04-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இப்பொழுது இந்த சீசீ அசுத்தமான உலகிற்கு நெருப்பு பிடிக்கப்போகிறது. எனவே சரீரத்துடன் சேர்ந்து எதையெல்லாம் நீங்கள் எனது, எனது என்று கூறுகிறீர்களோ இதை மறந்து விடவேண்டும். இதன் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது

கேள்வி:
தந்தை உங்களை இந்த துக்கதாமத்தின் மீது ஏன் வெறுப்படைய வைக்கிறார்?

பதில்:
ஏனெனில் நீங்கள் சாந்திதாமம், சுகதாமம் செல்ல வேண்டும். இந்த அசுத்தமான உலகத்தில் இப்பொழுது இருக்க வேண்டியதில்லை. ஆத்மா சரீரத்திலிருந்து பிரிந்து வீடு சென்று விடும். எனவே இந்த சரீரத்தில் எதை பார்ப்பது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எவரொருவருடைய பெயர், உருவத்தின் பக்கம் கூட புத்தி செல்லக்கூடாது. அசுத்தமான எண்ணங்கள் வருகின்றது என்றால் பதவி குறைந்து போய்விடும்

ஓம் சாந்தி.
சிவபாபா தனது குழந்தைகளாகிய ஆத்மாக்களிடம் உரையாடுகிறார். ஆத்மா தான் கேட்கிறது. தங்களை ஆத்மா என்று நிச்சயம் செய்ய வேண்டும். நிச்சயம் செய்த பின் எல்லையில்லாத தந்தை வந்து விட்டார் என்பதை அனைவரையும் அழைத்து புரிய வைக்க வேண்டும். துக்கத்தின் பந்தனத்திலிருந்து விடுவித்து சுகத்தின் சம்பந்தத்தில் அழைத்துச் செல்கிறார். சம்பந்தம் என்று சுகத்திற்கும், பந்தனம் என்று துக்கத்திற்கும் கூறப்படுகிறது. இப்பொழுது இங்கு மற்றவருடைய பெயர் ரூபம் ஆகியவற்றில் மனதைப் பறி கொடுக்காதீர்கள். உங்களது வீட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லையில்லாத பாபா அனைத்து ஆத்மாக்களையும் அழைத்து செல்ல வந்துள்ளார். எனவே இங்கு யார் மீதும் மனதை ஈடுபடுத்தக் கூடாது. இவை எல்லாமே இங்கிருக்கும் சீசீ மோசமான பந்தனம் ஆகும். நாம் இப்பொழுது தூய்மையாகி உள்ளோம். எனவே நமது சரீரத்தை யாரும் சீசீ எண்ணத்துடன் தீண்டக்கூடாது (தொடக்கூடாது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். அந்த எண்ணமே நீங்கி விடுகிறது. பவித்திரமாக ஆகாமல் வீட்டிற்கோ யாரும் திரும்பிச் செல்ல முடியாது. திருந்தவில்லை என்றால் பின் தண்டனைகள் அடைய வேண்டி வரும். இப்பொழுது அனைத்து ஆத்மாக்களும் திருந்தாதவர்களாக இருக்கிறார்கள். சரீரத்துடன் சீசீ காரியம் செய்கிறார்கள். சீசீ தேகதாரிகளிடம் மனம் லயித்துள்ளது. இந்த எல்லா அசுத்தமான எண்ணங்களை விட்டுவிடுங்கள் என்று தந்தை வந்து கூறுகிறார். ஆத்மா சரீரத்திலிருந்து பிரிந்து வீட்டிற்கு செல்ல வேண்டும். இதுவோ மிகவும் சீசீ அசுத்தமான உலகமாகும். இதிலோ இப்பொழுது நாம் இருக்கப்போவதில்லை. மற்றவர்களை பார்ப்பதற்குக் கூட மனம் விரும்புவதில்லை. இப்பொழுதோ தந்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். குழந்தைகளே, தங்களை ஆத்மா என்று உணருங்கள் என்று தந்தை கூறுகிறார். பவித்திரமாக ஆகுவதற்கு தந்தையை நினைவு செய்யுங்கள். எந்த ஒரு தேகதாரி மீதும் மனதை லயிக்கச் செய்யாதீர்கள். முற்றிலும் பற்று நீங்கிவிட வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மிகுந்த அன்பு இருக்கும். ஒருவரையொருவர் பிரிந்து இருக்க முடியாமல் இருப்பார்கள். இப்பொழுதோ தங்களை ஆத்மா சகோதர, சகோதரர் என்று உணர வேண்டும். அசுத்தமான எண்ணங்கள் இருக்கக் கூடாது. இப்பொழுது இது வைஷ்யாலயம் ஆகும் என்று தந்தை புரிய வைக்கின்றார். விகாரங்கள் காரணமாகவே நீங்கள் முதல்-இடை-கடை துக்கம் அடைந்துள்ளீர்கள். தந்தை மிகவுமே வெறுப் பூட்டுகிறார். இபபொழுது நீங்கள் செல்வதற்காக கப்பலில் அமர்ந்துள்ளீர்கள். நாம் இப்பொழுது தந்தையிடம் செல்கிறோம் என்று ஆத்மா புரிந்திருக்கிறது. இந்த முழு பழைய உலகம் மீது வைராக்கியம் உள்ளது. இந்த சீசீ உலகம், நரகம், வைசியாலயத்தில் நாம் இருக்க வேண்டாம். எனவே விஷத்திற்காக அசுத்தமான எண்ணங்கள் வருவது மிகவும் மோசமானது. பதவியும் மோசமாக ஆகிவிடும். நான் உங்களை மலர் போன்ற உலகிற்கு, சுகதாமத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். நான் உங்களை இந்த வைஷ்யாலயத்திலிருந்து வெளியேற்றி சிவாலயத்திற்கு அழைத்துச் செல்வேன். எனவே இப்பொழுது புத்தியின் தொடர்பு புது உலகத்தின் மீது இருக்க வேண்டும். எவ்வளவு குஷி இருக்க வேண்டும்? எல்லையில்லாத பாபா நமக்கு படிப்பிக்கிறார். இந்த எல்லையில்லாத சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது புத்தியில் உள்ளது. சிருஷ்டி சக்கரத்தை அறிந்து கொள்வதால் அதாவது சுயதரிசன சக்கரதாரி ஆவதால் நீங்கள் சக்கரவர்த்தி இராஜா ஆவீர்கள். தேகதாரியிடம் புத்தியோகத்தை ஈடுபடுத் தினீர்கள் என்றால் பதவி மோசமாக ஆகிவிடும். எந்த ஒரு தேகத்தின் சம்பந்தம் கூட நினைவிற்கு வரக்கூடாது. இதுவோ துக்கத்தின் உலகம் ஆகும். இதில் எல்லாமே துக்கம் தான் தரக் கூடியதாக உள்ளது.

தந்தை இந்த அசுத்தமான உலகத்திலிருந்து எல்லோரையும் அழைத்துச் செல்கிறார். எனவே இப்பொழுது புத்தியோகத்தை தங்கள் வீட்டின் மீது செலுத்த வேண்டும். மனிதர்கள் முக்தியில் செல்வதற்காக பக்தி செய்கிறார்கள். ஆத்மாக்களாகிய நாம் இங்கு இருக்கப்போவதில்லை என்று நீங்களும் கூறுகிறீர்கள். நாம் இந்த சீசீ சரீரத்தை விட்டு நமது வீடு செல்வோம். இதுவோ பழைய செருப்பு ஆகும். தந்தையை நினைவு செய்ய செய்ய பின்பு இந்த சரீரம் விடுபட்டு விடும். கடைசி நேரத்தில் தந்தையைத் தவிர வேறு எந்த மற்ற பொருளும் நினைவில் இருக்கக் கூடாது. இந்த சரீரத்தை இங்கேயே விட வேண்டும். சரீரம் போய்விட்டது என்றால் எல்லாமே போய்விட்டது. தேகத்துடன் சேர்த்து எதையெல்லாம் நீங்கள் எனது, எனது என்று கூறுகிறீர்களோ அவை அனைத்தையும் மறந்து விடவேண்டும். இந்த சீசீ உலகிற்கு நெருப்பு பிடிக்கப்போகிறது. எனவே இதன் மீது இப்பொழுது மனதை ஈடுபடுத்தக் கூடாது. இனிமையிலும் இனிமையான குழந்தை களே, நான் உங்களுக்காக சொர்க்கத்தினை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். அங்கு நீங்கள் தான் இருப்பீர்கள். இப்பொழுது உங்கள் முகம் அந்த பக்கம் உள்ளது. தந்தை, வீடு மற்றும் சொர்க்கத்தை நினைவு செய்ய வேண்டும். துக்கதாமத்தின் மீது வெறுப்பு வருகிறது. இந்த சரீரத்தின் மீதும் வெறுப்பு வருகிறது. திருமணம் செய்து கொள்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது? திருமணம் செய்து கொள்வதால் பின் சரீரத்தின் மீது மனம் ஈடுபட்டு விடுகிறது. இந்த பழைய செருப்புக்கள் மீது சிறிதளவு சிநேகம் கொள்ளாதீர்கள் என்று தந்தை கூறுகிறார். இது இருப்பதே வைஷ்யாலயமாக. அனைவரும் பதீமாக உள்ளார்கள். இராவண ராஜ்யம் ஆகும். இங்கு தந்தையைத் தவிர யார் மீதும் மனதை ஈடுபடுத்தக்கூடாது. தந்தையை நினைவு செய்யவில்லை என்றால் பல பிறவிகளின் பாவங்கள் நீங்காது. பின் தண்டனைகள் கூட மிகவும் கடுமையானவை. பதவியும் மோசமாக ஆகிவிடும். பின் ஏன் இந்த கலியுக பந்தனத்தை விடக்கூடாது? பாபா இந்த எல்லையில்லாத விஷயத்தை எல்லோருக்கும் புரிய வைக்கிறார். இரஜோபிரதான சந்நியாசிகள் இருக்கும்பொழுது உலகம் அசுத்தமாக இருக்கவில்லை. காடுகளில் வசித்துக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் கவர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மனிதர்கள் அங்கு சென்று அவர்களுக்கு உணவுகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். பயமற்றவர்களாக இருந்தார்கள். நீங்களும் பயமற்றவர் ஆகவேண்டும். இதில் மிகுந்த விசால புத்தி வேண்டும். தந்தையிடம் வரும் பொழுது குழந்தைகளுக்கு குஷி ஏற்படுகிறது. நாம் எல்லையில்லாத தந்தை யிடமிருந்து சுகதாமத்தின் ஆஸ்தி பெறுகிறோம். இங்கு எவ்வளவு துக்கம் உள்ளது. அனேகமாக அசுத்தத்திலும் அசுத்தமான வியாதிகள் ஏற்படுகின்றன. தந்தை உங்களை எங்கு அழைத்து செல்கிறார் என்றால் அங்கு துக்கம், நோய் ஆகியவற்றின் பெயரே இருக்காது என்று தந்தை உத்திர வாதம் கொடுக்கின்றார். அரை கல்பத்திற்கு உங்களை ஆரோக்கியமானவர்களாக ஆக்குகிறார். இங்கு மற்றவர்களிடம் கூட மனதை ஈடுபடுத்தினீர்கள் என்றால் மிகவும் தண்டனைகள் பெற வேண்டிவரும்.

அந்த மனிதர்கள் 3 நிமிட மௌனம் என்று கூறுகிறார்கள். நீங்கள் புரிய வைக்க முடியும். கூறுங்கள் மௌனத்தால் மட்டும் என்ன ஆகும்? இதுவோ விகர்மங்களை விநாசம் செய்ய வேண்டிய தந்தையை நினைவு செய்ய வேண்டும். அமைதியின் வரமளிப்பவர் தந்தை ஆவார். அவரை நினைவு செய்யாமல் அமைதி எப்படிக் கிடைக்கும்? அவரை நினைவு செய்தீர்கள் என்றால் ஆஸ்தி கிடைக்கும்? டீச்சர்களுக்கு கூட நிறைய பாடம் படிப்பிக்க வேண்டும். எழுந்து நிற்க வேண்டும். யாரும் எதுவும் கூறமாட்டார்கள். தந்தையினுடையவர் ஆகி உள்ளீர்கள் என்றால் வயிற்றுக்குத் தேவையானது அவசியம் கிடைக்கும். சரீர நிர்வாகத்திற்காக நிறைய கிடைக்கும். எப்படி வேதாந்தி சகோதரி (தற்போது ஆப்பிரிக்காவில் உள்ளார்) இருக்கிறார் - அவர் தேர்வு எழுதினார் அதில் ஒரு கேள்வி இருந்தது - கீதையின் பகவான் யார் என்று? அவர் பரமபிதா பரமாத்மா சிவன் என்று எழுதி விட்டார். ஆக அவர் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை மற்றும் யாரெல்லாம் கிருஷ்ணரின் பெயரை எழுதி இருந்தார்களோ அவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துவிட்டார்கள். குழந்தை உண்மையைக் கூறினார். ஆனால் அது தெரியாத காரணத்தால் தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டார்கள். நானோ இது உண்மையிலும் உண்மையாக எழுதினேன் என்று பின் சண்டையிட வேண்டி வந்தது. கீதையின் பகவான் நிராகார் பரமபிதா பரமாத்மா ஆவார். தேகதாரியான கிருஷ்ணர் ஆக முடியாது. ஆனால் குழந்தைக்கு இந்த ஆன்மீக சேவை செய்யும் மனம் இருந்தது, எனவே அதை விட்டுவிட்டார்.

இப்பொழுது தந்தையை நினைவு செய்து செய்து உங்களது இந்த சரீரத்தையும் விட்டு அமைதியின் உலகிற்கு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நினைவு செய்வதால் உடல் நலம் செல்வம் (ஹெல்த், வெல்த்) இரண்டுமே கிடைக்கிறது. பாரதத்தில் சாந்தி சுகம் இருந்தது அல்லவா? இதுபோன்ற விஷயங்களை குமாரிகளாகிய நீங்கள் அமர்ந்து புரிய வைத்தீர் கள் என்றால் உங்கள் பெயரை யாரும் எடுக்க மாட்டார்கள். யாராவது எதிர்த்தார்கள் என்றால் நீங்கள் முறைப்படி போராடுங்கள். பெரிய பெரிய அதிகாரிகளிடம் செல்லுங்கள். என்ன செய்வார்கள்? நீங்கள் பசியால் இறந்து விடுவீர்கள் என்பதல்ல. வாழைப்பழம், தயிர் வைத்துக் கூட நீங்கள் ரொட்டி சாப்பிட முடியும். மனிதர்கள் வயிற்றுக்காக எவ்வளவு பாவம் செய்கிறார்கள்! தந்தை வந்து அனைவரையும் பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக ஆக்குகிறார். இதில் பாவம் செய்ய வேண்டிய, பொய் பேச வேண்டிய எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கோ முக்கால் பாகம் சுகம் கிடைக்கிறது. மற்றது கால் பாகம் துக்கம் அனுபவிக்கறீர்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார் - இனிமையான குழந்தைகளே! என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பல பிறவிகளுக்கான பாவங்கள் சாம்பலாகி விடும். வேறு எந்த வழியும் இல்லை. பக்தி மார்க்கத்தில் நிறைய அடி வாங்குகிறீர்கள். சிவனின் பூஜையை வீட்டில் கூட செய்ய முடியும். ஆனால் பிறகு வெளியில் அவசியம் கோவிலுக்கு செல்கிறார்கள். இங்கோ உங்களுக்கு தந்தை கிடைத்துள்ளார். நீங்கள் படம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தந்தையை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் நமது எல்லையில்லாத தந்தை ஆவார். குழந்தைகளுக்கு சொர்க்க அரசாட்சியின் ஆஸ்தி அளித்து கொண்டிருக்கிறார். நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற் காக வருகிறீர்கள். இங்கு எந்த ஒரு சாஸ்திரத்தை படிக்கும் விஷயம் இல்லை. தந்தையை நினைவு செய்ய வேண்டும் அவ்வளவே. பாபா இதோ நாங்கள் வந்தேவிட்டோம். நீங்கள் வீட்டை விட்டு வந்து எவ்வளவு காலம் ஆகியுள்ளது. சுகதாமத்தை விட்டு 63 பிறவிகள் ஆகியுள்ளன. இப்பொழுது தந்தை சாந்திதாமம், சுகதாமத்திற்கு செல்லுங்கள் என்று கூறுகிறார். இந்த துக்க தாமத்தை மறந்து விடுங்கள். சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். வேறு எந்த கஷ்ட மான விஷயமும் இல்லை. சிவபாபாவிற்கு எந்த ஒரு சாஸ்திரம் ஆகியவை படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பிரம்மா படித்திருக்கிறார். உங்களுக்கோ இப்பொழுது சிவபாபா படிப்பிக் கிறார். இந்த பிரம்மா கூட படிப்பிக்க முடியும். ஆனால் நீங்கள் எப்பொழுதும் சிவபாபா தான் படிப்பிக்கிறார் என்று கருதுங்கள். அவரை நினைவு செய்வதால் விகர்மங்கள் வினாசம் ஆகும். நடுவில் இவரும் இருக்கிறார். காலம் குறைவாக இருக்கிறது, அதிகமாக இல்லை என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். எது பாக்கியத்தில் உள்ளதோ அது கிடைக்கும் என்ற சிந்தனை செய்யாதீர்கள். பள்ளிக் கூடத்தில் படிப்பின் முயற்சி செய்கிறார்கள் அல்லவா? எது பாக்கியத்தில் இருக்குமோ... என்று கூறுவார்களா என்ன? இங்கு படிக்கவில்லை என்றால் அங்கு பல பிறவி களுக்கு தொண்டு, ஊழியம் செய்து கொண்டேயிருப்பீர்கள். இராஜ்ய பதவி கிடைக்க முடியாது. அப்படியே கிடைத்தாலும் கூட கடைசியில் அதுவும் திரேதாவில் கிரீடம் வைத்து விடுவார்கள். முக்கியமான விஷய மானது - தூய்மையாகி மற்றவரையும் தூய்மையாக்குவது. சத்ய நாராயணனின் உண்மையான கதையைக் கூறுவது எளிது. முதன் முதலில் உங்களுக்கு இரண்டு தந்தையர் உள்ளார்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள். எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி மற்றும் எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தி கிடைக்கிறது. எல்லையில்லாத தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் தேவதை ஆகுவீர்கள். ஆனால் பிறகு அதிலும் உயர்ந்த பதவி அடைய வேண்டும். பதவியை அடைவதற்குத் தான் எவ்வளவு அடி தடி செய்கிறார்கள். கடைசியில் வெடி குண்டுகளினால் கூட ஒருவருக்கொருவர் உதவி செய்வார்கள். இந்த அனைத்து தர்மங்களும் முதலில் இருந்தனவா என்ன? பிறகும் இருக்காது. நீங்கள் ஆட்சி புரிபவர்கள் ஆவீர்கள். ஆக உங்கள் மீது இரக்கம் காட்டிக் கொள்ளுங்கள். குறைந்ததிலும் குறைந்தது உயர்ந்த பதவியாவது அடையலாமே! குழந்தைகள் 8 அணா (50 பைசா) கூட கொடுத்து எங்கள் பெயரில் ஒரு செங்கல் வைத்துவிடுங்கள் என்கிறார்கள். குசேலரின் உதாரணம் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? ஒரு பிடி அவலுக்கு பதிலாக அரண்மனை கிடைத்து விட்டது. ஏழைகளிடம் இருப்பதே 8 அணா, பின் அதைத் தான் கொடுப்பார்கள் அல்லவா? பாபா நாங்கள் ஏழைகள் என்று கூறுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உண்மையான சம்பாத்தியம் செய்கிறீர்கள். இங்கு எல்லோருடைய பொய்யான சம்பாத்தியம் ஆகும். அவர்கள் செய்யும் தான புண்ணியம் ஆகிய அனைத்தும் பாவ ஆத்மாக்களுக்குத்தான் செய்கிறார்கள். எனவே புண்ணியத்திற்கு பதிலாக பாவம் ஆகிவிடுகிறது. இவ்வாறு செய்து செய்து எல்லோரும் பாவ ஆத்மா ஆகிவிடுகிறார்கள். புண்ணிய ஆத்மாக்கள் இருப்பதே சத்யுகத்தில். அது புண்ணிய ஆத்மாக்களின் உலகம் ஆகும். அதையோ தந்தை தான் அமைப்பார். பாவ ஆத்மாவாக இராவணன் ஆக்குகிறான். அசுத்தமாகி விடுகிறார்கள். இப்பொழுது தந்தை அசுத்தமான காரியம் செய்யாதீர்கள் என்று கூறுகிறார். புது உலகத்தில் அசுத்தம் இருக்காது. பெயரே சொர்க்கம், பின் என்ன? சொர்க்கம் என்று கூறும் பொழுதே வாயில் தண்ணீர் வந்துவிடுகிறது. தேவதைகள் வாழ்ந்து சென்றுள்ளார் கள், அதனால் தான் நினைவார்த்தங்கள் உள்ளன. ஆத்மா அவினாசி (அழியாதது) ஆகும். எவ்வளவு ஏராளமான நடிகள் உள்ளார்கள்! எங்காவது அமர்ந்து இருப்பார்கள். அங்கிருந்து பார்ட் நடிக்க வருகிறார்கள். இப்பொழுது கலியுகத்தில் எவ்வளவு ஏராளமான மனிதர்கள் உள்ளார்கள்! தேவி தேவதைகளின் இராஜ்யம் இல்லை. எவரொருவருக்கும் புரிய வைப்பதோ மிகவும் சுலபம். ஒரு தர்மத்தின் ஸ்தாபனை இப்பொழுது மீண்டும் ஆகிக் கொண்டிருக்கிறது. மற்றது அனைத்தும் அழிந்து போய்விடும். நீங்கள் சொர்க்கத்தில் இருக்கும்பொழுது வேறு எந்த தர்மமும் இருக்க வில்லை. படத்தில் இராமருக்கு அம்பு கொடுத்து விட்டுள்ளார்கள். அங்கு அம்பு ஆகியவற்றின் விஷயமே கிடையாது. இதுவும் புரிந்திருக்கிறீர்கள். முந்தைய கல்பத்தில் யார் என்ன சேவை செய்துள்ளார்களோ அவர்களே இப்பொழுதும் செய்கிறார்கள. யார் நிறைய சேவை செய்கிறார் களோ தந்தைக்கும் மிகவும் பிரியமானவர்களாக இருப்பார்கள். லௌகீக தந்தையின் குழந்தை களிலும் கூட யார் நல்ல முறையில் படிக்கிறார்களோ அவர்கள் மீது தந்தையின் அன்பு அதிகமாக இருக்கும். யார் சண்டையிட்டுக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருப்பார்களோ அவர்களை அன்பு செய்வார்களா என்ன? சேவை செய்பவர்கள் மிகவும் பிரியமானவர்களாக இருப்பார்கள்.

ஒரு கதை உள்ளது - இரண்டு பூனைகள் சண்டையிட்டன. வெண்ணெயை கிருஷ்ணர் சாப்பிட்டு விட்டார். முழு உலக அரசாட்சி என்ற வெண்ணெய் உங்களுக்குக் கிடைக்கிறது. எனவே இப்பொழுது தவறு செய்யக்கூடாது. சீசீ ஆகக்கூடாது. இதற்கு பின்னால் சென்று இராஜ்யத்தை இழக்காதீர்கள். தந்தையின் டைரக்ஷன் கிடைக்கிறது. நினைவு செய்யவில்லை என்றால் பாவ சுமை அதிகரித்துக் கொண்டேபோகும். பின் நிறைய தண்டனைகள் வாங்க வேண்டி வரும். அளவுக்கு மீறி அழுவீர்கள். 21 பிறவிகளின அரசாட்சி கிடைக்கிறது. இதில் தோல்வி அடைந்து விட்டால் அதிகமாக அழுவீர்கள். பிறந்த வீடும் சரி, புகுந்த வீடும் சரி நினைவு இரண்டையும் செய்யக் கூடாது என்று தந்தை கூறுகிறார். வருங்கால புதிய வீட்டைத்தான் நினைவு செய்ய வேண்டும். எவரொருவரையும் பார்த்து மோகித்து போகக்கூடாது என்று தந்தை புரிய வைக்கிறார். மலர் ஆக வேண்டும். தேவதைகள் மலர்களாக இருந்தார்கள். கலியுகத்தில் முட்களாக இருந்தார் கள். இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் மலர் ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. இங்கு அது போல ஆனீர்கள் என்றால் அப்பொழுது தான் சத்யுகத்திற்குச் செல்வீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கடைசி காலத்தில் ஒரு தந்தையை தவிர வேறு யாருமே நினைவிற்கு வரக்கூடாது. அதற்காக இந்த உலகத்தில் யார் மீதும் மனதை லயிக்க விடக்கூடாது. சீசீ சரீரங்கள் மீது அன்பு கொள்ளக் கூடாது. கலியுக பந்தனங்களை துண்டித்துவிடவேண்டும்.

2. விசாலபுத்தி உடையவராகி பயமறறவர் ஆக வேண்டும். புண்ணிய ஆத்மா ஆவதற்கு இப்பொழுது எந்த ஒரு பாவமும் செய்யக்கூடாது. வயிற்றுக்காக பொய் பேசக்கூடாது. ஒரு பிடி அவலை பயனுள்ளதாக ஆக்கி, உண்மையிலும் உண்யைôன சம்பாத்தியம் சம்பாதிக்க வேண்டும். தங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும்.

வரதானம்:
பரமாத்ம (லகன்) ஈடுபாட்டின் மூலமாக சுயம் தங்களையும், உலகத்தையும் (நிர்விக்ன) தடையற்றவராக கூடிய தபஸ்வி மூர்த்தி ஆவீர்களாக.

ஒரேயொரு பரமாத்ம (லகன்) ஈடுபாட்டில் இருப்பது தான் தபஸ்யா (தவம்) ஆகும். இந்த தவத்தின் பலம் தான் சுயம் தங்களையும் உலகத்தையும் எக்காலத்திற்குமாக (நிர்விக்கின) தடையற்றவராக ஆக்க முடிந்ததாக இருக்கும். நிர்விக்கினமாக இருப்பது மற்றும் நிர்விக்கினமாக ஆக்குவது தான் உங்களது உண்மையான சேவையாகும். இது அநேகவிதமான தடைகளிலிருந்து அனைத்து ஆத்மாக்களையும் விடுதலையாக்குகிறது. அப்பேர்ப்பட்ட சேவாதாரி குழந்தைகள் தபஸ்யாவின் ஆதாரத்தில் தந்தையிடமிருந்து ஜீவன் முக்தியின் வரதானம் பெற்று மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு (நிமித்தம்) கருவியாகி விடுகிறார்கள்.

சுலோகன்:
சிதறி இருக்கும் சிநேகத்தை ஒன்றுபடுத்தி ஒரு தந்தையிடம் சிநேகம் கொண்டீர்கள் என்றால் உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.