03-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இராவணனின் சட்டம்
அசுர வழி, பொய் பேசுவது ஆகும், தந்தையின் சட்டம் ஸ்ரீமத் (உயர்ந்த
வழி) உண்மை பேசுவதாகும்.
கேள்வி:
எந்த விஷயங்களை சிந்தித்து
குழந்தைகள் ஆச்சரியப் படவேண்டும்?
பதில்:
1. இது எப்படிப்பட்ட முடிவற்ற
அதிசயமான நாடகமாக உள்ளது, வினாடிக்கு வினாடி கடந்து செல்கின்ற
முக இலட்சணங்கள் (தோற்றம்), நடிப்பு முதலியவை மீண்டும் நடக்கப்
போகிறது. ஒருவரின் முக இலட்சணம் (முக சாயல்) இன்னொருவருக்கு
கிடைப்ப தில்லை என்பது எவ்வளவு அதியமானது! 2. எப்படி
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து முழு உலகிற்கும் சத்கதி
கொடுக்கிறார், படிப்பிக்கிறார் என்பதும் கூட அதிசயமானதாகும்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை சிவன் வந்து தனது ஆன்மீகக் குழந்தைகளாகிய
சாலிக்கிராமங்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார், என்ன
புரிய வைத்துக் கொண்டிருக் கிறார்? சிருஷ்டியின் முதல், இடை,
கடைசியின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார், மேலும் இதைப் புரிய
வைப்பவர் ஒரே ஒரு தந்தையே, மற்ற ஆத்மாக்கள் அல்லது
சாலிக்கிராமங்கள் அனைவருக்கும் சரீரத்தின் பெயர் இருக்கிறது.
மற்றபடி ஒரே ஒரு பரமாத்மாவுக்கு சரீரம் கிடையாது. அந்த
பரமாத்மாவின் பெயர் சிவன் என்பதாகும். அவர் தான் பதீத பாவனர்,
பரமாத்மா என அழைக்கப்படுகிறார். அவர் தான் குழந்தைகளாகிய
உங்களுக்கு இந்த முழு உலகின் முதல் இடை, கடைசியின் அனைத்து
இரகசியங்களையும் புரிய வைக்கிறார். நடிப்பை நடிப்பதற்காக
அனைவரும் இங்கே வருகின்றனர். விஷ்ணுவின் இரண்டு ரூபங்கள் உள்ளன
என்பதும் புரிய வைத்திருக்கிறார். சங்கரின் நடிப்பே கிடையாது.
இவையனைத்தும் தந்தை வந்து புரிய வைக்கிறார். தந்தை எப்போது
வருகிறார்? புதிய சிருஷ்டியின் படைப்பும், பழைய உலகின்
வினாசமும் ஆகக் கூடிய நேரத்தில் வருகிறார். புதிய உலகத்தில் ஒரு
ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது என்பதைக்
குழந்தைகள் அறிவார்கள். அதனை ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவைத்
தவிர வேறு யாரும் செய்யவே முடியாது. ஒரே பரம ஆத்மா தான்
பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார்.
அவருடைய பெயர் சிவன் என்பதாகும். அவருக்கு சரீரத்தின் மீது
பெயர் ஏற்படுவ தில்லை. இங்கிருக்கும் மற்ற அனைவருக்கும்
சரீரத்தின் பெயர் கிடைக்கிறது. முக்கியமானவர் கள் அனைவரும்
வந்து விட்டனர் என்பதையும் புரிந்து கொண்டுள்ளீர்கள்.
நாடகத்தின் சக்கரம் சுற்றி சுற்றி இப்போது இறுதியில் வந்து
நின்றுள்ளது. இறுதியில் தந்தைதான் தேவைப் படுகிறார். அவருடைய
ஜெயந்தியையும் கொண்டாடுகின்றனர். சிவ ஜெயந்தியும் இந்த சமயம்
கொண்டாடுகின்றனர். இந்த சமயம் உலகம் மாற வேண்டியுள்ளது.
அடர்ந்த காரிருளிலிருந்து அதிக பிரகாசம் உண்டாகிறது அதாவது
துக்கதாமத்திலிருந்து சுக தாமம் ஆக வேண்டும். பரமபிதா பரமாத்மா
சிவன் ஒரே முறைதான் சங்கம யுகத்தில் பழைய உலகத்தை அழித்து,
புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார். முதலின் புதிய
உலகின் ஸ்தாபனை, பிறகு பழைய உலகின் வினாசம் ஏற்படுகிறது.
படித்து புத்திசாலி ஆக வேண்டும், மேலும் தெய்வீக குணங்களையும்
தாரணை செய்ய வேண்டும் என்று குழந்தைகள் புரிந்துள்ளனர். அசுர
குணங்களை மாற்ற வேண்டும். தெய்வீக குணங்கள் மற்றும் அசுர
குணங்களின் வர்ணனை களை படமாக வரைந்து (சார்ட்) காட்ட வேண்டும்.
நாம் யாருக்கும் கஷ்டம் கொடுப்ப தில்லைதானே, பொய்
சொல்வதில்லைதானே என்று தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீமத்-ஐ மீறி நடப்பதில்லைதானே? பொய் சொல்வது, பிறருக்கு
துக்கம் கொடுப்பது, கஷ்டம் கொடுப்பது - இவை இராவணனின் சட்டங்கள்
மற்றும் அவை (உண்மை பேசுவது, சுகம் கொடுப்பது) இராமனின்
சட்டங்கள். ஸ்ரீமத் மற்றும் அசுர வழி இரண்டைப் பற்றிய பாடலும்
உள்ளது. அரைக் கல்ப காலம் அசுர வழி நடக்கிறது, அதில் மனிதர்கள்
அசுரர்களாக, துக்கம் நிறைந்தவர்களாக, நோயாளி களாக ஆகி
விடுகின்றனர். 5 விகாரங்கள் பிரவேசம் ஆகி விடுகின்றன. தந்தை
வந்து ஸ்ரீமத் கொடுக்கிறார். ஸ்ரீமத்படி நடப்பதால் நமக்கு
தெய்வீக குணங்கள் கிடைக்கின்றன என குழந்தைகள் அறிவார்கள். அசுர
குணங்களை மாற்ற வேண்டும். ஒருவேளை அசுர குணங்கள் தங்கி விட்டால்
பதவி குறைந்து விடும். பிறவி பிறவிகளாக செய்த பாவங்களின் சுமை
வரிசைக்கிரமமான முயற்சியின்படி இலேசாகி விடும். இது இப்போது
சங்கம யுகம் என்பதையும் புரிந்துள்ளீர்கள். தந்தை மூலமாக
தெய்வீக குணங்களை தாரணை செய்து புதிய உலகின் எஜமானன் ஆகின்றனர்.
ஆக, பழைய உலகம் கண்டிப்பாக அழிய வேண்டும் என்பது உறுதியாகிறது.
புதிய உலகின் ஸ்தாபனை பிரம்மா குமார், குமாரி களின் மூலம்
நடக்க வேண்டும். இதுவும் கூட உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,
ஆகையால் சேவையில் ஈடுபட்டுள்ளனர். யாராவது ஒருவருக்கு நன்மை
செய்யும் முயற்சியை செய்தபடி இருக்கின்றனர்.
நம் சகோதர சகோதரிகள் எவ்வளவு சேவை செய்கின்றனர் என்பதை நீங்கள்
அறிவீர்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுத்தபடி
இருக்கின்றனர். தந்தை வந்துள்ளார், முதன் முதலில் சில
பேருக்குத்தான் கிடைப்பார். பிறகு அதிகரித்தபடி செல்வார்கள்.
ஒரு பிரம்மாவின் மூலம் எவ்வளவு பேர் பிரம்மா குமாரர்களாக
ஆகின்றனர். பிராமண குலம் கண்டிப்பாக தேவையல்லவா! நாம் அனைவரும்
பிரம்மா குமார்-குமாரிகள், சிவபாபாவின் குழந்தைகள், அனைவரும்
சகோதர-சகோதரர்களாக இருப்பவர்கள். உண்மையில் சகோதர- சகோதரர்கள்,
பிறகு பிரஜாபிதா பிரம்மாவுடையவர்களாக ஆகும்போது
சகோதரன்-சகோதரியாக ஆகின்றனர். பிறகு தேவதா குலத்தில்
செல்லும்போது சம்மந்தங்கள் (உறவுகள்) பெருகி விடு கின்றன. இந்த
சமயத்தில் பிரம்மாவின் குழந்தைகளாக மற்றும் சகோதரன்-சகோதரியாக
இருக்கும்போது ஒரே குலம் என்றாகி விடுகிறது, இதனை வம்சம் என்று
சொல்ல மாட்டோம். இராஜ்யம் கௌரவர்களுடையதும் அல்ல, பாண்டவர்
களுடையதும் அல்ல. வம்சம் என்பது இராஜா, இராணி வரிசைக்கிரமமாக
அமரும்போது ஏற்படுகிறது. இப்போதிருப்பதோ பிரஜை களின் மீது
பிரஜைகளின் இராஜ்யம் தான். ஆரம்பத்திலிருந்து தூய்மையான வம்சம்
மற்றும் தூய்மையற்ற வம்சம் இருந்து வந்தன. தூய்மையான வம்சம்
தேவதைகளுடையதுதான் நடந்து வந்தது. 5 ஆயிரம் வருடங் களுக்கு
முன்பு சொர்க்கம் இருந்த போது தூய்மையான வம்சம் இருந்தது
என்பதைக் குழந்தைகள் அறிவார்கள். அவர்களுடைய படங்களும் உள்ளன,
எத்தனை கம்பீரமான கோவில்கள் உருவாகியுள்ளன. வேறு யாருடைய
கோவில்களும் இல்லை. இந்த தேவதைகளுடைய கோவில்கள் தான் நிறைய
உள்ளன.
மற்ற அனைவரின் சரீரங்களின் பெயர்களும் மாறுகின்றன, இவருடைய
பெயர் மட்டும் சிவன் என்றே இருந்து வந்துள்ளது என்பதைக்
குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கிறார். சிவ பகவானுடைய
மகாவாக்கியம், வேறு எந்த தேகதாரியும் பகவான் என்று சொல்லப்படு
வதில்லை. தந்தையைத் தவிர வேறு யாரும் தந்தையின் அறிமுகத்தைக்
கொடுக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கு தந்தையைப் பற்றி
தெரியாது. இங்கும் கூட பலருடைய புத்தியில் தந்தையை எப்படி
நினைவு செய்வது என்பதே வருவதில்லை. குழம்புகின்றனர். இவ்வளவு
சிறிய புள்ளி அவரை எப்படி நினைவு செய்வது? சரீரம் பெரியதாக
உள்ளது, அதனை நினைத்த படி இருக்கின்றனர். புருவ மத்தியில்
நட்சத்திரம் ஜொலிக்கிறது என்ற பாடலும் உள்ளது, அதாவது ஆத்மா
நட்சத்திரத்தைப் போல் உள்ளது. ஆத்மா சாலிக்கிராமம் என்று
சொல்லப் படுகிறது. சிவலிங்கத்தின் பெரிய ரூபத்திற்கும் பூஜை
நடக்கிறது. ஆத்மாவைப் பார்க்க முடியாது என்பது போல
சிவபாபாவையும் யாராலும் பார்க்க முடியாது. பக்தி மார்க்கத்தில்
புள்ளிக்கு எப்படி பூஜை செய்வது? ஏனென்றால் முதன் முதலில்
சிவபாபாவின் அவிபசாரி பூஜை (ஒருவரை மட்டும் நினைவு செய்வது)
தொடங்குகிறது அல்லவா! ஆக, பூஜைக்காக கண்டிப்பாக பெரிய பொருள்
தேவைப் படுகிறது. சாலிக்கிராமம் கூட பெரிய முட்டை போல உருவாக்கு
கின்றனர். ஒரு பக்கம் கட்டை விரல் அளவு என்றும் சொல்கின்றனர்,
பிறகு நட்சத்திரம் என்று கூறுகின்றனர். இப்போது நீங்கள் ஒரு
விஷயத்தில் நிலைத்து நிற்க வேண்டும். அரைக் கல்ப காலம் பெரிய
பொருளுக்கு பூஜை செய்தீர்கள். பிறகு இப்போது புள்ளி என்று
புரிந்து கொள்வதில் முயற்சியும் தேவைப்படுகிறது, பார்க்க
முடிவதில்லை. இது புத்தியின் மூலம் உணரப்படுகிறது. சரீரத்தில்
ஆத்மா பிரவேசம் செய் கிறது, அது பிறகு வெளியில் செல்கிறது,
யாராலும் பார்க்க முடிவதில்லை. பெரிய பொருளாக இருந்தால்
பார்க்க முடியும். தந்தையும் கூட புள்ளியாக இருக்கிறார் ஆனால்
அவர் ஞானக் கடல், வேறு யாரையும் ஞானக்கடல் என்று சொல்வதில்லை.
சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத் தினுடையவை ஆகும். இவ்வளவு வேத
சாஸ்திரங்கள் முதலானவைகளை யார் உருவாக்கியது? வியாசர் என்று
சொல்கின்றனர். கிறிஸ்துவின் ஆத்மா சாஸ்திரம் எதுவும்
உருவாக்கவில்லை. இதனை பிறகு மனிதர்கள் உருவாக்குகின்றனர்.
அவர்களுக்குள் ஞானம் இல்லை. ஒரு தந்தையே ஞானக்கடலாக இருப்பவர்.
சாஸ்திரங்களில் ஞானத்தின், சத்கதியின் விஷயங்கள் கிடையாது.
ஒவ்வொரு தர்மத்தினரும் தத்தமது தர்ம ஸ்தாபகர்களை நினைவு
செய்கின்றனர். தேகதாரிகளை நினைவு செய்கின்றனர். கிறிஸ்துவின்
சித்திரம் இருக்கிறது அல்லவா! அனைவருடைய சித்திரமும் இருக்கிறது.
சிவபாபாவோ பரம ஆத்மாவாக இருப்பவர். ஆத்மாக்கள் அனைவரும்
சகோதரர்கள் என இப்போது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்.
சகோதரர்களுக்குள் பிறருக்கு ஞானம் கொடுத்து சத்கதி கொடுக்கக்
கூடிய அளவு ஞானம் இருக்க முடியாது, சத்கதியை வழங்குபவர் ஒரே
ஒருவர்தான் ஆவார். இந்த சமயத்தில் சகோதரர்களும் இருக்கின்றனர்,
தந்தையும் இருக்கிறார். தந்தை வந்து முழு உலகின் ஆத்மாக்களுக்கு
சத்கதி வழங்குகிறார். உலகிற்கு சத்கதி வழங்கும் வள்ளல் ஒரே
ஒருவர்தான். ஸ்ரீ ஸ்ரீ 108 ஜெகத்குரு என்றாலும் சரி, உலக குரு
என்றாலும் சரி, விஷயம் ஒன்றுதான். இப்போது இருப்பது அசுர
இராஜ்யம் ஆகும். சங்கம யுகத்தில் தான் தந்தை வந்து இந்த அனைத்து
விஷயங்களையும் புரிய வைக்கிறார்.
இப்போது புதிய உலகத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது
மற்றும் பழைய உலகத்தின் வினாசம் ஏற்படுகிறது என்பதை நீங்கள்
அறிவீர்கள். பதீத பாவனர் ஒரே ஒரு நிராகார தந்தை என்பதையும்
புரிய வைத்துள்ளார். எந்த தேகதாரியும் பதீத பாவனர் ஆக முடியாது.
பதீத பாவனர் பரமாத்மாதான் ஆவார். ஒரு வேளை பதீத பாவன சீதாராம்
என்றாலும் கூட பக்தியின் பலனை கொடுக்க பகவான் வருகிறார் என்று
தந்தை புரிய வைத்துள்ளார். ஆக அனைத்து சீதையரும் மணமகள்கள்
மற்றும் மணமகன் ஒரு ராமன், அவர் அனைவருக்கும் சத்கதியைக்
கொடுப்பவர் ஆவார். இந்த அனைத்து விஷயங்களையும் தந்தைதான் வந்து
புரிய வைக்கிறார். நாடகத்தின் படி நீங்கள் தான் பிறகு 5 ஆயிரம்
வருடங்களுக்குப் பிறகு இந்த விஷயங்களைக் கேட்பீர்கள். இப்போது
நீங்கள் அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். பள்ளிக்
கூடத்தில் எவ்வளவு பேர் படிக் கின்றனர்! இந்த அனைத்தும்
நாடகமாக உருவாகியுள்ளது. எந்த சமயத்தில் யார் படிக் கின்றனரோ,
எந்த நடிப்பு நடக்கிறதோ, அதே நடிப்பு பிறகு கல்பத்திற்குப் பின்
அதே போல நடக்கும், சரியாக 5 ஆயிரம் வருடங் களுக்குப் பிறகு
மீண்டும் படிப்பீர்கள். இந்த நாடகம் அனாதியாக உருவாகியுள்ளது.
எதைப் பார்த்தாலும் வினாடிக்கு வினாடி புதியதாகத் தென்படும்.
சக்கரம் சுற்றியபடி இருக்கும். புதிய புதிய விஷயங்களை நீங்கள்
பார்த்தபடி இருப்பீர்கள். இந்த 5 ஆயிரம் வருடங்களின் நாடகம்
நடந்து கொண்டு இருப்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இது
மிகவும் விரிவானதாகும். முக்கிய முக்கியமான விஷயங்கள் புரிய
வைக்கப்படுகிறது. பரமாத்மா சர்வ வியாபி அல்ல என்று சொல்வது
போன்ற விஷயங்கள். நான் சர்வ வியாபி அல்ல என்று தந்தை புரிய
வைக்கிறார். தந்தை வந்து தனது மற்றும் படைப்பின் முதல், இடை,
கடைசியின் அறிமுகத்தைக் கொடுக்கிறார். தந்தை ஒவ்வொரு கல்பமும்
நமக்கு ஆஸ்தி கொடுக்க வருகிறார் என்பதை இப்போது நீங்கள்
அறிவீர்கள். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்ற பாடலும் உள்ளது.
இதில் ஞானம் மிகவும் நன்றாக உள்ளது. விராட ரூபத்தின் அர்த்தமும்
கண்டிப்பாக இருக்கும் அல்லவா! ஆனால் தந்தையைத் தவிர ஒருபோதும்
யாரும் புரிய வைக்க முடியாது. படங்கள் நிறைய உள்ளன, ஆனால்
ஒன்றைப் பற்றியும் கூட ஞானம் யாரிடமும் இல்லை. உயர்ந்த வரிலும்
உயர்ந்தவர் சிவபாபா, அவருடைய சித்திரமும் இருக்கிறது, ஆனால்
யாருக்கும் அவரைப் பற்றி தெரியாது. நல்லது, பிறகு சூட்சும வதனம்
இருக்கிறது, அதனை விடுங்கள். அது தேவையே இல்லை. இங்கே (சாகார
உலகம்) உள்ள வரலாறு புவியியலைப் புரிந்து கொள்ள வேண்டும். அது
காட்சிகளின் விஷயம் ஆகும். இங்கே இவருக்குள் தந்தை அமர்ந்து
புரிய வைப்பது போல சூட்சும வதனத்தில் கர்மாதீத சரீரத்தில்
அமர்ந்து இவருடன் (பிரம்மாவுடன்) சந்திக்கிறார் அல்லது
பேசுகிறார். மற்றபடி அங்கே உலகின் வரலாறு புவியியல் என்ற விஷயம்
கிடையாது. வரலாறு புவியியல் இந்த உலகைப் பற்றியதாகும்.
சத்யுகத்தில் தேவி தேவதைகள் இருந்தனர், இப்போது அவர்கள்
வாழ்ந்து சென்றது 5 ஆயிரம் வருடங்கள் ஆகின்றது என்பது
குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. இந்த ஆதி சனாதன தேவதா
தர்மம் எப்படி ஸ்தாபனை ஆகியது என்பது யாருக்கும் தெரியாது.
மற்ற தர்மங் களின் ஸ்தாபனை குறித்து அனைவரும் அறிவார்கள்.
புத்தகங்கள் முதலானவையும் இருக்கின்றன. இலட்சக் கணக்கான
வருடங்களின் விஷயம் இருக்க முடியாது. இது முற்றிலும் தவறாகும்.
ஆனால் மனிதர்களின் புத்தி கொஞ்சமும் வேலை செய்வதில்லை. அனைத்து
விஷயங்களையும் தந்தை புரிய வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே, நல்ல விதமாக தாரணை செய்யுங்கள். முக்கியமான விஷயம்
தந்தையை நினைவு செய்வதாகும். இது நினை வினுடைய ஓட்டமாகும்.
பந்தயம் நடக்கிறது அல்லவா! சிலர் தனித் தனியாக ஓடுகின்றனர்.
சிலர் ஜோடியாக ஒன்று சேர்த்து கட்டிப் போட்டுக் கொண்டு
ஓடுகின்றனர். இங்கே ஜோடியாக இருப்பவர்கள் ஒன்றாக ஓடுவதற்கு
பயிற்சி செய்கின்றனர். சத்யுகத்திலும் இதே போல ஒன்றாக
ஜோடியாகலாம் என்று நினைக்கின்றனர். பெயர் உருவம் என்னவோ மாறி
விடுகிறது, அதே சரீரம் கிடைப்பதில்லை. சரீரம் மாறியபடி
இருக்கிறது. ஆத்மா ஒரு சரீரம் விட்டு மற்றொன்று எடுக்கிறது
என்று புரிந்துள்ளனர். முக இலட்சணங்கள் வேறாக இருக்கும். ஆனால்
குழந்தைகளுக்கு ஆச்சரியம் ஏற்பட வேண்டும் - வினாடிக்கு வினாடி
கடந்து போன முக இலட்சணங்கள், கர்மங்கள் மீண்டும் 5000
வருடங்களுக்குப் பிறகு அதே போல திரும்பவும் நடக்கவுள்ளது.
எத்தனை அதிசயமான நாடகம்! இதனை வேறு யாராலும் புரிய வைக்க
முடியாது. நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம் என்பதை நீங்கள்
அறிவீர்கள். வரிசைக் கிரமமாகத்தான் ஆவீர்கள். அனைவருமே
கிருஷ்ணர் ஆக மாட்டார்கள். அனைவரின் முக இலட்சணங்களும் வேறு
வேறாக இருக்கும். எவ்வளவு பெரிய அதிசயமான நாடகம்! ஒருவரின் முக
இலட்சணம் இன்னொரு வருக்குக் கிடைக்காது. அதே விளையாட்டு
மீண்டும் நடக்கிறது. இவையனைத்தையும் சிந்தித்து ஆச்சரியப்பட
வேண்டும். எப்படி எல்லைக்கப்பாற்பட்ட தந்தை வந்து
படிப்பிக்கிறார்! பிறவி பிறவிகளாக பக்தியின் சாஸ்திரங்களைப்
படித்து வந்தீர்கள், சாதுக் களிடம் கதைகள் முதலானவைகளையும்
கேட்டீர்கள். இப்போது பக்தியின் நேரம் முடிந்து விட்டது என்று
தந்தை சொல்கிறார். இப்போது பக்தர்களுக்கு பகவான் மூலம் பலன்
கிடைக் கிறது. பகவான் எப்போது எந்த ரூபத்தில் வருவார் என்பது
அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில், சாஸ்திரங்களைப்
படிப்பதன் மூலம் பகவான் கிடைப்பார் என்கின்றனர். சில நேரங்களில்
இங்கே வருவார் என்று சொல்கின்றனர். சாஸ்திரங்களின் மூலமே
காரியம் முடிந்து விடும் எனறால் பிறகு தந்தை ஏன் வரவேண்டும்?
சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலமே பகவான் கிடைத்து விடுவார்
என்றால் மற்றபடி பகவான் வந்து என்ன செய்வார்? அரைக் கல்பகாலம்
நீங்கள் இந்த சாஸ்திரங்களைப் படித்து படித்து தமோபிரதானமாக
ஆனபடி வந்தீர்கள். ஆக குழந்தைகளுக்கு சிருஷ்டி சக்கரத்தைப்
பற்றியும் புரிய வைத்தபடி இருக்கிறார், மேலும் தெய்வீக
நடத்தையும் தேவை. ஒன்று யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.
யாருக் காவது விஷம் தேவை (விகாரம்) என்றால், அதைக்
கொடுக்காவிட்டால் துக்கம் கொடுப்பது என்று அர்த்தமல்ல. அப்படி
தந்தை சொல்வதில்லை. தந்தை யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது
என்று சொல்கிறார் அல்லவா! இப்போது இந்த விஷத்தை கேட்கும்போது
அவர்களுக்கு கொடுக்க வேண்டும், இல்லையென்றால் பிறருக்கு துக்கம்
கொடுத்த தாகிவிடும் அல்லவா என்று சொல்லக்கூடிய முட்டாள்களும்
வெளிப்படுகின்றனர். இப்படி புரிந்து கொள்ளக்கூடிய மூட மதி
கொண்டவர்களும் உள்ளனர். தந்தை கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும்
என்று சொல்கிறார். அசுர நடத்தை மற்றும் தெய்வீக நடத்தை பற்றிய
புரிதலும் இருக்க வேண்டும். மனிதர்கள் இதைக் கூட புரிந்து
கொள்வதில்லை, அவர்கள் ஆத்மாவில் எதுவும் ஒட்டுவ தில்லை என்று
சொல்லி விடுகின்றனர். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எதை
வேண்டு மானாலும் சாப்பிடுங்கள், குடியுங்கள், விகாரத்தில்
செல்லுங்கள், பரவாயில்லை என்று கூட கற்றுக் கொடுக்கின்றனர்.
எவ்வளவு பேரை பிடித்து அழைத்துக் கொண்டு வருகின்றனர். வெளியில்
கூட நிறைய பேர் சைவ உணவு மட்டும் உண்பவர்கள் (வெஜிடேரியன்)
இருக் கின்றனர். கண்டிப்பாக இது நல்லதே யாகும், ஆகவே தான்
வெஜிடேரியன் ஆகின்றனர். அனைத்து ஜாதிகளிலும் வைஷ்ண வர்கள்
இருக்கின்றனர். மோசமான பொருட்களை உண்ப தில்லை.
அப்படிப்பட்டவர்கள் குறைந்த அளவில் (மைனாரிட்டி) இருக்கின்றனர்.
நீங்களும் மைனாரிட்டியாக இருக்கிறீர்கள். இந்த சமயம் நீங்கள்
எவ்வளவு குறைந்த அளவில் இருக்கிறீர் கள். மெது மெதுவாக வளர்ச்சி
யடைந்தபடி இருக்கும். குழந்தைகளுக்கு இந்தப் படிப்பினைதான்
கிடைக்கிறது - தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். பிறர்
கையால் சமைக்கப்பட்ட அசுத்தமான உணவை சாப்பிடக்கூடாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தனது சார்ட்டைப் (பதிவேடு) பார்க்க வேண்டும் -
1. நான் ஸ்ரீமத்திற்கு மாறாக நடப்பதில்லை தானே? 2. பொய்
சொல்வதில்லைதானே? 3. யாருக்கும் கஷ்டம் கொடுப்ப தில்லைதானே?
தெய்வீக குணங்களை தாரணை செய்தேனா?
2. படிப்புடன் கூடவே தெய்வீக நடத்தையும் தாரணை செய்ய
வேண்டும். கண்டிப்பாக தூய்மை யடைய வேண்டும். எந்த மோசமான
பொருட்களையும் உண்ணக் கூடாது. முழுமையான வைஷ்ணவராக வேண்டும்.
ஓட்டப் பந்தயத்தில் ஓட வேண்டும்.
வரதானம்:
பாபாவின் கட்டளைப்படி, உங்கள் மனதை காலியாக வைத்திருக்கும் வீண்
மற்றும் தீய கனவுகளிலிருந்து விடுபட்டவராகுங்கள்.
பாபாவின் கட்டளை யாதெனில் உறங்கும் போது, நல்லதோ கெட்டதோ
அனைத்தை யும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு மனதை எப்போதும்
காலியாக்குங்கள். பாபாவிடம் கொடுத்து விட்டு பாபாவுடன்
உறங்குங்கள். தனியாக அல்ல. நீங்கள் தூங்கும்போது தனியாக அல்லது
பயனற்ற விஷயங்களைப் வர்ணனை செய்து கொண்டே சென்றால், பயனற்ற
அல்லது தவறானது கனவுகள் வரும். இதுவும் சோம்பேறித்தனம் தான்.
இந்த அலட்சியத்தை விட்டு விட்டு, கட்டளைகளைப் பின்பற்றினால்,
நீங்கள் பயனற்ற மற்றும் தீய கனவுகளிலிருந்து முக்தி அடைந்து
விடுவீர்கள்.
சுலோகன்:
அதிர்ஷ்டசாலி ஆத்மாக்களே உண்மையான சேவையின் மூலம்
அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.