04-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சகோதரி சகோதரர் என்ற உணர்விலிருந்தும் கூட விலகி சகோதர சகோதரர் என்று உணர்ந்திருங்கள். அப்பொழுது தூய பார்வை ஆகி விடும். ஆத்மா தூய பார்வை உடையதாக ஆகும் பொழுதே கர்மாதீத் நிலை ஏற்படும்.

கேள்வி:
தங்கள் குறைகளை நீக்குவதற்காக எந்த ஒரு யுக்தியைக் கையாள வேண்டும்?

பதில்:
தங்களது (கேரக்டர்ஸ்) நடத்தையின் ரிஜிஸ்டர் (பதிவேட்டை) வையுங்கள். அதில் தினசரியின் கணக்கை குறியுங்கள். ரெஜிஸ்டர் வைப்பதால் தங்களது குறைகள் பற்றி தெரிய வரும். பின் சுலபமாகவே அவற்றை நீக்கி விட முடியும். குறைகளை நீக்கி நீக்கி ஒரு தந்தையைத் தவிர வேறு எதுவுமே நினைவிற்கு வராத அப்பேர்ப்பட்ட நிலையை அடைய வேண்டும். எந்த ஒரு பழைய பொருள் மீதும் பற்று இருக்கக் கூடாது. உள்ளுக்குள் எதையும் கேட்பதற்கான விருப்பம் இருக்கக் கூடாது.

ஓம் சாந்தி.
ஒன்று மனித புத்தி மற்றொன்று ஈஸ்வரிய புத்தி. பிறகு தெய்வீக புத்தி ஆகிவிடும். மனித புத்தி அசுர புத்தி ஆகும். குற்றப் பார்வை (கிரிமினல்) உடையவர்கள் ஆவார்கள் அல்லவா? ஒன்று சிவில் ஐஸ்டு (தூய பார்வை உடையவர்கள்) மற்றொன்று கிரிமினல் ஐஸ்டு (குற்றப் பார்வை உடையவர்கள்). தேவதைகள் நிர்விகாரி தூய பார்வை உடையவர்கள் ஆவார்கள். மேலும் இங்கு கலியுக மனிதர்கள் விகாரி குற்றப் பார்வை உடையவர்கள் ஆவார்கள். அவர்களுடைய சிந்தனையே விகாரியாக இருக்கும். குற்றப் பார்வை உடைய மனிதர்கள் இராவணனின் சிறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பாபா உங்களை குற்றப் பார்வையிலிருந்து மாற்றி தூயப் பார்வை உடையவர்களாக ஆக்கிக் கொண்டி ருக்கிறார். குற்றப் பார்வையில் கூட அநேக விதமாக இருக்கிறார்கள். ஒருவர் செமி. மற்றொருவர் வேறு மாதிரி! தூய பார்வை உடையவராக ஆகி விடும் பொழுது கர்மாதீத் நிலை (கர்மங்களை வென்ற நிலை) ஆகி விடும். பிறகு சகோதர சகோதரப் பார்வை ஆகி விடும். ஆத்மா ஆத்மாவைப் பார்க்கிறது. சரீரமோ இருப்பதே இல்லை எனும்போது பின் குற்றப் பார்வை உடையவராக எப்படி ஆக முடியும்? எனவே தங்களை சகோதரி சகோதரர் என்ற உணர்விலிருந்து கூட விலகிக் கொண்டே செல்லுங்கள் என்று தந்தை கூறுகிறார். சகோதரர் சகோதரர் என்று உணருங்கள். இதுவும் மிக ஆழமான விஷயமாகும். ஒரு பொழுதும் யாருடைய புத்தியிலும் வர முடியாது. தூய பார்வை என்பதன் பொருள் யாருடைய புத்தி யிலும் வர முடியாது. அவ்வாறு வந்து விட்டால் உயர்ந்த பதவியை அடைந்து விட முடியும். தன்னை ஆத்மா என்று உணருங்கள். சரீரத்தை மறந்து விட வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். இந்த சரீரத்தை தந்தையின் நினைவில் இருந்து தான் விட வேண்டும். நான் ஆத்மா பாபாவிடம் சென்று கொண்டிருக்கிறேன். தேக அபிமானத்தை விடுத்து தூய்மையாக ஆக்கக் கூடிய தந்தையின் நினைவில் தான் சரீரத்தை விட வேண்டும். குற்றப் பார்வை உடையவராக இருந்தார்கள் என்றால் உள்ளுக்குள் அவசியம் உறுத்திக் கொண்டிருக்கக் கூடும். குறிக்கோள் மிகவும் உயர்ந்ததாகும். ஒருவர் எவ்வளவு தான் நல்ல குழந்தையாக இருந்தாலும் சரி, பிறகும் ஏதாவது தவறுகள் நிகழத்தான் செய்கின்றன. ஏனெனில், மாயை உள்ளது அல்லவா! கர்மாதீதத் நிலையில் யாருமே இருக்க முடியாது. கர்மாதீத் நிலையை கடைசியில் அடையும் பொழுது தூய பார்வை உடையவராக ஆகி விட முடியும். பிறகு அந்த ஆன்மீக சகோதர அன்பு இருக்கும். ஆன்மீக சகோதர அன்பு மிகவும் நன்றாக இருக்கும் பொழுது குற்றப் பார்வை இருப்பதில்லை. அப்பொழுது தான் உயர்ந்த பதவியை அடைய முடியும். பாபா இலட்சியத் தையோ முழுமையாகக் கூறுகிறார். இந்த மாதிரியான குறைகள் நம்முள் உள்ளது என்று குழந்தைகள் புரிந்துள்ளார்கள். பதிவேடு வைக்கும் பொழுது குறைகள் பற்றித் தெரிய வரும். ஒருவர் ரிஜிஸ்டர் (பதிவேடு) வைக்காமலும் கூட திருந்த முடியும். ஆனால் யார் அரை குறையாக இருக்கிறார்களோ அவர்கள் அவசியம் ரிஜிஸ்டர் வைக்க வேண்டும். பக்குவமி ல்லாதவர்களோ நிறைய பேர் உள்ளார்கள். ஒரு சிலருக்கோ எழுதுவதற்கே தெரிவதில்லை. உங்கள் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. ஆத்மாவாகிய நான் சரீரமின்றி வந்தேன். இப்பொழுது அசரீரி ஆகிச் செல்ல வேண்டும். இது பற்றி ஒரு கதை கூட உள்ளது - திரும்பிப் போகும் போது நீ கைத்தடி கூட எடுக்கக் கூடாது என்று அவர் கூறினார். அது கூட பின்னால் நினைவிற்கு வரும். எந்த ஒரு பொருள் மீதும் பற்று வைக்கக் கூடாது. அநேகருடைய பற்று, பழைய பொருட்கள் மீது இருக்கும். தந்தையைத் தவிர வேறு எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. எவ்வளவு உயர்ந்த குறிக்கோள் ஆகும்! உடைந்த பானைத் துண்டு (ஓடு) எங்கே? சிவபாபாவின் நினைவு எங்கே? கேட்டு வாங்கக் கூடிய இச்சை இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் குறைந்தது 6 மணி நேரம் அவசியம் சேவை செய்ய வேண்டும். எப்படியும் அரசாங்க சேவை 8 மணி நேரம் இருக்கும். ஆனால் பாண்டவ அரசாங்கத்தின் சேவை குறைந்தது 5-6 மணி நேரம் அவசியம் செய்யுங்கள். விகாரி மனிதர்கள் ஒரு பொழுதும் பாபாவை நினைவு செய்ய முடியாது. சத்யுகத்தில் இருப்பது நிர்விகாரி உலகம். தேவி தேவதைகளின் மகிமை சர்வகுண சம்பன்ன..... 16 கலை சம்பூர்ணம்..... என்று பாடப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுடைய நிலை எவ்வளவு விடுபட்ட தாக இருக்க வேண்டும். எந்த ஒரு சீ-சீ பொருளின் மீதும் பற்று இருக்கக் கூடாது. சரீரத்தின் மீது கூட பற்று இருக்கக் கூடாது. அந்த அளவிற்கு யோகி ஆக வேண்டும். உண்மையிலும் உண்மையாக இப்பேர்ப்பட்ட யோகி ஆகும் பொழுது அவர்கள் இது போல புத்துணர்வுடன் இருப்பார்கள். எந்த அளவிற்கு நீங்கள் சதோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்வீர்களோ, அந்த அளவிற்கு அளவு கடந்த குஷி ஏறிக் கொண்டே இருக்கும். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் இப்பேர்ப்பட்ட குஷி இருந்தது. சத்யுகத்தில் கூட அதே குஷி இருக்கும். இங்கும் குஷி இருக்கும். பிறகு இதே குஷியை உடன் எடுத்துச் செல்வீர்கள். "அந்த் மதி சோ கதி" - கடைசியில் புத்தி எப்படியோ அப்படி கதி என்று கூறப்படுகிறது அல்லவா? இப்பொழுது கிடைக்கும் வழி பிறகு கதி சத்யுகத்தில் இருக்கும். இது மிகவுமே "விசார் சாகர் மந்தன்" சிந்தனை கடலை கடைய வேண்டிய விஷயமாகும்.

தந்தை இருப்பதே "துக்க ஹர்த்தா சுக கர்த்தா" - துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவராக. நாங்கள் தந்தையின் குழந்தைகள் ஆவோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்றால், யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. அனைவருக்கும் சுகத்தின் வழியைக் கூற வேண்டும். சுகம் கொடுப்ப தில்லை என்றால், அவசியம் துக்கம் கொடுப்பார்கள். இது புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். இப்பொழுது நீங்கள் சதோபிரதானமாக ஆவதற்காக புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். புருஷார்த்திகள் (முயற்சியாளர்கள்) கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். குழந்தைகள் நல்ல சேவை செய்கிறார்கள் என்றால், தந்தை அவர்களுக்கு மகிமை செய்கிறார் - "குறிப்பிட்ட இந்த குழந்தை யோகி ஆவார்" என்று. யார் சேவை செய்யக் கூடிய (சர்விசபிள்) குழந்தை களாக இருக்கிறார்களோ அவர்கள் நிர்விகாரி வாழ்க்கையில் இருக்கிறார்கள். யாருக்கு சிறிதள வாவது அப்படியும் இப்படியும் போன்ற சிந்தனை வருவதில்லையோ அவர்கள் கடைசியில் கர்மாதீத் நிலையை அடைவார்கள். பிராமணர்களாகிய நீங்கள் தான் தூய பார்வை உடையவர் களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மனிதனை ஒரு பொழுதும் தேவதை என்று கூற முடியாது. யார் குற்றப் பார்வை உடையவர்களாக இருப்பார்களோ அவர்கள் அவசியம் பாவம் செய்வார்கள். சத்யுக உலகம் பவித்திரமான உலகமாகும். இது பதீதமான உலகமாகும். இதன் பொருளைக் கூட புரிந்து கொள்வதில்லை. பிராமணர் ஆகும் பொழுது தான் புரிந்து கொள்ள முடியும். "ஞானமோ மிகவும் நன்றாக உள்ளது. நேரம் கிடைக்கும் பொழுது நாங்கள் வருவோம்" என்பார்கள். ஒரு பொழுதும் வரமாட்டார் என்று பாபா அறிவார். இதுவோ தந்தையை அவமதிப்பதாகும். மனிதனிலிருந்து தேவதை ஆகிறோம் என்றால், உடனே வந்து முயற்சி செய்ய வேண்டும் அல்லவா? நாளைக்கென்று ஒத்தி போட்டீர்கள் என்றால், மாயை மூக்கைப் பிடித்து சாக்கடையில் தள்ளிவிடும். நாளை நாளை என்று கூறி காலன் சாப்பிட்டு விடுவான். சுப காரியத்தில் தாமதிக்கக் கூடாது. காலனோ தலை மீது நின்றுள்ளான். எத்தனை மனிதர்கள் திடீரென்று இறந்து விடுகிறார்கள்! இப்பொழுது குண்டுகள் விழுந்தது என்றால், எத்தனை மனிதர்கள் இறந்து போவார்கள்? பூகம்பம் ஏற்படுகிறது என்றால், முதலிலேயே தெரிய வருமா என்ன? நாடகப்படி இயற்கையின் சேதங்கள் கூட ஆகத் தான் போகிறது. இதை யாருமே தெரிந்து கொள்ள முடியாது. மிகவும் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. பிறகு அரசாங்கம் ரெயில் வண்டி கட்டணம் ஆகியவற்றையும் அதிகரித்து விடுகிறது. மனிதர்களோ சென்று தான் ஆக வேண்டி இருக்கும். மனிதர்கள் கொடுக்கக் கூடிய வகையில் எப்படி வருவாயை அதிகரிப்பது என்று சிந்தித்து கொண்டே இருப்பார்கள். தானியங்களின் விலை எவ்வளவு அதிகமாக உயர்ந்துள்ளது? எனவே பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். தூய பார்வை உடையவர்களுக்கு பவித்திர ஆத்மா என்பார்கள். இந்த உலகமே குற்றப் பார்வை நிறைந்ததாக உள்ளது. நீங்கள் இப்பொழுது "சிவில் ஐஸ்டு" தூய பார்வை உடையவர்களாக ஆகிறீர்கள். உழைப்பு இருக்கிறது. உயர்ந்த பதவி அடைவது என்பது "சித்தி வீட்டிற்குப் போவது போல" (சுலபமானது) அல்ல. யார் மிகவுமே தூய பார்வை உடையவர்களாக ஆகிறார்களோ (சிவில்-ஐஸ்டு) அவர்களே உயர்ந்த பதவியை அடைவார்கள். நீங்களோ இங்கு வந்திருப்பதே நரனிலிருந்து நாராயணர் ஆவதற்காக. ஆனால் யார் ("சிவில் ஐஸ்டு") தூய பார்வை உடையவர்களாக ஆவதில்லையோ, ஞானத்தை ஏற்க முடியாமல் இருப்பார்களோ அவர்கள் பதவியும் குறைவாக அடைவார்கள். இச்சமயம் அனைத்து மனிதர்களும் "கிரிமினல் ஐஸ்டு" - குற்றப் பார்வை உடையவர்களாக இருக்கிறார் கள். சத்யுகத்தில் "சிவில் ஐஸ்டு" - தூய பார்வை உடையவர்களாக இருப்பார்கள்.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் தேவி தேவதை சொர்க்கத்தின் அதிபதி ஆக விரும்பு கிறீர்கள் என்றால் மிக மிக "சிவில் ஐஸ்டு" தூய பார்வை உடையவர்கள் ஆகுங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் நூறு சதவிகிதம் (ஸோல் கான்ஷியஸ்) ஆத்ம உணர்வுடையவர்களாக ஆக முடியும். அனைவருக்கும் பொருளைப் புரிய வைக்க வேண்டும். சத்யுகத்தில் பாவத்தின் எந்த ஒரு விஷயமுமே இருப்பதில்லை. அவர்கள் இருப்பதே சர்வ குண சம்பன்னராக "சம்பூர்ண சிவில் - ஐஸ்டு" - முழுமையாக தூய பார்வை உடையவர்களாக! சந்திர வம்சத்தினரிடம் இரண்டு கலை குறைந்து விடுகிறது. நிலாவினுடையது கூட கடைசியில் ஒரு கீற்று (பிறை) மீதமிருந்து விடுகிறது. ஒரேயடியாக இல்லாமல் ஆகி விடுவதில்லை. பெரும்பாலும் மறைந்து விட்டது என்று கூறுவார்கள். மேகங்களுக் கிடையில் தென்படுவதில்லை. எனவே உங்களுடைய ஜோதி கூட முற்றிலுமாக அணைந்து போய் விடுவதில்லை என்று தந்தை கூறுகிறார். கொஞ்ச நஞ்சம் ஒளி இருக்கும். சுப்ரீம் பேட்டரியிடமிருந்து மீண்டும் நீங்கள் பவர் (சக்தி) அடைகிறீர்கள். என்னுடன் நீங்கள் எவ்வாறு யோகம் (தொடர்பு) வைக்க முடியும் என்று தானே வந்து கற்பிக் கிறார். ஆசிரியர் கற்பிக்கிறார் என்றால் புத்தியோகம் ஆசிரியருடன் கூட இருக்கும் அல்லவா? ஆசிரியர் என்ன வழி அளிப்பாரோ அதைப் படிப்பார்கள். நாம் கூட படித்து ஆசிரியர் அல்லது வழக்கறிஞர் ஆகி விடுவோம். இதில் கிருபை அல்லது ஆசீர்வாதம் ஆகியவற்றின் விஷயமே இருப்பதில்லை. தலை வணங்கும் அவசியம் கூட இருக்காது. ஆம், யாராவது ஹரி ஓம் அல்லது ராம் ராம் என்று கூறினால் பதிலுக்குக் கூற வேண்டி இருக்கும். இதுவும் ஒரு மதிப்பு அளிக்க வேண்டி இருக்கிறது. அகங்காரத்தைக் காண்பிக்கக் கூடாது. ஒரு தந்தையைத் தான் நினைவு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். யாராவது பக்தியை விட்டு விடுகிறார்கள் என்றால் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. பக்தியை விடுபவர்களை நாஸ்திகர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நாஸ்திகர் என்று கூறுவதற்கும் நீங்கள் கூறுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது! அவர்கள் தந்தையை அறியாமல் உள்ளார்கள். எனவே நாஸ்திகர் ஆவார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அனாதைகளாக இருக்கிறார்கள். எனவே எல்லோருமே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்கு வீடு சண்டை, அசாந்தி உள்ளது. கோபத்தின் அடையாளம் (அசாந்தி) அமைதியின்மை ஆகும். அங்கு எவ்வளவு அளவற்ற அமைதி இருக்கும்! பக்தியில் மிகுந்த அமைதி கிடைக்கிறது என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது குறுகிய காலத்திற்கானதாகும். நிரந்தரமான அமைதி வேண்டும் அல்லவா? நீங்கள் தலைவனினு டையவர்களாக இருந்து, பின் அநாதைகளாக ஆகி விடுகிறீர்கள். அப்பொழுது அமைதியிலிருந்து பின் அசாந்தியில் வந்து விடுகிறீர்கள். எல்லையில்லாத தந்தை எல்லை யில்லாத சுகத்தின் ஆஸ்தியை அளிக்கிறார். எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக் குட்பட்ட சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. அது உண்மையில் துக்கம் தரும் காமவாளின் ஆஸ்தி ஆகும். அதனால் துக்கமே துக்கமாக உள்ளது. எனவே நீங்கள் முதல் இடை, கடை துக்கம் அடைகிறீர்கள் என்று தந்தை கூறுகிறார்.

பதீத பாவன தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். இதற்கு சகஜ (எளிய) நினைவு மற்றும் சிருஷ்டி சக்கரத்தின் எளிய ஞானம் என்று கூறப்படுகிறது. நீங்கள் தங்களை ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினர் என்று உணர்ந்திருந்தீர்கள் என்றால் அவசியம் சொர்க்கத்தில் வருவீர்கள். சொர்க்கத்தில் எல்லோருமே (சிவில் ஐஸ்டு) தூயபார்வை உடையவர்களாக இருந்தார்கள். தேக உணர்விலிருப் பவர்களுக்கு குற்றப் பார்வை உடையவர் கள் (கிரிமினல் ஐஸ்டு) என்று கூறப்படுகிறது. தூய பார்வை உடையவர் களிடம் (சிவில் ஐஸ்டு) எந்த ஒரு விகாரமும் இருப்பதில்லை. எவ்வளவு சுலபமாக ஆக்கிப் புரிய வைக்கிறார். ஆனால் குழந்தைகளுக்கு இது கூட நினைவு இருப்பதில்லை. ஏனெனில் "கிரிமினல் ஐஸ்டு" குற்றப் பார்வை உடையவர்களாக இருக்கிறார்கள். எனவே சீ-சீ உலகம் தான் அவர்களுக்கு நினைவு வருகிறது. இந்த உலகத்தை மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சரீரத்தில் சிறிதளவு கூட பற்று இல்லாத அப்பேர்ப்பட்ட யோகி ஆக வேண்டும். எந்த ஒரு சீ-சீ பொருளின் மீதும் பற்று இருக்கக் கூடாது. உங்கள் மன நிலை அது போல விடுபட்டதாக இருக்க வேண்டும். அளவு கடந்த குஷி இருக்க வேண்டும்.

2. காலன் தலை மீது நின்றுள்ளான். எனவே சுப காரியத்தில் தாமதம் செய்யக் கூடாது. நாளைக் கென்று ஒத்திப் போடக் கூடாது.

வரதானம்:
புத்திசாலியான பாபாவிடம், புத்திசாலிதனத்தை காட்டுவதற்கு பதிலாக, உணரக்கூடிய சக்தியின் மூலமாக அனைத்து பாவங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுக

சில குழந்தைகள், புத்திசாலியான பாபாவிடமே புத்திசாலி தனத்தை காட்டுகின்றனர் - தன்னுடைய வேலையை செய்து கொள்வதற்காகவும், தன்னுடைய பெரை நல்லதாக காட்டு வதற்காகவும், அந்த நேரத்தில் உணர்கின்றனர். ஆனால் அந்த உணரும் தன்மையில் சக்தி கிடையாது. எனவே மாற்றம் ஏற்படுவதில்லை, நான் செய்வது சரியில்லை என சிலர் புரிந்து கொண்ட காரணத்தினால் என்னுடைய பெயர் கெட்டுவிடக்கூடாது என நினைக்கின்றனர். எனவே தன்னுடைய மனசாட்சியை கொன்று விடுகின்றனர். இதுவும் பாவக் கணக்கில் சேமிப் பாகிறது. எனவே புத்திசாலி தனத்தை விட்டு உண்மையான உள்ளத்தின் மூலமாக உணர்வ தினால், தன்னை மாற்றம் செய்து பாவத்திலிருந்து விடுபட்டு ஆவீர்களாக

சுலோகன்:
வாழ்க்கையில் விதவிதமான பந்தனங்களிலிருந்து விடுபட்டு இருப்பதே ஜீவன் முக்தி நிலையை அடைவதாகும்.