06.04.25    காலை முரளி            ஓம் சாந்தி  15.12.2004      பாப்தாதா,   மதுபன்


பாப்தாதாவின் விசேச ஆசை - ஒவ்வொரு குழந்தையும் ஆசிர்வாதங்கள் கொடுக்க வேண்டும். ஆசிர்வாதங்களைப் பெற வேண்டும்

இன்று பாப்தாதா தம்முடைய நாலாபுறமுள்ள கவலையற்ற மகாராஜாக்களின் சபையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ராஜசபை முழுக் கல்பத்திலும் இந்தச் சமயம் தான். ஆன்மிகப் பெருமிதத்தில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் கவலையற்ற மகாராஜாக்கள். காலையில் எழுந்ததுமே கவலையற்றவராக, நடமாடும் போதும் சுற்றி வரும் போதும், கர்மம் செய்யும் போதும் கவலையற்றவராக, மற்றும் தூங்கினாலும் கவலையற்ற தூக்கத்தில் தூங்கு கிறீர்கள். அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்கள் இல்லையா? கவலையற்றவராக இருக்கிறீர்கள் இல்லையா? ஆகி விட்டீர்களா, ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? ஆகி விட்டீர்கள் இல்லையா? கவலையற்றவர்கள் மற்றும் மகாராஜாக்கள், சுயராஜ்ய அதிகாரி இந்தக் கர்மேந்திரியங்களின் மீது ராஜ்யம் செய்யக் கூடிய கவலையற்ற மகாராஜாக்கள் நீங்கள். அதாவது சுயராஜ்ய அதிகாரி கள். ஆக, அந்த மாதிரி சபை பிராமணர்களாகிய உங்களுடையது மட்டும் தான். ஆக, சுமை இறங்கி விட்டது இல்லையா? கவலை முடிந்தது மற்றும் கவலையற்ற மகாராஜா ஆகி விலை மதிப்பற்ற வாழ்க்கையை அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அனைவரின் தலை மீதும் பவித்திரதாவின் ஒளிக்கிரீடம் தானாகவே ஜொலிக்கின்றது. கவலையற்றவரின் தலை மீது ஒளிக்கிரீடம் உள்ளது. ஏதேனும் கவலைப் படுகிறீர்கள், ஏதேனும் சுமையைத் தன் மீது ஏற்றிக் கொள்கிறீர்கள் என்றால் தலை மீது என்ன வந்து விட்டுள்ளது என்று தெரிந்ததா? சுமைகளின் கூடை வந்து விடுகிறது. ஆகவே யோசியுங்கள், கிரீடம் மற்றும் கூடை இரண்டையும் முன்னால் கொண்டு வாருங்கள். எது நன்றாக உள்ளது? கூடை நன்றாக உள்ளதா அல்லது ஒளிக்கிரீடம் நன்றாக உள்ளதா? டீச்சர்கள் சொல்லுங் கள், எது நன்றாக உள்ளது? கிரீடம் நன்றாக உள்ளது இல்லையா? அனைத்துக் கர்மேந்திரியங்கள் மீதும் ராஜ்யம் செய்யக்கூடிய மகாராஜாக்கள் நீங்கள். பவித்திரதா ஒளிக்கிரீடதாரி ஆக்கும். எனவே உங்கள் நினைவுச் சின்னமாக ஜடச்சித்திரங்களில் இரட்டைக் கிரீடம் காட்டப்பட்டுள்ளது. துவாபர யுகம் தொடங்கி மகாராஜாக்களாகவோ அநேகர் ஆகியிருக்கிறார்கள். ராஜாக்களாகவோ அநேகர் ஆகியிருக்கிறார்கள். ஆனால் இரட்டைக் கிரீடதாரியாக யாரும் ஆகவில்லை. கவலை யற்ற மகாராஜாவாக சுயராஜ்ய அதிகாரியாகவும் யாரும் ஆகவில்லை. ஏனென்றால் பவித்திர தாவின் சக்தி மாயாவை வென்றவராக, கர்மேந்திரியங்களை வென்றவராக, வெற்றியாளராக ஆக்கி விடுகிறது. கவலையற்ற மகாராஜாவின் அடையாளம் - சதா தானும் திருப்தியாக இருந்து மற்றவர் களையும் திருப்திப் படுத்துபவர்கள். திருப்தியற்று இருக்கும் அளவுக்கு, ஒரு போதும் எந்த ஓர் அப்பிராப்தியும் இருப்பதில்லை. எங்கே அப்பிராப்தி உள்ளதோ, அங்கே திருப்தியற்ற நிலை இருக்கும். எங்கே பிராப்தி உள்ளதோ, அங்கே திருப்தி இருக்கும். அந்த மாதிரி ஆகியிருக்கிறீர்களா? சோதித்துப் பாருங்கள் - சதா சர்வ பிராப்தி சொரூபமாக, திருப்தியாக இருக்கிறீர்களா? பாடலும் உள்ளது - கிடைக்காத பொருள் எதுவும் இல்லை என்று தேவதை களுக்கு இல்லை, பிராமணர் களின் கஜானாவில். திருப்தியான வாழ்க்கையின் சிரேஷ்ட அலங்காரம், சிரேஷ்ட பண்புகள். ஆக, திருப்தியான ஆத்மாக்கள் தாமே நீங்கள்?

பாப்தாதா அத்தகைய கவலையற்ற மகாராஜாக்களைப் பார்த்துக் குஷியடைகிறார். ஆகா என் கவலையற்ற மகாராஜா ஆகா! ஆகா! ஆகா! அப்படித் தான் இருக்கிறீர்கள் இல்லையா? கவலை யற்று இருப்பவர்கள் கை உயர்த்துங்கள். கவலையற்று இருக்கிறீர்களா? கவலை வருவதில்லையே? எப்போதாவது வருகிறதா? நல்லது. கவலையற்றவர் ஆவதற்கான விதி மிகவும் சுலபமானது. கஷ்டமானதில்லை. ஒரு சொல்லின் மாத்திரையில் கொஞ்சம் வேறுபாடு உள்ளது. அந்தச் சொல் - எனது (மேரா) என்பதை உனது (தேரா) என்று மாற்றி விடுங்கள். எனது இல்லை, உனது. ஆக, இந்தி மொழியில் மேரா என்றும் எழுதுங்கள், தேரா என்றும் எழுதுங்கள். அப்போது என்ன வேறுபாடு உள்ளது? மே மற்றும் தே என்பதற்கு இடையில் என்ன வேறுபாடு? ஆனால் வேறுபாடு அவ்வளவு ஏற்பட்டு விடுகிறது. ஆக, நீங்கள் அனைவரும் எனது-எனது என்பவர்களா, உனது-உனது என்பவர்களா? எனது என்பதை உனது என மாற்றி விட்டீர்களா? மாற்றவில்லை என்றால் மாற்றி விடுங்கள். எனது-எனது என்றால் அடிமை ஆகிறவர்கள். வருத்தமடைபவர்கள். மாயாவின் அடிமை ஆகி விடுகின்றனர் இல்லையா? அப்போது வருத்தமுற்றவராகவும் ஆகவே செய்வார்கள் இல்லையா? வருத்த முற்றவராக ஆவதென்றால் மாயாவின் அடிமை ஆகிறவர்கள். ஆக, நீங்கள் மாயாவை வென்றவர்கள். மாயாவின் அடிமைகள் அல்லர். அப்போது வருத்தம் வருகிறதா? சில நேரம் ருசி பார்த்து விடுகிறீர்கள். ஏனென்றால் 63 பிறவிகளாக வருத்தத்துடன் இருப்பதற்கான அப்பியாசம் உள்ளது இல்லையா? ஆகவே சில நேரம் அது வெளிப்பட்டு விடுகிறது. எனவே பாப்தாதா என்ன சொன்னார்? ஒவ்வொரு குழந்தையும் கவலையற்ற மகாராஜா. இப்போதும் எங்காவது ஒரு மூலையில் கவலையை வைத்திருப்பீர்களானால் அதைக் கொடுத்து விடுங்கள். சுமையை உங்களிடமே ஏன் வைத்துக் கொள்கிறீர்கள்? சுமை தூக்குவதற்கான பழக்க மாகி விட்டதா? சுமையை என்னிடம் கொடுத்து விடுங்கள், லேசாகி விடுங்கள், டபுள் லைட் ஆகுங் கள் என்று பாபா சொல்லும் போது டபுள் லைட் நன்றாக உள்ளதா, சுமை நன்றாக உள்ளதா? எனவே நல்லபடியாக சோதித்துப் பாருங்கள். அமிர்தவேளை எழும்போது சோதித்துப் பாருங்கள் விசேசமாகத் தற்காலத்தில் ஆழ்மனத்தில் (சப்கான்ˆஸ்) கூட ஏதேனும் சுமை இல்லை தானே? சப்கான்ˆஸ் மட்டுமென்ன, கனவில் கூட சுமையின் அனுபவம் இருக்கக் கூடாது. டபுள் லைட் தான் பிடித்திருக்கிறது இல்லையா? அதனால் இந்த விசேˆ வீட்டுப் பாடத்தை பாபா கொடுத்துக் கொண்டிருக்கிறார். அமிர்தவேளையில் சோதித்துப் பார்க்க வேண்டும். சோதித்துப் பார்க்க வருகிறது தானே? ஆனால் சோதித்துப் பார்ப்பதோடு, சோதித்தால் மட்டும் போதாது, மாற்றவும் வேண்டும். எனது என்பதை உனது என மாற்றி விட வேண்டும். எனவே சோதித்துப் பாருங்கள் மற்றும் மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் பாப்தாதா அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார் - சமயம், சுயம் இரண்டையும் பாருங்கள். சமயத்தின் வேகத்தையும் பாருங்கள், சுயத்தின் வேகத்தையும் பாருங்கள். பிறகு இப்படிச் சொல்லக் கூடாது - எனக்கோ தெரியவே தெரியாது - சமயம் இவ்வளவு வேகமாகச் சென்று விட்டது. குழந்தைகள் பலர் புரிந்து கொள்கிறார்கள் - இப்போது கொஞ்சம் மந்தமான புருˆôர்த் தம் உள்ளதென்றால் கடைசி நேரத்தில் வேகப்படுத்தி விடுவோம். ஆனால் நீண்ட கால அப்பியாசம் தான் கடைசியில் சகயோகி ஆகும். மகாராஜா ஆகித்தான் பாருங்களேன்! ஆகி யிருக்கிறீர்கள். ஆனால் சிலர் ஆகியிருக்கிறீர்கள், சிலர் ஆக வில்லை. சென்று கொண்டிருக் கிறோம், செய்து கொண்டிருக்கிறோம், சம்பன்னமாகி விடுவோம் இப்போது நடப்பது கூடாது, செய்வது கூடாது, பறக்க வேண்டும். இப்போது பறக்கும் வேகம் வேண்டும். இறக்கைகளோ கிடைத்து விட்டன இல்லையா? ஊக்கம்-உற்சாகம் மற்றும் தைரியத் தின் இறக்கைகள் அனைவருக்கும் கிடைத்துள்ளன மற்றும் பாபாவின் வரதானமும் உள்ளது, நினைவிருக்கிறதா வரதானம்? தைரியத்தின் ஓரடி உங்களுடையது. மற்றும் ஆயிரம் அடியின் உதவி பாபா வுடையது. ஏனென்றால் பாபாவுக்குக் குழந்தைகளிடம் மனப்பூர்வ அன்பு உள்ளது. ஆக, அன்புள்ள குழந்தைகள் கஷ்டப்பட்டு உழைப்பதை பாபா பார்க்க விரும்புவதில்லை. அன்பில் இருப்பீர்களானால் உழைப்பு முடிந்து போய் விடும். உழைப்பது நன்றாக உள்ளதா என்ன? களைத்து விட்டீர்கள். 63 பிறவிகளாக அலைந்து அலைந்து முயற்சி செய்து களைத்து விட்டீர்கள். பாபா தமது அன்பினால் அலைவதற்கு பதிலாக மூன்று சிம்மாசனங்களின் எஜமானர் ஆக்கி விட்டார். மூன்று சிம்மாசனங்கள் பற்றி அறிவீர்களா? என்ன அறிந்திருக் கிறீர்கள், ஆனால் சிம்மாசனதாரி நீங்கள். அழியாத ஆசன நிவாசியும் ஆவீர்கள். பாப்தாதாவின் மன சிம்மாசனதாரியும் ஆவீர்கள். மேலும் வருங்கால ராஜ சிம்மாசனத்தில் அமர்பவர்களும் நீங்கள். ஆக, குழந்தைகள் அனைவரையும் சிம்மாசனத்தில் அமர்பவர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அத்தகைய பரமாத்ம மன சிம்மாசனம் முழுக் கல்பத்திலும் அனுபவம் செய்ய முடியாது. பாண்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? மகாராஜாக்களா? கை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சிம்மாசனத்தை விடக் கூடாது. தேக உணர்வில் வருகிறீர்கள் என்றால் மண்ணுக்குள் வந்து விட்டீர்கள். இந்த தேகம் மண்ணாகும். சிம்மாசனத்தில் அமரத் தகுதி யுள்ளவராக ஆகி விட்டால் மகாராஜா ஆகி விட்டீர்கள்.

பாப்தாதா குழந்தைகள் அனைவருடைய புருˆôர்த்தத்தின் சார்ட்டை சோதித்துப் பார்க்கிறார். நான்கு பாடங்களிலும் யார்-யார் எது வரை சென்று சேர்ந்திருக்கிறார்கள்? ஆக, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் சார்ட்டையும் சோதித்துப் பார்த்தார் - பாப்தாதா என்ன வெல்லாம் கஜானாக்கள் கொடுத்தாரோ, அந்த அனைத்துக் கஜானாக்களையும் எது வரை சேமித்திருக்கிறார்கள்? ஆக, சேமிப்புக் கணக்கை சோதித்தார். ஏனென்றால் கஜானாவை அனைவருக்கும் ஒரே மாதிரி தான் கொடுத்துள்ளார். சிலருக்குக் குறைவாகவும் சிலருக்கு அதிக மாகவும் கொடுக்கவில்லை. கஜானா சேமிப்பாவதற்கான அடையாளம் என்ன? கஜானா பற்றித் தெரியும் இல்லையா? அனைத்திலும் பெரிய கஜானா சிரேஷ்ட சங்கல்பத்தின் கஜானா. சங்கல்பம் கூட கஜானா தான். எனவே தற்காலத்தின் சமயமும் பெரிய கஜானா தான்.. ஏனென்றால் தற்போதைய சமயத்தில் எதை யெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ, எந்த வரதானங்களைப் பெற விரும்புகிறீர்களோ, எவ்வளவு தன்னை சிரேஷ்டமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறீர்களோ, அவ்வளவு இப்போது ஆக்க முடியும். இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லை. எப்படி சங்கல்பங்களின் கஜானாவை வீணாக்கு வது என்றால் தன்னுடைய பிராப்திகளை வீணாக்குவதாகும். அதே போல் சமயத்தின் ஒரு விநாடியைக் கூட வீணாக்கி விட்டீர்கள், பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளவில்லை என்றால் அதிகம் வீணாக்கி விட்டீர்கள். அதோடு ஞானத்தின் கஜானா, சக்திகளின் கஜானா மற்றும் ஒவ்வோர் ஆத்மா மற்றும் பரமாத்மாவிடமிருந்து ஆசிர்வாதங்களின் கஜானா. அனைத்திலும் சுலபமானது, புருசார்த்தத்தில் ஆசிர்வாதங்களைக் கொடுங்கள் மற்றும் ஆசிர்வாதங்களைப் பெறுங்கள். சுகம் கொடுங்கள் மற்றும் சுகம் பெறுங்கள். துக்கம் கொடுக்காதீர்கள், துக்கத்தைப் பெறாதீர்கள். துக்கம் கொடுக்கவில்லை, ஆனால் துக்கம் பெறுகிறீர்கள் என்றால் துக்கமடைவீர்கள் இல்லையா? எனவே ஆசிர்வாதங்களைக் கொடுங்கள், சுகம் கொடுங்கள், சுகம் பெறுங்கள். ஆசிர்வாதங்களைக் கொடுக்க வருகிறதா? வருகிறதா? பெறுவதற்கும் வருகிறதா? யாருக்கு ஆசிர்வாதங்களைப் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் வருகிறதோ, அவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது, அனைவர்க்கும் வருகிறதா? நல்லது - இரட்டை வெளிநாட்டினருக்கும் வருகிறதா? வாழ்த்துகள்! கொடுக்க வருகிறது, பெற்றுக் கொள்ள வருகிறது என்றால் வாழ்த்துகள்! பெற்றுக் கொள்ளவும் வருகிறது, கொடுக்கவும் வருகிறது என்றால் பிறகு வேறென்ன வேண்டும்? ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டே செல்லுங்கள், ஆசிர்வாதங்களைக் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். சம்பன்னமாகி விடுவீர்கள். யாராவது சாபமிட்டால் என்ன செய்வீர்கள்? பெற்றுக் கொள்வீர்களா? உங்களுக்கு சாபம் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பெற்றுக் கொள்வீர்களா? சாபத்தை நீங்கள் பெற்றுக் கொள்வீர்களானால் உங்களுக்குள் தூய்மை இருந்ததா? சாபம் என்றால் அது கெட்ட பொருள் இல்லையா? நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள், உள்ளுக்குள் சுவீகாரம் செய்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு உள்ளுக்குள் தூய்மை இல்லை என்றாகிறது இல்லையா? கொஞ்சம் குறை இருந்தாலும் முழுமையடைய முடியாது. கெட்ட பொருளை யாராவது கொடுத்தால் நீங்கள் பெற்றுக் கொள்விர்களா? மாட்டீர்கள் இல்லையா? அல்லது நல்லது, பரவாயில்லை, கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்குவீர்களா? ஒரு போதும் யாரேனும் சாபம் கொடுப்பார் களானால் நீங்கள் மனதின் உள்ளே அதை தாரணை செய்யக் கூடாது. இது சாபம் என்று புரிய வருகிறது. உள்ளுக்குள் தாரணை செய்யாதீர்கள். இல்லையென்றால் குறை ஆகிவிடும். ஆக, இப்போது இந்தப் பழைய வருடத்தில், இன்னும் கொஞ்ச நாள் மீதி உள்ளது. ஆனால் உங்கள் மனதுக்குள் திட செங்கல்பம் செய்யுங்கள் - இப்போதும் யாருடைய சாபமாவது மனதுக்குள் இருக்குமானால் வெளியேற்றி விடுங்கள். பிறகு நாளை முதல் ஆசிர்வாதங்கள் கொடுப்போம், ஆசிர்வாதங்கள் பெறுவோம். சரி தானே? பிடித்திருக்கிறதா? பிடித்திருக்கிறதா, அல்லது செய்து தான் ஆக வேண்டுமா? பிடித்திருக்கிறது தான், ஆனால் யார் நினைக்கிறார்களோ - செய்து தான் ஆக வேண்டும், எது நடந்தாலும் சரி, ஆனால் செய்தே ஆக வேண்டும் - அவர்கள் கை உயர்த்துங்கள். செய்தே ஆக வேண்டும்.

யார் சிநேகி சகயோகி இன்று வந்திருக்கிறீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். ஆக, சிநேகி, சகயோகி யார் வந்திருக்கிறார்களோ, பாப்தாதா அவர்களுக்கு வாழ்த்துகளைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார். ஏனென்றால் சகயோகியாகவோ இருக்கிறீர்கள். சிநேகியாகவும் இருக்கிறீர்கள். ஆனால் இன்று இன்னும் ஓரடி எடுத்து வைத்து பாபாவின் வீட்டிற்கு அல்லது தங்களுடைய வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். அதனால் தங்களின் வீட்டிற்கு வந்தமைக்காக வாழ்த்துகள். நல்லது, சிநேகி, சகயோகி வந்திருப்பவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்களா - ஆசிர்வாதங்கள் கொடுப்போம் மற்றும் பெறுவோம் என்று? புரிந்திருக்கிறீர்களா? தைரியம் வைக்கிறீர்களா? சிநேகி சகயோகி யார் தைரியம் வைக்கிறார்களோ, உதவி கிடைக்கும் - நன்றாகக் கை உயர்த்துங்கள். நல்லது. பிறகோ நீங்களும் சம்பன்னமாகி விடுவீர்கள். வாழ்த்து கள்! யார் ரெகுலர் இறை மாணவர்கள் இருக்கிறார் களோ, பிராமண வாழ்க்கையில் பாப்தாதா வுடன் சந்திப்பதற்காக முதல் தடவை வந்திருக் கிறார்களோ, ஆனால் தன்னை பிராமணர் எனப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ, ரெகுலர் மாணவர் எனப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் செய்தே ஆக வேண்டும் எனப் புரிந்து கொண்டிருப் பார்களானால் கை உயர்த்துங்கள். ஆசிர்வாதங்களைக் கொடுப்பீர்கள், ஆசிர்வாதங்களைப் பெறுவீர்களா? செய்வீர்களா? டீச்சர்கள் எழுந்து கொண்டிருக்கிறீர்களா? இந்தக் கேபினில் இருப்பவர் கள் எழுந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள், நாமோ கொடுக்கத் தான் செய்கிறோம். இப்போது செய்தே ஆக வேண்டும். எது நடந்தாலும் சரி, தைரியம் வையுங்கள். திட சங்கல்பம் வையுங்கள். எப்போதாவது சாபத்தின் தாக்கம் ஏற்படுகிறது என்றால் 10 மடங்கு அதிகம் ஆசிர்வாதங்கள் கொடுத்து அதை முடித்து விட வேண்டும். ஒரு சாபத்தின் பிரபாவத்தை 10 மடங்கு ஆசிர்வாதங்கள் கொடுத்து லேசாக்கி விட வேண்டும். பிறகு தைரியம் வந்து விடும். நஷ்டமோ தனக்கு ஏற்படுகிறது இல்லையா? அடுத்தவரோ சாபம் கொடுத்து விட்டுப் போய் விட்டார். ஆனால் யார் சாபத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டாரோ, யார் துக்கமுள்ளவராக ஆகிறார்? பெறுபவரா அல்லது கொடுப்பவரா? கொடுப்பவரும் ஆகிறார், ஆனால் பெறுபவர் அதிகம் ஆகிறார். கொடுப்பவரோ அலட்சியமாக இருந்து விடுவார்.

இன்று பாப்தாதா தமது மனதின் விசேˆ ஆசையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். பாப்தாதாவுக்கு அனைத்துக் குழந்தைகளுக்காகவும், ஒவ்வொரு குழந்தைக்காகவும், இந்த தேசத்தவராயினும், வெளிநாட்டினராயினும், சகயோகி ஆயினும், ஏனென்றால் சகயோகி களுக்கும் கூட அறிமுகமோ கிடைத்துள்ளது இல்லையா? ஆக, எப்போது அறிமுகம் கிடைத்துள்ளதோ, அப்போது அறிமுகத்தின் மூலம் பிராப்தியோ செய்ய வேண்டும் இல்லையா? எனவே பாப்தாதாவுக்கு இதே ஆசை - ஒவ்வொரு குழந்தையும் ஆசிர்வாதங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிர்வாதங்களின் கஜானாவை எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவு சேமித்துக் கொண்டே செல்லுங்கள். ஏனென்றால் இச்சமயம் எவ்வளவு ஆசிர்வாதங்களைச் சேர்த்து வைக்கிறீர்களோ, சேமித்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு, நீங்கள் எப்போது பூஜைக்குரியவராக ஆகிறீர்களோ, அப்போது ஆத்மாக்களுக்கு ஆசிர்வாதங்கள் கொடுக்க முடியும். துவாபர யுகம் தொடங்கி பக்தர் களுக்கும் ஆசிர்வாதங்கள் கொடுக்க வேண்டும். ஆக, இவ்வளவு ஆசிர்வாதங்களின் ஸ்டாக் சேமிக்க வேண்டும். ராஜா குழந்தைகள் இல்லையா நீங்கள்? பாப்தாதா ஒவ்வொரு குழந்தை யையும் ராஜா குழந்தை யாகப் பார்க்கிறார். குறைவாகப் பார்ப்பதில்லை. நல்லது.

பாப்தாதாவின் ஆசையை அடிக்கோடிட்டு விட்டீர்களா? யார் செய்து விட்டார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள் - செய்து விட்டோம். நல்லது. பாப்தாதா 6 மாதத்திற்கான வீட்டுப் பாடமும் கொடுத்துள்ளார். நினைவுள்ளதா? டீச்சர்களுக்கு நினைவுள்ளதா? ஆனால் இந்த திட சங்கல்பத்தின் முடிவை ஒரு மாதத்தில் பார்ப்போம். ஏனென்றால் புது வருடமோ விரைவில் தொடங்க விருக்கிறது. 6 மாதத்தின் வீட்டுப் பாடம் உங்களுடையது. இந்த ஒரு மாதம் திட சங்கல்பத்தின் முடிவைப் பார்ப்போம். சரியா? டீச்சர்கள், ஒரு மாதம் என்பது சரியா? பாண்டவர்கள், சரியா? நல்லது - யார் முதல் முறை மதுபன் வந்து சேர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். மிக நன்று. பாருங்கள், பாப்தாதாவுக்கு எப்போதும் புதுக் குழந்தைகள் மிகவும் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் புதுக் குழந்தைகள், எப்படி மரம் இருக்கிறது இல்லையா, அதில் சிறு-சிறு இலைகள் வெளிப்படும் போது அவை குருவி களுக்கு மிகவும் பிரியமாக இருக்கும். அது போல் புதுப்புதுக் குழந்தைகள் என்றால், மாயா வுக்கும் மிகவும் பிரியமானவர்களாக இருக்கிறார்கள் .அதனால் புதியவர்கள் ஒவ்வொருவரும் தினம் தங்கள் புதுமையை சோதித்துப் பார்க்க வேண்டும். இன்றைய தினம் நமக்குள் என்ன புதுமையைக் கொண்டு வந்தோம்? எந்த ஒரு விசேஷ குணத்தை, எந்த ஒரு சக்தியைத் தனக்குள் விசேˆமாக தாரணை செய்தோம்? ஆக, சோதித்துக் கொண்டே இருப்பீர்கள், தன்னைப் பரிபக்குவமாக ஆக்கிக் கொண்டே இருப்பீர்களானால் பாதுகாப்பாக இருப்பீர்கள். அமரராக இருப்பீர்கள். ஆக, அமரராக இருக்க வேண்டும், அமர பதவி பெற வேண்டும். நல்லது.

நாலாபுறம் உள்ள கவலையற்ற மகாராஜாக்களுக்கு, சதா ஆன்மிகப் பெருமையில் இருக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா கிடைத்துள்ள கஜானாக்களை சேமிப்புக் கணக்கில் அதிகரிக்கக் கூடிய தீவிர புருˆôர்த்தி ஆத்மாக்களுக்கு, சதா ஒரு சமயத்தில் மூன்று விதமான சேவை செய்யக்கூடிய சிரேஷ்ட சேவாதாரிக் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள், பல கோடி மடங்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:
சர்வ சக்திகளைக் கட்டளைப்படி தனது சகயோகி ஆக்கக்கூடிய இயற்கையை வென்றவர் ஆகுக.

அனைத்திலும் பெரியதிலும் பெரிய தாசி இயற்கை ஆகும். எந்தக் குழந்தைகள் இயற்கையை வெல்வதற்கான வரதானத்தைப் பெறுகிறார்களோ, அவர்களின் கட்டளைப்படி சர்வ சக்திகள் மற்றும் இயற்கையாகிய தாசி காரியமாற்றுகின்றன, அதாவது சமயத்தில் சகயோகம் கொடுக் கின்றன. ஆனால் இயற்கையை வென்றவர் ஆவதற்கு பதிலாக கவனக்குறைவின் தூக்கத்தில் அல்லது அல்பகாலப் பிராப்தியின் நˆôவில் அல்லது வீண் சங்கல்பங்களின் நடனத்தில் போதை யாகித் தனது சமயத்தை வீணாக்குகிறீர்கள் என்றால் சக்திகள் கட்டளைப் படி காரியமாற்ற முடியாது. எனவே சோதித்துப் பாருங்கள் - முதலில் முக்கியமானது சங்கல்ப சக்தி, நிர்ணய சக்தி மற்றும் சம்ஸ்காரத்தின் சக்தி மூன்றுமே கட்டளைப்படி உள்ளனவா?

சுலோகன்:
பாப்தாதாவின் குணங்களைப் பாடிக்கொண்டே இருப்பீர்களானால் தானும் குணமூர்த்தி ஆகி விடுவீர்கள்.

அவ்யக்த இசாரா - இணைந்த ரூபத்தின் நினைவு மூலம் சதா வெற்றியாளர் ஆகுங்கள்

இணைந்த சேவை இல்லாமல் வெற்றி கிடைக்காது. அப்படி இல்லாமல் சேவை செய்வதற்காகப் போகிறீர்கள், திரும்பி வந்து சொல்கிறீர்கள் - மாயா வந்து விட்டது, மூடு ஆஃப் ஆகி விட்டது, தொந்தரவாகி விட்டது என்று ஆகிவிடக் கூடாது. எனவே அடிக் கோடிடுங்கள் - சேவையில் வெற்றி அல்லது சேவையில் விருத்திக்கான சாதனம், சுயத்தின் சேவை மற்றும் அனைவருக்கு மான இணைந்த சேவை.