06-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஆத்மாக்களாகிய
உங்களுக்கு இந்த சரீரம் என்ற சிம்மாசனம் கிடைத்திருப்பது போல
தந்தையும் கூட இந்த தாதாவின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்,
அவருக்கு தனக்கென்று ஒரு சிம்மாசனம் கிடையாது.
கேள்வி:
ஈஸ்வரிய குழந்தை என்ற நினைவு
இருக்கக் கூடிய குழந்தைகளின் அடையாளம் என்ன?
பதில்:
அவர்களின் உண்மையான அன்பு
சிவபாபாவிடம் இருக்கும். ஈஸ்வரிய குழந்தைகள் ஒரு போதும் சண்டை,
சச்சரவுகளில் ஈடுபட மாட்டார்கள். அவர்களுக்கு கெட்ட பார்வை
ஒருபோதும் இருக்க முடியாது. பிரம்மா குமார்-குமாரி அதாவது
சகோதர-சகோதரி ஆகி விட்டால் அழுக்கான பார்வை செலுத்த முடியாது.
பாடல்:
ஆகாய சிம்மாசனத்தை விட்டு
வாருங்கள். . .
ஓம் சாந்தி.
பாபா இப்போது ஆகாய சிம்மாசனத்தை விட்டு தாதாவின் உடலை தனது
சிம்மாசனமாக ஆக்கிக் கொண்டுள்ளார் என இப்போது குழந்தைகள்
அறிகின்றனர். அதனை விட்டு விட்டு வந்து இங்கே
அமர்ந்திருக்கின்றார். இந்த ஆகாய தத்துவம் என்பது
ஜீவாத்மாக்களின் சிம்மா சனமாகும். ஆத்மாக்களின் சிம்மாசனம்
அந்த மஹா தத்துவம் (பிரம்ம தத்துவம்) ஆகும், அங்கே
ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரம் இன்றி இருந்தீர்கள். ஆகாயத்தில்
நட்சத்திரங்கள் இருக்கின்றன அல்லவா, அதுபோல மிகவும்
சின்னஞ்சிறிய ஆத்மாக்களாகிய நீங்களும் அங்கே வசிக்கிறீர்கள்.
ஆத்மாவை தெய்வீகப் பார்வை இல்லாமல் பார்க்க முடியாது.
குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இந்த ஞானம் இருக்கிறது,
நட்சத்திரம் எவ்வளவு சிறியதாக இருக்கிறது, அதுபோல ஆத்மாக்களும்
புள்ளி போல இருக்கின்றன. இப்போது தந்தை சிம்மாசனத்தை விட்டு
விட்டார். ஆத்மாக்களாகிய நீங்களும் கூட சிம்மாசனத்தை விட்டு
விட்டு இங்கே இந்த சரீரத்தை தமது சிம்மாசனமாக்கிக்
கொள்கிறீர்கள். எனக்கும் கூட கண்டிப்பாக சரீரம் தேவை. என்னை
அழைப்பதும் கூட பழைய உலகத்தில் தான். தூர தேசத்தில் வசிப்பவர்....
பாடலும் உள்ள தல்லவா. ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கக் கூடிய
இடம்தான் ஆத்மாக்களாகிய உங்களின் மற்றும் பாபாவின் தேசமாகும்.
பிறகு நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்கிறீர்கள், அதை பாபா
ஸ்தாபனை செய்விக்கிறார். பாபா அந்த சொர்க்கத்திற்கு வருவதில்லை.
அவர் சப்தங்களைக் கடந்த வானபிரஸ்தத்தில் (ஓய்வு நிலையில்)
சென்று இருந்து கொள்கிறார். சொர்க்கத்தில் அவர் தேவைப்
படுவதில்லை. அவர் சுக-துக்கத்திற்கும் அப்பாற்பட்டவர். நீங்களோ
சுகத்தில் வருகிறீர்கள் எனும் போது துக்கத்திலும் வருகிறீர்கள்.
பிரம்மாகுமார்-குமாரிகளாகிய நாம் சகோதர - சகோதரிகள் என இப்போது
நீங்கள் அறிவீர்கள். ஒருவர் மற்றவர் மீது கெட்ட பார்வையின்
சிந்தனை கூட வரக்கூடாது. இங்கே நீங்கள் தந்தையின் முன்னால்
அமர்ந்திருக் கிறீர்கள், தங்களுக்குள் சகோதர-சகோதரிகளாக
இருக்கிறீர்கள். தூய்மையா வதற்கான யுக்தி பாருங்கள், எப்படி
உள்ளது என. இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை.
அனைவரின் பாபா ஒருவர்தான், ஆக அனை வரும் குழந்தைகளாகியுள்ளனர்
அல்லவா. குழந்தைகள் தங்களுக்குள் சண்டை சச்சரவுகள் கூட
இல்லாமலிருக்க வேண்டும். இந்த சமயம் நாம் ஈஸ்வரிய குழந்தைகளாக
உள்ளோம், முன்னர் அசுர குழந்தைகளாக இருந்தோம் என்பதை நீங்கள்
அறிவீர்கள். பிறகு இப்போது சங்கம யுகத்தில் ஈஸ்வரிய
குழந்தைகளாக ஆகியுள்ளோம். பிறகு சத்யுகத்தில் தெய்வீக
குழந்தைகள் ஆவீர்கள். இந்த சக்கரத்தைப் பற்றி குழந்தைகளுக்குத்
தெரிந்துள்ளது. நீங்கள் பிரம்மா குமார் - குமாரிகள், பிறகு
ஒருபோதும் கெட்ட பார்வை போகாது. சத்யுகத்தில் கெட்ட பார்வை
இருக்காது. கெட்ட பார்வை இராவண இராஜ்யத்தில் இருக்கும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு தந்தையைத் தவிர வேறு யாருடைய
நினைவும் இருக்கக் கூடாது. அனைவரையும் விட ஒரு தந்தையிடம் அன்பு
இருக்க வேண்டும். என்னுடையவர் ஒரு சிவபாபா, வேறு யாரும் இல்லை.
தந்தை சொல்கிறார் - குழந்தைகளே, நீங்கள் இப்போது
சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும். சிவபாபா சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்து கொண்டிருக் கிறார். அரைக் கல்பம் இராவண இராஜ்யம் நடந்தது,
அதன் மூலம் துர்க்கதி ஏற்பட்டது. இராவணன் என்றால் என்ன, அவரை
ஏன் எரிக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சிவபாபாவையும்
தெரியாது. தேவியரை அலங்கரித்து, பூஜை செய்து கட-ல் மூழ்கடித்து
விடுவதைப் போல் சிவபாபாவின் லிங்கத்தையும் மண்ணில் செய்து பூஜை
முதலானதை செய்து பிறகு மண்ணோடு மண்ணாக கலந்து விடுகின்றனர், அது
போல இராவணனையும் உருவாக்கி பிறகு எரித்து விடுகின்றனர்.
கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. இப்போது இராவண இராஜ்யம்
நடக்கிறது, இராம இராஜ்யம் வர வேண்டும் என்று சொல்லவும்
செய்கின்றனர். காந்திஜியும் கூட இராம இராஜ்யத்தை விரும்பினார்
எனும்போது அதன் அர்த்தம் இப்போது இராவண இராஜ்யம் உள்ளது
என்பதல்லவா. இந்த இராவண இராஜ்யத்தில் காமச் சிதையில் அமர்ந்து
எரிந்து போயிருந்த குழந்தைகளின் மீது, தந்தை வந்து மீண்டும்
ஞானத்தின் மழை பொழிகிறார், அனைவருக்கும் நன்மை செய்கிறார்.
வறண்ட பூமியில் மழை பொழிந்தால் புல் முளைத்து வருகிறது அல்லவா,
உங்கள் மீதும் கூட ஞானத்தின் மழை பொழியாததால் எவ்வளவு ஏழைகள்
ஆகிவிட்டீர்கள். இப்போது மீண்டும் ஞானத்தின் மழை பொழிகிறது,
இதன் மூலம் நீங்கள் உலகின் எஜமானர் ஆகி விடுகிறீரகள்.
குழந்தைகளாகிய நீங்கள் இல்லற விஷயங்களில் இருக்கலாம், ஆனால்
உள்ளுக்குள் மிகவும் குஷி இருக்க வேண்டும். ஏழைகளின் குழந்தைகள்
படிக்கின்றனர், படிப்பின் மூலம் வக்கீல் முதலானவர்களாக ஆகி
விடுகின்றனர். ஏகலைவனின் விஷயம் கூட சாஸ்திரங்களில் உள்ள தல்லவா.
யார் அனைவரையும் விட அதிக பக்தி செய்தனரோ அவர்கள் தான் வந்து
அனைவரையும் விட அதிகமாக ஞானத்தை எடுப்பார்கள் என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அனை வரையும் விட அதிகமாக
ஆரம்பத் திலிருந்து நாம் தான் பக்தி செய்தோம். பிறகு
நம்மைத்தான் பாபா சொர்க்கத்திற்கு முதன் முதலாக அனுப்பி
வைக்கிறார். இது ஞானம் நிறைந்த மிகச் சரியான விஷயமாகும்.
மிகச்சரியாக நாம்தான் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், பிறகு
பூஜாரிகளாக ஆகிறோம். கீழே இறங்கியபடி செல்கிறோம்.
குழந்தைகளுக்கு அனைத்து ஞானமும் புரிய வைக்கப்படுகிறது. இந்த
சமயத்தில் இந்த முழு உலகமும் நாஸ்திகர்களாக உள்ளனர். தந்தையைப்
பற்றி தெரியாது. தெரியாது, தெரியாது என சொல்லி விடுகின்றனர்.
இன்னும் போகப்போக இந்த சன்னியாசி முதலான அனைவரும் வந்து
கண்டிப்பாக ஆஸ்திகர்களாக ஆவார்கள். யாரோ ஒரு சன்னியாசி வந்து
விட்டால் மட்டும் அவர் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். இவர்
மீது பிரம்மா குமார்-குமாரிகள் மந்திரத்தை போட்டு விட்டார்கள்
என்று சொல்லி விடுவார்கள். அவருடைய சீடரை அரியாசனத்தில்
அமர்த்தி விட்டு அவரை விரட்டி விடுவார்கள். இப்படி நிறைய
சன்னியாசிகள் உங்களிடம் வந்தார்கள், பிறகு காணாமல் போய்
விடுகின்றனர். இது மிகவும் அதிசயமான நாடகம். இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் ஆரம்பத்திலிருந்து தொடங்கி இறுதி வரை
அனைத்தையும் அறிவீர்கள். உங்களுக்குள்ளும் வரிசைக்கிரமமான
முயற்சியின்படி தாரணை செய்ய முடிகிறது. தந்தையிடம் அனைத்து
ஞானமும் உள்ளது, உங்களிடமும் இருக்க வேண்டும். நாளுக்கு நாள்
எத்தனை சென்டர்கள் திறந்தபடி இருக்கின்றன. குழந்தைகள் மிகவும்
இரக்க மனமுள்ளவர்களாக ஆக வேண்டும். தன் மீதும் இரக்கம்
கொள்ளுங்கள் என்று தந்தை சொல்கிறார். இரக்கமற்றவர்களாக ஆகி விட
வேண்டாம். தன் மீது இரக்கம் காட்ட வேண்டும். எப்படி? அதையும்
கூட புரிய வைக்கிறார். தந்தையை நினைவு செய்து
தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக வேண்டும். பிறகு
ஒருபோதும் (பதீதராக) - தூய்மையற்றவராக ஆகும் முயற்சியை செய்யக்
கூடாது. பார்வை மிகவும் நன்றாக (தூய்மையாக) இருக்க வேண்டும்.
பிராமணர்களாகிய நாம் ஈஸ்வரிய குழந்தைகள். ஈஸ்வரன் நம்மை
தத்தெடுத்துக் கொண்டுள்ளார். இப்போது மனிதரிலிருந்து தேவதையாக
வேண்டும். முதலில் சூட்சும வதனவாசி பரிஸ்தா ஆகப்போகிறோம்.
இப்போது நீங்கள் ஃபரிஸ்தா ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சூட்சும
வதனத்தைப் பற்றிய இரகசியமும் கூட குழந்தைகளுக்குப் புரிய
வைத்திருக்கிறார். இங்கே இருப்பது டாக்கி - பேச்சு, சூட்சும
வதனத்தில் மூவி - அசைவுகள், மூலவதனத்தில் இருப்பது அமைதி.
சூட்சும வதனம் ஃபரிஸ்தாக்களுடையதாகும். பேய்களுக்கு நிழல்
போன்ற உடல் இருக்குமல்லவா? ஆத்மா வுக்கு சரீரம்
கிடைக்காவிட்டால் அலைந்து கொண்டி ருக்கும், அது பேய் என்று
சொல்லப்படுகிறது. அதை இந்த கண்களால் கூட பார்க்க முடியும்.
பிறகு இவர்கள் சூட்சுமவதனவாசி ஃபரிஸ்தாக்கள். இந்த அனைத்து
விஷயங்களும் மிகவும் புரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். மூல வதனம்,
சூட்சும வதனம், ஸ்தூல வதனம் - இதன் ஞானம் உங்களுக்கு உள்ளது.
நடந்து சுற்றியபடி புத்தியில் இந்த அனைத்து ஞானமும் இருக்க
வேண்டும். நாம் உண்மையில் மூலவதனத்தில் வசிப்பவர்கள். இப்போது
நாம் அங்கே சூட்சும வதனத்தின் வழியாக அங்கே செல்லப் போகிறோம்.
பாபா சூட்சும வதனத்தை இந்த சமயத்தில் தான் படைக்கிறார். முதலில்
சூட்சுமம், பிறகு ஸ்தூலம் (பௌதீக உலகம்) தேவைப்படுகிறது.
இப்போது இது சங்கமயுகம். இதனை ஈஸ்வரிய யுகம் என்று சொல்வோம்,
அதனை - சத்யுகத்தை - தெய்வீக யுகம் என்று சொல்வோம்.
குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். கெட்ட
பார்வை இருந்தால் உயர் பதவி அடைய முடியாது. இப்போது நீங்கள்
பிராமண-பிராமணியராக இருக்கிறீர்கள் அல்லவா. பிறகு வீட்டுக்குச்
சென்றவுடன் மறந்து விடக் கூடாது. நீங்கள் கெட்ட தொடர்பில் வந்து
மறந்து விடுகிறீர்கள். அன்னப் பறவைகளாகிய நீங்கள் ஈஸ்வரிய
குழந்தைகள். உங்களில் யாருக்குள்ளும் அந்தரங்க மான அழுக்கு
இருக்கக் கூடாது. அழுக்கு இருந்தது என்றால் மோகப் பற்று மிக்க
குரங்குகள் என்று சொல்வார்கள்.
அனைவரையும் தூய்மைப்படுத்துவதே உங்கள் தொழிலாகும். நீங்கள் உலகை
சொர்க்க மாக்குபவர்கள். அந்த இராவணனின் அசுர குழந்தைகள் எங்கே,
ஈஸ்வரிய குழந்தைகளாகிய நீங்கள் எங்கே. குழந்தைகளாகிய உங்களுக்கு
தமது நிலையை ஒரே சீராக ஆக்கிக் கொள்ள அனைத்தையும் பார்த்தபடி
பார்க்கவே இல்லை என்பது போல் இருக்க பயிற்சி செய்ய வேண்டும்.
இதில் புத்தியை ஒரே சீராக வைப்பது என்பது தைரியத்தின் விஷயம்
ஆகும். முழுமை அடைவதில் முயற்சி தேவைப்படுகிறது. சம்பூரணமாவதில்
நேரம் தேவைப்படுகிறது. கர்மாதீத் – கர்மங்களை வென்ற நிலை
ஏற்படும்போது அந்த பார்வை அமைகிறது, அதுவரை ஏதாவது ஒரு ஈர்ப்பு
இருந்துக் கொண்டுதான் இருக்கும். இதில் முழுக்க முழுக்க
விடுபட்டவர்களாக இருக்க வேண்டும். வழி - தெளிவாக இருக்க
வேண்டும். பார்த்துக் கொண்டிருந்தாலும் நீங்கள் பார்க்கவே இல்லை,
இப்படிப்பட்ட பயிற்சி யாருக்கு இருக்குமோ, அவர்கள் உயர் பதவியை
அடைவார்கள். இப்போது அந்த நிலை இல்லை. சன்னியாசிகள் இந்த
விஷயங்களைப் புரிந்து கொள்வதும் இல்லை. இங்கே மிகவும் உழைக்க
வேண்டியுள்ளது. நாம் கூட இந்த பழைய உலகை சன்னியாசம் செய்து
அமர்ந்திருக்கிறோம் என்று நீங்கள் அறிவீர்கள். அவ்வளவே, நாம்
இப்போது இனிமையான அமைதியான வீட்டிற்குச் செல்ல வேண்டும். உங்கள்
புத்தியில் இருக்கும் அளவு வேறு யாருடைய புத்தியிலும் இல்லை.
இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தான்
அறிவீர்கள். சிவ பகவானுடைய மகா வாக்கியமும் உள்ளது - அவர் பதித
பாவனர், விடுவிப் பவர், வழிகாட்டி ஆவார். கிருஷ்ணர் ஏதும்
வழிகாட்டி அல்ல. இந்த சமயத்தில் நீங்களும் கூட அனைவருக்கும் வழி
காட்ட கற்கிறீர்கள், ஆகையால் உங்களுக்கு பாண்டவர்கள் என்று
பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பாண்டவ சேனையாக உள்ளீர்கள்.
இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகியுள்ளீர்கள். இப்போது
திரும்பிச் செல்ல வேண்டும், இந்த பழைய உடலை விட வேண்டும் என
அறிவீர்கள். பாம்பின் உதாரணம், குளவிப் பூச்சியின் உதாரணம்
இவையனைத்தும் இந்த சமயத்தில் உங்களுடையதாகும். நீங்கள் இப்போது
நடைமுறையில் அவ்வாறு இருக்கிறீர்கள். அவர்கள் இந்த தொழிலைச்
செய்ய முடியாது. இது சுடுகாடாக உள்ளது, இப்போது மீண்டும் பரிஸ்
தானாக - தேவதைகளின் வசிப்பிடமாக ஆக வேண்டும்.
உங்களுக்கு அனைத்து நாட்களும் அதிர்ஷ்டமாகும். குழந்தைகளாகிய
நீங்கள் எப்போதுமே அதிர்ஷ்ட மிக்கவர்கள் ஆவீர்கள்.
குருவாரத்தில் - வியாழக்கிழமை அன்று குழந்தைகளை பள்ளியில்
அமர்த்துகின்றனர். இந்த வழக்கம் நடந்து வருகிறது. உங்களை
இப்போது விருட்சபதி படிப்பிக்கிறார். இந்த உங்களின்
விருட்சபதியின் (குரு) தசை (பார்வை) பிறவி பிறவிகளாக நடக்கிறது.
இது எல்லைக்கப்பாற்பட்ட குரு தசை. பக்தி மார்க்கத்தில்
எல்லைக்குட்பட்ட கிரகங் களின் பார்வை நடக்கின்றன. இப்போது
எல்லைக்கப்பாற்பட்ட குரு பார்வை. ஆக, முழுமை யான முறையில்
முயற்சி செய்ய வேண்டும். லட்சுமி நாராயணர் ஒருவர் அல்லவே.
அவர்களுடைய வம்சம் இருக்கும் அல்லவா. கண்டிப்பாக பலர்
இராஜ்யத்தை ஆள்பவர்களாக இருக்கும். லட்சுமி - நாராயணரின் சூரிய
வம்சத்து இராஜ்யம் நடந்தது, இந்த விஷயங்களும் குழந்தைகளாகிய
உங்கள் புத்தியில் உள்ளது. எப்படி இராஜ திலகம் இடுகின்றனர்,
சூர்ய வம்சத்தவர் பிறகு சந்திர வம்சத் தவருக்கு எப்படி
இராஜ்யத்தை கொடுக்கின்றனர் என்பது கூட குழந்தைகளாகிய உங்களுக்கு
காட்சியில் தெரிந்தது. தாய் தந்தையர் குழந்தையின் பாதத்தைக்
கழுவி இராஜ திலகம் இடு கின்றனர். (இராஜ்ய பாக்கியத்தை
அளிக்கின்றனர்) இந்த காட்சிகள் முதலான அனைத்தும் நாடகத்தில்
பதிவாகியுள்ளது. இதில் குழந்தைகளாகிய நீங்கள் குழப்பமடைய
வேண்டியதில்லை. நீங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள், சுயதரிசன
சக்கரதாரி ஆகுங்கள் மற்றும் பிறரையும் ஆக்குங்கள். நீங்கள்
பிரம்மா முக வம்சாவளி சுயதரிசன சக்கரதாரி உண்மையான பிராமணர்கள்,
சாஸ்திரங்களில் சுயதரிசன சக்கரத்தின் மூலம் எவ்வளவு வன்முறைகளை
காட்டியுள்ளனர். இப்போது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு
உண்மையான கீதையை கூறுகிறார். இதனை மனனம் செய்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு சகஜமாக உள்ளது. உங்களுடைய தொடர்பு அனைத்தும்
கீதையுடனதாகும். கீதையில் ஞானமும் உள்ளது, யோகமும் உள்ளது.
நீங்களும் கூட ஒரே புத்தகத்தை உருவாக்க வேண்டும். யோகத்தின்
புத்தகத்தை தனியாக ஏன் உருவாக்க வேண்டும். ஆனால் இன்றைய
நாட்களில் யோகம் என்பது பெயர் பெற்றதாக உள்ளது, ஆகையால்
மனிதர்கள் வந்து புரிந்து கொள்ளட்டும் என்று அந்த பெயரை
வைக்கின்றனர். இறுதியில் யோகம் - நினைவின் தொடர்பை ஒரு
தந்தையிடம் வைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்வார்கள். யார்
கேட்கின்றனரோ அவர்கள் பிறகு தமது தர்மத்தில் வந்து உயர் பதவியை
அடைவார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தன் மீது தானே இரக்கம் கொள்ள வேண்டும். தமது பார்வையை
மிகவும் நல்லதாக தூய்மையாக வைக்க வேண்டும். ஈஸ்வரன்
மனிதரிலிருந்து தேவதையாக்கு வதற்காக தத்தெடுத்துள்ளார், ஆகையால்
தூய்மை இழந்து போவதற்கான சிந்தனை ஒரு போதும் வரக்கூடாது.
2. சம்பூரணமான, கர்மாதீத நிலையை அடைவதற்காக எப்போதும் விடுபட்டு
இருக்கக் கூடிய பயிற்சி செய்ய வேண்டும். இந்த உலகில்
அனைத்தையும் பார்த்தபடி இருந்தாலும் பாராமலிருக்க வேண்டும்.
இந்த பயிற்சியின் மூலமே மன நிலையை ஒரே சீரானதாக உருவாக்க
வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானத்தை சேமிப்பு செய்யக்கூடிய
அனைத்து கஜானாக்களில் நிறைந்திருக்கும் மற்றும் திருப்தியான
ஆத்மா ஆகுக
எந்த குழந்தை பாபாவின் நினைவிலிருந்து ஒவ்வொரு அடி எடுத்து
வைக்கின்றார்களோ அவர்கள் அடி அடியிலும் பலமடங்கு வருமானம்
சம்பாதிப்பவராக இருக்கிறார்கள். இந்த சங்கமத்தில் தான் பலமடங்கு
வருமானத்தின் சுரங்கம் கிடைக்கின்றது. சங்கமயுகமே சேமிப்பு
செய்யும் யுகமாகும். இப்பொழுது எவ்வளவு சேமிப்பு செய்ய
விரும்பினாலும் செய்ய முடியும். ஒரு அடி என்பது ஒரு செகண்டு
கூட சேமிப்பின்றி வீணாக்கக் கூடாது. சதா பொக்கிஷம்
நிறைந்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை என்ற பொருளே இல்லை...
அப்படிப்பட்ட சம்ஸ்காரம் இருக்கவேண்டும். எப்பொழுது
அப்படிப்பட்ட திருப்பதியான மற்றும் நிறைந்த ஆத்மாவாக
ஆகின்றீர்களோ அப்பொழுது எதிர்காலத்தில் அளவிடமுடியாத
பொக்கிஷங்களுக்கு எஜமானராக இருப்பீர்கள்.
சுலோகன்:
எந்த விசயமாயினும் அப்செட்(வெறுப்பு) ஆவதற்கு பதிலாக ஞானம்
நிறைந்தவரின் இருக்கையில் (சீட்டில்) நிலைத்து (செட்
ஆகியிருங்கள்) விடுங்கள்.
மாதேஸ்வரி அவர்களின் மதிப்பு வாய்ந்த மகா வாக்கியங்கள்
அரைக் கல்பம் பிரம்மாவின் பகல், அரைக் கல்பம் பிரம்மாவின் இரவு,
இப்போது இரவு முடிந்து காலை வரவிருக்கிறது. இப்போது பரமாத்மா
வந்து காரிருளை முடித்து வெளிச்சத்தை தொடங்கி வைக்கிறார்,
ஞானத்தில் மூலம் வெளிச்சம், பக்தியின் மூலம் காரிருள். இந்த
பாவம் நிறைந்த உலகில் இருந்து எங்காவது மனதிற்கு அமைதி
கிடைக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், இது அமைதியற்ற
உலகம், இங்கே அமைதியே இல்லை என்று பாடலில் கூட சொல்கிறார்கள்.
முக்தியில் அமைதியும் இல்லை, அமைதியற்ற நிலையும் இல்லை. சத்ய,
திரேதா யுகம் அமைதி யின் உலகம் அந்த சுகதாமத்தை அனைவருமே நினைவு
செய்கின்றனர். ஆக, இப்போது நீங்கள் அமைதியான உலகத்திற்குச்
சென்று கொண்டிருக்கிறீர்கள், அங்கே தூய்மையற்ற எந்த ஆத்மாவும்
செல்ல முடியாது, அவர்கள் இறுதியில் தர்மராஜாவின் தண்டனைகளை
அனுபவித்து விட்டு கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டு சுத்தமான
சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வார்கள், ஏனென்றால் அங்கே
அசுத்தமான சம்ஸ்காரம் கிடையாது, பாவங்களும் ஏற்படுவதில்லை.
ஆத்மா தனது உண்மையான தந்தையை மறந்து விடும் போது இந்த அனாதியான
(முடிவில்லாத) வெற்றி தோல்வி கலந்த குட்டிக் கரண விளையாட்டு
உருவாக்கபட்டது. ஆகையால் நம்முடைய இந்த சர்வசக்திவான் பரமாத்மா
மூலமாக சக்தி எடுத்து விகாரங்களின் மீது வெற்றியடைந்து 21
பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நல்லது.
அவ்யக்த பிரேரணை : சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தை
தனதாக்குங்கள்
உங்கள் வார்த்தையில் அன்பும், இனிமையும், சத்தியமும் இருக்க
வேண்டும் ஆனால் சொரூபத்தில் பணிவும் இருக்க வேண்டும். பயமற்று
அதிகாரத்துடன் பேசுங்கள் ஆனால் வார்த்தை மாரியதைக் குள் இருக்க
வேண்டும் - இரண்டு விசயங்களும் சமநிலையில் இருக்க வேண்டும்,
எங்கு சமநிலை இருக்குமோ அங்கு அதிசயம் தென்படும் மற்றும் அந்த
சப்தம் கடுமையாக இன்றி, இனிமையாக இருந்தால் அதிகாரம் மற்றும்
பணிவு தன்மையின் சமநிலையின் அதிசயத்தை காண்பியுங்கள். இது தான்
பாபாவை வெளிப்படுத்தும் சாதனமாகும்.