04-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நீங்கள் அசரீரி ஆகி தந்தையை நினைவு செய்யும் பொழுது உங்களை பொருத்தவரை இந்த உலகமே முடிந்து போய்விடுகிறது. தேகம் மற்றும் உலகம் மறக்கப்பட்டு இருக்கும்.

கேள்வி:
தந்தை மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் ஞானத்தின் மூன்றாவது கண் ஏன் கிடைத்துள்ளது?

பதில்:
தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தை யாராக இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்று புரிந்து அதே ரூபத்தில் நினைவு செய்வதற்காக மூன்றாவது கண் கிடைத்துள்ளது. ஆனால் முழுமையாக (யோகயுக்த்) யோகத்துடன் கூடிய நிலையில் இருக்கும் பொழுது, அதாவது ஒரு தந்தையிடம் உண்மையான அன்பு இருக்கும் பொழுது தான் இந்த மூன்றாவது கண் வேலை செய்யும். யாருடைய பெயர் ரூபத்திலும் சிக்காமல் இருக்க வேண்டும். மாயை (பாபாவிடம்) அன்பு செலுத்துவதில் தான் தடையை ஏற்படுத்துகிறது. இதில் தான் குழந்தைகள் ஏமாந்து போகிறார்கள்.

பாடல்:
இறந்தாலும் உன்னிடமே.. .. ..

ஓம் சாந்தி.
பிராமண குழந்தைகளாகிய உங்களைத் தவிர இந்த பாடலின் பொருளை யாரும் புரிந்து கொள்ள முடியாது. வேத சாஸ்திரங்கள் முத-யவைகளை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் என்னவெல்லாம் படிக்கிறார்களோ அதனுடைய பொருளைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். எனவே நான் பிரம்மாவின் வாய் மூலமாக அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். அதே போல இந்த பாடல்களின் பொருள் கூட யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. தந்தை தான் இவற்றின் பொருளைக் கூறுகிறார். ஆத்மா எப்பொழுது சரீரத்திலிருந்து விலகியதாக ஆகி விடுகிறதோ அப்பொழுது உலகத்திலிருந்து அனைத்து சம்பந்தங் களும் அறுபட்டு விடுகின்றன. தன்னை ஆத்மா என்று உணர்ந்து அசரீரி ஆகி தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் இந்த உலகமே முடிந்து போய் விடுகிறது என்று இந்தப் பாடலும் கூறுகிறது. இந்த சரீரம் இந்த பூமியில் உள்ளது. ஆத்மா இதிலிருந்து வெளியேறி விட்டால் பின் அந்த சமயத்தில் ஆத்மாவைப் பொருத்தவரை இந்த சிருஷ்டியே (படைப்பு) இல்லை. ஆத்மா சரீரம் என்ற ஆடையற்றதாக ஆகி விடுகிறது. பிறகு சரீரத்தில் வரும் பொழுது (பார்ட்) நடிப்பு ஆரம்பமாகிறது. பிறகு ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றில் போய் பிரவேசம் செய்கிறது. மீண்டும் மகதத்துவத்தில் (ஆத்ம லோகம்) செல்ல வேண்டி இருப்பதில்லை. பறந்து மற்றொரு உடலுக்குள் செல்கிறது. இங்கு இந்த ஆகாய தத்துவத்தில் தான் ஆத்மா பாகத்தை ஏற்று நடிக்க வேண்டி உள்ளது. மூலவதனத்தில் செல்ல வேண்டிய தில்லை. சரீரத்தை விடும் பொழுது இந்த கர்ம பந்தனமும் இருப்பதில்லை. அந்த கர்ம பந்தனமும் இருப்ப தில்லை. சரீரத்திலிருந்தே தனியாக ஆகி விடுகிறார்கள் அல்லவா? பிறகு மற்றொரு சரீரம் எடுக்கும் பொழுது அந்த கர்ம பந்தனம் ஆரம்பமாகிறது. இந்த விஷயங்களை உங்களைத் தவிர வேறு எந்த மனிதர்களும் அறியாமல் உள்ளார்கள். அனைவரும் முற்றிலுமே அறிவற்றவர்களாக இருக் கிறார்கள் என்று தந்தை புரிய வைத்துள்ளார். ஆனால் அவ்வாறு இருக்கிறோம் என்று யாராவது புரிந்திருக்கிறார்களா என்ன? தங்களை எவ்வளவு அறிவாளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். அமைதி பரிசு அளித்து கொண்டே இருக்கிறார்கள். இதுவும் பிராமணகுல பூஷணர்களாகிய நீங்கள் நல்ல முறையில் புரிய வைக்க முடியும். அவர்களோ அமைதி என்றால் என்ன என்பதே அறியாமலே இருக்கிறார்கள். ஒரு சிலரோ மன அமைதி எப்படி கிடைக்கும் என்று மகாத்மாக்களிடம் செல்கிறார்கள். உலகத்தில் எப்படி அமைதி என்று கூறுகிறார்கள். நிராகார உலகத்தில் அமைதி எப்படி நிலவும் என்று கூறுவதே இல்லை. அது இருப்பதே சாந்திதாமமாக. ஆத்மாக்களாகிய நாம் சாந்தி தாமத்தில் இருக்கிறோம். ஆனால் இதுவோ மனதின் அமைதி என்று கூறுகிறார்கள். அமைதி எப்படி கிடைக்கும் என்று அவர்கள் அறியாமல் உள்ளார்கள். சாந்திதாமமோ நமது வீடு ஆகும். அங்கு எப்படி அமைதி கிடைக்க முடியும்? ஆம், சத்யுகத்தில் சுகம், சாந்தி, செல்வம் எல்லாமே இருக்கும். அதை தந்தை ஸ்தாபனை செய்கிறார். இங்கோ எவ்வளவு அசாந்தி இருக்கிறது! இவை எல்லாமே இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துள்ளீர்கள். சுகம், சாந்தி, செல்வம் பாரதத்தில் தான் இருந்தது. அந்த ஆஸ்தி தந்தை யினுடையதாக இருந்தது. மேலும் துக்கம், அசாந்தி, ஏழ்மை - இவை இராவணனினுடைய ஆஸ்தி ஆகும். இந்த எல்லா விஷயங்களையும் எல்லையில்லாத தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். பரந்தாமத்தில் இருப்பவரான தந்தை (நாலேஜ் ஃபுல்) ஞானம் நிறைந்தவர் ஆவார். அவர் நமக்கு சுகதாமத்தின் ஆஸ்தி அளிக்கிறார். அவர் ஆத்மாக்களாகிய நமக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். (நாலேஜ்) ஞானம் ஆத்மாவில் உள்ளது என்பதையோ அறிந்துள்ளீர்கள். அவருக்குத் தான் ஞானத்தின் கடல் என்று கூறப்படுகிறது. அந்த ஞானக்கடல் இந்த சரீரத்தின் மூலமாக உலக சரித்திரம் மற்றும் பூகோளம் பற்றி புரிய வைக்கிறார். உலகத்திற்கு ஆயுளோ இருக்க வேண்டும் அல்லவா? உலகமோ இருக்கவே இருக்கிறது. புது உலகம் மற்றும் பழைய உலகம் என்று மட்டும் கூறப்படுகிறது. இதுவும் மனிதர்களுக்குத் தெரியாது. புது உலகத்திலிருந்து பழைய உலகமாக ஆவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கிறது?

கலியுகத்திற்கு பின்னால் சத்யுகம் அவசியம் வர வேண்டி உள்ளது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே கலியுகம் மற்றும் சத்யுகத்திற்கு இடைப்பட்ட சங்கமத்தில் தந்தை வர வேண்டி இருக்கிறது. பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக புதிய உலகத்தின் ஸ்தாபனை, சங்கரன் மூலமாக விநாசம் செய்விக்கிறார் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். திரிமூர்த்தியின் பொருளே ஸ்தாபனை, விநாசம் மற்றும் பாலனை என்பதாகும். இதுவோ சாதாரண விஷயம் ஆகும். ஆனால் இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் மறந்து விடுகிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு நிறைய குஷி இருக்கும். நிரந்தர நினைவு இருக்க வேண்டும். பாபா இப்பொழுது நம்மை புது உலகத்திற்குத் தகுதியுடையவராக ஆக்கிக் கொண்டி ருக்கிறார். பாரதவாசிகளாகிய நீங்கள் தான் தகுதி யுடையவர்களாக ஆகிறீர்கள். வேறு யாருமல்ல. ஆம் யார் வெவ்வேறு தர்மங்களில் மதமாற்றம் (கன்வர்ட்) ஆகிச் சென்றுள்ளார்களோ அவர்கள் வரக் கூடும். பிறகு எப்படி அதில் மாற்றம் ஆகி இருந்தார்களோ அதே போல இதில் (கன்வர்ட்) மாற்றம் ஆகிவிடுவார்கள். இந்த முழு ஞானமும் (நாலேஜ்) உங்களது புத்தியில் உள்ளது. இந்த பழைய உலகம் இப்பொழுது மாறுகிறது என்பதை மனிதர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். மகாபாரத போர் கூட அவசியம் மூளப் போகிறது. இச்சமயத்தில் தான் பாபா வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். யார் இராஜயோகம் கற்கிறார்களோ அவர்கள் புது உலகிற்குச் சென்று விடுவார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். பிறகு பிரம்மா, விஷ்ணு மற்றும் சங்கரன். பிறகு இங்கு வந்தீர்கள் என்றால் முக்கிமானவர்கள் ஜகதம்பா, ஜகத்பிதா ஆவார்கள் என்பதை நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கலாம். தந்தை வருவது கூட இங்கே பிரம்மாவின் உடலில் தான். பிரஜாபிதா பிரம்மாவோ இங்கு இருக்கிறார் அல்லவா? பிரம்மா மூலமாக ஸ்தாபனை சூட்சம வதனத்தில் ஆகாது அல்லவா? இங்கு தான் ஆகிறது. இவர் (வ்யக்த) ஸ்தூல உடலிலிருந்து (அவ்யக்த) சூட்சும உடல் உடையவராக ஆகி விடுகிறார். இந்த இராஜயோகத்தைக் கற்று கொண்டு பின்னர் விஷ்ணுவின் இரண்டு ரூபமாக ஆகிறார்கள். உலகத்தின் சரித்திரம் பூகோளம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? மனிதர்கள் தான் புரிந்து கொள்வார்கள். உலகத்தின் அதிபதி தான் உலகத்தின் சரித்திரம் பூகோளம் பற்றி புரிய வைக்க முடியும். அவர் நாலேஜ் ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) மற்றும் புனர் ஜென்மம் அற்றவர் ஆவார். இந்த நாலேஜ் (ஞானம்) யாருடைய புத்தியிலும் இல்லை. பகுத்தறிவதற்கும் புத்தி வேண்டும் அல்லவா? ஏதாவது புத்தியில் பதிகிறதா இல்லை அப்படியே தான் இருக்கிறாரா? நாடியைப் பார்க்க வேண்டும். அஜ்மல் கான் என்ற புகழ் பெற்ற ஒரு வைத்தியர் வாழ்ந்து சென்றுள்ளார். அவருக்கு நோயாளியை பார்த்த உடனேயே நோய் பற்றி தெரிய வந்து விடும் என்று கூறுவார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கூட இவர் தகுதி உடையவரா இல்லையா? என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தந்தை குழந்தைகளுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கொடுத்துள்ளார். இதன் மூலம் நீங்கள் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தை யாராக இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று அவரை அதே ரூபத்தில் நினைவு செய்கிறீர்கள். ஆனால் யார் முழுமையாக யோகத்துடன் கூடிய நிலையில் இருப்பார்களோ, யாருக்கு தந்தையிடம் அன்பான புத்தி இருக்குமோ அவர்களுக்குத் தான் இப்பேர்ப்பட்ட புத்தி இருக்கும். எல்லோருமே அவ்வாறு இல்லை அல்லவா? ஒருவர் மற்றவரின் பெயர் ரூபத்தில் சிக்கி விடுகிறார்கள். அன்பை என்னிடம் செலுத்துங்களேன் என்று தந்தை கூறுகிறார். மாயை எப்பேர்ப்பட்டது என்றால், அன்பு செலுத்த விடுவதில்லை. எனது வாடிக்கையாளர் போகிறார் என்பதை மாயையும் பார்க்கிறது. பின் ஒரேயடியாக மூக்கை, காதை பிடித்து விடுகிறது. பிறகு ஏமாந்து விடும் பொழுது மாயையிடம் ஏமாந்து விட்டோம் என்று உணருகிறார்கள். மாயாஜீத், ஜகத்ஜீத் ஆக முடியாமல் உள்ளோம். உயர்ந்த பதவி அடைய முடியாமல் உள்ளோம். இதில் தான் உழைப்பு தேவைப்படுகிறது. என் ஒருவனை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய பதீதமான (தூய்மையற்ற) புத்தியானது பாவனமாக (தூய்மை யானதாக) ஆகி விடும் என்று ஸ்ரீமத் கூறுகிறது. ஆனால் அநேகருக்கு மிகவும் கடினமானதாகப் படுகிறது. இதில் ஒரே ஒரு பாடம் தான் உள்ளது - அல்ஃப் மற்றும் பே (தந்தை மற்றும் இராஜ்யம்) அவ்வளவே! இரண்டு வார்த்தைகள் கூட நினைவு செய்ய முடியாதா? (அல்ஃப்) தந்தையை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார். பின் தனது தேகத்தையும் மற்றவர்களின் தேகத்தையும் நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள். தேகத்தைப் பார்க்கையிலும் நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார். ஆத்மாவிற்கு இப்பொழுது என்னைப் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்துங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது திரிநேத்ரி, திரிகாலதரிசி ஆகிறீர்கள். ஆனால் திரிகாலதரிசி கூட வரிசைக் கிரமமாக உள்ளார்கள். நாலேஜ் (ஞானம்) தாரணை செய்வது ஒன்றும் கடினமானது அல்ல. மிகவுமே நன்றாகப் புரிந்துள்ளார்கள். ஆனால் யோக பலம் குறைவாக உள்ளது. தேஹி அபிமானி தன்மை (ஆத்ம உணர்வு) மிகவும் குறைவாக உள்ளது. சிறிய விஷயங்களில் கோபம் வந்து விடுகிறது. விழுந்து கொண்டே இருக்கிறார்கள். எழுந்திருக்கிறார்கள் விழுகிறார்கள். இன்று எழுந்தார்கள், நாளை பிறகு விழுந்து விடுகிறார்கள். தேக அபிமானம் முக்கியமானது. பிறகு மற்ற விகாரங்கள், பேராசை, மோகம் ஆகியவற்றில் மாட்டிக் கொள்கிறார்கள். தேகத்தில் கூட மோகம் இருக்கிறது அல்லவா? தாய்மார்களிடம் அதிகமாக மோகம் இருக்கிறது. இப்பொழுது தந்தை அதிலிருந்து விடுவிக்கிறார். உங்களுக்கு எல்லையில்லாத தந்தை கிடைத்துள்ளார். பின் ஏன் மோகம் கொள்கிறீர்கள்? அச்சமயம் முகம், பேச்சு வார்த்தையே குரங்கு போல ஆகி விடுகிறது. நஷ்டமோகா ஆகி விடுங்கள். நிரந்தரமாக என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். பாவங்களின் சுமை தலை மீது நிறைய உள்ளது. அவற்றை எப்படி இறக்குவது? ஆனால் மாயை எப்பேர்ப்பட்டது என்றால் நினைவு செய்ய விடுவ தில்லை. எவ்வளவு தான் தலையிலடித்துக் கொண்டாலும் (முயற்சி செய்தாலும்) அடிக்கடி புத்தியை மறக்க வைத்து விடுகிறது. நாம் (மோஸ்ட் பிலவட்) மிகவும் அன்பிற்குரிய பாபாவிற்கு மட்டுமே மகிமை செய்து கொண்டிருப்போம் என்று எவ்வளவு முயற்சி செய்கிறார்கள்! பாபா இதோ உங்களிடம் வந்து விட்டது போலவே தான்... ஆனால் பிறகு மறந்து விடுகிறார்கள். புத்தி வேறு பக்கம் சென்று விடுகிறது. இந்த முதல் நம்பரில் செல்பவர் கூட புருஷார்த்தி (முயற்சியாளர்) ஆவார் அல்லவா? நாம் "இறைமாணவர்கள் ஆவோம் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். கீதையில் கூட பகவான் கூறுகிறார், நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆக்கு கிறேன் என்று உள்ளது. சிவனுக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டார்கள். அவ்வளவு தான். உண்மையில் சிவபாபா வின் ஜெயந்தியை முழு உலகத்திலும் கொண்டாட வேண்டும். சிவபாபா அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவித்து (கைடு) வழிகாட்டி ஆகி கூடவே அழைத்துச் செல்கிறார். அவர் லிபரேட்டர் (விடுவிப்பவர்) கைடு (வழிகாட்டி) ஆவார் என்பதை எல்லோரும் ஏற்றுள்ளார்கள். அனைவரின் பதீத பாவன தந்தை ஆவார். அனைவரையும் சாந்தி தாமம் சுகதாமத்திற்கு அழைத்துச் செல்பவர் ஆவார். பின் ஏன் அவரது ஜெயந்தி கொண்டாடு வதில்லை? பாரதவாசிகளே கொண்டாடுவதில்லை. எனவே தான் பாரதத்திற்கு இந்த கெட்ட கதி ஆகி உள்ளது. மரணம் கூட கொடிய முறையில் ஆகிறது. அவர்களோ எப்பேர்ப்பட்ட குண்டுகளைத் தயாரிக்கிறார்கள் என்றால், அதிலிருந்து விஷவாயு வெளிப்பட்ட உடனேயே எல்லாமே முடிந்து போய் விடும். குளோரோ ஃபார்ம் (மயக்க மருந்து) போட்டது போல. இதுவும் அவர்கள் தயாரித்தே ஆக வேண்டி உள்ளது. நிறுத்துவது என்பது இயலாத காரியம். முந்தைய கல்பத்தில் என்ன ஆகியதோ அது இப்பொழுது மீண்டும் நடைபெறும். இந்த ஆயுதங்கள் மற்றும் இயற்கை சேதங் களால் பழைய உலகத்தின் விநாசம் நடந்தது. ஆக அது இப்பொழுதும் ஆகும். விநாசத்தின் நேரம் வரும் பொழுது நாடகத் திட்டப்படி செயலில் வந்தே விடுவார்கள். டிராமா அவசியம் விநாசம் செய்விக்கும். இரத்த ஆறுகள் இங்கே பாயும். உள் நாட்டு கலகத்தில் (சிவில் வார்) ஒருவரை யொருவர் கொன்று விடுகிறார்கள் அல்லவா? உங்களிலும் கூட இந்த உலகம் மாறிக் கெண்டிருக் கிறது என்பதை குறைவானோர் தான் அறிந்துள்ளார்கள். இப்பொழுது நாம் சுகதாமம் செல் கிறோம். எனவே எப்பொழுதும் ஞானத்தின் அதி இந்திரிய சுகத்தில் இருக்க வேண்டும். எந்த அளவு நினைவில் இருப்பீர்களோ அந்த அளவு சுகம் அதிகரித்துக் கொண்டே போகும். சீ - சீ தேகத்திலிருந்து (நஷ்டோ மோகா) மோகத்தை நீக்கியவராக ஆகிக் கொண்டே செல்வீர்கள். அல்ஃப் (தந்தையை) நினைவு செய்தீர்கள் என்றால் பே (அரசாட்சி) உங்களுடையது என்று மட்டுமே தந்தை கூறுகிறார். ஒரு நொடியில் அரசாட்சி. சக்கரவர்த்திக்குக் குழந்தை பிறந்தது என்றால் குழந்தை சக்கரவர்த்தி ஆகிறார் அல்லவா? எனவே என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள் மற்றும் சக்கரத்தை நினைவு செய்தீர்கள் என்றால் சக்கரவர்த்தி மகாராஜா ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். எனவே ஒரு நொடியில் ஜீவன் முக்தி ஒரு நொடியில் பெக்கர் டூ பிரின்ஸ் (ஏழையிலிருந்து இளவரசர்) என்று பாடப்படுகிறது. எவ்வளவு நன்றாக உள்ளது! எனவே ஸ்ரீமத்படி நல்ல முறையில் நடக்க வேண்டும். ஒவ்வொரு அடியிலும் ஆலோசனை பெற வேண்டி உள்ளது.

இனிமையான குழந்தைகளே, டிரஸ்டி ஆகி இருங்கள், அப்பொழுது பற்று நீங்கி விடும் என்று தந்தை புரிய வைக்கிறார். ஆனால் டிரஸ்டி ஆவது என்பது "சித்தி வீடு" போவதுபோல எளிதானது அல்ல. இவர் சுயம் டிரஸ்டி ஆகி உள்ளார். குழந்தைகளையும் டிரஸ்டியாக ஆக்குகிறார். இவர் ஏதாவது பெற்றுக் கொள்கிறாரா என்ன? நீங்கள் டிரஸ்டி ஆக இருந்து பராமரியுங்கள் என்று கூறுகிறார். டிரஸ்டி ஆகி விட்டீர்கள் என்றால் பிறகு பற்று நீங்கி விடுகிறது. எல்லாமே இறைவனால் கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். பிறகு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் அல்லது யாராவது இறந்து விட்டார்கள் என்றால் நோய் வந்து விடுகிறது. கிடைக்கிறது என்கிற பொழுது குஷியாகிறது. இறைவனால் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள் என்றால் பின் இறந்து விடும் பொழுது அழ வேண்டிய அவசியம் என்ன? ஆனால் மாயை குறைவானது அல்ல. சித்தி வீடா என்ன? இச்சமயத்தில் தந்தை கூறுகிறார் - "இந்த பதீத உலகத்தில் நாங்கள் இருக்க விரும்புவதில்லை, எங்களை பாவன உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், கூட அழைத்து செல்லுங்கள் என்று நீங்கள் என்னை அழைத்துள்ளீர்கள்" ஆனால் இதன் பொருளைக் கூட புரிந்து கொள்வதில்லை. பதீத பாவனர் வருகிறார் என்றால் அவசியம் உடல்கள் அழிந்து போய் விடும் அல்லவா? அப்பொழுது தானே ஆத்மாக்களைக் கூட்டிச் செல்வார். எனவே அப்பேர்ப்பட்ட தந்தையிடம் அன்பான புத்தி இருக்க வேண்டும். ஒருவரிடம் தான் அன்பு கொள்ள வேண்டும். அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். மாயையின் புயல்களோ வரும். கர்ம இந்திரியங் களால் எந்த ஒரு விகர்மமும் செய்யக் கூடாது. அது முறையற்றதாக ஆகி விடுகிறது. நான் வந்து இந்த சரீரத்தை ஆதாரமாக எடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இது இவருடைய சரீரம் ஆகும் அல்லவா? நீங்கள் நினைவு தந்தையை செய்ய வேண்டும். பிரம்மாவும் தந்தை ஆவார். சிவனும் தந்தை ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். விஷ்ணு மற்றும் சங்கரரை பாபா (தந்தை) என்று கூற மாட்டார்கள். சிவன் நிராகார தந்தை ஆவார். பிரஜாபிதா பிரம்மா சாகார தந்தை ஆவார். இப்பொழுது நீங்கள் சாகாரமானவர் மூலமாக நிராகார தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தாதா இவருக்குள் பிரவேசம் செய்கிறார். அப்பொழுது தான் பாட்டனாரின் ஆஸ்தி நாம் தந்தை மூலமாக எடுக்கிறோம் என்று கூறுகிறீர்கள். தாதா (கிரேண்ட் ஃபாதர்) - பாட்டனார் நிராகாரமானவர் ஆவார். தந்தை சாகாரமானவர் ஆவார். இவை அதிசயமான புதிய விஷயங்கள் ஆகும் அல்லவா? திரி மூர்த்தி காண்பிக்கிறார்கள் ஆனால் புரிந்து கொள்வது இல்லை. சிவனை இல்லாமல் செய்து விட்டார்கள். தந்தை எவ்வளவு நல்ல நல்ல விஷயங்களைப் புரிய வைக்கிறார்! எனவே நாம் மாணவர்கள் ஆவோம் என்ற குஷி இருக்க வேண்டும். பாபா நமது தந்தை, ஆசிரியர், சத்குரு ஆவார். இப்பொழுது நீங்கள் உலகத்தின் சரித்திரம் மற்றும் பூகோளம் பற்றி எல்லையில்லாத தந்தையிடமிருந்து கேட்டுக் கொண்டிருக் கிறீர்கள். பின் மற்றவர்களுக்குக் கூறுகிறீர்கள். இது 5 ஆயிரம் வருடங்களின் சக்கரம் ஆகும். கல்லூரியில் குழந்தைகளுக்கு உலக சரித்திரம் மற்றும் பூகோளம் பற்றி புரிய வைக்க வேண்டும். 84 பிறவிகளின் ஏணிப்படி என்பது என்ன, பாரதத்திற்கு ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை எப்படி ஆகிறது? என்பது பற்றியும் புரிய வைக்க வேண்டும். ஒரு நொடியில் பாரதம் சொர்க்கமாக ஆகி விடுகிறது. பின்னர் 84 பிறவிகளில் பாரதம் நரகம் ஆகிறது. இதுவோ மிகவும் சுலபமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். பாரதம் (தங்கயுகம்) கோல்டன் ஏஜ்-லிருந்து (இரும்பு யுகம்) அயர்ன் ஏஜ்க்கு எப்படி வந்தது என்பதையோ பாரதவாசிகளுக்கு புரிய வைக்க வேண்டும். ஆசிரியர்களுக்குக் கூட புரிய வைக்க வேண்டும். அது உலகியல் ஞானம் ஆகும். இது ஆன்மீக ஞானம் ஆகும். அதை மனிதர்கள் அளிக்கிறார்கள். இதை பரமாத்மா அளிக்கிறார். அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார். எனவே அவரிடம் மனித சிருஷ்டியின் ஞானம் தான் இருக்கும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த சீ - சீ உடலிலிருந்து முழுமையாக நஷ்டோ மோகா ஆகி ஞானத்தின் அதீந்திரிய சுகத்தில் இருக்க வேண்டும். இப்பொழுது இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. நாம் நமது சுகதாமம் செல்கிறோம் என்பது புத்தியிலிருக்கட்டும்.

2. டிரஸ்டி ஆகி அனைத்தையும் பராமரித்தபடியே தங்களது பற்றை நீக்கி விட வேண்டும். ஒரு தந்தையிடம் உண்மையான அன்பு கொள்ள வேண்டும். கர்ம இந்திரியங்களால் ஒரு பொழுதும் எந்த ஒரு விகர்மமும் (பாவ செயல்) செய்யக் கூடாது.

வரதானம்:
பிரம்மா பாபாவிற்கு சமமாக சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமான சித்திரத்தை உருவாக்கக்கூடிய பரோபகாரி ஆகுக.

சிரேஷ்ட நினைவு மற்றும் சிரேஷ்ட கர்மத்தின் மூலம் அதிர்ஷ்டத்தின் சித்திரத்தையோ குழந்தைகள் அனைவரும் உருவாக்கி இருக்கின்றீர்கள், இப்பொழுது சம்பூரணத்தன்மை மற்றும் பிரம்மா பாபாவிற்கு சமமாக சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமாக ஆகுவது என்ற இறுதி டச்சிங் மட்டும் இருக்கிறது. இதற்காக பரோபகாரி ஆகுங்கள், அதாவது சுயநல உணர்வில் இருந்து சதா விடுபட்டு இருங்கள். ஒவ்வொரு சூழ்நிலையில், ஒவ்வொரு காரியத்தில், ஒவ்வொரு சகயோகி குழுவில், எந்தளவு சுயநலமற்ற தன்மை இருக்குமோ, அந்தளவே பரோபகாரி ஆகமுடியும். சதா தன்னை நிறைந்திருப்பதாக அனுபவம் செய்வீர்கள். சதா பிராப்தி சொரூப ஸ்திதியில் நிலைத்திருப்பீர்கள். தனக்காக எதையும் சுவீகாரம் செய்யமாட்டீர்கள்.

சுலோகன்:
சர்வஸ்வ தியாகி ஆகுவதன் மூலமே சரளத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்ற குணம் வரும்.

தன்னுடைய சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுக்கும் சேவை செய்யுங்கள்

இந்த சகாஷ் கொடுக்கும் சேவையை நிரந்தரமாக செய்யமுடியும், இதில் உடல்நிலை மற்றும் சமயத்தைப் பற்றிய விசயம் கிடையாது. இரவு பகல் இந்த எல்லையற்ற சேவையில் ஈடுபட முடியும். பிரம்மா பாபாவைப் பார்த்திருக்கின்றீர்கள், இரவிலும் கூட கண் விழித்ததும் எல்லையற்ற சகாஷ் கொடுக்கும் சேவை நடந்து கொண்டே இருந்தது, அவ்வாறு தந்தையைப் பின்பற்றுங்கள். எப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற சகாஷ் கொடுப்பீர்களோ, அப்பொழுது அருகாமையில் உள்ளவர்கள் தானாகவே சகாஷ் பெற்றுக்கொணடே இருப்பார்கள். இந்த எல்லை யற்ற சகாஷ் கொடுப்பதனால் வாயுமண்டலம் தானாக உருவாகிவிடும்.