06-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாபா தோட்டத்தின் எஜமானராக இருக்கிறார், இந்த தோட்டத்து எஜமானரிடம் தோட்டக்காரர்களாகிய நீங்கள் நல்ல நல்ல நறுமணமிக்க மலர்களைக் கொண்டுவர வேண்டும், வாடிப்போன மலர்களைக் கொண்டு வராதீர்கள்.

கேள்வி:
பாபாவின் பார்வை எந்தக் குழந்தைகள் மேல் படுகிறது? யார் மேல் படுவதில்லை?

பதில்:
யார் நல்ல நறுமணம் தரும் மலர்களோ, நிறைய முட்களை மலராக்கக் கூடிய சேவை செய்கிறார்களோ, அவர்களைப் பார்த்து பார்த்து பாபா மகிழ்ச்சி அடைகின்றார். அவர்கள் மேல் தான் பாபாவின் பார்வை போகின்றது. யாருடைய உள்ளுணர்வு அசுத்தமாக உள்ளதோ, கண்கள் ஏமாற்று கின்றதோ, அவர்கள் மேல் பாபாவின் பார்வை கூட படுவதில்லை. பாபா கூட சொல்வார் - குழந்தைகளே மலராகி நிறைய மலர்களை உருவாக்குங்கள், அப்போது புத்திசாலி தோட்டக்காரர் என்று சொல்லப்படுவீர்கள்.

ஓம் சாந்தி.
தோட்டத்து எஜமானராகிய பாபா வந்து தன்னுடைய பூக்களைப் பார்க்கின்றார். ஏனெனில் எல்லா சென்டர்களிலும் பூக்கள் மற்றும் தோட்டக்காரர்கள் இருக்கின்றனர். இங்கே தோட்டத்து எஜமானரிடம் வந்து உங்கள் நறுமணத்தைப் பரப்புகின்றீர்கள். நீங்கள் மலர்கள் அல்லவா! உங்களுக்கும் தெரியும், பாபாவுக்கும் தெரியும் - முள் காட்டின் விதை ரூபமாக இராவணன் இருக்கிறார். மற்றபடி முழு மரத்தின் விதை ஒரே ஒருவர் தான். ஆனால் மலர்களின் தோட்டத்தை முட்களின் காடாக உருவாக்குபவரும் ஒருவர் இருப்பார். அவரே இராவணன். ஆக தீர்மானியுங்கள்! பாபா சரியாக சொல்லிக் கொடுக்கிறார் அல்லவா! தேவதைகள் என்ற பூக்களின் தோட்டத்திற்கு விதை ரூபம் தந்தை ஆவார். நீங்கள் இப்போது தேவி தேவதை ஆகிக் கொண்டிருக் கிறீர்கள் அல்லவா! நாம் எப்படிப்பட்ட மலராக இருக்கின்றோம் என்று ஒவ்வொருவரும் தெரிந்திருக்கிறார்கள். தோட்டத்து எஜமானர் கூட பூக்களைப் பார்க்க இங்கே தான் வருகின்றார். மற்ற அனைவரும் தோட்டக்காரர் ஆவர். அதிலும் பலவிதமான தோட்டக்காரர்கள் இருக்கின்றனர். அந்த தோட்டத்திலும் வித விதமான தோட்டக் காரர்கள் இருப்பார்கள் அல்லவா! சிலருக்கு 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது, சிலருக்கு 1000 ரூபாய் கிடைக்கிறது, சிலருக்கு 2000 ரூபாய் கிடைக்கிறது. மொகல் கார்டனின் (புதுடில்லியிலுள்ள பிரசித்தி பெற்ற பெரிய மலர்த் தோட்டம்) தோட்டக்காரர் கண்டிப்பாக மிகுந்த புத்திசாலியாக இருப்பார். அவருடைய ஊதியம் மிக அதிகமாக இருக்கும். இது எல்லைக்கப்பாற்பட்ட பெரிய தோட்டமாக இருக்கிறது, அதிலும் பல விதமான தோட்டக்காரர்கள் வரிசைக்கிரமமாக இருக்கின்றார்கள். யார் மிக நல்ல தோட்டக்காரர்களாக இருக்கின்றனரோ, அவர்கள் தோட்டத்தை மிக நல்ல அழகுடையதாக உருவாக்குகின்றனர், நல்ல பூக்களை வைக்கின்றனர். அரசு இல்லத்தின் மொகல் கார்டன் எவ்வளவு நன்றாக உள்ளது! இது எல்லைக்கப்பாற்பட்ட தோட்டமாகும். தோட்டத்து எஜமானன் ஒருவர் தான். முள்காட்டின் விதை இராவணன் மற்றும் மலர்த் தோட்டத்தின் விதை சிவபாபா ஆவார். ஆஸ்தி பாபாவிடமிருந்து கிடைக்கிறது, இராவணனிடமிருந்து கிடைப்பதில்லை. அவர் சாபம் கொடுக்கிறார். எப்போது சாபத்துக்கு ஆளாகின்றனரோ, அப்போது அனைவரும் சுகம் கொடுக்கக்கூடியவரை நினைவு செய்கின்றனர். ஏனெனில் அவர் சுகத்தின் வள்ளல், எப்போதும் சுகம் தரக்கூடியவர் ஆவார். தோட்டக்காரர்கள் கூட வித விதமாக இருக்கின்றனர். எப்படி தோட்டத்தை சிறியதாகவோ, பெரியதாகவோ உருவாக்கி இருக்கின்றனர் என்று தோட்டத்து எஜமானர் வந்து தோட்டக்காரர் களையும் பார்க்கிறார். எப்படிப்பட்ட மலர்களாக இருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொண்டு வருகின்றார். சில நேரம் மிக நல்ல நல்ல தோட்டக்காரர்களாக வருகின்றனர், அவர்கள் தோட்டத்து மலர்களின் அலங்காரம் கூட மிக நன்றாக இருக்கிறது. அப்போது தோட்டத்து எஜமானருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது - ஆஹா! இவர் மிக நல்ல தோட்டக்காரராக இருக்கிறார், நல்ல மலர் களைக் கொண்டு வந்திருக்கிறார். இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை மற்றும் அவருடையது எல்லையற்ற விசயங்கள் ஆகும். பாபா முற்றிலும் சத்தியமானதை சொல்கிறார் என்று குழந்தைகள் நீங்கள் மனதில் புரிந்து கொள்கின்றீர்கள். அரைகல்பம் இராவண இராஜ்யம் நடக்கிறது. மலர்த் தோட்டத்தை முள்காடாக இராவணன் ஆக்கி விடுகிறார். காட்டில் ஒரே முட்களாக இருக்கும், மிகுந்த துக்கம் இருக்கும். தோட்டத்தில் முள்செடி இருக்குமா என்ன! ஒரு முள்செடி கூட இருக்காது. குழந்தைகள் அறிவர், இராவணன் தேக அபிமானத்தில் கொண்டு வருகிறது. பெரிய திலும் பெரிய முள் தேக அபிமானம் ஆகும்.

சிலருடைய பார்வை காம விகாரம் நிறைந்ததாக இருக்கிறது மற்றும் சிலருடைய பார்வை பாதியளவு காம விகாரத்துடன் இருக்கிறது என்று பாபா (நேற்று இரவு வகுப்பு) இரவிலும் கூட புரிய வைத்தார். சிலர் புதிய புதிய குழந்தைகளாகவும் வருகின்றனர். அவர்கள் முதலில் நன்றாக இருக்கின்றனர், "விகாரத்தில் ஒருபோதும் செல்ல மாட்டோம், தூய்மையாக இருப்போம்" என்று நினைக்கின்றனர். அந்த நேரம் மட்டும் சுடுகாட்டு வைராக்கியம் வருகிறது. பிறகு வீட்டிற்குச் சென்றதும் மோசமாகி விடுகின்றனர், அவர்களுடைய பார்வை அசுத்தமாகி விடுகிறது. பாபா இவர் மிகவும் நல்ல மலராக இருக்கிறார் என்று நல்ல நல்ல பூக்கள் என்று எண்ணி, தோட்டத்து எஜமானரிடம் கொண்டு வருகின்றனர். இவர் இப்படிப்பட்ட மலராக இருக்கிறார் என்று சில தோட்டக்காரர்கள் பாபாவின் காதில் சென்று சொல் கின்றனர். தோட்டக்காரர்கள் என்றால் கண்டிப்பாக சொல்வார்கள் அல்லவா! பாபா உள்மனதை அறிபவர் என்பது கிடையாது. தோட்டக் காரர் ஒவ்வொருவருடைய நடத்தையையும் சொல்கின்றார் - பாபா இவருடைய பார்வை நன்றாக இல்லை, இவருடைய நடத்தை இராயலாக இல்லை, இவர் 10-20 சதவீதம் மாறி இருக்கின்றார். கண்கள் தான் முக்கியமானதாகும், அவை தான் மிகவும் ஏமாற்றுகின்றன. தோட்டக்காரர் வந்து தோட்டத்து எஜமானரிடம் அனைத்தையும் சொல்வார். நீங்கள் எப்படிப் பட்ட மலர்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று பாபா ஒவ்வொருவரிடமும் (டீச்சரிடம்) கேட்கின்றார். சிலர் ரோஜா மலராக இருக்கின்றனர், சிலர் மல்லிகையாக இருகின்றனர். சிலர் அரளிப் பூக்களைக் கூட அழைத்து வருகின்றனர். இங்கே மிக எச்சரிக்கையோடு இருக்கின்றனர், காட்டுக்கு சென்றதும் (உலக வாழ்வில்) வாடிப் போய்விடுகின்றனர். இவர் எந்த மாதிரியான மலர் என்று பாபா பார்க்கின்றார். மாயை தோட்டக் காரர்களையும் மிக பலமாக அடித்து விடுகிறது, ஆக தோட்டக் காரரும் கூட முள்ளாக மாறி விடுகிறார்கள். தோட்டத்து எஜமானர் வருகிறார் என்றால் முதலில் தோட்டத்தைப் பார்க்கின்றார், பிறகு பாபா அமர்ந்து மலர்களை அலங்காரம் செய்கின்றார். குழந்தைகளே! எச்சரிக்கையோடு இருங்கள், குறைகளை நீக்கிக் கொண்டே செல்லுங்கள், இல்லை யானால் பிறகு பச்சாதாபப் படவேண்டி இருக்கும். பாபா இலக்ஷ்மி நாராயணனாக ஆக்க வந்திருக்கின்றார், அதற்கு பதிலாக நாம் வேலைக்காரராக ஆகலாமா என்ன! நாம் அவ்வளவு உயர்ந்தவர்களாக ஆக தகுதியானவர் ஆகின்றோமா? என்று தன்னைத் தானே சோதனை செய்யப் படுகிறது. முள்காட்டின் விதையாக இராவணன் இருக்கின்றார், மலர்த் தோட்டத்தின் விதையாக இராமர் இருக்கின்றார் என்று தெரிந்திருக்கிறீர்கள். இந்த அனைத்து விசயங்களையும் பாபா அமர்ந்து சொல்கின்றார். ஆனாலும் பாபா பள்ளிப் படிப்பை மகிமை செய்கின்றார், அந்தப் படிப்பு நல்லதாகும், ஏனெனில் அது வருமானத்துக்கான ஆதாரம் ஆகும், குறிக்கோள் கூட இருக்கிறது. இது கூட பாடசாலை ஆகும், இங்கே குறிக்கோள் இருக்கிறது. வேறு எங்கும் இப்படி குறிக்கோள் இருப்பதில்லை. உங்களுடையது நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான ஒரே ஒரு குறிக்கோள் ஆகும். பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணனுடைய கதையை மிகவும் கேட்கின்றனர். ஒவ்வொரு மாதமும் பிராமணனை அழைக்கின்றனர், பிராமணன் கீதையை சொல்கின்றார். இன்றைக்கோ கீதையை அனைவரும் சொல்கின்றனர். உண்மையான பிராமணர்கள் யாருமே இல்லை. நீங்களோ சத்தியமான பிராமணர்கள், சத்தியமான தந்தையின் குழந்தைகளாக இருக்கின்றீர்கள். நீங்கள் உண்மையிலும் உண்மையான கதையை சொல்கின்றீர்கள். சத்திய நாராயணனுடைய கதையாக வும் இருகிறது, அமர கதையாகவும் இருக்கிறது, மூன்றாம் கண்ணின் கதையாகவும் இருக்கிறது. பகவானுடைய மகாவாக்கியம் - நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆக்குகின்றேன். அந்த மனிதர்கள் கீதையை சொல்லிக் கொண்டே வருகின்றனர். பிறகு யார் இராஜா ஆனார்? நான் உங்களை இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆக்குவேன், நானோ அப்படி ஆக மாட்டேன் என்று சொல்லக்கூடியவர் யாரும் இருக்கிறார்களா? இப்படி இதற்கு முன்பு கேட்டிருக்கிறீர்களா? இந்த ஒரே ஒரு தந்தை மட்டும் தான் குழந்தைகளுக்கு இப்படி புரிய வைக்கிறார். இங்கே தோட்டத்து எஜமானரிடம் புத்துணர்ச்சி அடைய வருகின்றோம் என்று குழந்தைகள் தெரிந்திருக்கின்றனர். தோட்டக்காரர்களாகவும் ஆகின்றனர், பூக்களாகவும் ஆகின்றனர். கண்டிப்பாக தோட்டக்காரர் ஆக வேண்டும். வித விதமான தோட்டக்காரர்கள் இருக்கின்றனர். நல்ல சேவை செய்ய வில்லை என்றால் எப்படி நல்ல மலர்களை உருவாக்க முடியும்? நான் எப்படிப்பட்ட மலர்? எப்படிப் பட்ட தோட்டக்காரன்? என்று ஒவ்வொருவரும் தன் மனதிடம் கேட்க வேண்டும். குழந்தைகள் ஞான சிந்தனை (விசார் சாகர் மந்தன்) செய்ய வேண்டும். தோட்டக்காரர் கூட வித விதமாக இருக் கின்றனர் என்று பிராமணிகள் தெரிந்திருக்கின்றனர். சில நல்ல நல்ல தோட்டக்காரர்களும் வருகின்றனர். அவர்களுடையது பெரிய நல்ல தோட்டமாக இருக்கும். நல்ல தோட்டக்காரர் என்றால் தோட்டத்தையும் நல்லதாக உருவாக்குகின்றார். நல்ல நல்ல பூக்களை பாபாவிடம் கொண்டு வருகின்றனர், அதைப் பார்த்து மனம் மகிழ்ச்சி அடைகின்றது. சிலர் சாதாரண பூக்களைக் கொண்டு வருகின்றனர், இவர்கள் என்னென்ன பதவி அடைவார்கள் என்று தோட்டத்து எஜமானர் புரிந்து கொள்கின்றார். இப்போது நேரம் இருக்கிறது. ஒவ்வொரு முள்ளையும் மலராக்குவதில் உழைப்பு தேவைப்படுகிறது. சிலர் மலராக மாற விரும்புவதே இல்லை, முள்ளை தான் விரும்பு கின்றனர். அவர்களின் கண்களுடைய உள்ளுணர்வு மிக அசுத்தமாக இருக்கிறது. இங்கே வந்தும் கூட அவர்களுக்குள் நறுமணம் ஏற்படுவதில்லை. எனக்கு முன்னால் மலர்கள் அமர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோட்டத்து எஜமானர் விரும்புகின்றார். அவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடை கின்றேன் என்கின்றார். இவர்களுடைய உள்ளுணர்வு இப்படி (விகாரமானதாக) இருக்கிறது என்று பார்க்கின்றேன், ஆக அவர்கள் மீது பார்வை கூட படுவதில்லை. ஆகையால் ஒவ்வொருவரையும் பார்க்கின்றேன் - என்னுடைய இந்த மலர் எப்படிப்பட்டதாக இருக்கிறது? எவ்வளவு நறுமணம் கொடுக்கின்றது? முள்ளிலிருந்து மலராகி இருக்கிறார்களா இல்லையா? ஒவ்வொருவரும் தனக்குத்தானே புரிந்து கொள்ள முடியும் - நாம் எந்தளவு மலராகி இருக்கின்றோம்? முயற்சி செய்கின்றோம்? அடிக்கடி சொல்கின்றனர் - பாபா நாங்கள் உங்களை மறந்து விடுகின்றோம், யோகத்தில் அமர முடிவதில்லை. நினைவு செய்ய வில்லையானால் எப்படி மலராக ஆவீர்கள்? நினைவு செய்தால் பாவங்கள் துண்டிக்கப்படும், மலராக மாறி மற்றவர்களையும் மலராக்குவீர்கள். அப்போது தான் தோட்டக்காரர் என்ற பெயர் வைக்க முடியும். பாபா தோட்டக்காரர்களை கேட்டுக் கொண்டே இருக்கிறார் - தோட்டக் காரர்கள் இருகின்றீர்களா? ஏன் தோட்டக்காரராக ஆக முடியாது? பந்தனத்தை விட வேண்டும். உள்ளுக்குள் உற்சாகம் வர வேண்டும், சேவையின் ஆர்வம் இருக்க வேண்டும். தன்னுடைய சிறகுகளை விரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். யார் மேல் அதிக அன்பு இருக்கிறதோ, அவரை விட்டு பிரிய முடியுமா என்ன? பாபாவின் சேவைக்காக எதுவரை மலராகி, பிறரையும் ஆக்கவில்லையோ, அதுவரை உயர்ந்த பதவி எப்படி கிடைக்கும்? 21 பிறவிகளுக்கான உயர்ந்த பதவி ஆகும். மகாராஜாக்கள், இராஜாக்கள், பெரிய பெரிய செல்வந்தர் களும் இருக்கின்றனர். பிறகு வரிசைக்கிரமமாக குறைவான செல்வந்தர்களும் இருக்கின்றனர், பிரஜைகளும் இருக்கின்றனர். இப்போது நாம் என்ன ஆவோம்? யார் இப்போது முயற்சி செய்வார்களோ, அவர்கள் கல்ப கல்பத்திற்கு அப்படி ஆவார்கள். இப்போது முழுமையான சக்தி கொடுத்து முயற்சி செய்ய வேண்டும், நரனிலிருந்து நாராயணர் ஆக வேண்டும். யார் நல்ல முயற்சியாளர்களோ, அவர்கள் நடைமுறையில் கொண்டு வருவார்கள். தினசரி வருமானம் மற்றும் நஷ்டத்தைப் பார்க்க வேண்டும். இது 12 மாதத்திற்கான விசயம் அல்ல. தினமும் தன்னுடைய லாப நஷ்டக்கணக்கு பார்க்க வேண்டும். நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது. இல்லை யானால் மூன்றாம் பிரிவினர் ஆகி விடுவீர்கள். பள்ளிக்கூடத்தில் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா!

இனிமையிலும் இனிமையான குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள் - விருட்சபதி நம்முடைய விதையாக இருக்கிறார், அவர் வருவதன் மூலம் நம் மீது பிரகஸ்பதி திசை அமர்கிறது. பிறகு இராவண இராஜ்யம் வரும்போது இராகு தசை அமர்கிறது. விருட்சபதி மிகவும் உயர்ந்தவர், இராவணன் மிகவும் தாழ்ந்தவர். ஒரேடியாக சிவாலயத்தை வைஷ்யாலயமாக மாற்றிவிடு கின்றான். இப்போது குழந்தைகளாகிய உங்கள் மீது பிரகஸ்பதி திசை இருக்கிறது. முதலில் புதிய மரமாக இருக்கிறது, பிறகு பாதிக்குப் பின் பழையது ஆரம்பமாகிறது. தோட்டத்து எஜமானரும் இருக்கிறார், தோட்டக்காரர்களும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர். தோட்டத்து எஜமானரிடம் பூக்களை கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு தோட்டக்காரரும் பூக்களைக் கொண்டுவரு கின்றனர். பாபாவிடம் செல்ல வேண்டும் என்று துடிக்கக்கூடிய நல்ல நல்ல குழந்தைகளை சிலர் அழைத்து வருகின்றனர். எப்படி விதவிதமான யுக்திகளோடு பாபாவிடம் குழந்தைகள் வருகின்றனர். மிக நல்ல மலரைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று பாபா சொல்கிறார். தோட்டக் காரர் இரண்டாம் தரமாக இருந்தாலும், தோட்டக்காரரை விட மலர்கள் நன்றாக இருக்கின்றன - நம்மை அவ்வளவு உயர்ந்த உலகத்தின் எஜமானர் ஆக்கக்கூடிய சிவபாபாவிடம் செல்ல வேண்டும் என்று துடிக்கிறார்கள். வீட்டில் அடி வாங்கினாலும் கூட 'சிவபாபா எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று சொல்கிறார்கள். அவர்களைத் தான் உண்மையான திரௌபதி என்று சொல்லப்படுகிறது. எது நடந்து முடிந்ததோ, அது மீண்டும் நடக்கத் தான் வேண்டும். நேற்று அழைத்தீர்கள் அல்லவா! இன்று பாபா காப்பாற்றுவதற்காக வந்திருக்கிறார். பூம்-பூம் செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். நீங்கள் குளவி களாக இருக்கிறீர்கள், அவர்கள் புழுக்களாக இருக்கிறார்கள். அவர் களிடம் பூம்-பூம் என்று செய்து கொண்டே இருங்கள். அவர்களிடம் சொல்லுங்கள் - காமம் மகா எதிரி, அதனை வெல்வதன் மூலம் உலகத்தின் எஜமானர் ஆகின்றீர்கள் என்பது பகவானுடைய மகாவாக்கியம் ஆகும். சில நேரம் அபலைகளின் பேச்சைக் கேட்டு குளிர்ச்சி அடைந்து விடு கின்றனர். சொல்கின்றனர் - நல்லது, செல்லுங்கள், உங்களை அப்படி (உலகத்தின் எஜமானர்) ஆக்குபவரிடம் செல்லுங்கள். என்னுடைய அதிர்ஷ்டத்தில் இல்லை, நீங்களாவது செல்லுங்கள். அப்படிப்பட்ட திரௌபதிகள் அழைக்கின்றனர். பூம்-பூம் செய்யுங்கள் என்று பாபா எழுதுகிறார். ஒரு சில மனைவிமார்கள் அப்படி இருக்கின்றனர், அவர்களை சூர்ப்பனகை, பூதனா (அரக்கிகள்) என்று சொல்லப்படுகிறது. கணவர்கள் அவர்களுக்கு பூம்-பூம் செய்கிறார்கள். அவர்கள் புழுக்களாக இருக்கின்றனர், விகாரமில்லாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை. தோட்டத்து எஜமானரிடம் வித விதமாக வருகிறார்கள், கேட்கவே கேட்காதீர்கள் (அவ்வளவு மோசமானவர்களாக இருக்கிறார்கள்) சில கன்னிகைகள் கூட முட்களாகி விடுகின்றனர். ஆகையால் பாபா சொல்கிறார் - தன்னுடைய ஜாதகத்தை சொல்லுங்கள். பாபாவிடம் சொல்லவில்லை, மறைக்கிறார்கள் என்றால் அது அதிகரித்துக் கொண்டே போகும். பொய்யானவர்கள் இருக்க முடியாது. உங்கள் உள்ளுணர்வும் மோசமாகிக் கொண்டே போகும். பாபாவிடம் சொல்வதன் மூலம் நீங்கள் காப்பாற்றப்பட்டு விடுவீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டும், இல்லையானால் முற்றிலும் பெரிய நோயாளி ஆகி விடுவீர்கள். யார் விகாரி ஆகின்றார்களோ, அவர்களுடைய முகம் கறுப்பாகி விடுகிறது என்று பாபா சொல்கிறார். தூய்மையற்றவர் என்றால் கறுப்பு முகம். கிருஷ்ணரைக் கூட ஷியாம்-சுந்தர் என்று சொல்கின்றனர். கிருஷ்ணரைக் கறுப்பாக்கி விட்டனர். இராமரை நாராயணரைக் கூட கறுப்பாகக் காட்டுகின்றனர். அர்த்தம் எதுவும் புரிந்து கொள்வதில்லை. உங்களிடம் உள்ள நாராயணரின் சித்திரம் வெண்மையாக உள்ளது, இது உங்களுடைய குறிக்கோள் ஆகும். நீங்கள் கறுப்பு நாராயணர் ஆகக் கூடாது. இங்கிருக்கும் கோயிலில் உள்ளது போல நாராயணர் இருக்கவில்லை. விகாரத்தில் விழுவதன் மூலம் கறுப்பு முகம் ஆகி விடுகிறது. ஆத்மா கறுப்பாகி விட்டது. இரும்பு யுகத்திலிருந்து தங்க யுகம் செல்ல வேண்டும். தங்கக் குருவி ஆக வேண்டும். கல்கத்தா காளி என்று சொல்கின்றனர். எவ்வளவு பயங்கரமான உருவமாக காண்பிக்கின்றனர், விசயத்தையே கேட்காதீர்கள்! இவையனைத்தும் பக்தி மார்க்கம் என்று பாபா சொல்கிறார். இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தன்னுடைய சிறகுகளை விரிப்பதற்காக (சுதந்திரமாவதற்காக) முயற்சி செய்ய வேண்டும். பந்தனங்களிலிருந்து விடுபட்டு புத்திசாலி தோட்டக்காரர் ஆக வேண்டும். முட்களை மலராக்கும் சேவை செய்ய வேண்டும்.

2. நான் எவ்வளவு நறுமணமுள்ள மலராகி இருக்கின்றேன்? என்னுடைய உள்ளுணர்வு சுத்தமாக இருக்கிறதா? கண்கள் ஏமாற்றம் தரவில்லை தானே? என்று தன்னைத் தான் பார்க்க வேண்டும். தன்னுடைய நடத்தையின் கணக்கு வழக்கு வைத்து, குறைகளை நீக்க வேண்டும்.

வரதானம்:
சுய இராஜ்ஜியத்தின் நசா மற்றும் நம்பிக்கையின் மூலமாக சதா சக்திசாலி ஆகக்கூடிய சகஜயோகி, நிரந்தர யோகி ஆகுங்கள்.

சுய இராஜ்ஜிய அதிகாரி எனில், ஒவ்வொரு கர்ம இந்திரியத்தின் மீது தனது இராஜ்ஜியத்தை செலுத்துபவர் ஆவர். ஒருபோதும் சங்கல்பத்திலும் கூட கர்ம இந்திரியங்கள் ஏமாற்ற கூடாது. எப்போதாவது தேக அபிமானம் வந்து விட்டால், ஆவேசம் அல்லது கோபமானது சகஜமாக வந்து விடும். ஆனால், யார் சுய இராஜ்ஜிய அதிகாரியாக இருக்கின்றார்களோ, அவர்கள் சதா நிர் அகங்காரியாக மற்றும் பணிவாக இருந்து சேவை செய்வார்கள். எனவே, நான் சுய இராஜ்ஜிய அதிகாரி ஆத்மாவாக இருக்கிறேன் என்ற நஷா மற்றும் நம்பிக்கையின் ஆதாரத்தில் சக்திசாலியாகி மாயாஜீத் நிலையிலிருந்து உலகத்தை வெற்றி அடைந்தால் சகஜயோகியாக , நிரந்தரயோகியாக ஆவீர்கள்.

சுலோகன்:
லைட் ஹவுஸ் ஆகி மனம், புத்தி மூலமாக ஒளியை பரப்புவதில் ஈடுபட்டால், எந்தவொரு விசயத்திலும் பயம் ஏற்படாது.