06-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாபாவுடைய நினைவினால் புத்தி சுத்தமானதாக ஆகிறது. தெய்வீக குணங்கள் வருகிறது. இதனால் ஏகாந்தத்தில் (தனிமையில்) அமர்ந்து தன்னைத் தானே கேளுங்கள், தெய்வீக குணங்கள் எந்த அளவிற்கு என்னுள் வந்துள்ளது?

கேள்வி:
அனைத்தையும் விட பெரிய அசுர அவகுணம் எது? அது குழந்தைகளிடம் இருக்கக் கூடாது?

பதில்:
அனைத்தையும் விட பெரிய அசுர அவகுணம் யாரிடமாவது கரடுமுரடான முரட்டு தனமாக கடுமையான வார்த்தைகள் பேசுவது. இதைத் தான் பூதம் என்று சொல்லப்படுகிறது. எப்பொழுது யாரிடமாவது இந்த பூதம் பிரவேசமாகிறது என்றால் மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் அதனிடமிருந்து விலகி விட வேண்டும். எந்த அளவிற்கு முடிகிறதோ அந்த அளவு பயிற்சி செய்யுங்கள்: இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு புதிய இராஜ்யத்தில் வர வேண்டும். இந்த உலகத்தில் அனைத்தையும் பார்த்தாலும் எதுவும் கண்ணுக்கு தென்படக் கூடாது.

ஓம் சாந்தி.
பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். சரீரத்தை விட்டுச் செல்ல வேண்டும். இந்த உலகத்தையும் கூட மறந்து செல்ல வேண்டும். இது கூட ஒரு பயிற்சி ஆகும். சரீரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் சரீரத்தைக் கூட முயற்சி செய்து மறக்க வேண்டியிருக்கிறது அதனால் இந்த உலகத்தையும் மறக்க வேண்டியிருக்கிறது. அதிகாலையில் மறப்பதற்கான பயிற்சி இருக்கிறது. இப்பொழுது வீடு திரும்பிச் செல்ல வேண்டும். இந்த ஞானம் குழந்தைகளுக்கு கிடைத்திருக்கிறது. முழு உலகத்தையும் விட்டு இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதிகமாக ஞானத்தின் அவசியம் இருப்பதில்லை. முயற்சி செய்து பாபா நினைவின் ஈடுபாட்டில் இருக்க வேண்டும். சரீரத்திற்குக் கூட எந்த அளவு கஷ்டம் ஏற்படுகிறது. பயிற்சி எப்படி செய்வது என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது. நீங்கள் இல்லவே இல்லை (அசரீரி). இது கூட நல்ல பயிற்சி ஆகும். மற்றபடி நேரம் குறைவாக இருக்கிறது. வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு பாபாவுடைய உதவி இருக்கிறது மற்றும் இவருக்கு தன்னுடைய உதவி இருக்கிறது. உதவி அவசியம் கிடைக் கிறது மேலும் முயற்சியும் செய்ய வேண்டியிருக்கிறது. எதையெல்லாம் பார்கின்றோமோ அவைகள் இருப்பதில்லை. இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து பிறகு தன்னுடைய இராஜ்யத்தில் வர வேண்டும் கடைசியில் இந்த இரண்டு விஷயங்கள் தான் இருக்கும் அதாவது செல்ல வேண்டும், பிறகு வர வேண்டும். இந்த நினைவில் இருப்பதனால் சரீரத்தின் வியாதிகள் எதெல்லாம் தொந்தரவு செய்ததோ அவை இல்லாமல் தானாகவே போய்விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த குஷி தங்கிவிடுகிறது. குஷியைப் போன்ற டானிக் இல்லை. எனவே தான் குழந்தைகளுக்கு இதைக் கூட புரிய வைக்க வேண்டியிருக் கிறது. குழந்தைகளே, இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும். இனிமையான வீட்டிற்குச் செல்ல வேண்டும் இந்த பழைய உலகத்தை மறந்து போக வேண்டும். இதற்கு நினைவு யாத்திரை என்று சொல்லப்படுகிறது. இப்பொழுது தான் குழந்தைகளுக்குத் தெரிகிறது. பாபா கல்ப கல்பமாக வருகிறார், கல்பத்திற்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று இதையே கூறுவார். பாபா சொல்கிறார் குழந்தைகளே இப்பொழுது நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதை கல்பத்திற்குப் பிறகும் கேட்பீர்கள். பாபா சொல்கிறார் - நான் கல்ப கல்பமாக வந்து குழந்தை களுக்கு வழிமுறைக் கூறுகிறேன் என்பதை குழந்தைகள் நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். பாபாவின் வழிப்படி நடப்பது குழந்தைகளின் வேலை ஆகும். பாபா வந்து வழிமுறையைச் சொல்கிறார், கூடவே அழைத்தும் செல்கிறார். வழியை மட்டும் கூறுவதில்லை, கூடவே அழைத்தும் செல்கிறார். இங்கு இருக்கும் படங்கள் போன்றவை கடைசியில் எந்த வேலைக்கும் பயன்படுவதில்லை என்பது கூட குழந்தைகளுக்கு புரிய வைக்கப்படுகிறது. பாபா தன்னுடைய அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார். பாபாவுடைய ஆஸ்தி எல்லையற்ற இராஜ்யம் என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். யார் நேற்று கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்களோ, இந்த குழந்தைகளுடைய (லக்ஷ்மி நாராயணன்) மகிமையை பாடியிருந்தார்களோ, பாபா அவர் களைக் கூட குழந்தைகளே! குழந்தைகளே! என்று சொல்வார் இல்லையா?. யார் தான் உயர்ந்தவர்களாக ஆவதற்கு தந்தையின் மகிமை பாடிக் கொண்டிருந்தார் களோ, இப்பொழுது மீண்டும் உயர்ந்தவர்களாக ஆகக்கூடிய முயற்சி செய்கிறார்கள். இது சிவபாபாவிற்கு புதிய விஷயம் ஒன்றும் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு புதிய விஷயம் ஆகும். யுத்த மைதானத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள். சங்கல்பம்-விகல்பம் (கெட்ட எண்ணங்கள்) கூட இவரை (பிரம்மா பாபா) தொந்தரவு செய்யும். இந்த இருமல் கூட இவருடைய கர்மத்தின் கணக்கு வழக்காகும். இதனை அனுபவிக்க வேண்டும். பிரம்மா பாபா போதையில் (குஷியில்) இருக்கிறார். இவர் கர்மாதீத் நிலை ஆக வேண்டும். சிவபாபா எப்பொழுதுமே கர்மாதீத் நிலையில் தான் இருக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு மாயையினுடைய புயல் போன்ற கர்ம வினைகள் வரும். இதைப் புரிய வைக்க வேண்டும். பாபா வழிகாட்டுகிறார் குழந்தை களுக்கு அனைத்தையும் புரிய வைக்கிறார். இந்த இரதத்திற்கு ஏதாவது நடந்தது என்றால் உங்களுக்கு உணர்வு வரும் தாதாவிற்கு ஏதோ ஆகியிருக்கிறது. பாபாவிற்கு எதுவும் ஆவதில்லை. இவருக்கு (பிரம்மாவிற்கு)த் தான் ஆகிறது. ஞான மார்க்கத்தில் குருட்டு நம்பிக்கையின் விஷயம் இருப்பதில்லை. நான் யாருடைய சரீரத்தில் வருகிறேன் என்பதை பாபா புரிய வைக்கிறார். அநேக ஜென்மங்களினுடைய கடைசியில் தூய்மையற்ற இந்த சரீரத்தில் பிரவேசமாகிறேன். தாதாவும் கூட புரிந்திருக்கிறார் எப்படி மற்ற குழந்தைகள் இருக்கிறார்களோ அப்படியே நானும் இருக்கிறேன். தாதா முயற்சியாளர் சம்பூர்ணம் (முழுமை யானவர்) இல்லை. நீங்கள் அனைவரும் பிரஜாபிதாவுடைய குழந்தைகள் பிராமணர்கள் விஷ்ணு பதவியை அடைவதற்காக முயற்சி செய்கிறீர்கள் இலக்ஷ்மி நாராயணன் என்று சொல்லுங்கள், விஷ்ணு என்று சொல்லுங்கள் விஷயம் ஒன்று தான். பாபா தான் புரிய வைத்திருக்கிறார். முன்பு புரியாதவர்களாக இருந்தோம். பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் புரிந்து கொள்ளவில்லை. தன்னைப் பற்றியும் புரிந்து கொள்ளாதவர் களாக இருந்தீர்கள். இப்பொழுது பாபாவையும் பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் பார்ப்பதால் இந்த பிரம்மா தபஸ்யா செய்கிறார் என்பது புத்தியில் வருகிறது. இதுவே வெண்ணிற ஆடை ஆகும். கர்மாதீத் நிலை கூட இங்கு (சங்கமயுகத்தில்) தான் ஏற்படுகிறது. முன்கூட்டியே உங்களுக்கு சாட்சாத்காரம் கிடைக்கிறது. இந்த பாபா ஃபரிஸ்தா ஆவார். நாம் கர்மாதீத் நிலையை அடைந்து வரிசைப்படி ஃபரிஸ்தாவாக ஆவோம் என்பதை நீங்களும் தெரிந்திருக்கிறீர்கள். எப்பொழுது நீங்கள் ஃபரிஸ்தாவாக ஆவீர்களோ அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் இப்பொழுது சண்டை ஏற்படும். மிருகத்திற்கு திண்டாட்டம்... இது மிகவும் உயர்ந்த நிலை ஆகும். குழந்தைகள் தாரணை செய்ய வேண்டும். நாம் சக்கரத்தைச் சுற்றுகிறோம் என்ற நிச்சயம் கூட இருக்கிறது. மற்ற யாரும் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இது புதிய ஞானம். மேலும் தூய்மையாக ஆவதற்காக பாபா நினைவை கற்றுக் கொடுக்கிறார். பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். கல்ப கல்பமாக பாபாவிற்கு குழந்தை ஆகிறீர்கள். 84 ஜென்மத்தினுடைய சக்கரத்தை சுற்றியிருக்கிறீர்கள். யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் புரிய வையுங்கள் - நீங்கள் ஆத்மா, பரம்பிதா பரமாத்மா தந்தை ஆவார் என்பதை. இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள். தெய்வீக இளவரசன் ஆக வேண்டும் என்றால் இந்த அளவு முயற்சி செய்ய வேண்டும் என்பது அப்பொழுது தான் அவர்களுடைய புத்தியில் வரும். விகாரம் போன்ற அனைத்தையும் விட்டுவிட வேண்டும். சகோதரன்-சகோதரி கூட இல்லை, சகோதர-சகோதரன் என்று புரிந்து கொள்ளுங்கள். மேலும் தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவகர்மங்கள் அழிந்துவிடும். மற்றபடி எந்த கஷ்டமும் இருப்பதில்லை. கடைசியில் வேறு எந்த விஷயங்களின் அவசியமும் இருக்காது. தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும் ஆஸ்திக்கு அருகதை உடையவர்களாக வேண்டும். அதுபோல் அனைத்து குணங் களிலும் நிறைந்தவராக ஆக வேண்டும். இலக்ஷ்மி நாராயணன் சித்திரம் மிகவும் துல்லியமாக இருக்கிறது. தந்தையை மறப்பதனால் தான் தெய்வீக குணங்களை தாரணை செய்வதையும் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளே! தனிமையில் அமர்ந்து சிந்தனை செய்யுங்கள் - பாபாவை நினைவு செய்து நாம் இவர்களைப் போல ஆக வேண்டும், இந்த மாதிரியான குணத்தை தாரணை செய்ய வேண்டும். விஷயம் மிகவும் சிறியது. குழந்தை களுக்கு எந்தளவு உழைப்பு (முயற்சி) செய்ய வேண்டியிருக்கிறது! எந்த அளவு தேக அபிமானம் வந்து விடுகிறது. பாபா சொல்கிறார் ஆத்ம அபிமானி ஆகுக. தந்தையிடமிருந்து தான் ஆஸ்தியை எடுக்க வேண்டும். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் குப்பை வெளியேறும்.

இப்பொழுது பாபா வந்திருக்கிறார் என்பதை குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். பிரம்மா மூலமாக புதிய உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார். ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் தெரிந்திருக் கிறீர்கள். இந்த அளவு சகஜமான விஷயம் கூட உங்களிடமிருந்து நழுவி (மறந்து) விடுகிறது. ஒன்று தந்தை, எல்லையற்ற பாபாவிடமிருந்து இராஜ்யம் கிடைக்கிறது. பாபாவை நினைவு செய்தால் புது உலகத்தின் நினைவு வருகிறது. அபலைகள்-கூன் விழுந்தவர்கள் கூட மிகவும் நல்ல பதவியை அடைய முடியும். தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள். பாபாவே வழியை சொல்லியிருக்கிறார். பாபா சொல்கிறார் தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து கொள்ளுங்கள். தந்தையின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இப்பொழுது 84 ஜென்மங்களை முடித்திருக்கிறோம், வீட்டிற்கு சென்று பிறகு சொர்க்கத்தில் வந்து நடிப்பை நடிப்போம் என்று புத்தியில் பதிந்துவிடுகிறது. எங்கு நினைவு செய்வது, எப்படி செய்வது என்ற கேள்வியே எழுவதில்லை. தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்று புத்தியில் இருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் பொழுது உங்களுக்கு ஆனந்தம் வருகிறது. நேரடியாக தந்தையை சந்திக்கிறீர்கள். சிவபாபா வுடைய ஜெயந்தி எப்படியிருக்கும் என்று மனிதர்கள் குழம்பிவிடுகிறார்கள். சிவராத்திரி என்று ஏன் சொல்லப்படுகிறது என்பதைக் கூட புரிந்து கொள்வதில்லை. இரவில் கிருஷ்ணருக்கு ஜெயந்தி ஏற்படுகிறது என்று கூட நினைக்கிறார்கள் ஆனால் அது இந்த இரவினுடைய விஷயம் இல்லை. அது பாதி கல்பத்தின் இரவு முடிவடைகிறது. பிறகு புது உலகத்தின் ஸ்தாபனை செய்ய பாபா வரவேண்டியிருக்கிறது. மிகவும் சகஜமானதாக இருக்கிறது. குழந்தைகள் தானே புரிந்திருக்கிறார்கள்- சகஜமானது, தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். இல்லையென்றால் 100 மடங்கு பாவம் ஏற்படுகிறது. (என்னை நிந்தனை செய்விக்கக்கூடியவர் உயர்ந்த பதவி அடைய முடியாது. தந்தையை நிந்தனை செய்தீர்கள் என்றால் பதவி மோசமாகிவிடும். மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும். முரட்டுத்தனமாக பேசுவது தெய்வீக குணம் இல்லை. இது அசுர அவகுணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அன்போடு புரிய வைக்கப்படுகிறது இது உங்களுடைய தெய்வீக குணம் இல்லை. இது அசுர அவகுணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அன்போடு புரிய வைக்கப் படுகிறது இது உங்களுடைய தெய்வீக குணம் இல்லை. இப்பொழுது கலியுகம் முடிவடைகிறது இது சங்கமயுகம் என்பதை குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். மனிதர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை கும்பகர்ணனுடைய தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் 40 ஆயிரம் வருடங்கள் உள்ளது என்று நினைக்கிறார்கள், நாம் உயிரோடு இருப்போம், சுகத்தை அனுபவித்து கொண்டே யிருப்போம், நாளுக்கு நாள் இன்னும் தமோபிரதானமாகிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகள் நீங்கள் விநாசத்தின் காட்சியைப் பார்த்திருக் கிறீர்கள். நாட்கள் போகப் போக பிரம்மாவுடைய, ஸ்ரீ கிருஷ்ணருடைய காட்சிகள் கிடைத்துக் கொண்டேயிருக்கும். பிரம்மாவிடம் செல்வதனால் நீங்கள் சொர்க்கத்தின் அப்படிப்பட்ட இளவரசனாக ஆவீர்கள். இதனாலேயே குறிப்பாக பிரம்மா மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவருடைய சாட்சாத்காரமும் கிடைக்கிறது. சிலருக்கு விஷ்ணுவுடைய காட்சி கிடைக்கிறது. ஆனால் அந்த காட்சியால் இந்த அளவு புரிந்து கொள்ள முடியாது. நாராயணருடைய காட்சி கிடைப்பதால் புரிந்து கொள்ள முடியும். நாம் இங்கு வந்து இருப்பதே தேவதை ஆவதற்காக. நீங்கள் இப்பொழுது சிருஷ்டியின் முதல், இடை, கடைசியினுடைய பாடத்தைப் படிக்கிறீர்கள். பாடம் நினைவிற்காக படிப்பிக்கப்படுகிறது. பாடம் ஆத்மா படிக்கிறது. தேக உணர்வு நீங்கிவிடுகிறது. ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது. நல்ல மற்றும் கெட்ட சம்ஸ்காரங்கள் ஆத்மாவில் தான் இருக்கிறது.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நீங்கள் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்த அதே குழந்தைகள் தான் சந்திக்கிறீர்கள். தோற்றமும் அது, தான், 5 ஆயிரம் வருடங்களுக்கு முன் நீங்கள் தான் இருந்தீர்கள். நீங்களும் கூறுகிறீர்கள் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு அதே நீங்கள் (தந்தை) தான் வந்து சந்திக்கிறீர்கள், மீண்டும் அவர் நம்மை மனித நிலையிலிருந்து தேவதையாக ஆக்கிக் கொண்டியிருக்கிறார். நாம் தேவதையாக இருந்தோம். பிறகு அசுரர்களாக ஆகிவிட்டோம் தேவதைகளுடைய குணங்களை பாடிக் கொண்டே வந்தீர்கள். தன்னுடைய அவகுணங்களை வர்ணனை செய்து கொண்டே வந்தீர்கள். இப்பொழுது பிறகு தேவதை ஆக வேண்டும். ஏனென்றால் தெய்வீக உலகத்திற்குச் செல்ல வேண்டும். இப்பொழுது நல்ல முறையில் முயற்சி செய்து உயர்ந்த பதவி அடையுங்கள். ஆசிரியர் அனைவருக்கும் சொல்வார் இல்லையா! படியுங்கள். நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்துவிட்டீர்கள் என்றால் எங்களுடைய பெயரும் புகழடையும் மற்றும் உங்களுடைய பெயர் கூட புகழடையும். பாபா உங்களிடம் வந்த பிறகு பழைய விஷயம் ஒன்றுமே வெளிப்படுவதில்லை, அனைத்தும் மறந்து போய்விட்டது. பாபாவிடம் வந்ததினால் தான் அமைதி கிடைத்தது என்ற நிறைய பேர் இது போல் சொல்கிறார்கள். இந்த உலகம் இப்படி தான் அழிந்து போக வேண்டியிருக்கிறது. பிறகு நீங்கள் புதிய உலகில் வருவீர்கள். அது மிகப் பெரிய அழகான உலகமாக இருக்கும். சிலர் சாந்திதாமத்தில் ஓய்வாக இருப்பார்கள். சிலருக்கு ஓய்வு கிடைப்பதில்லை. அனைத்து விதமான நடிப்பும் இருக்கிறது (ஆல்ரவுண்ட்) ஆனால் தமோபிரதானமான துக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். அங்கு அமைதி, சுகம் அனைத்தும் கிடைத்து விடுகிறது. இது போல் நல்ல முறையில் முயற்சி செய்ய வேண்டும். யாருக்கு அதிர்ஷ்டத்தில் இருந்தால் நடக்கும் என்பதல்ல. முயற்சி செய்ய வேண்டும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பது புரிய வைக்கப்படுகிறது. நாம் ஸ்ரீமத்படி தன்னுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிக்கிறோம். நமக்கு ஸ்ரீமத் கொடுக்க கூடியவர் பாபா. அவர் தான் இராஜாவாக ஆவதில்லை. அவருடைய ஸ்ரீமத்படி நாம் ஆகிறோம். புதிய விஷயம் அல்லவா! ஒருபோதும் யாரிடமிருந்தும் கேட்டதும் இல்லை. பார்த்ததும் இல்லை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஸ்ரீமத்படி சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறோம். நாம் தான் அநேக முறை இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருக்கிறோம். செய்கிறோம் மற்றும் இழக்கிறோம், இந்த சக்கரம் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. கிறிஸ்துவ பாதிரியார்கள் எப்பொழுது சுற்றி வருவதற்காக செல்கிறார்கள் என்றால் யாரையும் பார்க்க விரும்புவதில்லை. கிறிஸ்துவின் நினைவில் மட்டுமே இருக்கிறார்கள். அமைதியில் சுற்றி வருகிறார்கள். புரிந்திருக்கிறார்கள் இல்லையா! கிறிஸ்துவின் நினைவில் எவ்வளவு இருக்கிறோம்? அவசியம் கிறிஸ்துவின் காட்சியும் கிடைத்திருக்கும்!. அனைத்து பாதிரியார்களும் அப்படியே இருப்பதில்லை. கோடியில் சிலர், உங்களில் கூட நம்பர் பிரகாரம் இருக்கிறார்கள். கோடியில் சிலர் தான் அப்படியே நினைவில் இருந்து கொண்டேயிருக்கிறார்கள். முயற்சி செய்து பாருங்கள், மற்ற யாரையும் பார்க்காதீர்கள். தந்தையை நினைவு செய்து சுயதர்சன சக்கரத்தை சுற்றிக் கொண்டேயிருங்கள் உங்களுக்கு அளவில்லாத குஷி ஏற்படும். உயர்ந்தவர்கள் என்று தேவதைகளுக்கு தான் சொல்லப்படுகிறது. கீழானவர்கள் என்று மனிதர்களுக்கு சொல்லப்படுகிறது. இந்த நேரம் தேவதைகள் யாரும் இல்லை. அரைக் கல்பம் பகல், அரைக் கல்பம் இரவு இது பாரதத்தின் விஷயம் ஆகும். பாபா சொல்கிறார் நான் அனைவருக்கும் சத்கதியைக் கொடுக்கிறேன். மற்றபடி யார் மற்ற தர்மத்தை சேர்ந்தவர்களோ அவர்கள் தன்னுடைய நேரப்படி வந்து ஸ்தாபனை செய்கிறார்கள். அனைவரும் வந்து மந்திரம் எடுத்து செல்கிறார்கள். தந்தையை நினைவு செய்ய வேண்டும். யார் நினைவு செய்வார்களோ அவர்கள் தன்னுடைய தர்மத்தில் உயர்ந்த பதவி அடைவார்கள்.

குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து ஆன்மீக கண்காட்சி மற்றும் கல்லூரி திறக்க வேண்டும். எழுதுங்கள் - உலகத்தின் அதாவது சொர்க்கத்தின் இராஜ்யம் நொடியில் எப்படி கிடைக்க முடியும் என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைத்துவிடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நடந்தாலும் சுற்றினாலும் ஒரு தந்தையின் நினைவில் தான் இருக்க வேண்டும் மற்றும் எதைப் பார்த்தாலும் பார்ப்பதற்கு தென்படக் கூடாது. இது போல் பயிற்சி செய்ய வேண்டும். நமக்குள் தெய்வீக குணம் எதுவரை வந்திருக்கிறது என்று ஏகாந்தத்தில் (தனிமையில்) தன்னை சோதனை செய்ய வேண்டும்.

2) தந்தையின் பெயருக்கு நிந்தனை ஏற்படும்படியான எந்த ஒரு செயலும் செய்யக் கூடாது. தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் பிறகு தன்னுடைய இராஜ்யத்தில் வர வேண்டும் என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

வரதானம்:
சேவைகளில் சுபபாவனையை கூடுதலாக சேர்ப்பதன் மூலம் சக்திசாலி பலனை அடையக்கூடிய வெற்றிமூர்த்தி ஆகுக.

என்னவெல்லாம் சேவை செய்கின்றீர்களோ, அதில் அனைத்து ஆத்மாக்களுக்கும் சகயோகத்தின் பாவனை இருக்க வேண்டும், குஷியின் பாவனை மற்றும் நல்ல எண்ணம் இருக்க வேண்டும், அப்பொழுது ஒவ்வொரு காரியமும் சகஜமாக வெற்றி அடைந்துவிடும். எவ்வாறு முந்தைய காலங்களில் ஏதாவது காரியம் செய்யப் போகின்றார்கள் என்றால் முழு குடும்பத்தினுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுச் செல்வார்கள். அதுபோல் நிகழ்கால சேவைகளில் இதை கூடுதலாக சேர்க்க வேண்டும். எந்தவொரு காரியமும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக முதலில் அனைவருடைய சுபபாவனைகள், சுபவிருப்பங்களைப் பெற்றிடுங்கள். அனை வருடைய திருப்தியின் பலத்தை நிறைத்திடுங்கள், அப்பொழுது சக்திசாலியான பலன் கிடைக்கும்.

சுலோகன்:
எவ்வாறு தந்தை இதோ வந்துவிட்டேன் (ஆஜராகிவிட்டேன்) என்று கூறுகின்றாரோ, அவ்வாறு நீங்களும் கூட சேவைக்கு ஆஜராகிவிட்டேன், உத்தரவிடுங்கள் என்று கூறினால் புண்ணியம் சேமிப்பாகிவிடும்.