03-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நினைவு
யாத்திரையில் கவனக்குறைவாக (சோம்பலாக) இருக்காதீர்கள். நினைவின்
மூலம் தான் ஆத்மா தூய்மையாகும். அனைத்து ஆத்மாக்களுக்கும் சேவை
செய்து அவர்களை சுத்தமாக்குவதற்காக பாபா வந்திருக்கிறார்.
கேள்வி:
எந்த ஒரு நினைவு உள்ளவராக
இருந்தோமானால் உணவு-பானம் சுத்தமாகி விடும்?
பதில்:
உண்மையான கண்டத்திற்குச்
செல்வதற்காக அல்லது மனிதரில் இருந்து தேவதை ஆவதற்காக நாம்
பாபாவிடம் வந்துள்ளோம் என்ற நினைவு இருக்குமானால் உணவு-பானம்
சுத்தமாகி விடும். ஏனென்றால் தேவதைகள் ஒருபோதும் அசுத்தமான
பொருளை உண்ண மாட்டார் கள். எப்போது நீங்கள் உண்மையான கண்டம்,
தூய்மையான உலகிற்கு அதிபதி ஆவதற்காக சத்திய மான பாபாவிடம்
வந்திருக்கிறீர்களோ, அப்போது பதீத் (அசுத்தமாக) ஆக முடியாது.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் கேட்கிறார் - குழந்தைகளே,
நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் போது யாரை நினைவு செய்கிறீர்கள்?
எங்களுடைய எல்லையற்ற தந்தையை. அவர் எங்கே இருக்கிறார்? அவர்
அழைக்கப்படுகிறார் அல்லவா-ஹே பதீத பாவனா என்று? இப்போது
சந்நியாசிகளும் கூட பதீத பாவன சீதாராம், அதாவது பதீதர்களைப்
பாவனமாக்கும் இராமரே வாருங் கள் என்று சொல்லிக் கொண்டே உள்ளனர்.
இதையோ தூய உலகம் என்று சத்யுகமும், தூய்மை இல்லாத உலகமென்று
கலியுகமும் சொல்லப் படுகிறது என்று குழந்தைகள் புரிந்து
கொண்டுள்ளனர். இப்போது நீங்கள் எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்?
கலியுகத்தின் கடைசியில். அதனால் பாபா, வந்து எங்களை
தூய்மையாக்குங்கள் என்று அழைக்கின்றனர். நாம் யார்? ஆத்மா.
ஆத்மா தான் தூய்மை ஆக வேண்டும். ஆத்மா தூய்மை அடைகிறது என்றால்
சரீரமும் தூய்மையானதாகக் கிடைக்கும். ஆத்மா தூய்மை இழப்பதால்
சரீரமும் தூய்மையற்றதாகக் கிடைக்கின்றது. இந்த சரீரமோ மண்ணாலான
பொம்மை. ஆத்மாவோ அழியாதது. ஆத்மா இந்த உறுப்புகள் மூலம்
சொல்கிறது, அழைக்கிறது - நான் மிகவும் தூய்மை
இழந்துவிட்டுள்ளேன், என்னை வந்து தூய்மையாக்குங்கள். பாபா
தூய்மையாக்குகிறார். 5 விகாரங்கள் என்ற இராவணன் தூய்மை இழக்க
வைக்கிறான். பாபா இப்போது நினைவுப் படுத்துகிறார் - நாம்
தூய்மையாக இருந்தோம். பிறகு 84 பிறவிகள் எடுத்து-எடுத்து
இப்போது கடைசிப் பிறவியில் இதுபோல இருக்கிறோம். நான் இந்த மனித
சிருஷ்டி ரூப மரத்தின் விதை வடிவமாக உள்ளேன் என்று பாபா
சொல்கிறார். ஹே பரமபிதா பரமாத்மா, ஓ காட் ஃபாதர், எங்களைத்
துன்பத்திலிருந்து விடுவியுங்கள் என்று என்னை அழைக்கின்றனர்.
ஒவ்வொரு வரும் தனக்காகச் சொல்கின்றனர்-என்னை விடுவியுங்கள்,
மேலும் வழிகாட்டி ஆகி சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
சந்நியாசி முதலானவர்களும் கேட்கின்றனர் - நிலையான அமைதி எப்படி
கிடைக்கும்? இப்போது சாந்திதாமமோ வீடாகும். அங்கிருந்து தான்
ஆத்மாக்கள் தங்கள் பாகத்தை நடிப்பதற்காக இங்கே வருகின்றனர்.
அங்கே ஆத்மாக்கள் மட்டுமே உண்டு. சரீரம் கிடையாது. ஆத்மாக்கள்
ஆடையின்றி, அதாவது சரீரமின்றி அங்கே உள்ளனர். நிர்வாணம் என்றால்
ஆடை அணியாமல் இருப்பது என்று பொருளல்ல. சரீரமின்றி ஆத்மாக்கள்
அசரீரியாக உள்ளனர் என்பதாகும். பாபா சொல்கிறார் - குழந்தைகளே,
ஆத்மாக்கள் நீங்கள் அங்கே மூலவதனத்தில் சரீரமின்றி
இருக்கிறீர்கள். அது நிராகாரி உலகம் எனச் சொல்லப்படுகின்றது.
குழந்தைகளுக்கு எப்படி நாம் ஏணிப்படியில் கீழே இறங்கியே
வந்துள்ளோம் என்பதை பற்றிப் புரிய வைக்கப்பட்டுள்ளது -.
அதிகபட்சமாக முழு 84 பிறவிகளை எடுக்கிறோம். பிறகு சிலர் ஒரு
பிறவியும் கூட எடுக்கின்றனர். ஆத்மாக்கள் மேலிருந்து வந்து
கொண்டே இருக்கின்றனர். இப்போது பாபா சொல்கிறார்,
தூய்மையாக்குவதற்காக நான் வந்துள்ளேன். சிவபாபா பிரம்மா மூலம்
உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். சிவபாபா,
ஆத்மாக்களின் தந்தை. பிரம்மாவை ஆதி தேவன் என்கிறார்கள். இந்த
தாதாவுக்குள் (மூத்த சகோதரர்) பாபா எப்படி வருகிறார் என்பதைக்
குழந்தை களாகிய நீங்கள் தான் அறிவீர்கள். என்னை - ஹே பதீத பாவனா
வாருங்கள் என்று அழைக்கவும் செய்கின்றனர். ஆத்மாக்கள் இந்த
சரீரத்தின் மூலம் அழைத் துள்ளனர். முக்கியமானது ஆத்மா இல்லையா?
இதுவே துக்கதாமம். இங்கே கலியுகத்தில் பாருங்கள் உயிரோடு வாழும்
போதே திடீரென்று மரணம் ஏற்படுகிறது. அங்கே இப்படி நோய் என்பதே
இருக்காது. பெயரே சொர்க்கம்! எவ்வளவு நல்ல பெயர்! சொன்னாலே மனம்
குஷியடைந்து விடுகின்றது. கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு
முன்பு சொர்க்கம் (பேரடைஸ்) இருந்தது என்று கிறிஸ்தவர்களும்
சொல்கின்றனர். இங்கே பாரதவாசிகளுக்கோ எதுவுமே தெரியாது.
ஏனென்றால் அவர்கள் அதிகமான சுகத்தைப் பார்த்துள்ளனர் என்று
சொன்னால் துக்கமும் அதிகமாகப் பார்த்துக் கொண்டுள்ளனர். தமோபிர
தானமாக ஆகியுள்ளனர். 84 பிறவிகளும் இவர்களுக்குத் தான்.
அரைக்கல்பத்திற்குப் பிறகு வேறு தர்மத்தினர் வருகின்றனர்.
இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், அரைக்கல்பமாக
தேவி-தேவதைகள் இருந்தனர் என்றால் வேறு எந்த ஒரு தர்மமும்
இல்லாதிருந்தது. பிறகு திரேதாவில் எப்போது இராமர் இருந்தாரோ,
அப்போதும் இஸ்லாமியர், பௌத்தர் கிடையாது. மனிதர்களோ, முற்றிலும்
காரிருளில் உள்ளனர். உலகத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான வருடங்கள்
எனச் சொல்லி விடுகின்றனர். அதனால் மனிதர்கள் கலியுகம் இன்னும்
சிறிய குழந்தை என்று குழப்பமடை கின்றனர். இப்போது நீங்கள்
புரிந்து கொண்டீர்கள், கலியுகம் முடிவடைந்து இப்போது சத்யுகம்
வரும். அதனால் பாபாவிடம் சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவதற்காக
நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சொர்க்கவாசியாக
இருந்தீர்கள். பாபா வருவதே சொர்க்கத்தைப் படைப்பதற்காகத் தான்.
நீஙகள் தான் சொர்க்கத்தில் வருகிறீர்கள். மற்ற அனைவரும்
சாந்திதாமம் என்ற வீட்டுக்குச் சென்று விடுவார்கள். அது
இனிமையான வீடு. ஆத்மாக்கள் அங்கே வசிக்கின்றனர். பிறகு இங்கே
வந்து பாகத்தை நடிப்பவராகின்றனர். சரீரம் இல்லாமல் ஆத்மாவினால்
பேசக்கூட முடியாது. அங்கே சரீரம் இல்லாத காரணத்தால் ஆத்மாக்கள்
சாந்தியில் உள்ளன. பிறகு அரைக்கல்பம் தேவி-தேவதை கள்,
சூரியவம்சி, சந்திரவம்சி. பிறகு துவாபர-கலியுகத்தில் மனிதர்கள்
உள்ளனர். தேவதைகளுக்கு இராஜ்யம் இருந்தது. பிறகு இப்போது
அவர்கள் எங்கே சென்றனர்? யாருக்கும் தெரியாது. இந்த ஞானம்
இப்போது உங்களுக்கு பாபாவிடமிருந்து கிடைக்கின்றது. வேறு எந்த
மனிதரிடமும் இந்த ஞானம் கிடையாது. பாபா தான் வந்து
மனிதர்களுக்கு இந்த ஞானத்தைத் தருகிறார். அதன் மூலம் தான்
மனிதரில் இருந்து தேவதை ஆகின்றனர். நீங்கள் இங்கே வந்திருப்பதே
மனிதரில் இருந்து தேவதை ஆவதற்காக. தேவதைகளின் உணவு-பானம்
அசுத்தமாக இருப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் பீடி முதலியவற்றைப்
பிடிப்பதில்லை. இங்குள்ள அசுத்தமான மனிதர்களைப் பற்றிக் கேட்கவே
வேண்டாம் - என்னென்னவெல்லாம் உண்ணுகிறார்கள்! இப்போது பாபா
புரிய வைக்கிறார், இந்த பாரதம் முதலில் உண்மையான கண்டமாக
இருந்தது. நிச்சயமாக உண்மையான தந்தை தான் ஸ்தாபனை
செய்திருப்பார். தந்தை தான் சத்தியமானவர் எனச் சொல்லப்படுகிறார்.
தந்தை தான் சொல்கிறார், நான் தான் இந்த பாரதத்தை உண்மையான
கண்டமாக மாற்றுகிறேன். நீங்கள் எப்படி உண்மையான தேவதை ஆக
முடியும் என்பதையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எவ்வளவு
குழந்தைகள் இங்கே வருகின்றனர்! அதனால் இந்தக் கட்டிடங்கள்
முதலியவற்றைக் கட்ட வேண்டி யுள்ளது. கடைசி வரையிலும் கூட
உருவாகிக் கொண்டே இருக்கும். அநேகக் கட்டிடங்கள் உருவாகும்.
சிவபாபா பிரம்மா மூலம் காரியத்தைச் செய்விக்கிறார். கட்டிடங்களை
வாங்கவும் செய்கிறார். சிவபாபா பிரம்மா மூலம் காரியம்
செய்கிறார். பிரம்மா கருப்பாகி விட்டுள்ளார். ஏனென்றால் இது
அநேக ஜென்மங்களின் கடைசி ஜென்மம் இல்லையா? இவர் பிறகு
வெள்ளையாக ஆவார். கிருஷ்ணரின் சித்திரமும் வெள்ளையாகவும்
கருப்பாகவும் உள்ளது இல்லையா? மியூசியத் தில் பெரிய-பெரிய நல்ல
சித்திரங்கள் உள்ளன. அவற்றை வைத்து நீங்கள் யாருக்கும் நன்கு
சொல்லிப் புரிய வைக்க முடியும். இங்கே பாபா மியூசியம்
உருவாக்கச் செய்வதில்லை. இது டவர் ஆஃப் சைலன்ஸ் என்று
சொல்லப்படும். நீங்கள் அறிவீர்கள், நாம் சாந்திதாமத்திற்கு,
நம்முடைய வீட்டிற்குச் செல்கிறோம். நாம் அங்கே வசிப்பவர்கள்.
பிறகு இங்கே வந்து சரீரத்தை எடுத்து, பாகத்தை நடிக்கின்றோம்.
குழந்தைகளுக்கு முதல்-முதலில் இந்த நிச்சயம் இருக்க வேண்டும் -
எந்த ஒரு சாது-சந்நியாசியும் நமக்குப் படிப்பு சொல்லித்
தரவில்லை. இந்த தாதாவோ சிந்துவில் வசிப்பவராக இருந்தார். ஆனால்
இவருக்குள் யார் பிரவேசமாகிப் பேசுகிறாரோ, அவர் ஞானக்கடல். அவரை
யாரும் அறிந்திருக்கவே இல்லை. காட்ஃபாதர் என்று சொல்லவும்
செய்கின்றனர். ஆனால் அவருக்குப் பெயர் வடிவம் இல்லை எனச் சொல்லி
விடுகின்றனர். அவர் நிராகார், அவருக்கு எந்த ஓர் உருவமும்
கிடையாது. அதனால் சர்வவியாபி, அனைவருக்குள்ளும் இருக்கிறார்
எனச் சொல்லி விடுகின்றனர். அட, ஒவ்வொருவருக்குள்ளும் ஆத்மா
அமர்ந்துள்ளது. அனைவரும் சகோதர-சகோதரர்கள் இல்லையா? பிறகு எல்லா
இடத்திலும் பரமாத்மா எங்கிருந்து வந்தார்? பரமாத்மாவும்
இருக்கிறார், ஆத்மாவும் இருக்கிறது எனச் சொல்லமாட்டார்கள்.
பரமாத்மாவாகிய தந்தையை அழைக்கின்றனர் - பாபா, வந்து தூய்மை
இல்லாதவர்களாகிய எங்களை தூய்மையாக்குங்கள். இந்தத் தொழில்,
இந்த சேவை செய்வதற்காக என்று என்னை நீங்கள் அழைக்கிறீர்கள்.
எங்கள் அனை வரையும் வந்து சுத்தமாக்குங்கள். தூய்மை இல்லாத
உலகத்தில் எனக்கு அழைப்பு விடுகிறீர்கள். பாபா, நாங்கள் தூய்மை
இல்லாதவர்களாக உள்ளோம் எனச் சொல்கிறீர்கள். பாபாவோ தூய்மையான
உலகத்தைப் பார்ப்பதே இல்லை. தூய்மை இல்லாத உலகத்தில் தான்
உங்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த இராவண
இராஜ்யம் விநாசமாகி விடும். மற்றப்படி இராஜயோகம் கற்றுக்
கொள்ளும் நீங்கள் போய் இராஜாவுக்கெல்லாம் மேலான .இராஜாவாக
ஆகிறீர்கள். உங்களுக்குக் கணக்கற்ற தடவை கற்றுத்
தந்திருக்கிறார். இன்னும் 5000 ஆண்டுகளுக்குப் பிறகும்
உங்களுக்குத் தான் படிப்பு சொல்லித் தருவார். சத்யுக-திரேதாவின்
இராஜதானி இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. முதலில்
பிராமண குலம். பிரஜாபிதா பிரம்மா பாடப்படுகிறார் இல்லையா? அவரை
ஆடம், ஆதி தேவன் எனச் சொல்கின்றனர். இது யாருக்கும் தெரியாது.
அநேகர் இங்கே வந்து கேட்டு விட்டுப் பிறகு மாயாவின் வசமாகி
விடுகின்றனர். புண்ணியாத்மா ஆகி-ஆகியே பாவாத்மா ஆகி
விடுகின்றனர். மாயா மிகவும் சக்தி வாய்ந்தது. அனைவரையும்
பாவாத்மாவாக ஆக்கி விடுகின்றது. இங்கே எந்த ஒரு தூய்மையான
ஆத்மாவோ, புண்ணியாத்மாவோ இல்லை. தூய்மையான ஆத்மாக்களாக
தேவி-தேவதைகள் தான் இருந்தனர். எப்போது அனைவரும் தூய்மை
இல்லாமல் ஆகி விடுகின்றனரோ, அப்போது தந்தையை அழைக்கின்றனர்.
இப்போது இது இராவண இராஜ்யம், அசுத்தமான உலகம். இது முள்
நிறைந்த காடு எனச் சொல்லப்படும். சத்யுகம் மலர்களின் தோட்டம்
எனச் சொல்லப்படும். முகல் கார்டனில் எவ்வளவு முதல் தரமான
நல்ல-நல்ல பூக்கள் உள்ளன! அரளிபூவும் கிடைக்கும். ஆனால் இதன்
அர்த்தத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை. சிவனுக்கு பக்தியில்
அரளிபூவை ஏன் போடுகின்றனர்? இதையும் பாபா அமர்ந்து புரிய
வைக்கிறார். நான் எப்போது படிப்பு சொல்லித் தருகிறேனோ,
அவர்களுக்குள் சிலர் முதல்தரமான மல்லிகை மலர்களாக, சிலர்
சிவப்பு மலர்களாக, சிலர் பிறகு அரளி மலர்களாகவும் உள்ளனர்.
வரிசைக்கிரம மாகவோ உள்ளனர் இல்லையா? ஆக, இது துக்கதாமம், மரண
உலகம் எனச் சொல்லப் படுகின்றது. இவ்விஷயங்கள் எந்த ஒரு
சாஸ்திரத்திலும் கிடையாது. சாஸ்திரங்களையோ, இந்த தாதா (பிரம்மா)
படித்துள்ளார். (சிவ) பாபாவோ சாஸ்திரங்களைப் படிப்பதில்லை.
பாபாவோ தாமே சத்கதி அளிப்பவர். சில நேரங்களில் கீதையை மேற்கோள்
காட்டுவார். சர்வசாஸ்திரங்களின் சிரோன்மணி கீதை பகவான் பாடியது.
ஆனால் பகவான் எனச் சொல்லப்படுபவர் யார்? இது பாரதவாசிகளுக்குத்
தெரியாது. பாபா சொல்கிறார், நான் பலனை எதிர்பார்க்காமல் (சுயநலமற்ற)
சேவை செய்கிறேன். உங்களை உலகின் எஜமானர் ஆக்குகிறேன்.
சொர்க்கத்தில் நீங்கள் என்னை நினைப்பதில்லை. துக்கத்தில்
அனைவருமே நினைவு செய்வார்கள். சுகத்தில் இருக்கும் போது யாருமே
நினைப் பதில்லை. இது சுகம்-துக்கத்தின் விளையாட்டு எனச்
சொல்லப்படுகின்றது. சொர்க்கத்தில் வேறு எந்த ஒரு தர்மமும்
இருக்காது. அவை அனைத்தும் பின்னால் வருகின்றன. நீங்கள்
அறிவீர்கள், இப்போது இந்தப் பழைய உலகம் விநாசமாகி விடும்.
இயற்கை சேதங்கள், புயல்கள் தீவிரமாக வரும். அனைவரும் அழிந்து
போவார்கள்.
ஆக, பாபா இப்போது வந்து புத்தியற்ற நிலையில் உள்ளவர்களை
புத்திசாலியாக ஆக்குகிறார். பாபா எவ்வளவு செல்வம், பொருட்கள்
கொடுத்திருந்தார்! அனைத்தும் எங்கே சென்றன? இப்போது எவ்வளவு
திவாலாகியிருக்கிறீர்கள்! தங்கக் குருவியாக இருந்த பாரதம்
இப்போது என்னவாக ஆகியிருக்கிறது? இப்போது மீண்டும் பதீதபாவனர்
பாபா வந்துள்ளார், இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். அது
ஹடயோகம். இது இராஜயோகம். இந்த இராஜயோகம் இருவருக்குமானது. அந்த
ஹடயோகம் ஆண்கள் மட்டுமே கற்றுக் கொள்கின்றனர். இப்போது பாபா
சொல்கிறார், புருஷார்த்தம் செய்யுங்கள், உலகத்தின் எஜமானர்
ஆகிக் காட்டுங்கள். இப்போது இந்தப் பழைய உலகத்தின் விநாசமோ
நடைபெறத் தான் போகிறது. இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது. இந்த
யுத்தம் கடைசி யுத்தம். இந்த யுத்தம் தொடங்கி விட்டால் நிற்காது.
எப்போது நீங்கள் கர்மாதீத் அவஸ்தா அடைகிறீர்களோ,
சொர்க்கத்திற்குச் செல்லத் தகுதியுள்ளவர்களாக ஆகிறீர்களோ,
அப்போது தான் இந்த யுத்தமானது ஆரம்பமாகும். பாபா பிறகும்
சொல்கிறார், நினைவு யாத்திரையில் கவனக் குறைவாக இருக்காதீர்கள்.
இதில் தான் மாயா தடைகளை ஏற்படுத்துகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபாவிடம் நல்ல விதமாகப் படித்து முதல்தரமான மலராக ஆக
வேண்டும். முள் நிறைந்த இந்த காட்டை மலர்களின் தோட்டமாக
ஆக்குவதில் பாபாவுக்கு முழு உதவி செய்ய வேண்டும்.
2) கர்மாதீத் நிலையை அடைவதற்கு மற்றும் சொர்க்கத்தில் உயர்ந்த
பதவிக்கான அதிகாரம் பெறுவதற்கு நினைவு யாத்திரையில்
ஈடுபட்டிருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது.
வரதானம்:
தனது நெற்றியில் எப்பொழுதும் தந்தையின் ஆசிகளின் கரங்களை
அனுபவம் செய்யக்கூடிய மாஸ்டர் விக்ன விநாசகர் ஆவீர்களாக.
விநாயகருக்கு விக்ன விநாசகர் என்று கூறுகிறார்கள். யாரிடம்
சர்வ சக்திகள் உள்ளனவோ அவர்களே விக்ன விநாசகர் ஆகிறார்கள்.
சர்வ சக்திகளை காலத்திற்கேற்ப காரியத்தில் ஈடுபடுத் தினீர்கள்
என்றால் தடைகள் நிலைத்திருக்க முடியாது. எவ்வளவு ரூபங்களில்
மாயை வந்தாலும் கூட நீங்கள் நாலேஜ்ஃபுல் ஆகுங்கள். ஞானம்
நிறைந்த ஆத்மா ஒருபொழுதும் மாயையிடம் தோற்று போக முடியாது.
நெற்றியின் மீது பாப்தாதாவின் ஆசிகளின் கரங்கள் இருந்தது
என்றால் வெற்றி திலகம் இடப்பட்டே இருக்கும். பரமாத்மாவின்
கரங்கள் மற்றும் பரமாத்மாவின் துணை (ஹாத் அவுர் ஸாத்) விக்ன
விநாசகராக ஆக்கி விடுகிறது.
சுலோகன்:
சுயம் தங்களுக்குள் குணங்களை தாரணை செய்து மற்றவர்களுக்கு தானம்
செய்பவர்களே குணங்களின் மூர்த்தி ஆவார்கள்.