05-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது பெயர் ரூபத்தின் நோயிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும், தலை கீழான கணக்கை உருவாக்கக் கூடாது, ஒரு பாபாவின் நினைவில் இருக்க வேண்டும்

கேள்வி:
பாக்கியசாலி குழந்தைகள் எந்தவொரு முக்கியமான முயற்சியின் மூலம் தங்களுடைய பாக்கியத்தை உருவாக்கி விடுகிறார்கள்?

பதில்:
பாக்கியசா- குழந்தைகள் அனைவருக்கும் சுகம் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். மனம்-சொல்- செயலின் மூலம் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. குளிர்ச்சியாக இருந்து நடப்பதின் மூலம் பாக்கியம் உருவாகி விடுகிறது. இது உங்களுடைய மாணவ வாழ்க்கை யாகும், நீங்கள் இப்போது ஏமாற்றம் அடையக்கூடாது, அளவற்ற குஷியில் இருக்க வேண்டும்.

பாடல்:
நீங்கள் தான் தாயும்-தந்தையும் நீங்களே...........

ஓம் சாந்தி.
குழந்தைகள் அனைவரும் முரளி கேட்கிறார்கள், எங்கெல்லாம் முரளி செல் கிறதோ, யாருடைய மகிமை பாடப்படுகிறதோ அவர் ஒன்றும் சாகாரத்தில் இல்லை, நிராகாரமான வரின் மகிமை என்பதை அனைவரும் தெரிந்துள்ளார்கள். நிராகாரமானவர் சாகாரத்தின் மூலம் இப்போது நேரடியாக முரளியை சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போது ஆத்மாக்களாகிய நாம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் சொல்லலாம்! ஆத்மா மிகவும் சூட்சும மானதாகும், இந்தக் கண்களின் மூலம் பார்ப்பதற்குத் தெரியாது. ஆத்மாக்களாகிய நாம் சூட்சும மானவர்கள் என்பதை பக்தி மார்க்கத்திலும் தெரிந்துள்ளார்கள். ஆனால் ஆத்மா என்பது என்ன என்று முழுமையான இரகசியம் புத்தியில் இல்லை, பரமாத்மாவை நினைவு செய்கிறார் கள் ஆனால் அவர் என்ன பொருளாக (உருவில்) இருக்கிறார் என்பதை உலகம் தெரிந்திருக்க வில்லை. நீங்களும் தெரிந்திருக்கவில்லை. இவர் ஒன்றும் லௌகீக டீச்சரோ அல்லது உறவோ இல்லை என்ற நிச்சயம் இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. உலகத்தில் எப்படி மற்ற மனிதர்கள் இருந்தார்களோ, அப்படி இந்த தாதாவும் (பிரம்மா பாபா) இருந்தார். நீங்கள் தான் தாயும் தந்தையும்...... என்று நீங்கள் மகிமை பாடும் போது (சிவ பாபா) மேலே இருக்கிறார் என்று புரிந்திருந்தீர்கள். இப்போது பாபா கூறுகின்றார், நான் இவருக்குள் பிரவேசித் திருக்கின்றேன், நான் தான் இவருக்குள் இருக்கின்றேன். முன்னால் மிகவும் அன்போடு மகிமை பாடினீர்கள், பயமும் கொண்டிருந்தீர்கள். இப்போது அவர் இந்த சரீரத்திற்குள் வந்திருக்கின்றார். யார் நிராகாரமானவராக இருந்தாரோ, அவர் இப்போது சாகாரத்தில்(பௌதீக உடலில்) வந்து விட்டார். அவர் வந்து குழந்தை களுக்கு கற்றுக் கொடுக்கின்றார். அவர் என்ன கற்றுக் கொடுக்கின்றார் என்பதை உலகம் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் கீதையின் பகவான் கிருஷ்ணர் என்று புரிந்துள்ளார்கள். அவர் இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றார் என்று சொல்லி விடுகிறார்கள். நல்லது, பாபா என்ன செய்கின்றார்? நீங்கள் தாயும்-தந்தையும் என்று பாடினார்கள் ஆனால் அவரிடமிருந்து என்ன மற்றும் எப்போது கிடைக்கிறது, என்ற எதையும் தெரிந்திருக்கவில்லை. கீதையைக் கேட்டார்கள் என்றால் கிருஷ்ணரின் மூலம் இராஜயோகம் கற்றோம் என்று புரிந்து கொண்டார்கள் பிறகு அவர் எப்போது வந்து கற்றுக் கொடுப்பார்? அதுவும் கவனத்தில் வந்திருக்கும். இந்த சமயம் அதே மகாபாரத சண்டையாகும் எனவே கண்டிப்பாக கிருஷ்ணருடைய சமயமாக இருக்கும். கண்டிப்பாக அதே வரலாறு-புவியியல் திரும்பவும் நடக்க வேண்டும். நாளுக்கு-நாள் புரிந்து கொள்வார்கள். கண்டிப்பாக கீதையின் பகவான் இருக்க வேண்டும். சரியாக மகாபாரத சண்டை பார்ப்பதற்குத் தெரிகிறது. கண்டிப்பாக இந்த உலகத்தின் முடிவு ஏற்படும். பாண்டவர்கள் மலை மீது சென்று விட்டார்கள் என்று காட்டுகிறார்கள். எனவே அவர்களுடைய புத்தியில் வினாசம் முன்னால் நிற்கிறது என்பது வந்திருக்கும். இப்போது கிருஷ்ணர் எங்கே? கீதையின் பகவான் கிருஷ்ணர் அல்ல சிவன் என்று உங்களின் மூலம் கேட்டதிலிருந்து தேடிக்கொண்டே இருக்கிறார்கள். உங்களுடைய புத்தியில் இந்த விஷயம் உறுதியாக இருக்கிறது. இதை நீங்கள் ஒருபோதும் மறக்க முடியாது. கீதையின் பகவான் கிருஷ்ணர் இல்லை சிவன் என்ற விஷயத்தை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்கலாம். உலகத்தில் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் சொல்ல மாட்டார்கள். கீதையின் பகவான் இராஜயோகம் கற்றுக் கொடுத்தார் என்றால் இதன் மூலம் நரனிலிருந்து நாராயணனாக மாற்றுகிறார் என்பது நிரூபணமாகிறது. இந்த இலஷ்மி- நாராயணனுடைய இராஜ்யம் சொர்க்கத்தில் இருந்தது அல்லவா! இப்போது அந்த சொர்க்கமும் இல்லை, எனவே நாராயணனும் இல்லை, தேவதைகளும் இல்லை. சித்திரம் இருக்கிறது அதன் மூலம் இவர்கள் இருந்துவிட்டு சென்றுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். இவர்கள் சென்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு உறுதியாகத் தெரியும், இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இவர்களுடைய இராஜ்யம் இருந்தது. இப்போது கடைசியாகும். சண்டையும் முன்னால் நிற்கிறது. பாபா நமக்கு படிப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்துள்ளீர்கள். அனைத்து சென்டர் களிலும் படிக்கிறார்கள் மற்றும் படிப்பிக்கிறார்கள். படிப்பிப்பதற்கான யுக்தி மிகவும் நன்றாக இருக்கிறது. சித்திரங்களின் மூலம் நல்ல புரிதல் (விளக்கம்) கிடைக்க முடியும். முக்கியமான விஷயம் கீதையின் பகவான் சிவனா அல்லது கிருஷ்ணரா? நிறைய வித்தியாசம் இருக்கிறது அல்லவா. சத்கதியை வழங்கும் வள்ளல், சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர் அல்லது ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை மீண்டும் ஸ்தாபனை செய்யக் கூடியவர் சிவனா அல்லது கிருஷ்ணரா? 3 விஷயங்களின் முடிவே முக்கியமானதாகும். இதில் தான் பாபா அதிக அழுத்தம் கொடுக்கின்றார். இது மிகவும் நன்றாக இருக்கிறது என்று தங்களுடைய கருத்தை எழுதிக் கொடுக்கிறார்கள் ஆனால் இதன்மூலம் எந்தப் பலனும் இல்லை. உங்களுடைய முக்கியமான விஷயம் என்னவோ அதில் அழுத்தம் கொடுக்க வேண்டும். உங்களுடைய வெற்றியும் இதில் தான் இருக்கிறது. பகவான் ஒருவர் தான் என்பதை நீங்கள் நிரூபித்து சொல்கிறீர்கள். கீதையை சொல்பவர்களும் பகவான் ஆகி விட்டார் கள் என்பது கிடையாது. பகவான் இந்த இராஜயோகம் மற்றும் ஞானத்தின் மூலம் தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தார்.

பாபா புரிய வைக்கின்றார் - குழந்தைகளோடு மாயையின் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது, இப்போது வரை கர்மாதீத் நிலையை யாரும் அடைய வில்லை. முயற்சி செய்து- செய்து கடைசியில் நீங்கள் ஒரு பாபாவின் நினைவில் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். எந்த வாடிப்போகும் (தளர்வடையும்) நிலையும் வராது. இப்போது தலையில் பாவங்களின் சுமை அதிகமாக இருக்கிறது. அது நினைவின் மூலம் தான் இறங்கும். பாபா முயற்சியின் யுக்திகளைக் கூறியுள்ளார். நினைவின் மூலம் தான் பாவம் அழிகிறது. நிறைய முட்டாள்கள் இருக்கிறார்கள் அவர்கள் பாபா நினைவில் இல்லாத காரணத்தினால் பெயர்-ரூபம் போன்ற வற்றில் மாட்டிக் கொள் கிறார்கள். முகமலர்ச்சியோடு யாருக்கும் புரிய வைக்க வேண்டும், அது கூட கடினமாகும். இன்று யாருக்கோ புரிய வைத்தார்கள், நாளை ஏமாற்றம் வருவதின் மூலம் குஷி காணாமல் போய் விடுகிறது. மாயையின் சண்டை நடக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆகையினால் முயற்சி செய்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். மற்றபடி அழுவது, அடித்துக் கொள்வது அல்லது அமைதியற்றுப் போகக்கூடாது. மாயை செருப்பால் அடிக்கிறது ஆகையினால் முயற்சி செய்து பாபாவை நினைவு செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். பாபாவின் நினைவின் மூலம் மிகுந்த குஷி இருக்கும். வாயிலிருந்து உடனே வார்த்தை வரும். தூய்மை யற்றவர்களை தூய்மையாக்கும் பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள். படைப் பவராகிய தந்தையின் அறிமுகம் உள்ள மனிதர் ஒருவர் கூட இல்லை. மனிதர்களாக இருந்து கொண்டு தந்தையைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் விலங்குகளை விட மோசமான தாகி விடுகிறது அல்லவா! கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு விட்டார்கள் என்றால் பாபாவை எப்படி நினைவு செய்வது! இந்தப் பெரிய தவறைத்தான் நீங்கள் புரிய வைக்க வேண்டும். கீதையின் பகவான் சிவபாபா, அவர் தான் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். முக்தி-ஜீவன் முக்தியின் வள்ளல் அவரே ஆவார், மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்களின் புத்தியில் நிற்பதே இல்லை. அவர்கள் கணக்கு-வழக்குகளை முடித்து விட்டு சென்று விடுவார்கள். கடைசியில் கொஞ்சம் அறிமுகம் கிடைக்கும் இருந்தாலும் தங்களுடைய தர்மத்தில் தான் செல்வார்கள். உங்களுக்கு பாபா புரிய வைக்கின்றார் நீங்கள் தேவதைகளாக இருந்தீர்கள், இப்போது பாபாவை நினைவு செய்வதின் மூலம் நீங்கள் தேவதைகளாக ஆகி விடுவீர்கள். விகர்மங்கள் வினாசம் ஆகி விடும். இருந்தாலும் தலைகீழான எதிர் மாறான தொழிலை செய்து விடுகிறீர்கள். இன்றைக்கு என்னுடைய நிலை வாடிப் போனதாகி விட்டது, பாபாவை நினைவு செய்யவில்லை என்று பாபாவிற்கு கடிதம் எழுதுகிறார்கள். நினைவு செய்ய வில்லை என்றால் கண்டிப்பாக வாடிப் போவீர்கள். இது இறந்தவர்களின் உலகமே ஆகும். அனைவரும் இறந்து விட்டார்கள். நீங்கள் பாபாவினுடையவர் களாக ஆகியுள்ளீர்கள் என்றால் பாபாவின் கட்டளை - என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசமாகி விடும். இந்த சரீரம் பழைய தமோபிரதான மானதாகும். கடைசி வரை ஏதாவது நடந்து கொண்டு தான் இருக்கும். எதுவரை பாபாவின் நினைவில் இருந்து கர்மாதீத் நிலையை அடைய வில்லையோ, அதுவரை மாயை ஆட்டிக் கொண்டே இருக்கும், யாரையும் விடாது. மாயை எப்படி ஏமாற்றுகிறது என்று சோதனை செய்து கொண்டே கவனமாக இருக்க வேண்டும். பகவான் நமக்கு படிப்பிக்கின்றார், என்பதை ஏன் மறக்க வேண்டும்? நம்முடைய உயிரினும் மேலானவர் அந்த தந்தை தான் என்று ஆத்மா சொல்கிறது. பாபா தானம் செய்வதற் காக செல்வம் அளிக்கின்றார். கண்காட்சி - மேளாவில் நீங்கள் நிறைய பேருக்கு தானம் செய்ய முடியும். தாங்களாகவே ஆர்வத்தோடு ஓட வேண்டும். சென்று புரிய வையுங்கள் என்று இப்போது பாபா ஆர்வமூட்ட வேண்டியிருக்கிறது. அதிலும் கூட நன்கு புரிந்தவர் வேண்டும். தேக-அபிமான முடையவர்களின் அம்பு தைக்கவே தைக்காது. அனேக விதமான வாள்கள் இருக்கின்றன அல்லவா! உங்களுடைய யோகத்தின் வாளும் மிகவும் கூர்மையானதாக இருக்க வேண்டும். நிறைய பேருக்கு சென்று நன்மை செய்ய வேண்டும் என்று சேவைக்கான உற்சாகம் வேண்டும். கடைசியில் ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் நினைவு வராத அளவிற்கு பாபாவை நினைவு செய்வதற்கான பயிற்சி இருக்க வேண்டும், அப்போது தான் நீங்கள் இராஜ்ய பதவி அடைவீர்கள். கடைசி காலத்தில் அல்லாவை நினைவு செய்ய வேண்டும் மற்றும் நாராயணனை நினைக்க வேண்டும். பாபா மற்றும் ஆஸ்தியை(நாராயணன்) தான் நினைவு செய்ய வேண்டும். ஆனால் மாயையும் குறைந்தது இல்லை. ஒரேயடியாக நிறைய பேர் அரைகுறையானவர்களாக ஆகி விடு கிறார்கள். யாருடைய பெயர் ரூபத்திலாவது மாட்டும் போது தான் தலைகீழான கர்மங்களின் கணக்கு உருவாகிறது. ஒருவர்-மற்றவருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுகிறார்கள். தேகதாரிகளிடம் அன்பு ஏற்பட்டு விடுகிறது என்றால் தலைகீழான கர்மங்களின் கணக்கு உருவாகி விடுகிறது. பாபாவிடம் செய்திகள் வருகின்றன. தலைகீழான கர்மங்களை செய்து விட்டு பிறகு நடந்து விட்டது பாபா என்று சொல்கிறார்கள். அட, தலைகீழான கணக்காகி விட்டது அல்லவா! இந்த சரீரம் வயதானது, அதை நீங்கள் ஏன் நினைவு செய்கிறீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும் என்று பாபா கூறுகின்றார். இன்றைக்குக் குஷியாக இருக்கிறார்கள், பிறகு நாளை வாடிப்போய் விடுகிறார்கள். பிறவி- பிறவிகளாக பெயர்-ரூபத்தில் மாட்டி வந்துள்ளீர்கள் அல்லவா! சொர்க்கத்தில் இந்த பெயர்-ரூபத்தின் நோய் இருப்பதில்லை. அங்கே மோகத்தை வென்ற குடும்பம் இருக்கிறது. நாம் ஆத்மாக்கள், சரீரம் இல்லை என்பதைத் தெரிந்திருப்பார்கள். அது ஆத்ம- அபிமானிகளின் உலகம் ஆகும். இது தேக-அபிமானிகளின் உலகமாகும். பிறகு நீங்கள் அரைக்கல்பம் ஆத்ம- அபிமானிகளாக ஆகி விடுகிறீர்கள்.இப்போது தேக-அபிமானத்தை விடுங்கள் என்று பாபா கூறுகின்றார். ஆத்ம-அபிமானியாக ஆவதின் மூலம் மிகவும் இனிமையாக குளிர்ச்சியானவர் களாக ஆகிவிடுவீர்கள். இப்படி மிகவும் குறைவானவர் களே பாபாவின் நினைவு மறந்து விடக்கூடாது என்று முயற்சி செய்ய வைத்து கொண்டே இருக்கிறார்கள். என்னை நினைவு செய்யுங்கள், சார்ட் வையுங்கள் என்று பாபா கட்டளையிடு கின்றார். ஆனால் மாயை சார்ட் வைக்கவும் விடுவதில்லை. இப்படிப்பட்ட இனிமையான தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும்! இவர் பதிகளுக்கெல்லாம் பதியாக, தந்தை களுக்கெல்லாம் தந்தை அல்லவா. பாபாவை நினைவு செய்து பிறகு மற்றவர்களையும் கூட தங்களுக்குச் சமமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும், இதில் மிக நல்ல ஆர்வம் வைக்க வேண்டும். சேவாதாரிக் குழந்தைகளை பாபா வேலையிலிருந்து விடுவித்து விடுகிறார். சூழ்நிலை யைப் பார்த்து, இப்போது இந்த தொழிலில் ஈடுபட்டு விடு என்று சொல்வார். குறிக்கோள் முன்னால் நிற்கிறது. பக்தி மார்க்கத்தில் கூட சித்திரங்களுக்கு முன்னால் நினைவில் அமருகிறார்கள் அல்லவ!. நீங்கள் ஆத்மா என்று மட்டும் புரிந்து பரமாத்மா தந்தையை நினைவு செய்ய வேண்டும். விசித்திரமானவர்களாகி (அசரீரியாகி) விசித்திரமான (நிராகாரமான) தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது தான் உழைப்பாகும். உலகத்திற்கு எஜமானர்களாவது ஒன்றும் சுலபமான காரிய மல்ல. நான் உலகத்திற்கு எஜமானனாக ஆவதில்லை, உங்களை ஆக்குகின்றேன் என்று பாபா கூறுகின்றார். எவ்வளவு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நல்ல குழந்தைகளுக்கு தானாகவே இந்த கவலை இருக்கும், விடுமுறை எடுத்துக் கொண்டு கூட சேவையில் ஈடுபட வேண்டும். நிறைய குழந்தைகளுக்கு பந்தனம் கூட இருக்கிறது, மோகமும் இருக்கிறது. உங்களுடைய அனைத்து வியாதிகளும் வெளியில் வரும் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். மாயை உங்களை விலக்குவதற்கு முயற்சி செய்கிறது. நினைவு தான் முக்கியமானதாகும், படைப்பு மற்றும் படைப்பினுடைய முதல்-இடை-கடைசியின் ஞானம் கிடைத்திருக்கிறது, வேறு என்ன வேண்டும். பாக்கியசா- குழந்தைகள் அனை வருக்கும் சுகம் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள், மனம், சொல், செயலின் மூலம் யாருக்கும் துக்கம் கொடுப்ப தில்லை, குளிர்ந்தவர்களாகி நடக்கிறார்கள் என்றால் பாக்கியம் உருவாகிக் கொண்டே செல்கிறது. ஒருவேளை யாராவது புரிந்து கொள்ளவில்லை என்றால், இவருடைய பாக்கியத்தில் இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. யாருடைய பாக்கியத்தில் இருக்கிறதோ, அவர்கள் நல்ல விதத்தில் கேட்கிறார்கள். என்னென்ன செய்கிறார் கள், என்று அனுபவமும் சொல்கிறார்கள் அல்லவா! என்னவெல்லாம் செய்தோமோ, அதன் மூலம் துர்கதியைத் தான் அடைந்தோம் என்று இப்போது தெரிகிறது. பாபாவை நினைவு செய்தால் தான் சத்கதியை அடைய முடியும். யாராவது மிகவும் கஷ்டப்பட்டு ஒரு மணி அல்லது அரை மணி நேரம் நினைவு செய்வார்கள். இல்லையென்றால் (யோகத்தில் உறங்கிக் கொண்டிருத்தல்) ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். அரைக் கல்பம் ஏமாற்றம் அடைந்தீர்கள் இப்போது பாபா கிடைத்திருக்கிறார், மாணவ வாழ்க்கை இருக்கிறது என்றால் குஷி இருக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். ஆனால் பாபாவை அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.

நீங்கள் கர்மயோகிகள் என்று பாபா கூறுகின்றார். அந்த தொழில் போன்றவற்றை செய்யத் தான் வேண்டும். குறைவாகவே உறங்க வேண்டும். நினைவின் மூலம் வருமானம் உண்டாகும், குஷியும் இருக்கும். கண்டிப்பாக நினைவில் அமர வேண்டும். பகலில் நேரம் கிடைப்பதில்லை ஆகை யினால் இரவு நேரத்தில் நேரம் ஒதுக்க வேண்டும். நினைவின் மூலம் மிகுந்த குஷி இருக்கும். யாருக்காவது பந்தனம் இருக்கிறது என்றால் எனக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும், இதிலிருந்து யாரும் எங்களைத் தடுக்க முடியாது என்று சொல்லலாம். அரசாங்கத்திற்கு மட்டும் சென்று புரிய வையுங்கள், வினாசம் முன்னால் இருக்கிறது, பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும். மேலும் இந்தக் கடைசி பிறவி தூய்மையாக இருக்க வேண்டும் ஆகையினால் நாங்கள் தூய்மையாகின்றோம். ஆனால் யாருக்கு ஞானத்தின் போதை இருக்கிறதோ, அவர்கள் தான் சொல்வார்கள். இங்கே வந்து விட்டு பிறகு தேகதாரிகளை நினைவு செய்து கொண்டிருத்தல் என்பது கிடையாது. தேக-அபிமானத்தில் வந்து சண்டையிடுவது என்றால் அது கோபம் எனும் பூதமாகி விடுவது போலாகும். பாபா கோபப்படுபவர்களின் பக்கம் பார்ப்பது கூட இல்லை. சேவை செய்பவர்களிடம் அன்பு இருக்கிறது. தேக-அபிமான நடத்தை தெரிகிறது. பாபாவை நினைவு செய்தால் தான் மலராக ஆக முடியும். முக்கியமான விசயமே இது தான் ஆகும். ஒருவர் மற்றவரை பார்த்துக் கொண்டே இருந்தாலும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். சேவையில் எலும்பையும்(களைப்படையாமல்) கொடுக்க வேண்டும்.பிராமணர்கள் தங்களுக்குள் இனிமையானவர்களாக இருக்க வேண்டும். உவர்ப்பானவர் களாக (உப்பு நீர்) ஆகக் கூடாது. சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் ஒருவர் மற்றவர் மீது வெறுப்பு, பாபாவிடம் கூட வெறுப்பை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வர்கள் என்ன பதவி அடைவார்கள்! உங்களுக்கு காட்சி ஏற்படும், பிறகு அந்த சமயத்தில் நாம் தவறு செய்து விட்டோம் என்ற நினைவு வரும். அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் என்ன செய்ய முடியும் என்று பாபா சொல்லி விடுகின்றார். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பந்தனமற்றவர்களாக ஆவதற்கு ஞானத்தின் போதை இருக்க வேண்டும். தேக-அபிமான நடத்தை இருக்கக் கூடாது. தங்களுக்குள் உவர்பானவர்களாக இருக்கும் சம்ஸ்காரம் இருக்கக் கூடாது. தேகதாரிகளிடம் அன்பு இருந்தது என்றால் பந்தனத்திலிருந்து விடுபட்டவர்களாக ஆக முடியாது.

2) கர்மயோகியாகி இருக்க வேண்டும், கண்டிப்பாக நினைவில் அமர வேண்டும். ஆத்ம-அபிமானிகளாக ஆகி மிக இனிமையாகவும் குளிர்ச்சியானவர்களாகவும் ஆவதற்கு முயற்சி செய்ய வேண்டும். சேவையில் எலும்பையும் (களைப்பற்ற உழைப்பை) கொடுக்க வேண்டும்.

வரதானம்:
ஸ்ரீமத்தில் மனதின் வழி மற்றும் மக்களுடைய வழியின் கலப்படத்தை முடிவடையச் செய்யக்கூடிய உண்மையான சுய கல்யாணி (சுயத்திற்கு நன்மை செய்பவர்) ஆகுக.

தந்தை குழந்தைகளுக்கு அனைத்து பொக்கிஷங்களையும் சுயநன்மை மற்றும் உலக நன்மைக்காகக் கொடுத்திருக்கின்றார். ஆனால், அவற்றை வீணானவற்றில் ஈடுபடுத்துவது, நன்மை யற்ற காரியத்தில் ஈடுபடுத்துவது, ஸ்ரீமத்தில் மனதின் வழி மற்றும் மக்களின் வழியைக் கலப்படம் செய்வது - இது நாணயமின்மை ஆகும். இப்பொழுது இந்த நாணயமின்மை மற்றும் கலப்படத்தை முடிவடையச் செய்து ஆன்மிகத் தன்மை மற்றும் கருணையை தாரணை செய்யுங்கள். தன்மீதும் மற்றும் அனைவரின் மீதும் கருணை கொண்டு சுயத்திற்கு நன்மை செய்பவர் ஆகுங்கள். சுயத்தைப் பாருங்கள், தந்தையைப் பாருங்கள், பிறரை பார்க்காதீர்கள்.

சுலோகன்:
யார் எங்கும் கவர்ச்சிக்கப்படாமல் இருக்கின்றார்களோ, அவர்களே சதா மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

அவ்யக்த சமிக்ஞை - இணைந்த ரூபத்தின் நினைவினால் சதா வெற்றியாளர் ஆகுங்கள்.

பாபா மற்றும் நான் இணைந்து இருக்கின்றோம், செய்விப்பவர் பாபா மற்றும் நான் ஆத்மா செய்வதற்கு நிமித்தமாக இருக்கின்றேன் - இதை சிந்தனையற்ற நிலை அதாவது ஒருவருடைய நினைவு என்று கூறப்படுகின்றது. சுபசிந்தனையில் இருப்பவர்களுக்கு ஒருபோதும் கவலை இருக்காது. எவ்வாறு தந்தை மற்றும் நீங்கள் இணைந்து இருக்கின்றீர் களோ, சரீரம் மற்றும் ஆத்மா இணைந்து இருக்கின்றனவோ, உங்களுடைய எதிர்கால விஷ்ணு சொரூபம் இணைந்த சொரூபமாக இருக்கின்றதோ, அதுபோல் சுயசேவை மற்றும் அனைவருக்குமான சேவை இணைந்து இருக்க வேண்டும், அப்பொழுதே குறைந்த உழைப்பில் அதிக வெற்றி கிடை