05.10.25    காலை முரளி            ஓம் சாந்தி  03.03.2007      பாப்தாதா,   மதுபன்


பரமாத்ம சேர்க்கையில், ஞானத்தின் வண்ணம், குணங்கள் மற்றும் சக்திகளின் வண்ணங்களைப் பூசுவது தான் உண்மையான ஹோலி கொண்டாடுவதாகும்

இன்று பாப்தாதா தம்முடைய மிகமிக அதிர்ஷ்டசாலிகளான, மிகமிகப் புனிதமான குழந்தை களுடன் ஹோலி கொண்டாடுவதற்காக வந்துள்ளார். உலகத்தினரோ எந்த ஒரு பண்டிகையையும் வெறுமனே கொண்டாடுகிறார்கள். ஆனால் குழந்தைகள் நீங்கள் கொண்டாடுவது மட்டுமில்லை, கொண்டாடுவது என்றால் ஆவது. ஆக, நீங்கள் ஹோலியாக, அதாவது பவித்திர ஆத்மாக்களாக ஆகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் எத்தகைய ஆத்மாக்கள்? ஹோலி, அதாவது மகான் பவித்திர ஆத்மாக்கள். உலக மனிதர்களோ, சரீரத்தில் ஸ்தூல வண்ணங்களால் பூசுகின்றனர். ஆனால் ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாவை எந்த வண்ணத்தில் பூசியிருக்கிறீர்கள்? அனைத்திலும் நல்ல திலும் நல்ல வண்ணம் எது? அழியாத வண்ணம் எது? நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அனைவரும் பரமாத்ம சேர்க்கையின் வண்ணத்தை ஆத்மாவுக்குப் பூசியிருக்கிறீர்கள். அதன் மூலம் ஆத்மா பவித்திரதாவின் வண்ணத்தில் பூசப்பட்டுள்ளது. இந்தப் பரமாத்ம சேர்க்கையின் வண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக மற்றும் சகஜமாக உள்ளது. அதனால் பரமாத்ம வண்ணத்தின் மகத்துவம் இப்போது கடைசியிலும் கூட சத்சங்கத்தின் மகத்துவம் உள்ளது. சத்சங்கம் என்பதன் அர்த்தமே பரமாத்ம சேர்க்கையில் இருப்பதாகும். அது அனைத்திலும் சகஜமானதும் உயர்ந்ததிலும் உயர்ந்ததும் ஆகும். அது போல் குழந்தைகள் நீங்களும் உயர்ந்தவரிலும் உயர்ந்த பவித்திர மகான் ஆத்மாக்கள், பூஜைக்குரிய ஆத்மாக்களாக ஆகி விட்டீர்கள். இந்த அழியாத சேர்க்கையின் வண்ணம் பிடித்திருக்கிறது இல்லையா? உலகத்தவர் எவ்வளவு முயற்சி செய்ககின்றனர், பரமாத்ம சேர்க்கையையோ விடுங்கள், வெறுமனே நினைவு செய்வதிலும் கூட எவ்வளவு முயற்சி செய்கின்றனர்! ஆனால் ஆத்மாக்கள் நீங்கள் பாபாவை அறிந்து கொண்டு விட்டீர்கள், உளமாரச் சொன்னீர்கள் - மேரா பாபா! பாபா சொன்னார் - மேரே பச்சே! (என்னுடைய குழந்தைகளே) மற்றும் வண்ணம் பூசப்பட்டு விட்டது. பாபா எந்த வண்ணத்தைப் பூசினார்? ஞானத்தின் வண்ணத்தைப் பூசினார். குணங்களின் வண்ணத்தைப் பூசினார், சக்திகளின் வண்ணத்தைப் பூசினார். அந்த வண்ணத்தினால் நீங்களோ தேவதை ஆகி விட்டீர்கள். ஆனால் இப்போது கலியுகக் கடைசி வரையிலும் கூட உங்களுடைய பவித்திர சித்திரங்கள் தேவாத் மாக்களின் ரூபத்தில் பூஜிக்கப் படுகின்றன. பவித்திர ஆத்மாக்களாக அநேகர் ஆகிறார்கள். மகான் ஆத்மாக்களாக அநேகர் ஆகிறார்கள். தர்மாத்மாக்களாக அநேகர் ஆகிறார்கள். ஆனால் உங்களுடைய பவித்திரதா, தேவாத் மாக்களின் ரூபத்தில் ஆத்மாவும் பவித்திரமாகிறது மற்றும் ஆத்மாவோடு கூடவே சரீரமும் பவித்திரமாகிறது. இவ்வளவு சிரேஷ்ட பவித்திரமாக எப்படி ஆனீர்கள்? வெறுமனே சேர்க்கையின் வண்ணத்தால். நீங்கள் அனைவரும் பெருமிதத் துடன் சொல்கிறீர்கள் - யாராவது குழந்தைகளாகிய உங்களிடம் கேட்கிறார்கள் - பரமாத்மா எங்கே வசிக்கிறார்? பரந்தாமத்திலோ இருக்கவே செய்கிறார். ஆனால் இப்போது சங்கமயுகத்தில் பரமாத்மா உங்களோடு எங்கே இருக்கிறார் எனக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? பரமாத்மாவுக்கு இப்போது பவித்திர ஆத்மாக்களாகிய நம்முடைய மன சிம்மாசனம் தான் பிடித்திருக்கிறது. அப்படித் தான் இல்லையா? உங்கள் உள்ளத்தில் பாபா இருக்கிறார், நீங்கள் பாபாவின் உள்ளத்தில் இருக்கிறீர்கள். யார் இருக்கிறார் களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். இருக்கிறீர்களா? (அனைவரும் கை உயர்த்தினார்கள்) நல்லது. மிகவும் நல்லது. பெருமிதத்தோடு சொல்கிறீர்கள்- பரமாத்மாவுக்கு எனது உள்ளத்தைத் தவிர வேறெதுவும் பிடிக்காது. ஏனென்றால் இணைந்தே இருக்கிறீர்கள் இல்லையா? இணைந்தே இருக்கிறீர்களா? அநேக குழந்தைகள் இணைந்திருப்பதாகச் சொன்னாலும் கூட சதா பாபாவின் கம்பெனியின் லாபத்தை எடுத்துக் கொள்வதில்லை. கம்பேனியனாகவோ ஆக்கிக் கொண்டீர்கள், பக்கா! மேரா பாபா எனச் சொன்னால் கம்பேனியனாகவோ ஆக்கி விட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு நேரமும் கம்பெனியின் அனுபவம் செய்ய வேண்டும். இதில் வித்தியாசம் வந்து விடுகிறது. இதில் பாப்தாதா பார்க்கிறார் - நம்பர்வார் லாபத்தை எடுத்துக் கொள்கிறார்கள். காரணம் என்ன? நீங்கள் அனைவரும் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.

பாப்தாதா இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறார். உள்ளத்தில் இராவணனின் ஏதேனும் பழைய ஆஸ்தி, பழைய சம்ஸ்காரத்தின் ரூபத்தில் மிஞ்சியிருக்குமானால், இராவணனின் பொருள் வேறொருவரின் பொருள் ஆகிறது இல்லையா? வேறொருவரின் பொருளை ஒரு போதும் தன்னிடம் வைத்துக் கொள்வதில்லை. அது வெளியேற்றப் பட வேண்டும். ஆனால் பாப்தாதா பார்த்தார் - ஆன்மிக உரையாடலில் கேட்கவும் செய்கிறார் - குழந்தைகள் என்ன சொல்கிறார்கள்? பாபா, நான் என்ன செய்வது? எனது சம்ஸ்காரமே அது போல் தான் உள்ளது. இது என்ன உங்களுடையதா - எனது சம்ஸ்காரம் என்று சொல்கிறீர்கள்? இவ்வாறு சொல்வது சரியா - எனது பழைய சம்ஸ்காரம், எனது நேச்சர், இது சரியா? சரியா? இது சரி என்று யார் நினைக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங் கள். யாரும் கை உயர்த்தவில்லை. ஆக, ஏன் சொல்கிறீர்கள்? தவறுதலாகச் சொல்லி விடுகிறீர்களா? எப்போது மர்ஜீவா ஆகி விட்டீர்களோ, இப்போது உங்கள் சர்நேம் என்ன? பழைய ஜென்மத்தின் சர்நேமா அல்லது பி.கே.யின் சர்நேமா? தனது சர்நேம் என்று எதை எழுதுகிறீர்கள்? பி.கே.யா அல்லது இன்னார்-இன்னார் என்றா? மர்ஜீவா ஆகி விட்டீர்கள் என்றால் பழைய சம்ஸ்காரம் எப்படி எனது சம்ஸ்காரமாகும்? இந்தப் பழையதோ வேறொருவரின் சம்ஸ்காரம் ஆகிறது. எனது இல்லை இல்லையா? அப்போது இந்த ஹோலியில் எதையாவது எரிப்பீர்கள் இல்லையா? ஹோலி எரிக்கவும் செய்கிறார்கள், மற்றும் வண்ணங்களையும் பூசுகிறார் கள். ஆக, நீங்கள் அனைவரும் இந்த ஹோலியில் எதை எரிக்கப் போகிறீர்கள்? எனது சம்ஸ்காரம் என்பதை உங்கள் பிராமண வாழ்க்கையின் அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். வாழ்க்கையும் ஒரு அகராதி தான் இல்லையா? ஆக, இப்போது ஒரு போதும் இதைக் கனவில் கூட யோசிக்கக் கூடாது. இப்போதோ எது பாபாவின் சம்ஸ்காரமோ, அது உங்கள் சம்ஸ்காரம். அனைவரும் சொல்கிறீர்கள் இல்லையா, எங்கள் லட்சியம் பாப்-சமான் ஆக வேண்டும் என்பது தான் என்று? அப்படியானால் அனைவரும் மனதில் திட சங்கல்பத்தின் இந்த உறுதிமொழியைத் தனக்குத் தான் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? தவறுதலாகக் கூட எனது என்று சொல்லக் கூடாது. எனது-எனது எனச் சொல்கிறீர்கள் இல்லையா, அப்போது இந்தப் பழைய சம்ஸ்காரங்கள் அந்த லாபத்தை எடுத்துக் கொள்கின்றன. எப்போது என்னுடையவை எனச் சொல்கிறீர்களோ, அப்போது அவை உட்கார்ந்து கொள்கின்றன. வெளியேறுவதில்லை. பாப்தாதா அனைத்துக் குழந்தைகளையும் எந்த ரூபத்தில் பார்க்க விரும்புகிறார்? அறிந்திருக்கிறீர்கள், ஏற்றுக் கொண்டும் இருக்கிறீர்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் புருவமத்தியின் சிம்மாசனத்தில் அமரக்கூடிய, சுயராஜ்ய அதிகாரி ராஜா குழந்தை, அடிமைக் குழந்தையல்ல, ராஜா குழந்தை, கன்ட்ரோலிங் பவர், ரூலிங் பவர், மாஸ்டர் சர்வ சக்திவான் சொரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் உங்களுடைய எந்த ரூபத்தைப் பார்க்கிறீர்கள்? இதைத் தான் பார்க்கிறீர்கள் இல்லையா, நீங்கள் ராஜ்ய அதிகாரி இல்லையா? அடிமையோ இல்லை தானே? அடிமை ஆத்மாக்களை நீங்கள் அனைவரும் அதிகாரி ஆக்குபவர்கள் தாம் இல்லையா? ஆத்மாக்கள் மீது இரக்க மனம் உள்ளவராகி அடிமையிலிருந்து அவர்களையும் அதிகாரி ஆக்குபவர் நீங்கள். ஆக, நீங்கள் அனைவரும் ஹோலி கொண்டாடு வதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா?

பாப்தாதாவுக்கும் குஷி - அனைவரும் அன்பு என்ற விமானத்தின் மூலம் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அனைவரிடமும் விமானம் உள்ளது இல்லையா? பாப்தாதா ஒவ்வொரு பிராமணருக்கும் பிறவி எடுத்ததுமே மனம் என்ற விமானத்தைப் பரிசாகக் கொடுத்து விட்டார். ஆக, அனைவரிடமும் மனம் என்ற விமானம் உள்ளதா? விமானத்தில் பெட்ரோல் சரியாக உள்ளதா? இறக்கை சரியாக உள்ளதா? ஸ்டார்ட் பண்ணுவதற்கான ஆதாரம் சரியாக உள்ளதா? செக் செய்கிறீர்களா? அப்படிப்பட்ட விமானம் - இது மூன்று உலகங்களுக்கும் ஒரு விநாடியில் செல்லக் கூடியது. தைரியம் மற்றும் ஊக்கம்-உற்சாகத்தின் இரண்டு இறக்கைகளும் யதார்த்தமாக உள்ளன என்றால் ஒரு விநாடியில் ஸ்டார்ட் ஆக முடியும். ஸ்டார்ட் செய்வதற்கான சாவி எது? மேரா பாபா. மேரா பாபா எனச் சொல்வீர்களானால் மனம் எங்கே சென்று சேர விரும்புகிறதோ, அங்கே சென்று சேர முடியும். இரண்டு இறக்கைகளும் சரியாக இருக்க வேண்டும். தைரியத்தை ஒரு போதும் விடக் கூடாது. ஏன்? பாப்தாதாவின் உறுதிமொழி, வரதானம், உங்கள் தைரியத்தின் ஓரடி மற்றும் ஆயிரம் அடி உதவி பாபாவுடையது. எத்தகைய கடுமையான சம்ஸ்காரமாக இருந்தாலும் சரி, தைரியத்தை ஒரு போதும் இழக்காதீர்கள். காரணம்? சர்வசக்திவான் பாபா உதவியாளராக இருக்கிறார், இணைந்தே இருக்கிறார். சதா ஆஜராகி இருக்கிறார். நீங்கள் தைரியமாக சர்வசக்திவான், இணைந்த பாபாவின் மீது அதிகாரம் வையுங்கள் மற்றும் திடமாக இருங்கள். நடந்தேயாக வேண்டும், பாபா என்னுடைய வர், நான் பாபாவுடையவன் - இந்த தைரியத்தை மறக்காதீர்கள். அப்போது என்னவாகும்? எப்படிச் செய்வேன் என்ற சங்கல்பம் எழுகிறதே, அந்த எப்படி என்ற சொல் மாறி இப்படி என்று ஆகி விடும். எப்படிச் செய்வேன், என்ன செய்வேன் என்பதில்லை. இப்படி நடந்தே தீரும். யோசிக்கிறீர்கள், செய்யத் தான் செய்கிறோம், நடக்கும், நடக்கவோ வேண்டும், பாபாவோ உதவி செய்வார் நடந்தே தீரும். பாபா கட்டுண்டிருக்கிறார் - திட நிச்சயபுத்தி உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்காக. ரூபத்தை மட்டும் கொஞ்சம் மாற்றி விடுகிறீர்கள். பாபாவின் மீது உரிமை வைக்கிறீர்கள். ஆனால் ரூபத்தை மாற்றி விடுகிறீர்கள். பாபா நீங்களோ உதவி செய்வீர்கள் இல்லையா? நீங்களோ கட்டுப்பட்டிருக் கிறீர்கள் இல்லையா? இப்படி இல்லையா, இல்லையா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். நிச்சய புத்தி உள்ளவர் களுக்கு வெற்றி நிச்சயிக்கப்பட்டதாக உள்ளது. ஏனென்றால் பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்பு எடுத்ததுமே வெற்றித் திலகத்தை நெற்றியில் இட்டிருக்கிறார். திடத்தன்மையை உங்கள் தீவிர புருˆôர்த்தத்தின் சாவியாக ஆக்கிக் கொள்ளுங்கள். பிளானகள் மிக நன்றாகவே உருவாக்குகிறீர்கள். பாப்தாதா ஆன்மிக உரை யாடலைக் கேட்கும் போது மிகவும் தைரியத்தின் ஆன்மிக உரையாடல் செய்கிறீர்கள். பிளான் களும் மிகப் பெரிய சக்திசாலியாக உருவாக்குகிறீர்கள். ஆனால் பிளானை நடைமுறைப் படுத்தும் போது தெளிவான புத்தி உள்ளவராகிச் செய்வதில்லை. அதாவது எண்ணத்தில் கலப்படமாகி விடுகிறது. செய்து கொண்டு தான் இருக்கிறோம். ஆகத்தான் வேண்டும். இப்படி சுய நம்பிக்கை யில் உறுதியில்லாமல் இருக்கிறீர்கள். அதாவது வீணான எண்ணங்களைக் கலப்படம் செய்து விடுகிறீர்கள்.

இப்போது சமயத்தின் பிரமாணம் தெளிவான புத்தி உள்ளவராகி, சங்கல்பத்தை சாகார ரூபத்தில் கொண்டு வாருங்கள். ஒரு சிறிதும் பலவீனமான சங்கல்பங்களை வெளிப்படுத்தாதீர்கள். ஸ்மிருதி வையுங்கள் - இப்போது ஒரு தடவை மட்டும் செய்து கொண்டிருக்கவில்லை. அநேக தடவை செய்துள்ளதைத் தான் இப்போது ரிப்பீட் செய்து கொண்டிருக்கிறேன். நினைவு செய்யுங்கள் - எத்தனை தடவை கல்ப-கல்பமாக வெற்றியாளர் ஆகியிருக்கிறோம்? அநேக தடவை வெற்றியாளர் நாம். வெற்றி என்பது அநேக கல்பங்களின் பிறப்புரிமையாகும். இந்த உரிமையின் மூலம் நிச்சயபுத்தி உள்ளவராகி உறுதித்தன்மையின் சாவியைப் போடுங்கள். வெற்றி, பிராமண ஆத்மாக் களாகிய உங்களைத் தவிர வேறெங்கே போய் விடும்? வெற்றி பிராமண ஆத்மாக்களாகிய உங்கள் பிறப்புரிமையாக, கழுத்தின் மாலையாக உள்ளது. நˆô உள்ளது இல்லையா? ஆகுமா, ஆகாதா என்பதில்லை. ஆகியே தீரும். அந்த அளவு நிச்சயபுத்தி உள்ளவராகி ஒவ்வொரு காரியத்தையும் செய்யுங்கள். வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிச்சய புத்தி ஆத்மாக்கள் இதே நˆô வையுங்கள் - வெற்றி நிச்சயம். இருக்குமா இல்லையா என்பதில்லை. இருக்கவே செய்கிறது. இதே போதையில் இருங்கள். வெற்றியாளராகவே இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். ஆக, அத்தகைய ஹோலி இல்லையா நீங்கள்! ஹோலியஸ்ட்டாகவோ இருக்கவே செய்கிறீர்கள். ஆக, ஞானத்தின் வண்ணத்தினுடைய ஹோலியை பாப்தாதாவுடன் விளையாடி விட்டீர்கள். இப்போது இன்னும் என்ன விளையாடுவீர்கள்?

பாப்தாதா பார்த்தார் - பெரும்பாலும் அனைவருக்கும் ஊக்கம்-உற்சாகம் மிக நன்றாக உள்ளது. இதைச் செய்வோம், அதைச் செய்வோம், இது ஆகி விடும். பாப்தாதாவும் மிகவும் குஷியடைகிறார். ஆனால் இந்த ஊக்கம்-உற்சாகம் சதா வெளிப்படையாக இருக்க வேண்டும். சில நேரம் உள்ளடங்கி விடுகின்றது. சில நேரம் வெளிப்பட்டு விடுகிறது. உள்ளடங்கி (மர்ஜ் ஆகி) இருக்கக் கூடாது. வெளிப்படையாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் முழு சங்கமயுகமே உங்கள் உற்சவம் தான். அவர்களோ எப்போதாவது தான் உற்சவம் கொண்டாடு கிறார்கள். ஏனென்றால் அதிக சமயம் டென்ˆனிலேயே இருக்கின்றனர் இல்லையா? அதனால் உற்சாகத்தில் ஆடுவோம், பாடுவோம், உண்போம். அப்போது மாற்றம் ஏற்பட்டு விடும். ஆனால் உங்களிடமோ ஒவ்வொரு விநாடியும் ஆடுவதும் பாடுவதும் இருக்கவே செய்கிறது. நீங்கள் சதா மனதுக்குள் குஷியில் நடனமாடிக் கொண்டே இருக்கிறீர்கள் இல்லையா? அல்லது அப்படி இல்லையா? நடனமாடுகிறீர்கள். குஷியில் நடனமாட வருகிறதா? நடனமாட வருகிறதா? யாருக்கு வருகிறதோ, அவர்கள் கை உயர்த்துங்கள். நடனமாட வருகிறது. நல்லது. வருகிறது என்றால் வாழ்த்துகள்! ஆக, சதா நடனமாடிக் கொண்டே இருக்கிறீர்களா, அல்லது எப்போதாவதா?

பாப்தாதா இந்த ஆண்டுக்கான வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். இரண்டு வார்த்தைகளை ஒரு போதும் யோசிக்கக் கூடாது - சம்டைம், சம்திங் (சில நேரம், சில விˆயங்கள்) அது என்ன? இப்போதும் சம்டைம் உள்ளதா? சம்டைம், சம்திங் முடிந்து போக வேண்டும். இந்த நடனமாடுவதில் களைப்படைவதற்கான விˆயமே கிடையாது. படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்தாலும் சரி, காரியம் செய்து கொண்டிருந்தாலும் சரி, நடந்து சென்று கொண்டிருந்தாலும் சரி, அமர்ந்திருந் தாலும் சரி, குஷியின் நடனமோ ஆட முடியும். மேலும் பாபாவின் பிராப்திகளின் பாடலையும் நீங்கள் பாட முடியும். பாடலும் கூட வருகிறது இல்லையா? இந்தப் பாடலைப் பாடவோ அனைவருக்கும் வருகிறது. வாயின் பாடலோ சிலருக்கு வரும், சிலருக்கு வராது. ஆனால் பாபாவின் பிராப்திகளின், பாபாவின் குணங்களின் பாடலோ அனைவருக்கும் வரும் இல்லையா? ஆக, ஒவ்வொரு நாளும் உற்சவம், ஒவ்வொரு சமயமும் உற்சவம். மற்றும் சதா நடனமாடுங்கள், பாடுங்கள் மற்றப்படி வேறு வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த இரண்டு வேலை தான் இல்லையா - ஆடுங்கள், பாடுங்கள். ஆக, எஞ்ஜாய் பண்ணுங்கள். ஆடுங்கள், பாடுங்கள், அவ்வளவு தான். நல்லது. ஹோலியோ கொண்டாடி விட்டீர்கள் இல்லையா? இப்போது வண்ணங்களின் ஹோலியும் கொண்டாடுவீர்களா? நல்லது. உங்களைத் தான் பக்தர்கள் காப்பி செய்வார்கள் இல்லையா? நீங்கள் பகவானோடு ஹோலி கொண்டாடுகிறீர்கள் என்றால் பக்தர்களும் தேவதை களாகிய உங்களில் யாருடனாவது விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்று அநேகக் குழந்தைகளின் ஈமெயில்களும் கூட வந்துள்ளன. என்னென்ன சாதனங்கள் உண்டோ அவற்றின் மூலமாக ஹோலியின் வாழ்த்துகளை அனுப்பியுள்ளனர். பாப்தாதாவிடமோ அனைவரும் சங்கல்பம் செய்கிறார்கள் இல்லையா, அப்போதே வந்து சேர்ந்து விடுகின்றது. ஆனால் நாலாபுறமும் உள்ள குழந்தைகள் விசேˆமாக நினைவு செய்கிறார்கள் மற்றும் செய்துள்ளார்கள். பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தைக்கும் பல கோடி மடங்கு ஆசிர்வாதங்கள் மற்றும் பல கோடி மடங்கு உள்ளத்தின் அன்பு நினைவுகள் பதிலுக்கு ஒவ்வொருவருக்கும் அவரது பெயர் சகிதம் விசேˆதா சகிதம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எப்போது சந்தேஷி செல்கிறார் இல்லையா, அப்போது ஒவ்வொருவரும் அவரவர் தரப்பின் நினைவுகளைக் கொடுக்கிறார்கள். யாரெல்லாம் கொடுக்கவும் இல்லையோ, பாப்தாதாவிடம் வந்து சேர்ந்துள்ளன. இது தான் பரமாத்மாவின் விசேˆதா. இந்த ஒவ்வொரு நாளும் எவ்வளவு அன்பானதாக உள்ளது! கிராமத்தில் இருந்தாலும் சரி, பெரிய-பெரிய நகரங்களில் இருந்தாலும் சரி, கிராமத்தவர்களுக்கும் நினைவு சாதனம் இல்லாதிருந்தாலும் பாபாவிடம் வந்து சேர்ந்துள்ளன. ஏனென்றால் பாபாவிடம் ஆன்மிக சாதனங்களோ அநேகம் உள்ளன இல்லையா? நல்லது.

இன்றைய உலகில் டாக்டர்கள் சொல்கின்றனர் - மருந்துகளை விடுங்கள், உடற்பயிற்சி (எக்ஸர்ஸைஸ்) செய்யுங்கள். ஆக, பாப்தாதாவும் சொல்கிறார் - யுத்தம் செய்வதை விட்டுவிடுங் கள். கடின உழைப்பை விட்டுவிடுங்கள். நாள் முழுவதிலும் 5-5 நிமிடம் மனதின் எக்ஸர்ஸைஸ் செய்யுங்கள். ஒரு நிமிடத்தில் நிராகாரி, ஒரு நிமிடத்தில் ஆகாரி, ஒரு நிமிடத்தில் அனைத்து விதமான சேவாதாரி - இந்த மனதின் 5 நிமிட எக்ஸர்ஸைஸ் நாள் முழுவதிலும் பல்வேறு நேரங்களில் செய்யுங்கள். அப்போது சதா ஆரோக்கியமாக இருப்பீர்கள். கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். முடியும் இல்லையா? மதுபன் காரர்கள், முடியுமா? மதுபன் தான் அஸ்திவாரம். மதுவனத்தின் வைப்ரேˆன் நாலாபுறமும் விரும்பாமலே கூட சென்று சேர்ந்து விடுகிறது. மதுபனில் ஏதேனும் விˆயம் ஆகி விடுகிறது இல்லையா, அப்போது பாரதம் முழுவ திலும், ஒவ்வோரிடத்திலும் அடுத்த நாள் சென்று சேர்ந்து விடுகிறது. மதுபனில் அந்த மாதிரி சாதனம் வைக்கப்பட்டுள்ளது - எந்த ஒரு விˆயமும் மறைவாக இருக்காது. நல்லதாக இருந்தாலும் புருˆôர்த்தத்தினுடையதாக இருந்தாலும் சரி. ஆக, மதுபன் என்ன செய்கிறதோ, அந்த வைப்ரேˆன் தானாகவே மற்றும் சகஜமாகவே பரவி விடும். முதலில் மதுபன் நிவாசிகள் வீண் எண்ணங்களை நிறுத்த வேண்டும். முடியுமா? முடியுமா? இங்கே முன்னால்-முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் இல்லையா? மதுபன் நிவாசிகள் கை உயர்த்துங்கள். ஆக, மதுபன் நிவாசிகள் தங்களுக்குள் ஏதேனும் அந்த மாதிரி பிளான் தயார் செய்யுங்கள் - வீணானவை முடிந்து போக வேண்டும். சங்கல்பம் செய்வதையே நிறுத்தி விடுங்கள் என்று பாப்தாதா சொல்லவில்லை. வீணான சங்கல்பங்கள் முடிந்து விட வேண்டும். அதனால் பயனோ கிடையாது. குழப்பம் தான். முடியுமா? மதுபன் நிவாசிகள் என்ன நினைக்கிறார்களோ, அவர்களுக்குள் மீட்டிங் நடத்தி, இதைச் செய்வோம் என்பவர்கள் கை உயர்த்துங்கள். செய்வோம், செய்ய வேண்டும் என்றால் நன்றாகக் கை உயர்த்துங் கள். இரண்டிரண்டு கைகளை உயர்த்துங்கள். வாழ்த்துகள். பாப்தாதா மனதார ஆசிர்வாதங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். வாழ்த்துகள் சொல்கிறார். மதுபன் வாசிகளிடம் தைரியம் உள்ளது. எதை விரும்புகிறார்களோ, அதைச் செய்ய முடியும். செய்விக்கவும் முடியும். மதுவனத்தின் சகோதரிகளும் உள்ளனர். சகோதரிகள் கை உயர்த்துங்கள். பெரிதாகக் கை உயர்த்துங்கள். மீட்டிங் நடத்த வேண்டும். தாதிகள் நீஙகள் மீட்டிங் நடத்தச் செய்ய வேண்டும். பாருங்கள், அனைவரும் கை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கைகளின் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும். நல்லது. பிரம்மா பாபா கடைசியில் என்ன வரதானம் கொடுத்தாரோ - நிராகாரி, நிர்விகாரி, நிரகங்காரி, இந்த பிரம்மா பாபாவின் கடைசி வரதானம் ஒரு மிகப்பெரிய பரிசாகக் குழந்தைகளிடம் இருந்து விட்டது. ஆக, இப்போதே ஒரு விநாடியில் பிரம்மா பாபாவின் பரிசை மனதால் ஸ்வீகாரம் செய்ய முடியுமா? திட சங்கல்பம் செய்ய முடியுமா - பாபாவின் பரிசை சதா நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் ஆதி தேவரின் பரிசு குறைந்ததில்லை. பிரம்மா கிரேட்-கிரேட் கிராண்ட் ஃபாதர். அவரது பரிசு குறைந்தது கிடையாது. ஆக, அவரவர் புருசார்த்தத்தின் பிரமாணம் சங்கல்பம் செய்யுங்கள் - இன்றைய நாள் ஹோலி, அதாவது எது முடிந்து விட்டதோ, ஹோ லீ, முடிந்து போனது. ஆனால் இப்போதிருந்து பரிசை அடிக்கடி வெளிப்படுத்தி பாபாவின் சேவைக்கான ரிட்டர்ன் கொடுப்போம். பாருங்கள், பிரம்மா பாபா கடைசி நாள், கடைசி நேரம் வரை சேவை செய்தார். இது பிரம்மா பாபாவுக்குக் குழந்தைகள் மீதிருந்த அன்பு, சேவை மீதிருந்த அன்பின் அடையாளம். ஆக, பிரம்மா பாபாவுக்குப் பிரதிபலன் கொடுப்பது என்றால் அடிக்கடி வாழ்க்கையில் கொடுக்கபபட்டுள்ள பரிசை ரிவைஸ் செய்து நடைமுறையில் கொண்டு வர வேண்டும். எனவே அனைவரும் தங்கள் மனதில் பிரம்மா பாபா விடம் அன்பின் ரிட்டனில் திட சங்கல்பம் செய்யுங்கள். இது தான் பிரம்மா பாபாவின் அன்பின் பரிசுக்கு ரிட்டனாகும் நல்லது

நாலாபுறம் உள்ள லக்கியஸ்ட், ஹோலியஸ்ட் குழந்தைகளுக்கு, சதா திட சங்கல்பத்தின் சாவியை நடைமுறையில் கொண்டு வரக்கூடிய தைரியமுள்ள குழந்தைகளுக்கு, சதா ஒவ்வொரு நாளும் உற்சாகத்தில் இருக்கக்கூடிய, ஒவ்வொரு நாளையும் உற்சவம் எனப் புரிந்து கொண்டாடக் கூடிய, சதா அதிர்ஷ்டசாலிக் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
அன்பு மற்றும் அன்பில் மூழ்கிய ஸ்திதியின் அனுபவத்தின் மூலம் அனைத்தையும் மறக்கக் கூடிய சதா ஆத்ம உணர்வுள்ளவர் ஆகுக.

கர்மத்தில், வார்த்தையில், தொடர்பில் மற்றும் சம்பந்தத்தில், அன்பு மற்றும் ஸ்மிருதியில், ஸ்திதியில் மூழ்கி இருப்பீர்களானால் அனைத்தையும் மறந்து ஆத்ம உணர்வுள்ளவர் ஆகி விடுவீர்கள். அன்பு தான் பாபாவின் சமீப-சம்பந்தத்தில் கொண்டு வரும். சர்வஸ்வ தியாகி ஆக்கி விடும். இந்த அன்பின் விசேˆத் தன்மையினால் அல்லது லவ்லீன் ஸ்திதியில் இருப்பதன் மூலம் தான் சர்வ ஆத்மாக்களின் பாக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தை எழுப்ப முடியும். இந்த அன்பு தான் லக்கின் லாக்கிற்கான (அதிர்ஷ்டத்தின் பூட்டு) சாவியாகும். இதன் மூலம் எத்தகைய துர்பாக்கிய சாலி ஆத்மாவையும் பாக்கியசாலி ஆக்க முடியும்.

சுலோகன்:
சுய மாற்றத்தின் நேரத்தை நிச்சயம் செய்வீர்களானால் உலக மாற்றம் தானாகவே ஆகி விடும்.


அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும் மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.

மனம் சக்தியின் கண்ணாடி - பேச்சு மற்றும் கர்மம். அஞ்ஞானி ஆத்மாக்களாயினும் சரி, ஞானி ஆத்மாக்களாயினும் சரி, இருவரின் சம்பந்தம்-தொடர்பில் பேச்சு மற்றும் கர்மம் சுப-பாவனை, சுப-விருப்பம் உள்ளவர்கள் நீங்கள். யாருடைய மனம் சக்திசாலியாக, சுபமானதாக இருக்குமோ, அவருடைய பேச்சு மற்றும் கர்மம் தானாகவே சக்திசாலியாக, சுத்தமானதாக இருக்கும். சுப-பாவனையுடன் கூடியதாக இருக்கும். மனம் சக்திசாலி என்றால் நினைவின் சக்தி சிரேஷ்டமானதாக இருக்கும். சக்திசாலியாக இருக்கும், சகஜயோகியாக இருப்பார்கள்.