது என்று. இது நரகம், இது சொர்க்கம். இப்போது நரகத்தின் விநாசம் நடைபெறுகின்றது. முக்திக்கான வாசல் திறக்கின்றது. இச்சமயம் நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம். மற்ற அனைவரும் சாந்திதாம் செல்வார்கள். எவ்வளவு எளிதாக உள்ளது! சொர்க்கத்தின் வாசலுக்கு அனைவருமே செல்ல மாட்டார்கள். அங்கோ இந்த தேவி-தேவதைகளின் இராஜ்யம் தான் இருந்தது. உங்கள் புத்தி யில் உள்ளது, சொர்க்கத்தின் வாசலுக்குச் செல்வதற்காக நாம் இப்போது தகுதியுள்ளவர்களாக ஆகி யிருக்கிறோம். எவ்வளவு எழுதுகிறோம், படிக்கிறோமோ, அந்த அளவு சக்கரவர்த்தி ஆவோம். அவ்வாறின்றி அழுது சண்டை பிடித்தால் தரம் கெட்டுப் போவோம். அனைத்திலும் நல்ல சித்திரம் இந்த சிருஷ்டிச் சக்கரம். புத்தி மூலம் புரிந்து கொள்ள முடியும். ஒரு முறை பார்த்து விட்டால் பிறகு புத்தியைப் பயன்படுத்திப் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளாகிய உங்களுக்கு நாள் முழுவதும் இந்தச் சிந்தனை இருக்க வேண்டும்-எந்தச் சித்திரம் முக்கிய மானதோ, எதை வைத்து நாம் நல்லபடியாகப் புரிய வைக்க முடியும் என்று. கேட் வே டு ஹெவன் - இந்த ஆங்கில வார்த்தை மிக நன்றாக உள்ளது. இப்போதோ அநேக மொழிகள் ஆகி விட்டன. ஹிந்தி என்ற சொல் ஹிந்துஸ்தான் என்பதில் இருந்து வந்தது. ஹிந்துஸ்தான் என்ற சொல் ஒன்றும் சரியானதல்ல. இதன் உண்மையான பெயர் பாரதம் ஆகும். பாரத கண்டம் எனச் சொல்கின்றனர். தெருக்கள் முதலானவற்றின் பெயர்களோ மாறி விடுகின்றன. கண்டத்தின் பெயர் மாற்றப்படுவதில்லை. மகாபாரதம் என்ற சொல் உள்ளது இல்லையா? அனைத்திலும் பாரதம் தான் நினைவு வருகின்றது. பாரதம் நமது தேசம் எனப் பாடவும் செய்கின்றனர். ஹிந்து தர்மம் எனச் சொல்வதால் மொழியையும் ஹிந்தி என்று ஆக்கி விட்டனர். இவை சரியில்லாதவை. சத்யுகத்தில் உண்மை மட்டுமே இருந்தது- உண்மையான வற்றை அணிந்து கொள்வது, உண்மையானதை உண்பது, உண்மையே பேசுவது. இங்கே அனைத்தும் பொய்யானவையாக ஆகி விட்டன. ஆக, இந்த கேட் வே டு ஹெவன் என்ற சொல் மிக நன்றாக உள்ளது. வாருங்கள், நாங்கள் உங்களுக்கு சொர்க்கம் செல்வதற்கான வாசல் பற்றிச் சொல்கிறோம். எத்தனை மொழிகள் ஆகி விட்டன! பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு சத்கதிக் கான சிரேஷ்ட வழிமுறை சொல்கிறார். பாபாவின் வழி முறை பற்றிப் பாடல் உள்ளது - அவருடைய வழியும் முறையும் தனிப்பட்டது என்பதாக. குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு சகஜ வழிமுறை தருகிறார்! பகவானின் ஸ்ரீமத் படி தான் நீங்கள் நடக்க வேண்டும். டாக்டரின் (கல்வி) வழிமுறைப்படி டாக்டர் ஆவார்கள். பகவானின் வழிப்படி பகவான் பகவதி ஆக வேண்டும். பகவான் சொல்லும் வாக்கு. அதனால் பாபா சொல்லியிருந்தார், முதலிலோ இதை உறுதிப் படுத்துங்கள் - அதாவது பகவான் எனச் சொல்லப் படுபவர் யார்? சொர்க்கத்தின் எஜமானர்களாக நிச்சயமாக பகவான் பகவதி தான் ஆகிறார்கள். பிரம்மத்திலோ எதுவும் இல்லை. சொர்க்கமும் இங்கே, நரகமும் இங்கே தான் இருக்கும். சொர்க்கம்-நரகம் இரண்டும் முற்றிலும் தனிப்பட்டவை. மனிதர்களின் புத்தி முற்றிலும் தமோபிர தானமாக ஆகி விட்டுள்ளது. எதையுமே புரிந்து கொள்வதில்லை. சத்யுகத்திற்கு இலட்ச கணக்கான வருடம் என்று கூறிவிட்டனர். க-யுகத்திற்கு இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் இருப்பதாக கூறிவிட்டார்கள். முற்றிலும் காரிருளில் உள்ளனர்.

இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு செல்வதற் காக அதற்கேற்ற குணவானாக ஆக்குகிறார். நாம் எப்படி சதோபிரதானமாக ஆவது என்பது தான் முக்கியமான அக்கறையாக இருக்க வேண்டும். பாபா சொல்லியிருக்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் காரியங்கள் செய்து கொண்டி ருக்கும் போதும் இது நினைவிருக்க வேண்டும். நாயகி-நாயகனும் கூட கர்மமோ செய்கின்றனர் இல்லையா? பக்தியிலும் கூட கர்மங்கள் செய்கின்றனர் இல்லையா? புத்தியில் அவருடைய நினைவு இருக்கிறது. நினைவு செய்வதற்காக மாலை உருட்டுகின்றனர். பாபாவும் கூட அடிக்கடி சொல்கிறார், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று. சர்வவியாபி எனச் சொல்லி விட்டால் பிறகு யாரை நினைவு செய்வார்கள்? பாபா புரிய வைக்கிறார், நீங்கள் எவ்வளவு நாஸ்திகர்களாக ஆகி விட்டீர்கள்! தந்தையையே நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. ஓ காட் ஃபாதர் என அழைக்கவும் செய்கிறீர்கள். ஆனால் அவர் யார் என்பது பற்றி எதுவும் புரிந்து கொள்ள வில்லை.

ஆத்மா சொல்கிறது, ஓ காட் ஃபாதர்! ஆனால் ஆத்மா என்பதென்ன, ஆத்மா என்பது தனி, அவரைப் பரம ஆத்மா என்கின்றனர், அதாவது சுப்ரீம் (மிக மேலானவர்) உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் சுப்ரீம் ஸோல் பரமாத்மா. தன்னைப் பற்றி-ஆத்மாவைப் பற்றிய ஞானம் உள்ளவர் யாரும் கிடையாது. நான் ஆத்மா, இது சரீரம். இரண்டு பொருட்களோ உள்ளன இல்லையா? இந்த சரீரம் 5 தத்துவங் களாலானது. ஆத்மாவோ அவிநாசியான ஒரு புள்ளி. அது எந்தப் பொருளால் ஆனதாக இருக்கும்? இவ்வளவு சிறிய புள்ளி, சாது- சந்நியாசிகள் முதலானோர் யாருக்குமே தெரியாது. இவர்கூட அநேக குருக்களுக்கு சீடராக இருந்தவர், ஆனால் யாருமே ஆத்மா என்பது என்ன, பரமபிதா பரமாத்மா யார் என்று இவருக்குச் சொல்லவில்லை. பரமாத்மாவைப் பற்றி மட்டும் தெரியாது என்பதல்ல. ஆத்மாவைப் பற்றியும் தெரியாது. ஆத்மா பற்றித் தெரிந்திருந்தால் நிச்சயமாகப் பரமாத்மா பற்றியும் தெரிந்திருக்கும். குழந்தை தன்னைப் பற்றித் தெரிந்து கொண்டு தந்தை பற்றித் தெரியாதிருப்பது என்பது எப்படி முடியும்? நீங்கள் இப்போது அறிந்து கொண்டு விட்டீர்கள், ஆத்மா என்பதென்ன, எங்கே வசிக்கின்றது? ஆத்மா சூட்சுமமானது, இந்த கண்களால் காண முடியாது என்பதை மட்டுமே டாக்டர்கள் புரிந்துள்ளனர், பிறகு கண்ணாடி பெட்டியில் அடைத்து வைப்பதால் எப்படிப் பார்க்க முடியும்? உலகத்தில் உங்களைப் போன்ற ஞானம் வேறு யாருக்கும் கிடையாது. நீங்கள் அறிவீர்கள், ஆத்மாவும் புள்ளி, பரமாத்மாவும் புள்ளி தான். மற்றப்படி ஆத்மாக்கள் நாம் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாகவும், தூய்மையான நிலையிலிருந்து தூய்மையற்ற வராக ஆகிறோம். அங்கோ பதித் ஆத்மா இருப்பதில்லை. அங்கிருந்து அனைவரும் தூய்மை யானவராக தான் வருகின்றனர். பிறகு தூய்மையற்றவராக ஆகின்றனர். பிறகு பாபா வந்து பாவன மாக்குகிறார். இது எளிதானதிலும் எளிதான விஷயம். நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்து இப்போது தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளோம். நாம் தான் 84 பிறவிகள் எடுக்கிறோம். இது ஒருவரின் விசயம் கிடையாது. பாபா சொல்கிறார், நான் புரிய வைப்பது இவருக்கு. கேட்பது நீங்கள். நான் இவருக்குள் பிரவேசமாகி யிருக்கிறேன். இவருக்குச் சொல்கிறேன். நீங்கள் கேட்கிறீர்கள். இது ரதமாகும். ஆக, பாபா புரிய வைத்துள்ளார் - கேட் வே டு ஹெவன் (சொர்க்கம் நுழைவாசல்) எனப் பெயர் வைக்க வேண்டும் என்று. ஆனால் இத்துடன் கூடவே புரிய வைக்க வேண்டும்- சத்யுகத்தில் இருந்த தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டுள்ளது. யாருக்கும் தெரியாது. கிறிஸ்தவர்களும் முதலில் சதோபிரதானமாக இருந்தனர். பிறகு மறுபிறவி எடுத்து-எடுத்து தமோபிரதானம் ஆகி விடுகின்றனர். மரமும் கூட நிச்சயமாகப் பழையதாக ஆகின்றது. இது பலவிதமான தர்மங்களின் மரமாகும். மரத்தின் கணக்குப் படி மற்ற அனைத்து தர்மங்களும் பின்னால் வருகின்றன. இந்த டிராமா ஏற்கனவே உருவாக்கப்பட்டதாகும். சத்யுகத்தில் வருவதற்கான வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைத்து விடாது. இதுவோ அநாதியாக உருவாக்கப் பட்ட விளையாட்டாகும். சத்யுகத்தில் ஒரே ஓர் ஆதி சநாதன புராதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, நாம் சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். ஆத்மா சொல்கிறது, நாம் தமோபிரதானமாக இருக்கும் போது எப்படி வீட்டுக்குச் செல்ல முடியும்? சொர்க்கத்திற்கு எப்படிச் செல்ல முடியும்? அதற்காக சதோபிர தானம் ஆவதற்கான யுக்தியும் பாபா சொல்லியிருக்கிறார். பாபா சொல்கிறார், என்னைத் தான் பதித பாவனர் எனச் சொல்கின்றனர். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். பகவான் சொல்கிறார் என்பது எழுதப் பட்டுள்ளது. இதையும் அனைவரும் சொல்லிக் கொண்டே உள்ளனர்-கிறிஸ்துவுக்கு இத்தனை ஆண்டுகளுக்கு முன் பாரதம் சொர்க்கமாக இருந்தது. ஆனால் எப்படி ஆயிற்று, பிறகு எங்கே போனது என்பது யாருக்கும் தெரியாது. நீங்களோ நன்றாக அறிந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பு இவ்விசயங்கள் பற்றி அறியாமல் இருந்தீர்கள். உலகத்தில் இதுவும் யாருக்கும் தெரியாது, அதாவது ஆத்மா தான் நல்லதாகவோ கெட்டதாகவோ ஆகின்றது. ஆத்மாக் கள் அனை வருமே குழந்தைகள். தந்தையை நினைவு செய்கின்றனர். தந்தை அனைவருக்கும் நாயகனாக உள்ளார், அனைவரும் நாயகிகள். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், அந்த நாயகன் வந்து விட்டார். மிக இனிமையான நாயகன். இல்லையென்றால் அனைவரும் அவரை ஏன் நினைவு செய்கின்றனர்? வாயிலிருந்து பரமாத்மாவின் பெயர் வெளிவருவதில்லை என்பது போன்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எந்த ஒரு மனிதருடைய அறிந்து கொள்ளவில்லை, அவ்வளவு தான். ஆத்மா அசரீரி என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களுக்கும் கூட பூஜை நடைபெறுகிறது இல்லையா? யார் பூஜைக்குரியவர்களாக இருந்தனரோ, அவர்கள் பிறகு தங்களின் ஆத்மாவையே பூஜிக்கத் தொடங்கினர். முன் பிறவியில் பிராமண குலத்தில் பிறந்திருக்கலாம். ஸ்ரீநாத்துக்கு போக் (பிரசாதம்) வைக்கப் படுகின்றது. அதை உண்பதோ பூஜாரிகள். இவை யனைத்தும் பக்தி மார்க்கம்.

சொர்க்கத்தின் கதவைத் திறப்பவர் பாபா, இதை குழந்தைகள் நீங்கள் புரிய வைக்க வேண்டும் ஆனால் எப்படித் திறக்கும் என்பதை எப்படி புரிய வைப்பது? பகவான் சொல்கிறார் என்றால் நிச்சயமாக சரீரத்தின் மூலம் தான் சொல்வார் இல்லையா? ஆத்மா தான் சரீரத்தின் மூலம் பேசுகிறது, கேட்கிறது. இதை பாபா கொஞ்சம் சிறிது சிறிதாகச் சொல்கிறார். விதை மற்றும் மரம் உள்ளன. குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இது புதிய மரம். மெது மெதுவாக பிறகு வளர்ச்சி அடைகின்றது. உங்களுடைய இந்தப் புதிய மரத்துக்கு புழுக்களும் அதிகம் வருகின்றன. ஏனென்றால் இந்தப் புதிய மரம் மிக இனிமையானது. இனிய மரத்துக்குத் தான் புழு பூச்சிகள் முதலானவை வருகின்றன. பிறகு மருந்துகள் தருகின்றனர். பாபாவும் கூட மன்மனாபவ என்ற நல்ல மருந்து தந்துள்ளார். மன்மனாபவ நிலையில் இல்லை என்றால் புழுக்கள் சாப்பிட்டு விடுகின்றன, கிருமிகள் உள்ள பொருள் எதற்குப் பயன்படும்? அதுவோ வீசி எறியப்பட்டு விடும். எங்கே உயர்ந்த பதவி, எங்கே கீழான பதவி! வேறுபாடோ உள்ளது இல்லையா? இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக் கிறார், மிக இனிமையிலும் இனிமை யானவராக ஆகுங்கள். யாரிடமும் உப்பு நீராக ஆகாதீர்கள். ஆக, குழந்தைகளும் இனிமையானவர் களாக ஆக வேண்டும். ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் முயற்சி என்ன செய்வார்கள்? ஃபெயிலாகி விடுகின்றனர். ஆசிரியரோ உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்கு வதற்காகப் படிப்பு சொல்லித் தருகிறார். ஆசிரியர் சொல்லித் தருவது அனைவருக்குமே தான். வித்தியாசத்தையும் நீங்கள் பார்க்கிறீர்கள். மாணவர்கள் வகுப்பில் தெரிந்து கொள்ள முடியும், யார் எந்தப் பாடத்தில் சாமர்த்தியசாலி என்று. இங்கேயும் அதுபோலத் தான். ஸ்தூல சேவையின் பாடமும் கூட உள்ளது இல்லையா? எப்படி சமையலறைப் பொறுப்பாளர் (பண்டாரி) உள்ளார் என்றால் அநேகருக்கு சுகம் கிடைக்கிறது. அனைவரும் எவ்வளவு நினைவு செய்கின்றனர்! இதுவோ சரி தான். இந்த சப்ஜெக்ட்டினாலும் கூட மார்க்குகள் கிடைக்கின்றன. ஆனால் பாஸ் வித் ஆனர் (தகுதியுடன் தேர்ச்சி பெற்றவர்) ஆவதற்கு ஒரு பாடத்தில் மட்டும் இல்லை, அனைத்துப் பாடங்கள் மீதும் முழு கவனம் செலுத்த வேண்டும். ஞானமும் வேண்டும். நடத்தையும் அதுபோல் இருக்க வேண்டும், தெய்வீக குணங்களும் இருக்க வேண்டும். கவனம் வைப்பது நல்லது. பண்டாரியிடம் யாராவது வந்தாலும் சொல்வார், மன்மனாபவ. சிவபாபாவை நினைவு செய்வீர் களானால் விகர்மங்கள் விநாசமாகும். மேலும் நீங்கள் சொர்க்கத்தின் எஜமானன் ஆகி விடுவீர்கள். பாபாவை நினைவு செய்து கொண்டே மற்றவர்களுக்கும் அறிமுகம் கொடுத்துக் கொண்டே இருங்கள். ஞானமும் யோகமும் வேண்டும். மிகவும் சுலபம். முக்கியமான விஷயமே இது தான். பார்வையற்றவர்களுக்கு ஊன்றுகோலாக ஆக வேண்டும். கண்காட்சிக்கும் கூட யாரையாவது அழைத்துச் செல்லுங்கள், வாருங்கள் நான் உங்களுக்கு சொர்க்கத்தின் வாசலைக் காண்பிக்கிறேன் என்று. இது நரகம், இது சொர்க்கம். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்யுங்கள், தூய்மை யாகுங்கள்.. அப்போது நீங்கள் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள். மன்மனாபவ. அப்படியே உங்களுக்கு கீதை சொல்கிறோம். அதனால் பாபா சித்திரங்களை உருவாக்கச் செய்துள்ளார் - கீதையின் பகவான் யார்? சொர்க்கத்தின் வாசலை யார் திறக்கிறார்? திறப்பவர் சிவபாபா! கிருஷ்ணர் அதைக் கடந்து செல்கிறார். ஆனால் பெயர் கிருஷ்ணருடையதை வைத்து விட்டனர். முக்கியமான சித்திரங்களே இரண்டு. மற்றவை எல்லாம் சிறிய துண்டுகள்.போன்றவை குழந்தைகள் மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். அன்போடு உரையாட வேண்டும். மனம்-சொல்- செயலால் அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். பாருங்கள், பண்டாரி அனைவரை யும் குஷிப் படுத்துகிறார் என்றால் அவருக்காகப் பரிசும் கொண்டு வருகின்றனர். இதுவும் சப்ஜெக்ட் இல்லையா? பரிசு கொண்டு வந்து தருகின்றனர், அவர் சொல்கிறார், நான் ஏன் உங்களிட மிருந்து இதைப் பெற வேண்டும்? பிறகு எனக்கு உங்கள் நினைவே இருந்து கொண்டிருக்கும். சிவபாபாவின் பொக்கிஷத்திலிருந்து கிடைக்கிறது என்றால் நமக்கு சிவபாபா வின் நினைவு இருக்கும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தனது உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதற்கு தங்களுக்குள் ஒருவருக் கொருவர் மிகமிக இனிமையானவராக (பால் பாயசம் போல) ஆகி இருக்க வேண்டும். ஒருபோதும் உப்பு நீர் போல ஆகக் கூடாது. அனைத்து பாடங்களிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

2) சத்கதிக்காக பாபாவிடமிருந்து கிடைக்கின்ற உயர்ந்த வழிமுறைப்படி மட்டுமே நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும், சிரேஷ்ட வழியை மட்டுமே கூற வேண்டும். சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வழியைக் காண்பிக்க வேண்டும்.

வரதானம்:
ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தைரியம் மகிழ்ச்சியைக் கொடுக்க கூடிய இரக்கம் உள்ளம் கொண்ட விஷ்வ கல்யாணகாரி ஆகுக!

ஒரு பொழுதும் பிராமண பரிவாரத்தில் எந்த பலகீனமான ஆத்மாக்களையும் நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்று கூறக்கூடாது. இரக்கம் உள்ளமுள்ள விஷ்வ கல்யாணகாரி குழந்தைகளாகிய உங்கள் வாயிலிருந்து சதா ஒவ்வொரு ஆத்மாவிற்காக சுபமான வார்த்தை யையே வெளிப்பட வேண்டும். உள்ளம் உடைந்து போக வைக்கும் வார்த்தைகள் வரக் கூடாது. யாரேனும் பலகீனமாக இருந்தால் அவர்களிடம் ஒரு பிரேரணையோ கல்வியோ கொடுக்கிறீர்கள் ஏனெனில் முதலில் சக்திசாலி ஆக்கிய பிறகு படிப்பினையை கொடுங்கள். முதலில் நிலத்தை தைரியம் மற்றும் மகிழ்ச்சியினுடைய உரத்தைப் போடுங்கள், பிறகு விதையை போடுங்கள், அப்பொழுது ஈசியாக விதை பலன் தரும். இதன் மூலமாக உலக நன்மைக்கான சேவை தீவிரமாகிவிடும்.

சுலோகன்:
பாபாவின் ஆசிர்வாதத்தை எடுத்துக் கொண்டே சதா நிறைந்த தன்மையின் அனுபவம் செய்யுங்கள்.

அவ்யக்த பிரேரணை : கம்பயிண்ட் ரூபத்தின் நினைவின் மூலம் எப்பொழுதும் வெற்றியாளர் ஆகுங்கள்.

சதா ஒவ்வொரு காரியத்தை செய்தாலும் தன்னை கர்மயோகி ஆத்மா என அனுபவம் செய்யுங்கள். எந்த காரியத்தை செய்தாலும் நினைவு மறக்க கூடாது. கர்மம் மற்றும் யோகம் இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும். எப்படி இணைந்த பொருளை பிரிக்க முடியாது, அது போன்று கர்மயோகியாக ஆகுங்கள்.