04.01.26 காலை முரளி
ஓம் சாந்தி 30.11.2008 பாப்தாதா,
மதுபன்
முற்றுப்புள்ளி வைத்து, சம்பூர்ண பவித்திரதாவை தாரணை செய்து,
மனதின் சகாஷ் மூலம் சுகம்-சாந்தியின் துளியைக் கொடுப்பதற்கான
சேவை செய்யுங்கள்
இன்று பாப்தாதா நாலாபுறம் உள்ள மகான் குழந்தைகளைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார். என்ன மகான் தன்மையைச் செய்தார்கள்? உலகம் எதை
நடக்க முடியாதது எனச் சொல்கிறதோ, அதை சகஜமாக நடக்கக் கூடியதாக
ஆக்கிக் காட்டியிருக்கிறார்கள். அது பவித்திரதாவின் விரதம்.
நீங்கள் அனைவருமே பவித்திரதாவின் விரதத்தை தாரணை
செய்திருக்கிறீர்கள் இல்லையா? பாப்தாதா விடம் பவித்திரதாவின்
மாற்றத்திற்கான திட சங்கல்ப விரதம் எடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள். விரதம் மேற்கொள்வது என்றால் விருத்தியை (உள்ளுணர்வு)
மாற்றியமைப்பது. என்ன விருத்தி மாற்றம் செய்தீர்கள்? சங்கல்பம்
செய்தீர்கள் - நாம் அனைவரும் சகோதர- சகோதரர்கள். இந்த விருத்தி
மாற்றத்திற்காக பக்தியிலும் கூட எவ்வளவு விஷயங்களில் விரதம்
மேற்கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் அனைவரும் பாபாவிடம் திட
சங்கல்பம் செய்திருக்கிறீர்கள் ஏனென்றால் பிராமண வாழ்க்கையின்
அஸ்திவாரம் பவித்திரதா மற்றும் பவித்திரதா மூலம் தான் பரமாத்ம
அன்பு மற்றும் சர்வ பரமாத்ம பிராப்திகள் கிடைத்துக்
கொண்டிருக்கின்றன. மகாத்மாக்கள் கடினம் என நினைக்கிறார்கள்,
அசம்பவம் என நினைக்கிறார்கள். மற்றும் நீங்கள் பவித்திரதாவை
சுயதர்மம் எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா
பார்த்துக் கொண்டிருக்கிறார் - அநேக நல்ல-நல்ல குழந்தைகள் யார்
சங்கல்பம் செய்திருக்கிறார்களோ, மற்றும் திட சங்கல்பத்தின்
மூலம் நடைமுறையில் மாற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்களோ,
அது போல் நாலாபுறம் உள்ள மகான் குழந்தை களுக்கு பாப்தாதா
மிகமிக மனப்பூர்வமாக ஆசிர்வாதங்களைக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவரும் கூட மனம்-சொல்-செயல்,
உள்ளுணர்வு, பார்வை மூலமாகப் பவித்திரதாவை அனுபவம் செய்து
கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? பவித்திரதாவின் விருத்தி, அதாவது
ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் சுப பாவனை, சுப விருப்பம். பார்வை
மூலம் ஒவ்வோர் ஆத்மாவையும் ஆத்மிக சொரூபத்தில் பார்ப்பது,
தன்னையும் கூட சகஜமாக சதா ஆத்மிக ஸ்திதியில் அனுபவம் செய்வது.
பிராமண வாழ்க்கையின் மகத்துவம் மனம்-சொல்-செயலின் பவித்திரதா
ஆகும். பவித்திரதா இல்லையென்றால் பிராமண வாழ்க்கையின் பாடல் -
சதா பவித்திரதாவின் பலத்தினால் தனக்குத் தானே ஆசிர்வாதங்கள்
கொடுக்கிறீர்கள். என்ன ஆசிர் வாதம் கொடுக்கிறீர்கள்? பவித்திரதா
மூலம் சதா தனக்கும் குஷி அனுபவம் ஆகிறது, மற்றவர் களுக்கும்
குஷியைக் கொடுக்கிறீர்கள். பவித்திர ஆத்மாவுக்கு மூன்று விசேஷ
வரதானங்கள் கிடைக்கின்றன - ஒன்று - தனக்குத் தானே வரதானம்
கொடுக்கிறார். அதனால் சகஜமாக பாபா வுக்கு அன்பானவராக ஆகி
விடுகிறார். 2. வரதாதா பாபாவின் மிக நெருக்கமான மற்றும் மிக
அன்பான குழந்தை ஆகி விடுகிறார். அதனால் பாபாவின் ஆசிர்வாதங்கள்
தானாகவே கிடைக் கின்றன. 3. யாரெல்லாம் பிராமணப் பரிவாரத்தின்
விசேஷ நிமித்தமாக ஆகியிருக்கிறார்களோ, அவர்கள் மூலமாகவும் கூட
ஆசிர்வாதங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. மூவரின்
ஆசிர்வாதங்களால் சதா பறந்து கொண்டே இருக்கிறார். ஆக, நீங்கள்
அனைவரும் கூட தனக்குத் தானே கேளுங்கள் -- தன்னை சோதித்துப்
பார்ப்பீர்களானால் பவித்திரதாவின் பலம் மற்றும் பவித்திரதாவின்
பலனை சதா அனுபவம் செய்கிறீர்களா? சதா ஆன்மிக நஷா, மனதில்
பெருமிதம் உள்ளதா? அவ்வப்போது குழந்தைகள் யாராவது அமிர்தவேளை
சந்திப்பின் போது ஆன்மிக உரையாடல் செய்யும் போது என்ன
சொல்கிறார்கள் தெரியுன்ô? பவித்திரதாவின் மூலம் கிடைக்கும்
அதிந்திரிய சுகம் சதா கிடைப்பதில்லை என்கிறார்கள். சில நேரம்
இருக்கிறது, சில நேரம் இருப்பதில்லை. ஏனென்றால் பவித்திரதாவின்
பலனே அதிந்திரிய சுகம் தான். எனவே தன்னைத் தான் கேட்டுக்
கொள்ளுங்கள் -- நான் யார்? சதா அதிந்திரிய சுகத்தின்
அனுபவத்தில் இருக்கிறேனா, அல்லது எப்போதாவதா? தன்னைத் தான்
என்னவென்று சொல்லிக் கொள்கிறீர்கள்? அனைவரும் தங்கள் பெயரை
எழுதும் போது என்னவென்று எழுது கிறீர்கள்? பி.கே. இன்னார்
மற்றும் தன்னை மாஸ்டர் சர்வசக்திவான் எனச் சொல்லிக்
கொள்கிறீர்கள். அனைவரும் மாஸ்டர் சர்வ சக்திவான் இல்லையா? நான்
மாஸ்டர் சர்வ சக்திவான் - சதா, எப்போதாவது மட்டும் இல்லை,
எப்போதும் என யார் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ, அவர்கள் கை
உயர்த்துங்கள். சதா? பார்க்க வேண்டும், யோசிக்க வேண்டும், சதா
இருக்கிறதா? இரட்டை வெளிநாட்டினர் கை உயர்த்த வில்லை. கொஞ்சம்
பேர் கை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். டீச்சர்கள்
உயர்த்துங்கள். சதா? சும்மா அப்படியே உயர்த்தி விடாதீர்கள்.
யார் சதா இருக்கிறார்களோ, சதா இருப்பவர்கள் கை உயர்த்துங்கள்.
மிகக் கொஞ்கம் பேர் தான். பாண்டவர்கள் உயர்த்துங்கள். பின்னால்
இருப்பவர்கள்? மிகக் கொஞ்சம் பேர் தான். முழு சபையும்
உயர்த்தவில்லை. நல்லது, மாஸ்டர் சர்வசக்திவான் என்றால் அந்தச்
சமயம் சக்திகள் எங்கே சென்று விடுகின்றன? மாஸ்டர் என்றால் அதன்
அர்த்தமே - மாஸ்டர் என்றால் தந்தையை விடவும் உயர்ந்தவர்கள்.
எனவே சோதித்துப் பாருங்கள் - அவசியம் தூய்மையின் அஸ்திவாரத்தில்
கொஞ்சம் பலவீனம் இருக்க வேண்டும். என்ன பலவீனம்? மனதில், அதாவது
சங்கல்பத்தில் பலவீனம் உள்ளது. பேச்சில் பலவீனம், அல்லது
கர்மத்தில் பலவீனம், அல்லது கனவில் கூட பலவீனம் உள்ளது.
ஏனென்றால் பவித்திர ஆத்மாவின் மனம்-சொல்-செயல்,
சம்பந்தம்-தொடர்பு, கனவு தானாகவே சக்திசாலியாக இருக்கும்.
எப்போது உள்ளுணர்வை மாற்றுவதற்கான விரதம் மேற் கொண்டீர்களோ,
அப்போது எப்போதாவது மட்டும் ஏன்? சமயத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். சமயத்தின் அழைப்பு, பக்தர்களின் அழைப்பு,
ஆத்மாக்களின் அழைப்பைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும்
திடீரென எதுவும் நடக்கலாம் என்ற பாடம் அனைவர்க்கும் பக்காவாக
உள்ளது. எனவே அஸ்திவாரத்தின் பலவீனம் என்றால் பவித்திரதாவின்
பலவீனம். வார்த்தையிலும் சுப பாவனை, சுப விருப்பம் இருப்பதில்லை,
பவித்திர தாவுக்கு விரோதமாக உள்ளதென்றால் கூட சம்பூர்ண
பவித்திரதாவின் சுகம் என்பது அதிந்திரிய சுகம், அதன் அனுபவம்
ஏற்பட முடியாது. ஏனென்றால் பிராமண வாழ்க்கையின் லட்சியமே
அசம்பவத்தை சம்பவமாக்குவது. அதில் எவ்வளவு, அவ்வளவு என்ற சப்தம்
வரவில்லை. எவ்வளவு இருக்க வேண்டுமோ, அவ்வளவு இல்லை. ஆக, நாளை
அமிர்தவேளையில் விசேஷமாக ஒவ்வொருவரும் தன்னை சோதிக்க வேண்டும்.
மற்றவர்கள் பற்றி யோசிக்கக் கூடாது. மற்றவர் களைப் பார்க்கக்
கூடாது. ஆனால் தன்னை சோதிக்க வேண்டும் - எத்தனை சதவிகிதத்தில்
பவித்திரதாவின் விரதத்தைப பின்பற்றுகிறேன்? நான்கு விஷயங்களை
சோதிக்க வேண்டும் - ஒன்று, உள்ளுணர்வு, இரண்டாவது -
சம்பந்தம்-தொடர்பில் சுப பாவனை, சுப விருப்பம். இவரோ இப்படித்
தான் இருக்கிறார் என்று அந்த மாதிரி இல்லை. ஆனால் அந்த
ஆத்மாவுக்காகவும் சுப பாவனை. எப்போது நீங்கள் அனைவரும் தங்களை
உலக மாற்றம் செய்பவர்கள் என ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களோ, (அனைவரும்
அப்படித் தானே?) நான் உலக மாற்றம் செய்பவன் என தன்னைப் புரிந்து
கொண்டிருக்கிறீர்களா? கை உயர்த்துங்கள். இதிலோ மிக நன்றாகவே கை
உயர்த்துகிறீர்கள். வாழ்த்துகள்! ஆனால் பாப்தாதா உங்கள
அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்கிறார். கேள்வி கேட்கட்டுமா?
எப்போது நீங்கள் உலகை மாற்றுபவரோ, அப்போது உலக மாற்றத்தில்
இந்த இயற்கை, 5 தத்துவங்களும் வந்து விடுகின்றன. அவற்றை மாற்ற
முடியும் மற்றும் தன்னை அல்லது துணையில் இருப்பவர்களை,
பரிவாரத்தை மாற்ற முடியாதா? விஷ்வ பரிவர்த்தக் என்றால்
ஆத்மாக்களை, இயற்கையை, அனைத்தையும் மாற்ற வேண்டும். ஆக, தனது
உறுதிமொழியை நினைவு செவய்யுங்கள். அனைவரும் பாபாவிடம் அநேக தடவை
உறுதிமொழி கொடுத்துள்ளனர். ஆனால் பாப்தாதா இதைத் தான்
பார்த்துக் கொண்டிருக்கிறார் -- சமயம் மிக வேகமாக வந்து
கொண்டிருக்கிறது, அனைவரின் அழைப்பைக் (கூக்குரல்) கேட்பவர்கள்
மற்றும் மாற்றம் செய்பவர்களாகிய உபகாரி ஆத்மாக்கள் யார்?
நீங்கள் தாம் இல்லையா?
பாப்தாதா இதற்கு முன்பும் கூட சொல்லியிருக்கிறார் - பரோபகாரி
அல்லது உலக உபகாரி ஆவதற்கு மூன்று சொற்களை முடித்துவிட வேண்டும்.
அது உங்களுக்குத் தெரிந்தது தான். அறிந்து கொள்வதிலோ நீங்கள்
சாமர்த்தியசாலிகள் தாம். பாப்தாதாவுக்குத் தெரியும் - அனைவருமே
சாமர்த்தியசாலிகள் தாம். ஒரு முதலாவது சொல் - பரசிந்தனை.
இரண்டாவது பரதர்ஷன் மற்றும் மூன்றாவது பரமத் (பிறரைப் பற்றி
சிந்திப்பது, பார்ப்பது மற்றும் பிறர் வழிப்படி நடப்பது) இந்த
மூன்று பர என்ற சொற்களையும் முடித்து விட்டு, பர உபகாரி
ஆகுங்கள். இந்த மூன்று சொற்கள் தாம் விக்ன ரூபம் ஆகின்றன.
நினைவிருக்கிறது இல்லையா? புது விஷயம் இல்லை. எனவே நாளை
அமிர்தவேளையில் சோதித்துப் பார்க்க வேண்டும் - பாப்தாதாவும்
சுற்றி வருகிறார் - என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப்
பார்ப்பார். ஏனென்றால் இப்போதைய தேவை - சமயத்தின் பிரமாணம்,
அழைப்பின் பிரமாணம் ஒவ்வொரு துக்கத்திலிருக்கும் ஆத்மாவுக் கும்
மனதின் சகாஷ் மூலம் சுகம்-சாந்தியின் துளியைக் கொடுக்க வேண்டும்.
காரணம் என்ன? பாப்தாதா சில நேரம் குழந்தைகளைத் திடீரென்று
பார்க்கிறார் -- என்ன செய்து கொண்டிருக் கிறார்கள்? ஏனென்றால்
குழந்தைகளிடம் அன்பு உள்ளது இல்லையா? குழந்தைகளோடு செல்ல
வேண்டும். தனியாகச் செல்லக் கூடாது. கூடவே செல்வீர்கள் இல்லையா?
கூடவே செல்வீர்களா? முன்னால் அமர்ந்திருப்பவர்கள் கையை
உயர்த்தாமல் இருக்கிறார்கள். போக மாட்டீர்களா? போக வேண்டும்
இல்லையா? பாப்தாதாவும் குழந்தைகளின் காரணத்தால் காத்துக்
கொண்டிருக்கிறார். அட்வான்ஸ் பார்ட்டி, உங்கள் தாதிமார், உங்கள்
விசேஷ பாண்டவர்கள், உங்கள் அனைவருக் காகவும் காத்துக்
கொண்டிருக் கிறார்கள். அவர்களும் மனதில் பக்கா உறுதிமொழி
எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் - நாம் அனைவரும் கூடவே செல்வோம்.
கொஞ்சம் பேர் இல்லை. அனை வரோடு கூட செல்ல வேண்டும். எனவே நாளை
அமிர்த வேளை தன்னை சோதித்துப் பார்க்க வேண்டும் - எந்த
விஷயத்தில் குறை உள்ளது? மனதினுடையதா, வார்த்தையினுடையதா,
அல்லது கர்மத்தில் வருவதினுடையதா? பாப்தாதா ஒரு முறை அனைத்து
சென்டர்களிலும் சுற்றி வந்தார். என்ன பார்த்தார் எனச் சொல்லவா?
குறை எந்த விஷயத்தில் இருந்தது? ஆக, இது தான் காணப் பட்டது -
ஒரு விநாடியில் மாற்றம் செய்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதில் தான் குறை உள்ளது. எது வரை முற்றுப்புள்ளி வைக்கிறீர்களோ,
அதற்குள் என்னென்ன நடந்து விடுமோ தெரியாது. பாப்தாதா
சொல்லியிருக்கிறார் - கடைசி நேரத்தில் ஒரு கணம் இருக்கும் இதில்
முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதிருக்கும். ஆனால் என்ன பார்த்தார்?
வைக்க வேண்டியது முற்றுப் புள்ளி, ஆனால் கமா விழுந்து விடுகிறது.
மற்றவர்களின் விஷயங்களை நினைவு செய்து, இது ஏன் நடக்கிறது? இது
என்ன இப்படி நடக்கிறது? இதில் ஆச்சரியக்குறி விழுந்து விடுகிறது.
ஆக, முற்றுப்புள்ளி விழுவதில்லை. ஆனால் கமா, ஆச்சரியக்குறியின்
அடையாளம் மற்றும் ஏன் என்ற கேள்விகளின் க்யு உருவாகி விடுகிறது.
எனவே இதை சோதித்துப் பாருங்கள். முற்றுப்புள்ளி வைப்பதற்கான
பழக்கம் இல்லை என்றால் கடைசி நேரமும் சிரேஷ்டமானதாக இருக்காது.
உயர்ந்ததாக இருக்காது. எனவே பாப்தாதா வீட்டுப்பாடம் கொடுத்துக்
கொண்டிருக்கிறார் - குறிப்பாக, நாளை அமிர்தவேளையில் சோதித்துப்
பார்த்து மாற்றிக் கொள்ள வேண்டும். ஆக, இப்போது 18 ஜனவரி வரை
விநாடியில் முற்றுப்புள்ளி வைப்பதற்கான அப்பியாசம் அடிக்கடி
செய்யுங்கள். ஜனவரி மாதத்தில் அனைவரும் தங்கள் சீட்டை எழுதிப்
பெட்டியில் இட வேண்டும் -- 18 தேதி வரை என்ன ரிசல்ட் இருந்தது?
முற்றுப்புள்ளி விழுந்ததா அல்லது மற்ற குறிகள் விழுந்தனவா?
பிடித்திருக்கிறதா? பிடித்திருக்கிறதா? தலையசையுங்கள்.
ஏனென்றால் பாப்தாதா வுக்குக் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு
உள்ளது. தனியாகச் செல்ல விரும்பவில்லை. எனவே என்ன செய்வீர்கள்?
இப்போது வேகமாகத் தீவிரப் புருஷார்த்தம் செய்யுங்கள். இப்போது
மந்தமான புருஷார்த்தம் வெற்றியைக் கொடுக்காது.
தூய்மை என்பது பர்சனாலிட்டி, ரியல்ட்டி, ராயல்ட்டி எனச் சொல்லப்
படுகிறது. எனவே தனது ராயல்டியை நினைவு செய்யுங்கள். அநாதி
ரூபத்தில் கூட ஆத்மாக்கள் நீங்கள் பாபாவுடன் கூடவே தங்கள்
தேசத்தில் விசேஷ ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். எப்படி ஆகாயத்தில்
விசேஷ நட்சத்திரங் கள் ஜொலிக்கின்றனவோ, அது போல் நீங்கள் அநாதி
ரூபத்தில் விசேஷ நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றீர்கள். ஆக, தனது
அநாதி காலத்தின் ராயல்டியை நினைவு செய்யுங்கள். பிறகு
சத்யுகத்தில் இப்போது வருவீர்களானால் தேவதா ரூபத்தின் ராயல்டியை
நினைவு செய்யுங்கள். அனைவரின் தலை மீதும் ராயல்டியின்
ஒளிக்கிரீடம் உள்ளது. அநாதி, ஆதி எவ்வளவு ராயல்டி! பிறகு
துவாபர யுகத்தில் வருவீர்களானால் அப்போதும் உங்கள்
சித்திரங்களைப் போன்ற ராயல்டி வேறு யாருக்கும் கிடையாது.
தலைவர்களின், நடிகர்களின், தர்ம ஆத்மாக்களின் சித்திரங்கள்
உருவாகின்றன, ஆனால் உங்கள் சித்திரங்களுக்கான பூஜை மற்றும்
உங்கள் சித்திரங்களின் விசேஷதா எவ்வளவு ராயலாக உள்ளது!
சித்திரங்களைப் பாரத்தே அனைவரும் குஷியடைந்து விடு கின்றனர்.
சித்திரங்கள் மூலமாகவே எவ்வளவு ஆசிர்வாதங்கள் பெறுகின்றனர்! ஆக,
இந்த ராயல்டி அனைத்தும் பவித்திரதாவினுடையது. பவித்திரதா
பிராமண வாழ்க்கையின் பிறப்புரிமையாகும். பவித்திரதாவின்
குறைபாடு முடிந்து போக வேண்டும். இது அப்படியே நடந்து விடாது.
அந்தச் சமயம் வைராக்கியம் வந்து விட்டால் நடந்து விடும். மிக
நல்ல-நல்ல விஷயங்களைச் சொல்கிறார்கள். பாபா, நீங்கள்
கவலைப்படாதீர்கள், ஆகி விடும். ஆனால் பாப்தாதாவுக்கு இந்த ஜனவரி
மாதத்திற்குள் விசேஷமாகப் பவித்திரதாவில் ஒவ்வொருவரையும்
சம்பன்னமாக்க வேண்டும். பவித்திரதா என்பது வெறும்
பிரம்மச்சரியம் மட்டுமில்லை. வீண் சங்கல்பம் கூட அபவித்திரதா
தான். வீண் வார்த்தைகள், ஆவேசத்தில் பேசப்படும் வீண்
வார்த்தைகள், கோபத்தின் அம்சம் ஆவேசம் எனச் சொல்லப் படுகிறது.
அதுவும் முடிந்து போக வேண்டும். சம்ஸ்காரத்தை அந்த மாதிரி
உருவாக்குங்கள் -- தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துப்
பவித்திரதாவின் வைப்ரேஷன் பெற வேண்டும். ஏனென்றால் உங்களைப்
போன்ற பவித்திரதா, இதன் விளைவாக, ஆத்மாவும் பவித்திரம்,
சரீரமும் பவித்திரம், டபுள் பவித்திரதா பிராப்தியாகின்றது.
எந்தக் குழந்தையாவது முதலில் வரும் போது பாபாவின் வரதானம் என்ன
கிடைக்கின்றது? நினைவிருக்கிறதா? பவித்திர பவ, யோகி பவ. ஆக,
இரண்டு விஷயங்கள் - ஒன்று பவித்திரதா, இன்னொன்று முற்றுப்புள்ளி,
யோகி. பிடித்திருக்கிறதா? அமிர்தவேளையில் பாப்தாதா சுற்றி
வருவார், சென்டர்களையும் சுற்றி வருவார். பாப்தாதாவோ ஒரு
விநாடியில் நாலாபுறமும் சுற்றி வர முடியும். எனவே இந்த ஜனவரி,
அவ்யக்த மாதத்திற்காக ஏதேனும் புதிய பிளானை உருவாக்குங்கள்.
மனசா சேவை, மனசா ஸ்திதி மற்றும் அவ்யக்த கர்மம் மற்றும்
வார்த்தை இவற்றை அதிகப் படுத்துங்கள். ஆக, 18 ஜனவரியன்று
பாப்தாதா அனைவரின் ரிசல்ட்டைப் பார்ப்பார். அன்பு உள்ளது
இல்லையா? 18 ஜனவரி அமிர்தவேளையிலிருந்து அன்பின் உரையாடல் தான்
செய்கிறீர்கள். அனைவரும் புகார் தெரிவிக்கின்றனர் -- பாபா ஏன்
அவ்யக்தமானார்? அப்போது பாபாவும் புகார் தெரிவிக்கிறார் --
சாகாரத்தில் இருந்து கொண்டு பாப்-சமான் எப்போது ஆவீர்கள்?
ஆக, இன்று கொஞ்சம் விசேஷமாக கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.
அன்பும் செலுத்துகிறார், கவனத்தை மட்டுமே ஈர்ப்பதில்லை. அன்பும்
உள்ளது. ஏனென்றால் பாபா இதைத் தான் விரும்புகிறார் -- என்னுடைய
ஒரு குழந்தை கூட இருந்து விடக் கூடாது. ஒவ்வொரு கர்மத்திற்கான
ஸ்ரீமத்தை சோதித்துப் பார்க்க வேண்டும் அமிர்தவேளையிலிருந்து
இரவு வரை கர்மத்திற்கான ஸ்ரீமத் என்னென்ன கிடைத்துள்ளதோ, அதை
சோதித்துப் பார்க்க வேண்டும். வலுவாக இருக்கிறீர்கள் இல்லையா,
கூடவே செல்ல வேண்டும் இல்லையா? செல்ல வேண்டும் என்றால் கை
உயர்த்துங்கள். செல்ல வேண்டுமா? நல்லது, டீச்சர்ஸ்? பின்னால்
இருப்பவர்கள், நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள், பாண்டவர்கள்
கை உயர்த்துங்கள். எப்போது சமமாக ஆவீர்களோ, அப்போது தான் கையோடு
கை இணைத்துச் செல்வீர்கள் இல்லையா? செய்தே ஆக வேண்டும். ஆகியே
தீர வேண்டும். இந்த திட சங்கல்பம் செய்யுங்கள். 15-20 நாள்
இந்த திடத் தன்மை இருக்கிறது. பிறகு மெது-மெதுவாக சிறிது
கவனக்குறைவு வந்து விடுகிறது. ஆக, கவனக்குறைவை முடித்து
விடுங்கள். அதிகத்திலும் அதிகமாகப் பார்த்தால் ஒரு மாதம் முழு
ஊக்கம் உள்ளது. திடதா உள்ளது. பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு
கொஞ்சம்-கொஞ்சம் கவனக்குறைவு ஆரம்பமாகி விடுகிறது. ஆக, இப்போது
இந்த வருடம் முடிந்து விடும். அப்போது எதை முடிவுக்குக் கொண்டு
வருவீர்கள்? வருடத்தை முடிப்பீர்களா, அல்லது வருடத்தோடு கூடவே
சங்கல்பத்திலும் கூட, தாரணையிலும் கூட என்ன பலவீனம் உள்ளதோ,
அதையும் முடித்து விடுவீர்களா? செய்வீர்கள் இல்லையா? கை
உயர்த்தவில்லையே? ஆக, தானாகவே மனதில் இந்த ரிக்கார்டு ஒலிக்க
வேண்டும் - இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும் (அப் கர் ஜானா
ஹை) வெறுமனே செல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் ராஜ்யத்திலும்
வர வேண்டும். நல்லது. யார் முதல் தடவை பாப்தாதாவோடு
சந்திப்பதற்காக வந்திருக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள்,
எழுந்து நில்லுங்கள்.
ஆக, முதல் தடவையாக வந்திருப்பவர்களுக்கு வாழ்த்துகள். லேட்டாக
வந்திருக்கிறீர்கள். டூ லேட்டாக வரவில்லை. ஆனால் தீவிர
புருஷார்த்தத்திற்கான வரதானத்தை சதா நினைவில் வைக்க வேண்டும்.
தீவிர புருஷார்த்தம் செய்தே ஆக வேண்டும். செய்வோம், வோம்-வோம்
என்று சொல்லக் கூடாது. செய்தே ஆக வேண்டும். கடைசியில் வந்தாலும்
வேகமாகச் சென்று முதலில் வர வேண்டும். நல்லது.
நாலாபுறம் உள்ள மகான் பவித்திர ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின்
விசேஷமான மனப்பூர்வ ஆசிர்வாதங்கள், மனப்பூர்வ அன்பு மற்றும்
மனதில் நிறைந்து விடுவதற்கான வாழ்த்துகள். பாப்தாதா அறிவார்,
பாப்தாதாவின் வருகையின் போதெல்லாம் ஈமெயில் அல்லது கடிதங்கள்,
விதவிதமான சாதனங்கள் மூலம் நாலாபுறம் உள்ள குழந்தைகள் அன்பு
நினைவுகளை அனுப்புகின்றனர். மற்றும் பாப்தாதாவுக்கு சொல்வதற்கு
முன்பாகவே யாராவது கொடுப்பார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே
அனைவரின அன்பு நினைவுகளும் வந்து சேர்ந்து விடுகின்றன.
ஏனென்றால் மிகுந்த அன்போடு நினைவு செய்யும் குழந்தை இருக்கிறார்
என்றால் அவருடனான தொடர்பு மிக வேகமாக வந்து சேர்ந்து
விடுகின்றது. நீங்கள் 3-4 நாள்களுக்குப் பிறகு நேரில்
சந்திக்கிறீர்கள். ஆனால் அவர்களுடைய அன்பு நினைவுகள், அதாவது
உண்மையான தகுதியுள்ள ஆத்மாக்களின் நினைவு அதே நேரத்தில்
பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து விடுகின்றது. யாரெல்லாம் உளமார
நினைவு செய்தார்களோ, சாதனங்கள் கிடைக்காதவர்களின் அன்பு
நினைவுகளும் வந்து சேர்ந்து விட்டன. மேலும் பாப்தாதாவும்
ஒவ்வொரு குழந்தைக்கும் பல கோடி மடங்கு அன்பு நினைவுகளை பதிலாகத்
தருகிறார்.
மற்றப்படி நாலாபுறமும் இனி இரண்டு சொற்களுக்கு மிகுந்த
முக்கியத்துவம் கொடுங்கள் -- ஒன்று, முற்றுப்புள்ளி மற்றும்
இரண்டாவது, சம்பூர்ண பவித்திரதாவை பிராமணப் பரிவாரம்
முழுவதிலும் பரப்ப வேண்டும். பலவீனமானவர்களுக்கும் சகயோகம்
கொடுத்து உருவாக்குங்கள். இது மகா புண்ணியம். விட்டு
விடாதீர்கள். இவர் இப்படித் தான், இவர் மாறவே மாட்டார் என்று
அந்த மாதிரி சாபமிடாதீர்கள். புண்ணியத்தின் காரியம் செய்யுங்கள்.
மாறிக் காட்டுவார்கள். மாறித் தான் ஆக வேண்டும். அவர்களது
நம்பிக்கையை அதிகப் படுத்துங்கள். கீழே விழுந்து விட்டவர்களை
மேலும் விழச் செய்யாதீர்கள். ஆதரவு கொடுங்கள். சக்தி கொடுங்கள்.
ஆக, நாலாபுறம் உள்ள அதிர்ஷ்டசாலிகளாகிய மகிழ்ச்சி நிறைந்த,
மகிழ்ச்சியை அனைவர்க்கும் வழங்கக்கூடிய குழந்தைகளுக்கு மிகுந்த
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
ஆசீர்வாதம்:
செக்கிங் செய்வதன் விசேஷதாவைத் தனது உண்மையான சம்ஸ்காரமாக
ஆக்கக் கூடிய மகான் ஆத்மா ஆகுக.
என்னவெல்லாம் சங்கல்பம் செய்கிறீர்களோ, வார்த்தைகளைப்
பேசுகிறீர்களோ, கர்மம் செய்கிறீர் களோ, சம்பந்தம்-தொடர்பில்
வாருங்கள், இதை மட்டும் சோதித்துப் பாருங்கள் - இது பாபாவுக்கு
சமமாக உள்ளதா? முதலில் ஒப்பிட்டுப் பாருங்கள். பிறகு
நடைமுறையில் கொண்டு வாருங்கள். எப்படி ஸ்தூலத்திலும் கூட அநேக
ஆத்மாக்களின் சம்ஸ்காரங்கள் உள்ளன - முதலில் சோதித்துப்
பார்ப்பார்கள், பிறகு ஏற்றுக் கொள்வார்கள். அது போல் மகான்
பவித்திர ஆத்மாக்கள் நீங்கள் சோதிக்கும் மெஷினரியை
வேகப்படுத்துங்கள். இதை உங்களது உண்மையான சம்ஸ்காரமாக ஆக்கிக்
கொள்ளுங்கள் - இதுவே அனைத்திலும் பெரிய மகான் தன்மை ஆகும்.
சுலோகன்:
சம்பூர்ண பவித்திரமானவராக மற்றும் யோகியாக ஆவது தான்
அன்பிற்குப் பிரதிபலன் கொடுப்பதாகும்.
அவ்யக்த இஷாரா : இந்த அவ்யக்த மாதத்தில் பந்தன் முக்த்தாக
இருந்து ஜீவன்முக்த் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
இப்போது என்னென்ன பரிஸ்திதிகள் வந்து கொண்டிருக்கின்றனவோ,
அல்லது வர இருக் கின்றனவோ, இயற்கையின் ஐந்து தத்துவங்களும்
நன்றாக அசைத்துப் பார்ப்பதற்கு முயற்சி செய்யும். ஆனால்
ஜீவன்முக்த் விதேகி அவஸ்தாவின் அப்பியாசி ஆத்மாக்கள் ஆடாத,
அசையாத வராக இருந்து, பாஸ் வித் ஆனர் ஆகி, அனைத்து
விஷயங்களையும் சுலபமாகக் கடந்து செல்வார்கள். அதனால் நிரந்தர
கர்மயோகி, நிரந்தர சகஜயோகி, நிரந்தர முக்த் ஆத்மாவின்
சம்ஸ்காரத்தை இப்போதிருந்தே அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.