03-09-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பெயர், உருவம்
இல்லாத பொருள் எதுவும் கிடையாது, ஆத்மா மற்றும் பரமாத்மாவையும்
கூட பெயர், உருவமற்றது என்று கூற முடியாது, அதிலும் அழிவற்ற
பாகம் பதிவாகியிருக்கிறது.
கேள்வி:
சிவபாபாவை கள்ளங்கபடமற்றவர் என்று
கூறி நினைவு செய்கின்றனர், அவரை ஏன் கள்ளங்கபடமற்றவர் என்று
கூறுகின்றனர்?
பதில்:
ஏனெனில் அவர் தான் அகல்யைகள்,
வேசிகள், கூனி போன்றவர்களை முன்னேற்று கின்றார். அவர்களுக்கு
உலக இராஜ்யத்திற்கான ஆஸ்தி கொடுக்கின்றார். துக்கமும் அவர் தான்
கொடுக்கின்றார், சுகமும் அவர் தான் கொடுக்கின்றார் என்று
மனிதர்கள் தந்தையைப் பற்றி கூறுகின்றனர். ஆனால் குழந்தைகளாகிய
உங்களுக்காக சுகமான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறேன் என்று பாபா
கூறுகின்றார். துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவர் என்று என்னை
கூறுகின்றனர். தந்தையாகிய நான் தனது குழந்தைகளுக்கு எப்படி
துக்கம் கொடுக்க முடியும்? என்று சற்று சிந்தனை செய்யுங்கள்.
பாடல்:
தூர தேசத்தில் வசிக்கக் கூடியவர்...........
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள் அதாவது ஆத்மாக்கள்
இந்த சரீரத்தின் காது என்ற கர்மேந்திரியத்தின் மூலம் பாட்டு
கேட்டீர்கள் - தூர தேசத்திலிருந்து பிரயாணி (யாத்ரிகர்)
வந்திருக்கின்றார். நீங்கள் அனைவரும் பிரயாணிகள் அல்லவா! மனித
ஆத்மாக்கள் அனைவரும் பிரயாணிகள் வழிப்போக்கர்கள் ஆவர்.
ஆத்மாக்களுக்கு வேறு எந்த வீடும் கிடையாது. ஆத்மா நிராகாராக
இருக்கிறது. நிராகார உலகில் வசிக்கக் கூடிய நிராகார ஆத்மாக்கள்
ஆவீர்கள். அது நிராகார ஆத்மாக்களின் வீடு, தேசம் அல்லது உலகம்
என்று கூறப் படுகிறது. இது ஜீவ ஆத்மாக்களின் தேசம் என்று
கூறப்படுகிறது. அது ஆத்மாக்களின் தேச மாகும், பிறகு ஆத்மாக்கள்
எப்போது இங்கு வந்து சரீரத்தில் பிரவேசிக் கிறதோ அப்போது
சரீரமற்றதிலிருந்து சரீரமுடைய தாக ஆகிவிடுகிறது. அதற்காக ஆத்மா
விற்கு எந்த ரூபமும் கிடையாது என்பது கிடையாது. அவசியம்
உருவமும் இருக்கிறது, பெயரும் இருக்கிறது. இவ்வளவு சிறிய ஆத்மா
இந்த சரீரத்தின் மூலம் எவ்வளவு நடிப்பு நடிக்கிறது! ஒவ்வொரு
ஆத்மாவிலும் நடிப்பு நடிக்கக் கூடிய எவ்வளவு பாகம்
பதிவாகியிருக்கிறது! பதிவில் ஒரே ஒரு முறை பதிவாகி விடுகிறது,
பிறகு எத்தனை முறை திரும்பப் பார்த்தாலும் அதே தான் நடக்கும்.
இந்த சரீரத்தில் இருக்கும் ஆத்மாவிற்குள் 84 பிறவிகளுக்கான முழு
பாகமும் பதிவாகி யிருக்கிறது. ஆத்மா என்பது எவ்வாறு அசரீரியாக
இருக்கிறதோ அதே போன்று தந்தையும் (பரமாத்மாவும்) சரீரமற்றவர்.
சில சாஸ்திரங்களில் அவர் பெயர், உருவமற்றவர் என்று எழுதி வைத்து
விட்டனர். ஆனால் பெயர், உருவமற்ற பொருள் எதுவும் கிடையாது.
ஆகாயமும் தத்துவமாகும், பெயர், உருவம் இருக்கிறது அல்லவா!
பெயரற்ற பொருள் எதுவும் கிடையாது. ஆனால் பரம்பிதா பெயர்,
உருவமற்றவர் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். ஒருவேளை பெயர்
இல்லையெனில் உருவமும் இருக்காது, தேசமும் இருக்காது. பிறகு
எதுவும் செய்யவும் முடியாது. தூர தேசத்திலிருக்கும் பரம்பிதா
பரமாத்மாவே என்று அழைக்கவும் செய்கின்றனர். தூர தேசத்தில்
ஆத்மாக்கள் இருக்கின்றன, இது சாகார தேசமாகும், இதில் இருவரின்
இராஜ்யம் நடைபெறுகிறது - இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம்.
அரைக் கல்பம் இராம இராஜ்யம், அரைக் கல்பம் இராவண இராஜ்யம்.
சத்யுகத்திலிருந்து ஈஸ்வரிய இராஜ்யம் ஆரம்ப மாகிறது என்பதை
குழந்தைகள் புரிய வைக்கப்படுகின்றனர். இராம இராஜ்யம் ஸ்தாபனை
செய்யக் கூடியவர் பரம்பிதா பரமாத்மா ஆவார். அவர் ஒருபோதும்
இராவண இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யமாட்டார். தந்தை
குழந்தைகளுக்காக துக்கமான இராஜ்யத்தை உருவாக்க மாட்டார்.
ஈஸ்வரன் தான் துக்கம், சுகம் கொடுக்கிறார் என்று கூறுகின்றனர்.
நான் குழந்தை களுக்கு துக்கம் எப்படி கொடுக்க முடியும்? என்று
தந்தை கேட்கின்றார். எனது பெயரே துக்கத்தை நீக்கி சுகம்
கொடுப்பவர் ஆகும். இது மனிதர்களின் தவறாகும். ஈஸ்வரன் ஒரு
போதும் துக்கம் கொடுக்கமாட்டார். இந்த நேரமே துக்க தாமம் ஆகும்.
அரைக் கல்பம் இராவண இராஜ்யத்தில் துக்கம் தான் கிடைக்கிறது.
சிறிதளவும் சுகம் கிடையாது. சுகதாமத்தில் ஒருபோதும் துக்கம்
இருக்காது. தந்தை சொர்க்கத்தை படைப்பவர் ஆவார். இப்போது நீங்கள்
சங்கமத்தில் இருக்கிறீர்கள். இதை புது உலகம் என்று யாரும்
கூறமாட்டார் கள். புது உலகின் பெயரே சொர்க்கம். அதுவே பிறகு
பழைய உலகமாக ஆகிறது. புது பொருள் பழையதாகும் போது தரம்
குறைந்துவிட்டடது என்ற நிலை வரும் போது பழைய பொருளை அழித்து
விடு கின்றனர். மனிதர்கள் விஷத்தையே (விகாரத்தை) சுகம் என்று
நினைக்கின்றனர். அமிர்தத்தை விடுத்து விஷத்தை ஏன்
குடிக்கிறீர்கள்? என்றும் பாடப்பட்டிருக்கிறது. கிரந்தத்தில்
குருநானக் கின் வார்த்தைகளும் இருக்கின்றன. அசங்க் ஜோர்
........ தந்தையின் மகிமை பாடுகின்றார், நீங்கள் வந்து என்ன
செய்வீர்களோ அதில் அவசியம் நன்மை தான் இருக்கும். இல்லையெனில்
இராவண இராஜ்யத்தில் மனிதர்கள் கெட்ட காரியங்களையே செய்வர்.
தந்தை வந்து தான் அசுத்த ஆடைகளை துவைக் கின்றார் (ஜீவ
ஆத்மாக்களை தூய்மை படுத்துகின்றார்). கிரந்தத்தில் இதுபோன்று
நிறைய எழுதப் பட்டிருக்கிறது. சிந்தி சமூகத்தினர் கிரந்தத்தை
வைத்துக் கொள்கின்றனர். இது எந்த சீக்கிய தர்மத்தையும்
சார்ந்தது கிடையாது. இது ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச்
சார்ந்தது ஆகும். சீக்கியர்களுக்கானவர் குருநானக், அவர்
தாடியுடன் இருந்தார். ஆக சீக்கியர்கள் அனைவருக்கும் தாடி
இருக்க வேண்டும். இன்றைய நாட்களில் தாடி வைத்துக் கொள்வது
கிடையாது. மிகவும் நாகரீகமாக ஆகிவிட்டனர். இல்லை யெனில்
பின்பற்ற வேண்டும் அல்லவா! நாம் குருநானக்கின் சீடர்கள் எனில்
குருநானக்கை பின்பற்ற வேண்டும் அல்லவா! குருநானக் வந்து 500
ஆண்டுகள் ஆகிவிட்டது எனில் பிறகு எப்போது வருவார்? என்பது
இப்போது குழந்தைகள் அறிவீர்கள். நீங்கள் உடனேயே கூறிவிடு
வீர்கள். குருநானக் எப்போது வருவார்? என்று நீங்கள் யாரிடம்
வேண்டுமென்றாலும் கேளுங்கள். அவரது ஆத்ம ஜோதியானது ஜோதியுடன்
கலந்து விட்டது என்று கூறுவர். பிறகு எப்படி வருவார்?
இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்குப் பிறகு குருநானக் மீண்டும்
வருவார் என்று நீங்கள் கூறுவீர்கள். உங்களது புத்தியில் முழு
உலகின் சரித்திர, பூளோகத்தின் சக்கரம் சுற்றிக் கொண்டே
இருக்கிறது. புத்தர், கிறிஸ்து போன்ற அனைவரும் இந்த நேரத்தில்
தமோபிர தானமாக இருக்கிறார்கள், மயானத்தில் (கலியுகத்தில்)
இருக்கின்றனர் என்று கூறுவீர்கள். இது இவர்களுக்கும் தீர்ப்பு
வழங்கக் கூடிய கடைசி நேரம் என்று கூறப் படுகிறது. அனைத்து
மனிதர்களும் இறந்தவர்கள் போன்று இருக்கின்றனர். அனை வரின்
ஜோதியும் மங்கி விட்டது. அனைவரின் தீபத்தையும் ஒளியேற்றி வைக்க
தந்தை வந்திருக்கின்றார். எந்த குழந்தைகள் காமச் சிதையில்
அமர்ந்து எரிந்து சாம்பல் (கருப்பாகி) விட்டார்களோ அவர்களுக்கு
அமிர்த மழை பொழிந்து விழிக்கச் செய்து கூடவே அழைத்துச் செல்வார்.
மாயை காமச் சிதையில் அமர வைத்து சுடுகாடாக ஆக்கி விட்டது.
தூங்கி விட்டனர். இப்போது தந்தை அமிர்தம் பருக வைக்கின்றார்.
அதனால் தான் அமிர்தசரஸ் என்ற பெயரும் வைத்திருக்கின்றனர். தந்தை
வந்து அமிர்தம் பருக வைக்கின்றார். ஞான அமிர்தம் எங்கு
இருக்கிறது! தண்ணீர் எங்கு இருக்கிறது! சீக்கியர்கள் திருவிழா
நாளின் போது மிகவும் விமரிசையாக குளத்தை சுத்தப்படுத்து
கின்றனர், மண்ணை தூர்வாரி நீக்குகின்றனர், அதனால் தான்
அமிர்தசரஸ் என்ற பெயர் வைத்து விட்டனர். அமிர்த குளம்.
குருநானக் ஞானக் கடல் கிடையாது, அவரும் தந்தையின் மகிமை
செய்திருக் கின்றார். ஓம்கார், சத்நாம் (சத்தியமானவர்) - அவர்
எப்போதும் உண்மையே கூறக் கூடியவர் என்று அவர் சுயம்
கூறுகின்றார், சத்திய நாராயணனின் கதை இருக்கிறது அல்லவா! சிந்து
சமுகத்தினர் வெளியில் செல்கின்றனர் எனில் சத்திய நாராயணன் கதை
வாசிக்கின்றனர். சத்திய நாராயணனின் கதையின் மூலம் பாதுகாப்பு
அடைந்து, கடந்து விடுவோம் என்று நினைக்கின்றனர். அமரக்கதை,
மூன்றாவது கண் ஏற்படுத்தும் கதை போன்று பக்தி மார்க்கத் தில்
கதைகளை கேட்டு வந்தீர்கள். சங்கர் பார்வதிக்கு கதை கூறினார்
என்று கூறுகின்றனர். அவர் சூட்சுமவதனத்தில் இருக்கக் கூடியவர்,
அங்கு அவர் எந்த கதையை கூறினார்? இந்த அனைத்து விசயங்களையும்
தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். உண்மையில் உங்களுக்கு அமரக்
கதையை கூறி அமரலோகத்திற்கு அழைத்துச் செல்ல நான்
வந்திருக்கிறேன். மரணலோகத்திலிருந்து அமரலோகத்திற்கு நான்
அழைத்துச் செல்கிறேன். மற்றபடி பார்வதிக்கு கதை சொல்லும்
அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார்? நாம் இப்போது நரனிலிருந்து
நாராயணன், நாரியிலிருந்து லெட்சுமியாக ஆகிறோம் என்பதை நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். அமரலோகம் செல்வதற்கான உண்மையான சத்திய
நாராயணன் கதை, மூன்றாவது கண் கொடுக்கும் கதை இதுவாகும்.
ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்போது ஞானம் என்ற மூன்றாவது கண்
கிடைத்திருக்கிறது.
நீங்கள் தான் பூஜைக்குரிய மலர்களாக இருந்தீர்கள், பிறகு 84
பிறவிகள் எடுத்து நீங்களே பூஜாரிகளாக ஆகிவிட்டீர்கள் என்பதை
தந்தை புரிய வைக்கின்றார். அதனால் தான் நீங்களே பூஜைக்குரியவர்,
நீங்களே பூஜாரி என்று பாடப்பட்டிருக்கிறது. நான் சதா
பூஜைக்குரியவன் என்று தந்தை கூறுகின்றார். நான் வந்து உங்களை
பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவனாக ஆக்கு கிறேன். ஹே ராம், வந்து
எம்மை தூய்மை ஆக்குங்கள் என்று கூறுகின்றனர். அனைத்து
பக்தர்களும் அழைக்கின்றனர். ஹே பதீத பாவன்! என்று ஆத்மா
அழைக்கிறது அல்லவா! கீதை கிருஷ்ணர் கூறவில்லை, தூய்மையாக ஆக்கக்
கூடியவர் ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மா தான், ஒரே ஒரு இராமர் தான்
என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ஆக ஈஸ்வரன் சர்வ
வியாபி அல்ல, கீதையின் பகவான் சிவன், கிருஷ்ணர் அல்ல என்று கூறி
பிறரது கருத்துகளை கேட்டுப் பெறுங்கள் என்று தந்தை புரிய
வைக்கின்றார். பகவான் என்று அழைக்கப்படுபவர் நிராகாராமானவரா?
அல்லது சாகாரமானவரா? என்று முதலில் கேளுங்கள். கிருஷ்ணர்
சாகாரமானவர், சிவன் நிராகாரமானவர். அவர் இந்த சரீரத்தை லோனாக
எடுக்கின்றார். மற்றபடி தாயின் கர்பத்திலிருந்து பிறப்பு
எடுப்பது கிடையாது. கர்பத்தில் முதல் நம்பராக வரக் கூடியவர்
கிருஷ்ணரின் ஆத்மா ஆகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரும் சூட்சம
சரீரமுடையவர்கள். சிவனுக்கு சரீரம் கிடையாது. இங்கு இந்த
லோகத்தில் ஸ்தூல சரீரம் இருக்கிறது. தந்தையின் மகிமை பதீத பாவன்,
அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆகும். அனைவரையும்
விடுவிக்கக் கூடியவர், துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவர். நல்லது,
சுகம் எங்கு இருக்கும்? அடுத்த பிறவியில் சுகம் கிடைக்கும்.
எப்போது இராவண இராஜ்யம் அழிந்து சொர்க்கம் ஸ்தாபனை ஆகிவிடுமோ
அச்சமயத்தில் சுகம் நல்லது, எதிலிருந்து விடுவிக்கின்றார்?
இராவணனின் துக்கத் திலிருந்து! இது துக்கதாமம் அல்லவா! நல்லது,
பிறகு வழிகாட்டியாகவும் ஆகின்றார். இந்த சரீரம் இங்கேயே அழிந்து
விடும். மற்றபடி ஆத்மாக்களை அழைத்துச் செல்கிறார். அனைவரையும்
துக்கத்திலிருந்து விடுவித்து, தூய்மையாக்கி வீட்டிற்கு
அழைத்துச் செல்கிறார். மனிதர்கள் திருமணம் முடித்துக் கொண்டு
வரும் போது முதலில் கணவன், பிறகு மனைவி, பிறகு தான் ஊர்வலம்
இருக்கும். இப்போது உங்களது மாலையும் இவ்வாறு இருக்கிறது. மேலே
சிவபாபா மலர் இருக்கின்றார், முதலில் மலரைத் தான் வணங்குவார்கள்.
பிறகு ஜோடி மலர் பிரம்மா, சரஸ்வதி, பிறகு பாபாவிற்கு உதவி
செய்யும் குழந்தைகளாகிய நீங்கள் இருக்கிறீர்கள். சிவபாபாவின்
நினைவின் மூலம் தான் சூரியவம்சி விஷ்ணு மாலை யில் மலராக
ஆகிறீர்கள். பிரம்மா சரஸ்வதியே லெட்சுமி நாராயணனாக ஆகிறார்கள்.
தேவதா, சத்ரியர்.... பிறகு சூத்ரனி லிருந்து பிராமணனாகி இந்த
ஞானம் அடைந்து லெட்சுமி நாராயணனாக ஆகின்றனர். இந்த மாலை
அவர்களுக் காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரம்மா
சரஸ்வதி இராஜா, ராணியாக ஆவார்கள். அவர்கள் முயற்சி
செய்திருக்கிறார்கள், அதனால் தான் பூஜிக்கப்படு கிறார்கள். மாலை
என்றால் என்ன? என்பது யாருக்கும் தெரியாது. அப்படியே மாலையை
உருட்டிக் கொண்டிருக்கின்றனர். 16108 மணிக்கான மாலையும்
இருக்கிறது. பெரிய பெரிய கோயில்களில் வைத்திருப்பர். பிறகு
சிலர் எங்கிருந்தோ பெற்றுக் கொள்வர், சிலர் வேறு எங்கிருந்தோ.
பாபா மும்பையில் லெட்சுமி நாராயணனின் கோயிலுக்குச் செல்வார்.
சென்று மாலை உருட்டுவார், ராம் ராம் என்று ஜெபிப்பார். மலர்
சிவபாபா அல்லவா! மலரைத் தான் ராம் ராம் என்று கூறுகின்றனர்.
பிறகு முழு மாலையை தலை வணங்குவர். ஞானம் சிறிதும் கிடையாது.
பாதிரியார்களும் கையில் மாலை உருட்டிக் கொண்டே இருப்பர்.
யாருடைய மாலையை உருட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேளுங்கள்.
கிறிஸ்துவின் நினைவில் மாலை உருட்டுகிறோம் என்று கூறுவர்.
அவர்களுக்கு பெரிய போப் பாதிரியார் இருப்பார், பிறகு அது
போப்பாண்டவர்களின் மாலையாக ஆகிவிடுகிறது. அவர்கள் அனைவரின்
சித்திரங்களும் இருக்கும். போப்பாண்டவர்களுக்கு எவ்வளவு மரியாதை
இருக்கிறது! கிறிஸ்துவின் ஆத்மா எங்கிருக்கிறது? என்று அவர்
களுக்கும் தெரியாது. கிறிஸ்துவின் ஆத்மாவும் இப்போது யாசிப்பவர்
(ஏழை) ரூபத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நீங்களும் இப்போது யாசிக்கும் நிலையிலிருந்து இளவரசராக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். பாரதமே இளவரசன் போல இருந்தது. இப்போது
ஏழ்மையாக இருக்கிறது, பிறகு மீண்டும் அரச வம்சத்தின் இராஜ்யம்
ஆகும். அப்படி ஆக்கக் கூடியவர் ஒரே ஒரு ஆன்மீக தந்தையாவார்.
யாசிப்பவரிலிருந்து இளவரசர் ஆகிறீர்கள். இளவரசன், இளவரசிக்கான
ஒரு கல்லூரியும் இருக்கிறது, அங்கு சென்று படிக்கின்றனர்.
நீங்கள் இங்கு படித்து 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தில் இளவரசன்
இளவரசியாக ஆகிறீர்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் மனிதனிலிருந்து
தேவதைகளாக ஆகிறீர்கள்.
எந்த ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசராக இருந்தாரோ அவர் 84
பிறவிகளுக்குப் பின் ஏழையாக ஆகிறார் என்பதை இப்போது நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். 5 ஆயிரம் ஆண்டிற்கு முன் தேவி தேவதைகள்
எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தனர்! இப்போது அவர்களே ஏழைகளாக,
யாசிப்பவர்களாக ஆகிவிட்டனர். இந்த விசயங்களை நீங்கள் மட்டுமே
கேட்க முடியும். பகவானின் மகாவாக்கியம் - அவர் அனைவருக்கும்
தந்தை ஆவார். நீங்கள் இறை தந்தையிடம் (ஞானம்) கேட்கிறீர்கள்.
சிவபகவானின் மகா வாக்கியத்திற்குப் பதிலாக கிருஷ்ண பகவானின்
மகாவாக்கியம் என்று எழுதி வைத்து கீதையில் தவறு செய்து விட்டனர்.
அதனால் தான் பொய்யான உலகம் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில்
முழு உலகமும் முட்கள் நிறைந்த காடாக ஆகிவிட்டது. மும்பையில்
பபூல் நாத் கோயில் இருக்கிறது. தந்தை வந்து இந்த முட்களை மலராக
ஆக்குகின்றார். அனைவரும் ஒருவரையொருவர் முள் போன்று அதாவது
காமம் என்ற வாளால் துன்புறுத்து கின்றனர். அதனால் தான் இது
முட்கள் நிறைந்த காடு என்று கூறப்படுகிறது. சத்யுகம் அல்லாவின்
பூந்தோட்டம் என்று கூறப்படுகிறது. அதே மலர்கள் தான் முட்களாக
ஆகின்றன, பிறகு மீண்டும் முள்ளிலிருந்து மலராக ஆகின்றன.
சத்யுகத்தில் ஒருபோதும் இராவணனை எரிக்க மாட்டார்கள். பாரதத்தின்
பழைய எதிரி இராவணன் ஆகும். அரைக் கல்பம் துக்கம்
கொடுத்திருக்கும் இராவணனுடன் உங்களது யுத்தம் நடைபெறுகிறது,
கடைசியில் யுத்தம் பெரிதாக நடைபெறும். உண்மையிலும் உண்மையான
தசரா ஏற்பட வேண்டும். இராவண இராஜ்யம் அழிந்து விடும், மீண்டும்
உங்களுக்கு தங்க மாளிகை கிடைத்து விடும். இப்போது நீங்கள்
இராவணன் மீது வெற்றியடைந்து சொர்க்கத்திற்கு எஜமானர்களாக
ஆகிறீர்கள். பாபா முழு உலக இராஜ்ய பாக்கியத்தை கொடுக் கின்றார்.
அதனால் தான் அவரை கள்ளங்கபடமற்ற சிவன் என்று கூறுகின்றனர்.
வேசிகள், அகல்யை, கூனி போன்ற அனை வரையும் தந்தை உலகிற்கு
எஜமானர்களாக ஆக்குகின்றார். எவ்வளவு கள்ளங்கபடமற்றவராக
இருக்கின்றார்! வருவதே தூய்மையற்ற உலகில், அசுத்த சரீரத்தில்!
மற்றபடி சொர்க்கத்திற்கு தகுதியற்றவர்களால் விகாரத்தை விட
முடியாது. குழந்தைகளே! இப்போது இந்த கடைசிப் பிறவியில் நீங்கள்
தூய்மையாகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த விகாரம்
விஷமாகும், இது உங்களை முதல், இடை, கடை வரையுமே துக்க
மானவர்களாக ஆக்குகிறது. உங்களால் இந்த ஒரே ஒரு கடைசிப்
பிறவியில் இதை விட முடியாதா? நான் உங்களை அமிர்தம் பருக வைத்து
அமரர்களாக ஆக்குகிறேன். இருப்பினும் நீங்கள் தூய்மையாக ஆவது
கிடையாது. விகாரங்களின்றி, சிகிரெட் இன்றி, சாராயம் இன்றி
இருக்க முடிவது கிடையாது. நீங்கள் ஒரே ஒரு பிறவியில் தூய்மையாக
ஆனீர்கள் எனில் நான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குவேன்
என்று எல்லையற்ற தந்தையாகிய நான் கூறுகிறேன்.
முழு உலகையும் துக்கத்திலிருந்து விடுவித்து சுகதாமம்,
சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்லவே தந்தை வந்திருக்கின்றார்
என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது அனைத்து தர்மமும் விநாசம்
ஆகிவிடும். ஒரே ஒரு ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிறது.
கிரந்தத்திலும் பரம்பிதா பரமாத்மாவை அகால மூரத் என்று
கூறப்பட்டிருக்கிறது. தந்தை மகா காலன் ஆவார். அந்த காலன் ஒன்று
அல்லது இருவரை அழைத்துச் செல்வார், நான் அனைத்து ஆத்மாக்களையும்
அழைத்துச் செல்வேன், அதனால் தான் மகா காலன் என்று கூறுகின்றனர்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த கடைசிப் பிறவியில் ஞான அமிர்தம் பருகி அமரர்களாக ஆக
வேண்டும். தன்னை சொர்க்கம் செல்வதற்கு தகுதியானவராக ஆக்கிக்
கொள்ள வேண்டும். கெட்ட பழக்கங்களை விட்டு விட வேண்டும்.
2) இப்போது படிப்பு படித்து 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின்
இளவரசர், இளவரசியாக ஆக வேண்டும். உண்மையிலும் உண்மையான சத்திய
நாராயணன் கதை கேட்டு நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய முயற்சி
செய்ய வேண்டும்.
வரதானம்:
குறைந்த சொற்கள் மூலம் ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும் தெளிவு
படுத்தக்கூடிய யதார்த்தமான மற்றும் சக்திவாய்ந்தவராக ஆகுக.
எந்தவொரு பொருளும் - எவ்வளவு அதிகமான சக்தி வாய்ந்ததாக
இருக்கின்றதோ, அவ்வளவு அதன் (பயன்படுத்தும்) அளவு குறைவானதாக
இருக்கும். அதேபோல, நீங்கள் உங்களுடைய நிர்வாண் (அதாவது
சப்தத்தை கடந்த) நிலையில் நிலைத்திருந்து, பிறகு பேச்சுக்கு (சப்தத்தில்)
வரும்போது சொற்கள் குறைவாக இருக்கும், ஆனால் யதார்த்தமாகவும்
சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். ஒரே சொல்லில் ஆயிரக்கணக்கான
சொற்களின் ரகசியம் அடங்கியிருக்கும், இதனால் வீணான பேச்சு (வியர்த்
வாணி) தானாகவே முடிவுக்கு வந்து விடும். ஒரே சொல்லின் மூலம்
ஞானத்தின் அனைத்து ரகசியங்களையும் தெளிவுபடுத்த முடியும்,
விரிவாக்கம் (விஸ்தாரம்) முடிவுக்கு வந்துவிடும்.
சுலோகன்:
மனதார பாபா என்று சொல்வதன் அர்த்தம்,
மகிழ்ச்சி மற்றும் சக்தியை பெறுவதாகும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது உங்களின் வள்ளல் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள்.
வள்ளலின் குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் கொடுக்கும்
பாவனையால் நிரம்பிய வராக ஆகுங்கள். இது நடந்தால் தான் நான்
இதைச் செய்வேன் என்றோ, இப்படிப்பட்ட சூழ்நிலை, சூழ்நிலை மண்டலம்
அமைந்தால் தான் நான் இதைச் செய்வேன் என்றோ ஒருபோதும்
எண்ணாதீர்கள். வழங்கும் பண்பு கொண்ட சம்ஸ்காரம் உடையவர்களுக்கு
நாலாபுறமிருந்தும் ஒத்துழைப்பு தானாகவே கிடைக்கும்; எனவே
மாஸ்டர் வள்ளல் மற்றவர் களிடமிருந்து பெறக்கூடிய பாவனையை வைக்க
முடியாது.
|
|
|
|