03-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உலகிற்கு எஜமானராக ஆக்கக் கூடிய தந்தையை மிக ஆர்வத்துடன் நினைவு செய்யுங்கள். நினைவின் மூலமாகவே நீங்கள் சதோ பிரதானமாக ஆவீர்கள்.

கேள்வி:
எந்த விசயத்தில் முழு கவனம் இருந்தால் புத்தி என்ற கதவு திறக்கப்பட்டு விடும்?

பதில்:
படிப்பின் மீது. பகவான் படிப்பிக்கின்றார். ஆகையால் ஒருபொழுதும் படிப்பைத் தவற விடக் கூடாது. எதுவரைக்கும் உயிர் வாழ்கின்றீர்களோ அதுவரைக்கும் அமிர்தத்தைக் குடிக்க வேண்டும். படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும். வகுப்பிற்கு வராமல் இருந்து விடக் கூடாது. ஏதாவது வழி ஏற்படுத்திக் கொண்டு கண்டிப்பாக முரளி படிக்க வேண்டும். முரளியில் தினமும் புதுப்புது கருத்துக்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் உங்களது புத்தி திறக்கப்பட்டு விடும்.

ஓம் சாந்தி.
சாலிகிராமங்களுக்காக சிவபகவானின் மகாவாக்கியம். இது முழு கல்பத்தில் ஒரு முறை தான் ஏற்படுகின்றது என்பதை நீங்கள் மட்டும் தான் அறிந்திருக்கின்றீர்கள், வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. மனிதர்கள் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடை பற்றி முற்றிலும் அறியாதவர்களாக இருக்கின்றனர். ஸ்தாபனையில் தடைகள் ஏற்படத்தான் செய்யும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக் கின்றீர்கள். இதனை ஞான யக்ஞம் என்று கூறப்படுகின்றது. இந்த பழைய உலகில் நீங்கள் எதையெல்லாம் காண்கின்றீர்களே அனைத்தும் சுவாஹா ஆகிவிடும் என்று தந்தை புரிய வைக் கின்றார். பிறகு அதில் பற்றுதல் வைக்கக் கூடாது. புது உலகிற்காக தந்தை வந்து படிப்பிக்கின்றார். இது புருஷோத்தம சங்கமயுகமாகும். இது விகாரம் மற்றும் விகாரமற்றதிற்கான சங்கமம் ஆகும். இதில் மாற்றம் ஏற்பட வேண்டும். புது உலகை விகாரமற்ற உலகம் என்று கூறப்படுகின்றது. ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் மட்டுமே இருந்தது. இவை புரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் ஆகும் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். தந்தை இரவு பகலாகக் கூறிக் கொண்டே இருக்கின்றார் - குழந்தைகளே! உங்களுக்கு ஆழமான விசயங்களைக் கூறுகின்றேன். தந்தை இருக்கின்ற வரை படிப்பு நடை பெற்றுக் கொண்டே இருக்கும். பிறகு படிப்பும் நின்று விடும். இந்த விசயங்களை உங்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. உங்களிலும் வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள் என்பதை பாப்தாதா மட்டுமே அறிந்திருக்கின்றார். எத்தனையோ பேர் கீழே விழுகின்றனர், எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன! அனைவரும் சதா தூய்மையாக இருக்க முடியும் என்பது கிடையாது. தூய்மையாக இல்லை யெனில் தண்டனை அடைய வேண்டியிருக்கும். மாலையின் மணிகள் தான் தகுதியுடன் தேர்ச்சியடைகின்றனர். பிறகு பிரஜைகளும் உருவாகின்றனர். இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். நீங்கள் யாருக்காவது புரிய வைத்தாலும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நேரம் தேவைப்படுகின்றது. தந்தை எந்த அளவிற்குப் புரிய வைக்கின்றாரோ அந்த அளவிற்கு நீங்கள் புரிய வைப்பது கிடையாது. ரிப்போர்ட் வருவதை வைத்து - இன்னார் விகாரத்தில் விழுந்தார், இவ்வாறு ஏற்பட்டது..... என்பதை தந்தை மட்டுமே அறிந்திருக்கின்றார். பெயர் கூற முடியாது. ஒருவேளை பெயர் கூறினால் பிறகு அவரிடத்தில் பேசுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். அனைவரும் வெறுப்பான பார்வையுடன் பார்ப்பார்கள். உள்ளத்திலிருந்து இறங்கிவிடுவார். சம்பாதித்த அனைத்து வருமானமும் அழிந்து விடுகின்றது. இந்த விசயம் யார் நஷ்டம் அடைந்திருக்கின்றாரோ அவருக்குத் தெரியும் மேலும் தந்தைக்குத் தெரியும். இது மிகவும் இரகசியமான (குப்தமான) விசயமாகும்.

இன்னார் வந்தார், அவருக்கு மிகவும் நல்ல முறையில் சேவை செய்தேன், அவர் சேவையில் நன்றாக உதவி செய்வார் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் அவர் எதிரில் இருக்க வேண்டுமல்லவா! நீங்கள் கவர்னருக்கு நல்ல முறையில் புரிய வைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் யாருக்காவது புரிய வைப்பாரா என்ன! யாருக்காவது புரிய வைத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யார் புரிந்து கொள்ள வேண்டுமென்று இருக்கின்றதோ அவர்களே புரிந்து கொள்வர். மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியுமா! இது முட்கள் நிறைந்த காடு, இதற்கு நாம் மங்களம் செய்கின்றோம். மங்களம் பகவான் விஷ்ணு என்று கூறுகின்றனர். இந்த சுலோகன் போன்றவை பக்தி மார்க்கத்தினுடையதாகும். எப்பொழுது விஷ்ணுவின் இராஜ்யம் ஏற்படுகின்றதோ அப்பொழுது தான் மங்களம் ஏற்படுகின்றது. விஷ்ணுவின் அவதாரத்தைக் காண்பிக்கின்றனர். பாபா அனைத்தும் பார்த்திருக்கின்றார். அனுபவசா-யல்லவா! அனைத்து தர்மத்தைச் சார்ந்தவர்களையும் நன்றாக அறிந்திருந்தார். தந்தை எந்த சரீரத்தில் வருகின்றாரோ அவருக்கு பெர்சனாலிட்டி (தோற்றப் பொ-வு) வேண்டுமல்லவா! ஆகையால் தான் அநேக பிறப்பின் கடைசியில், இங்கு மிகவும் அனுபவசாலியாக இருக்கக் கூடியவரிடத்தில் பிரவேசிக்கின்றேன் என்று கூறுகின்றார். அதுவும் சாதாரணமானவரிடத்தில், பெர்சனாலிட்டி என்றால் இராஜாவாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. இல்லை, இவருக்கு மிகுந்த அனுபவம் இருக்கின்றது. அநேக பிறப்பின் கடைசியில் இவரது ரதத்தில் (உட-ல்) வருகின்றேன்.

இங்கு இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் புரிய வைக்க வேண்டும். மாலை உருவாகின்றது. இந்த இராஜ்யம் எவ்வாறு ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக் கின்றது? சிலர் இராஜா, ராணியாகவும் சிலர் வேறு நிலையும் அடைகின்றனர். இந்த விசயங்களை ஒரே நாளில் யாரும் புரிந்து கொள்ள முடியாது. எல்லையற்ற தந்தை தான் எல்லையற்ற ஆஸ்தி கொடுக்கின்றார். பகவான் வந்து புரிய வைத்தாலும் சிலர் மட்டுமே தூய்மையாக ஆகின்றனர். இதனைப் புரிந்து கொள்வதற்கும் நேரம் தேவைப்படுகின்றது. எவ்வளவு தண்டனைகளை அடைகின்றனர்! தண்டனைகளை அடைந்தும் பிரஜைகளாக ஆகின்றனர். குழந்தைகளே! நீங்கள் மிக மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. தந்தை வருவதே அனைவருக்கும் சுகத்திற்கான வழி காண்பித்து, துக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக. பிறகு சுயம் மற்றவர்களுக்கு எப்படி துக்கம் கொடுப்பார்? இவையனைத்து விசயங்களையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்திருக்கின்றீர்கள். வெளியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வது கடினமாகும்.

சம்பந்தங்களில் (உறவினர்) உள்ள பற்றுதல்களை நீக்கி விட வேண்டும். வீட்டில் இருக்க வேண்டும், ஆனால் நிமித்தமாக (காரண காரியம் பொருட்டு) இருக்க வேண்டும். இந்த முழு உலகமும் அழிந்து விடும் என்பது புத்தியில் இருக்கின்றது. ஆனால் இந்த சிந்தனைகள் வேறு யாருக்கும் இருப்பது கிடையாது. யார் ஒப்பற்ற குழந்தைகளாக உள்ளனரோ அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்களும் இப்பொழுது கற்றுக் கொள்வதற்கான முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர். பலர் தோல்வியும் அடைகின்றனர். மாயையின் சக்கரம் அதிகமாகவே இருக்கி ன்றது. அதுவும் மிகப் பெரிய பலசாலியாக இருக்கின்றது. ஆனால் இந்த விசயங்களை மற்றவர் களுக்குப் புரிய வைக்க முடியாது. இங்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது? புகார்கள் (ரிபோர்ட்ஸ்) ஏன் வருகின்றன? போன்றவைகளை அறிந்து கொள்வதற்கு உங்களிடத்தில் வருகின்றனர். அவர்களுக்குள் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் அமர்ந்து புரிய வைக்க வேண்டியிருக்கின்றது. இது மிகவும் நல்ல இயக்கம் என்று பிறகு கூறுகின்றனர். இராஜ்ஜிய ஸ்தாபனைக்கான விசயம் மிகவும் இரகசியமானதாகும். எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்கு கிடைத்திருக்கின்றார் எனில் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்! நாம் உலகிற்கு மாலிக் (எஜமான்) தேவதைகளாக ஆகின்றோம் எனில் நமக்குள் தெய்வீக குணங்களும் கண்டிப்பாகத் தேவை. இலட்சியம் எதிரில் இருக்கின்றது. இவர்கள் புது உலகிற்கு எஜமானர்களாக இருக்கின்றனர். இதனை நீங்கள் தான் புரிந்திருக்கின்றீர்கள். ஞானக்கடலான தந்தை நமக்கு கற்பிக்கின்றார், அமரபுரி அதாவது சொர்க்கம் செல்வதற்காக நாம் படிக்கின்றோம். நமக்கு இந்த ஞானம் கிடைக்கின்றது. யார் ஒவ்வொரு கல்பத்திலும் இராஜ்யம் அடைந்துள்ளனரோ அவர்கள் மட்டுமே வருவர். முந்தைய கல்பத்தைப் போன்று நாம் நமது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றோம். இங்கு வரிசைக்கிரமமாக மாலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. பள்ளியிலும் கூட நன்றாகப் படிக்கக் கூடிய வருக்கு உதவித் தொகை கிடைக் கின்றதல்லவா! அது எல்லைக்குட்பட்ட விசயமாகும், உங்களுக்கு எல்லையற்ற விசயம் கிடைக்கின்றது. தந்தைக்கு உதவியாளராக ஆகக் கூடிய நீங்களே உயர்ந்த பதவியை அடைகின்றீர்கள். உண்மை யில் உதவியை நீங்கள் தனக்குத் தான் செய்து கொள்ள வேண்டும். தூய்மையாக ஆக வேண்டும், சதோ பிரதானமாக இருந்தோம், மீண்டும் கண்டிப்பாக ஆக வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும். எழுந்தாலும், அமர்ந்தாலும், போனாலும், வந்தாலும் தந்தையை நினைவு செய்ய முடியும். எந்த தந்தை நம்மை உலகிற்கே எஜமானர்களாக ஆக்குகின்றாரோ அவரை மிகவும் ஆர்வத்துடன் நினைவு செய்ய வேண்டும். ஆனால் மாயை விடுவது கிடையாது. பாபா, எனக்கு மாயையின் விகல்பம் அதிகம் வருகின்றது போன்ற அநேக விதமான புகார்களை எழுதுகின்றனர். யுத்த மைதானம் அல்லவா? என்று தந்தை கூறுகின்றார். 5 விகாரங்களின் மீது வெற்றி அடைய வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நான் சதோ பிரதானம் ஆகிக் கொண்டிருக் கின்றேன் என்பதை நீங்களே உணர முடியும். தந்தை வந்து புரிய வைக்கின்றார், பக்தி மார்க்கத் தினர் யாரும் புரிந்து கொள்வது கிடையாது. இது படிப்பாகும். நீங்கள் எவ்வாறு பாவனம் ஆவது? என்பதை தந்தை கூறுகின்றார். நீங்கள் பாவனமாக இருந்தீர்கள், மீண்டும் ஆக வேண்டும். தேவதைகள் பாவனமானவர்கள் அல்லவா! மாணவர்களாகிய நாம் படித்துக் கொண்டிருக் கின்றோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். பிறகு எதிர்காலத்தில் சூரிய வம்ச இராஜ்யத்தில் வருவோம். அதற்காக முயற்சியும் நல்ல முறையில் செய்ய வேண்டும். அனைத்திற்கும் ஆதாரம் மதிப்பெண்ணில் தான் இருக்கின்றது. யுத்த மைதானத்தில் தோல்வி யடைவதன் மூலம் சந்திரவம்சத்திற்குச் சென்று விடுகின்றீர்கள். யுத்தம் என்ற பெயரைக் கேட்டதும் அவர்கள் வில், அம்பு போன்றவற்றைக் கொடுத்து விட்டனர். வில், அம்பு எய்யக் கூடிய புஜ பலத்திற்கான யுத்தம் அங்கு இருந்ததா என்ன? அப்படிப்பட்ட விசயங்கள் எதுவும் கிடையாது. முன்பு பாணங்களினால் யுத்தம் நடைபெற்று வந்தது. இன்றைய நாள் வரைக்கும் அடையாளங்கள் உள்ளன. எய்வதில் சிலர் மிகவும் புத்திசாலிகளாக இருந்துள்ளனர். இப்பொழுது இந்த ஞானத்தில் யுத்தம் போன்றவற்றிற்கான விசயம் ஏதுமில்லை.

சிவபாபா தான் ஞானக்கடலாக இருக்கின்றார், அவர் மூலமாக நாம் இந்த பதவியை அடை கின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். தேகம், தேகத்தின் அனைத்து சம்பந்தங்களின் மீது இருக்கும் பற்றுதலை நீக்கி விடுங்கள் என்று தந்தை இப்பொழுது கூறுகின்றார். இவையனைத்தும் பழையவையாகும். புது உலகம் தங்கமான பாரதமாக இருந்தது. பெயர் எவ்வளவு பிரபலமானதாக இருக்கின்றது! பழமையான யோகத்தை யார்? எப்பொழுது கற்பித்தார்? என்பது யாருக்கும் தெரியாது. அவரே வந்து புரிய வைக்காத வரைக்கும் இது புது விசயமாகும். கல்ப கல்பத்திற்கு எது நடைபெற்று வந்ததோ, அதுவே மீண்டும் திரும்பி நடைபெறும். அதில் வித்தியாசம் ஏற்பட முடியாது. இப்பொழுது இந்த கடைசிப் பிறப்பில் தூய்மையாவதன் மூலம் 21 பிறவிகள் நீங்கள் அசுத்தம் ஆகமாட்டீர்கள் என்று தந்தை கூறுகின்றார். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார், இருப்பினும் அனைவரும் ஒரே மாதிரியாக படிப்பது கிடையாது. இரவு பகலுக்குள்ள வித்தியாசம் இருக்கின்றது. படிப்பதற்காக வருகின்றனர், பிறகு சிறிது படித்ததும் காணாமல் போய் விடுகின்றனர். யார் நன்றாகப் படிக்கின்றனரோ அவர்கள் தங்களது அனுபவத்தைக் கூறுகின்றனர் - நான் எப்படி வந்தேன்? தூய்மைக்கான உறுதியை எப்படிக் கொடுத்தேன்? தூய்மைக்கான உறுதி எடுத்த பின்பு ஒருமுறை பதீதமானாலும் செய்த வருமானம் அனைத்தும் அழிந்து விடும் என்று தந்தை கூறுகின்றார். பிறகு அது உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும். தந்தையை நினைவு செய்யுங்கள் என்று யாருக்கும் கூற முடியாது. விகாரத் திற்கான விசயத்தைத் தான் முக்கியமாக கேட்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் படிப்பை தொடர்ந்து படிக்க வேண்டும். நான் உங்களுக்கு புதுப்புது விசயங்களைக் கூறுகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் மாணவர்களாக இருக்கின்றீர்கள், உங்களுக்கு பகவான் படிப்பிக் கின்றார். பகவானுக்கு நீங்கள் மாணவர்களாக இருக்கின்றீர்கள். இப்படிப்பட்ட உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை நீங்கள் ஒரு நாள் கூட தவற விடக் கூடாது. ஒரு நாள் முரளியை நீங்கள் கேட்கவில்லையெனில் வருகை இல்லை என்று ஆகிவிடுகின்றது. நல்ல நல்ல மகாரதிகளும் கூட முரளியைத் தவற விடுகின்றனர். நாம் அனைத்தும் அறிந்தவர்களாக இருக்கின்றோம், முரளி படிக்கவில்லையெனில் என்ன ஆகப்போகின்றது? என்று அவர்கள் நினைக்கின்றனர். அட, வருகை யில்லை என்றால் தோல்வியடைந்து விடுவீர்கள். நான் உங்களுக்கு தினமும் நல்ல நல்ல கருத்துக்களைக் கூறுகின்றேன், அவைகள் உங்களுக்குத் தகுந்த நேரத்தில் புரிய வைப்பதற்கு காரியத்தில் பயன்படும் என்று அவரே தந்தை கூறுகின்றார். கேட்கவில்லையெனில் பிறகு எப்படி காரியத்தில் கொண்டு வர முடியும்? எதுவரை வாழ்கின்றீர்களோ அதுவரைக்கும் அமிர்தத்தை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். கல்வியை தாரணை செய்ய வேண்டும். ஒரு பொழுதும் வராமல் இருந்து விடக் கூடாது. இங்கு, அங்கு என்று ஏதாவது வழியை ஏற்படுத்தி, யாரிடத் திலிருந்தாவது வாங்கி முரளியைப் படிக்க வேண்டும். கர்வம் இருக்கக் கூடாது. அட, பகவான் தந்தை படிப்பிக்கின்றார் எனில் ஒரு நாள் கூட தவற விடக் கூடாது. உங்களது அல்லது மற்றவர்களின் புத்தி என்ற கதவு திறக்கும் படியான கருத்துக்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா யார்? என்ன நடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது? என்பதை புரிந்து கொள்வதற்கு நேரம் தேவைப்படுகின்றது. தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற கருத்து மட்டுமே கடைசியில் நினைவில் இருக்கும். ஆனால் இப்பொழுது புரிய வைக்க வேண்டியிருக்கின்றது. தந்தையை நினைவு செய்து செய்து சென்று விட வேண்டும் என்பதே கடைசி நிலையாக இருக்கும். நினைவின் மூலமாகவே நீங்கள் தூய்மையாக ஆகின்றீர்கள். எந்த அளவிற்கு ஆகியிருக்கின்றீர்கள்? என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அசுத்தமானவர்களுக்கு கண்டிப்பாக குறைவான பலம் தான் கிடைக்கும். 8 இரத்தினங்கள் தான் முக்கியமாது, அவர்கள் கௌரவத்துடன் தேர்ச்சி அடைகின்றனர். அவர்கள் எந்த தண்டனையும் அடைவது கிடையாது. இது மிகவும் ஆழமான விசயமாகும். எவ்வளவு உயர்ந்த படிப்பு இது! நம்மால் தேவதைகளாக ஆக முடியும் என்ற கனவு கூட வந்ததில்லை. தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் கோடிமடங்கு பாக்கியசாலிகளாக ஆகின்றீர்கள். இதற்கு முன்பு அந்த தொழில் போன்றவைகள் எதுவுமில்லை. எந்த பொருளும் காரியத்திற்கு உதவப்போவது கிடையாது. இருப்பினும் செய்தே ஆக வேண்டியிருக்கின்றது. நான் சிவபாபாவிற்கு கொடுக்கின்றேன் என்ற எண்ணம் ஒருபொழுதும் வரக் கூடாது. ஹரே! நீங்கள் பத்மாபதம்பதிகளாக (பல கோடி மடங்கு பாக்யசா-) ஆகின்றீர்கள். கொடுக்கின்றேன் என்ற எண்ணம் வந்தால் பலம் குறைந்து விடும். மனிதர்கள் ஈஸ்வரனின் பெயரைச் சொல்லி தானம், புண்ணியம் செய்கின்றனர் - அடைவதற்காக. அதனை (தானம்) கொடுப்பது என்று கூற முடியாது. பகவான் வள்ளல் அல்லவா! அடுத்த பிறவியில் எவ்வளவு கொடுக்கின்றார்! இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கின்றது. பக்தி மார்க்கத்தில் அல்ப கால சுகம் இருக்கின்றது, நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்திற்கான ஆஸ்தியை அடைகின்றீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உயிருடன் இருக்கின்ற வரைக்கும் அமிர்தத்தைக் குடிக்க வேண்டும், கல்வியை தாரணை செய்ய வேண்டும். பகவான் படிப்பிக்கின்றார், ஆகையால் ஒருநாள் கூட முரளியை தவற விடக் கூடாது.

2) பல மடங்கு வருமானத்தை சேமிப்பு செய்வதற்காக வீட்டில் நிமித்தமாக இருந்து, காரியங்களைச் செய்தாலும் ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.

வரதானம்:
மகிழ்ச்சியின் ஆன்மீக ஆளுமை தன்மை மூலமாக அனைவருக்கும் அதிகாரத்தை வழங்க கூடிய புகழுக்குரியவராக மற்றும் பூஜைக்குரியவராக ஆகுக!

யார் அனைவரிடமும் திருப்தியின் சான்றிதழை பெறுகிறார்களோ அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் இந்த மகிழ்ச்சியின் ஆன்மீக ஆளுமை தன்மை காரணமாக பெயர் புகழோடு அதாவது புகழுக்கு உரியவராக, பூஜைக்குரியவராக ஆவார்கள். தங்களுடைய சுப சிந்தக் (நல்ல எண்ணங்கள்) மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய ஆத்மாக்கள் மூலமாக, அனைவருக்கும் மகிழ்ச்சி, உதவி மற்றும் தைரியத்தின் இறக்கைகள், ஊக்கம் உற்சாகம் அனைத்தும் பிராப்தியாக அமையும். இந்த பிராப்தி ஒருவரைஅதிகாரியாகவும், ஒருவரை பக்தராகவும் மாற்றுகிறது.

சுலோகன்:
தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களை அடைவதற்கான சுலபமான சாதனம் – உள்ளத்தின் அன்பு