03-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு உண்மையிலும் உண்மையான யாத்திரையை கற்றுக் கொடுப்பதற்காக உண்மையான வழிகாட்டி வந்துள்ளார். உங்களுடைய யாத்திரையில் முக்கியமானது தூய்மையாகும். நினைவு செய்யுங்கள் மற்றும் தூய்மை அடையுங்கள்.

கேள்வி:
செய்தியை கூறுபவர் அல்லது தூதுவருடைய குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு விசயத்தைத் தவிர மற்ற விசயங்களில் விவாதம் செய்யக்கூடாது?

பதில்:
செய்தியைக் கூறுபவருடைய (தூதுவரின்) குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் இந்த செய்தியையே கொடுங்கள் - தன்னைத் தான் ஆத்மா என்று புரிந்துக் கொண்டு தந்தையை நினைவு செய்தால் இந்த யோக அக்னி மூலம் உங்களுடைய பாவ கர்மங்கள் வினாசம் ஆகிவிடும். மற்றபடி வேறு விசயங்களில் செல்வதால் எந்த லாபமும் இல்லை. இதைக் கருத்தில் கொள்ளுங் கள். நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை மட்டும் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் ஆஸ்திகர்கள் ஆகட்டும். படைப்பவராகிய தந்தையைப் புரிந்து கொண்டால் படைப்பைப் பற்றி புரிந்து கொள்வது சகஜமாகிவிடும்.

பாடல்:
நம்முடைய தீர்த்த யாத்திரை தனிப்பட்டது...

ஓம் சாந்தி.
நாம் உண்மையான தீர்த்தவாசிகள் என்பதை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் அறிவார்கள். உண்மையான வழிகாட்டி மற்றும் அவருடைய குழந்தைகளாகிய நாம் கூட உண்மை யான தீர்த்த ஸ்தாலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். இது பொய்யான கண்டம் அல்லது தூய்மையற்ற கண்டமாக உள்ளது. இப்போது உண்மையான மற்றும் தூய்மையான கண்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். மனிதர்கள் யாத்திரையில் செல்கிறார்கள் அல்லவா! சில யாத்திரைகளுக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும். இதுவும் கூட யாத்திரை ஆகும். உண்மையான வழிகாட்டியே வரும் போது தான் இந்த யாத்திரை செய்ய முடியும். அவர் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமத்தில் வருகிறார். இதில் குளிர் அல்லது வெப்பத்திற்கான விசயங்கள் ஏதுமில்லை. ஏமாற்றம் அடையக்கூடிய விசயங்கள் ஏதுமில்லை. இதுவோ நினைவின் யாத்திரை ஆகும். அந்த யாத்திரைகளில் சந்நியாசிகளும் செல்கின்றனர். உண்மையிலும் உண்மையான யாத்திரை செய்யக்கூடியவர்கள் தூய்மையாக இருக்கின்றனர். உங்களில் அனைவரும் யாத்திரையில் உள்ளீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள். உண்மையிலும் உண்மையான பிரம்மாகுமார் பிரம்மாகுமாரிகள் யார்? யார் ஒருபோதும் விகாரத் தில் செல்வதில்லையோ அவர்கள் தான் உண்மையான பிரம்மாகுமார் பிரம்மா குமாரிகள் ஆவர். கண்டிப்பாக முயற்சியாளர்களாக உள்ளனர். மனதில் எண்ணங்கள் வந்தாலும், முக்கியமானது விகாரத்தின் விசயமாகும். விகாரமற்ற பிராமணர்கள் உங்களிடம் எத்தனை பேர் உள்ளனர் என்று சிலர் கேட்கலாம். இதைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்த விசயங்களால் உங்கள் வயிறு நிரம்பப்போகிறதா என்ன? நீங்கள் யாத்திரையாளர் ஆகுங்கள் என்று கூறுங்கள். யாத்திரை செய்யக்கூடியவர்கள் எவ்வளவு பேர் என்று கேட்பதால் ஒரு லாபமும் இல்லை. பிராமணர்களோ சிலர் உண்மையானவர்களாக உள்ளனர், சிலர் பொய்யானவர்களாகவும் உள்ளனர். இன்று உண்மை யாக உள்ளனர், நாளை பொய்யாகி விடுகின்றனர். விகாரத்தில் சென்றார்கள் என்றால் பிராமணர் கள் அல்ல. பிறகு சூத்திரர்களிலும் சூத்திரர்களாகி விடுகின்றனர். இன்று வாக்குறுதி கொடுக் கின்றனர். அடுத்த நாள் விகாரத்தில் வீழ்ந்து அசுரர்களாகி விடுகின்றனர். இப்போது இந்த விசயங்களை எதுவரை அமர்ந்து புரிய வைப்பது? இதன் மூலம் வயிறு நிரம்பப் போவதில்லை. வாய் இனிப்பதுமில்லை. இங்கே நாம் தந்தையை நினைவு செய்கிறோம். மேலும் தந்தையின் படைப்பின் முதல் இடை கடைசியைத் தெரிந்து கொள்கிறோம். மற்றபடி வேறு விசயங்களில் ஒன்றுமில்லை. இங்கே தந்தையின் நினைவு கற்றுக் கொடுக்கப்படுகிறது மற்றும் தூய்மையே முக்கியமானதாகும் என்று கூறுங்கள். யார் இன்று தூய்மையடைந்து பிறகு தூய்மையற்றவர் ஆகிவிடுகின்றனரோ அவர்கள் பிராமணர்களாகவே இருக்கவில்லை. இந்தக் கணக்குகளை எதுவரை உங்களுக்குப் புரிய வைப்பது? இப்படி பலர் மாயையின் புயல் காற்றுகளால் விழுந்து விடுகின்றனர். ஆகையால் பிராமணர்களின் மாலையை உருவாக்க முடியாது. நாங்களோ தூதுவரின் குழந்தைகள் தூதுச் செய்தியை சொல்கிறோம். செய்தியாளரின் குழந்தைகள் செய்தியைக் கொடுக்கிறோம். தன்னைத்தான் ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்னி மூலம் உங்களின் பாவகர்மங்கள் அழிந்துவிடும். இந்த சிந்தனையை வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி பலப்பல கேள்விகளை மனிதர்கள் கேட்பார்கள். ஒரு விசயத்தைத் தவிர மற்ற எந்த விசயங்களில் செல்வதாலும் எந்த லாபமும் இல்லை. இங்கேயோ நாஸ்திகரிலிருந்து ஆஸ்திகராகவும், ஒன்றுமில்லாதவரிலிருந்து பணக்காரராகவும் எப்படி ஆகலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி தலைவனிடமிருந்து (பாபாவிட மிருந்து) ஆஸ்திகளை அடைவது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மற்றபடி அனைவரும் முயற்சியாளர்கள் தான். விகாரத்தின் விசயத்தில் தான் பலரும் தோல்வி அடைந்து விடுகின்றனர். பல நாட்களுக்குப் பிறகு மனைவியைப் பார்த்தார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சிலருக்கு மதுபானம் முதலான பழக்கம் இருக்கிறது. தீர்த்த யாத்திரையில் செல்லும் போது மதுபானம் அல்லது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடிவதில்லை. மறைத்து வைத்தாவது குடிக்கின்றனர். என்ன தான் செய்வார்களோ? பலரும் உண்மையை சொல்வதே இல்லை. மறைத்தபடி இருக்கின்றனர்.

எப்படி பிறருக்கு யுக்தியுடன் பதில் சொல்ல வேண்டும் என்பதை பாபா குழந்தைகளுக்கு பல வழிமுறைகளைக் கூறுகிறார். ஒரு தந்தையின் அறிமுகத்தைத் தான் கொடுக்க வேண்டும். அதன் மூலம் மனிதர்கள் ஆஸ்திகர்கள் ஆவார்கள். முதலில் எதுவரை தந்தையைத் தெரிந்து கொள்ள வில்லையோ அதுவரை ஏதாவது கேள்வியைக் கேட்பது கூட தவறாகும். இப்படி பலர் வருகின்றனர் - எதையும் புரிந்து கொள்வதில்லை வெறுமனே கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். லாபம் ஏதுமில்லை. ஆயிரம் இரண்டாயிரம் பேர் வந்தார்கள் என்றால் அதில் ஓரிருவர் புரிந்து கொள்வதற்காக வருகின்றனர் என்று பாபாவுக்கு எழுதுகின்றனர். பெரிய மனிதர்கள் வந்தபடி இருக்கின்றனர். நாம் புரிய வைக்கிறோம், ஆனால் அவர்களுக்கு வேண்டிய அறிமுகம் கிடைப்ப தில்லை, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான அறிமுகம் கிடைத்திருந்தால். கிடைக்கும் போது இவர்கள் சரியாகத்தான் கூறுகின்றனர். ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை பரமபிதா பரமாத்மா ஆவார், அவர் கற்பிக்கிறார் என்று புரிந்து கொள்வார்கள். தந்தை கூறுகிறார் - தன்னை ஆத்மா எனப்புரிந்து என்னை நினைவு செய்யுங்கள். இந்த இறுதிப் பிறவியில் தூய்மை யடையுங்கள். தூய்மையாக இல்லாதவர்கள் பிராமணர்கள் அல்ல. சூத்திரர்கள் ஆவர். சண்டையின் மைதானம் ஆகும். மரம் பெரிதாகிக் கொண்டே இருக்கும் மற்றும் புயல் காற்றும் வீசும். பல இலைகள் உதிர்ந்தபடி இருக்கும். யார் உட்கார்ந்து எண்ணிக் கொண்டிருப்பார்கள், உண்மையான பிராமணர்கள் யார் என்று? யார் ஒருபோதும் சூத்திரர் ஆவதில்லையோ அவரே உண்மையானவர் ஆவார். சிறிதும் அசுத்தமான பார்வை கூடாது. இறுதியில் கர்மாதீத் நிலை உண்டாகும். இது மிக உயர்ந்த குறிக்கோளாகும். மனதிலும் கூட வராது, அந்த நிலை இறுதியில் உருவாகும் என்று. இப்போது அப்படிப்பட்ட நிலை யாருக்கும் இல்லை. இப்போது அனைவரும் முயற்சியாளர்கள் ஆவர். மேலும் கீழுமாக ஆகிக்கொண்டே இருக்கின்றனர். கண்களின் விசயம் தான் முக்கியமான தாகும். நான் ஆத்மா, இந்த சரீரத்தின் மூலம் நடிப்பை நடிக்கிறேன். இந்த உறுதியான பயிற்சி வேண்டும். இராவண இராஜ்யம் இருக்கும் வரை சண்டை நடந்தபடி இருக்கும். பின்னால் கர்மாதீத் நிலை உண்டாகும். முன்னால் போகப்போக நீங்கள் உணர்வீர்கள், புரிந்து கொண்டே செல்வீர்கள். இப்போதோ மரம் மிகவும் சிறியதாக உள்ளது. புயல் வீசுகிறது. இலைகள் உதிர்கின்றது. பக்குவமற்றவர்கள் (அரை குறை) விழுந்து விடுகின்றனர். என்னுடைய நிலை எதுவரை உள்ளது என்று ஒவ்வொருவரும் தன்னைத்தான் கேட்க வேண்டும். மற்றபடி யாராவது கேள்விகள் கேட்டால் அந்த விசயங்களில் அதிகமாகச் செல்ல வேண்டாம். நாங்கள் தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கொண்டிருக்கிறோம். அந்த எல்லையற்ற தந்தை வந்து எல்லையற்ற சுகத்தைக் கொடுக்கிறார். அதாவது புதிய உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார். அங்கே சுகம் தான் இருக்கும் என்று கூறுங்கள். மனிதர்கள் இருக்கும் இடத்தைத் தான் உலகம் என்று சொல்லப்படுகிறது. நிராகார உலகத்தில் ஆத்மாக்கள் உள்ளனர் அல்லவா! ஆத்மா எப்படி புள்ளியாக உள்ளது என்று யாருடைய புத்தியிலும் இல்லை. இதையும் கூட முதலிலேயே புதியவர்களுக்குப் புரிய வைக்கக் கூடாது. முதன்முதலில் எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார் எனபதை பாரதம் தூய்மையாக இருந்தது, இப்போது தூய்மையற்று இருக்கிறது. கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும் என்பதைப் புரிய வையுங்கள். பிரம்மாகுமார்-குமாரிகளைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. இது புதிய படைப்பாகும். தந்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற அறிவு புத்தியில் இருக்க வேண்டும். எதுவும் கடினமான விசயம் இல்லை. ஆனால் மாயை மறக்க வைத்து விடுகிறது. பாவம் செய்ய வைத்துவிடுகிறது. அரைகல்ப காலமாக பாவ கர்மங்கள் செய்யக்கூடிய பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அனைத்து அசுரத்தனமான பழக்கங்களையும் நீக்க வேண்டும். பாபா தாமே கூறுகிறார் - அனைவரும் முயற்சியாளர்களாக உள்ளனர். கர்மாதீத் நிலை அடைவதில் அதிக காலம் பிடிக்கிறது. பிராமணர்கள் ஒருபோதும் விகாரத்தில் செல்வதில்லை. யுத்த மைதானத்தில் போகப்போக தோல்வியைத் தழுவிவிடுகின்றனர். இந்த கேள்விகளால் ஏதும் லாபம் இல்லை. முதலில் நம்முடைய தந்தையை நினைவு செய்யுங்கள். தன்னைத் தான் ஆத்மா எனப் புரிந்து கொண்டு என்னை நினைவு செய்யுங்கள் என்று நமக்கு சிவபாபா சென்ற கல்பத்தைப் போலவே மீண்டும் கட்டளை போட்டுள்ளார். இது அதே யுத்தமாகும். தந்தை ஒருவர்தான், கிருஷ்ணரை தந்தை என்று கூறமாட்டார்கள். கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டார்கள். தவறானதை சரி செய்வது தந்தை ஆவார். அதனால் தான் அவரை சத்தியமானவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த நேரம் குழந்தைகளாகிய நீங்கள் தான் முழு உலகத்தின் ரகசியத்தைத் தெரிந்திருக்கிறீர்கள். சத்யுகத்தில் தெய்வீக வம்சமாகும். இராவண இராஜ்யத்தில் பிறகு அசுர வம்சமாகிறது. இது தான் புருஷோத்தம சங்கமயுகம் என்று சங்கமயுகத்தைத் தெளிவாகக் காட்ட வேண்டும். அந்த பக்கம் தேவதைகள், இந்த பக்கம் அசுரர்கள். மற்றபடி இவர்களுக்குள் சண்டை நடக்கவில்லை. பிராமணர்களாகிய உங்களுக்கு விகாரத்துடன் சண்டை நடக்கிறது. இதைக் கூட சண்டை என்று சொல்லமாட்டோம். அனைத்தையும் விட பெரியது காம விகாரமாகும். இது பெரிய எதிரியாகும். இதனை வெற்றி அடைவதன் மூலம் நீங்கள் உலகத்தை வென்றவர்களாக ஆவீர்கள். இந்த விஷத்திற்காகத்தான் அபலைகள் அடிவாங்குகின்றனர். பலவிதமான தடைகள் ஏற்படு கின்றன. முக்கியமான விஷயம் தூய்மையாகும். முயற்சி செய்து கொண்டே புயல் வந்தபடி உங்களுடைய வெற்றி ஏற்படும். மாயை சோர்வடைந்துவிடும். சண்டையில் பலசாலி ஆகிவிடு கின்றனர். அவர்கள் உடனடியாக எதிர்தாக்குதல் செய்கின்றனர். அவர்களுடைய வேலையே நன்றாக சண்டையிட்டு ஜெயிப்பதாகும். பலசாலிகளுக்கு பெரிய புகழாரம் நடக்கிறது. பரிசு கிடைக்கிறது. உங்களுடையதோ மறைமுகமான விஷயமாகும்.

ஆத்மாக்களாகிய நாம் தூய்மையாக இருந்தோம் என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இப்போது தூய்மையை இழந்துவிட்டோம், மீண்டும் தூய்மையாக வேண்டும். இதே செய்தியை அனை வருக்கும் கொடுக்க வேண்டும். மற்றபடி யார் என்ன கேள்வி கேட்டாலும், நீங்கள் அந்த விஷயங் களில் செல்லக்கூடாது. உங்களுடையது ஆன்மீகத் தொழிலாகும். ஆத்மாக்களாகிய நமக்கு பாபா ஞானத்தை நிரப்பி இருந்தார். பிறகு பலனை அடைந்ததும் ஞானம் முடிந்து போய்விட்டது. இப்போது மீண்டும் பாபா ஞானத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார். மற்றபடி நீங்கள் போதையுடன் சொல்லுங்கள் - நாங்கள் தந்தையின் செய்தியை கொடுக்கிறோம். தந்தையை நினைவு செய்தால் நன்மை ஏற்படும். இதுதான் உங்களுடைய ஆன்மீகத் தொழில் ஆகும். முதன் முதல் விஷயமே தந்தையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதாகும். தந்தை தான் ஞானக்கடல் ஆவார். அவர் புத்தகம் எதையும் படித்து சொல்வதில்லை. மனிதர்கள் தத்துவ மேதை (டாக்டர் ஆப் பிலாசபி) போன்றவர்களாக ஆகின்றனர். அவர்கள் புத்தகங்களைப் படித்து அப்படி ஆகின்றனர். பகவானோ ஞானம் நிறைந்தவர் ஆவார். அவரிடம் உலகத்தின் ஆதி மத்திம அந்திமத்தின் ஞானம் இருக்கிறது. அவர் ஏதும் படித்திருக்கிறாரா என்ன? அவர் அனைத்து வேத சாஸ்திரங்கள் போன்றவற்றைத் தெரிந்திருக்கிறார். பாபா சொல்கிறார் - என்னுடைய பாகமே உங்களுக்கு ஞானத்தைப் புரிய வைப்பதாகும். ஞானம் பக்தியின் வேறுபாட்டை வேறு யாரும் சொல்ல முடியாது. இதுவோ ஞானத்தின் படிப்பாகும். பக்தியை ஞானம் என்று சொல்வதில்லை. அனைவருக்கும் சத்கதி கொடுக்கக்கூடிய வள்ளல் ஒரே ஒரு தந்தையே ஆவார். உலகத்தின் வரலாறு கண்டிப்பாக மீண்டும் நடக்கும். பழைய உலகத்திற்குப் பிறகு கண்டிப்பாக புதிய உலகம் வர வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள் - பாபா நமக்கு மீண்டும் படிப்பிக்கிறார். பாபா சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள். இதில் தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. பாபா தெரிந்திருக்கிறார் - மிக நல்ல பெயருடைய குழந்தைகள் இந்த நினைவு யாத்திரையில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். மற்றபடி பெயர் புகழ் அடையாதவர்கள், பந்தனத்தில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள், ஏழைகள் நன்றாக நினைவுயாத்திரையில் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தன்னுடைய மனதிடம் கேட்க வேண்டும் - நான் பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்கிறேன்? பாபா சொல்கிறார் - குழந்தைகளே! எவ்வளவு முடியுமோ என்னை நினைவு செய்யுங்கள். உள்ளுக்குள் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள். பகவான் கற்பிக்கிறார் என்றால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். பாபா சொல்கிறார் - நீங்கள் தூய்மையான ஆத்மாவாக இருந்தீர்கள். பிறகு சரீரத்தை எடுத்து பாகத்தை நடித்து நடித்து தூய்மையற்றவர் களாக ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் தூய்மையாக வேண்டும். மீண்டும் தேவதையின் பாகத்தை நடிக்க வேண்டும். நீங்கள் தெய்வீக தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா! நீங்கள் தான் 84 பிறவி சக்கரத்தை சுற்றி வந்தீர்கள். அனைவரும் சூரிய வம்சத்தினராக 84 பிறவிகள் எடுப்பதில்லை. பின்னால் வந்து கொண்டே இருக் கிறார்கள் அல்லவா! இல்லையானால் உடனடியாக அனைவரும் வந்துவிடுவார்கள். காலையில் எழுந்து புத்தி மூலம் சிந்தனை செய்தால் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகள் தான் ஞான சிந்தனை (விசார் சாகர மந்தன்) செய்ய வேண்டும். சிவபாபா செய்வதில்லை. அவர் சொல்கிறார் - நாடகப்படி உங்களுக்கு என்ன கூறினேனோ, அதை கல்பத்திற்கு முன்பு எதைப் புரிய வைத்தேனோ, அதையே மீண்டும் புரிய வைக்கிறேன், என்பதாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தான் சிந்தனை செய்கிறீர்கள். ஆக, நீங்கள் தான் புரிய வைக்க வேண்டும், ஞானத்தைக் கொடுக்க வேண்டும். அந்த பிரம்மா கூட சிந்தனை செய்கிறார். பிரம்மா குமார்-குமாரிகள் ஞான சிந்தனை செய்ய வேண்டும். சிவபாபா சிந்தனை செய்ய வேண்டியதில்லை. முக்கியமான விஷயமாவது, யாரிடமும் அதிகமாக பேச வேண்டாம். சாஸ்திரவாதிகள் தங்களுக்குள் மிகவும் விவாதங்கள் செய்கிறார்கள், நீங்கள் வாத விவாதம் செய்யக் கூடாது. நீங்கள் செய்தியை மட்டும் கொடுக்க வேண்டும். முத-ல் முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் புரிய வையுங்கள் மற்றும் எழுத வையுங்கள். முதன் முதலில் இந்த படிப்பை யார் கற்பிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி எழுதுங்கள். இந்த விஷயத்தை நீங்கள் கடைசியில் சொன்னால், சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். நம்பிக்கை இல்லாத காரணத்தினால் புரிந்து கொள்வதில்லை. விஷயம் நன்றாக இருக்கிறது என்று மட்டும் கூறிவிடுகிறார்கள். முதன்முதலில் முக்கியமான விஷயம் இதுதான். படைக்கக் கூடிய தந்தையைப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு படைப்பின் ரகசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கீதையின் பகவான் யார்? என்பது முக்கியமான விஷயம். இதில் தான் உங்களது வெற்றி ஏற்பட வேண்டும். முதன் முதலில் எந்த தர்மம் ஸ்தாபனை ஆனது? பழைய உலகத்தை புதிய உலகமாக யார் மாற்றுகிறார்? பாபா தான் ஆத்மாக்களுக்கு புதிய ஞானத்தைக் கூறுகிறார். அதன் மூலம் புதிய உலகம் ஸ்தாபனை ஆகிறது. உங்களுக்கு தந்தை மற்றும் படைப்பின் அறிமுகம் கிடைக்கிறது. முதன்முதலில் அல்லாவைப் பற்றி உறுதிப் படுத்துங்கள். அப்போது அவருடைய ஆஸ்தியாகிய சொர்க்கத்தின் இராஜ்யம் இருக்கவே இருக்கிறது. தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. தந்தையை தெரிந்து கொண்டார், ஆஸ்திக்கு அதிகாரி ஆனார். குழந்தை பிறக்கிறது, தாய் தந்தையை பார்க்கிறது, அவ்வளவு தான் உறுதியாகி விடுகிறது. தாய் தந்தையைத் தவிர குழந்தை யாரிடமும் செல்லாது. ஏனெனில் தாயிடமிருந்து தான் பால் கிடைக்கிறது. இது கூட ஞானத்தின் பால் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. தாய் தந்தை அல்லவா! இவை மிகவும் நுணுக்கமான விஷயங்களாகும், உடனடியாக யாரும் புரிந்து கொள்ள முடியாது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் சென்று கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உண்மையிலும் உண்மையான தூய்மையான பிராமணர் ஆக வேண்டும். சூத்திரர் (தூய்மையற்றவர்) ஆவதற்கான எண்ணம் மனதில் கூட ஒருபோதும் வரக்கூடாது. பார்வை சிறிதளவும் தவறாகப் போய்விடக் கூடாது. அப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும்.

2) பாபா எதைப் கற்பித்துக் கொண்டிருக்கிறாரோ அதைப் புரிந்து புத்தியில் வைக்க வேண்டும். பாவ கர்மம் செய்யக் கூடிய அசுர பழக்கங்கள் என்னவெல்லாம் உள்ளதோ, அவற்றை அழிக்க வேண்டும். முயற்சி செய்து செய்து சம்பூர்ண (முழுமையான) தூய்மை என்ற உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டும்.

வரதானம்:
காரணத்திற்கு நிவாரணம் செய்து கவலை மற்றும் பயத்திலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகுக.

தற்போதைய சமயம் அல்பகால சுகத்துடன் கூடவே கவலை மற்றும் பயம் என்ற இரண்டும் இருக்கவே செய்கின்றன. எங்கே கவலை உள்ளதோ, அங்கே நிம்மதி இருக்க முடியாது. எங்கே பயம் உள்ளதோ, அங்கே சாந்தி இருக்க முடியாது. எனவே சுகத்துடன் கூடவே இந்த துக்கம் அசாந்தியின் காரணமும் உள்ளது. ஆனால் நீங்கள் சர்வ சக்திகளின் கஜானாவினால் நிரம்பிய மாஸ்டர் சர்வ சக்திவான் குழந்தைகள், துக்கங்களின் காரணத்திற்கு நிவாரணம் செயபவர்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பவர்கள். தீர்வு சொரூபமாக இருக்கிறீர்கள். எனவே கவலை மற்றும் பயத்திலிருந்து விடுபட்டு இருக்கிறீர்கள். எந்த ஒரு பிரச்சினையும் உங்களுக்கு முன்னால் விளையாட வருகிறதே தவிர பயமுறுத்துவதற்காக இல்லை.

சுலோகன்:
தனது உள்ளுணர்வை சிரேஷ்டமானதாக ஆக்குவீர்களானால் உங்கள் உலகியல் ஈடுபாடு தானாகவே சிரேஷ்டமானதாகி யிடும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை ஜூவாலா ரூபமாக்குங்கள்.

சமயத்தின் பிரமாணம் இப்போது அனைத்து பிராமண ஆத்மாக்களையும் அருகில் கொண்டு வந்து, ஜுவாலா ரூபத்தின் வாயுமண்டலத்தை உருவாக்கும் சேவை செய்யுங்கள். அதற்காக பட்டிகளை நடத்துங்கள் அல்லது தங்களுக்குள் குழுவை உருவாக்கி ஆத்மிக உரையாடல் செய்யுங்கள். ஆனால் ஜுவாலா ரூபத்தின் அனுபவம் செய்யுங்கள் மற்றும் செய்வியுங்கள். இந்த சேவையிவ் ஈடுபட்டு விடுவீர்களானால் சிறு சிறு விஷயங்கள் சகஜமாக மாறி விடும்.