05-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சந்தோஷத்தைப் போன்ற சத்தான உணவு வேறெதுவும் இல்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்து நடந்தாலும் சுற்றினாலும் பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் பாவனமாகி விடுவீர்கள்.

கேள்வி:
எந்த ஒரு கர்மமும் விகர்மம் ஆகாமல் இருப்பதற்கான யுக்தி என்ன?

பதில்:
விகர்மத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான சாதனம் ஸ்ரீமத். பாபாவினுடைய முதல் ஸ்ரீமத் தன்னை ஆத்மா என்று உணர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள், இந்த ஸ்ரீமத் படி நடந்தால் நீங்கள் பாவனமாகிவிடுவீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் இங்கும் அமர்ந்திருக்கினிறீர்கள் மேலும் சேவை நிலையங் களிலும் அமர்ந்திருக்கிறீர்கள். அனைத்து குழந்தைகளும் தெரிந்துள்ளீர்கள் இப்பொழுது ஆன்மீகத் தந்தை வந்துள்ளார், அவர் நம்மை இந்த சீ சீ பழைய உலகத்திலிருந்து பிறகு வீட்டிற்கு அழைத்து செல்வார் என்பதை பாபா வந்திருக்கின்றார் பாவனம் ஆக்குவதற்காக மேலும் ஆத்மாக்களுடன் உரையாடுகின்றார். ஆத்மாதான் காதுகள் மூலம் கேட்கின்றது. ஏனென்றால் பாபாவிற்கு தனக்கென்று சொந்த சரீரம் கிடையாது. எனவே சரீரத்தை ஆதாரமாக எடுத்து என்னுடைய அறிமுகம் தருகிறேன் என்று பாபா கூறுகின்றார். நான் இந்த சாதாரண சரீரத்தில் வந்து குழந்தை களுக்கு பாவனமாவதற்கான வழியைக் கூறுகின்றேன். அதுவும் ஒவ்வொரு கல்பமும் வந்து உங்களுக்கு இந்த யுக்தியைக் கூறுகின்றேன். இந்த இராவண இராஜ்யத்தில் நீங்கள் எவ்வளவு துக்கமானவர்களாக ஆகியிருக்கிறீர்கள். இராவண இராஜ்யம் சோக வனத்தில் நீங்கள் இருக்கிறீர் கள். கலியுகத்தைத் தான் இவ்வாறு சொல்லப்படுகின்றது இது துக்கதாமம். சுகதாமம் என்பது கிருஷ்ணபுரி, சொர்க்கம். இப்பொழுது அது இல்லை. இப்பொழுது பாபா வந்திருக்கின்றார் நமக்கு படிப்பு கற்றுத் தருவதற்காக, என்பதை குழந்தைகள் நன்றாகப் புரிந்துள்ளீர்கள்.

பாபா கூறுகின்றார், நீங்கள் வீட்டில் கூட பாடசாலை ஏற்பாடு செய்ய முடியும். பாவனமாகி மற்றவர்களையும் பாவனமாக்க வேண்டும். நீங்கள் பாவனமானீர்கள் என்றால் பிறகு உலகமும் பாவனமாகிவிடும். இப்பொழுது இது கீழான அழுக்கான உலகமாக இருக்கின்றது. இப்பொழுது இது இராவண இராஜ்யம். இந்த விசயங்களை யார் நல்லமுறையில் புரிந்து கொள்கின்றார்களோ அவர்களே பிறருக்கும் புரிய வைக்க முடியும். பாபா இதைத்தான் கூறுகின்றார், தன்னை ஆத்மா என்று புரிந்து என்னை நினைவு செய்யுங்கள், பிறருக்கும் இப்படியே புரிய வைக்கவும். பாபா வந்திருக்கின்றார், மேலும் சொல்கின்றார் என்னை நினைவு செய்தீர்களானால் நீங்கள் பாவனமாகிவிடுவீர்கள். எந்த அசுர கர்மமும் செய்யாதீர்கள். மாயா உங்களை எந்த சீ சீ கர்மம் செய்விக்கின்றதோ அது அவசியம் பாவ கர்மம் ஆகிவிடும். முதலில் ஈஸ்வரன் சர்வ வியாபி என்று கூறுவது கூட மாயை தான் சொல்ல வைக்கின்றது அல்லவா? மாயை உங்களை ஒவ்வொன்றிலும் பாவத்தைத் தான் செய்விக்கின்றது. கர்மம் விகர்மம் அகர்மத்தினுடைய இரகசியத்தையும் பாபா புரிய வைக்கின்றார். ஸ்ரீமத் படி நீங்கள் அரைக் கல்பம் சுகத்தை அனுபவிக்கின்றீகள், பிறகு அரைக்கல்பம் இராவணன் வழிப்படி நடந்து துக்கத்தை அனுபவிக் கின்றீர்கள். இந்த இராவண இராஜ்யத்தில் நீங்கள் பக்தி செய்து கீழே தான் இறங்கி வந்திருக் கின்றீர்கள். நீங்கள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ளாமல் கல் புத்தியாக இருந்தீர்கள். கல்புத்தி மற்றும் தங்கபுத்தி என்று சொல்லப்படுகின்றதல்லவா? ஹே ஈஸ்வரா! இவருக்கு நல்ல புத்தி கொடுங்கள், இவர்கள் சண்டையை நிறுத்தட்டும், என்று பக்தி மார்க்கத்தில் கூறுகின்றார்கள் அல்லவா? பாபா இப்பொழுது நல்ல புத்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நாம் தெரிந்திருக்கின்றோம். பாபா கூறுகின்றார்-இனிமையான குழந்தைகளே, நீங்கள் ஆத்மா பதீதமாகி விட்டீர்கள், நினைவு யாத்திரை மூலமாக பாவனமாக வேண்டும். நடக்கவும் சுற்றி வரவும், பாபாவினுடைய நினைவில் எவ்வளவு தூரம் நடந்தாலும் உங்களுக்கு சரீர உணர்வு மறந்துவிடும். சந்தோஷத்தைப் போன்ற சத்தான உணவில்லை என்ற புகழ் கூட இருக்கின்றது. மனிதர்கள் செல்வத்தை சம்பாதிக்க எவ்வளவு தூர தூரத்திற்கு குஷியோடு செல்கின்றார்கள். இங்கு நீங்கள் எவ்வளவு செல்வந்தர், பணக்காரராகின்றீர்கள். பாபா சொல்கின்றார் நான் கல்ப கல்பமாக வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு என்னுடைய அறிமுகத்தைத் தருகின்றேன். இந்த நேரம் அனைவரும் பதீதமாக உள்ளனர். பாவனமாக்குவதற்காக வாருங்கள் என்று அழைத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஆத்மா தான் பாபாவை அழைக்கின்றது. இராவண இராஜ்யத்தில் சோகவனத்தில் அனைவரும் துக்கத்தில் இருக்கின்றார்கள். இராவண இராஜ்யம் முழு உலகத்திலும் இருக்கின்றது. இந்த நேரம் உலகமே தமோபிரதானமாக இருக்கின்றது. சதோபிரதான தேவதைகள் சித்திரங்கள் மட்டுமே இருக்கின்றது. அவர்களுக்கு மகிமையும் பாடப்படுகின்றது. சாந்திதாமம் சுகதாமம் செல்ல மனிதர்கள் எவ்வளவு தலையை உடைத்துக்கொள்கின்றார்கள். பகவான் எப்படி வந்து நமக்கு பக்தியின் பலன் தருவார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது பக்தியின் பலன் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஓன்று முக்தி இன்னொன்று ஜீவன் முக்தி என்று பக்திக்கு இரண்டுவித பலன் கிடைக்கின்றது. இது புரிந்து கொள்ள வேண்டிய ஆழமான விசயம். யார் ஆரம்ப காலத்திலிருந்து நிறைய பக்தி செய்துள்ளார் களோ அவர்கள் ஞானத்தை நல்ல முறையில் எடுத்துக் கொள்வார்கள் அதனால் நல்ல பலனை அடைவார்கள். பக்தி குறைவாக செய்தால் ஞானமும் குறைவாகத் தான் கேட்பார்கள் பலனும் குறைவாகத்தான் கிடைக்கும். கணக்கு இருக்கின்றதல்லவா? பதவியும் நம்பர்படி தான் உள்ளது. பாபா சொல்கிறார், என் குழந்தையான பிறகு விகாரத்தில் விழுகின்றீர்கள் என்றால் என்னை விட்டு விட்டீர்கள். மிகவும் கீழே சென்றுவிடுவீர்கள். சிலர் கீழே விழுந்து பிறகு எழுந்துவிடுகிறார்கள். சிலர் புதை சேற்றில் (சாக்கடையில்) விழுந்து விடுகின்றனர் புத்தி முற்றிலும் மாறுவதேயில்லை. நாம் பகவானுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டோம், விகாரத்தில் விழுந்து விட்டோம் என்ற துக்கம் மனதை உறுத்துகின்றது. பாபாவினுடைய கையை விட்டு விடுவதால் மாயையினுடையவராகி விடுகின்றோம். அவர்கள் வாயு மண்டலத்தை அசுத்தப்படுத்துகின்றார் கள். சாபத்திற்குரியவர் ஆகிவிடுகின்றார்கள். பாபாவுடன் தர்மராஜ் இருக்கின்றார் அல்லவா? நான் என்ன செய்கின்றேன் என்று அந்த நேரம் தெரிவதில்லை பிறகு வருத்தப்படு கின்றார்கள். இப்படி நிறைய நடக்கின்றது யாரையாவது கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போன பிறகு இப்படி செய்துவிட்டேனே என்று வருத்தப்படுகின்றார்கள். கோபத்தில் அடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றது. நீங்கள் செய்தித்தாள்கள் படிப்பது இல்லை. உலகத்தில் என்னென்ன நடந்து கொண்டிருக்கின்றது, உங்களுக்குத் தெரிவதில்லை. நாளுக்கு நாள் உலகத்தின் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. ஏணியில் இறங்கித்தான் ஆக வேண்டும். நீங்கள் இந்த நாடகத்தின் இரகசியத்தைப் புரிந்துக் கொண்டீர்கள். நாம் பாபாவைத்தான் நினைவு செய்ய வேண்டும் என்பது உங்கள் புத்தியில் இருக்கிறது. பதிவேடு குறைவுள்ளதாகி விடுவதைப் போல் எந்த காரியமும் செய்யக் கூடாது. பாபா சொல்கின்றார் நான் உங்கள் ஆசிரியராக இருக்கின்றேன் அல்லவா! ஆசிரியரிடம் மாணவர்களின் படிப்பு மற்றும் நடத்தைக் கான பதிவேடு இருக்குமல்லவா? சிலருடைய நடத்தை மிக நன்றாக உள்ளது, சிலருடையது குறைவாகவும், சிலருடையது மிகவும் மோசமாகவும் உள்ளது. நம்பர்வார் தான் இருக்கின்றார்கள். இந்த பரம தந்தை எவ்வளவு உயர்ந்த படிப்பை கற்றுத் தருகின்றார்! இவரும் கூட ஒவ்வொரு குழந்தையின் நடத்தையை தெரிந்து இருக்கின்றார். என்னிடம் இந்தப் பழக்கம் இருக்கின்றது, இதனால் நான் தோல்வியடைந்து விடுவேன் என்பது கூட நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். பாபா ஒவ்வொரு விசயத்தையும் தெளிவுப் படுத்தி புரிய வைக்கின்றார். படிப்பை நல்ல முறையில் படிக்கவில்லை, பிறருக்கு துக்கம் கொடுத்தீர்கள் என்றால் துக்கப்பட்டு இறப்பீர்கள். பதவியும் குறைந்துவிடும். தண்டனை நிறைய அடைய வேண்டியிருக்கும்.

இனிமையான குழந்தைகளே! தன்னுடைய மற்றும் பிறருடைய அதிர்ஷ்டத்தை உருவாக்க வேண்டுமானால் கருணை உள்ளம் கொண்ட சமஸ்காரத்தை தாரணை செய்யவும். எப்படி பாபா கருணை உள்ளமுடையவராக இருப்பதால் நமக்கு டீச்சராகி படிப்பு கற்றுத் தருகின்றார். சில குழந்தைகள் நல்ல முறையில் கற்று பிறகு கற்பிக்கின்றார்கள். இதில் கருணை உள்ளம் இருக்க வேண்டும். டீச்சர் கருணை உள்ளம் உடையவர் அல்லவா! எப்படி நல்ல பதவியடைவது, என்பதற்காக வருமானத்திற்கான வழி கூறுகின்றார். உலகாயத படிப்பில் அநேக விதமான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இவர் ஒரே ஒரு ஆசிரியர் தான். படிப்பு கூட ஒன்றுதான் மனிதனிலிருந்து தேவதா ஆகக் கூடிய படிப்பு. இதில் முக்கியமானது தூய்மைக்கான விசயம். தூய்மையை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். பாபா வழி காட்டுகின்றார் யாருக்கு அதிர்ஷ்டம் இல்லையோ அவர்கள் என்ன முயற்சி செய்ய முடியும்? உயர்ந்த மதிப்பெண் பெறாதவர்களுக்கு டீச்சர் என்ன முயற்சி செய்வார்? பாபா எல்லைக்கப்பாற்பட்ட டீச்சர் அல்லவா! பாபா சொல்கின்றார் உங்களுக்கு வேறு யாரும் உலகத்தின் ஆதி, மத்ய, அந்திமத்தின் சரித்திரம், பூகோளத்தைப் புரிய வைக்க முடியாது. உங்களுக்கு ஓவ்வொரு விசயமும் எல்லையற்றதாக புரிய வைக்கப் படுகின்றது. உங்களுடையது எல்லையற்ற வைராக்யமாக உள்ளது. இதைக் கூட உங்களுக்குப் புரிய வைக்கின்றார் இப்போது பதீத உலகம் வினாசம் ஆகி பாவன உலகம் ஸ்தாபனை யாகின்றது. சன்யாசிகள் துறவற மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் உண்மையில் அவர்கள் காட்டில் தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ரிஷி முனிகள் அனைவரும் காட்டில் தான் இருந்தார்கள். அவர்களிடம் சதோபிரதானத்தின் சக்தி இருந்தது. மனிதர்களை கவர்ந்து இழுத்தார் கள். எங்கெங்கோ உள்ள குடில்களுக்கெல்லாம் அவர்களுக்கு சாப்பாடு எடுத்து சென்றார்கள். சன்யாசிகளுக்கு கோவில் கட்டுவதில்லை. எப்பொழுதும் தேவதைகளுக்குத்தான் கோவில் கட்டுகின்றார்கள். நீங்கள் எந்த பக்தியும் செய்யவில்லை. நீங்கள் யோகத்தில் இருக்கின்றீர்கள். அவர்களிடம் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்வதற்கான ஞானம் இருக்கின்றது. பிரம்மத்தில் ஐக்கியமாக நினைக்கின்றார்கள். ஆனால் பாபாவைத் தவிர அங்கு வேறு யாரும் நம்மை அழைத்துச் செல்ல முடியாது. பாபா வருவதே சங்கம யுகத்தில் தான். வந்து தேவி தேவதை தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். மற்ற அனைத்து ஆத்மாக்களும் வாபஸ் சென்று விடு கின்றார்கள். ஏனென்றால் உங்களுக்கு புது உலகம் வேண்டும் அல்லவா? பழைய உலகத்தில் யாருமே இருக்க வேண்டாம். நீங்கள் முழு உலகிற்கும் அதிபதியாகின்றீர்கள். எப்போது நம்முடைய இராஜ்யம் இருந்ததோ அப்போது முழு உலகத்திலும் நாம் தான் இருந்தோம், வேறு எந்த கண்டமும் இல்லை. இங்கு நிலப்பரப்பு நிறைய இருந்தது. அங்கு நிலப்பரப்பு நிறைய இருந்தும் கூட கடலை வற்ற வைத்து நிலப்பரப்பை உருவாக்குகின்றார்கள் ஏனென்றால் இங்கு மக்கள் பெருக்கம் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது. கடலை வற்ற வைப்பது இதனை அயல் நாட்டிலிருந்து கற்றுக் கொண்டனர். பாம்பே முதலில் என்னவாக இருந்தது! மீண்டும் அது இருக்காது. பாபாவிற்கு அனுபவம் இருக்கின்றதல்லவா? நில அதிர்வு ஏற்படுகின்றது, அணு ஆயுத மழை பொழிந்தால் என்ன செய்வார்கள் வெளியில் வர முடியாது அல்லவா? இயற்கையின் சீற்றங்கள் நிறைய வரும். இல்லையென்றால் இவ்வளவும் எப்படி வினாசம் ஆகும்? சத்தியயுகத்தில் பாரதவாசிகள் கொஞ்சம் மட்டுமே இருப்பீர்கள். இன்று என்ன இருக்கின்றது, நாளை என்னவாகப் போகின்றது. இவையனைத்தும் குழந்தைகள் தான் தெரிந்திருக்கின்றீர்கள். இந்த ஞானத்தை வேறு யாரும் தர முடியாது. பாபா சொல்கின்றார், நீங்கள் அனைவரும் பதீதமாக இருக்கின்றீர்கள் எனவே எங்களை பாவனமாக்குங்கள் என்று என்னை அழைக் கின்றீர்கள். நான் அவசியம் வருகின்றேன் அப்போது தான் பாவனமான உலகம் ஸ்தாபனையாகுமல்லவா? பாபா வந்திருக்கின்றார் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். எவ்வளவு நல்ல யுக்தியை தருகின்றார்! பகவானுடைய மகா வாக்கியம் மன்மனாபவ. தேக சகிதமாக தேக சம்பந்தங்கள் அனைத்தையும் விட்டு என் ஒருவனை நினைவு செய்யவும். இதில்தான் முயற்சி உள்ளது. ஞானம் மிக சகஜ மானது. சிறிய குழந்தைகள் கூட உடனே நினைவு செய்துவிடும். மற்றபடி தன்னை ஆத்மா என்று உணர்ந்து பாபாவை நினைப்பது இது மிகவும் கடினம். பெரியவர்கள் புத்தியில் கூட தங்குவதில்லை. சிறியவர்கள் எப்படி நினைவு செய்ய முடியும்? சிவபாபா சிவபாபா என்று கூறுவார்கள் ஆனால் எதையும் புரிந்துகொள்ளவில்லையல்லவா? நானும் புள்ளி, பாபாவும் புள்ளி, இது நினைவில் வருவது கடினமாக உள்ளது. இதனை சரியான ரூபத்தில் நினைவு செய்ய வேண்டும். பெரிய விசயம் ஒன்றுமில்லை. பாபா கூறுகின்றார் எனது சரியான ரூபம் புள்ளி, எனவே நான் யார்? எப்படி இருக்கின்றேன்? இதனை நினைவு செய்யவும். இதில் தான் மிக பெரிய முயற்சி இருக்கின்றது. பரமாத்மா பிரம்ம தத்துவம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நாம் கூறுகின்றோம் அவர் புள்ளியாக இருக்கின்றார். இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளதல்லவா? ஆத்மாக்களாகிய நாம் இருக்கும் பரந்தாமத்தை அவர்கள் பரமாத்மா என்று கூறுகின்றார்கள். நான் ஆத்மா, பாபாவின் குழந்தை, இந்த காதுகள் மூலம் கேட்டுக் கொண்டிருக் கின்றேன். நான் பரமாத்மா, மேலான உலகில் இருப்பவன் என்று பாபா இந்த வாய் (பிரம்மா) மூலமாக கூறிக்கொண்டிருக்கின்றார். நீங்கள் கூட மேலான உலகத்தில் இருக்கின்றீர்கள் ஆனால் பிறப்பு இறப்பில் வருகின்றீர்கள். நான் வருவது இல்லை. நீங்கள் இப்பொழுது 84 தனது ஜென்மத்தைப் பற்றி கூட புரிந்து கொண்டீர்கள். பாபாவுடைய பார்ட் என்ன என்பதையும் புரிந்து கொண்டீர்கள். ஆத்மா சிறிது பெரியதாவது இல்லை. மற்றபடி இரும்பு யுகத்தில் வருவதால் அழுக்காகிவிடுகிறது. இவ்வளவு சின்னஞ் சிறிய ஆத்மாவுக்குள் முழு ஞானமும் இருக்கின்றது. பாபாவும் கூட சிறிய புள்ளி. ஆனால் அவரை பரம் ஆத்மா என்று சொல்லப்படுகிறது அவர் ஞானக்கடல், வந்து உங்களுக்குப் புரிய வைக்கின்றார். இந்த நேரம் நீங்கள் எதை படிக்கின்றீர் களோ இதனை கல்பத்திற்கு முன்பு கூட படித்திருக்கின்றீர்கள். இதன் மூலம் நீங்கள் தேவதா ஆகியிருக்கின்றீர்கள். உங்களில் யார் பதீதமாகி தனது புத்தியை அழுக்காக்கி விடுகின்றார்களோ அவர்களின் அதிர்ஷ்டத்தில் தோஷம் ஏற்பட்டு விடுகின்றது. ஏனென்றால் அவர்களால் தாரணை செய்ய முடிவதில்லை. மனம் உள்ளுக்குள் உறுத்தும். நீங்கள் பவித்திரமாகுங்கள் என்று பிறருக்கும் அவர்களால் சொல்ல முடியாது. பாவனமாகி பிறகு நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை உள்ளுக்குள் புரிந்து கொள்கின்றார்கள். வருமானம் அனைத்தும் இல்லாமல் போய்விடும். பிறகு மீள்வதற்கு நீண்ட காலம் ஆகின்றது. ஒரு அடி மிகுந்த காயத்தை ஏற்படுத்துகின்றது. பதிவேடு குற்றமுள்ளதாகிவிடுகின்றது. பாபா கூறுவார்: நீ மாயாவிடம் தோல்வியடைந்துவிட்டாய் எனவே உன்னுடைய அதிர்ஷ்டத்தில் குறை ஏற்பட்டுவிட்டது மாயாஜீத், ஜகத்ஜீத். ஆக வேண்டும். ஜகத்ஜீத் (உலகை வென்றவர்) என்று மகாராஜா மகாராணியைத்தான் சொல்லப்படுகின்றது. பிரஜைகளை சொல்ல முடியுமா? இப்பொழுது தெய்வீக சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கின்றது. தனக்காக எதனை செய்கின்றீர்களோ அதன்படி பலன் அடைவீர்கள். எந்த அளவு பிறரை பாவனமாக்குகின்றீரோ, அதிகமாக ஞான தானம் செய்பவருக்கு பலன் அதிகமாக கிடைக்கும். ஸ்தூல தானம் செய்பவருக்கு பெயர் கூட வெளிப்படுகின்றது. மறு ஜென்மத்தில் அல்பகால பலன் கிடைக்கின்றது. இங்கு 21 ஜென்மத்திற்கான விசயம். பாவனமான உலகிற்கு எஜமானன் ஆக வேண்டும். யார் பாவனமாக இருந்தார்களோ அவர்களே மீண்டும் ஆகின்றார்கள். நாளாக நாளாக மாயா அடி கொடுத்து கீழே விழ வைத்துவிடுகின்றது. மாயாவும் குறைவான துஷ்டன் அல்ல. 8-10 வருடங்கள் தூய்மையாக இருந்தனர். தூய்மையாவதில் சண்டை ஏற்பட்டது. மற்றவர்களை கீழே விழுவதி-ருந்து காப்பாற்றினார்கள். பிறகு தானே விழுந்து விட்டனர். அதிர்ஷ்டம் என்று தானே சொல்ல முடியும்! பாபாவினுடையவராகிய பின் மாயா வினுடையவராகி விட்டார் என்றார் விரோதி ஆகிவிட்டார் அல்லவா? குதா தோஸ்த் என்ற கதை உள்ளதல்லவா? பாபா வந்து குழந்தைகளுக்கு அன்பு தருகின்றார். சாட்சாத்காரம் செய்விக்கின்றார். பக்தி செய்யாமலேயே சாட்சாத்காரம் கிடைக்கின்றது. ஏனென்றால் நண்பன் ஆகிவிட்டார் அல்லவா? எவ்வளவு சாட்சாத்காரம் கிடைத்தது, பிறகு ஜாது மந்திரம் என்று நினைத்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள். எனவே, அதனை பாபா நிறுத்திவிட்டார். பிறகு கடைசியில் நீங்கள் காட்சிகளைப் பார்ப்பீர்கள். ஆரம்ப காலத்தில் எவ்வளவு மஜாவாக இருந்தது! அதனை பார்த்தும் கூட நிறைய பேர் சென்று விட்டார்கள். சூளையில் சில கற்கள் பக்குவமாகிவிடுகிறது. சில வேகாமலேயே இருந்துவிடுகின்றது. சில உடைந்துவிடுகிறது. எத்தனை பேர் சென்றுவிட்டார்கள்! இப்பொழுது அவர்கள் இலட்சாதிபதி கோடீஸ்வரன் ஆகிவிட்டார்கள். நாங்கள் சொர்க்கத்தில் இருக்கின்றோம் என்று நினைக்கின்றார்கள். இப்பொழுது சொர்க்கம் எப்படி இருக்க முடியும்? புது உலகத்தில் தான் சொர்க்கம் இருக்கும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கபரி செல்லமான குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கு தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தன்னுடைய உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்க கருணை உள்ளம் உடையவராகி கற்று பிறருக்குக் கற்பிக்க வேண்டும். ஒருபோதும் எந்த பழக்கத்திற்கும் வசமாகி தன்னுடைய பதிவேட்டை குறையுள்ளதாக்கிவிடாதீர்கள்.

2. மனிதனிலிருந்து தேவதை ஆவதற்கு முக்கியமானது பவித்திரத்தா, எனவே ஒருபோதும் பதீதமாகி தன்னுடைய புத்தியை அழுக்காக்கி விடாதீர்கள். மனதை உறுத்தவது போன்று வருத்தப்படுவது போன்று எந்த காரியமும் செய்ய வேண்டாம்.

வரதானம்:
விதை வடிவ ஸ்திதி மூலம் முழு உலகிற்கும் ஒளி என்ற தண்ணீர் கொடுக்கக்கூடிய கல்யாண்காரி ஆகுக.

விதை வடிவ ஸ்திதி அனைத்திலும் சக்திசாலி ஸ்திதி ஆகும். இந்த ஸ்திதி தான் லைட் ஹவுஸின் காரியத்தைச் செய்கிறது. இதன் மூலம் முழு உலகத்திலும் ஒளியைப் பரப்புவதற்கு நிமித்தம் ஆகிறீர்கள். எப்படி விதை மூலமாகத் தானாகவே முழு விருட்சத்திற்கும் தண்ணீர் கிடைத்து விடுகிறதோ, அது போல் எப்போது விதை வடிவ ஸ்திதியில் நிலைத்திருக்கிறீர்களோ, அப்போது உலகிற்கு ஒளி என்ற தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் முழு உலகிற்கும் உங்கள் ஒளியைப் பரப்புவதற்கு விஷ்வ கல்யாண்காரி (உலகிற்கு நன்மை செய்பவர்) என்ற ஸ்டேஜ் இருக்க வேண்டும். இதற்காக லைட் ஹவுஸ் ஆகுங்கள். பல்பாக ஆகக்கூடாது. ஒவ்வொரு சங்கல் பத்திலும் ஸ்மிருதி இருக்க வேண்டும் - அதாவது முழு உலகிற்கும் நன்மை நடைபெறட்டும்.

சுலோகன்:
அட்ஜெஸ்ட் ஆவதற்கான சக்தி என்பது ஆபத்தான சமயத்தில் பாஸ் வித் ஆனர் ஆக்கி விடும்.

அவ்யக்த இஷாரா : சத்தியதா மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தைத் தனதாக்கிக் கொள்ளுங்கள்

பரமாத்மாவை வெளிப்படுத்துவதற்கான ஆதாரம் சத்தியதா (உண்மை) ஆகும். சத்தியதாவின் மூலம் தான் வெளிப்படுத்துதல் (பிரத்தியட்சதா) நடைபெறும். ஒன்று, தனது ஸ்திதியின் சத்தியதா. இரண்டாவது, சேவையின் சத்தியதா. சத்தியதாவுக்கான ஆதாரம் - தூய்மை மற்றும் பயமற்ற தன்மை. இந்த இரண்டு தாரணைகளின் ஆதாரத்தில் சத்தியதா மூலம் பரமாத்ம பிரத்தியட் சதாவுக்கு நிமித்தம் ஆகுங்கள். எந்த விதமான தூய்மையற்ற தன்மை, அதாவது ஒரு சிறிதும் உண்மை, தூய்மை இவற்றின் குறைவு இருக்குமானால் காரியத்தின் சித்தி நடை பெற முடியாது.