04-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் எந்த அளவிற்கு அன்பாக தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு ஆசிர்வாதம் கிடைக்கும், பாவங்கள் அழியும்.

கேள்வி:
தந்தை குழந்தைகளுக்கு எந்த தர்மத்தில் நிலைத்திருப்பதற்கான வழி கூறு கின்றார்?

பதில்:
பாபா கூறுகின்றார் - குழந்தைகளே! நீங்கள் தங்களது விசித்திரமான (ஆத்ம) தர்மத்தில் நிலைத்திருங்கள், சித்திரத்தின் (தேகம்) தர்மத்தில் அல்ல. எவ்வாறு தந்தை தேக மற்றவராக இருக்கின்றாரோ, விசித்திரமானவராக இருக்கின்றாரோ, அதே போன்று குழந்தை களும் விசித்திரமானவர்களாக இருக்கிறீர்கள், பிறகு இங்கு சித்திரத்தில் (தேகத்தில்) வருகிறீர்கள். இப்பொழுது தந்தை குழந்தைகளுக்குக் கூறுகின்றார் - குழந்தைகளே! விசித்திர மானவர்களாக (அசரீரியாக) ஆகுங்கள், தனது சுய தர்மத்தில் நிலைத்திருங்கள். தேக அபிமானத்தில் வராதீர்கள்.

கேள்வி:
பகவானும் நாடகப்படி எந்த விசயத்தில் கட்டுப்பட்டு இருக்கின்றார்?

பதில்:
நாடகப்படி குழந்தைகளை பதீதத்திலிருந்து பாவனம் ஆக்குவதற்காக பகவானும் கட்டுப் பட்டு இருக்கின்றார். அவர் புருஷார்த்தம சங்கமயுகத்தில் வந்தே ஆக வேண்டியிருக்கிறது.

ஓம் சாந்தி.
தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். எப்பொழுது ஓம்சாந்தி என்று கூறப்படுகிறதோ அப்பொழுது தனது ஆத்மாவின் சுயதர்மத்தின் அறிமுகம் கொடுக்கப்படுகிறது. ஆக தானாகவே தந்தையின் நினைவும் வந்து விடுகிறது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் பகவானைத் தான் நினைவு செய் கின்றனர். பகவானின் முழு அறிமுகம் கிடையாது, அவ்வளவு தான். தனது மற்றும் ஆத்மாவின் அறிமுகம் கொடுப்பதற்காகவே பகவான் வருகின்றார். பகவான் தான் பதீத பாவன் என்று கூறப்படுகின்றார். பதீதத்திலிருந்து பாவனம் ஆக்குவதற்கு பகவானும் நாடகத்தில் கட்டுப்பட்டு இருக்கின்றார். அவரும் புருஷார்த்தம சங்கமயுகத்தில் வரவேண்டியிருக்கிறது. சங்கமயுகத்தைப் பற்றியும் புரிய வைக்கின்றார். பழைய உலகம் மற்றும் புது உலகின் இடையில் தான் தந்தை வரு கின்றார். பழைய உலகம் மரண உலகம், புது உலகம் அமரலோகம் என்று கூறப்படுகிறது. மரண உலகில் ஆயுள் குறைவாக இருக்கும் என்பதையும் நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். திடீர் மரணங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அது அமரலோகம் ஆகும். அங்கு திடீர் மரணம் ஏற்படாது. ஏனெனில் தூய்மையாக இருக்கின்றனர். அசுத்ததின் மூலம் கலப்பட மானவர்களாக ஆகின்றனர் மற்றும் ஆயுளும் குறைந்து விடுகிறது. பலமும் குறைந்து விடு கிறது. சத்யுகத்தில் தூய்மையாக இருக்கின்ற காரணத்தினால் கலப்படமற்றவர்களாக இருப்பர். பலமும் அதிகமாக இருக்கும். பலமின்றி இராஜ்யத்தை எவ்வாறு அடைந்திருப்பர்? அவசியம் அவர்கள் தந்தையிடமிருந்து ஆசீர்வாதம் அடைந்திருக்க வேண்டும். தந்தை சர்வசக்தி வாய்ந்தவர். ஆசீர்வாதம் எவ்வாறு அடைந்திருப்பர்? என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறு கின்றார். ஆக யார் அதிகமாக நினைவு செய்திருப்பார்களோ அவர்கள் தான் ஆசீர்வாதம் அடைந்திருப்பர். ஆசீர்வாதம் என்பது கேட்டு பெறக் கூடிய விசயம் கிடையாது. இது முயற்சி செய்ய வேண்டிய விசயமாகும். எந்த அளவிற்கு அதிகம் நினைவு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு அதிகமாக ஆசீர்வாதம் கிடைக்கும். அதாவது உயர்ந்த பதவி கிடைக்கும். நினைவு செய்யவில்லையெனில் ஆசீர்வாதமும் கிடைக்காது. லௌகீகக் தந்தை ஒருபொழுதும் குழந்தைகளிடத்தில் என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறமாட்டார். அது சிறிய வயதில் தானாகவே அம்மா, அப்பா என்று கூறிக் கொண்டே இருக்கும். இந்திரியங்கள் சிறியதாக இருக்கும், பெரியவர்கள் ஒருபொழுதும் அப்பா, அப்பா என்றோ, அம்மா, அம்மா என்று கூறமாட்டார்கள். அவர்களது புத்தியில் இவர்கள் எனது தாய், தந்தை என்றும் இவர்களிட மிருந்து ஆஸ்தி அடைய வேண்டும் என்பதும் புத்தியில் இருக்கும். சொல்ல வேண்டிய அல்லது நினைக்க வேண்டிய விசயமே அல்ல. இங்கு என்னை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். எல்லைக்குட்பட்ட சம்பந்தங்களை விட்டு விட்டு இப்பொழுது எல்லையற்ற சம்பந்தங்களை நினைவு செய்ய வேண்டும். நமக்கு நல்ல நிலை (கதி) ஏற்பட வேண்டும் என்று அனைத்து மனிதர் களும் விரும்புகின்றனர். நல்ல நிலை (கதி) என்று முக்திதாமம் கூறப்படுகிறது. மீண்டும் சுகதாமத்திற்கு வருவது தான் சத்கதி என்று கூறப்படுகிறது. யார் முதலில் வருகின்றார்களோ அவர்கள் அவசியம் சுகம் மட்டுமே அடைவார்கள். தந்தை சுகம் கொடுப்பதற்காகவே வருகின்றார். ஏதாவது ஒரு விசயம் கடினமாக இருக்கும் பொழுது தான் அது உயர்ந்த படிப்பு என்று கூறப்படுகிறது. எந்த அளவிற்கு உயர்ந்த படிப்போ அந்த அளவிற்கு கடினமாகவும் இருக்கும். அனைவரும் தேர்ச்சி பெற்று விட முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த தேர்வில் மிகக் குறைந்த மாணவர்கள் தான் தேர்ச்சி பெறுவர். ஏனெனில் உயர்ந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் பிறகு அரசாங்கமும் அவர்களுக்கு உயர்ந்த பதவி (வேலை) கொடுக்க வேண்டி யிருக்கும். சில மாணவர்கள் உயர்ந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பர். உயர்ந்த வேலை கொடுக்கும் அளவிற்கு அரசாங்கத்திடம் அந்த அளவிற்கு செல்வமும் கிடையாது. இங்கு தந்தை கூறுகின்றார் - எந்த அளவிற்கு நன்றாகப் படிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். அதற்காக அனைவரும் இராஜாவாக அல்லது செல்வந்தர்களாக ஆகிவிடுவீர்கள் என்பது பொருளல்ல. அனைத்திற்கும் ஆதாரம் படிப்பில் இருக்கிறது. பக்தியை கல்வி என்று கூறுவது கிடையாது. இது ஆன்மீக ஞானம் ஆகும், ஆன்மீகத் தந்தை கற்பிக்கின்றார். எவ்வளவு உயர்ந்த கல்வி! குழந்தைகளுக்கு கடினமாக இருக்கிறது, ஏனெனில் தந்தையை நினைவு செய்யவில்லையெனில் நடத்தைகளிலும் மாற்றம் ஏற்படுவது கிடையாது. யார் நன்றாக நினைவு செய்கிறார்களோ அவர்களது நடத்தைகளும் மிகவும் நன்றாக இருக்கும். மிக மிக இனிய சேவாதாரிகளாக ஆகிக் கொண்டே செல்வர். நடத்தைகள் நல்லதாக இல்லையெனில் யாருக்கும் பிடிக்கவும் செய்யாது. யார் தோல்வி அடைகிறார்களோ கண்டிப் பாக அவர்களது நடத்தைகளில் குறை இருக்கும். ஸ்ரீலெட்சுமி நாராயணனின் நடத்தைகள் மிகவும் நல்லதாக இருக்கும். இராமருக்கு இரண்டு கலைகள் குறைந்து விட்டன என்று கூறலாம். இராவண இராஜ்யத்தில் பாரதம் பொய்யான கண்டமாக ஆகிவிட்டது. சத்திய கண்டத்தில் சிறிதும் பொய் இருக்க முடியாது. இராவண இராஜ்யத்தில் பொய்யே பொய்யாக உள்ளது. பொய்யான மனிதர்களை தெய்வீக குணங்கள் உடையவர் என்று கூற முடியாது. இது எல்லையற்ற விசயமாகும். இப்பொழுது தந்தை கூறுகின்றார் - இப்படிப்பட்ட பொய்யான விசயங்களை யாரும் கூற வேண்டாம், கேட்கவும் வேண்டாம். ஒரே ஒரு ஈஸ்வரனின் வழியைத் தான் சட்ட வழி என்று கூறப்படுகிறது. மனித வழி சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறப்படுகிறது. சட்ட வழிப்படி நீங்கள் உயர்ந்தவர்களாக ஆகிறீர்கள். ஆனால் அனைவராலும் நடந்திட முடியாது எனும் பொழுது சட்டத்திற்குப் புறம்பானவர்களாக ஆகிவிடுகின்றனர். பாபா, இவ்வளவு காலமாக நான் சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்திருக்கிறேன், இனி செய்ய மாட்டேன் என்று சிலர் தந்தையிடம் உறுதிமொழி செய்கின்றனர். சட்டத்திற்குப் புறம்பான மிகப் பெரிய காரியம் விகாரம் என்ற பூதமாகும். தேக அபிமானம் என்ற பூதம் அனைவரிடத்திலும் இருக்கிறது. மாயாவி புருஷர்களிடம் தேக அபிமானம் தான் இருக்கிறது. தந்தை தேகமற்ற வராக இருக்கின்றார், விசித்திரமானவர். குழந்தைகளும் தேகமற்றவர்களாக இருக்கின்றனர். இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். ஆத்மாக்களாகிய நாம் தேகமற்றவர்களாக இருந்தோம், பிறகு இங்கு சரீரத்தில் வருகின்றோம். இப்பொழுது தந்தை மீண்டும் கூறுகின்றார் - தேகமற்றவர்களாக ஆகுங்கள். தனது சுயதர்மத்தில் நிலைத்திருங்கள். தேக தர்மத்தில் நிலைத்திருக்காதீர்கள். தேகமற்ற ஆத்மாவின் தர்மத்தில் நிலைத்திருங்கள். தேக அபிமானத் தில் வராதீர்கள். தந்தை எவ்வளவு புரிய வைக்கின்றார் - இதில் நினைவு மிகவும் அவசிய மானது ஆகும். தந்தை கூறுகின்றார் - தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை நினைவு செய்தால் நீங்கள் சதோ பிரதானமாக, தூய்மையானவர்களாக ஆகிவிடுவீர்கள். அசுத்தத்தில் செல்வதன் மூலம் அதிக தண்டனை கிடைத்து விடும். தந்தையினுடையவர் களாக ஆன பின்பு ஏதாவது தவறு ஏற்பட்டு விட்டால் சத்குருவை நிந்திப்பவர்கள் நிலைத்திருக்க முடியாது என்று பாடப்பட்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் எனது வழிப்படி நடந்து தூய்மையாக ஆகவில்லை யெனில், நூறு மடங்கு தண்டனை அனுபவிக்க வேண்டி யிருக்கும். விவேகம் செலுத்த (சிந்திக்க) வேண்டும். என்னால் நினைவு செய்ய முடிய வில்லையெனில் அந்த அளவிற்கு உயர்ந்த பதவியும் அடைய முடியாது. முயற்சிக்காக நேரமும் கொடுக்கின்றார். என்ன நிரூபணம் இருக்கிறது? என்று உங்களிடம் கேட்கின்றனர். எந்த சரீரத்தில் வருகின்றாரோ அந்த பிரஜாபிதா பிரம்மாவும் மனிதர் அல்லவா! சரீரத்திற்குத் தான் மனிதர்கள் பெயர் வைக் கின்றனர். சிவபாபா மனிதனாகவும் கிடையாது, தேவதை யாகவும் கிடையாது. அவர் சுப்ரீம் ஆத்மா என்று கூறப்படுகின்றார். அவர் பதீதமாகவோ, பாவனமாகவோ ஆவது கிடையாது. என்னை நினைவு செய்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும் என்று அவர் புரிய வைக் கின்றார். நீங்கள் சதோ பிரதானமாக இருந்தீர்கள், இப்பொழுது தமோ பிரதானமாக ஆகியிருக் கிறீர்கள், மீண்டும் சதோ பிரதானம் ஆவதற்காக என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை வந்து புரிய வைக்கின்றார். இந்த தேவதை களின் தகுதி எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்! மேலும் அவர்களிடத்தில் கருணை வேண்டுபவர்களையும் பாருங்கள் எப்படி இருக்கின்றனர்! ஆச்சரியமாக இருக்கிறது. நாம் எப்படி இருந்தோம்? பிறகு 84 பிறவிகளில் எவ்வளவு வீழ்ச்சியடைந்து முற்றிலுமாக கீழே விழுந்து விட்டோம்.

தந்தை கூறுகின்றார் - இனிமையிலும் இனிய குழந்தைகளே! நீங்கள் தெய்வீக வம்சத் தினர்களாக இருந்தீர்கள். இப்பொழுது தனது நடத்தைகளைப் பாருங்கள் - நான் இவ்வாறு (தேவி தேவதைகளாக) ஆக முடியுமா? அனைவரும் லெட்சுமி நாராயணனாக ஆகிவிடுவர் என்பது கிடையாது. பிறகு அனைத்தும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டமாக ஆகிவிடும். சிவபாபாவிற்கு ரோஜா மலரை மட்டுமே அர்ச்சிக்க வேண்டும், ஆனால் அவ்வாறு கிடையாது, மலர்களாலும் அர்ச்சிக்கின்றனர், எருக்கம் பூவையும் அர்ச்சிக்கின்றனர். தந்தையின் குழந்தைகள் சிலர் மலர்களாக ஆகின்றனர், செல்வந்தர்களாக எப்படி? யார் ஆகின்றனர்? என்பதை தந்தை அறிவார். இந்தக் குழந்தை தந்தைக்கு எந்த அளவிற்கு உதவியாளராக இருக்கின்றார்? என்பதை நாளடை வில் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்து கொள்வீர்கள். கல்ப கல்பத்திற்கு யார் எவ்வளவு செய்திருந்தார்களோ அதையே செய்வர். இதில் வித்தியாசம் ஏற்பட முடியாது. தந்தை கருத்துக் களைக் கொடுத்துக் கொண்டே இருக் கின்றார். இப்படிப்பட்ட தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் மாற்றலும் செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் ஈஸ்வரனின் பொருட்டு செய்தீர்கள். ஆனால் ஈஸ்வரனை அறியவில்லை. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் என்பதை மட்டும் புரிந்திருந்தீர்கள். பெரிய உருவம், பெயர் உடையவர் அல்ல, அவர் நிராகாரமானவர். பிறகு இங்கு சாகாரத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்த வரும் இருக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, சங்கர் தேவதைகள் என்று கூறப்படுகின்றனர். பிரம்ம தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ, பிறகு சிவ பரமாத்மாய நமஹ என்று கூறுகின்றனர். ஆக பரமாத்மா உயர்ந்தவராக ஆகிவிடுகின்றார் அல்லவா! பிரம்மா, விஷ்ணு, சங்கரை பரமாத்மா என்று கூறமாட்டார்கள். வாயில் சிவ பரமாத்மாய நமஹ என்று கூறுகின்றனர் எனில் அவசியம் பரமாத்மா ஒருவராக ஆகிவிடுகிறார் அல்லவா! தேவதைகளை நமஸ்கரிக்கின்றனர். மனித லோகத்தில் மனிதர் களை மனிதன் என்று தான் கூறலாம். அவர்களை பரமாத்மாய நமஹ என்று கூறுவது முழு அஞ்ஞானமாகும். ஈஸ்வரன் சர்வவியாபி என்பது அனைவரின் புத்தி யிலும் இருக்கிறது. பகவான் ஒரே ஒருவர் தான், அவர் தான் பதீத பாவன் என்று கூறப்படு கின்றார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அனைவரையும் பாவனம் ஆக்குவது ஒரு பகவானின் காரியமாகும். உலகிற்கு குருவாக எந்த மனிதனும் இருக்க முடியாது. குரு பாவனமாக இருப்பார் அல்லவா! இங்கு அனைவரும் விகாரத்தினால் உருவானவர்கள் ஆவர். ஞானம் அமிர்தம் என்று கூறப்படுகிறது. பக்தி அமிர்தம் என்று கூறப் படுவது கிடையாது. பக்தி மார்க்கத்தில் பக்தி தான் நடைபெற்று வருகிறது. அனைத்து மனிதர்களும் பக்தியில் இருக்கின்றனர். ஞானக் கடல், உலகிற்கு குரு (ஜெகத்குரு) என்று ஒரே ஒருவர் தான் கூறப்படுகின்றார். தந்தை வந்து என்ன செய்கின்றார்? என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தத்துவங்களையும் தூய்மையாக ஆக்குகின்றார். நாடகத்தில் அவருக்கும் பாகம் இருக்கிறது. அனைவருக்கும் சத்கதி கொடுப்பதற்கு தந்தை நிமித்தமாக ஆகின்றார். இப்பொழுது இதை எப்படி புரிய வைப்பது? பலர் வருகின்றனர். திறப்பு விழா செய்ய வருகின்றனர் எனில் விநாசத்திற்கு முன்பே எல்லையற்ற தந்தையை அறிந்து கொண்டு அவரிடமிருந்து ஆஸ்தியை அடையுங்கள் என்று அழைப்பிதழும் கொடுக்கப் படுகிறது. இவர் ஆன்மீகத் தந்தை ஆவார். மனிதர்கள் அனைவரும் அவரை தந்தை என்று கூறுகின்றனர். படைப்பவர் எனில் அவசியம் படைப்புகளுக்கு ஆஸ்தி கிடைக்கும். எல்லையற்ற தந்தையை யாரும் அறியவில்லை. தந்தையை மறப்பதும் கூட நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. எல்லை யற்ற தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார், அவர் எல்லைக் குட்பட்ட எந்த ஆஸ்தியும் கொடுக்கமாட்டார் அல்லவா! லௌகீகத் தந்தை இருந்தாலும் அனைவரும் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் அவரை யாரும் நினைவு செய்ய மாட்டார்கள். ஏனெனில் எல்லையற்ற சுகம் அடைந்திருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். ஆத்மா தான் நினைவு செய்கிறது, பிறகு ஆத்மாக்கள் தன்னை பிறகு தனது தந்தையை, நாடகத்தை மறந்து விடுகிறது. மாயையின் நிழல் பட்டு விடுகிறது. சதோ பிரதான புத்தியானது பிறகு தமோ பிரதானமாக அவசியம் ஆக வேண்டும். புது உலகில் தேவி தேவதை கள் சதோ பிரதானமாக இருந்தனர் என்ற நினைவு வருகிறது. இதை யாரும் அறியவில்லை. உலகமே சதோ பிரதானமாக, தங்க உலகமாக ஆகிவிடுகிறது. அது தான் புது உலகம் என்று கூறப்படுகிறது. இது இரும்பு உலகமாகும். இந்த அனைத்து விசயங்களையும் தந்தை வந்து தான் குழந்தை களுக்குப் புரிய வைக்கின்றார். கல்ப கல்பமாக நீங்கள் என்ன ஆஸ்தி அடைகிறீர்களோ, முயற்சியின்படி அதுவே கிடைக்கும். நாம் இவ்வாறு இருந்தோம், பிறகு இவ்வாறு வீழ்ச்சி அடைந்து விட்டோம் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரிந்து விட்டது. இவ்வாறெல்லாம் நடைபெறும் என்று தந்தை மட்டுமே கூற முடியும். அதிக முயற்சி செய்தும் நினைவு நிலைப்பதில்லை என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு தந்தை மற்றும் ஆசிரியர் என்ன செய்ய முடியும்? யாராவது படிக்கவில்லை எனில் ஆசிரியர் என்ன செய்ய முடியும்? ஆசிரியர் ஆசீர்வாதம் செய்தால் பிறகு அனைவரும் தேர்ச்சி அடைந்து விடுவர். படிப்பில் அதிக வித்தியாசம் இருக்கிறது. இது முற்றிலும் புது கல்வியாகும். இங்கு உங்களிடம் குறிப்பாக ஏழைகள், துக்கமானவர்கள் தான் வருவார்கள், செல்வந்தர்கள் வரமாட்டார்கள். துக்கமானவர் களாக இருப்பதால் தான் வருகின்றனர். செல்வந்தர்கள் நாம் சொர்க்கத்தில் வாழ்வதாக நினைக்கின்றனர். அதிர்ஷ்டம் கிடையாது. யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களுக்கு உடனேயே நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. நம்பிக்கை மற்றும் சந்தேகத்திற்கு தாமதம் ஏற்படுவது கிடையாது. மாயை உடனேயே மறக்க வைத்து விடுகிறது. நேரம் தேவைப்படுகிறது. இதில் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. தன் மீது கருணை காட்ட வேண்டும். ஸ்ரீமத் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு எளிதான முறையில் தந்தை கூறுகின்றார் - தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு என்னை நினைவு செய்யுங்கள்.

இது மரண உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது அமரலோகம் ஆகும். அங்கு திடீர் மரணம் ஏற்படாது. வகுப்பில் மாணவர்கள் வரிசைக்கிரமமாக அமருவர் அல்லவா! இதுவும் பள்ளி அல்லவா! உங்களிடத்தில் வரிசைக்கிரமமான புத்திசாலி குழந்தைகள் யார் இருக் கின்றனர்? என்று பிராமணிகளிடத்தில் (நிமித்த சகோதரி களிடத்தில்) கேட்கப்படுகிறது. யார் நன்றாகப் படிக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக வலது பக்கமாக இருக்க வேண்டும். வலது கைக்கு மகத்துவம் இருக்கிறது அல்லவா! பூஜை வலது கையினால் தான் செய்யப்படுகிறது. சத்யுகத்தில் என்ன நடக்கும்? என்று குழந்தைகள் சிந்திக்கின்றனர். சத்யுகம் நினைவிற்கு வரும் பொழுது சத்திய தந்தையும் நினைவிற்கு வந்து விடுவார். பாபா நம்மை சத்யுகத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். நமக்கு இந்த இராஜ்யம் எப்படி கிடைத்தது? என்று அங்கு யாருக்கும் தெரியாது. அதனால் தான் பாபா கூறுகின்றார் - இந்த லெட்சுமி நாராயணனிடத் திலும் இந்த ஞானம் கிடையாது. தந்தை ஒவ்வொரு விசயத்தையும் நன்றாகப் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார், யார் கல்பத்திற்கு முன்பு புரிந்திருந்தார்களோ அவர்கள் அவசியம் புரிந்து கொள்வர். இருப்பினும் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது அல்லவா! கற்பிப்பதற் காகவே தந்தை வருகின்றார். இது படிப்பாகும், இதில் மிகுந்த அறிவு தேவை. நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த ஆன்மீகப் படிப்பு மிகவும் உயர்ந்தது மற்றும் கடினமானது, இதில் தேர்ச்சி பெறுவ தற்காக தந்தையின் நினைவின் மூலம் ஆசிர்வாதம் அடைய வேண்டும். தனது நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

2) இப்பொழுது சட்டத்திற்குப் புறம்பாக எந்த காரியமும் செய்யக் கூடாது. தேகமற்றவர் களாகி தனது சுய தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும் மற்றும் தேகமற்ற தந்தையின் சட்டப்படி நடக்க வேண்டும்.

வரதானம்:
தந்தையின் துணையின் மூலம் தூய்மை என்ற சுயதர்மத்தை எளிதாக கடைபிடிக்கக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

ஆத்மாவின் சுயதர்மம் தூய்மையாகும், அசுத்தம் மாற்றான் தர்மமாகும். எப்போது சுயதர்மத்தின் நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறதோ, அப்போது மாற்றான் தர்மம் உங்களை அசைக்க முடியாது. தந்தை யார்? எப்படிப்பட்டவர்? என்பதை யதார்த்தமாக அறிந்து கொண்டு துணையாக வைத்தீர்கள் எனில் தூய்மை என்ற சுயதர்மத்தை தாரணை செய்வது மிக எளிதாக இருக்கும். ஏனெனில் சர்வ சக்திவான் துணையாக இருக்கின்றார். சர்வசக்தி வானின் குழந்தைகள் மாஸ்டர் சர்வசக்திவானின் எதிரில் அசுத்தம் வரவே முடியாது. ஒருவேளை சங்கல்பத்திலும் மாயை வருகிறது எனில் அவசியம் ஏதோ ஒரு கதவு திறக்கப் பட்டிருக்கிறது அதாவது நம்பிக்கையில் குறையிருக்கிறது.

சுலோகன்:
திரிகாலதர்சிகள் எந்த ஒரு விசயத்தையும் ஒரு காலத்தின் திருஷ்டியில் பார்க்கமாட்டார்கள், ஒவ்வொரு விசயத்திலும் நன்மை இருப்பதாக புரிந்து கொள்வார்கள்.