03-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! களங்கீதரன் (குற்றம் குறையில்லாதவர்) ஆவதற்காக தனது நிலையை ஆடாமல் அசையாமல் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு உங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்துகின்றனரோ அந்த அளவிற்கு நீங்கள் களங்கீதரன் ஆகிறீர்கள்.

கேள்வி:
பாபாவின் கட்டளை என்ன? பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமருபவர்கள் எந்த முக்கியமான கட்டளையைக் கடைபிடிக்கிறார்கள்?

பதில்:
இனிமையான குழந்தைகளே! நீங்கள் யாருடனும் சண்டை போடக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். இது பாபாவின் கட்டளையாகும். ஒருவேளை உங்களுடைய விஷயம் யாருக்காவது நன்றாக இல்லை என்றால் அமைதியாக இருங்கள். ஒருவருக்கொருவர் துன்புறுத்தாதீர்கள். உள்ளுக்குள் எந்த பூதமும் இல்லாமல் இருந்தால் தான் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமரலாம். வாயிலிருந்து எந்த ஒரு கடுமையான வார்த்தையும் வரக்கூடாது. இனிமையாகப் பேசுவதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
பகவான் வாக்கு - ஆத்ம அபிமானி ஆகுக! இதை முதன் முதலில் நிச்சயம் கூற வேண்டும். இது குழந்தைகளுக்கான எச்சரிக்கையாகும். நான் குழந்தைகளே! குழந்தை களே! என்று கூறும்பொழுது ஆத்மாக்களைப் பார்க்கின்றேன். இவ்வுடல் பழைய செருப்பு. இது சதோபிரதானம் ஆக முடியாது என பாபா கூறுகின்றார். சதோபிரதானமான சரீரம் சத்யுகத்தில் தான் கிடைக்கும். இப்போது உங்களுடைய ஆத்ம சதோபிர தானமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. அதே பழைய சரீரம் தான். இப்பொழுது நீங்கள் ஆத்மாவை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தூய்மையாக மாற வேண்டும். சத்யுகத்தில் சரீரம் தூய்மையாகக் கிடைக்கும். ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு ஒரு தந்தையை நினைக்க வேண்டும். தந்தை ஆத்மாவைப் பார்க்கின்றார். பார்ப்பதால் ஆத்மா சுத்தமாகாது. எவ்வளவு தந்தையை நீங்கள் நினைக்கின்றீர்களோ அவ்வளவு சுத்தமாகின்றது. இது உங்களுடைய வேலையாகும். பாபாவை நினைத்து, நினைத்து சதோபிரதானம் ஆக வேண்டும். பாபா வழிகாட்டுவதற்காக வந்திருக் கின்றார். இந்த உடல் கடைசி வரை பழையதாகவே இருக்கும். இது வெறும் கர்மேந்திரியங்கள் தான். இதனுடன் ஆத்மாவிற்கு தொடர்பு இருக்கின்றது. ஆத்மா ரோஜா மலர் போல மாறும் பொழுது நல்ல கடமைகளைச் செய்கிறது. அங்கே பறவைகள், விலங்குகள் கூட நல்லவை களாக இருக்கின்றது. இங்கே பறவைகள் மனிதர்களைப் பார்த்து ஓடுகின்றது. அங்கே நல்ல நல்ல பறவைகள் முறைப்படி உங்களுக்கு முன்னும் பின்னும் சுற்றி வரும். வீட்டிற்குள் நுழைந்து அழுக்கு செய்து விட்டுப் போகாது. இல்லவே இல்லை. மிகவும் ஒழுங்கு முறையான உலகமாக இருக்கின்றது. இன்னும் செல்லச் செல்ல உங்களுக்கு அனைத்தும் காட்சிகளாகக் கிடைக்கும். இப்பொழுது காலம் இருக்கின்றது. சொர்க்கத்தின் மகிமை அளவற்றது. பாபாவின் மகிமையும் அளவற்றதே! பாபா கொடுக்கும் சொத்தின் மகிமையும் அளவற்றதே. குழந்தை களுக்கு எவ்வளவு பெருமிதம் இருக்க வேண்டும்! யார் சேவை செய்கிறார்களோ அவர்களின் நினைவு தானாகவே வருகின்றது. அந்த ஆத்மாக்களை நான் நினைக்கின்றேன் என பாபா கூறுகின்றார். ஆத்மாவில் மனம் புத்தி இருக்கின்ற தல்லவா? நாம் முதல் தரமான சேவை செய்கிறோமா அல்லது இரண்டாவது எண்ணில் சேவை செய்கிறோமா என புரிந்து கொள் கிறார்கள். இவையனைத்தும் வரிசைக்கிரமத்தில் புரிந்து கொள்கிறார்கள். சிலர் மியூசியத்தை உருவாக்குகின்றார்கள். பின் குடியரசுத் தலைவர், ஆளுநரிடம் செல்கின்றார்கள். நிச்சயமாக நல்ல விதமாகப் புரிய வைத்திருப்பார்கள். அனைவருக்குள்ளும் அவரவருக்கென்ற குணம் இருக்கின்றது. யாருக்குள்ளாவது நல்ல குணம் இருந்தால் எவ்வளவு நல்ல குணம் உடையவர் என்று கூறப்படுகின்றது. சேவை செய்பவர்கள் எப்போதுமே இனிமையாகப் பேசுவார்கள். கடுமையாக ஒருபோதும் பேசுவதில்லை. கடுமாக பேசக்கூடியவர்களுக்குள் பூதம் இருக்கின்றது. தேக அபிமானம் நம்பர் ஒன்னாகும். அதற்கு பின்பு பூதங்கள் ஒவ்வொன்றாக பிரவேசம் ஆகின்றது.

மனிதர்களுக்குள் கெட்ட நடத்தையும் இருக்கின்றது. பாவம், இவர்களின் குற்றம் இல்லை என பாபா கூறுகின்றார். போன கல்பத்தைப் போன்றே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தன்னை ஆத்மா என்றுணர்ந்து தந்தையை நினையுங்கள். பிறகு மெல்ல மெல்ல முழு உலகின் கயிறும் உங்கள் கையில் வந்து விடும். நாடகம் ஒரு சக்கரமாகும். நேரமும் சரியாக தெரிவிக்கிறார்கள். மற்றபடி நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. அவர்கள் சுதந்திரம் கொடுக்கின்றார்கள் என்றால் இரண்டு பிரிவாக பிரித்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கட்டும் என கொடுக்கின்றார்கள். இல்லை என்றால் அவர்களின் அணுகுண்டுகளை யார் வாங்குவார்கள். இதுவும் அவர்களின் வியாபாரம் அல்லவா? இதுவும் நாடகத்தின்படி அவர்களின் தந்திரம் ஆகும். இங்கேயும் துண்டு துண்டாகப் பிரித்து விட்டனர். இந்த துண்டு எங்களுக்குக் கிடைக்க வேண்டும். சரியாகப் பிரிக்கவில்லை. இந்தப் பக்கம் தண்ணீர் நிறையப் போகின்றது. நிலங்கள் நிறைய இருக்கின்றது. இந்தப் பக்கம் தண்ணீர் குறைவாக வருகின்றது என தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மேலும் உள்ளுக்குள்ளும் பிரச்சனை கள் ஏற்படுகின்றது. பல சண்டைகள் நடக்கின்றது. நீங்கள் பாபாவின் குழந்தைகள் ஆகியதும் நீங்களும் நிந்தனை அடைகிறீர்கள். இப்பொழுது நீங்கள் களங்கீதரன் ஆகிறீர்கள். பாபா திட்டு வாங்குவது போல நீங்களும் நிந்தனை அடைகிறீர்கள். இவர்கள் உலகத்திற்கே அதிபதி ஆகிறார்கள் என பாவம் அவர்களுக்குத் தெரியாது. 84 பிறவிகளின் விஷயம் மிகவும் எளிதானது. தாங்களே பூஜைக் குரியவர்களாகவும் பூஜாரிகளாகவும் மாறுகின்றீர்கள். சிலருடைய புத்தியில் தாரணை ஆவது இல்லை. இதுவும் நாடகத்தில் அவருடைய நடிப்பாகும். வேறு என்ன செய்ய முடியும்? எவ்வளவு தான் தலையை உருட்டினாலும் மேலே ஏற முடிவதில்லை. முயற்சி செய்ய வைக்கப்படுகிறது. ஆனால் அவர்களின் அதிர்ஷ்டத்தில் இல்லை. இராஜ்யம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. அதில் அனைவரும் வேண்டும். இவ்வாறு புரிந்து கொண்டு சாந்தமாக இருக்க வேண்டும். எந்த ஒரு சண்டைச் சச்சரவும் ஏற்படக்கூடாது. அன்போடு இவ்வாறு செய்யக்கூடாது என புரியவைக்க வேண்டும். இந்த ஆத்மா கேட்கிறது. இதை விட இன்னும் பதவி குறைந்து விடும். ஒரு சிலருக்கு நல்ல விஷயங்களை புரிய வைத்தாலும் அசாந்தி அடைகிறார்கள். எனவே விட்டு விட வேண்டும். தானே அவ்வாறு இருந்தால் ஒருவருக் கொருவர் துன்புறுத்திக் கொண்டே இருப்பார். இது கடைசி வரை இருக்கும். மாயாவும் நாளுக்கு நாள் கடுமையாக ஆகிக் கொண்டே இருக்கும். மகாரதிகளுடன் மாயாவும் மகாரதியாகி சண்டையிடுகின்றது. மாயாவின் புயல் வருகின்றது. பிறகு பாபாவை நினைப்பதும் பயிற்சியாகி விடுகின்றது. ஒரேயாடியாக ஆடாமல் அசையாமல் ஆகிறார்கள். மாயா வீழ்த்தி விடும் என நினைக்கிறார்கள். பயப்படக் கூடாது. களங்கீதரன் ஆகுபவர்கள் மீது களங்கம் ஏற்படுகிறது. இதில் கோபம் ஏற்படக் கூடாது. செய்தியாளர்கள் ஏதாவது எதிரான செய்தியைப் போடு வார்கள். ஏனென்றால் தூய்மையின் விஷயம் ஆகும். அபலைகளை கொடுமைப் படுத்து கின்றார்கள். அகாசூரன் பகாசூரன் என்ற பெயர்கள் இருக்கின்றது. அவ்வாறே பூதனா, சூர்பநகை என்ற பெயர்களும் இருக்கின்றன.

இப்பொழுது குழந்தைகள் பாபாவின் மகிமையை முதன் முதலில் கூறுகிறீர்கள். நீங்கள் ஆத்மா என்று எல்லையற்ற தந்தை கூறுகின்றார். இந்த ஞானத்தை ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானமே படிப்பாகும். இதன் மூலம் நீங்கள் சுயதர்ஷன சக்கரதாரியாகி சக்கர வர்த்தி இராஜா ஆகிறீர்கள். அலங்காரம் உங்களுடையதே. ஆனால் பிராமணர்களாகிய நீங்கள் முயற்சியாளர்களே! ஆகையால் இந்த அலங்காரத்தை விஷ்ணுவிற்கு கொடுத்திருக்கின்றார்கள். ஆத்மா என்றால் என்ன? பரமாத்மா என்றால் என்ன? இந்த விஷயங்களை வேறு யாரும் கூற முடியாது. ஆத்மா எங்கிருந்து வந்தது? எப்படிப் போகிறது? இதை யாரும் கூற முடியாது. சில நேரம் கண்களின் மூலமாகச் சென்றது, சில நேரம் புருவ மத்தியிலிருந்து வெளியேறியது, சில நேரம் நெற்றியிலிருந்து வெளியேறியது என்கிறார்கள். இதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. ஆத்மா தந்தையின் நினைவில் அமர்ந்து தேகத்தை விடும் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபாவிடம் குஷியுடன் செல்ல வேண்டும். பழைய உடலை குஷியுடன் பாம்பு போன்று விட வேண்டும். விலங்குகளுக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இல்லை. சந்நியாசிகள் எடுத்துக் காட்டுகளை மட்டும் கூறுகிறார்கள். நீங்கள், குளவி புழுக்களை மாற்றுவதைப் போல மனிதன் என்ற புழுவிலிருந்து மாற்றிவிட வேண்டும். வெறும் எடுத்துக் காட்டு மட்டும் கூறக்கூடாது. நடை முறையில் செய்ய வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் வீட்டிற்குத் திரும்பப் போக வேண்டும். நீங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள் என உள்ளுக்குள் குஷி இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆஸ்தியைப் பற்றித் தெரியாது. அனைவருக்கும் அமைதி கிடைக்கின்றது. அனைவரும் சாந்திதாமம் செல்கிறார் கள். பாபாவைத் தவிர வேறு யாரும் சத்கதி கொடுக்க முடியாது. இதையும் புரிய வைக்க வேண்டும்- உங்களுடையது துறவற மார்க்கம். நீங்கள் பிரம்மத்தில் கலந்து விட முயற்சி செய்கிறீர்கள். பாபா இல்லற மார்க்கத்தை உருவாக்குகிறார். நீங்கள் சத்யுகத்தில் வரமுடியாது. நீங்கள் இந்த ஞானத்தை யாருக்கும் புரிய வைக்க முடியாது. இது ஆழமான விஷயமாகும். முதலில் யாருக்காவது வேண்டுமானால் அப்பா மற்றும் அவர் தரும் ஆஸ்தியைக் கற்பிக்க வேண்டும். உங்களுக்கு எல்லைக்கு உட்பட்ட மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட என இரண்டு தந்தைகள் இருக்கின்றார்கள். எல்லைக்கு உட்பட்ட தந்தையிடம் விகாரத்தினால் பிறக்கிறார் கள். எவ்வளவு அளவற்ற துக்கம் கிடைக் கின்றது. சத்யுகத்தில் அளவற்ற சுகம் கிடைக்கின்றது. அங்கே பிறவி கூட வெண்ணையைப் போன்று இருக்கின்றது. எந்த துக்கமும் இல்லை. பெயரே சொர்க்கம் ஆகும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற இராஜ்ஜிய பதவியை சொத்தாகக் கொடுக்கின்றார். முதலில் சுகம் பிறகு துக்கம். முதலில் துக்கம் பிறகு சுகம் என்று கூறுவது தவறாகும். முதலில் புதிய உலகம் ஸ்தாபனையாகிறது. பழைய உலகம் உருவாகாது. பழைய கட்டிடத்தை யாராவது கட்டுவார்களா? புது உலகத்தில் இராவணன் இருக்க முடியாது. பாபா புரிய வைக்கின்றார் என்றால் புத்தியில் யுக்திகள் இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சுகத்தைக் கொடுக்கிறார். எப்படிக் கொடுக்கிறார் என்பதை வந்தால் புரிய வைக்கலாம். புரிய வைப்பதற்கும் யுக்திகள் வேண்டும். துக்க தாமத்தின் துக்கதையும் கூட நீங்கள் சாட்சாத்காரம் செய்வியுங்கள். எவ்வளவு அளவற்ற துக்கம் இருக்கிறது. அளவற்றது. பெயரே துக்க உலகம் ஆகும். இதனை சுகமான உலகம் என யாரும் கூற முடியாது. சுகமான உலகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணரின் கோவிலையும் கூட சுகதாமம் என்றார்கள். அவர் சுகமான உலகத்திற்கு அதிபதியாக இருந்தார். அவருடைய பூஜை இப்பொழுதும் கோவில்களில் நடக்கிறது. இப்போது இந்த பாபா இலஷ்மி நாராயணன் கோவிலுக்குச் சென்றால், ஆஹா! நாம் இவ்வாறு மாறுகின்றோம் என்று கூறுவார். இவர் களுக்கு பூஜை செய்ய மாட்டார். நம்பர் ஒன் ஆகிறார் என்றால் இரண்டாம், மூன்றாமவரை பூஜை ஏன் செய்ய வேண்டும்? நாமோ சூரிய வம்சியாக மாறுகிறோம். மனிதர்களுக்கு இது தெரியாது. அவர்கள் அனைவரையும் பகவான் என்று கூறுகிறார்கள். எவ்வளவு இருள் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறீர்கள்! போன கல்பத்தைப் போலவே நேரமாகிறது. சீக்கிரமாக எதுவும் செய்ய முடியாது. இப்போது உங்களுடைய இப்பிறவியானது வைரம் போன்றதாகும். தேவதைகளின் பிறவியை வைரம் போன்றது என சொல்ல முடியாது. அது ஈஸ்வரிய குடும்பம் கிடையாது. இது உங்களுடைய ஈஸ்வரிய பரிவாரம் (குடும்பம்) ஆகும். அது தெய்வீகப் பரிவாரம் ஆகும். எவ்வளவு புதிய புதிய விஷயங்கள்! மாவில் சிறிதளவு உப்பு போடுவது போன்று கீதையில் உண்மை இருக்கிறது. கிருஷ்ணரின் பெயரைப் போட்டு எவ்வளவு தவறு செய்து விட்டனர்! நீங்கள் தேவதைகளை தேவதை என்கிறீர்கள். பிறகு கிருஷ்ணரை பகவான் என ஏன் கூறுகிறீர்கள்? விஷ்ணு யார்? இதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் ஞானம் இல்லாமல் இவ்வாறு பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். சொர்கத்தில் இருந்து விட்டு சென்றவர்கள் பழைமையான தேவி தேவதைகள். அனைவரும் சதோ, ரஜோ, தமோவில் வர வேண்டும். இச்சமயம் அனைவரும் தமோபிரதானமாக இருக் கிறார்கள். குழந்தைகளுக்கு நிறைய கருத்துக்களைப் புரிய வைக்கிறார். நீங்கள் பேட்ஜ் மூலமாகக் கூட புரிய வைக்கலாம். அப்பா மற்றும் கற்றுத்தரக் கூடிய டீச்சரை நினைக்க வேண்டும். ஆனால் மாயாவின் போராட்டம் எவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் நல்ல நல்ல கருத்துக்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. நீங்கள் கேட்கவில்லை என்றால் எப்படி பிறருக்குக் கூறுவீர்கள்? பெரும்பாலும் பெரிய மகாரதிகள் வெளியே செல்லும் போது முரளியைத் தவற விடுகிறார்கள். பிறகு படிப்பதில்லை. வயிறு நிறைந்திருக்கிறது. எவ்வளவு ஆழமான விஷயங்களைக் கூறுகிறேன். அதைக் கேட்டு கடைப்பிடிக்க வேண்டும் என பாபா கூறுகிறார். தாரணை செய்யவில்லை என்றால் அரை குறை யாகவே இருப்பார்கள். நிறைய குழந்தைகள் நன்கு சிந்தித்து நல்ல நல்ல கருத்துக்களைக் கூறுகிறார்கள். அவரவர் நிலைக்கு ஏற்ப கருத்துக்களைக் கூறுகிறார்கள். பாபா இதை பார்க்கிறார். இவர் கூறாத கருத்துககளைக் கூட சேவை செய்யக் கூடிய குழந்தைகள் கூறுகிறார்கள். சேவையிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். பத்திரிக்கைகளிலும் நல்ல கருத்துக்களைப் போடுகிறார்கள்.

குழந்தைகளாகிய நீங்கள் உலகத்திற்கு அதிபதியாகிறீர்கள். பாபா எவ்வளவு உயர்ந்தவராக உங்களை மாற்றுகிறார். முழு உலகத்தின் கயிறும் (லகான்) உங்கள் கையில் வரப்போகிறது என பாடல் கூட இருக்கிறது அல்லவா? யாரும் பறிக்க முடியாது. இந்த லஷ்மி நாராயணன் உலகத்திற்கே அதிபதியாக இருந்தனர் அல்லவா? அவர்களைக் கற்க வைக்கக் கூடியவர் நிச்சயமாக பாபா தான். இதையும் நீங்கள் புரிய வைக்க முடியும். அவர்கள் இராஜ்ய பதவியை எப்படி அடைந்தார்கள்? கோவிலில் இருக்கும் பூஜாரிகளுக்கு கூடத் தெரியவில்லை. உங்களுக்கு அளவற்ற குஷி இருக்க வேண்டும். ஈஸ்வர் சர்வவியாபி இல்லை என்பதை நீங்கள் புரிய வைக்கலாம். இச்சமயம் 5 பூதங்களும் சர்வ வியாபியாக இருக்கின்றது. ஒவ்வொருவருக் குள்ளும் இந்த விகாரங்கள் இருக்கின்றது. மாயாவின் 5 விகாரங்கள் இருக்கின்றது. மாயை சர்வ வியாபியாக இருக்கிறது. நீங்கள் ஈஸ்வரனை சர்வ வியாபி என்கிறீர்கள். இது தவறல்லவா? ஈஸ்வர் எப்படி சர்வவியாபியாக முடியும்? அவர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். முட்களை மலர்களாக மாற்றுகிறார். குழந்தைகள் புரிய வைப்பதற் காக பயிற்சி செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யாராவது அசாந்தியை பரப்புகிறார்கள் அல்லது துன்புறுத்துகிறார்கள் என்றால், நீங்கள் சாந்தமாக இருக்க வேண்டும். ஒரு வேளை புரிய வைத்தும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இவர்களுடைய அதிர்ஷ்டம் இவ்வளவு தான் என்று கூறுவார்கள். ஏனென்றால் இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

2. நன்கு சிந்தித்து ஞானத்தின் புதுப் புது கருத்துக்களைக் கண்டுபிடித்து சேவை செய்ய வேண்டும். பாபா தினந்தோறும் முரளியில் ஆழமான விஷயங்களைக் கூறுகின்றார். அதை ஒரு போதும் தவற விடக் கூடாது.

வரதானம்:
பவித்திரத்தாவின் (தூய்மையின்) ஆதி, அநாதி விசேஷமான குணத்தின் ரூபத்தை சகஜமாக தன்னுடையதாக்கும் பூஜ்ய ஆத்மா ஆகுக

பூஜைக்குரியவர் ஆவதற்கான விசேஷ ஆதாரம் பவித்திரத்தா. எந்தளவு அனைத்து விதமான தூய்மையை தன்னுடையதாக்கிக் கொள்ளும் பொழுது, அனைத்து விதத்திலும் பூஜைக்குரிய வராக முடியும். யார் விதிப்பூர்வமாக ஆதி, அனாதி விசேஷ குணத்தின் ரூபத்தில் தூய்மையை தன்னுடையதாக்கிக் கொள்கின்றனரோ அவர்கள் விதிப்பூர்வமாக பூஜைக்குரியவர் ஆகின்றனர். யார் ஞானி மற்றும் அஞ்ஞானி ஆத்மாக்களின் தொடர்பில் வந்தாலும் தூய்மையான உள்ளுணர்வு, பார்வை, எண்ணத்தின் அலைகளி-ருந்து யதார்த்தமாக தொடர்பு - உறவுகளை பராமரிப்பார்கள், கனவில் கூட அவர்களின் தூய்மையை இழக்க மாட்டார்கள், அவர்கள் தான் விதிப்பூர்வமாக பூஜைக்குரியவர் ஆவார்கள்.

சுலோகன்:
வியக்கத்தில் இருந்து அவ்யக்த பரிஸ்தா ஆகி சேவை செய்யுங்கள், அப்பொழுது விஷ்வ நன்மைக்கான காரியம் தீவிரமான முறையில் (சம்பன்னமாகும்) நிறைவாகும்.