03-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் இந்த
டிராமாவின் முதல்-இடை-கடை பற்றி அறிந்திருக்கிறீர்கள்.
உங்களுக்குத் தந்தை மூலம் ஞானத்தின் மூன்றாவது கண்
கிடைத்துள்ளது. அதனால் நீங்கள் ஆஸ்திகர்கள்.
கேள்வி:
தந்தைக்குரிய எந்த ஒரு டைட்டிலை
(பட்டப் பெயர்) தர்ம ஸ்தாபகர்களுக்குக் கொடுக்க முடியாது?
பதில்:
பாபா சத்குருவாக உள்ளார். எந்த
ஒரு தர்ம ஸ்தாபகரையும் குரு எனச் சொல்ல முடியாது. ஏனென்றால்
குரு என்பவர் துக்கத்திலிருந்து விடுவித்து சுகத்தில் கொண்டு
செல்பவர். தர்ம ஸ்தாபனை செய்பவர்களைப் பின் தொடர்ந்து
அவர்களுடைய தர்மத்தின் ஆத்மாக்கள் மேலிருந்து கீழே வருகின்றனர்.
அவர்கள் யாரையும் அழைத்துச் செல்வதில்லை. தந்தை எப்போது
வருகிறாரோ, அப்போது அனைத்து ஆத்மாக்களையும் வீட்டுக்கு
அழைத்துச் செல்கிறார். அதனால் அவர் அனைவரின் சத்குரு ஆவார்.
பாடல்:
இந்தப் பாவ உலகில் இருந்து........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடலின் ஒரு வரியைக்
கேட்டீர்கள். இது பாவ உலகம். குழந்தைகள் அறிந்தும் உள்ளனர், இது
பாவ ஆத்மாக்களின் உலகம் என்று. எவ்வளவு மோசமான வார்த்தை! ஆனால்
இது உண்மையிலேயே பாவ ஆத்மாக்களின் உலகம் தான் என்பதை மனிதர்கள்
புரிந்து கொள்ள முடிவதில்லை. நிச்சயமாக புண்ணிய ஆத்மாக்களின்
உலகம் ஒன்று இருந்தது. அது சொர்க்கம் எனச் சொல்லப்படுகின்றது.
பாவாத்மாக்களின் உலகம் நரகம் எனச் சொல்லப்படுகின்றது.
பாரதத்தில் தான் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய சர்ச்சை
அதிகமாக உள்ளது. மனிதர்கள் இறந்து போனால் சொர்க்கவாசி ஆகி
விட்டதாகச் சொல்கின்றனர். ஆக, அதிலிருந்து அவர்கள் நரகவாசியாக
இருந்தனர் என்பது தெளிவாகின்றது. தூய்மையற்ற உலகத்திலிருந்து
தூய்மை யான உலகத்திற்குச் சென்று விட்டதாகச் சொல்கின்றனர்.
ஆனால் மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. மனதில் என்ன தோன்றுகிறதோ,
அதைப் பேசி விடுகின்றனர். யதார்த்த அர்த்தத்தைக் கொஞ்சம் கூடப்
புரிந்து கொள்ளவில்லை.
தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஆறுதல் தருகிறார் -
இப்போது கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நீங்கள் பாவச் சுமையினால்
அதிக பாரமாகி இருக்கிறீர்கள். இப்போது உங்களைப் புண்ணியாத்மா
ஆக்கி சொர்க்கம் என்று சொல்லப்படும் அத்தகைய உலகத்திற்கு
அழைத்துச் செல்கிறேன். அங்கே எந்த ஒரு பாவமும் நடைபெறாது, எந்த
ஒரு துக்கமும் இருக்காது. குழந்தைகளுக்கு தைரியம் கிடைத்துள்ளது.
இன்று இங்கே இருக்கிறீர்கள். நாளை தங்களின் சாந்திதாமம்,
சுகதாமத்திற்குச் செல்வீர்கள். எப்படி நோயாளி மனிதர்கள் கொஞ்சம்
குணமாகிற மாதிரி இருந்தால் டாக்டர்கள் தைரியம் கொடுக்கின்றனர்
-சீக்கிரமாக நீங்கள் நன்றாக குணமடைந்து விடுவீர்கள். இப்போது
இதுவோ எல்லையற்ற பொறுமை. எல்லையற்ற தந்தை சொல்கிறார் - நீங்களோ
எல்லையற்ற துக்கமுடையவர்களாக, தூய்மையற்றவர்களாக ஆகி
விட்டிருக்கிறீர்கள். நான் இப்போது குழந்தைகளாகிய உங்களை
ஆஸ்திகராக ஆக்கு கிறேன். பிறகு படைப்பு பற்றிய அறிமுகமும்
தருகிறேன். ரிஷி முதலானவர்களோ, எங்களுக்குப் படைப்பவர் மற்றும்
படைப்பு பற்றித் தெரியாது என்றே சொல்லி வந்துள்ளனர். இப்போது
அவரை யார் அறிவார்? எப்போது, யார் மூலமாக அறிந்து கொள்ள
முடியும்? இது யாருக்கும் தெரியாது. பாபா சொல்கிறார் - நான்
சங்கமயுகத்தில் வந்து டிராமா அனுசாரம் குழந்தைகள் உங்களை
முதல்-முதலில் ஆஸ்திகர் ஆக்குகிறேன். பிறகு உங்களுக்குப்
படைப்பின் முதல்-இடை-கடை பற்றிய இரகசியத்தைச் சொல்கிறேன்.
அதாவது உங்களுடைய ஞானத்தின் மூன்றாவது கண்ணைத் திறக்கிறேன்.
உங்களுக்கு ஒளி கிடைத்து விட்டது. கண்களின் ஒளி போய் விட்டால்
மனிதர்கள் குருடாகி விடுகின்றனர். இந்தச் சமயம் மனிதர் களுக்கு
ஞானத்தின் மூன்றாவது கண் கிடையாது. மனிதர்களாக இருந்து கொண்டு
அந்தத் தந்தை மற்றும் படைப்பின் முதல்-இடை-கடை பற்றி
அறிந்திருக்க வில்லை என்றால் அவர்கள் புத்தியற்றவர்கள் எனச்
சொல்லப்படுவார்கள். பாடலிலும் உள்ளது-ஒரு குருடரின் குழந்தை
குருடர் என்று. மற்றவர் புத்தியற்றவர்கள். மகாபாரத யுத்தம்
நடந்தது, ஓர் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை.
நடைபெற்றது.. என்று காட்டுகின்றனர். தந்தை ஆத்மாக்களுக்கு வந்து
இராஜயோகத்தைக் கற்பித்திருந்தார்-சத்யுக சுயராஜ்யத்தை
அளிப்பதற்காக. ஆத்மாக்கள் சொல்கின்றனர் - நான் ராஜா, நான்
வக்கீல் என்று. ஆத்மா நீங்கள் இப்போது அறிந்து கொண்டி
ருக்கிறீர்கள், நாம் உலகத்தைப் படைப்பவர் மூலமாக உலகத்தின்
சுயராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். அவர் எதைப் படைப்பவர்?
புது உலகைப் படைப்பவர். பாபா புதிய சிருஷ்டியைப் படைக்கிறார்.
படைப்பவராகவும் உள்ளார், அவரிடம் முழு ஞானமும் உள்ளது. முழு
உலகத்தின் சரித்திர-பூகோளத்தை ஒருவர் கூட அறிந்திருக்கவில்லை.
யாருக்கும் ஞானத் தின் மூன்றாவது கண் இல்லை. தந்தை தவிர வேறு
யாரும் மூன்றாவது கண்ணைத் தர முடியாது. உலகின் சரித்திர-பூகோளம்,
மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூல வதனம்........ இவை அனைத்தையும்
நீங்கள் அறிவீர்கள். மூல வதனம் என்பது ஆத்மாக்களின் சிருஷ்டி.
நாங்கள் பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் அல்லது ஜோதியோடு
ஜோதியாகக் கலந்து விடுவோம் என்று சந்நியாசிகள் சொல்கின்றனர்.
அது போல் கிடையாது. நீங்கள் அறிவீர்கள், பிரம்ம தத்துவத்தில்
சென்று நிவாசம் செய்வோம். அது சாந்திதாமமாகிய வீடாகும். அவர்கள்
பிரம்மம் தான் பகவான் எனச் சொல்லி விடுகின்றனர். எவ்வளவு
வேறுபாடு! பிரம்மமோ தத்துவமாகும். எப்படி ஆகாச தத்துவம் உள்ளது,
அது போல் பிரம்ம தத்துவமும் உள்ளது. எங்கே நாம் ஆத்மாக்களும்
பரமபிதா பரமாத்மாவும் நிவாசம் செய்கிறோமோ, அது இனிமையான வீடு
எனச் சொல்லப்படுகின்றது. அது ஆத்மாக்களின் வீடாகும்.
குழந்தைகளுக்குத் தெரியும், பிரம்ம தத்துவத்தில் எந்த ஆத்மாவும்
ஐக்கியமாவதில்லை. மேலும் ஆத்மா ஒரு போதும் அழிவ தில்லை. ஆத்மா
அழியாதது. இந்த டிராமாவும் கூட உருவாக்கப்பட்டது, அழியாதது.
இந்த டிராமாவில் எத்தனை நடிகர்கள்! இப்போது சங்கமயுகம். இப்போது
தான் நடிகர்கள் அனைவரும் மேடையில் வந்துள்ளனர். நாடகம்
முடிவடைகின்றது என்றால் அனைத்து நடிகர்கள், படைப் பவர்
முதலியோர் ஆஜராகி விடுகின்றனர். இச்சமயம் இந்த எல்லையற்ற
டிராமாவும் முடிவடைகின்றது, பிறகு ரிப்பீட் ஆகும். அந்த
எல்லைக்குட்பட்ட நாடகங்களில் மாற்றம் ஏற்படலாம். டிராமா
பழையதாகி விடுகின்றது. இதுவோ எல்லையற்ற டிராமா, அநாதி, அவிநாசி.
பாபா திரிகாலதரிசி, திரிநேத்திரி ஆக்குகிறார். தேவதைகள் ஒன்றும்
திரிகாலதரிசி கிடையாது. திரிகாலதரிசிகளோ, பிராமண
வர்ணத்தினராகிய நீங்கள் தான். பிராமணராக ஆகாத வரை ஞானத்தின்
மூன்றாவது கண் கிடைக்காது. நீங்கள் கல்ப மரத்தின் முதல்-இடை-கடை
மற்றும் அனைத்து தர்மங்களையும் அறிவீர்கள். நீங்களும் மாஸ்டர்
ஞானம் நிறைந்தவர்களாக ஆகி விடுகிறீர்கள். தந்தை குழந்தைகளைத்
தமக்குச் சமமாக ஆக்குவார் இல்லையா? ஞானக் கடலாக இருப்பவரோ ஒரு
தந்தை மட்டுமே! அவர் தான் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார்.
குழந்தைகள் அனைவரையும் ஆஸ்திகராக்கி, திரிகாலதரிசி ஆக்குகிறார்.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் சொல்ல
வேண்டும்-சிவபாபா வந்துள்ளார், அவரை நினைவு செய்யுங்கள். யார்
ஆஸ்திகர் ஆகிறாரோ, அவர் பாபா மீது நன்கு அன்பு செலுத்துவார்.
உங்கள் மீது பாபாவின் அன்பும் உள்ளது. உங்களுக்கு சொர்க்கத்தின்
ஆஸ்தியை அளிக்கிறார். விநாச காலத்தில் விபரீத புத்தி உள்ளவர்கள்
அழிந்து போவார்கள், விநாச காலத்தில் அன்பான புத்தி உள்ளவர்கள்
வெற்றி பெறுவார்கள் எனப் பாடப் பட்டுள்ளது. கீதையில் ஒரு சில
வார்த்தைகள் உண்மையாக உள்ளன. ஸ்ரீமத் பகவத் கீதை சாஸ்திரங் கள்
அனைத்திலும் உத்தம மானது. அது ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின்
சாஸ்திரம். இதுவும் புரிய வைக்கப் பட்டுள்ளது - முக்கிய தர்ம
சாஸ்திரங்கள் நான்கு. மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வருவதே
தங்களின் தர்மங்களை ஸ்தாபனை செய்வதற்காகத் தான். இராஜ்ய ஸ்தாபனை
முதலிய வற்றின் விசயம் அங்கே கிடையாது. அவர்களை குரு என்றும்
சொல்ல முடியாது. குருவின் வேலையே திரும்ப அழைத்துச் செல்வது
தான். இப்ராஹிம், புத்தர், கிறிஸ்து முதலானவர்களோ வருகின்றனர்
என்றால் அவர்களின் பின்னால் அவர்களின் வம்சாவளியும் வருகின்றது.
துக்கத்தில் இருந்து விடுவித்து சுகத்தில் கொண்டு செல்பவர் தான்
குரு ஆவார். அவர்களோ தர்ம ஸ்தாபனை செய்வதற்காக மட்டுமே
வருகின்றனர். இங்கோ அநேகரை குரு எனச் சொல்லி விடுகின்றனர்.
பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் கூட குரு எனச் சொல்ல முடியாது. ஒரு
சிவபாபா மட்டுமே அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். ஒரு ராமரை
மட்டுமே அழைக் கின்றனர். அநேக மொழிகள் என்பதால் பெயர்களும்
அநேகம் வைத்துள்ளனர். உண்மையான பெயர் சிவன் என்பது தான். அவரை
சோமநாத் என்றும் சொல்கின்றனர். சோமரசம் அருந்தச் செய்தார்,
அதாவது ஞான செல்வத்தைத் தந்தார். மற்றப்படி தண்ணீர்
முதலியவற்றின் விசயமே கிடையாது. உங்களை தந்தையே நேரில் வந்து
ஞானம் நிறைந்தவராக, ஆனந்தம் நிறைந்தவராக ஆக்கிக்
கொண்டிருக்கிறார். பாபாவோ ஞானக்கடலாக இருப்பவர். குழந்தை
களாகிய உங்களை ஞான நதிகளாக ஆக்குகிறார். கடல் ஒன்று தான் உள்ளது.
ஒரு கடலில் இருந்து அநேக நதிகள் வெளிப்படுகின்றன. இப்போது
நீங்கள் இருப்பது சங்கமயுகம். இப்போது இந்த பூமி முழுவதும்
இராவணனின் இருப்பிடம். ஓர் இலங்கை மட்டும் என்பதில்லை. பூமி
முழுவதுமே இராவணனின் இராஜ்யம் உள்ளது. இராமராஜ்யத்தில் மிகக்
குறைந்த எண்ணிக்கை மனிதர்கள் இருப்பார்கள். இவை இப்போது தான்
உங்கள் புத்தியில் உள்ளது. பாபா புரிய வைத்துள்ளார் - நான்
மூன்று தர்மங்களை ஸ்தாபனை செய்கிறேன் - பிராமணர், தேவதா,
சத்திரியர். பிறகு வைசிய, சூத்திர வர்ணத்தில் மற்ற அனைவரும்
வந்து தங்களின் தர்மங்களை ஸ்தாபனை செய்கின்றனர். அநேக
தர்மங்களின் விநாசத்தையும் செய்விக்கிறார். பாரதத்தில்
திரிமூர்த்தியின் சித்திரத்தையும் உருவாக்கு கின்றனர். ஆனால்
அதில் சிவனுடைய சித்திரத்தை மறைத்து விட்டுள்ளனர். பரமபிதா
பரமாத்மா சிவன், பிரம்மா மூலம் ஸ்தாபனை, விஷ்ணு மூலம் பாலனை
செய்விக்கிறார் என்பது சிவன் மூலமாகவே தான் வெளிப்படுகின்றது.
அவர் செய்பவர்-செய்விப்பவர் எனச் சொல்லப்படுகிறார். தாமும்
கர்மம் செய்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கும் கற்றுத்
தருகிறார். கர்மம், அகர்மம், விகர்மத்தின் கதியையும் புரிய
வைக்கிறார். இராவண இராஜ்யத்தில் நீங்கள் செய்யும் கர்மம்
விகர்மம் ஆகி விடுகின்றது. சத்யுகத்தில் நீங்கள் என்ன கர்மம்
செய்கிறீர்களோ, அது அகர்மம் ஆகி விடுகிறது. இங்கே விகர்மம் தான்
நடை பெறுகின்றது. ஏனெனில் இது இராவண இராஜ்யமாக இருப்பதால்.
சத்யுகத்தில் 5 விகாரங்கள் என்பதே இருக்காது. ஒவ்வொரு விசயமும்
புரிந்து கொள்ளத்தக்க தாகும். மேலும் அது ஒரு விநாடியில் புரிய
வைக்கப் படுகின்றது. ஓம் என்பதன் அர்த்தம் அந்த மனிதர்களோ மிக
விஸ்தாரமாகப் புரிய வைக்கின்றனர். பாபா சொல்கிறார்-ஓம் என்றால்
அகம் ஆத்மா, இது எனது சரீரம். எவ்வளவு சுலபம். மேலும் நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள், நாம் சுகதாமத்திற்குச் சென்று
கொண்டிருக்கிறோம். கிருஷ்ணரின் ஆலயத்தை சுகதாமம் எனச்
சொல்கின்றனர். அதுவும் கிருஷ்ணபுரி. தாய்மார்கள் கிருஷ்ணபுரி
செல்வதற்காக அதிக முயற்சி செய்கின்றனர். நீங்கள் இப்போது பக்தி
செய்வதில்லை. உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது. வேறு எந்த
மனிதரிடமும் இந்த ஞானம் கிடையாது. நான் உங்களைப்
தூய்மையானவர்களாக்கி விட்டுச் செல்கிறேன். பிறகு யார்
தூய்மையற்றவராக்குகின்றார்? இதை யாராலும் சொல்ல முடியாது.
ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பக்தர்கள், சீதைகள் தான்.
அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் பாபா. அனைவரும் இராவணனின்
சிறையில் உள்ளனர். இது துக்க உலகம் தான். பாபா உங்களை
சுகதாமத்தின் எஜமானன் ஆக்குகிறார். இப்படிப்பட்ட தந்தையை 5000
ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் மட்டுமே பார்க்கிறீர்கள்.
லட்சுமி-நாராயணரின் ஆத்மாவிற்கு இப்போது ஞானம் உள்ளது. நாம்
சிறு வயதில் இது போல (கிருஷ்ணர்) ஆவோம். பிறகு பெரிய வராவோம்.
அப்படியே சரீரத்தை விடுவோம். பிறகு வேறொரு சரீரத்தை எடுத்துக்
கொள்வோம். வேறு யாருக்கும் இந்த ஞானம் கிடையாது.
பாபா சொல்கிறார் - நீங்கள் அனைவரும் பார்வதிகள். சிவபாபா
உங்களுக்கு அமரகதை சொல்லிக் கொண்டிருக் கிறார்-அமரர்
ஆக்குவதற்காக, அமரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற் காக. இது மரண
உலகம். பார்வதிகள் நீங்கள் அனைவரும் அமரநாதரிடம் அமரகதை
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலும் உண்மை யாகவே
ஆகிறீர்கள். பாபாவை நினைவு செய்வதாலேயே ஆத்மாக்கள் நீங்கள்
அமரர் ஆகிறீர்கள். அங்கே துக்கத்தின் விசயமே இருக்காது. எப்படி
பாம்பு ஒரு தோலை உரித்து விட்டு வேறொன்றை எடுக்கிறது. இந்த
உதாரணங்களெல்லாம் இங்குள்ளவை தான். குளவியின் உதாரணமும்
இங்குள்ளது தான். பிராமணர்கள் நீங்கள் என்ன
செய்கிறீர்கள்-விகாரிகளான புழுக்களை மாற்றி தேவதையாக
ஆக்குகிறீர்கள். இது மனிதர்களின் விசயம் தான். குளவி பற்றியதோ
ஓர் உதாரணம் தான். பிராமணக் குழந்தைகள் நீங்கள் இப்போது பாபா
மூலம் அமரகதை கேட்டுக் கொண்டிருக் கிறீர்கள். மற்றவர்களுக்கு
நீங்கள் அமர்ந்து ஞானத்தை பூம்-பூம் செய்கிறீர்கள். (ஞானத்தை
உரைத்து உரைத்து கூறுகின்றீர்கள்) இதன் மூலம் மனிதரில் இருந்து
தேவதையாக, சொர்க்கத்தின் தேவதையாக ஆகி விடுவார்கள். மற்றப்படி
மானசரோவரில் மூழ்கி எழுவதால் யாராவது பரி (தேவதை) ஆகி
விடுவார்கள் என்பதில்லை. இவையனைத்தும் பொய்யாகும். நீங்கள்
பொய்யையே கேட்டு வந்திருக்கிறீர்கள். இப்போது பாபா உண்மையைச்
சொல்கிறார். இப்போது பாபா சொல்கிறார் - தன்னை ஆத்மா என
உணருங்கள். நிராகார் பரமபிதா பரமாத்மா இந்த (பிரம்மாவின்) வாய்
மூலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து
கொண்டி ருக்கிறீர்கள். நாம் இந்தக் காதுகள் மூலமாகக் கேட்டுக்
கொண்டிருக்கிறோம். ஆத்ம அபிமானி ஆக வேண்டும். பிறகு
பரமாத்மாவும் உணர வைக்கிறார். நான் யார்? வேறு யாரும் ஆத்ம
அபிமானியாக ஆக்க முடியாது. நீங்கள் ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று
பாபாவைத் தவிர வேறு யாரும் சொல்ல முடியாது. சிவஜெயந்தியும்
கொண்டாடு கின்றனர். ஆனால் இது எப்படி அவருடைய ஜெயந்தி என்பது
அவர்களுக்குத் தெரியாது. பாபா தாமே வந்து சொல்லிப் புரிய
வைக்கிறார்-நான் சாதாரண வயோதிகரின் சரீரத்தில் பிரவேசமாகிறேன்.
இல்லை யென்றால் பிரம்மா எங்கே இருந்து வருவார்? தூய்மையில்லாத
சரீரம் தான் வேண்டும். சூட்சுமவதன வாசியாகிய பிரம்மாவுக்குள்
அமர்ந்து கொண்டோ பிராமணர்களைப் படைக்க மாட்டார். அவரே
சொல்கிறார்-நான் தூய்மையற்ற சரீரத்தில், தூய்மையற்ற உலகத்தில்
வருகிறேன். பிரம்மா மூலம் ஸ்தாபனை என்பது பாடப்பட்டுள்ளது.
பிறகு எதை ஸ்தாபனை செய்கிறாரோ, யார் இந்த ஞானத்தைப்
பெறுகிறார்களோ, அவர்கள் தேவதை ஆகிறார்கள். மனிதர்கள்
பிரம்மாவின் சித்திரத்தைப் பார்த்துக் குழம்பி விடுகின்றனர்.
அவர்கள் சொல் கின்றனர், இதுவோ தாதாவின் சித்திரம் என்று.
பிரஜாபிதா பிரம்மாவோ நிச்சயமாக இங்கே தான் இருப்பார்.
சூட்சுமவதனத்தில் இருந்து கொண்டு எப்படி பிரஜைகளைப் படைப்பார்?
பிரஜாபிதாவின் குழந்தைகள் ஆயிரக் கணக்கான
பிரம்மாகுமார்-குமாரிகள் உள்ளனர். இது பொய்யாக இருக்க முடியாது.
நாம் சிவபாபா மூலம் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது - அவர்
அவ்யக்த பிரம்மா. பிரஜா பிதாவோ சரீரத்தில் இருக்க வேண்டும்.
இந்த தூய்மை இல்லாதவர் தான் தூய்மையடைகிறார். தத த்வம் (அதுவே
நீங்கள் தான்). நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஆத்ம அபிமானி ஆகி இந்தக் காதுகள் மூலம் அமரகதை கேட்க
வேண்டும். ஞானத்தின் பூம்-பூம் செய்து (உரைத்து) தங்களுக்குச்
சமமாக ஆக்கக் கூடிய சேவையில் இருக்க வேண்டும்.
2) பாபாவுக்குச் சமமாக ஞானம் நிறைந்தவராக, ஆனந்தம் நிறைந்தவராக
ஆக வேண்டும். ஞானம் என்ற சோமரசத்தைத் தானும் பருகி
மற்றவர்களையும் பருகச் செய்ய வேண்டும்.
வரதானம்:
மாயாவின் தடைகளை விளையாட்டு போன்று
அனுபவம் செய்யக் கூடிய மாஸ்டர் உலகை படைப்பவர் ஆகுக.
ஒரு வயோதிகர் முன் சிறிய குழந்தை தனது குழந்தைத்தனத்தின்
காரணத்தினால் ஏதாவது கூறி விட்டால், ஏதாவது கெட்ட காரியம்
செய்து விட்டாலும் அந்த வயோதிகர் இது இவருடைய குற்றம் அல்ல,
அறியாமை, சிறிய குழந்தை என்று நினைப்பார். எந்த பாதிப்பும்
ஏற்படாது. அதே போன்று நீங்கள் உங்களை மாஸ்டர் உலகை படைப்பவர்
என்று நினைக்கும் போது இந்த மாயையின் தடைகள் குழந்தைகளின்
விளையாட்டாக தோன்றும். மாயை எந்த ஒரு ஆத்மாவின் மூலம் பிரச்சனை,
தடை அல்லது சோதனை ரூபத்தில் வந்தாலும் அதில் பயப்படமாட்டீர்கள்,
ஆனால் அதில் குற்றமில்லை என்று நினைப்பீர்கள்.
சுலோகன்:
அன்பு, சக்தி மற்றும் ஈஸ்வரிய ஈர்ப்பு தன்னிடத்தில் நிறைத்துக்
கொள்ளுங்கள், அப்போது அனைவரும் சகயோகிகளாக ஆகிவிடுவார்கள்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
இப்பொழுது ஜுவாலாமுகி (எரிமலை) ஆகி அசுர சன்ஸ்காரம், அசுர
சுபாவம் அனைத்தையும் அழித்து விடுங்கள். தேவிகளின்
நினைவுச்சின்னத்தில் காண்பிக்கின்றனர் - ஜுவாலையின் மூலம்
அசுரர்களை அழித்தார்கள். அசுரன் ஒரு மனிதன் கிடையாது. ஆனால்
அசுர சக்திகளை அழித்தனர். இது இப்போதைய உங்களது ஜுவாலா சொரூப
நிலையின் நினைவார்த்தாமாகும். இப்பொழுது இப்படிப்பட்ட யோக
நெருப்பை பிரகாசமாக்குங்கள், அதில் இந்த க-யுக உலகம் எரிந்து
சாம்பலாகி விட வேண்டும்.