05-11-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த முழு உலகமே
நோயாளிகளின் பெரிய மருத்துவ மனையாகும். பாபா முழு உலகத்தை
நோயற்ற உலகமாக்குவதற்காக வந்துள்ளார்.
கேள்வி:
எந்த ஒரு நினைவு இருந்தது என்றால்
ஒரு பொழுதும் மனச் சோர்வு (வாடி விடுதல்) அல்லது துக்கத்தின்
அலை வர முடியாது?
பதில்:
இப்பொழுது நாம் இந்த பழைய உலகம்
மற்றும் பழைய சரீரத்தை விடுத்து வீட்டிற்குச் செல்வோம். பிறகு
புதிய உலகத்தில் மறு பிறவி எடுப்போம். நாம் இப்பொழுது இராஜயோகம்
கற்றுக் கொண்டு இருக்கிறோம்- இராஜ்யத்திற்குச் செல்வதற்காக
தந்தை, குழந்தைகளாகிய நமக்காக ஆன்மீக இராஜஸ்தானத்தை ஸ்தாபனை
செய்துக் கொண்டிருக்கிறார். இதுவே நினைவில் இருந்தது என்றால்,
துக்கத்தின் அலைகள் வர முடியாது.
பாடல்:
தாயும் நீயே....
ஓம் சாந்தி.
இந்த பாடல் ஒன்றும் குழந்தைகளாகிய உங்களுக்காக இல்லை.
புதியவர்களுக்குப் புரிய வைப்பதற்காக உள்ளது. இங்கு எல்லோருமே
அறிவாளிகள் தான் என்பதும் இல்லை. அறிவிலிகளை அறிவாளியாக
ஆக்கப்படுகிறது. நாம் எவ்வளவு அறிவற்றவர்களாக ஆகி இருந்தோம்
என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். இப்பொழுது தந்தை நம்மை
அறிவாளியாக ஆக்குகிறார். எப்படி பள்ளிக்கூடத்தில் படித்து
குழந்தைகள் எவ்வளவு அறிவாளிகளாக ஆகி விடு கிறார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் அறிவினால் வழக்கறிஞர், என்ஜினியராகிறார்கள்.
இங்கேயோ ஆத்மாவை அறிவாளியாக ஆக்க வேண்டியுள்ளது. படிப்பது கூட
ஆத்மா தான். சரீரத்தின் மூலமாக படிக்கிறது. ஆனால் வெளியில்
கிடைக்கும் அனைத்து கல்விகளும் குறுகிய காலத்திற்கு சரீர
நிர்வாகத்தின் பொருட்டாகும். ஒரு சிலர் மத மாற்றம் கூட
செய்கிறார்கள். இந்துக்களை கிறிஸ்தவர்களாக ஆக்கி விடுகிறார்கள்
என்றாலும் கூட எதற்காக? சிறிதளவு சுகத்தைப் பெறுவதற்காக. பணம்,
தொழில் வசதிகள் சுலபமாக கிடைப்பதற்காக மற்றும் வாழ்க்கைத்
தேவைக்காக. நாம் முதன் முதலிலோ ஆத்ம உணர்வுடையவராக வேண்டும்
என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது
தான் முக்கியமான விஷய மாகும். ஏனெனில், இது இருப்பதே
நோயாளிகளின் உலகமாக. நோயாளியாக ஆகாத எந்த ஒரு மனிதனும் இருக்க
முடியாது. ஏதாவது ஒரு வியாதி கட்டாயம் வந்துக்
கொண்டுதானிருக்கும். இந்த முழு உலகமே மிகப் பெரிய ஆஸ்பத்திரி
ஆகும். இதில் மனிதர்களும் (பதிதமாக) தூய்மை யற்றவர்களாக நோயாளி
களாக இருக்கிறார்கள். ஆயுள் கூட மிகவும் குறைவாக இருக்கிறது.
திடீரென்று மரணத்தை அடைந்து விடுகிறார்கள். காலனின் பிடியில்
வந்து விடுகிறார்கள். இதுவும் குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்திற்கு
மட்டுமல்ல முழு உலகத்திற்கும் மறைமுகமான வழியில் சேவை
செய்கிறீர்கள். முக்கியமான விஷயமாவது தந்தையை யாரும் அறியாமல்
உள்ளார்கள். மனிதர்களாக இருந்தும் கூட பரலோகத் தந்தையை அறியாமல்
உள்ளார்கள். அவரிடம் அன்பு கொள்ளாமல் இருக்கிறார்கள். இப்பொழுது
என்னிடம் அன்பு கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகிறார். என்னிடம்
அன்பு வைத்து வைத்து நீங்கள் என்னுடனேயே திரும்பிச் செல்ல
வேண்டும். திரும்பிச் செல்லாத வரை இந்த சீ சீ உலகத்தில் இருக்க
வேண்டியுள்ளது முக்கியமாக (தேக உணர்வுடையவர்) தேக அபிமானி
யிலிருந்து தேஹீ அபிமானியாக (ஆத்ம உணர்வுடையவர்) ஆகாதவரை
எதற்கும் பயனில்லை. தேக அபிமானி யாகவோ எல்லோரும் இருக்கிறார்கள்.
நாம் ஆத்ம அபிமானி ஆவதில்லை. தந்தையை நினைவு செய்வது இல்லை
என்றால், நாம் முதலில் எப்படி இருந்தோமோ அப்படியே இருப்போம்
என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். முக்கியமான விஷயமே தேஹீ
அபிமானி ஆவதற்காகவேயொழிய படைப்பை அறிந்து கொள்வது பற்றி அல்ல.
படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றிய ஞானம் என்றும்
பாடப்படுகிறது. அப்படியின்றி முதலில் படைப்பு பிறகு படைப்பவர்
பற்றிய ஞானம் என்று கூற மாட்டார்கள். இல்லை. முதலில்
படைப்புக்கர்த்தா. அவரே தந்தை ஆவார். ஹே காட்ஃபாதர் ! என்று
கூறப்படுகிறது. அவர் வந்து குழந்தைகளாகிய உங்களை தனக்குச்
சமமாக ஆக்குகிறார். தந்தையோ எப்பொழுதுமே ஆத்ம அபிமானியாக
இருக்கவே இருக்கிறார். எனவே அவர் சுப்ரீம் (உயர்ந்தவர்) ஆவார்.
நானோ ஆத்ம அபிமானி ஆவேன் என்று தந்தை கூறுகிறார். யாருக்குள்
பிரவேசம் செய்துள்ளேனோ அவரையும் ஆத்ம அபிமானியாக ஆக்குகிறேன்.
அவரை மாற்று வதற்காக அவருக்குள் பிரவேசம் செய்கிறேன். ஏனென்றால்,
இவரும் (பிரம்மா) தேக அபிமானியாக இருந்தார். தந்னை ஆத்மா என்று
உணர்ந்து என்னை சரியான முறையில் நினைவு செய்யுங்கள் என்று
இவருக்கும் கூறுகிறேன். ஆத்மா தனியானது. உடல் தனியானது என்று
புரிந்திருக்கும் மனிதர்களோ நிறைய பேர் இருக்கிறார்கள். ஆத்மா
உடலிலிருந்து வெளியேறி விடும் பொழுது இரண்டாக ஆகிவிடுகிறது
அல்லவா? நீங்கள் ஆத்மா ஆவீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார்.
ஆத்மா தான் மறு பிறவி எடுக்கிறது. ஆத்மா தான் சரீரம் எடுத்து
பாகத்தை நடிக்கிறது. தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று பாபா
பல முறை புரிய வைக்கிறார். இதில் மிகுந்த உழைப்பு வேண்டும்.
எப்படி மாணவர்கள் படிப்பதற்காக தனிமையில், தோட்டம் ஆகிய இடங்
களுக்குச் சென்று படிக்கிறார்கள். பாதிரிமார்கள் கூட உலாவச்
செல்கிறார்கள் என்றால், முற்றிலும் அமைதி யாக இருப்பார்கள்.
அவர்கள் ஒன்றும் ஆத்ம அபிமானியாக இருப்பதில்லை. கிறிஸ்துவின்
நினைவில் இருப்பார்கள். வீட்டில் இருந்தபடியே கூட நினைவு செய்ய
முடியும் தான். ஆனால் குறிப்பாக கிறிஸ்துவை நினைவு செய்வதற்காக
தனிமையில் செல்கிறார்கள். வேறு எந்த பக்கமும் கூட பார்ப்பதில்லை.
யார் மிக நல்லவர்களாக இருப்பார்களோ அவர்கள் நாங்கள் கிறிஸ்துவை
நினைவு செய்து செய்து அவரிடம் போய் சென்று விடுவோம் என்று
நினைக்கிறார்கள். கிறிஸ்து சொர்க்கத்தில் அமர்ந்துள்ளார்.
நாங்கள் கூட சொர்க்கத்திற்குச் சென்று விடுவோம். கிறிஸ்து
ஹெவென்லி காட்ஃபாதரிடம் சென்றார் என்று கூட நினைக்கிறார்கள்.
நாங்களும் நினைவு செய்து செய்து அவரிடம் சென்று விடுவோம். எல்லா
கிறிஸ்துவர்களும் அந்த ஒருவரின் குழந்தைகள் ஆகிறார்கள்.
அவர்களிடம் சிறிது ஞானம் சரியாக உள்ளது. ஆனால் இவ்வாறு அவர்கள்
புரிந்திருப்பது கூட தவறு என்று நீங்கள் கூறுவீர்கள். ஏனெனில்
கிறிஸ்துவின் ஆத்மாவோ மேலே போகவே இல்லை. கிறிஸ்து என்ற பெயரோ
சரீரத்தினுடையது. அவரை சிலுவையில் அறைந்தார் கள். ஆத்மாவோ
சிலுவையில் அறையப்படுவதில்லை. இப்பொழுது கிறிஸ்துவின் ஆத்மா
காட் ஃபாதரிடம் சென்று விட்டது என்று கூறுவது கூட தவறாகி
விடுகிறது. யாருமே எப்படி திரும்பிச் செல்வார்கள்?
ஒவ்வொருவருக்கும் ஸ்தாபனை பிறகு பாலனை அவசியம் செய்ய வேண்டி
உள்ளது. கட்டிடத்திற்கு சுண்ணாம்பு அடிக்கிறார்கள். இது கூட
பாலனை ஆகும் அல்லவா?
இப்பொழுது எல்லையில்லாத தந்தையை நீங்கள் நினைவு செய்யுங்கள்.
இந்த ஞானத்தை எல்லையில்லாத தந்தையைத் தவிர வேறு யாரும் கொடுக்க
முடியாது. தனக்கே நன்மை செய்ய வேண்டும். நோயாளியிலிருந்து
நோயற்றவராக ஆக வேண்டும். இது நோயாளிகளின் பெரிய ஆஸ்பத்திரி
ஆகும். முழு உலகம் நோயாளிகளின் மருத்துவமனை ஆகும். நோயாளிகள்
அவசியம் சீக்கிரம் இறந்து போய் விடுவார்கள். தந்தை வந்து இந்த
முழு உலகத்தை நோயற்றதாக ஆக்குகிறார். அப்படியின்றி இங்கேயே
நோயற்றவராக ஆகி விடுவீர்கள் என்பதல்ல. நோயற்றவர் களாக இருப்பதே
புதிய உலகத்தில் என்று தந்தை கூறுகிறார். பழைய உலகத்தில்
நோயற்ற வர்களாக இருக்க முடியாது. இந்த லட்சுமி நாராயணர்
நோயற்றவர்களாக எவர் ஹெல்தியாக (என்றும் ஆரோக்கியமாக)
இருப்பார்கள். அங்கு ஆயுள் கூட நீண்டதாக இருக்கும். நோயாளிகள்
விகாரியாக இருப்பார்கள். நிர்விகாரி நோயாளியாக இருக்க
மாட்டார்கள். அவர்கள் இருப்பதே சம்பூர்ண நிர்விகாரியாக.
இச்சமயம் முழு உலகம், குறிப்பாக பாரதம் நோயாளியாக உள்ளது என்று
சுயம் தந்தை கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் முதலில் நோயற்ற
உலகத்தில் வருகிறீர்கள். நோயற்றவராக ஆவதே நினைவு யாத்திரை
மூலமாக. நினைவின் மூலமாக நீங்கள் உங்களது இனிமையான
இல்லத்திற்குச் (ஸ்வீட் ஹோம்) சென்று விடுவீர்கள். இதுவும் ஒரு
யாத்திரை ஆகும். தந்தை பரமாத்மாவிடம் செல்வதற்கான ஆத்மாவின்
யாத்திரை ஆகும். இது ஸ்பிரிச்சுவல் (ஆன்மீக) யாத்திரை ஆகும்.
இந்த வார்த்தையை யாருமே புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் கூட
வரிசைக்கிரமமாகப் புரிந்துள்ளீர்கள். ஆனால் மறந்து
விடுகிறீர்கள். முக்கியமான விஷயமே இது தான். புரிய வைப்பதும்
மிகவும் சுலபம் ஆகும். ஆனால் சுயம் யார் தாங்களும் ஆன்மீக
யாத்திரை யில் இருக்கிறார்களோ அவர்கள் தான் புரிய வைக்க
முடியும். சுயம் யாத்திரையில் இல்லை மற்றவர்களுக்குக்
கூறுகிறார் என்றால், அம்பு போல உள்ளத்தில் தைக்காது. சத்தியம்
என்ற கூர்மை வேண்டும். நாம் பாபாவை அந்த அளவு நினைவு செய்கிறோம்,
அவ்வளவு தான் ! மனைவி கணவனை எவ்வளவு நினைவு செய்கிறார். இவரோ
கணவர்களுக்கெல்லாம் கணவன், தந்தை களுக்கெல்லாம் தந்தை,
குருக்களுக்கெல்லாம் குரு ஆவார். குருமார்கள் கூட அந்த
தந்தையைத் தான் நினைவு செய்கிறார்கள். கிறிஸ்து கூட தந்தையைத்
தான் நினைவு செய்து கொண்டிருந்தார். ஆனால் அவரை யாரும் அறியாமல்
இருக்கிறார்கள். தந்தை வரும்பொழுது தான் வந்து தனது அறிமுகத்தை
அளிக்கிறார். பாரதவாசிகளுக்கே தந்தையைப் பற்றிய அறிமுகம் இல்லை
என்றால், மற்றவர்களுக்கு எங்கிருந்து கிடைக்க முடியும்.
வெளிநாடுகளிலிருந்து கூட யோகத்தைக் கற்றுக் கொள்வதற்காக இங்கே
வருகிறார்கள். பழைமையான யோகத்தை பகவான் கற்பித்தார் என்று
நினைக்கிறார்கள். இது பாவனை ஆகும். உண்மையிலும் உண்மையான
யோகத்தை நான் தான் கல்ப கல்பமாக ஒரே ஒரு முறை வந்து
கற்பிக்கிறேன் என்று தந்தை புரிய வைக்கிறார். முக்கிய மான
விஷயம் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள்.
இதற்குத் தான் ஆன்மீக யோகம் என்று கூறப்படுகிறது. பிற அனைத்தும்
ஸ்தூல யோகமாகும். பிரம்மத் துடன் யோகம் கொள்கிறார்கள். அது
தந்தை அல்லவே ! அதுவோ மகதத்துவம் வசிப்பதற் கான இடமாகும். எனவே
சத்திய மானவர் ஒரே ஒரு தந்தை ஆவார். ஒரு தந்தையைத் தான்
சத்தியம் என்று கூறப்படுகிறது. தந்தை தான் எப்படி சத்தியமானவர்
என்பது கூட பாரதவாசிகளுக்குத் தெரியாது. அவரே உண்மையான கண்டத்தை
ஸ்தாபனை செய்கிறார். உண்மையான கண்டம் மற்றும் பொய்யான கண்டம்.
நீங்கள் உண்மையான கண்டத்தில் இருக்கும் பொழுது அங்கு இராவண
இராஜ்யமே இருக்காது. அரைக்கல்பத்திற்குப் பின்னால் இராவண
இராஜ்யம் பொய்யான கண்டம் ஆரம்பமாகிறது. உண்மையான கண்டம் என்று
முழுமையான சத்யுகத்தைத்தான் கூறுவார்கள். பிறகு முழுமையான
கலியுக கடைசி வரையும் பொய்யான கண்டமாகும். இப்பொழுது நீங்கள்
சங்கமத்தில் அமர்ந்துள்ளீர்கள். இங்கும் இல்லை. அங்கும் இல்லை.
நீங்கள் யாத்திரையில் (டிராவல்) சென்று கொண்டிருக்கிறீர்கள்.
ஆத்மா பிரயாணம் செய்து கொண்டிருக் கிறது. சரீரம் அல்ல. தந்தை
வந்து யாத்திரை செய்ய கற்பிக்கிறார். இங்கிருந்து அங்கே செல்ல
வேண்டும். உங்களுக்கு இதை கற்பிக்கிறார். அவர்கள் பின் சந்திரன்
நட்சத்திரங்கள் ஆகியவற்றின் பக்கம் செல்வதற்காக பிரயாணம்
செய்கிறார்கள். அதில் எந்த நன்மையும் இல்லை என்பதை இப்பொழுது
நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த பொருட்களால் தான் முழு விநாசம்
ஆகிறது மற்றபடி செய்யும் இவ்வளவு உழைப்பு அனைத்துமே வீணாகும்.
அறிவியலின் மூலமாக அமைக் கப்படும் இந்த எல்லா பொருட் களும்
வருங்காலத்தில் உங்களுக்குத் தான் உதவப்போகிறது என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது.
எல்லையில்லாத தந்தை வந்து கற்பிக்கிறார். எனவே எவ்வளவு மதிப்பு
வைக்க வேண்டும். அந்த அளவிற்கு ஆசிரியர்கள் மீது மிகுந்த
மதிப்பு வைப்பார்கள். நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெற்று
விடுங்கள் என்று ஆசிரியர் கட்டளையிடுவார். கட்டளைப்படி
நடக்கவில்லை என்றால் தோல்வி அடைந்து விடுவீர்கள். உலகத்திற்கு
அதிபதியாக ஆக்குவதற்கு உங்களுக்கு கற்பிக் கிறார் என்று
தந்தையும் கூறுகிறார். இந்த லட்சுமி நாராயணர் அதிபதி ஆவார்கள்.
பிரஜைகள் கூட அதிபதி தான். ஆனால் பதவிகளோ நிறைய இருக்கிறது
அல்லவா? பாரதவாசிகள் கூட எல்லோருமே நாங்கள் எஜமானர் ஆவோம் என்று
கூறுகிறார்கள் அல்லவா? ஏழைகள் கூட தங்களை பாரதத்தின் அதிபதி
என்று நினைப் பார்கள். ஆனால் ராஜா மற்றும் அவர்களுக்கிடையே
எவ்வளவு வித்தியாசம் உள்ளது. ஞானத் தினால் பதவியில் வித்தியாசம்
ஏற்பட்டு விடுகிறது. ஞானத்தில் கூட புத்திசாலித்தனம் வேண்டும்.
தூய்மை கூட அவசியம். பின் (ஹெல்த் வெல்த்) ஆரோக்கியம், செல்வம்
கூட வேண்டும். சொர்க்கத்தில் எல்லாமே இருக்கும் அல்லவா? தந்தை
லட்சியம்-நோக்கத்தைப் புரிய வைக்கிறார். உலகத்தில் வேறு
யாருடைய புத்தியிலும் இந்த லட்சியம் நோக்கம் இருக்காது. நாங்கள்
இது போல ஆகிறோம் என்று நீங்கள் சட்டென்று கூறுவீர்கள். முழு
உலகத்தில் நமது ராஜாங்கம் இருக்கும். இதுவோ இப்பொழுது குடியரசு
ராஜ்யம் ஆகும். முதலில் இரட்டை கிரீடம் அணிந்த வர்களாக
இருந்தார்கள். பிறகு ஒற்றை கிரீடம். இப்பொழுது கிரீடமே இல்லை.
பாபா முரளியில் கூறி இருந்தார் - இந்த படம் கூட இருக்க வேண்டும்.
இரட்டை கிரீடம் அணிந்த ராஜாக்களுக்கு முன்னால் ஒற்றை கிரீடம்
அணிந்தவர்கள் தலை வணங்குகிறார்கள். நான் உங்களை ராஜாக்
களுக்கெல்லாம் ராஜாவாக இரட்டை கிரீடம் அணிந்தவர்களாக ஆக்கு
கிறேன் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். அது குறுகிய
காலத்திற்கானது. இது 21 பிறவிகளின் விஷயம் ஆகும். தூய்மையாவது
தான் முக்கியமான விஷயமாகும். வந்து பதீத நிலையிலிருந்து
பாவனமாக ஆக்குங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள்.
அப்படியின்றி ராஜாவாக ஆக்குங்கள் என்று கூறுவதில்லை. இப்பொழுது
குழந்தைகளாகிய உங்களுடையது எல்லையில்லாத சந்நியாசமாகும். இந்த
உலகத்திலிருந்தே நாம் நமது வீட்டிற்குச் சென்று விடுவோம். பிறகு
சொர்க்கத்தில் வருவோம். நாம் வீட்டிற்குச் செல்வோம். பிறகு
ராஜ்யத்தில் வருவோம் என்று புரிந்திருக்கும் பொழுது உள்ளுக்குள்
குஷி இருக்க வேண்டும். பிறகு மனசோர்வு துக்கம் போன்ற இவை
அனைத்தும் ஏன் ஆக வேண்டும். ஆத்மாவாகிய நான் வீட்டிற்குச்
செல்வேன். பிறகு மறுபிறவி புது உலகத்தில் எடுப்பேன்.
குழந்தைகளுக்கு நிலையான குஷி ஏன் இருப்பதில்லை? மாயையின்
எதிர்ப்பு நிறைய உள்ளது. எனவே குஷி குறைந்து போய் விடுகிறது.
சுயம் பதீத பாவனர் கூறுகிறார் - என்னை நினைவு செய்தீர்கள்
என்றால் உங்களுடைய ஜன்ம ஜன்மாந்திரத்தின் பாவங்கள் சாம்பலாகிப்
போய் விடும். நீங்கள் சுயதரிசன சக்கரதாரியாக ஆகிறீர்கள். நாம்
மீண்டும் நம்முடைய ராஜஸ்தானத்திற்குச் சென்று விடுவோம் என்பதை
அறிந்துள்ளீர்கள். இங்கு பல்வேறு விதமான ராஜாக்கள்
இருந்திருக்கிறார்கள். இப்பொழுது மீண்டும் ஆன்மீக ராஜஸ்தானம்
ஆக வேண்டி உள்ளது. சொர்க்கத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள்.
கிறிஸ்துவர்கள் சொர்க்கத்தின் பொருளை புரியாமல் உள்ளார்கள்.
அவர்கள் முக்தி தாமத்தை ஹெவென் என்று கூறி விடுகிறார்கள்.
ஹெவென்லி காட்ஃபாதர் ஒன்றும் சொர்க்கத்தில் இருக்கிறார்
என்பதல்ல. அவரோ இருப்பதே சாந்தி தாமத்தில். இப்பொழுது நீங்கள்
பேரடைஸ் (சொர்க்கம்) செல்வதற்கான முயற்சி செய்கிறீர்கள். இந்த
வித்தியாசத்தைக் கூற வேண்டும். காட்ஃபாதர் முக்திதாமத்தில்
இருப்பவர் ஆவார். ஹெவென் என்று புது உலகத்திற்கு கூறப்படுகிறது.
அங்கோ கிறிஸ்தவர்கள் இருக்க மாட்டார்கள். தந்தை தான் வந்து
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். நீங்கள் எதை சாந்திதாமம் என்று
கூறுகிறீர்களோ அதை அவர்கள் ஹெவென் என்று நினைக்கிறார்கள். இவை
எல்லாமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
ானமோ மிகவும் சுலபமானது என்று தந்தை கூறுகிறார். இது தூய்மையாக
ஆவதற்கான ஞானம், முக்தி, ஜீவன் முக்தியில் செல்வதற்கான ஞானம்.
இதை தந்தை தான் அளிக்க முடியும். ஒருவரை தூக்கிலிடும் பொழுது
உள்ளுக்குள் நான் பகவானிடம் செல்கிறேன் என்ற உணர்வே இருக்கும்.
தூக்கு தண்டனை கொடுப் பவரும் கடவுளை நினைவு செய்யுங்கள்
என்பார்கள். கடவுள் பற்றி இருவருக்குமே தெரியாது. அவருக்கோ
அந்த நேரத்தில் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர் நினைவிற்கு
வருவார்கள். கடைசி நேரத்தில் மனைவியை நினைத்தார்.. என்ற பாடலும்
உள்ளது. யாரவது ஒருவரின் நினைவு அவசியம் இருக்கும்.
சத்யுகத்தில் தான் மோகத்தை வென்றவர்களாக இருப்பார்கள். அங்கு
ஒரு உடலை விட்டு மற்றொன்றை எடுப்போம் என்பதை அறிந்திருப்பார்கள்.
அங்கு நினைவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. எனவே
துக்கத்தில் அனைவரும் நினைவு செய்வார்கள் என்று கூறுகிறார்கள்.
இங்கு துக்கம் இருக்கிறது. எனவே பகவானிட மிருந்து ஏதாவது
கிடைக்க வேண்டும் என்று நினைவு செய்கிறார்கள். அங்கோ எல்லாமே
கிடைத் ததாகவே இருக்கும். நமது உத்தேசமாவது மனிதனை ஆஸ்திகனாக
ஆக்குவது. தலைவனு டையவராக ஆக்குவது என்பதை நீங்கள் கூறலாம்.
இப்பொழுது எல்லோருமே அநாதைகளாக இருக்கிறார்கள். நாங்கள்
தலைவனுக்கு சொந்தமானவராக ஆகிறோம். சுகம், அமைதி, செல்வத் தின்
ஆஸ்தி அளிப்பவர் தந்தையே ஆவார். இந்த லட்சுமி நாராயணருக்கு
எவ்வளவு நீண்ட ஆயுள் இருந்தது. முதன் முதலில் பாரதவாசிகளின்
ஆயுள் மிகவுமே நீண்டதாக இருந்தது என்பதையும் அறிந்துள்ளீர்கள்.
இப்பொழுது குறுகியதாக ஆகி உள்ளது. ஏன் குறுகியதாக ஆகியது என்பது
யாருக்குமே தெரியாது. உங்களைப் பொருத்த வரை புரிந்து கொள்வது
மற்றும் புரிய வைப்பது மிகவும் சுலபமாக ஆகி விட்டுள்ளது. அது
கூட வரிசைக்கிரமமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவருக்கு
ஏற்றபடி புரிய வைக்கிறார்கள். யார் எப்படி தாரணை செய்கிறார் களோ
அவ்வாறே புரிய வைக்கிறார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எப்படி தந்தை எப்பொழுதும் ஆத்ம அபிமானியாக இருக்கிறாரோ
அவ்வாறே ஆத்ம அபிமானியாக இருப்பதற்கான முழுமையான முயற்சி செய்ய
வேண்டும். ஒரு தந்தையை மனதார அன்பு செய்தபடியே தந்தையுடன் கூட
வீடு செல்ல வேண்டும்.
2. எல்லையில்லாத தந்தை மீது முழுமையாக மதிப்பு வைக்க வேண்டும்.
அதாவது தந்தையின் கட்டளைப்படி நடக்க வேண்டும். தந்தையின்
முதலாவது கட்டளை - குழந்தைகளே ! நல்ல முறையில் படித்து தேர்ச்சி
அடைந்து விடுங்கள் என்பதாகும். இந்த கட்டளையை ஏற்று நடக்க
வேண்டும்.
வரதானம்:
சக்திசாலி சேவை மூலம் பலமற்றவருக்குள் பலத்தை நிரப்பக் கூடிய
உண்மையான சேவாதாரி ஆகுக.
உண்மையான சேவாதாரியின் வாஸ்தவமான விசேஷத் தன்மை -
பலமற்றவருக்குள் பலத்தை நிரப்புவதற்கு நிமித்தமாவதாகும். சேவையோ
அனைவரும் செய்கின்றனர். ஆனால் வெற்றியில் வித்தியாசம்
காணப்படுகிறது என்றால் அதற்கான காரணம் - சேவையின் சாதனங்களில்
சக்தி குறைவாக இருப்பதாகும். எப்படி வாளில் கூர்மை இல்லை
என்றால் அந்த வாள் பயனற்றுப் போகும். அது போல் சேவையின
சாதனங்களில் நினைவின் கூர்மை இல்லை என்றால் வெற்றி இல்லை. எனவே
சக்திசாலி சோவாதாரி ஆகுங்கள். பலமற்றவருக்குள் பலத்தை நிரப்பி,
தகுதி யுள்ள ஆத்மாக்களை வெளிக்கொண்டு வாருங்கள். அப்போது
உண்மையான சேவாதாரி எனச் சொல்வார்கள்.
சுலோகன்:
ஒவ்வொரு பரிஸ்திதியையும் பறக்கும் கலைக்கான சாதனம் எனப்
புரிந்து கொண்டு சதா பறந்து கொண்டே இருங்கள்.
அவ்யக்த சமிக்ஞை - அசரீரி அல்லது விதேகி ஸ்திதியின் பயிற்சியை
அதிகப்படுத்துங்கள்
அசரீரி ஆவது சுலபம் தான். ஆனால் ஏதேனும் பிரச்சினை முன்னால்
வரும் போது, ஏதேனும் குழப்பத்தில் கொண்டு வரக்கூடிய
பரிஸ்திதிகள் இருக்கும் போது நினைத்ததும் அசரீரி ஆகிவிட
வேண்டும். இதற்காக நீண்ட கால அப்பியாசம் தேவை. யோசிப்பதும்
செய்வதும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும். அப்போது கடைசிப்
பேப்பரில் பாஸாக முடியும்.