06-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பிரம்மா பாபா,
சிவபாபாவின் ரதம் ஆவார். இருவருடைய நடிப்பின் பாகம்
சேர்ந்தாற்போல் நடைபெறுகின்றது. இதில் ஒரு சிறிதும் சந்தேகம்
என்பதே வரக் கூடாது.
கேள்வி:
மனிதர்கள் துக்கங்களில் இருந்து
விடுபடுவதற்கு எந்த மாதிரி யுக்தியை உருவாக்கு கின்றனர், அது
மகாபாவம் எனச் சொல்லப் படுகின்றது?
பதில்:
மனிதர்கள் துக்கப்படும் போது
தன்னை மாய்த்துக் கொள்வதற்கான அநேக உபாயங்களை உருவாக்குகின்றனர்.
தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றனர். இதனால் நாம் துக்கங்களில்
இருந்து விடுபட்டு விடுவோம் என நினைக்கின்றனர். ஆனால் இதைப்
போன்ற மகாபாவம் வேறெதுவும் கிடையாது. அவர்கள் மேலும்
துக்கங்களில் சிக்கிக் கொள்கின்றனர். ஏனென்றால் இதுவே அளவற்ற
துக்கங்களின் உலகம்.
ஓம் சாந்தி.
குழந்தைகளிடம் பாபா கேட்கிறார், ஆத்மாக்களிடம் பரமாத்மா
கேட்கிறார் - நாம் பரமபிதா பரமாத்மாவுக்கு முன்பாக
அமர்ந்துள்ளோம் என்பதை அறிவீர்கள் தானே.. அவருக்குத் தம்முடைய
ரதமோ (சரீரம்) கிடையாது. இதுவோ நிச்சயம் இல்லையா-இந்தப் புருவ
மத்தியில் தந்தையின் நிவாசஸ்தானம் (வசிப்பிடம்) உள்ளது. பாபா
தாமே சொல்கிறார், நான் இவருடைய (பிரம்மா) புருவமத்தியில்
அமர்கின்றேன். இவருடைய சரீரத்தைக் கடனாகப் பெற்றுக் கொள் கிறேன்.
ஆத்மா புருவமத்தியில் உள்ளது என்றால் பாபாவும் அங்கே தான்
அமர்கின்றார். பிரம்மா இருக்கிறார் என்றால் சிவபாபாவும்
இருக்கிறார். பிரம்மா இல்லை என்றால் சிவபாபா எப்படிப் பேசுவார்?
மேலே (இருப்பதாக) சிவபாபாவையோ நினைவு செய்தே வந்துள்ளோம்.
இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும், நாம் பாபாவுடன்
இங்கே அமர்ந்துள்ளோம். சிவபாபா மேலே இருக்கிறார் என்பதல்ல.
அவருடைய உருவம் இங்கே பூஜிக்கப் படுகின்றது. இவ்விஷயங் கள்
மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டியவையாகும். நீங்களோ அறிவீர்கள்,
பாபா ஞானக்கடலாக இருக்கிறார். ஞானத்தை எங்கிருந்து சொல்கிறார்?
மேலிருந்து சொல்கிறாரா என்ன? இங்கே கீழே வந்துள்ளார்.
பிரம்மாவின் உடல் மூலமாகச் சொல்கிறார். சிலர் சொல்கின்றனர்,
இந்த பிரம்மாவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று. ஆனால்
சிவபாபா தாமே சொல்கிறார், பிரம்மாவின் உடல் மூலமாக என்னை நினைவு
செய்யுங்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இல்லையா? ஆனால்
மாயா மிகவும் சக்தி வாய்ந்தது. முற்றிலும் முகத்தைத் திருப்பிப்
பின்னால் வைத்து விடும். இப்போது உங்கள் தலையை சிவபாபா முன்னால்
பார்க்கும்படி வைத்துள்ளார். எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள்.
பிறகு பிரம்மாவோ ஒன்றுமில்லை என்று யாராவது நினைப்பார் களானால்
அவர்களது கதி என்னவாகும்? துர்கதியை அடைவார்கள். கொஞ்சமும்
ஞானம் என்பதே இல்லை. ஓ காட் ஃபாதர் என்று மனிதர்கள் அழைக்கவும்
செய்கின்றனர். பிறகு அந்த காட் ஃபாதர் கேட்கிறாரா என்ன?
லிபரேட்டர் (துக்கத்திலிருந்து விடுவிப்பவரே) வாருங்கள் என அவரை
அழைக் கின்றனர் இல்லையா? அல்லது அங்கே அமர்ந்தவாறே விடுவிப்பாரா
என்ன? கல்ப-கல்பமாக புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் பாபா
வருகிறார். யாருக்குள் வருகிறாரோ, அவரையே விட்டு விட்டால் என்ன
சொல்வார்கள்? நம்பர் ஒன் தமோபிரதானம் நிச்சயம் இருந்த போதும்
மாயா முற்றிலும் முகத்தைத் திருப்பி வைத்து விடுகின்றது. அதற்கு
அவ்வளவு பலம் உள்ளது, முற்றிலும் ஒரு பைசாக் கூடப்
பெறாதவர்களாக ஆக்கி விடுகின்றது. இது போலவும் ஒரு சில
சென்டர்களில் உள்ளனர். அதனால் பாபா சொல்கிறார், எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். கேட்ட விஷயங்களை யாருக்காவது சொல்லவும்
செய்யலாம். ஆனால் அவர்கள் பண்டிதர் போல் ஆகி விடுகின்றனர்.
எப்படி பாபா பண்டிதரின் கதை சொல்கிறார் இல்லையா? அவர் சொன்னார்,
ராம்-ராம் எனச் சொல்வதால் கடலைக் கடந்து அக்கரை சென்று
விடுவீர்கள் என்று. இதுவும் ஒரு கதையாக உருவாக்கப் பட்டுள்ளது.
இச்சமயம் நீங்கள் பாபாவின் நினைவினால் விஷக்கடலில் இருந்து
பாற்கடலுக்குச் சென்று விடுகிறீர்கள் இல்லையா? அவர்கள் பக்தி
மார்க்கத்தில் ஏராளமான கதைகளை உருவாக்கியுள்ளனர். இப்படிப்பட்ட
விஷயங்களோ நடைபெறுவதில்லை. இது ஒரு கதையாகத் தான் உருவாக்கப்
பட்டுள்ளது. பண்டிதர் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
தான் அதை எந்த வகையிலும் நடைமுறைப் படுத்தவில்லை. தான்
விகாரங்களில் சென்று கொண்டே இருப்பது மற்றும் மற்றவர்களுக்கு
நிர்விகாரி ஆகுங்கள் எனச் சொல்வது என்றால் அதனால் என்ன தாக்கம்
(மாற்றம்) ஏற்படும்? இப்படியும் பிரம்மாகுமார்-குமாரிகள்
உள்ளனர் - தாங்கள் நிச்சயத்தில் இல்லை, மற்றவர்களுக்குச்
சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் எங்கெங்கோ சொல்கிறவர்களை
விடவும் கேட்கிறவர்கள் வேகமாகச் சென்று விடுகின்றனர். யார்
அநேகருக்கு சேவை செய்கின்றனரோ, அவர்கள் பிரியமானவர்களாக உள்ளனர்
இல்லையா? பண்டிதர்கள் பொய்யானவர்களாகத் தெரிய வந்தால் அவர்கள்
மீது யார் பிரியம் வைப்பார்கள்? பிறகு யார் நடைமுறையில் நினைவு
செய்கின்றனரோ, அவர்கள் மீது அன்பு சென்று விடும். நல்ல-நல்ல
மகாரதிகளையும் கூட மாயா விழுங்கி விடுகின்றது. அநேகர்
விழுங்கப்பட்டு விட்டனர். பாபாவும் புரிய வைக்கிறார், இன்னும்
கர்மாதீத் அவஸ்தா ஏற்படவில்லை. ஒரு பக்கம் யுத்தம் நடைபெறும்,
மற்றொரு பக்கம் கர்மாதீத் அவஸ்தா ஏற்படும். இரண்டுக்கும்
முழுமையான தொடர்பு உள்ளது. பிறகு யுத்தம் முடிவடைந்ததும்
அடுத்த யுகத்திற்கு மாற்றலாகி விடுவீர்கள். முதலில் ருத்ர மாலை
உருவாகும். இந்த விஷயங்களை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.
நீங்கள் புரிந்து கொண்டிருக் கிறீர்கள், விநாசம் முன்னால்
நின்று கொண்டுள்ளது. இப்போது நீங்கள் சிறுபான்மையாக
இருக்கிறீர்கள். அவர்கள் பெரும் பான்மையாக உள்ளனர். ஆக, நீங்கள்
சொல்வதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எப்போது நீங்கள் (பெரும்பான்மை)
விருத்தி யடைகிறீர் களோ, பிறகு உங்கள் யோகபலத்தினால் அநேகர்
கவரப்பட்டு வருவார்கள். எவ்வளவு உங்களிட மிருந்து கறை நீங்கிக்
கொண்டே செல்கிறதோ, அவ்வளவு பலம் நிரம்பிக் கொண்டே போகும்.
பாபாவுக்கு எல்லாம் தெரியும் தானே என்பது கிடையாது. இங்கே வந்து
அனைவரையும் பாôக்கிறார். அனைவரின் மனநிலை பற்றி
அறிந்திருக்கிறார். தந்தை குழந்தைகளின் மனநிலை பற்றி அறிய
மாட்டாரா என்ன? அனைத்தும் தெரியும். இதில் அந்தர்யாமியின் எந்த
ஒரு விஷயமும் கிடையாது. இன்னும் கர்மாதீத் நிலை ஏற்பட்டு
விடவில்லை. அசுர உரையாடல்கள், நடத்தை அனைத்தும் வெளிப்பட்டு
விடும். ஆகவே நீங்கள் தெய்வீக நடத்தை உள்ளவர்களாக வேண்டும்.
தேவதைகள் சர்வகுணங்களும் நிறைந்தவர்கள் அல்லவா? இப்போது நீங்கள்
அது போல் ஆக வேண்டும். எங்கே அந்த அசுரர்கள், எங்கே தேவதைகள்!
(ஒப்பிடுதல்) ஆனால் மாயா யாரையும் விட்டு வைப்பதில்லை.
தொட்டாற்சுருங்கியாக ஆக்கி விடுகின்றது. ஒரேயடியாக அடித்துப்
போட்டு விடுகிறது. 5 மாடி இல்லையா? தேக அபிமானம் வருவதால் தான்
மேலிருந்து ஒரேயடியாகக் கீழே விழுகின்றனர். விழுந்தால்
செத்தார்கள்! தற்போது தங்களை மாய்த்துக் கொள்வதற்காக
எப்படி-எப்படியெல்லாம் உபாயங்களை உருவாக்குகின்றனர்! 21-வது
மாடி யிலிருந்து குதிக்கின்றனர், ஒரேயடியாகச் இறந்துப்
போவதற்காக. பிறகு ஆஸ்பத்திரியில் போய்ப் படுத்துவிடக் கூடாது,
துக்கம் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள் 5-வது மாடியி-ருந்து
விழுகிறார்கள் இறக்கவில்லை எனில் எவ்வளவு துக்கம் (வேதனை)
அனுபவிப்பார்கள் துக்கத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கக் கூடாது
என்பதற்காக. சிலர் தங்கள் மீது நெருப்பு வைத்துக் கொள்கின்றனர்.
அவர்களை யாராவது காப்பாற்றி விட்டால் அவர்கள் எவ்வளவு துக்கத்தை
சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது! எரிந்து விட்டால் ஆத்மாவோ
விட்டோடி விடும் இல்லையா? அதனால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சரீரத்தை அழித்துக் கொள்கின்றனர். சரீரத்தை விட்டுவிடுவதால்
துக்கத்திலிருந்து விடுபட்டு விடுவோம் என நினைக்கின்றனர். ஆனால்
இதுவும் மகாபாவமாகும். இன்னும் அதிகமாக துக்கத்தை அனுபவிக்க
வேண்டியுள்ளது. ஏனென்றால் இதுவே அளவற்ற துக்கத்தின் உலகம்.
அங்கே (சத்யுகத்தில்) இருப்பது அளவற்ற சுகம். குழந்தை கள்
நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இப்போது நாம் திரும்பிச்
செல்கிறோம். துக்கதாமத் திலிருந்து சுகதாமத்திற்குச் செல்கிறோம்.
இப்போது சுகதாமத்தின் எஜமானர் ஆக்குகின்ற பாபாவை நினைவு செய்ய
வேண்டும். இவர் (பிரம்மா) மூலமாக பாபா புரிய வைக்கிறார்.
சித்திரங் களும் உள்ளன இல்லையா? பிரம்மாவின் மூலம்
சொர்க்கத்தின் ஸ்தாபனை. நீங்கள் சொல் கிறீர்கள், பாபா, நாங்கள்
அநேக தடவை உங்களிடம் சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக
வந்துள்ளோம். பாபாவும் சங்கமயுகத்தில் தான் வருகிறார், உலகம்
மாற வேண்டிய நேரத்தில். ஆக, பாபா சொல்கிறார், நான்
வந்திருக்கிறேன், குழந்தைகளாகிய உங்களை துக்கத்திலிருந்து
விடுவித்து சுகம் நிறைந்த தூய்மையான உலகிற்கு அழைத்துச்
செல்வதற்காக. அழைக்கவும் செய்கின்றனர் - ஹே பதித-பாவனா..........
எங்களை இந்த மோசமான உலகிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்
கள் என்று நாம் மகா காலனை அழைக்கிறோம் என்பது அவர்களுக்குத்
தெரிவதில்லை. நிச்சயமாக பாபா வருவார். நாம் இறந்து போவோம்.
அப்போது தான் அமைதி ஏற்படும் இல்லையா? சாந்தி-சாந்தி எனச்
சொல்லிக் கொண்டே உள்ளனர். சாந்தியோ பரந்தாமத்தில் தான்
இருக்கும். ஆனால் இந்த உலகத்தில் எப்படி சாந்தி வரும் - இவ்வளவு
ஏராளமான மனிதர்கள் இருக்கிற வரை? சத்யுகத் தில் சுகம்-சாந்தி
இருந்தது. இப்போது கலியுகத்தில் அநேக தர்மங்கள். அவை எப்போது
அழிகின்றனவோ, அப்போது ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஏற்படும், அப்போது
தான் சுகம்-சாந்தி இருக்கும் இல்லையா? ஐயோ என்ற கூக்குரலுக்குப்
பிறகு ஜெய-ஜெய என்ற வெற்றி முழக்கம் கேட்கும். இன்னும்
போகப்போக பார்க்கப் போகிறீர்கள், மரணத்தின் கடைத்தெரு (பஜார்)
எவ்வளவு சூடாக இருக்கும் என்று. விநாசம் நிச்சயமாக நடைபெறப்
போகிறது. ஒரு தர்மத்தின் ஸ்தாபனையை பாபா வந்து செய்விக்கிறார்.
இராஜயோகமும் கற்பிக்கிறார். மற்ற அநேக தர்மங்கள் அனைத்தும்
அழிந்து போகும். கீதையில் எதுவும் காட்டப் படவில்லை. 5
பாண்டவர்கள் மற்றும் நாய் இமயமலையின் மீது உருகிப் போய்
விட்டனர். பிறகு முடிவு என்னாயிற்று? பிரளயத்தைக்
காட்டியுள்ளனர். நீர்மயமாக ஆகிறது என்றாலும் முழு உலகமுமே
நீர்மயமாக ஆக முடியாது. பாரதமோ அழிவற்ற தூய்மையான கண்டமாகும்.
அதிலும் அபு அனைத்திலும் தூய்மை யான தீர்த்த (புனித)
ஸ்தானமாகும். அங்கே தான் பாபா வந்து குழந்தைகளாகிய உங்கள் மூலம்
அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். தில்வாலா கோவிலில் எவ்வளவு
நல்ல நினைவுச்சின்னம் உள்ளது! எவ்வளவு அர்த்தத்தோடு உள்ளது!
ஆனால் யார் உருவாக்கினார்களோ, அவர்களுக்கு அது பற்றித் தெரியாது.
இருந்தாலும் நல்ல புத்திசாலிகளாக இருந்தனர் இல்லையா?
துவாபரயுகத்தில் நிச்சயமாக நல்ல புத்திசாலிகள் இருப்பார்கள்.
கலியுகத்தில் இருப்பவர்கள் தமோபிர தானமான வர்கள்
துவாபரயுகத்தில் கூட தமோ புத்தி உள்ளவர்கள் இருப்பார்கள்.
அனைத்துக் கோவில் களிலும் இது உயர்ந்ததாகும். அங்கே தான்
நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்.
இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள், விநாசத்தில்
ஒட்டுமொத்த (ஹோல்சேல்) மரணம் இருக்கும் ஹோல்சேல் (இறுதி)
மகாபாரத யுத்தம் நடைபெறும். அனைவரும் அழிந்து போவார்கள். ஒரு
கண்டம் மீதி இருக்கும். பாரதம் மிகச் சிறியதாக இருக்கும். மற்ற
அனைத்தும் அழிந்து போகும். சொர்க்கம் எவ்வளவு சிறியதாக
இருக்கும்! இப்போது இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. இது
புருஷோத்தம சங்கமயுகம். இங்கே எவ்வளவு ஏராளமான மனிதர்கள்
உள்ளனர்! அங்கே எவ்வளவு கொஞ்சம் மனிதர்கள் இருப்பார்கள்! இவை
அனைத்தும் அழிந்து போகும். உலகத்தின் சரித்திர-பூகோளம்
திரும்பவும் ஆரம்பத் திலிருந்து நடைபெறும். நிச்சயமாக
சொர்க்கத்தில் இருந்து திரும்ப நடைபெறும். கடைசியிலோ வர
மாட்டார்கள். இந்த டிராமாவின் சக்கரம் அநாதியானது, அது சுற்றிக்
கொண்டே உள்ளது. இந்தப் பக்கம் கலியுகம், அந்தப் பக்கம் சத்யுகம்.
நாம் சங்கமயுகத்தில் இருக்கிறோம். இதையும் நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். பாபா வருகிறார், பாபாவுக்கு ரதமோ அவசியம்
வேண்டும் இல்லையா? ஆக, பாபா புரிய வைக்கிறார், இப்போது நீங்கள்
வீட்டுக்குச் செல்கிறீர்கள். பிறகு இந்த லட்சுமி-நாராயணராக ஆக
வேண்டும். ஆகவே தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும்.
இதுவும் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப் படுகின்றது,
இராவண இராஜ்யம் மற்றும் இராம ராஜ்யம் எனச் சொல்லப்படுவது எது?
தூய்மையற்றதிலிருந்து தூய்மை, பிறகு தூய்மை யிலிருந்து தூய்மை
யற்றவர்களாக எப்படி ஆகின்றனர்? இந்த விளையாட்டின் இரகசியத்தை
பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். பாபா ஞானம் நிறைந்தவர், விதை
வடிவமானவர் இல்லையா? சைதன்யமானவர். அவர் தான் வந்து புரிய
வைக்கிறார். முழுக் கல்ப விருட்சத்தின் இரகசியத்தைப் புரிந்து
கொண்டீர்களா என்று பாபா தான் கேட்பார். இதில் என்னென்ன
நடைபெறுகிறது? நீங்கள் இதில் எவ்வளவு பாகத்தில்
நடித்திருக்கிறீர்கள்? அரைக்கல்பம் தெய்வீக சுயராஜ்யம்.
அரைக்கல்பம் அசுர ராஜ்யம். நல்ல-நல்ல குழந்தைகள் யார்
இருக்கின்றனரோ, அவர்களின் புத்தியில் ஞானம் உள்ளது. பாபா
தம்மைப் போல் ஆக்குகிறார் இல்லையா? ஆசிரியர்களிலும் கூட
தரவரிசையில் உள்ளனர். அநேகரோ ஆசிரியராக இருந்தும் கூட
கோபித்துக் கொள்கின்றனர். அநேகருக்குக் கற்றுக் கொடுத்து
விட்டுப் பிறகு தாங்களே இல்லாமல் போய் விட்டனர். சின்னச்
சின்னக் குழந்தைகளில் விதவிதமான சம்ஸ்காரங்கள் உள்ளவர்களாக
உள்ளனர். சிலரோ பாருங்கள், நம்பர் ஒன் சைத்தான், (துர்தேவதை)
சிலர் பிறகு (பரிஸ்தான்) தேவதை உலகிற்குச் செல்வதற்குத் தகுதி
யானவர்களாக உள்ளனர். அநேகர் ஞானத்தை எடுத்துக் கொள்வதில்லை,
தங்களது நடத்தை யையும் சீர்திருத்திக் கொள்வதில்லை.
அனைவருக்கும் துக்கத்தையே கொடுத்துக் கொண்டுள்ளனர். இதுவும்
சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது - அசுரர்கள் வந்து மறைவாக
அமர்ந்திருந்தனர் என்பதாக. அசுரர் ஆகி எவ்வளவு கஷ்டங்கள்
கொடுக்கின்றனர்! இதுவோ எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
உயர்ந்தவரிலும் உயர்ந்தவரான தந்தை தான் சொர்க்கத்தின் ஸ்தாபனை
செய்வதற்காக வர வேண்டியுள்ளது. மாயாவும் மிகவும் சக்தி வாய்ந்த
தாகும். தானம் கொடுக்கின்றனர். பிறகும் மாயா புத்தியைச் சுற்றி
விட்டு (குழப்பி) விடுகின்றது. பாதிப் பேரை நிச்சயம் மாயா
விழுங்கிவிடும். அதனால் தான் சொல்கின்றனர், மாயா மிகவும்
கொடியது என்று. அரைக் கல்பம் மாயா இராஜ்யம் செய்கின்றது என்றால்
நிச்சயமாக மாயா இந்த அளவு பயில்வானாக இருக்கும் இல்லையா?
மாயாவிடம் தோல்வியடைபவர்களின் நிலை என்னவாக ஆகி விடுகின்றது!
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தை களுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஒரு போதும் தொட்டாற் சுருங்கி ஆகக் கூடாது. தெய்விக குணங்களை
தாரணை செய்து தன்னுடைய நடத்தையைச் சீர்திருத்திக் கொள்ள
வேண்டும்.
2) தந்தையின் அன்பைப் பெறுவதற்கு சேவை செய்ய வேண்டும். ஆனால்
எதை மற்றவர்களுக்குச் சொல்கிறீர்களோ, அதை சுயம் தாரணை செய்ய
வேண்டும். கர்மாதீத் நிலைக்குச் செல்வதற்கான முழுமையான
புருஷார்த்தம் செய்ய வேண்டும்.
வரதானம்:
சாகார ரூபத்தில் பாப்தாதாவை அருகாமையில் அனுபவம் செய்யக்கூடிய
இணைந்த ரூபதாரி ஆகுக.
எப்படி சிவ சக்தி கம்பைண்ட் (இணைந்த) இருக்கிறார்கள், அதுபோல
பாண்டவ்பதி (பாண்டவர் களின் தலைவர்) மற்றும் பாண்டவர்கள்
இணைந்து இருக்கிறார்கள். யார் அதுபோல இணைந்த ரூபத்தில்
இருக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னால் பாப்தாதா சாகார ரூபத்தில்
அனைத்து சம்மந்தங்களிலும் முன்னால் இருப்பார். இப்பொழுது
தினந்தோறும் பாப்தாதா முன்னால் வருகிறார், கையை பிடித்துக்
கொள்கிறார், என்பதை அனுபவம் செய்வீர்கள், புத்தியினால் அல்ல,
கண்களினால் பார்ப்பீர்கள், அனுபவம் ஏற்படும். ஆனால் ஒரு பாபாவை
தவிர வேறு யாருமில்லை, இந்த பாடத்தில் உறுதியாக இருந்தால்,
நிழலை போன்றும் தொடர்வதை போன்று, பாப்தாதாவின் கண்களிலிருந்து
விலக முடியாது, சதா முன்னால் இருக்கிறார் என்ற அனுபவம் ஆகும்.
சுலோகன்:
மாயாவை வென்றவர், இயற்கையை வென்றவராக ஆகக்கூடிய சிரேஷ்ட ஆத்மா
தான் சுயத்திற்கு நன்மை செய்பவர் மற்றும் உலகத்திற்கு நன்மை
செய்பவர்.
அவ்யக்த இஷாரா: இந்த அவ்யக்த மாதத்தில் பற்றிலிருந்து
விடுப்பட்டவராக இருந்து, ஜீவன் முக்தி ஸ்தியை அனுபவம்
செய்யுங்கள்.
நீங்கள் இப்பொழுது ஜீவன் முக்தி நிலையில் இருக்கும் பொழுது,
உங்கள் ஜீவன்முக்தியின் நிலையின் தாக்கம் ஜீவன் பந்தனத்தில்
இருக்கக்கூடிய ஆத்மாக்களின் பந்தனம் சமாப்தி ஆகிவிடும். எனவே
எப்பொழுது அந்த தேதி எப்பொழுது வரும், அனைவரும் ஜீவன் முக்தி
எப்பொழுது அடைவார்கள்? எந்த பந்தனமும் இல்லை. அனைத்து
பந்தனத்திலும் முதலாவது பந்தனம் - தேக உணர்வின் பந்தனம்,
அதிலிருந்து விடுபடுங்கள். தேகம் இல்லையென்றால், மற்ற அனைத்து
பந்தனங்களும் தானாகவே முடிந்து போய்விடும்.