05.07.26    காலை முரளி            ஓம் சாந்தி 15.12.2010      பாப்தாதா,   மதுபன்


எனது என்பதை உனது என மாற்றி, கவலையற்ற மகாராஜா ஆகுங்கள், ஒரு விநாடியில் வீணானவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அப்பியாசி ஆகி, ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் சமயத்தைப் பயனுள்ளதாக ஆக்குங்கள்

இன்று நாலாபுறம் உள்ள தம்முடைய கவலையற்ற மகாராஜாக்களாகிய குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய கவலையற்ற மகாராஜாக்களின் சபை இப்போது தான் காணப்படுகிறது. ஏனென்றால் இப்போது தான் பாபா கவலையைப் பெற்றுக் கொண்டு கவலையற்ற மகாராஜா ஆக்குகிறார். எனவே இந்த சபை இப்போது தான் உங்களுக்குத் தென்படுகிறது. நீங்கள் அனைவரும் காலையில் எழுகிறீர்கள் என்றால் கவலையற்ற ஸ்திதி யில் நிலைத்திருக்கிறீர்கள். உண்ணும் போதும் அருந்தும் போதும் எந்த ஒரு கவலையும் இல்லை. உறங்குகிறீர்கள் என்றாலும் எந்தக் கவலையும் இன்றி உறங்குகிறீர்கள். அத்தகைய சக்கரவர்த்தி மற்றும் கவலையற்றவர், எழுந்தாலும் தூங்கினாலும் கவலையற்ற நிலை. அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்களா? ஏனென்றால் நீங்கள் அனைவரும் பாபாவுக்கு உங்கள் கவலையைக் கொடுத்து விட்டுப் பெருமிதத்தை எடுத்துக் கொண்டீர்கள். அதனால் கவலை யற்ற மகாராஜா ஆகி விட்டீர்கள். போகப்போக ஏதாவது கவலை வந்து விட்டால் கவலை என்னவாக ஆக்கி விடுகிறது? பெருமிதம் இருக்குமானால் உங்கள் நெற்றியில் ஒளிப்பிரகாசம் நன்றாக இருக்கும். கவலை வந்து விட்டாலோ சுமையின் கூடை வந்து விடுகிறது. சொல்லுங்கள், உங்களுக்கு ஒளியின் ஜொலிப்பு பிடித்திருக்கிறதா, அல்லது சுமையின் கூடை பிடித்திருக்கிறதா? கவலையற்ற மகாராஜா தனக்கும் பிரியமானவர், மற்றும் யார் அத்தகைய ஸ்திதியில் பறக்கிறார்களோ, அவர்களின் ஜொலிக்கின்ற ஒளியைப் பார்த்து மற்றவர்களுக்கு எவ்வளவு அன்பு வருகிறது! எனவே பாப்தாதா சதா குழந்தைகளைக் கவலையற்ற ஸ்திதியில், இதே ஸ்மிருதி சொரூபத்தில் நிலைக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எனவே உங்களுடைய சித்திரங்களிலும் கூட பக்தர்கள் உங்களை இரட்டைக் கிரீடதாரியாகக் காட்டு கின்றனர். ஒன்று ஒளிக்கிரீடம், இன்னொன்று விகாரங்களை வென்றதற்கான சக்கரவர்த்தி நிலையின் கிரீடம், இரட்டைக் கிரீடமாகக் காட்டுகின்றனர். எனவே பாப்தாதா சதா ஒவ்வொரு குழந்தைக்கும் இதே அறிவுரை தருகிறார் - சதா மகிழ்ச்சியில் இருப்பது மிகவும் சுலபம், ஏன் சுலபம்? எல்லைக்குட்பட்ட எனது என்பதை மட்டும் பாபாவுக்குக் கொடுத்து விடுங்கள். எனது என்பதில் இருந்து உனது என ஆக்கி விட்டால் கவலையற்ற மகாராஜா ஆகி விட்டீர்கள். ஒரே வார்த்தையின் வித்தியாசம் - உனது எனது. உ மற்றும் எ, இந்த எழுத்துகளின் வித்தியாசத்தில் கவலை யற்ற மகாராஜா ஆகி விட்டீர்கள். எளிது தான் இல்லையா? கவலையற்ற மகாராஜா ஆகி விட்டீர்கள் இல்லையா? அல்லது இன்னும் கவலை உள்ளதா? எப்போதாவது பெருமைக்கு பதில் கவலை வருகிறது என்றால் வித்தியாசம் வெறுமனே உனது என்பதற்கு பதில் எனது என்பதால் கவலை வருகிறது. ஆக, அனைவரின் நடைமுறை ரிசல்ட் என்ன? கவலையைக் கொடுத்து விட்டீர்களா அல்லது இடையிடையில் பெருமிதத்தை விட்டுவிட்டுக் கவலையில் வந்து விடுகிறீர்களா? கவலை வருகிறதா அல்லது கவலையற்றவராக இருக்கிறீர்களா? யார் சதா கவலையற்ற மகாராஜாவாக இருக்கிறீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். கவலையற்ற மகாராஜாக்கள், பக்காவா அல்லது அவ்வப்போது மட்டுமா? கவலையற்ற மகாராஜாக்கள் கையை நன்றாக உயர்த்துங்கள். அவ்வப்போது என்பவர்களும் உள்ளனர். சேவையின் கவலை என்பது வேறு விஷயம். ஆனால் அந்தக் கவலை மற்றவர்களையும் கவலையற்றவர்களாக ஆக்குவதற்கான சாதனம். தனது சம்ஸ்காரத்தினால் கவலை வருகிறது என்றால் அதை அந்த நேரமே எனது என்பதற்கு பதில் உனது என மாற்றி விடுங்கள். கவலையை பாபாவுக்குக் கொடுத்து விடுங்கள். மற்றும் பெருமிதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் பாபா வந்திருப்பதே குழந்தைகளின் கவலையைப் பெற்றுக் கொண்டு பெருமிதத்தைக் கொடுப்ப தற்காகத் தான். எனவே சோதித்துப் பாருங்கள் - எனக்குள் அவ்வப்போது நீண்ட காலத்தின் சம்ஸ்காரம் இமர்ஜ் ஆகாமல் இருக்கிறதா? ஏனென்றால் பாப்தாதா சில காலமாகவே குழந்தை களுக்கு இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் - தற்சமயம் சமயத்திற்கேற்றவாறு எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே ஒவ்வொரு குழந்தையும் தனக்கு இந்த கவனம் கொடுக்க வேண்டும் -- ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் வைக்க முடியுமா? எந்த ஒரு வீண் சங்கல்பம் வந்தாலும் முற்றுப்புள்ளி மூலம் ஒரு வீணானதை ஒரு விநாடியில் முடித்து விட முடியுமா? சமயத்தின் சூழ்நிலைக்கேற்ப புருஷார்த்தம் செய்து, வீணானவற்றை நிறுத்துவதற்கான அவசியம் ஏற்படும். புள்ளி வைக்கும் போது அது கேள்விக்குறி ஆகிவிட்டால் ஏன், என்ன, எப்படி.. அந்தச்சமயம் இதை யோசித்துக் கொண்டே இருந்தால் வரப்போகிற சமயம் எது லட்சியமோ, பாபாவுடன் கூடவே செல்வோம், பாபாவோ ஒரு விநாடியில் சென்று விடுவார். ஏனென்றால் பிந்துவாக இருக்கிறார், விநாடியும் ஒரு புள்ளி தான், முற்றுப்புள்ளியும் ஒரு புள்ளி தான். ஆக, உங்களுக்கும் கூட இவ்வளவு அப்பியாசம் உள்ளதா? இதற்காக இப்போதிருந்தே இந்த அப்பியாசத்தின் அப்பியாசியாக (பயிற்சி யின் பயிற்சியாளர்) இருப்பீர்களானால் பாபாவுக்கு சமமாக ஸ்ரீமத் என்ற கையோடு கை சேர்த்து தங்களின் வீடு சென்று சேர்ந்து விடுவீர்கள். எனவே பாப்தாதா இதற்கு முன்பும் கூட சொல்லியிருக்கிறார் - இரண்டு விஷயங்களின் கவனம் இரட்டைக்கோடிடப் பட வேண்டும். இரண்டு விஷயங்கள் எவை?

ஒன்று சங்கல்பத்தின் கஜானா, இரண்டாவது சமயத்தின் கஜானா. கஜானாக்களோ அநேகம் கிடைத்துள்ளன. ஞானத்தின் கஜானா, சக்திகளின் கஜானா, யோகத்தின் மூலம் முக்கியமாக சம்பன்னமாவதற்கான யுக்திகள் என்னென்ன உள்ளனவோ, அனைத்தும் கிடைத்துள்ளன. ஏனென்றால் இந்த சங்கமயுகத்தின் சமயம் முழுக் கல்பத்திலும் விலைமதிப்பற்ற விசேஷ சமயமாகும். இந்தச் சமயம் தான் எவ்வளவு பிராப்தி அடைய விரும்புகிறீர்களோ, அவ்வளவு அடைய முடியும். ஏனென்றால் இந்த ஒரு ஜென்மம் மகான் ஜென்மமாகும். இந்த ஒரு ஜென்மத்தில் அநேக ஜென்மங்களுக்கான பிராலப்தத்தை உருவாக்க வேண்டும். சங்கம யுகத்தின் சமயத்தை ஒரு விநாடி கூட வீணாக்கக் கூடாது. ஒரு விநாடியின் தொடர்பு அநேக ஜென்மங்களோடு உள்ளது. சேமிப்பதற்கான ஒரு வருடம் அநேக வருடங்களின் பிராப்திக் கானதாகும். எனவே இச்சமயத்தின் மதிப்பு விநாடி அல்லது நிமிடம் அன்று. ஒரு மணியும் கூட மகான், ஒரு விநாடியும் கூட மகான். மேலும் சங்கல்பம் இந்த சங்கமயுக ஜென்மத்தின் விசேஷ ஆதாரமாகும். பாருங்கள், யோகா செய்கிறீர்கள் என்றால் மன்மனாபவ சொல்கிறீர்கள் மற்றும் இது அஸ்திவாரத்தின் ஆதாரமாகும். மனதின் வேலையே சங்கல்பம் செய்வது தான். சங்கல்பத்தின் மூலம் தான் நினைவு யாத்திரையின் அனுபவம் செய்கிறீர்கள். ஒருவர் மற்றவரிடம் கூட குறிப்பாக பல்வேறு சங்கல்பங்கள் கொடுத்து அப்பியாசம் செய்விக்கிறீர்கள் இல்லையா? ஆக, அனைவரும் சோதித்துப் பாருங்கள் - சமயத்தின் வேகம் நாள் முழுவதிலும் நடமாடும் போதும், கர்மம் செய்யும் போதும், சம்பந்தத்தில் வரும் போதும் விலைமதிப்பற்ற ரூபத்தில் இருந்ததா? சங்கல்பம் சர்வசக்திவான் ஆக்குகிறது.

ஆக, பாப்தாதா அடிக்கடி சொல்கிறார்- ஹே பாப்தாதாவின் செல்லங்களே, மனதில் நிறைந்து விடும் குழந்தைகளே, இப்போது வீண் கணக்குகளை முடித்து விடுங்கள். பயனுள்ளதாக்குங்கள். பயனுள்ளதாக்குவது தான் வெற்றி பெறுவதாகும். ஒரு விநாடி தானே போயிற்று என்று அப்படி யோசிக்காதீர்கள். ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு சங்கல்பமும் வெற்றி பெற்றது என்று அவ்வளவு கவனம் தன் மீது வைத்தேயாக வேண்டும். அந்த அளவு முற்றுப்புள்ளி வைப்பதற் கான செக்கிங் செய்யுங்கள். கவனக்குறைவாக ஆகாதீர்கள். பாப்தாதா சொல்லியிருந்தார், ஆனால் நாம் புரிந்து கொள்ளவில்லை. நடந்து கொண்டுள்ள சமயத்தை யோசிக்க வில்லை. அவ்வளவு வேகமாகச் சமயம் சென்று கொண்டிருக்கிறது, செல்லத் தான் செய்யும். இப்போது கவனக் குறைவை ஒவ்வொருவரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ள விரும்புகிறார். இதைக் கேட்க விரும்புவதில்லை - நான் புரிந்து கொள்ளவில்லை, யோசிக்கவில்லை. இப்போது வருடமும் புதியதாக வரப் போகிறது. எனவே புது வருடம் தொடங்குவதற்கு முன்பாக பிராமண உலகிலிருந்து கவனக்குறைவு, அதோடு கூடவே சோம்பல், அலட்சியமும் கூட பலவிதமாக உள்ளன. இப்போது வருடம் முடிவதற்குக் கொஞ்சம் சமயம் உள்ளது இதில் இதற்கான அப்பியாசத்தைத் தொடங்குங்கள் மற்றும் புது வருடம் தொடங்கும் போது தைரியம் வைத்து சங்கல்பம் செய்ய வேண்டும் மற்றும் இதற்கு விடை கொடுத்து விட வேண்டும். வருடத்தோடு கூடவே இதற்கும் விடை கொடுத்து விட வேண்டும். உங்களால் கொடுக்க முடியுமா? கொடுக்க முடியுமா? யார் கொடுக்க முடியுமோ, அவர்கள் கை உயர்த்துங்கள். (அனைவரும் கை உயர்த் தினார்கள்.) ஆஹா! குழந்தைகளே ஆஹா! கை உயர்த்துவதிலோ பாப்தாதாவை அதிகமாகவே குஷிப் படுத்தி விடுகிறீர்கள். பாப்தாதா பார்த்தார் - குழந்தைகள் அநேகருக்கு கை உயர்த்து வதற்கான ரிட்டர்ன் கொடுக்க வேண்டும் என்ற நினைவு இருக்கிறது. மற்ற எதையாவது நினைவு வைப்பதில் கவனக்குறைவாக ஆகி விடுகிறார்கள். பாப்தாதாவோடு ஆன்மிக உரை யாடல் மிக நன்றாகவே செய்கிறார்கள். ஆகி விடும், பாப்தாதா நீங்கள் பாருங்கள், இப்போது ஆகும், இப்போது ஆகி விடும். பாப்தாதாவும் அத்தகைய கவனக்குறைவான குழந்தைகள் சொல்வதைக் கேட்டுப் புன்சிரிக்கிறார். வேறென்ன செய்வார்? நல்லது, யோசிக்கிறீர்கள் - செய்ய வேண்டும், செய்ய வேண்டும், செய்ய வேண்டும். இதை அதிகம் யோசிக்கிறீர்கள். ஆனால் செய்து கொண்டிருக்கிறோமா, செய்யவில்லையா - இதில் செக்கிங் செய்வதில் பிறகு என்ன சொல்வார்கள்? கவனக்குறைவாக ஆகி விடுகிறார்கள்.

ஆக, இன்று நாலாபுறம் உள்ள குழந்தைகளுக்கு, பாப்தாதா கேள்விப் பட்டார். தனது தேசத்திலும் மற்றும் அவரவர் இடங்களிலும் இருந்து குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கேயும் நன்றாகத் தென்படுகின்றது. கேட்கவும் முடிகிறது. ஆக, பாப்தாதா முன்னிலையில் வருகிற குழந்தைகளுக்கு மற்றும் தங்கள் இருப்பிடங்களில் இருந்தவாறு கேட்கின்ற, பார்க்கின்ற குழந்தைகளுக்கு இதைத் தான் சொல்கிறார் - இப்போது புருஷார்த்தத்தை, சங்கல்பங்களை, மற்றும் சங்கமயுகத்தின் சமயத்தை அடிக்கோடிடுங்கள். குழந்தைகள் அனைவரும் அன்பிலோ பெரும்பான்மையானவர்கள் பாஸ். அன்பின் ஆதாரத்தில் நன்கு முன்னேறிக் கொண்டுள்ளனர். அன்பின் காரணத்தால், பாபாவின் அன்பிற்கு பதில கிடைக்கிற காரணத்தால் முன்னேறிக் கொண்டும் உள்ளனர். ஆனால் பாபா புரிந்து கொள்கிறார், எப்படி அன்பில் அனுபவி ஆகி முன்னேறிக் கொண்டிருக்கிறீர்களோ, அதே போலவே நினைவின் பாடத்திலும் அநேக ஜென்மங்களின் விகர்மங்களை விநாசம் செய்வதில் இன்னும் கவனம் கொடுங்கள். ஏன்? விகர்மங்கள் விநாசமாகுமானால் கூடக்கூடவே செல்வீர்கள். இல்லை யென்றால் பின்னால்-பின்னால் வருவீர்கள். மேலும் பாபா புரிந்து கொண்டுள்ளார் - அன்பான ஆத்மா என்ன சொல்கிறாரோ, அதைச் செய்தே ஆக வேண்டும். பாபா விரும்புகிறார் – குழந்தை களின் அன்பு பாபாவிடம் உள்ளது என்றால் அவரோடு கூடவே இருக்க வேண்டும். இராஜ தானியிலும் கூட பிரம்மா பாபாவோடு கூடவே இராஜதானியில் வர வேண்டும். இராஜ தானியில் வருவதென்றால் இராஜ குடும்பத்தில் வந்து விட்டார்கள். சிம்மாசனத்தில் அமர வில்லை, ஆனால் இராஜ குடும்பத்தின் துணையாகவோ ஆகி விட்டார்கள். பாப்தாதா இதற்கு முன்பும் சொல்லி யிருக்கிறார் - இதை எப்படிக் கண்டறிவது? எப்போதிருந்து நீங்கள் வருகிறீர் களோ, ஞானத்தில் உங்கள் ஆயுள் எவ்வளவோ, அவ்வளவு காலமாக நீங்கள் பாப்தாதாவின் மன சிம்மாசனத்தில் அமர்பவர்களாக இருந்திருக்கிறீர்கள், இப்போது மண்ணில் கால் வைக்காமல் இருக்கிறீர்கள் என்றால் அதன் அனுசாரம் இராஜ குடும்பத்தில் நெருங்கிய சம்பந்தத்தில் இருப்பீர்கள். ஆக, அன்பு உள்ளது, அன்புள்ளவர்கள் துணையைப் பராமரிப்பதில் பின்தங்க மாட்டார்கள். யார் மன சிம்மாசனத்தில் அமர்பவர்களோ, அவர்கள் துவாபர-கலியுகத்தின் சம்பந்தத்திலும் இருப்பார் கள். நெருக்கத்தில் இருப்பார்கள். அதனால் பாப்தாதா ஒவ்வொரு குழந்தை மீதும் அன்பு செலுத்துகிறார். பாபா சர்ட்டிஃபிக்கேட் கொடுத்துள்ளார் - அன்பின் பாடத்தில் பெரும்பாலானவர்கள் பாஸ். இப்போது அனைத்துப் பாடங்களிலும் பாஸ் ஆகியே தீர வேண்டும். பாஸ் ஆக வேண்டும், பாஸ் (அருகில்) இருக்க வேண்டும்.

முதல் தடவை வந்துள்ள குழந்தைகள் எழுந்திருங்கள். முதல் தடவையாக வந்திருக்கிறீர்கள். பாதி வகுப்போ புதியவர்கள். வந்திருக்கிறீர்கள். பாப்தாதா வந்திருப்பவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார். வாழ்த்துகள்! முதல் தடவை வந்ததற்காக வாழ்த்துகள். லேட்டாக வந்திருக் கிறீர்கள். ஆனால் பிறகும் டூலேட் ஆவதற்கு முன் வந்து விட்டீர்கள். இப்போது இந்த கவனம் வைக்க வேண்டும் - சிறிது காலத்திலேயே தீவிர புருஷார்த்தி ஆகி தனது வருங்காலத்தை எவ்வளவு பெரிதாக்க விரும்புகிறீர்களோ, தீவிர புருஷார்த்தத்தின் மூலம் முன்னேறிச் செல்ல முடியும். ஏனென்றால் பிறகும் கூட இப்போதும் புருஷார்த்தம் செய்வதற்கான நேரம் கொஞ்சம் உள்ளது. எவ்வளவு முன்னேறிச் செல்ல விரம்புகிறீர்களோ, அவ்வளவு முன்னேறிச் செல்ல முடியும். பாப்தாதாவும் இந்த தெய்விகப் பரிவாரமும் உங்களுக்குக் கூடக்கூடவே முன்னேறிச் செல்வதற்கான வைப்ரேஷன் கொடுப்பார்கள். எனவே முன்னேறிச் செல்லுங்கள். தைரியம் வையுங்கள். தைரியம் உங்களுடையது மற்றும் உதவி பாப்தாதா மற்றும் பரிவாரத்தி னுடையது. முன்னேறிச் செல்லுங்கள். சரி தானே? ஆம் என்று செல்லுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். நல்லது.

மதுபன் நிவாசிகளுடன் - மதுபன் வாசிகளோ அதிர்ஷ்டசாலிகள். கொஞ்சம் பெரிய குழுவைப் பக்கா ஆக்கி துணையாக்கிக் கொள்ளுங்கள். வேறு எதிலும் துணையாக்கக் கூடாது. இதில் ஒருவர் மற்றவரைத் துணையாக்கி, முதல் நம்பர் மதுபனுக்கு அழைத்து வர வேண்டும். வருவீர்கள். நடந்தது நடந்து முடிந்ததாக இருக்கட்டும். என்னவெல்லாம் நடந்ததோ, அனை வரும் பார்த்தார்கள், கேட்டார்கள் மற்றும் மதுபன் வாசிகளுக்கோ மிகவும் பொன்னான வாய்ப்பு. மதுபனில் அனைவரும் வந்து விட்டனர். மதுபன்காரர்கள் ஒன்று சேர்ந்து, பாண்டவ பவன் தனி, அல்லது வேறோர் இடம் தனி என்று அப்படி இல்லை. மதுபன் என்றால் அனைவரும் ஒன்று. ஆக, மதுபன் வாசிகள் நினைக்கிறார்கள், செய்வோம். யார் செய்வீர்களொ, கை உயர்த்துங்கள். அனைவரும் உயர்த்தினார்கள். யார் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ, செய்வது என்ன பெரிய விஷயம், பாப்தாதா இருக்கிறார், தாதிமார் இருக்கிறார்கள், அதனால் பெரிய விஷயமோ கிடையாது. தாதிமார் என்ன நினைக்கிறீர்கள்? மதுபன் வாசிகளோ நம்பர் ஒன். நல்லது. பாபா இதைச் செய்து காட்டுமாறு அனைவருக்கும் சொல்லியிருக்கிறார். ஆனால் மதுபன், மதுபன் என்றால் மதுபன் தான். நீங்கள் அனைவரும் வைப்ரேஷன் கொடுக்க வேண்டும், ஆகி விடும், பெரிய விஷயம் கிடையாது. விக்னத்தின் பெயர் அடையாளம் கிடையாது. ஏதாவது பிரச்சினை வந்தது, கொடுக்கல்-வாங்கல் செய்தால் முடிந்தது. கொஞ்ச காலத்திற்கு முன் தாதி இருந்த போது ஒரு தடவை அனைவரும் ஹாஞ்ஜீ (சரி) என்ற பாடத்தைப் பக்கா ஆக்கி இருந்தார்கள். இல்லை, முடியாது என்ற வார்த்தையே கிடையாது. ஹாஞ்ஜீ, மிக நன்று. ஆக, மதுபன் முதல் நம்பரில் போய் விடும். பாப்தாதாவுக்கு மதுபன் பற்றி பெருமிதம் உள்ளது இல்லையா? இப்போது மதுபன் முன்னால் வந்துள்ளது. ஆனால் பாப்தாதா அனைத்து ஜோன்களுக்கும் சொல்கிறார் - ஹாஞ்ஜீ, இனிமையான ஆத்மா - இந்தப் பாடம் அனைவருக்கும் பக்காவாக உள்ளது. பக்கா தான் இல்லையா? பரிசோ மதுபன் தான் பெற வேண்டும். ஒரு விநாடியில் நடந்ததை முடிந்து விட்டதாக ஆக்க முடியுமா? புருஷார்த்தியாகவே இருக்கலாம். ஆகியும் இருக்கலாம். ஆனால் நடந்ததை நடந்து முடிந்ததாக ஆக்கிப் பறந்து செல்லுங்கள். பறப்பவர்கள் பின்னால் உள்ளவர்களை விட்டு விடுகிறார்கள், அப்போது பறக்கிறார்கள். ஆக, மிக நல்லது.

இப்போது குஜராத் ஏதேனும் புதுமை செய்ய வேண்டும். பாப்தாதா டில்லிக் காரர்களுக்கும் சொன்னார் - இப்போது புதுமை செய்யுங்கள். பாப்தாதாவுக்குத் தகவல் கிடைத்ததென்றால் இப்போது இந்த தேசம் மற்றும் வெளிதேசங்களின் இளைஞர்கள் ஆரம்பித்து வைத்ததில் நல்ல ரிசல்ட் கிடைக்க முடியும். இப்போதோ கண்டு பிடிப்பை ஆரம்பித்திருக்கிறீர்கள். ஆனால் பாரதம் மற்றும் வெளிநாடுகள் இரண்டுமே சேர்ந்து இன்னும் அற்புதங்களைச் செய்ய முடியும். இப்போதோ ஆரம்பித்திருக்கிறீர்கள். ஆனால் டில்லிக் காரர்கள் நன்றாக தைரியம் வையுங்கள். ஆரம்பித்திருக்கிறீர்கள், இப்போது உலகத்தில் இது பரவி விடுமானால், வெளிதேசங்களும் இந்த தேசமும் சேர்ந்து ஒரே பிராமணப் பரிவாரம் உருவாகியுள்ளது மற்றும் உலகத்தின் முன்னால் உலகத்தையும் கூட ஒன்றாக ஆக்குவார்கள். ஆரம்பம் ஆகியுள்ளது தான். இப்போது முஸ்லிம் களும் முன்னேறிச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்த மாதிரி பெரிய புரோகிராம் செய்யுங்கள் - அதில் முக்கிய தேசங்களில் இருந்து வர வேண்டும் மற்றும் உலகத்தில் இது புகழ் பெற்று விடுமானால் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் தங்களுக்குள் சகோதர-சகோதரிகள், சகோதரத்துவம், சகோதரித்துவம் என்ற சப்தம் பரவிக் கொண்டே இருக்கட்டும். ஒரே ஸ்டேஜில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விசேஷ அனுபவம் ஏற்படட்டும். அனைவரும் பிளான்களையோ உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் இப்போது எல்லையற்றதில் சென்று கொண்டு தான் இருக்கிறீர்கள். இது ஒரு கடவுளின் குடும்பம் என்பது அனைவருக்கும் தெரிய வருமானால், புகழ் பெறுவீர்கள். மற்றப்படி இங்கே யாரெல்லாம் வருகிறீர்களோ, சேவையும் செய்து கொண்டிருக்கிறீர்கள், சுய புருஷார்த்தமும் செய்து கொண்டி ருக்கிறீர்கள் மற்றும் இறைப்பணியும் உலக அளவில் புகழ் பெற்று விடும். ஒரே குடும்பம். நல்லது.

நாலாபுறம் உள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா இப்போது வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் முன்னேறிச் செல்வதற்கான வாழ்த்துகள்! சமயம் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் சமயத்திற்காகக் காத்திருக்கக் கூடாது. நீங்கள் சமயத்தை எவ்வளவு அருகில் கொண்டு வர விரும்புகிறீர்களோ, முடிவை, அவ்வளவு முடிவை அருகில் கொண்டு வர முடியும். சமயம் வந்த பிறகு தயாராவது என்பது பிராமணர்களாகிய உங்கள் சங்கல்பமாக இருக்கக் கூடாது. நீங்கள் சமயத்தை அருகில் கொண்டு வாருங்கள். இயற்கையும் கூட பாப்தாதாவுக்குச் சொல்கிறது - இப்போது சமயத்தை அருகில் கொண்டு வாருங்கள். ஆக, பாப்தாதா என்ன பதில் கொடுப்பது? என்ன பதில் கொடுப்பது? சமயம் இப்போது வந்தே விட்டது. இதைச் சொல்லவா? உங்கள் தரப்பிலிருந்து இந்த பதில் கொடுப்பீர்களா? என்ன பதில் கொடுப்பீர்கள்? சொல்லுங்கள். என்ன பதில் கொடுப்பீர்கள்? இப்போது முடிவை அருகில் கொண்டு வர வேண்டும். அதாவது தன்னை சம்பன்னமாக, முழுமையாக ஆக்க வேண்டும். ஏனென்றால் பாப்தாதா தனியாகப் போக மாட்டார், குழந்தை களோடு தான் செல்வார். எனவே தேதியை நிர்ணயிக்க வேண்டும். எது வரை? வேலையோ கொடுக்கப்பட்டு விட்டது. இப்போது உங்களுக்குள் ஆலோசனை செய்ய வேண்டும். பாப்தாதா இயற்கைக்கு என்ன பதில் கொடுப்பது? இயற்கை மிகவும் குழப்பமடைந்துள்ளது. துக்கத் திலிருக்கும் ஆத்மாக்கள் மனதால் அதிகமாகக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். மனசா சேவையை இப்போது மிகவும் அதிகப் படுத்துங்கள். மனசா சேவை செய்யத் தான் செய்கிறீர்கள். ஆனால் அது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை இன்னும் அதிகப் படுத்துங்கள். ஏனென்றால் இயற்கை மற்றும் துக்கத்திலிருக்கும் ஆத்மாக்கள் பாபாவிடம் வருகிறார்கள், கதறுகிறார்கள். எனவே நீங்கள் அவர்களுக்குக் கொஞ்சம் சாந்தி சுகத்தின் அனுபவத்தைச் செய்வியுங்கள். அவர்கள் ஒரு விநாடியின் சாந்தியைக் கூட வேண்டு கிறார்கள். கொஞ்சம் சாந்தி கொடுங்கள். எப்படி பசி வருகிறது என்றால் புரிந்து கொள்கிறார்கள், ஏதாவது கிடைக்க வேண்டும், கொஞ்சமாவது கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே இப்போது மனசா சேவையையும் அதிகப் படுத்துங்கள். வார்த்தையினால் செய்யும் சேவையோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. பாப்தாதா குஷியடைகிறார். நல்லது, பாப்தாதா என்ன வீட்டுப் பாடம் கொடுத்தாரோ, அதை நினைவு வையுங்கள் மற்றும் நினைவுப் படுத்துங்கள். நல்லது.

பாப்தாதாவின் மனசிம்மாசனத்தில் அமரக்கூடிய குழந்தைகளுக்கு, உலக நன்மையின் காரியத்தில் சதா முன்னேறிச் செல்பவர்களுக்கு பாப்தாதா திருஷ்டி கொடுத்துக் கொண்டு மனதின் அன்பு மற்றும் வாழ்த்துகள், வாழ்த்துகள் என்று வாழ்த்துகளைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தூரத்தில் அமர்ந்திருந்தாலும் முன்னிலையில் இருப்பதாக அனுபவம் செய்கிறார். மேலும் பாப்தாதா குழந்தைகள் அனை வரையும் மனதில் நிறைத்துக் கொண்டே எல்லாக் குழந்தைகளுக்கும் நமஸ்தே நமஸ்தே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆசீர்வாதம்:
சிநேகம் மற்றும் சக்தி ரூபத்தின் சமநிலை மூலம்
சேவை செய்யக்கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.

எப்படி ஒரு கண்ணில் பாபாவின் சிநேகம், மற்றும் இன்னொரு கண்ணில் பாபா மூலம் கிடைத்துள்ள சேவை சதா ஸ்மிருதியில் உள்ளது. அத்தகைய சிநேகி மூர்த்தியோடு கூடக் கூடவே இப்போது சக்தி ரூபமாகவும் ஆகுங்கள். சிநேகத்தோடு கூடவே வார்த்தைகளில் அந்த மாதிரி கூர்மை இருக்க வேண்டும் - எவருடைய இதயத்தையும் அதிரச் செய்து விட வேண்டும். எப்படி தாய் தன் குழந்தைக்கு எப்படிப்பட்ட வார்த்தைகளிலாவது அறிவுரை தருகிறார். ஆக, தாயின் சிநேகத்தின் காரணத்தினால் அந்த வார்த்தை வேகமானதாகவோ கடுமையான தாகவோ தோன்றுவதில்லை. அது போல் ஞானத்தின் சத்தியமான விஷயங்களைத் தெளிவான வார்த்தைகளில் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் சிநேகம் நிறைந்திருக்குமானால் வெற்றி மூர்த்தி ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
சர்வசக்திவான் பாபாவைத் துணைவராக ஆக்கிக் கொள்வீர்களானால் பச்சாத்தாபப் படுவதில் இருந்து விடுபட்டு விடுவீர்கள்.


அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்

எப்படி சூரியனின் கிரணங்கள் பரவுகின்றன, அது போலவே மாஸ்டர் சர்வசக்திவான் ஸ்டேஜ் மீது சக்திகள் அல்லது விசேஷதா ரூப கிரணங்கள் நாலாபுறமும் பரவுவதாக அனுபவம் செய்யுங்கள். இதற்காக, நான் மாஸ்டர் சர்வசக்திவான், விக்ன விநாசக் ஆத்மா - இந்த உயர்ந்த சுவமானத்தின் ஸ்மிருதி என்ற இருக்கையில் நிலைத்திருந்து யோகத்தின் ஜுவாலா ரூபத்தை உருவாக்குங்கள். அப்போது எந்த ஒரு விக்னமும் உங்கள் முன்னால் கூட வர முடியாது.