03.11.24    காலை முரளி            ஓம் சாந்தி  25.10.2002      பாப்தாதா,   மதுபன்


பிராமண வாழ்க்கையின் ஆதாரம் -- தூய்மையின் ராயல்டி
 

இன்று சிநேகத்தின் கடல் தம்முடைய சிநேகி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாலாபுறத்திலும் உள்ள சிநேகி குழந்தைகள் ஆன்மிக சூட்சும கயிற்றில் கட்டப்பட்டு, தங்களின் இனிய வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். எப்படி குழந்தைகள் சிநேகத்தால் ஈர்க்கப்பட்டு வந்தடைந்திருக்கிறார்களோ, அது போல் பாபாவும் குழந்தைகளின் சிநேகத்தின் கயிற்றில் கட்டப்பட்டு குழந்தைகளின் முன்னால் வந்து சேர்ந்திருக்கிறார். பாப்தாதா பார்த்துக் கொண்டி ருக்கிறார் -- நாலாபுறத்தின் குழந்தைகளும் தூரத்தில் அமர்ந்திருந்தாலும் கூட சிநேகத்தில் நிறைந்திருக்கிறார்கள். முன்னிலையில் உள்ள குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் மற்றும் தூரத்தில் இருக்கும் குழந்தைகளையும் பார்த்துப் புன்சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆன்மிக அவிநாசி சிநேகம், பரமாத்ம சிநேகம், ஆத்மிக சிநேகத்தை முழுக் கல்பத்திலும் இப்போது தான் அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் பவித்திரதாவின் ராயல்டியைப் பார்த்துக் கொண்டி ருக்கிறார். பிராமண வாழ்க்கையின் ராயல்டியே தூய்மை தான். ஆக, ஒவ்வொரு குழந்தையின் தலை மீதும் ஆன்மிக ராயல்டியின் அடையாளமாக தூய்மையின் ஒளிக்கிரீடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவரும் கூட உங்கள் தூய்மையின் கிரீடம், ஆன்மிக ராயல்டி யின் கிரீடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? பின்னால் இருப்பவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? எவ்வளவு அழகான கிரீடதாரிகளின் சபை! இல்லையா பாண்டவர்களே! கிரீடம் ஜொலித்துக் கொண்டிருக்கிறது இல்லையா? அந்த மாதிரி சபையைப் பார்த்துக் கொண்டி ருக்கிறீர்கள் இல்லையா? குமாரிகள், கிரீடதாரி குமாரிகள் இல்லையா நீங்கள்? பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார் -- குழந்தைகளின் ராயல் குடும்பம் எவ்வளவு சிரேஷ்டமானது! உங்கள் அநாதி ராயல்டியை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் நீங்கள் பரந்தாமத்தில் இருக்கிறீர்கள் என்றாலும் கூட ஆத்மா ரூபத்திலும் உங்கள் ஆன்மிக ராயல்டி விசேஷமான தாகும். ஆத்மாக்கள் அனைவரும் கூட ஒளி ரூபத்தில் உள்ளனர். ஆனால் உங்கள் ஜொலிப்பு அனைத்து ஆத்மாக்களை விடவும் சிரேஷ்டமானது. பரந்தாமம் நினைவு வருகிறதா? அநாதி காலத்திலிருந்தே உங்கள் பளபளப்பும் பொலிவும் தனிப்பட்டதாகும். எப்படி ஆகாயத்தில் பார்த்திருப்பீர்கள் -- நட்சத்திரங்கள் அனைத்தும் ஜொலிக்கின்றன, அனைத்தும் ஒளியே ஒளியாக உள்ளன. ஆனால் அனைத்து நட்சத்திரங்களிலும் சில விசேஷ நட்சத்திரங்களின் ஜொலிப்பு தனிப்பட்டதாகவும் அன்பானதாகவும் உள்ளது. அது போலவே ஆத்மாக்கள் அனைவருக்கும் நடுவில் ஆத்மாக்களாகிய உங்கள் ஜொலிப்பு, ஆன்மிக ராயல்டி, தூய்மையின் ஜொலிப்பு தனிப்பட்டதாக உள்ளது. நினைவு வந்து கொண்டிருக்கிறது இல்லையா? பிறகு ஆதி காலத்திற்கு வாருங்கள். ஆதி காலத்தை நினைவு செய்வீர்களானால், ஆதி காலத்திலும் கூட தேவதா சொரூபத்தில் ஆன்மிக ராயல்டியின் பர்சனாலிட்டி எவ்வளவு விசேஷமாக இருந்தது! முழுக் கல்பத்திலும் தேவதா சொரூபத்தின் ராயல்டி வேறு யாருக்காவது இருந்ததா? ஆன்மிக ராயல்டி, தூய்மையின் பர்சனாலிட்டி நினைவிருக்கிறது இல்லையா? பாண்டவர்களுக்கும் நினைவிரு க்கிறதா? நினைவு வந்து விட்டதா? பிறகு மத்திய காலத்திற்கு வாருங்கள். மத்திய காலத்தில் துவாபர யுகம் தொடங்கி உங்களுடைய பூஜைக்குரிய சித்திரங்களை உருவாக்குகிறார்களே, அந்தச் சித்திரங்களின் ராயல்டி மற்றும் பூஜையின் ராயல்டி துவாபரயுகத்திலிருந்து இது வரை எந்தச் சித்திரத்திற்காவது இருக்கிறதா? சித்திரங்களோ அநேகருடையவை உள்ளன. ஆனால் அது போல் விதிபூர்வமான பூஜை வேறு எந்த ஆத்மாக்களுக்காவது இருக்கிறதா? தர்ம பிதாக் களாக இருகக்லாம், தலைவர்களாக இருக்கலாம், நடிகர்களாக இருக்கலாம், சித்திரங்களோ அனைவருக்குமே உருவாகின்றன. ஆனால் சித்திரங்களின் ராயல்டி மற்றும் பூஜையின் ராயல்டி யாருக்காவது இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இரட்டை வெளிநாட்டினர் தங்களின் பூஜையைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா அல்லது வெறுமனே கேட்டிருக் கிறீர்களா? அத்தகைய விதிபூர்வமான பூஜை மற்றும் சித்திரங்களின் ஜொலிப்பு, ஆன்மிகத் தன்மை வேறு யாருக்கும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. ஏன்? தூய்மையின் ராயல்டி. தூய்மையின் பர்சனாலிட்டி நல்லது, தங்களின் பூஜையைப் பார்த்து விட்டீர்களா? பார்க்கவில்லை என்றால் பார்த்து விடுங்கள். இப்போது கடைசியில், சங்கமயுகத்தில் கூட முழு உலகத்திலும் தூய்மையின் ராயல்டி பிராமண வாழ்க்கையின் ஆதாரமாகும். தூய்மை இல்லை என்றால் பிரபு அன்பின் அனுபவமும் இல்லை. சர்வ பரமாத்ம பிராப்திகளின் அனுபவம் இல்லை. பிராமண வாழ்க்கையின் பர்சனாலிட்டி தூய்மை ஆகும் மற்றும் தூய்மை தான் ஆன்மிக ராயல்டி ஆகும். ஆக, ஆதி அநாதி, ஆதி மத்ய அந்தம் முழுக் கல்கத்திலும் இந்த ஆன்மிக ராயல்டி நடந்து வந்துள்ளது.

ஆக, தன்னைத் தான் பாருங்கள் -- கண்ணாடியோ உங்கள் அனைவரிடமும் உள்ளது இல்லையா? கண்ணாடி உள்ளதா? பார்க்க முடிகிறதா? அப்படியானால் பாருங்கள். நமக்குள் தூய்மையின் ராயல்டி எத்தனை சதவிகிதம் உள்ளது? நமது முகத்தின் மூலம் தூய்மையின் ஜொலிப்பு காணப்படுகிறதா? நடத்தையில் தூய்மையின் பெருமிதம் காணப்படுகிறதா? பெருமிதம் என்றால் நஷா. நடத்தையில் அந்தப் பெருமிதம், அதாவது ஆன்மிக நஷா காணப் படுகிறதா? தன்னைத் தான் பார்த்து விட்டீர்களா? பார்ப்பதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறது? ஒரு விநாடி தான் இல்லையா? ஆக, அனைவரும் தன்னைத் தான் பார்த்து விட்டீர்களா?

குமாரிகள் -- ஜொலிப்பு, பெருமிதம் உள்ளதா? நல்லது, அனைவரும் எழுந்திருங்கள், எழுந்து நில்லுங்கள். குமாரிகள் சிவப்புப் பட்டை அணிந்து அமர்ந்துள்ளனர். அதில் ஏக்விரதா என எழுதப் பட்டுள்ளது) அழகாக இருக்கிறது இல்லையா? ஏக்விரதா என்பதன் அர்த்தம் -- தூய்மையின் ராயல்டி என்பதாகும். ஆக, ஏக்விரதா என்ற பாடத்தைப் பக்கா ஆக்கி விட்டீர்களா? அங்கே போய் கச்சா (பக்குவமற்றதாக) ஆக்கி விடக் கூடாது. குமார் குரூப் எழுந்திருங்கள். குமார்களின் குரூப்பும் நன்றாக உள்ளது. குமார்கள் மனதில் உறுதிமொழியின் பட்டை அணிந்துள்ளனர். இவர்களோ (குமாரிகள்) வெளியிலும் அணிந்திருக்கிறார்கள். உறுதி மொழியின் பட்டை அணிந்துள்ளனர் -- அதாவது சதா என்றால் நிரந்தரமாக தூய்மையின் பர்சனாலிட்டியில் இருப்பவர்கள் குமார்கள். அப்படித் தானே? ஆம் என்று சொல்லுங்கள். இல்லையா ஆமாவா? அல்லது அங்கே சென்று கடிதம் எழுதுவீர்களா -- கொஞ்சம்-கொஞ்சம் தளர்ச்சியடைந்து விட்டது என்று? அந்த மாதிரி செய்யக்கூடாது. எது வரை பிராமண வாழ்க்கையில் வாழ்கிறீர்களோ. அது வரை சம்பூர்ண பவித்திரமாக இருந்தே ஆக வேண்டும். அந்த மாதிரி உறுதி மொழி இருக்கிறதா? பக்கா உறுதிமொழி என்றால் கை அசையுங்கள். டி.வி.யில் உங்கள் ஃபோட்டோ வந்து கொண்டிருக்கிறது. யார் தளர்ந்து விடுகிறார்களோ, அவர் களுக்கு இந்தப் படத்தை அனுப்புவார்கள். அதனால் தளர்ந்து போய்விடக் கூடாது. பக்காவாக இருக்க வேண்டும். ஆம், பக்கா, பாண்டவர்களோ பக்காவாக உள்ளனர். பக்கா பாண்டவர்கள். மிக நன்று!

தூய்மையின் உள்ளுணர்வு - சுப பாவனை, சுப விருப்பம். ஒருவர் எத்தகையவராக இருந்தாலும், பவித்திர உள்ளுணர்வு, அதாவது சுப பாவனை, சுப விருப்பம் மற்றும் பவித்திர திருஷ்டி, அதாவது சதா ஒவ்வொருவரையும் ஆத்மிக ரூபத்தில் பார்க்க வேண்டும் அல்லது ஃபரிஸ்தா ரூபத்தில் பார்க்க வேண்டும். ஆக, விருத்தி (உள்ளுணர்வு), திருஷ்டி மற்றும் மூன்றாவது கிருத்தி, அதாவது செயலில், என்றால் கர்மத்திலும் சதா ஒவ்வோர் ஆத்மாவுக்கும் சுகம் கொடுக்க வேண்டும் மற்றும் சுகம் பெற வேண்டும். இது தான் தூய்மையின் அடையாளம். விருத்தி, திருஷ்டி, கிருத்தி மூன்றிலும் இந்த தாரணை இருக்க வேண்டும். ஒருவர் என்ன தான் செய்தாலும், துக்கமே கொடுத்தாலும், அவதூறு (இன்சல்ட்) செய்தாலும் கூட நமது கடமை என்ன? துக்கம் கொடுப்பவர்களைப் பின்பற்ற வேண்டுமா, அல்லது பாப்தாதாவைப் பின்பற்ற வேண்டுமா? தந்தையைப் பின்பற்ற வேண்டும் இல்லையா? ஆக, பிரம்மா பாபா துக்கம் கொடுத்தாரா, சுகம் கொடுத்தாரா? சுகம் கொடுத்தார் தானே. அப்போது மாஸ்டர் பிரம்மா, அதாவது பிராமண ஆத்மாக்கள் என்ன செய்ய வேண்டும்? யாராவது துக்கம் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? துக்கம் கொடுப்பீர்களா? கொடுக்க மாட்டீர்களா? அதிகமாக நிந்தனை செய்கிறார்கள், அவதூறு செய்கிறார்கள் என்றால், கொஞ்சமாவது ஃபீல் பண்ணுவீர்களா இல்லையா? குமாரிகள் ஃபீல் பண்ணுவீர்களா? ஆக, தந்தையைப் பின்பற்றுங்கள். எனது கடமை என்ன என்பதை யோசியுங்கள். அவரது கடமையைப் பார்த்து விட்டு, தனது கடமையை மறவாதீர்கள். அவர் நிந்தனை செய்து கொண்டிருக்கிறார், நீங்கள் பொறுமையின் தேவியாக, பொறுமையின் தேவனாக ஆகி விடுங்கள். உங்கள் பொறுமையால் உங்களுக்கு நிந்தனை செய்பவர்களும் உங்களைத் தழுவிக் கொள்வார்கள். பொறுமையில் அவ்வளவு சக்தி உள்ளது. ஆனால் கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்க வேண்டி உள்ளது. ஆக, பொறுமையின் தேவன் அல்லது தேவி இல்லையா நீங்கள்? அப்படித் தானே? சதா இதே நினைவு வையுங்கள் -- நான் பொறுமையின் தேவதை, நான் பொறுமையின் தேவி. ஆக, தேவதா என்றால் கொடுப்பவர், வள்ளல். யாராவது நிந்தனை செய்கிறார்கள், மதிப்பளிப்பதில்லை என்றால், அது குப்பையா அல்லது நல்ல பொருளா? அதை நீங்கள் ஏன் பெறுகிறீர்கள்? யாராவது உங்களுக்குக் குப்பையைக் கொடுத்தால், நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா? கொஞ்சம்-கொஞ்சமாக பெற்றுக் கொள்கிறீர்கள், பின்னால் யோசிக்கிறீர்கள் -- இதைப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடாது. எனவே இப்போது அது போல் பெறக்கூடாது. பெறுவது என்றால் மனதில் தாரணை செய்வது, ஃபீல் பண்ணுவது. ஆக, தனது அநாதி காலம், ஆதி காலம், மத்திய காலம், சங்கம காலம், முழுக் கல்பத்தின் தூய்மையின் ராயல்டி, பர்சனாலிட்டியை நினைவு செய்யுங்கள். ஒருவர் என்ன தான் செய்தாலும் உங்கள் பர்சனாலிட்டியை யாரும் அபகரிக்க முடியாது. இந்த ஆன்மிக நஷா உள்ளது இல்லையா? மேலும் இரட்டை வெளிநாட்டினருக்கோ இரட்டை நஷா உள்ளது இல்லையா? இரட்டை நஷா உள்ளது தானே? அனைத்து விஷயங்களிலும் இரட்டை நஷா. தூய்மைக்காகவும் இரட்டை நஷா. பொறுமையின் தேவி-தேவதை ஆவதிலும் இரட்டை நஷா. இரட்டை நஷா உள்ளது இல்லையா? அந்த நஷா நிரந்தரமாக இருக்க வேண்டும். அமர்பவ என்ற வரதானத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது.

நல்லது -- யார் இல்லறத்தில் உள்ளவர்களோ, அதாவது யுகலாக இருந்து, சிங்கிளாக (தனியாக) இருக்கிறார்களோ, சொல்லளவில் (பெயருக்கு) யுகலாக உள்ளனரோ, அவர்கள் எழுந்திருங்கள். எழுந்து நில்லுங்கள். யுகல்கள் அதிகமாக உள்ளனர். குமார்-குமாரிகளோ கொஞ்சமாக உள்ளனர். குமாரிகளை விட யுகல்கள் அதிகமாக உள்ளனர். ஆக, யுகல் மூர்த்தி பாப்தாதா உங்கள் அனைவர்க்கும் வழிகாட்டுதல் ஏன் கொடுத்திருக்கிறார்? உங்களுக்கு யுகலாக இருப்பதற்கான அனுமதி ஏன் கொடுத்துள்ளார்? இல்லறத்தில் இருப்பதற்கான அனுமதி ஏன் கொடுத்துள்ளார்? தெரியுமா? ஏனென்றால் யுகல் ரூபத்தில் இருந்து கொண்டு இந்த மகா மண்டலேஷ்வரர்களை உங்கள் காலில் விழச் செய்ய வேண்டும். அவ்வளவு தைரியம் உள்ளதா? அவர்கள் சொல்கிறார்கள் -- உடன் இருந்து கொண்டு பவித்திரமாக இருப்பது கஷ்டம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கஷ்டமா சுலபமா? (மிகவும் சுலபம்) பக்காவா? அல்லது சில நேரம் ஈஸி, சில நேரம் லேஸியா? எனவே பாப்தாதா டிராமாவின் படி உலகத்தின் முன்னால் உதாரணமாக ஆக்கியிருக்கிறார் -- சவால் விடுவதற்காக. ஆக, இல்லறத்தில் இருந்தாலும் துறவு நிலையில் இருக்க முடியுமா? ஆக, சவால் விடுபவர்கள் இல்லையா? நீங்கள் அனைவரும் சவால் விடுபவர்கள். கொஞ்சம்-கொஞ்சம் பயப்படுபவராக இல்லை தானே? சவால் விடுகிறீர்கள், ஆனால் என்னவாகும் என்று தெரியவில்லை. எனவே உலகத்திற்கு சவால் விடுங்கள். ஏனென்றால் இது புது விசயம் -- கூடவே இருந்தாலும் கனவில் கூட அபவித்திரதாவின் சங்கல்பம் வரக்கூடாது. இது தான் சங்கமயுக பிராமண வாழ்க்கையின் விசேஷதா ஆகும். ஆக, அந்த மாதிரி உலக ஷோ கேஸில் நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள். சேம்பிள் என்று சொல்லுங்கள் அல்லது எக்சாம்பிள் என்று சொல்லுங்கள். உங்களைப் பார்த்து அனைவர்க்கும் சக்தி வருகிறது -- நாமும் ஆக முடியும். சரி தான் இல்லையா? சக்திகள், சரி தானே? பக்காவாக இருக்கிறீர்கள் இல்லையா? கச்சா பக்காவாக (அரைகுறைப் பழமாக) இல்லையே? பக்கா. பாப்தாதாவும் உங்களைப் பார்த்துக் குஷி அடைகிறார். வாழ்த்துக்கள்! பாருங்கள், எவ்வளவு பேர்! மிக நன்று.

மீதி இருப்பவர்கள் டீச்சர்கள். டீச்சர் இல்லாமலோ கதி இல்லை. டீச்சர்கள் எழுந்திருங்கள். நல்லது, பாண்டவர்களும் நல்ல-நல்லவர்களாக உள்ளனர். ஆஹா! டீச்சர்களின் விசேஷதா -- ஒவ்வொரு டீச்சரின் தோற்றத்தின் மூலம் வருங்காலம் காணப்பட வேண்டும். அல்லது ஒவ்வொரு டீச்சரின் தோற்றத்தின் மூலமாகவும் ஃபரிஸ்தா சொரூபம் காணப்பட வேண்டும். நீங்கள் அப்படிப்பட்ட டீச்சர்கள் தாம் இல்லையா? ஃபரிஸ்தாக்களாகிய உங்களைப் பார்த்து மற்றவர்களும் ஃபரிஸ்தா ஆகிவிட வேண்டும். பாருங்கள் எத்தனை டீச்சர்கள்! வெளிநாட்டு குரூப்பில் டீச்சர்கள் அதிகம் உள்ளனர். இப்போதோ கொஞ்சம் பேர் வந்திருக்கிறார்கள். யார் வரவில்லையோ, அவர்களையும் பாப்தாதா நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார். நல்லது, இப்போது டீச்சர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பிளான் உருவாக்குங்கள் -- தங்களின் நடத்தை மற்றும் முகத்தின் மூலம் பாபாவை எப்படிப் பிரத்தியட்சம் செய்வது? உலகத்தினர் சொல் கிறார்கள் -- பரமாத்மா சர்வவியாபி என்று. நீங்கள் சொல்கிறீர்கள் -- அப்படி இல்லை. ஆனால் பாப்தாதா சொல்கிறார் -- இப்போது சமயத்தின் படி ஒவ்வொரு டீச்சரிடமும் தந்தை பிரத்தியட் சமாகக் காணப்பட வேண்டும். அப்போது சர்வவியாபியாகக் காணப்படுவார் இல்லையா? யாரைப் பார்க்கிறார்களோ, அவரிடம் பாபா மட்டுமே தென்பட வேண்டும்.. ஆத்மா, பரமாத்மாவுக்கு முன்னால் மறைந்து விட வேண்டும். இது நடக்க முடியுமா? தேதியோ தீர்மானிக்கப்பட்டு விட வேண்டும் இல்லையா? ஆக, இதற்கான தேதி எது? எவ்வளவு காலம் வேண்டும்? (இப்போதிருந்து செய்கிறோம்) நல்ல தைரியம். எவ்வளவு சமயம் வேண்டும்? 2002-ஆம் ஆண்டோ போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இரண்டாயிரம் எது வரை? ஆகவே டீச்சர்கள் இநத கவனம் தான் வைக்க வேண்டும் -- இப்போது நான் பாபாவுக்குள் நிறைந்து காணப்பட வேண்டும். என் மூலமாக பாபா காணப்பட வேண்டும். பிளான் உருவாக்குவீர்கள் இல்லையா? இரட்டை வெளிநாட்டினர் மீட்டிங் நடத்துவதிலோ சாமர்த்தியசாலிகள். இப்போதே இந்த மீட்டிங் நடத்த வேண்டும். இந்த மீட்டிங் நடத்தாமல் போகக் கூடாது. எப்படி நம் ஒவ்வொருவர் மூலமாகவும் பாபா தென்பட வைப்பது? இப்போது பிரம்மாகுமாரிகள் காணப்படு கிறார்கள். பிரம்மாகுமாரிகள் மிக நல்லவர்கள். ஆனால் இவர்களின் பாபா எவ்வளவு நல்லவர் -- அதை அவர்கள் பார்க்க வேண்டும். அப்போது தான் உலக மாற்றம் நிகழும் இல்லையா? ஆக, இரட்டை வெளிநாட்டினர் இந்தப் பிளானை நடைமுறையில் தொடங்கி வைப்பார்களா மாட்டார்களா? செய்வீர்களா? பக்கா? நல்லது. உங்கள் தாதி இருக்கிறார் இல்லையா, அவரது ஆசை நிறைவேறி விடும். சரி தானே? நல்லது.

பாருங்கள், இரட்டை வெளிநாட்டினர் எவ்வளவு சேவாதாரிகளாக இருக்கிறீர்கள்! உங்களால் அனைவர்க்கும் யாத் ப்யார் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பாப்தாதாவுக்கும் கூட இரட்டை வெளிநாட்டினரிடம் அதிகம் அன்பு என்று சொல்ல மாட்டோம், ஆனால் ஸ்பெஷல் அன்பு உள்ளது. ஏன் அன்பு? ஏனென்றால் இரட்டை வெளிநாட்டு ஆத்மாக்கள், சேவைக்கு நிமித்தமாக ஆகி இருக்கிறார்கள். அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பாபாவின் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கான நிமித்தமாகி இருக்கிறார்கள். இல்லையென்றால் வெளிநாட்டு ஆத்மாக்கள் நாலாபுறமும் தாகத்தில் இருந்து விடுவார்கள். இப்போது பாபாவுக்குப் புகாரோ வராது இல்லையா? -- அதாவது பாரதத்தில் வந்தார், வெளிநாடுகளுக்கு ஏன் செய்தி சொல்ல வில்லை? ஆக, பாபாவின் புகாரை நிறைவேற்றுவதில் நிமித்தமாகி இருக்கிறீர்கள். மேலும் ஜானகி தாதிக்கோ ஊக்கம் அதிகம் உள்ளது -- எந்த ஒரு தேசமும் விடுபட்டுவிடக் கூடாது. நன்று. பாபாவின் புகாரையோ நிறைவேற்றுவீர்கள் இல்லையா? ஆனால் நீங்கள் (தாதி ஜானகி) துணையில் இருப்பவர்களை அதிகம் களைப்படையச் செய்கிறீர்கள். களைப்படையச் செய்கிறீர்கள் இல்லையா? ஜெயந்தி, களைப்படையச் செய்வதில்லையா? ஆனால் இந்தக் களைப் பிலும் கூட மகிழ்ச்சி அடங்கியுள்ளது. முதலில் தோன்றுகிறது -- இதென்ன அடிக்கடி என்று. ஆனால் சொற்பொழிவு செய்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள் இல்லையா, அப்போது முகம் மாறி விடுகிறது. நல்லது, இரண்டு தாதிகளுக்கும் ஊக்கம்-உற்சாகத்தை அதகரிப்பதற்கான விசேஷதா உள்ளது. இவர் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது. சேவை இன்னும் செய்ய வேண்டியது மிச்சம் உள்ளது இல்லையா? மேப்பை எடுத்துப் பார்ப்பீர்களானால், பாரதத்தில் அல்லது வெளிநாடுகளில், மேப்பில் (வரைபடம்) ஒவ்வோரிடத்தையும் டிக் செய்து கொண்டே செல்வீர்களானால் காணப்படும் -- இப்போதும் (சேவை செய்யப்படாத) மீதி இடங்கள் உள்ளன. அதனால் பாப்தாதா குஷியடையவும் செய்கிறார் மற்றும் சொல்லவும் செய்கிறார் -- அதிகம் களைத்துப்போக வைக்காதீர்கள். நீங்கள் அனைவரும் சேவையில் குஷியாக இருக்கிறீர்கள் இல்லையா? இப்போது இந்தக் குமாரிகளும் கூட டீச்சர் ஆவார்கள் இல்லையா? யார் டீச்சராக இருக்கிறார்களோ, அவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் யார் டீச்சராக இல்லையோ, அவர்கள் டீச்சராகி ஏதாவதொரு சென்டரைப் பராமரிப்பார்கள் இல்லையா? கைகள் (புதிதாக) உருவாகும் இல்லையா? இரட்டை வெளிநாட்டினராகிய குழந்தைகளுக்கு இரண்டு வேலைகளும் செய்வதற்கான பயிற்சி உள்ளது இல்லையா? பணியும் செய்கிறார்கள், சென்டரையும் பராமரிக்கிறார்கள். எனவே பாப்தாதா இரட்டை வாழ்த்து சொல்கிறார். நல்லது.

நாலாபுறமும் உள்ள மிகவும் சிநேகி, மிக சமீபமான, சதா ஆதிகாலத்திலிருந்து இது வரை ராயல்டியின் அதிகாரி, சதா தங்கள் முகம் மற்றும் நடத்தை மூலம் தூய்மையின் ஜொலிப்பைக் காண்பிக்கக் கூடியவர்கள், சதா தன்னை சேவை மற்றும் நினைவில் தீவிர புருஷார்த்தத்தின் மூலம் நம்பர் ஒன் ஆக்கக்கூடியவர்கள், சதா பாபாவுக்கு சமமாக சர்வசக்தி, சர்வகுண சம்பன்ன சொரூபத்தில் இருப்பவர்கள், அத்தகைய அனைத்துத் தரப்பின் ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வெளிநாட்டு முக்கிய டீச்சர் சகோதரிகளுடன் -- அனைவரும் சேவைக்கான பிளான் நல்ல-நல்லதாக உருவாக்கியிருக்கிறீர்கள் இல்லையா? ஏனென்றால் சேவை முடிவடைய வேண்டும், அப்போது உங்கள் இராஜ்யம் வரும். ஆக, சேவைக்கான சாதனங்களும் அவசியம். ஆனால் மனமாகவும் இருக்கலாம், சொல்லாகவும் இருக்கலாம், சேர்ந்தே இருக்க வேண்டும். சேவை மற்றும் சுய முன்னேற்றம் இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும். அத்தகைய சேவை வெற்றியை அருகில் கொண்டு வரும். ஆக, சேவைக்கு நிமித்தமாகவோ இருக்கிறீர்கள். அனைவரும் அவரவர் இருப்பிடத்தில் நன்றாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது என்ன வேலை கொடுக்கப் பட்டுள்ளதோ, அதற்கான பிளானை உருவாக்குங்கள். அதற்காக என்னென்ன தனக்குள்ளும் சேவையில் விருத்தியும் வேண்டுமோ, கூடுதலாக என்ன வேண்டுமோ, அந்தப் பிளானை உருவாக்குங்கள். மற்றப்படி பாப்தாதா சேவாதாரிகளைப் பார்த்துக் குஷியடையவோ செய்கிறார். சேவாகேந்திரங்கள் அனைத்தும் நல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டிருக் கின்றன இல்லையா? முன்னேற்றம் உள்ளது இல்லையா? நல்லது. நன்றாக நடந்து கொண்டிருக் கிறது இல்லையா? நடந்து கொண்டிருக்கிறது மற்றும் நடந்து கொண்டே இருக்கும். இப்போது தனித்தனியாக யார் சிதறிப்போய் இருக்கிறார்களோ, அவர்களை ஒன்று சேர்த்து அவர்களைப் பக்கா ஆக்குங்கள். நடைமுறை நிரூபணத்தை அனைவர்க்கு முன்பாகவும் காட்டுங்கள். எந்த ஒரு சேவை செய்து கொண்டிருந்தாலும், வெவ்வேறு பிளான்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், நன்றாகச் சென்று கொண்டும் இருக்கிறீர்கள், இப்போது அந்த அனைவரின் குரூப்புகளையும் ஒன்று சேர்த்து முன்னால் கொண்டு வாருங்கள். சேவையின் நிரூபணம் முழு பிராமணப் பரிவாரத்தின் முன்பு வந்துவிட வேண்டும். சரி தானே? மற்றப்படி அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள். நல்லதிலும் நன்றாகவே இருக்கிறீர்கள். நல்லது .ஓம் சாந்தி.

வரதானம்:
மூன்று நினைவுகளின் திலகம் மூலம் சிரேஷ்ட ஸ்திதியை அமைத்துக் கொள்ளக் கூடிய ஆடாத-அசையாதவர் ஆகுக.

பாப்தாதா குழந்தைகள் அனைவர்க்கும் மூன்று நினைவின் திலகத்தை கொடுத்துள்ளார். ஒன்று சுயத்தின் நினைவு, பிறகு தந்தையின் நினைவு மற்றும் சிரேஷ்ட கர்மத்திற்காக டிராமாவின் நினைவு. யாருக்கு இந்த மூன்று நினைவுகளும் சதா இருக்கின்றனவோ, அவர்களின் ஸ்திதியும் சிரேஷ்டமானதாக இருக்கும். ஆத்மாவின் நினைவோடு கூடவே பாபாவின் நினைவு மற்றும் பாபாவோடு டிராமாவின் நினைவு மிகவும் அவசியம். ஏனென்றால் கர்மத்தில் டிராமாவின் ஞானம் இருக்குமானால் மேலே-கீழே ஆகாது. என்னென்ன பரிஸ்திதிகள் வருகின்றனவோ. அவற்றில் ஆடாத-அசையாதவராக இருப்பார்கள்.

சுலோகன்:
திருஷ்டியை அலௌகிகமானதாக, மனதைக் குளிர்ந்ததாக மற்றும் புத்தியை இரக்க மனமுள்ளதாக ஆக்குங்கள்.