04-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஆரம்பத்திலிருந்து யார் பக்தி செய்தார்களே, 84 பிறவிகள் எடுத்தார்களோ, அவர்கள் உங்களுடைய ஞானத்தை மிகவும் இரசனையோடு கேட்பார்கள், சைகை மூலமே புரிந்துகொள்வார்கள்.

கேள்வி:
தேவி-தேவதை வம்சத்தில் நெருக்கத்தில் வரக்கூடிய மற்றும் தூரத்தில் வரக்கூடிய ஆத்மாவை எவ்வாறு கண்டறிந்து கொள்ளலாம்?

பதில்:
யார் உங்களுடைய தேவதை வம்சத்தை சேர்ந்த ஆத்மாக்களோ, அவர்கள் ஞானத்தின் எல்லா விஷயங்களையும் கேட்டவுடன் புரிந்து கொள்வார்கள். அவர்கள் குழப்பமடைய மாட்டார்கள். எவ்வளவு அதிக பக்தி செய்துள்ளார்களோ, அவ்வளவு அதிகமாக கேட்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். ஆகவே, குழந்தைகள் பிறருடைய நாடி பார்த்து சேவை செய்ய வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு புரியவைக்கின்றார். ஆன்மீகத் தந்தை நிராகாரமாக இருக்கிறார், இந்த சரீரத்தின் மூலம் புரியவைக்கின்றார், நாம் ஆத்மாக்கள் நிராகாரமாக இருக்கிறோம். இந்த சரீரத்தின் மூலம் கேட்கின்றோம் என குழந்தைகள் புரிந்துள்ளனர். இரண்டு பாபா இங்கு இருக்கின்றனர் என குழந்தைகள் புரிந்துள்ளனர். இரண்டு தந்தையும் சேர்ந்து இருக்கின்றனர் அல்லவா! மூன்று தந்தையையும் புரிந்துள்ளனர், ஆனால் அவரைவிட இவர் நன்றாக இருக்கிறார், இவரைவிட அவர் நன்றாக இருக்கி;ன்றார், வரிசைப் படிதான் அல்லவா! ஆக அந்த லௌகீக சம்மந்தத்திலிருந்து வெளியேறி இந்த இருவர் மீது சம்மந்தம் வந்து விட்டது. மனிதர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது என தந்தை புரியவைக்கின்றார். உங்களிடத்தில் கண்காட்சி, மேளாவைப்பார்க்க நிறையபேர் வருகின்றனர். 84 பிறவிகள் அனை வரும் எடுப்பதில்லை எனவும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். இவர்கள் 84 பிறவிகள் எடுப்பவர்களா அல்லது 10, 20 பிறவிகள் எடுப்பவர்களா என எப்படித் தெரியும்? யார் ஆரம்பம்; முதல் அதிக பக்தி செய்தனரோ, அவர்களுக்கு அதற்கான பலனும் மிக விரைவாக, நல்லதாகக் கிடைக்கும் என குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். மிக தாமதமாக, குறைவாக பக்தி செய்திருந்தால் பலனும் அந்தளவு குறைவாக, தாமதமாகக் கிடைக்கும். இதனை பாபா சேவை செய்யும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். கேளுங்கள்!. நீங்கள் பாரதவாசி தானே? தேவி-தேவதைகளை ஏற்கின்றீர்கள் தானே! பாரதத்தில் இலட்சுமி-நாராயணர் ஆட்சி இருந்தது. யார் 84 பிறவிகள் எடுப்பவர்களோ, ஆரம்பம் முதல் பக்தி செய்தார்களோ அவர்கள் உடனே புரிந்து கொள்வார்கள், உண்மையிலேயே ஆதி சனாதன தேவி-தேவதை தர்மம் இருந்தது என்பதை இரசனையோடு கேட்பார்கள். சிலர் பார்த்து விட்டுச்சென்றுவிடுவார்கள், புத்தியில் எதுவும் பதியாமல் கேட்காதவர் போன்று இருப்பார்கள். ஆக அவர்கள் நமது தர்மத்தைச் சேர்ந்தவர் அல்ல எனப் புரிந்துகொள்ள வேண்டும், ஒருவேளை எதிர்காலத்தில் புரிந்து கொள்வார்கள். சிலருக்குப் புரியவைத்தால் உடனே தலையை ஆட்டிக் கொண்டு கேட்பார்கள், உண்மையிலேயே 84 பிறவிகளின் கணக்கு சரிதான். 84 பிறவிகள் என எப்படிப் புரிந்துகொள்வது? எனக் கேட்டால், நல்லது 84 இல்லையெனில் 82 பிறவிகள் எடுத்தாலும் தேவதை தர்மத்தில் வருவீர்கள். இதனைக்கூட புத்தியால் புரிந்து கொள்ளவில்லையெனில் இவர்கள் 84 பிறவிகள் எடுப்பவர் இல்லை எனப் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் குறைவாகத்தான் கேட்பார்கள். எவ்வளவு அதிகமாக பக்தி செய்தார்களோ அவர்கள் அதிகமாக கேட்பதற்கு முயற்சி செய்வர், உடனே புரிந்துகொள்வர். குறைவாகப் புரிந்துகொண்டால், அவர்கள் தாமதமாக வருவர் எனப் புரிந்துகொள்ளுங்கள்., பக்தியும் தாமதமாக செய்திருப்பார்கள். நிறைய பக்தி செய்பவர்கள் சைகை மூலமாகவே புரிந்து கொள்வார்கள். நாடகம் திரும்பச் சுழலும் அல்லவா! எல்லா ஆதாரமும் பக்தியில் உள்ளது. இவர் (பாபா) அனைவரைக்காட்டிலும் முதல் நம்பரில் பக்தி செய்தார் அல்லவா! குறைவாக பக்தி செய்தால் பலனும் குறைவாகவே கிடைக்கும். இவை யனைத்தும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். மேலோட்டமான புத்தியுடையவர் கள் தாரணை செய்யமுடியாது. இந்தக் கண்காட்சி, மேளா தொடர்ந்து நடக்கும். எல்லா மொழிகளிலும் உருவாகும். முழு உலகிற்கும் புரிய வைக்க வேண்டுமல்லவா! நீங்கள் தான் உண்மையான செய்தியாளர். அந்த தர்மத் தலைவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் யாரும் குரு இல்லை. குருவிடம் செல்கின்றனர், அவர்கள் சத்கதி தருபவர் அல்ல. அவர்கள் வரும்போது அவர்களின் ஸ்தாபனம் இங்கு இல்லையெனில், சத்கதி யாருக்குத் தருவது? குரு எனில் சத்கதி கொடுத்து, துக்கமான உலகிலிருந்து விடுவித்து அமைதியான உலகம் அழைத்துச் செல்லவேண்டும். கிறிஸ்துவும் குரு அல்ல, அவர் தர்மத்தை படைத்தவர் மட்டுமே. அவர்களுக்கு வேறு எந்த அந்தஸ்தும் இல்லை. முதன் முதலில் சதோபிரதானத்திலிருந்து சதோ, இரஜோ, தமோவில் வருபவர்களுக்குத்தான் அந்தஸ்து இருக்கிறது. அவர்கள் தனது தர்மத்தை படைத்துவிட்டு மீண்டும் மறுபிறவி எடுப்பார்கள். பிறகு எப்போது அனைவரும் தமோபிரதான நிலை அடைவார்களோ அப்போது தந்தை வந்து அனைவரையும் தூய்மையாக்கி அழைத்துச் செல்வார். சுத்தமாகிவிட்டால் பிறகு இந்த அசுத்த உலகில் இருக்க முடியாது. தூய்மையான ஆத்மாக்கள் முக்திக்குச் சென்று பிறகு ஜீவன் முக்தியில் வருவார்கள். காப்பாற்றுவர், வழிகாட்டி எனக் கூறுகின்றனர். ஆனால், இதனுடைய அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது. அர்த்தம் தெரிந்தால் இதனைப் புரிந்துகொள்வர். சத்யுகத்தில் பக்தி மார்க்கத்தின் வார்த்தை கூட இருக்காது.

இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. ஆகவே அனைவரும் தனது பங்கை நடிக்கின்றனர். சத்கதி ஒருவர்கூட அடையவில்லை. இப்போது உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்கின்றது. நான் ஒவ்வொரு கல்பமும் சங்கமயுகத்தில் வருகின்றேன் என தந்தையும் கூறுகின்றார். இதைத்தான் கல்யாணகாரி சங்கமயுகம் எனக் கூறப்படுகிறது, வேறு யுகத்தை கல்யாணகாரி எனக் கூறுவதில்லை. சத்யுகம் மற்றும் திரேதாயுகத்தின் இடைப்பட்ட சங்கமத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. சூர்யவம்சம் கடந்த பிறகு சந்திரவம்ச அரசாட்சி நடைபெறும். சந்திர வம்சத்திற்கு பிறகு வைசிய வம்சம் வருவார்கள். அதற்குப்பிறகு என்னவாகும், அதெல்லாம் யாருக்கும் தெரியாது. சித்திரங்களை வைத்திருந்தால் இவர்கள் சூர்யவம்சி நம்மைவிடப் பெரியவர்கள், இவர்கள் சந்திர வம்சிகளாக இருந்தார்கள். அவர்கள் மஹாராஜா, இவர்கள் இராஜா அவர்கள் பெரிய செல்வந்தர் களாக இருந்தார்கள், இவர்கள் தோல்வி அடைந்தவர்கள். எனப் புரிந்து கொள்வார்கள். இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. இப்போது பாபா வந்து புரியவைக்கின்றார். எங்களைக் காப்பாற்றுங்கள், பதீத நிலையிலிருந்து பாவனமாக்குங்கள் என அனைவரும் கூறு கின்றனர். சுகத்திற்காக கூறவில்லை. ஏனென்றால், சுகத்தைப்பற்றி சாஸ்திரத்தில் நிந்தனை செய்துவிட்டனர். மனதிற்கு அமைதி எப்படிக் கிடைக்கும்? என அனைவரும் கேட்கின்றனர்.. உங்களுக்கு சுகம், சாந்தி இரண்டும் கிடைக்கிறது, எங்கு அமைதியோ அங்கு சுகமும் கிடைக்கும் என இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள். எங்கு அசாந்தியோ அங்கு துக்கமும் இருக்கும். சத்யுகத்தில் சுகம், சாந்தி இருக்கும், இங்கு துக்கம், அசாந்தி இருக்கிறது. இதனை தந்தை வந்து புரிய வைக் கின்றார். உங்களை மாயா, இராவணன் எவ்வளவு துச்சபுத்தியாக ஆக்கிவிட்டான். இதுவும் நாடகத்தில் உருவாகி இருக்கிறது. நானும்கூட நாடகத்தின் பந்தனத்திற்குக் கட்டுப்பட்டு இருக் கிறேன் என தந்தை கூறுகின்றார். இங்கு நடிப்பு இப்போதுதான், அதனை செய்கின்றேன். பாபா கல்ப-கல்பமாக நீங்களே வந்து பிரஷ்டாச்சாரி பதீத நிலையிலிருந்து சிரேஷ்டாச்சாரி பாவனமாக ஆக்குகின்றீர்கள் எனக் கூறுகின்றனர். இராவணன் மூலம் பிரஷ்ட்டாச்சாரி ஆகிவிட்டீர்கள். இப்போது தந்தை மூலமாக மனிதனிலிருந்து தேவதை ஆகின்றீர்கள். இந்த மகிமையின் அர்த்தத்தை தந்தையே வந்து புரியவைக்கின்றார். அகால (அழிவற்ற) சிம்மாசனத்தில் அமர்ந்திருப் பவர்கள்கூட அர்த்தத்தை புரியவில்லை. பாபா உங்களுக்குப் புரிய வைத்துள்ளார்-ஆத்மா அகால மூர்த்தியாக இருக்கிறது. ஆத்மாவிற்கு இந்த சரீரம் இரதமாக இருக்கிறது, ஆத்மாவை காலன் சாப்பிடமுடியாது,

ஆத்மா அமர்ந்துள்ளது. சத்யுகத்தில் உங்களை காலன் சாப்பிடமுடியாது, ஒருபோதும் அகால மரணம் ஏற்படாது, அதுதான் அமரலோகம், இது மரணலோகம். இதனுடைய அர்த்தமும் தெரியவில்லை. மனதால் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், நீங்கள் பாவனமாவீர்கள் என மிகவும் சகஜமாக புரியவைக்கிறேன் என தந்தை கூறுகின்றார். சாது, சந்நியாசிகளும் பதீத பாவனரே என பாடுகின்றனர், பதீத பாவனர் தந்தையை அழைக்கின்றனர். பதீத பாவனரே என எங்கு சென்றாலும் கூறுகின்றனர். சத்தியமானது ஒருபோதும் மறைய முடியாது. இப்போது பதீத பாவனர் தந்தை வந்துள்ளார். என நீங்கள் புரிந்துள்ளீர்கள், அவர் நமக்கு வழிகாட்டு கின்றார். கல்பத்திற்கு முன்பாகவும் சொல்லப்பட்டது, தன்னைத்தான் ஆத்மா எனப் புரிந்து மனதால் என்னை மட்டும் நினைவு செய்தால் நீங்கள் சதோபிரதானமாக ஆவீர்கள். நீங்கள் அனைவரும் அன்பான நாயகன் என்னுடைய தோழிகள், அங்கே நாயகன்-நாயகி ஒரு பிறவிக்காக இருப்பார்கள், நீங்கள் பல பிறவிகளின் அன்பான நாயகிகள். ஹே! பிரபு என நினைவு செய்து வந்தீர்கள். கொடுப்பவர் ஒரேயொரு தந்தை மட்டுமே அல்லவா! அனைத்து குழந்தைகளும் தந்தையிடம் மட்டுமே கேட்பார்கள். ஆத்மா துக்கமடையும் போது தான் தந்தையை நினைவு செய்கிறது. பாபா வந்து எங்களுக்கு சத்கதி கொடுங்கள் என துக்கத்தில் நினைவு செய்கின்றனர். நல்லது, குழந்தை வேண்டு மென குருமார்களிடம் செல்கின்றனர். நல்லது, குழந்தை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடை கின்றனர், குழந்தை கிடைக்கவில்லையெனில், ஈஸ்வரனின் விதி என்கின்றனர். நாடகத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஒருவேளை நாடகம் எனக்கூறினால் பிறகு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் நாடகத்தை அறிந்துள்ளீர்கள், வேறு யாருக்கும் தொல்யாது, சாஸ்திரத்திலும் இல்லை. நாடகம் என்றால் நாடகம் தான், அதனைப்பற்றிய மூன்று காலத்தையும் அறிய வேண்டும், நான் ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் வருகின்றேன். நான்கு யுகங்களும் முற்றிலும் சம அளவு உடையது. ஸ்வஸ்திகாவிற்கும் மகத்துவம் இருக்கிறதல்லவா? கணக்கு எழுதும் போது ஸ்வஸ்திகாவை எழுதுகின்றனர். இங்கும் கணக்கு இருக்கிறது. நமக்கு இலாபம் நஷ்டம் எவ்வாறு ஏற்படுகின்றது. நஷ்டம் ஏற்பட்டு இப்போது முழு நஷ்டம் ஆகிவிட்டது. இது வெற்றி, தோல்வியின் விளையாட்டாக இருக்கிறது. செல்வம் மற்றும் ஆரோக்கியம் இருந்தால் சுகம் இருக்கிறது. செல்வம் இருந்து ஆரோக்கியம் இல்லையெனில் சுகம் இருக்காது. உங்களுக்கு நான் ஆரோக்கியம், செல்வம் தருகின்றேன், எனவே, மகிழ்ச்சியும் இருக்கும். யாராவது சரீரத்தை விட்டால் இன்னார் சொர்க்கவாசி ஆகி விட்டார் எனக் கூறுகின்றனர். ஆனால் மனதில் துக்கமாகி விடுகின்றனர். இதில் மிகவும் மகிழ்ச்சி தான் அடைய வேண்டுமல்லவா! பிறகு அந்த ஆத்மாவை நரகத்தில் ஏன் அழைக்க வேண்டும்? எதுவும் புரியவில்லை. இப்பொழுது தந்தை வந்து இந்த அனைத்து விசயங்களையும் புரிய வைக்கினறார். விதை மற்றும் மரத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். இப்படிப்பட்ட மரத்தை வேறு யாரும் உருவாக்க முடியாது. இதனை இவர் உருவாக்கவில்லை. இவருக்கு வேறு யாரும் குரு இல்லை, ஒரு வேளை குரு இருந்தால் சிஷ்யர்களும் இருப்பார்கள் தானே! இவருக்கு யாராவது குரு கற்றுக் கொடுத்தாரா அல்லது பரமாத்மாவின் சக்தி காரியம் செய்கிறதா என புரிந்துள்ளனர். அட, பரமாத்மாவின் சக்தி எப்படி பிரவேசம் செய்யும்? பாவம் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. நான் சாதாரண வயதான உடலில் வந்திருக்கிறேன், உங்களுக்குக் கற்ப்பிக்கிறேன், இவரும் கேட்கின்றார், கவனம் என் மீது உள்ளது, இவரும் மாணவராக இருக்கிறார். இவர் விநாசக் காட்சியும் பார்த்தார், ஆனால் எதுவும் புரியவில்லை. நாளடைவில் புரிந்து கொண்டார். எவ்வாறு நீங்களும் அவ்வாறே புரிந்துள்ளீர்கள். தந்தை உங்களுக்குப் புரிய வைக்கின்றார், இடையில் இவரும் புரிந்து கொள்கிறார், படிக்கின்றார், ஒவ்வொரு மாணவரும் படிப்பதற்கு முயற்சி செய்வார்கள். பிரம்மா-விஷ்ணு- சங்கர் சூட்சுமவதன வாசிகள் அவர்களுடைய பங்கு என்ன என்று யாருக்கும் தெரியாது. தந்தை ஒவ்வொரு விசயத்தையும் தானாகவே புரிய வைக்கின்றார். நீங்கள் கேள்வி கேட்க வேண்டியதில்லை. மேலே இருப்பது சிவ பரமாத்மா பிறகு தேவதைகள், அவர்களை எவ்வாறு ஒன்று சேர்க்க முடியும்?.. இப்போது தந்தை இவருக்குள் பிரவேசம் செய்திருக்கிறார், எனவே பாப்தாதா என அழைக்கப் படுகிறார், என குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். தந்தை வேறு, தாதா வேறாக இருக்கின்றனர். தந்தை சிவன், தாதா பிரம்மாவாக இருக்கின்றார். ஆஸ்தியானது சிவபாபாவிடமிருந்து பிரம்மா மூலம் கிடைக்கிறது. பிராமணர்கள் பிரம்மாவின் குழந்தைகள். தந்தை நாடகத் திட்டத்தின்படி தத்தெடுத் துள்ளார். முதல் நம்பர் பக்தர் இவர் தான் என தந்தை கூறுகின்றார். 84 பிறவிகள் இவர்தான் முதலில் எடுக்கின்றார். அழகானவர் மற்றும் கருப்பானவரும் இவர்தான். கிருஷ்ணர் சத்யுகத்தில் அழகானவராக இருந்தார், கலியுகத்தில் கருப்பாகி விட்டார். பதீதமாக இருப்பவர் பாவனமாகின்றார், நீங்களும் அவ்வாறு ஆகின்றீர்கள். இது தான் இரும்பு உலகம், அது பொன்னுலகமாகும். ஏணிப்படி யைப்பற்றி யாருக்கும் தெரியாது. யார் பிற்காலத்தில் வருகின்றார்களோ அவர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை, அவர்கள் குறைவாக பிறவிகள் எடுப்பதால் அதிகமாக மற்றும் குறைவாக பிறவிகள் யார் எடுக்கின்றனர் என பாபா புரிய வைக்கின்றார், இதுதான் ஞானமாகும். தந்தை மட்டுமே ஞானம் நிறைந்தவராக, பதீத பாவனராக இருக்கினறார். மூன்று காலத்தின் ஞானத்தைக் கூறுகின்றார். அவர்கள் இதனைப்பற்றி தெரியாது எனக் கூறி விடுகின்றனர். தன்னுடைய ஆத்மாவைப் பற்றி தெரியாதவர்கள் பிறகு தந்தையை எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? வெறுமனே கூறுகின்றார்களே தவிர, ஆத்மா எப்படிப்பட்டது என எதுவும் தெரியாது. ஆத்மா அழியாதது, அதில் 84 பிறவிகளின் அழியாத பார்ட் பதிவாகி உள்ளது என நீங்கள் அறிந்துள்ளீர்கள். இவ்வளவு சிறிய ஆத்மாவில் எவ்வளவு பார்ட் பதிவாகி உள்ளது! இதனை யார் நல்ல முறையில் கேட்டு, புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் நெருக்கமானவர்கள். புத்தியில் பதியவில்லை யெனில் தாமதமாக வருபவர்களாக இருப்பார்கள். ஞானம் சொல்லும்போது நாடி பார்க்க வேண்டும். புரிய வைப்பவர் களும் வரிசைப்படி தான் இருக்கின்றனர் அல்லவா! இது உங்களுடைய படிப்பாகும், இதனால் இராஜ்யம் உருவாகின்றது, சிலர் மிக உயர்ந்த பதவி அடைகின்றனர், சிலர் பிரஜை நிலையிலும் வேலைக்காரர்களாக ஆகின்றனர். மற்றபடி சத்யுகத்தில் எந்த துக்கமும் இருக்காது. அதைத்தான் சுகதாமம், தோட்டம் என அழைக்கப்படுகிறது. கடந்த காலத்தில் இருந்ததால் தான் நினைவு செய் கின்றனர் அல்லவா! சொர்க்கம் மேலே உள்ளதாக மனிதர்கள் புரிந்துள்ளனர். தில்வாடா கோவிலில் உங்களுடைய முழு நினைவுச்சின்னம் இருக்கிறது. ஆதி தேவன், ஆதி தேவி மற்றும் குழந்தைகள் கீழே யோகத்தில் அமர்ந்துள்ளனர். மேலே இராஜ்யம் காட்டப்பட்டுள்ளது. மனிதர்கள் தரிசனம் செய்வார்கள், பணம் போடுவார்கள், ஆனால் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது, நீங்கள் முதலில் தந்தையின் முழு விபரத்தை அறிந்து விட்டீர்கள், வேறு என்ன வேண்டும்? தந்தையைப் புரிந்து கொண்டதன் மூலம் அனைத்தை யும் புரிந்து விட்டீர்கள், ஆகவே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்பொழுது நாம் சத்யுகம் சென்று தங்க மாளிகை உருவாக்குவோம், இராஜ்ஜியம் செய்வோம் என உங்களுக்குத் தெரிந்திருக் கிறது. யார் நன்கு சேவை செய்யும் குழந்தைகளோ அவர்களுக்கு இந்த ஆன்மீக ஞானத்தை ஆன்மீகத் தந்தை தருகின்றார் என்பது புத்தியில் இருக்கும், ஆத்மாக்களின் தந்தையை ஆன்மிகத் தந்தை என அழைக்கப்படுகின்றார், அவரே சத்கதி தரும் வள்ளலாக இருக்கின்றார். சுகம், சாந்தியின் ஆஸ்தியைத் தருகின்றார். இந்த ஏணி 84 பிறவிகள் எடுக்கக்கூடிய பாரதவாசி களுடையது என நீங்கள் புரியவைக்க முடியும். நீங்கள் வருவது பாதி காலத்திற்குப் பிறகு, எனவே நீங்கள் 84 பிறவிகள் எப்படி எடுக்க முடியும்? அனைவரையும் விட அதிகப் பிறவிகள் நாங்கள் எடுக்கின்றோம், இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும்.. பதீத நிலையிலிருந்து பாவனமாக புத்தியோகத்தை ஈடுபடுத்துவதே முக்கிய விசயமாகும். பாவனமாக ஆவதற்கு வாக்குறுதி செய்து பிறகு பதீதமானால் ஒரேயடியாக உடைந்து விடுவீர்கள், 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுவது போன்றதாகும். புத்தி அசுத்தமாக விடும், மனம் அரித்துக் கொண்டே இருக்கும். வாயால் ஏதும் சொல்ல முடியாது. எனவே, கவனமாக இருங்கள் என தந்தை கூறுகின்றார் நல்லது !

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாடகத்தை சரியாகப் புரிந்து கொண்டு மாயாவின் பந்தனத்தில் இருந்து முக்தியடைய வேண்டும். தன்னை அகாலமூர்த்தி ஆத்மாவாகப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்து பாவனமாக வேண்டும்.

2. உண்மையான செய்தியாளராக ஆகி அனைவருக்கும், சாந்தி தாமம், சுகதாமத்திற்கான வழியைக் காட்ட வேண்டும். இந்த கல்யாணகாரி சங்கமயுகத்தில் அனைத்து ஆத்மாக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.

வரதானம்:
தந்தை மற்றும் சேவையின் நினைவு மூலமாக ஒரே ரசனையின் நிலையை அனுபவம் செய்யும் அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவர் ஆவீர்களாக.

எப்படி ஒரு வேலைக்காரனுக்கு (சர்வன்ட்) எப்பொழுதும் சேவை மற்றும் எஜமானின் நினைவு இருக்குமோ அதேபோல் (வேர்ல்ட் சர்வன்ட்) உலக சேவாதாரி, உண்மையான சேவாதாரி குழந்தைகளுக்கும் தந்தை மற்றும் சேவையை தவிர எதுவும் நினைவு இருப்பதில்லை.இதன் மூலமாகத்தான் ஏக்ரஸ் ஸ்திதி ஒரே ரசனையின் நிலையில் இருப்பதற்கான அனுபவம் ஏற்படு கிறது. அவர்களுக்கு ஒரு தந்தையின் ரசனையை தவிர எல்லா ரசனைகளும் சுவையற்றதாக தோன்றும். ஒரு தந்தையின் ரசனையின் அனுபவம் இருக்கும் காரணத்தால் எங்குமே கவர்ச்சி போக முடியாது. இந்த எக்ரஸ் ஸ்திதிக்கான தீவிர முயற்சியே அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவராக ஆக்கி விடுகிறது. இதுவே சிறந்த குறிக்கோள் ஆகும்.

சுலோகன்:
நாசுக்கான நிலைமைகளின் பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால், தங்களது சுபாவத்தை சக்திசாலி ஆக்கிக் கொள்ளுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: : சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தை கடைபிடியுங்கள்.

எப்பொழுதாவது ஏதாவதொரு அசத்தியமான விசயத்தை பார்க்கிறீர்கள் அல்லது கேட்கிறீர்கள் என்றால் அசத்தியத்தை வாயு மண்டலத்தில் பரப்பாதீர்கள். ஒரு சிலர் கூறுகின்றனர், இது பாவ செயல் ஆகும் அல்லவா, பாவ செயலை பார்க்க பொறுப்பதில்லை என்று. ஆனால் வாயு மண்டலத்தில் அசத்தியத்தின் விசயங்களை பரப்புவது -இது கூட பாவம் ஆகும். லௌகிக குடும்பத் தில் கூட இதுபோல ஏதாவதொரு விசயம் பார்க்கப்படுகிறது அல்லது கேட்கப்படுகிறது என்றால் அது பரப்பப்படுவதில்லை. காதால் கேட்டார்கள் மற்றும் உள்ளத்தில் மறைத்து விட்டார் கள். யாராவது வீணான விசயங்களை பரப்பும் காரியம் செய்கிறார்கள் என்றால் இந்த சிறு சிறு பாவங்கள் பறக்கும் கலையின் அனுபவத்தை நீக்கி விடுகிறது. ஆகவே இந்த கர்மங்களின் ஆழ மான வேகத்தை புரிந்து உண்மையான ரூபத்தில் சத்தியத்தின் சக்தியை தாரணை செய்யுங்கள்.