05.01.25 காலை முரளி
ஓம் சாந்தி 17.10.2003 பாப்தாதா,
மதுபன்
வருடம் முழுவதும் திருப்தி மணி ஆகி சதா திருப்தியாக இருங்கள்
மற்றும் அனைவரையும் திருப்திப் படுத்துங்கள்
இன்று திலாராம் பாப்தாதா தம்முடைய நாலாபுறம் உள்ள, முன்னால்
உள்ள குழந்தைகளையும் கூட மற்றும் தூரத்தில் இருந்தாலும் அருகில்
இருப்பவர்களையும் ஒவ்வொரு ராஜ செல்லத்தை யும், மிக அன்பான
குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு குழந்தையும் ராஜா, எனவே ராஜ செல்லம். இந்தப் பரமாத்ம
அன்பு, செல்லம் உலகத்தில் மிகக் குறைவான ஆத்மாக்களுக்கே
கிடைக்கிறது. ஆனால் நீங்கள் அனைவரும் பரமாத்ம அன்பு, பரமாத்ம
செல்லத்துக்கு அதிகாரிகள். உலக ஆத்மாக்கள் வாருங்கள், வாருங்கள்
என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீஙகள் அனைவரும்
பரமாத்ம அன்பை அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பரமாத்ம
பாலனையில் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த மாதிரி உங்கள்
பாக்கியத்தை அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்களா? பாப்தாதா
குழந்தைகள் அனைவரையும் இரட்டை ராஜ்ய அதிகாரிகளாகப் பார்த்துக்
கொண்டிருக்கிறார். இப்போதைய சுயராஜ்ய அதிகாரி ராஜாவாகவும்
இருக்கிறீர்கள். மேலும் வருங்காலத்திலோ ராஜ்யம் உங்கள்
பிறப்புரிமையாக இருக்கும். ஆக, இரட்டை ராஜாக்கள் நீங்கள்.
அனைவரும் ராஜாக்கள் தாம் இல்லையா? பிரஜைகள் இல்லையே? ராஜயோகிகளா
அல்லது சிலர் பிரஜாயோகியாகவும் இருக்கிறீர்களா? பிரஜாயோகி
யாராவது இருக்கிறீர்களா? பின்னால் இருப்பவர்கள் ராஜயோகிகளா?
பக்கா? யோசித்து ஆம் எனச் சொல்ல வேண்டும். ராஜ அதிகாரி என்றால்
சர்வ சூட்சும மற்றும் ஸ்தூல கர்மேந்திரியங்களின் அதிகாரி.
ஏனென்றால் சுயராஜ்யம் உள்ளது இல்லையா? ஆக எப்போதாவது ராஜா
ஆகிறீர்களா அல்லது சதா ராஜாவாக இருக்கிறீர்களா? முக்கியமாக,
தனது மனம்-புத்தி-சம்ஸ்காரத்திற்கும் கூட அதிகாரியாக
இருக்கிறீர்களா? சதா அதிகாரியா அல்லது எப்போதாவது தானா?
சுயராஜ்யம் என்றால் சதா சுயராஜ்யமாக இருக்குமா அல்லது ஒரு நாள்
இருக்கிறது, அடுத்த நாள் இல்லை என்று அந்த மாதிரியா? ராஜ்யம்
என்றால் சதா இருக்கும் இல்லையா? சதா என்பதில் ஆம் எனச்
சொல்வதில்லையா? சில நேரம் மனம் உங்களை நடத்துகிறதா அல்லது
நீங்கள் மனதை நடத்து கிறீர்களா? எப்போதாவது மனம் மாலிக் ஆகிறதா?
ஆகிறது இல்லையா? ஆக, சதா சுயராஜ்ய அதிகாரி ஸோ விஷ்வராஜ்ய
அதிகாரியா நீங்கள்?
சதா சோதித்துப் பாருங்கள் -- எவ்வளவு நேரம் மற்றும் எவ்வளவு
சக்தியுடன் தன்னுடைய கர்மேந்திரியங்கள்,
மனம்-புத்தி-சம்ஸ்காரத்தின் மீது இப்போது அதிகாரி ஆகிறீர்களோ,
அவ்வளவு வருங்காலத்தில் ராஜ்ய அதிகாரம் கிடைக்கும். இப்போது
பரமாத்ம பாலனை, பரமாத்ம படிப்பு, பரமாத்ம ஸ்ரீமத்தின்
ஆதாரத்தில் இந்த ஒரு சங்கமயுக ஜென்மத்தில் சதா அதிகாரி இல்லை
யென்றால் 21 ஜென்மங்களுக்கு எப்படி ராஜ்ய அதிகாரி ஆவீர்கள்?
கணக்கு உள்ளது இல்லையா? இச்சமயத்தின் சுயராஜ்யம், சுயத்தின்
ராஜா ஆவதன் மூலம் தான் 21 பிறவிகளுக்கு கேரண்டி உள்ளது. நான்
யார் மற்றும் என்னவாக ஆவேன், தனது வருங்காலத்தை நிகழ்காலத்தின்
அதிகாரத்தின் மூலம் சுயம் அறிந்து கொள்ள முடியும். யோசித்துப்
பாருங்கள், விசேˆ ஆத்மாக் களாகிய உங்கள் அநாதி ஆதி பர்சனாலிட்டி
மற்றும் ராயல்டி எவ்வளவு உயர்ந்தது! அநாதி ரூபத்திலும்
பாருங்கள், எப்போது ஆத்மாக்கள் நீங்கள் பரந்தாமத்தில்
இருக்கிறீர்களோ, அப்போது எவ்வளவு ஜொலிக்கின்ற ஆத்மாக்களாகக்
காணப்படுகிறீர்கள்! அந்த ஜொலிப்பின் ராயல்டி, பர்சனாலிட்டி
எவ்வளவு பெரியது! தென்படுகிறதா? மேலும் பாபாவோடு கூடவே ஆத்மா
ரூபத்திலும் இருக்கிறீர்கள், அருகில் இருக்கிறீர்கள். எப்படி
ஆகாயத்தில் சில நட்சத்திரங்கள் அதிகம் ஜொலிப்பவையாக உள்ளன
இல்லையா? அது போல் ஆத்மாக்கள் நீங்களும் கூட பாபா வுடன் மற்றும்
விசேˆமாக ஜொலிக்கின்ற நட்சத்திரங்களாக இருக்கிறீர்கள்.
பரந்தாமத்திலும் கூட நீங்கள் பாபாவுக்கு அருகில் இருக்கிறீர்கள்
மற்றும் பிறகு சத்யுக ஆரம்பத்திலும் கூட தேவ ஆத்மாக்களாகிய
உங்களது பர்சனாலிட்டி, ராயல்டி எவ்வளவு உயர்ந்தது! முழுக்
கல்பத்திலும் சுற்றி வாருங்கள். மகாத்மாக்கள் இருந்து
சென்றிருக்கிறார்கள், தர்ம ஆத்மாக்கள் இருந்து
சென்றிருக்கிறார்கள், அரசியல் தலைவர்கள் இருந்து
சென்றிருக்கிறார்கள், நடிகர்கள் இருந்து சென்றிருக்கிறார்கள்.
ஆனால் இந்த மாதிரி பர்சனாலிட்டி யாருக்காவது இருந்துள்ளதா –
தேவாத்மாக்களாகிய நீங்கள் சத்யுகத்தில் இருந்தது போல? தங்களது
தேவ பர்சனாலிட்டி முன்னால் வருகிறது இல்லையா? வந்து
கொண்டிருக்கிறதா அல்லது நாம் அது போல் ஆவோமா இல்லையா எனத்
தெரியவில்லையே என்று அந்த மாதிரியா? பக்காவா? தங்களின் தேவ
ரூபத்தை முன்னால் கொண்டு வாருங்கள், பாருங்கள். பர்சனாலிட்டி
முன்னால் வந்து விட்டதா? எவ்வளவு பர்சனாலிட்டி! இயற்கையும் கூட
பர்சனாலிட்டி உள்ளதாக ஆகி விடுகிறது. பறவைகள், மரங்கள், பழங்கள்,
பூக்கள் அனைத்தும் பர்சனாலிட்டி உள்ளவை, மற்றும் ராயல். நல்லது,
பிறகு கீழே வாருங்கள், அப்போது தங்களின் பூஜைக்குரிய ரூபத்தைப்
பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்குப் பூஜை நடைபெறுகிறது. இரட்டை
வெளிநாட்டினர் பூஜைக்குரியவராக ஆவார்களா, இந்தியர்கள் ஆவார் களா?
நீங்கள் தேவி-தேவதை ஆகியிருக்கிறீர்களா? துதிக்கை உள்ளவராக (கணேஷ்)
இல்லை, வால் உள்ளவராக (அநுமார்) இல்லை. தேவிகளும் கூட அந்தக்
கருப்பு ரூபம் (காளி) இல்லை. ஆனால் தேவதைகளின் கோயில்களில்
பாருங்கள், உங்கள் பூஜைக்குரிய சொரூபத்துக்கு எவ்வளவு ராயல்டி
உள்ளது! எவ்வளவு பர்சனாலிட்டி உள்ளது! மூர்த்தி இருக்கும் 4-5
அடிக்கு மற்றும் கோவில் எவ்வளவு பெரியதாக உருவாக்குகின்றனர்!
இந்த ராயல்டி மற்றும் பர்சனாலிட்டி உள்ளது. தற்போதைய பிரதம
மந்திரி ஆகட்டும், ராஜா ஆகட்டும், பாவம் அவர்களின் உருவங்களைத்
தயார் செய்து வெயிலில் நிறுத்தி விடுகிறார்கள், அவர்கள் யாராக
இருந்தாலும் சரி. மேலும் உங்கள் பூஜைக்குரிய சொரூபத்தின்
பர்சனாலிட்டி எவ்வளவு பெரியது! உயர்தரமானது இல்லையா? குமாரிகள்
அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? உங்களுக்கு ராயல்டி உள்ளது
இல்லையா? பிறகு கடைசியில் சத்யுகத்திலும் கூட அனைவரின் ராயல்டி
எவ்வளவு உயர்ந்தது! நேரடியாக பகவான் உங்களது பிராமண
வாழ்க்கையில் பர்சனாலிட்டி மற்றும் ராயல்டியை நிரப்பியுள்ளார்.
பிராமண வாழ்க்கையின் ஓவியர் யார்? சுயம் தந்தை. பிராமண
வாழ்க்கையின் பர்சனாலிட்டி, ராயல்டி எது! தூய்மை. தூய்மையின்
ராயல்டி உள்ளது. உள்ளது இல்லையா? இங்கே அமர்ந்துள்ள பிராமண
ஆத்மாக்கள் அனைவருக்கும் தூய்மையின் ராயல்டி உள்ளது இல்லையா?
ஆம், தலையை அசையுங்கள். பின்னால் இருப்பவர்கள் கை உயர்த்திக்
கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பின்னால் இல்லை. முன்னால்
இருக்கிறீர்கள். பாருங்கள், பார்வை பின்னால் போகிறது. முன்பாகவோ
இது போல் பார்க்க வேண்டியிருக்கிறது. பின்னால் தானாகவே போகிறது.
ஆக, சோதித்துப் பாருங்கள் -- தூய்மையின் பர்சனாலிட்டி சதா
உள்ளதா? மனம்-சொல்-செயல், உள்ளுணர்வு, பார்வை மற்றும் செயல்
அனைத்திலும் தூய்மை உள்ளதா? எண்ணத்தில் தூய்மை என்றால் சதா
மற்றும் அனைவருக்காகவும் சுப பாவனை, சுப விருப்பம் -
அனைவருக்காகவும். அந்த ஆத்மா எப்படிப்படவராக இருந்தாலும் சரி.
ஆனால் தூய்மையின் ராயல்டியின் எண்ணம் -- அனைவருக்காகவும் சுப
பாவனை, சுப விருப்பம், நன்மையின் பாவனை, இரக்க பாவனை, வள்ளல்
தன்மையின் பாவனை. மேலும் திருஷ்டியில் சதா ஒவ்வொருவருக்காகவும்
ஆத்மிக சொரூபம் காணப்பட வேண்டும், அல்லது ஃபரிஸ்தா ரூபம்
காணப்பட வேண்டும். அவர் ஃபரிஸ்தா ஆக வில்லை என்றாலும் எனது
திருஷ்டியில் ஃபரிஸ்தா ரூபம் மற்றும் ஆத்மிக ரூபம் மட்டும் தான்
இருக்க வேண்டும். மேலும் செயல், அதாவது சம்பந்தம்-தொடர்பில்,
கர்மத்தில் வருவது, அதில் எப்போதும் அனைவருக்காகவும் அன்பு
கொடுக்க வேண்டும், சுகம் கொடுக்க வேண்டும். மற்றவர்கள் அன்பு
கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும் என் கடமை அன்பைக் கொடுத்து
அன்பானவராக ஆக்க வேண்டும். சுகம் கொடுக்க வேண்டும். ஸ்லோகன்
உள்ளது இல்லையா -- துக்கம் கொடுக்கவும் செய்யாதீர்கள்,
துக்கத்தை எடுக்கவும் செய்யாதீர்கள். கொடுப்பவர்கள் உங்களுக்கு
எப்போதாவது துக்கத்தைக் கொடுத்தாலும் நீங்கள் அவரை சுகத்தின்
ஸ்மிருதியுடன் பாருங்கள். கீழே விழுந்து விட்டவர்களை மேலும்
வீழ்த்துவதில்லை. வீழ்ந்து விட்டவர்கள் எப்போதும் உயர்த்தப் பட
வேண்டும். அவர் வேறு வசமாகி துக்கம் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். விழுந்து விட்டார் இல்லையா? எனவே அவரை
வீழ்த்தக் கூடாது. பாவம் அவர், இன்னும் அவருக்கு ஓர் உதை
கொடுங்கள் என்று அப்படி இருக்கக் கூடாது. அவரை அன்போடு உயரச்
செய்யுங்கள். அதிலும் தர்ம காரியம் முதலில் வீட்டிலிருந்து
தொடங்க வேண்டும். முதலிலோ சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம் இல்லையா?
தன் துணையில் இருப்பவர்கள் அனைவரையும், சேவையில்
துணையிருப்பவர்கள் அனைவரையும், பிராமணப் பரிவாரத்தில் துணையாக
இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் உயர்த்துங்கள். அவர்கள் தங்கள்
தீய செயலை, அவகுணத்தைக் காட்டி னாலும் கூட நீங்கள் அவர்களின்
விசேˆ குணங்களைப் பாருங்கள். வரிசைக் கிரமமாகவோ இருக்கத்தானே
செய்கிறார்கள்! பாருங்கள், மாலை உங்கள் நினைவுச் சின்னம். ஆக,
அனைவரும் முதல் நம்பரோ இல்லை தானே? 108 நம்பர் உள்ளது இல்லையா?
ஆக, நம்பர்வார் உள்ளனர், மேலும் இருப்பார்கள். ஆனால் எனது கடமை
என்ன? நல்லது, நான் எட்டு நம்பரிலோ இல்லை. 108-இல் ஒரு வேளை
வந்து விடுவேன். ஆக, 108-இல் கடைசியாகவும் இருக்கலாம். எனக்கும்
கூட ஏதோ சம்ஸ்காரம் இருக்கும் இல்லையா? ஆனால் அப்படி இல்லை.
மற்றவர்களுக்கு சுகம் கொடுத்துக் கொடுத்து, சிநேகம் கொடுத்துக்
கொடுத்து உங்கள் சம்ஸ்காரமும் கூட சிநேகி, சுகி ஆகிவிடவே
செய்யும். இது சேவை மற்றும் இந்த சேவை முதலில் சேரிட்டி
பிகின்ஸ் அட் ஹோம்.
பாப்தாதாவுக்கு இன்று ஒரு விஷயத்தில் சிரிப்பு வந்து
கொண்டிருந்தது. அது என்னவென்று சொல்லவா? பாருங்கள்,
உங்களுக்கும் சிரிப்பு வரும். பாப்தாதாவோ குழந்தைகளின்
விளையாட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் இல்லையா? பாப்தாதா
ஒரு விநாடியில் எப்போதாவது ஏதேனும் ஒரு சென்டரின் டி.வி.யைத்
திறந்து விடுகிறார். சில நேரம் ஒரு சென்டருடையது, சில நேரம்
வெளிநாட்டினுடையது, சில நேரம் இந்தியாவினுடையதை ஸ்விட்ச் ஆன்
செய்து விடுகிறார். என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்து
விடுகிறது. ஏனென்றால் பாபாவுக்குக் குழந்தைகளிடம் அன்பு உள்ளது
இல்லையா? குழந்தைகளும் சொல்கிறார்கள் -- பாபாவுக்கு சமமாக ஆகியே
தீர வேண்டும். பக்கா தானே? சமமாக ஆகத் தான் வேண்டும்.
யோசித்துக் கை உயர்த்துங்கள். யார் புரிந்து
கொண்டிருக்கிறார்களோ சாக வேண்டியதிருக்கலாம், தலைவணங்க வேண்டிய
திருக்கலாம், சகித்துக் கொள்ள வேண்டியதிருக்கலாம், கேட்க
வேண்டிய திருக்கலாம், ஆனால் சமமாக ஆகியே காட்டுவோம். அவர்கள்
கை உயர்த்துங்கள். குமாரிகள் யோசித்துக் கை உயர்த்த வேண்டும்.
இவர்களை ஃபோட்டோ எடுங்கள். குமாரிகள் அதிகம் உள்ளனர். சாக
வேண்டியதிருக்கும்? தலைவணங்க வேண்டியதிருக்கும்? பாண்டவர்கள்
கை உயர்த்துங்கள். கேட்டீர்களா, சமமாக ஆக வேண்டும். சமமாக
ஆகவில்லை என்றால் மஜா வராது. பரந்தாமத்திலும் கூட அருகில்
இருக்க மாட்டீர்கள். பூஜைக்குரிய நிலையிலும் வித்தியாசம் வந்து
விடும். பிரம்மா பாபாவிடம் உங்களுக்கு அன்பு உள்ளது இல்லையா?
இரட்டை வெளிநாட்டினருக்கு அனைவரை விடவும் அதிக அன்பு உள்ளது.
யாருக்கு பிரம்மா பாபாவிடம் உயிருக்குயிரான அன்பு உள்ளதோ,
மனதின் அன்பு உள்ளதோ, அவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது, பக்கா
அன்பு உள்ளது இல்லையா? அன்பு யாரிடம் உள்ளது என்று இப்போது
கேட்டால் அன்பின் அடையாளம் -- எது அவர்களுக்குப்
பிடித்திருக்கிறதோ, அது அன்பு வைப்பவருக்கும் பிடிக்கும்.
இருவரின் சம்ஸ்காரம், சங்கல்பம், சுபாவம் எப்போது சமமாக உள்ளதோ,
அப்போது அவர் அன்புக்குரியவராகிறார். ஆக, பிரம்மா பாபாவிடம்
அன்புள்ளதென்றால் 21 பிறவிகளும் , முதல் பிறவி தொடங்கி,
இரண்டாவது, மூன்றாவது பிறவியில் வந்தால் நன்றாக இல்லை. ஆனால்
முதல் பிறவி தொடங்கி கடைசிப் பிறவி வரை கூடவே இருப்பார்கள்.
பல்வேறு ரூபத்தில் கூடவே இருப்பார்கள். ஆக, கூடவே யார் இருக்க
முடியும்? சமமாக இருப்பவர்கள். அவர் நம்பர் ஒன் ஆத்மா. ஆக,
கூடவே எப்படி இருப்பீர்கள்? நம்பர் ஒன் ஆனால் தான் கூடவே
இருப்பீர்கள். அனைத்திலும் நம்பர் ஒன். மனதில், சொல்லில்,
கர்மத்தில், உள்ளுணர்வில், பார்வையில், செயலில், அனைத்திலும்.
ஆக, நம்பர் ஒன்னா, நம்பர்வாரா? ஆக, அன்பு இருக்குமானால்
அன்புக்காக எதையும் பலியிடுவது (அர்ப்பணிப்பது) கஷ்டமாக
இருக்காது. கடைசிப் பிறவி கலியுகக் கடைசியில் கூட தேக உணர்வுடன்
அன்பு வைப்பவர்கள் உயிரையே கூட பலிகொடுத்து விடுகிறார்கள். ஆக,
நீங்கள் பிரம்மா பாபாவின் அன்பில் தங்களின் சம்ஸ்கார மாற்றம்
செய்வது என்ன பெரிய விˆயம்? பெரிய விˆயமா என்ன? இல்லை தானே? ஆக
இன்று முதல் அனைவரின் சம்ஸ்காரங்களும் மாறி விட்டன. பக்கா?
ரிப்போர்ட் வரும் உங்கள் துணையில் இருப்பவர்கள் எழுதுவார்கள்.
பக்கா? தாதிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொல்கிறார்கள்
-- சம்ஸ்காரங்கள் மாறி விட்டன. அல்லது நேரம் பிடிக்குமா என்ன?
மோகினி (நியுயார்க்) சொல்லட்டும் -- மாறி விடுவார்கள் இல்லையா?
அமெரிக்கர் களோ மாறி விடுவார்கள். சிரிப்பின் விˆயமோ (மீதி)
இருந்து விட்டது.
சிரிப்பின் விசயம் இது தான் -- அனைவருமே சொல்கிறார்கள் --
புருசார்த்தமோ அதிகம் செய்கிறோம். மேலும் பாப்தாதாவுக்கு இதைப்
பார்க்கும் போது இரக்கமும் வருகிறது. புருˆôர்த்தம் நிறைய
செய்கிறார்கள். சில நேரம் கடின உழைப்பு அதிகம் செய்கிறார்கள்.
என்ன சொல்கிறார்கள் -- என்ன செய்வது, எனது சம்ஸ்காரம் அது போல்
உள்ளது. சம்ஸ்காரத்தின் மீது பழி போட்டுத் தன்னை (லேசாக)
விடுவித்துக் கொள்கிறார்கள். ஆனால் பாபா இன்று பார்த்தார் --
நீங்களோ எனது சம்ஸ்காரம் எனச் சொல்கிறீர்கள். அப்படியானால் இது
என்ன உங்கள் சம்ஸ்காரமா? நீங்கள் ஆத்மா. ஆத்மா தான் இல்லையா?
சரீரமோ இல்லை தானே? ஆக, ஆத்மாவின் சம்ஸ்காரம் எது? உங்கள்
ஒரிஜினல் சம்ஸ்காரம் எது? எதை இன்று நீங்கள் எனது எனச்
சொல்கிறீர்களோ, அது எனதா அல்லது ராவணனுடையதா? யாருடையது?
உங்களுடையதா? இல்லையா? ஆக, எனது என்று ஏன் சொல்கிறீர்கள்?
நீங்கள் சொல்வதோ அப்படித் தான் இல்லையா? அதாவது என்னுடைய
சம்ஸ்காரம் இப்படி இருக்கிறது. ஆக, இன்று முதல் இவ்வாறு சொல்லக்
கூடாது -- எனது சம்ஸ்காரம். இல்லை. சில நேரம் இங்கே-அங்கே
இருந்து குப்பை பறந்து வருகிறது இல்லையா? ஆக, இந்த ராவணனின்
பொருள் வந்து விட்டதென்றால் அதை எனது என்று எப்படிச் சொல்
கிறீர்கள்? என்னுடையதா என்ன? இல்லை தானே? எனவே இப்போது ஒரு
போதும் அது போல் சொல்லக் கூடாது. எப்போது எனது என்ற சொல்லைச்
சொல்கிறீர்களோ, அப்போது நினைவு செய்யுங்கள் -- எனது சம்ஸ்காரம்
என்ன? சரீர உணர்வு எனது சம்ஸ்காரம், ஆத்ம அபிமானியிடம் இந்த
சம்ஸ்காரம் இல்லை. அதனால் இப்போது இந்த பாûˆயையும் மாற்ற
வேண்டும். எனது சம்ஸ்காரம் எனச் சொல்லி கவனக்குறைவாக ஆகி
விடுகிறீர்கள். அந்த உணர்வு இல்லை, ஆனால் சம்ஸ்காரம் உள்ளது
எனச் சொல்வார்கள். நல்லது, இரண்டாவது சொல் என்ன சொல்கிறீர்கள்?
எனது சுபாவம். இப்போது சுபாவம் என்ற சொல் எவ்வளவு நன்றாக உள்ளது!
ஸ்வ என்பதோ எப்போதும் நன்றாகவே உள்ளது. எனது சுபாவம், சுயத்தின்
பாவம் நன்றாக உள்ளது. கெட்டதாக ஆவதில்லை. எனது சுபாவம், எனது
சம்ஸ்காரம் என்ற சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் இல்லையா?
இப்போது இந்த பாûˆயை மாற்றுங்கள். எப்போதெல்லாம் எனது என்ற சொல்
வருகிறதோ, அப்போது நினைவு செய்யுங்கள், எனது ஒரிஜினல்
சம்ஸ்காரம் எது? இதை யார் பேசுகிறார்? ஆத்மா சொல்கிறது, இது
எனது சம்ஸகாரம். ஆக, எப்போது இதை யோசிக்கிறீர்களோ, அப்போது தன்
மீதே சிரிப்பு வரும். சிரிப்பு வருமா இல்லையா? சிரிப்பு வந்தால்
நீங்கள் உருவாக்கிய பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
இது தான் பாûˆயை மாற்றுவது எனச் சொல்வது, அதாவது ஒவ்வோரு
ஆத்மாவுக்காகவும் சுவமானிலும் சம்மானிலும் (மதிப்பளிப்பது)
இருப்பது. தானும் சதா சுவமானத்தில் இருங்கள். மற்றவர்களையும்
சுவமானத்தில் பாருங்கள். சுவமானத்தில் பார்ப்பீர்களானால் பிறகு
என்னென்ன பிரச்சினைகள் வருகின்றனவோ, அவை உங்களுக்கும்
பிடிக்காமல் இருக்கலாம். எப்போதாவது ஏதேனும் பிரச்சினை வந்தால்
அது பிடிக்கிறதா? பிடிக்காது இல்லையா? அதனால் ஒருவர் மற்றவரை
சுவமானத்திலேயே பாருங்கள். இவர் விசேச ஆத்மா. இவர் பாபாவின்
பாலனையில் வளரும் பிராமண ஆத்மா. இவர் கோடியில் சிலர், அந்தச்
சிலரிலும் ஒருவராகிய ஆத்மா. ஒரு விˆயத்தை மட்டும் செய்யுங்கள்.
தன் கண்களில் பிந்தியை நிறைத்துக் கொள்ளுங்கள். ஒரு
பிந்தியினாலோ பார்க்கிறீர்கள். இன்னொரு பிந்தியை யும் நிறைத்து
விட்டீர்களானால் ஒன்றும் ஆகாது. கடின உழைப்பு தேவைப் படாது.
எப்படி ஆத்மா, ஆத்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆத்மா,
ஆத்மாவோடு பேசிக் கொண்டிருக்கிறது. ஆத்மிக உள்ளுணர்வு, ஆத்மிக
திருஷ்டியை உருவாக்குங்கள். என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்ததா?
இப்போது எனது சம்ஸ்காரம் என்று சொல்லக் கூடாது. சுவபாவம் எனச்
சொல்வீர் களானால் சுயத்தின் உணர்வில் இருக்க வேண்டும். சரியா?
பாப்தாதா இதைத் தான் விரும்புகிறார் -- இந்த வருடம் முழுவதும்,
சீசன் 6 மாதம் நடந்தாலும் சரி, ஆனால் முழு வருடத்திலும்
அனைவரையும் எப்போது சந்தித்தாலும், யாரோடு சந்தித்தாலும்,
தங்களுக்குள் சந்தித்தாலும், மற்ற ஆத்மாக்களோடு சந்தித்தாலும்,
எப்போது சந்தித்தாலும், யாரைச் சந்தித்தாலும் அவர்களுக்குத்
திருப்தியின் சகயோகம் கொடுங்கள். தானும் திருப்தியாக இருங்கள்.
மற்றவர்களையும் திருப்திப் படுத்துங்கள். இந்த சீசனுக்கான
சுவமான் -- திருப்தி மணி. சதா திருப்தி மணி. சகோதரனும் மணி. (பெண்பால்).
மணா (ஆண்பால்) இல்லை. ஒவ்வோர் ஆத்மாவும் ஒவ்வொரு சமயம் திருப்தி
மணி. மேலும் சுயம் திருப்தியாக இருந்தால் மற்றவர்களையும்
திருப்திப் படுத்துவார்கள். திருப்தியாக இருக்க வேண்டும்,
திருப்திப் படுத்த வேண்டும். சரி தானே? பிடித்திருக்கிறதா? (அனைவரும்
கை உயர்த்தினார்கள்) மிக நன்று. வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
நல்லது. எது நடந்தாலும், தனது சுவமானத்தின் இருக்கை மீது
ஒருமுகத் தன்மையுடன் இருங்கள். அலைய வேண்டாம். ஒவ்வொரு நேரம்
ஒவ்வொரு சீட் என்று இருக்க வேண்டாம். தனது சுவமானத்தின் சீட்
மீது ஏகாக்ர நிலையில் இருங்கள். மேலும் ஏகாக்ர சீட் மீது செட்
ஆகி, ஏதேனும் பிரச்சினை வந்தால் ஒரு கார்ட்டூன் காட்சி போல்
பாருங்கள். கார்ட்டூன் பாரப்பது நன்றாக உள்ளது இல்லையா? ஆக, இது
பிரச்சினை இல்லை, கார்ட்டூன் காட்சி ஓடிக்கொண்டுள்ளது. ஏதேனும்
சிங்கம் வருகிறது, ஏதேனும் ஆடு வருகிறது, ஏதேனும் தேள் வருகிறது,
ஏதேனும் பல்லி வருகிறது, அழுக்கான கார்ட்டூன் காட்சி. தனது
சீட்டில் இருந்து அப்செட் ஆகாதீர்கள். மஜா வரும். நல்லது.
நாலாபுறம் உள்ள ராஜ செல்லக் குழந்தைகளுக்கு அனைத்து சிநேகி,
சகயோகி, சமமாக ஆகக்கூடிய குழந்தைகளுக்கு, சதா தனது சிரேஷ்ட சுவ
பாவ் (சுபாவம்) மற்றும் சம்ஸ்காரத்தை சொரூபத்தில் இமர்ஜ்
செய்யக்கூடிய குழந்தைகளுக்கு, சதா திருப்தி மணி ஆகி,
திருப்தியின் கிரணங்களைப் பரப்பக் கூடிய குழந்தைகளுக்கு
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
வரதானம்:
சுப சிந்தனை மற்றும் சுப சிந்தனையாளர் ஸ்திதியின் அனுபவத்தின்
மூலம் பிரம்மா பாபாவுக்கு சமமான மாஸ்டர் வள்ளல் ஆகுக.
பிரம்மா பாபாவுக்கு சமமாக மாஸ்டர் வள்ளல் ஆவதற்கு பொறாமை,
வெறுப்பு மற்றும் விமர்சித்தல் இந்த மூன்று விˆயங்களில்
இருந்தும் விடுபட்டு இருந்து, அனைவருக்காகவும் சுப சிந்தனையாளர்
ஆகுங்கள் மற்றும் சுப சிந்தனை ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
ஏனென்றால் யாரிடம் பொறாமையின் அக்னி உள்ளதோ, அவர்கள் சுயம்
எரிகிறார்கள், மற்றவர்களையும் கவலையுறச் செய்கிறார்கள்.
வெறுப்புணர்வு உள்ளவர்கள் தாங்களும் கீழே விழுகின்றனர், மற்றவர்
களையும் விழச் செய்கிறார்கள். மேலும் சிரித்துக் கேலியாகவும்
விமர்சிப்பவர்கள், ஆத்மாவை தைரியமிழக்கச் செய்து துக்கப்பட
வைக்கிறார்கள். எனவே இந்த மூன்று விˆயங்களில் இருந்தும்
விடுபட்டு, சுப சிந்தனையாளர் ஸ்திதியின் அனுபவத்தின் மூலம்
வள்ளலின் குழந்தைகள் மாஸ்டர் வள்ளல் ஆகுங்கள்.
சுலோகன்:
மனம்-புத்தி மற்றும் சம்ஸ்காரங்கள் மீது சம்பூர்ண ராஜ்யம்
செய்யக்கூடிய சுயராஜ்ய அதிகாரி ஆகுங்கள்.
தனது சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுப்பதற்கான சேவை
செய்யுங்கள்
பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மரத்தின் தண்டாக இருக்கிறீர்கள்.
தண்டிலிருந்து தான் முழு மரத்திற்கும் சகாஷ் சென்று சேர்கிறது.
ஆகவே இப்போது உலகத்திற்கு சகாஷ் கொடுப்பவர் ஆகுங்கள். 20
சென்டர் 30 சென்டர் அல்லது 250 சென்டர் அல்லது ஜோன், இது
புத்தியில் இருக்குமானால் எல்லையற்றதில் சகாஷ் கொடுக்க முடியாது.
எனவே எல்லைக்குட்பட்டதில் இருந்து வெளியேறி இப்போது எல்லையற்ற
சேவையின் பார்ட்டை ஆரம்பியுங்கள். எல்லையற்றதில் செல்வதன் மூலம்
எல்லைக்குட்பட்ட விˆயங்கள் தாமாகவே விடுபட்டுப் போகும்.
எல்லையற்ற சகாஷ் மூலம் மாற்றம் நிகழ்வது என்பது வேகமான சேவையின்
ரிசல்ட்டாகும்.