06-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உயிருடன் இருந்து
கொண்டே இந்த சரீரத்திலிருந்து விடுபட்டவர்களாக ஆகிவிடுங்கள்,
அசரீரியாகி தந்தையை நினைவு செய்யுங்கள், இது தான் ஆழ்ந்த (மயான)
அமைதி என்று கூறப்படுகிறது.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது
தங்களது அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
எதன் ஆதாரத்தில் உறுதித்தன்மை ஏற்படுகிறது?
பதில்:
தூய்மையின் ஆதாரத்தில். எந்த
அளவிற்கு ஆத்மா தூய்மையாக அதாவது உண்மை யான தங்கமாக ஆகிறதோ,
அந்த அளவிற்கு உறுதித்தன்மை வந்து விடும். பாபா இப்போது சுய
இராஜ்யத்தின் அஸ்திவாரத்தை அந்த அளவிற்கு உறுதியானதாக
ஆக்குகின்றார் அதாவது அதை அரைக் கல்பத்திற்கு யாரும் அசைக்கவே
முடியாது. உங்களது இராஜ்யத்தை யாரும் அபகரிக்கவும் முடியாது.
பாடல்:
ஓம் நமோ சிவாய .......
ஓம் சாந்தி.
என்னை நினைவு செய்யுங்கள் அதாவது அசரீரி ஆகுங்கள் அதாவது
ஆழ்ந்த அமைதியில் இருங்கள் என்று பாபா கூறுகின்றார். மனிதர்கள்
இறக்கின்ற போது ஆழ்ந்த அமைதியுடையவர்களாக ஆகிவிடுகின்றனர்.
இவரது சரீரம் அமைதியாகி விட்டது என்று கூறுகின்றனர். சரீரம்
மற்றும் ஆத்மா பிரிந்து விட்டது, (சரீரம்) அழிந்து விட்டது.
இங்கும் குழந்தைகளாகிய நீங்கள் அமர்கின்ற பொழுது இதற்கும்
ஆழ்ந்த அமைதி என்று கூறப்படுகிறது. உயிருடன் இருந்து கொண்டே
அசரீரி ஆகிவிடுங்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள்,
தந்தையை நினைவு செய்யுங்கள். இது உண்மையான அமைதி என்பதை நீங்கள்
அறிவீர்கள். அவர்கள் அமைதியை அறிய வில்லை. ஆழ்ந்த அமைதியின்
பொருளை அறியவில்லை. ஆழ்ந்த அமைதி என்று ஏன் கூறுகின்றனர்? அவர்
இறந்து விட்டார், அமைதியாகி விட்டார் என்று நினைவு
படுத்துகின்றனர். நீங்களும் (வாழ்ந்து கொண்டே) இறந்து விடுங்கள்,
நீங்களும் அமைதியாகி விடுங்கள். பெரிய பெரிய மனிதர்கள்
காந்தியின் சமாதிக்கு செல்கின்றனர். அங்கு சென்று ஆழ்ந்த
அமைதியுடன் அமருங்கள் என்று கூறுவர். ஆத்மாக் களாகிய நாம்
சாந்த சொரூபமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்,
உலகத்தினருக்குத் தெரியாது. நாம் நமது சொரூபத்தில் நிலைத்து
விடுகிறோம், நமது சுய தர்மம் அமைதியாகும். நமது ஆத்மா சாந்த
சொரூபமாக இருக்கிறது. அவர்களுக்கு இது தெரியாது, அதனால் தான்
அமைதி வேண்டுகின்றனர். அமைதி வேண்டும் என்று ஆத்மா கூறுகிறது.
ஆத்மா தனது சுய தர்மத்தை மறந்து விட்டது. உண்மையில் ஆத்மாவின்
தர்மமே அமைதியாகும். பிறகு ஏன் ஆத்மா அசாந்தியாக இருக்கிறது
என்று கூறுகிறது. அசரீரியாகி அமர்ந்து விடுங்கள். அவர்கள்
வலுக்கட்டாயமாக பிரணாயாமத்தில் அமர்ந்து விடும் போது இறந்தவர்
போலவே ஆகிவிடு கின்றனர், அது தற்காலிக அமைதி என்று
கூறப்படுகிறது. நமது சுய தர்மம் அமைதி என்பது குழந்தைகளாகிய
உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நீங்கள் சுய இராஜ்யத்தை
அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா தான் அனைத்துமாக ஆகிறது.
ஆத்மா வக்கீலாக ஆகிறது. எனக்கு இராஜ்யம் வேண்டும் என்று ஆத்மா
கூறுகிறது. முன்பும் தந்தையிடமிருந்து இராஜ்யம்
அடைந்திருந்தீர்கள், இப்போது மீண்டும் அடைவதற்காக
வந்திருக்கிறீர்கள். மனிதர்கள் தேக அபிமானத்தில் இருப்பதால்
துக்கத்தில் இருக்கின்றனர்.
நான் ஆத்மா, தனது பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து சுய இராஜ்யம்
அடைவதற்காக வந்திருக் கிறேன் என்பதை நீங்கள் இப்போது
புரிந்திருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய உங்களுக்கு இராஜ்யம் தேவை.
இந்த நேரத்தில் எல்லையற்ற தந்தையிடம் ஆத்மா சுய இராஜ்யத்தைக்
கேட்கிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு சுய இராஜ்யம் இருந்தது, பிறகு
மறைந்து விட்டது. இப்போது தந்தை வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு
இராஜ்யம் கொடுக்கின்றார், இது இராஜயோகம் என்று கூறப்படு கிறது.
பரம்பிதா பரமாத்மா இராஜயோகம் கற்பிக்கின்றார். மனிதர்கள் தேக
அபிமானியாக இருக்கின்ற காரணத்தினால் நான் இன்னாராக இருக்கிறேன்
என்று கூறு கின்றனர். தேகத்தைத்தான் நான் என்று
புரிந்திருக்கின்றனர். உண்மையில் நான் நான் என்று கூறுவது ஆத்மா
தான். நான் இந்த பொருளை எடுக்கிறேன் என்று ஆத்மா தான் கூறுகிறது.
உண்மையில் ஆத்மா என்பது ஆணாகும். நான் ஆத்மா, தந்தையின் குழந்தை
ஆவேன். பாபா, நான் உங்களிட மிருந்து சுய இராஜ்யத்தை அடைந்து
கொண்டிருக்கிறேன் என்ற ஆத்மா கூறுகிறது. ஆத்மா விற்கு சுய
இராஜ்யத்தை பரமாத்மா கொடுக்கின்றார். பக்தி மற்றும் ஞானத்தில்
எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள்! சிவனுக்கு கோயிலும்
இருக்கிறது. அனைத்தையும் விட அதிக மணி அடிப்பது சிவன் கோயிலில்
தான். அவரை எழுப்புகின்றனர். அனைவரையும் எழுப்பத் தான்
செய்கின்றனர். அதிகாலையில் மணி அடிக்கின்றனர். இங்கு தந்தை
குழந்தை களை எழுப்பி தேவதைகளாக ஆக்குகின்றார். மணி
அடிப்பதற்கான எந்த விசயமும் கிடையாது. உங்களுக்கு சுய இராஜ்யம்
தேவை எனில் முதலில் தூய்மையாக ஆகுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். இலட்சியம் புத்தியில் இருக்கிறது. நாம் இந்த
மெட்ரிக் வகுப்பில் தேர்ச்சி பெறுவோம், பிறகு இவ்வாறு செய்வோம்
என்று மாணவர்கள் கூறுவர். நாம் அமைதி அடைய வேண்டும் என்று
சந்நியாசிகள் விரும்புவர். ஒரு கதை கூறுவர் அல்லவா - இராணியின்
கழுத்தில் மாலை இருந்தது, வெளியில் தேடினார். அது போல அவர்களும்
அமைதியை வெளியில் தேடுகின்றனர். ஆனால் ஆத்மா சுயம் சாந்த
சொரூபமானது. ஆத்மா தனது சுய தர்மத்தை மறந்து தன்னை சரீரம் என்று
புரிந்து அமர்ந்திருக்கிறது. நீங்கள் ஆத்மா என்பதை தந்தை
நினைவுபடுத்துகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகள்
எடுத்திருக்கிறீர்கள். இந்த விசயங்களை வேறு யாரும் புரிய வைக்க
முடியாது. நீங்கள் உங்களது பிறப்புகளை அறியவில்லை, நான்
கூறுகிறேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் பிரம்மா குமார்,
குமாரிகள். தூய்மையின்றி ஞான தாரணை ஏற்படவே முடியாது என்பதை
தந்தை புரிய வைத்திருக் கின்றார். சிங்கத்தின் பாலுக்கு தங்கப்
பாத்திரம் வேண்டும் என்று கூறுவர் அல்லவா! ஆக இதற்கும் தங்கப்
பாத்திரம் தேவை. ஆத்மா தந்தையை நினைவு செய்வதன் மூலம் தங்கமாக
ஆகிவிடுகிறது. தந்தையும் உண்மையான தங்கம் ஆவார். ஆத்மா தந்தையை
நினைவு செய்கின்ற போது ஞானம் வந்து விடுகிறது. நீங்கள்
உண்மையான தங்கமாக, தூய்மையாக இருந்தீர்கள், இந்த ஞானத்தின்
தாக்கம் வேறு யாருக்கும் ஏற்படுவது கிடையாது. நான்
ஆத்மாக்களாகிய உங்களுக்கு சுய இராஜ்யத்தை கொடுக்கிறேன் என்று
தந்தை கூறு கின்றார். பழைய உலகின் இறுதி மற்றும் புது உலகின்
ஆரம்பம் ஏற்படும் போது தான் இந்த சுய இராஜ்யம் கிடைக்கும்.
மனிதர்களிடத்தில் எல்லைக்குட்பட்ட இராஜ்யம் இருக்கிறது.
எல்லையற்ற இராஜ்யம் ஒருபோதும் மனிதர்களுக்குக் கிடைப்பது
கிடையாது. உலகிற்கு எஜமானர்களாக ஆக முடியாது. தந்தையின் மூலம்
நீங்கள் ஆகிறீர்கள். தந்தையாகிய பகவானுக்குத் தான் உங்களது 84
பிறவிகள் பற்றி தெரியும். தேவதைகள் தங்களது பிறப்புகளை அறிந்து
கொள்ள முடியாது. ஒருவேளை அறிந்து கொண்டால் துக்கமானவர்களாக
ஆகிவிடுவர் - ஏணியில் இறங்கி விடுவோமா? இராஜ்யத்தின் சுகமே
மறைந்து போய் விடும். இங்கு (உண்மை) உங்களுக்குத் தெரியும்.
நான் ஆத்மா என்று அறிவீர்கள், இதில் சந்தேகத் திற்கான விசயம்
கிடையாது. ஒருவருக்கொருவர் கேட்டு அறிந்து பிறகு வளர்ச்சி
அடைந்து கொண்டே செல்கிறது. தெய்வீக தர்மத்தின் மரம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. இவர் நமது பிராமண குலத்திற்கு
வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இவர்
முழு பக்தி செய்திருக்கின்றார், மீண்டும் தந்தையிடம் ஆஸ்தி
அடைவதற்காக வந்திருக்கின்றார். ஞானம் முடிவடைந்த பின்பு
மீண்டும் பக்தி ஆரம்பமாகி விடுகிறது. இது யாருக்கும் தெரியாது.
கட்டிடமும் புதியதிலிருந்து பழையதாக ஆகிறது அல்லவா!
அஸ்திவாரமற்ற கட்டிடத்தின் ஆயுள் அவசியம் குறைவாகத் தான்
இருக்கும். இன்றைய நாட்களில் கட்டிடங்கள் மிகவும் உறுதியாக
கட்டுகின்றனர். பூகம்பம் போன்றவைகள் நிகழ்ந்தாலும் கட்டிடம்
இடிந்து விடக் கூடாது, நஷ்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்
காக மிகவும் உறுதியாக கட்டுகின்றனர். அஸ்திவாரம் மிக உறுதியாக
போடுகின்றனர். இப்போது சுய இராஜ்யத்தின் அஸ்திவாரம்
போடப்படுகிறது. ஆத்மாவிற்கு 21 பிறவிகளுக்கு இராஜ்யம்
கிடைக்கிறது. இங்கிருக்கும் இராஜ்யம் என்பது ஒன்றுமே கிடையாது.
இன்று இராஜ்யம் இருக்கிறது, நாளை யாராவது படை யெடுத்து விட்டால்
முடிந்து விடும். எதற்கும் அஸ்திவாரம் கிடையாது.
மனிதர்களுக்கும் அஸ்திவாரம் கிடையாது. இன்று இருக்கின்றனர்,
நாளை இறந்து விடுகின்றனர். இப்போது உங்களது அஸ்திவாரத்தை பாபா
உறுதியாக போட்டு விடுகின்றார், இதன் மூலம் நீங்கள் 21
பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை அடைகிறீர்கள். உங்களது
இராஜ்யத்தின் அஸ்திவாரம் உறுதியாகப் போடப்படுகிறது. உங்களுக்கு
பூமியின் எந்த பூகம்பமும் அசைக்கவே முடியாது. பாபா நமக்கு சுய
இராஜ்யம் கொடுக்கின்றார், யாரும் அதை அபகரிக்க முடியாது,
வீழ்த்த முடியாது என்று கீதையிலும் கூறப் பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட இராஜ்யத்தை கொடுக் கின்றார், அங்கு சிறிதும்
துக்கத்திற்கான விசயம் இருக்காது. ஆத்மாவிற்கு எவ்வளவு குஷி
ஏற்பட வேண்டும்! நம்பிக்கை இருக்கிறது அல்லவா! நம்பிக்கை
இல்லையெனில் அவர்கள் சொர்க்கம் செல்வதற்கு தகுதியற்றவர்கள்
ஆகிவிடுகின்றனர். இவ்வளவு பிரம்மா குமார், குமாரிகள் வளர்ச்சி
அடைந்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஞானக் கடல், பதீத பாவன் நமக்கு படிப்பு கற்பித்து இராஜயோகம்
கற்பித்துக் கொண்டிருக் கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கிருஷ்ணர் கற்பித்ததாக அவர்கள் கூறிவிட்டனர். சிவபாபா மனித
உடலில் வந்து புரிய வைத்தார் என்பதை எப்படி புரிந்து கொள்வர்?
பாரதம் தான் தூய்மையாக இருந்தது, இப்போது அசுத்தமாக, தூய்மை
இழந்து இருக்கிறது. தேவதை களின் முன் சென்று அவர்களின் மகிமை
பாடுகின்றனர். சிவன் முன் சென்று நீங்கள் அனைத்து குணங்களும்
நிறைந்தவர், 16 கலைகளிலும் முழுமையானவர் என்று ஒருபொழுதும்
பாடமாட்டார்கள். சிவனின் மகிமை தனிப்பட்டது. அவர் ஞானக்
கடலானவர், பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடியவர்,
அனைவரின் பையையும் நிறைக்கக் கூடிய கள்ளங்கபடமற்றவர் ஆவார்.
இப்படிப்பட்ட தந்தையை அனைவரும் மறந்து இருக்கின்றனர். வந்து
துக்கத்தை நீக்கி சுகம் கொடுங்கள் என்று பரம்பிதா பரமாத்மாவை
அழைக்கின்றனர். துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர் ஒரே ஒருவர்
ஆவார். அவரது வழி தான் சிரேஷ்டமானது ஆகும். அது சிரேஷ்டத்திலும்
சிரேஷ்ட பகவானின் வழியாகும், அதன் மூலம் குழந்தைகளாகிய
நீங்களும் சிரேஷ்டமானவர்களாக ஆகிறீர்கள். அசுத்தமான (பிரஷ்டாச்சாரி)
உலகம் என்று அரசாங்கமும் கூறுகிறது. இப்போது சிரேஷ்டமானவர்களாக
யார் ஆக்குவது? என்பது யாருக்கும் தெரியாது. சாதுக்கள் நம்மை
உயர்ந்துவார்கள் என்று நினைக்கின்றனர், ஆனால் அவர்களால்
சிரேஷ்டமானவர்களாக ஆக்க முடியாது. இது ஒரு தந்தையின்
காரியமல்லவா! முன்பு ஒரு இராஜாவின் கட்டளைப்படி நடந்து வந்தனர்.
சத்யுகத்தில் உங்களுக்கு அமைச்சர்கள் யாரு மில்லை.
சக்கரவர்த்தியிடம் சக்தி இருக்கும். அமைச்சர் என்ற பெயர்
சொல்லப்பட்டதே கிடையாது. நாம் உலகிற்கு எஜமானர்களாகி இராஜ்யத்தை
செய்து வந்தோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எப்படி
இராஜ்யம் செய்தீர்களோ அவ்வாறு செய்ய வேண்டும். உண்மை யில்
சத்யுகத்தில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது அல்லவா!
ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான இராஜ்யம் கிடைக்கும்.
கிருஷ்ணருக்கு அவருக்கான இராஜ்யம் இருக்கும். மற்ற அரசர்களும்
இருப்பார்கள் அல்லவா! குறைந்தது 8 பேர் இருப்பார்கள் அல்லவா! 8
பேர் இருந்தார்களா? அல்லது 108 பேர் இருந்தார்களா? என்பது
போகப்போகத் தெரிந்து விடும். கடைசியில் கூற வேண்டிய ஞானத்தை
இப்போதே கூறி விடுவார் என்பது கிடையாது. யார் உயிருடன்
இருப்பார்களோ, அவர்களுக்கு தந்தை ஞானம் கொடுத்துக் கொண்டே
இருப்பார். கொடுத்தே ஆக வேண்டும். நாடகத்தில்
பதிவாகியிருக்கிறது. பரமாத்மாவிற்கு இப்போது பாகம் இருக்கிறது.
இந்த ஞானம் கொடுக்கும் பாகம் இப்போது பதிவாகியிருக்கிறது. நாள்
போகப் போக நீங்கள் அதிகம் புரிந்து கொள்வீர்கள் என்று தந்தை
கூறுகின்றார். நாளுக்கு நாள் புரிய வைத்துக் கொண்டே
இருக்கின்றார். அங்கு நாம் எப்படி இராஜ்யம் செய்வோம்? சுயம்வரம்
எப்படி நிகழும்? என்பதும் தெரிந்து விடும். நீங்கள் தியானத்தில்
வைகுண்டத்திற்குச் சென்று பார்க்கவும் செய்கிறீர்கள். அங்கு
தங்கமாளிகைகள் எப்படி இருக்கும்? தங்கமே தங்கம் தான் இருக்கும்.
தன்னை தங்க புரியில் இருப்பதாக பார்க்கிறீர்கள். தங்க
கற்களினால் கட்டிடம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. சிறிது
கற்களை எடுத்து செல்ல வேண்டும் என்று நினைக் கிறீர்கள். பிறகு
கீழே இறங்கும் போது தன்னை இங்கு இருப்பதாக உணர்கிறீர்கள்.
மீராவும் தியானத்தின் போது தான் கிருஷ்ணருடன் நடனம் ஆடியதாக
பார்த்தார். நீங்கள் சூட்சும வதனத்திற்கு செல்கிறீர்கள், அங்கு
எலும்பு, தோல் கிடையாது, ஃபரிஸ்தாக்களாக ஆகிவிடு கிறீர்கள்.
பிரம்மாவிற்கும் சூட்சும சரீரம் பார்க்க முடிகிறது. அவ்வாறு
பரிஸ்தாவாக ஆகிவிடு கிறீர்கள். நீங்கள் தோட்டம் போன்றவைகளையும்
பார்க்கிறீர்கள். தந்தை இவ்வாறு சாட்சாத் காரம்
செய்விக்கின்றார். பாபா நமக்கு போதை ஏற்படுத்தும் பானத்தை (சோமரசம்)
பருக வைப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். உண்மையில் சூட்சும
வதனத்தில் பருக வைக்க முடியாது. மலர்கள், பழங்கள் வைகுண்டத்தில்
மிகவும் முதல் தரமாக இருக்கும். சூட்சுமவதனத்தில் தோட்டம்
இருக்காது. ஆனால் தோட்டத்திற்கு சென்றேன், அங்கு இளவரசர்
இருந்தார் என்று கூறுகிறீர்கள் எனில் அது வைகுண்டம் ஆகிவிட்டது
அல்லவா! வைகுண்டத் தின் பொருட்கள் இங்கு அடைய முடியாது. அங்கு
முதல் தரமான பொருட்கள் இருக்கும். நான் உங்களை வைகுண்டத்திற்கு
எஜமானர்களாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். இங்கு
துக்கமே துக்கம் தான் இருக்கிறது. ஹே பகவானே! என்னை
துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்று கூறாத மனிதன் இருக்கவே
முடியாது. துக்கத்தின் போது தான் நினைவு செய்கின்றனர்.
கிருஷ்ணரின் பூஜாரி - கிருஷ்ணா என்று கூறுவார்கள், ஹனுமானின்
பூஜாரி - ஹனுமானுக்கு ஜெய் என்று கூறுவார்கள் ....... இங்கு
தந்தையாகிய என்னை நிரந்தர மாக நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். கடைசி காலத்தில் யாருடைய நினைவும் வராத அளவிற்கு
நினைவு செய்யுங்கள். காசிக்கு சென்று பலியாகின்றனர், அப்போது
பல பிறவிகளாக செய்த பாவங்களின் தண்டனை அடைவதாக உணர்கின்றனர்.
அதிக பாவம் செய்திருக்கிறேன். இது பாவ ஆத்மாக்களின் உலகம் என்று
கூறப்படுகிறது. ஆத்மா பாவியாக ஆகிவிட்டது. ஆத்மா தான் தந்தையை
அழைக்கிறது - ஹே பரம்பிதா பரமாத்மா, ஹே பரந்தாமத்தில் வசிக்கக்
கூடிய சிவபாபா, அவரது உண்மையான பெயர் ஒன்றே ஒன்று தான். அவர்
ஆத்மாக்களின் தந்தை ஆவார். ரூத்ரனுடன் சாலிகிராம் என்ற சப்தம்
அழகு பெறாது. சிவன் மற்றும் சாலிகிராம் - இது அழகாக இருக்கிறது.
மண்ணால் சிவலிங்கத்தை உருவாக்குகின்றனர் எனில் சாலிகிராமையும்
உருவாக்குகின்றனர். பதீத பாவன் அவர் ஒருவரே அல்லவா! இங்கு
யக்ஞத்தையும் உருவாக்கு கின்றார். பாரதம் அனைத்தையும் விட
உயர்ந்தது, ஆனால் தேவதா தர்மத்தை மறந்து விட்டனர். உங்களது
தர்மம் ஆதி சநாதன தேவி தேவதா தர்மமாகும். அது மீண்டும் வர
வேண்டும். இந்து தர்மம் என்பது தர்மமே கிடையாது. தேவதா
தர்மத்தைச் சார்ந்தவர்களே சதோ, ரஜோ, தமோவில் வருகின்றனர்.
எப்போது தமோவாக ஆகிவிடு கிறார்களோ அப்போது தன்னை தேவதா என்று
சொல்ல முடிவது கிடையாது. உண்மையில் இந்து என்பது தர்மமே
கிடையாது. ஆக நீங்கள் தேவி தேவதைகளாக ஆக முடியும், வந்து
புரிந்து கொள்ளுங்கள் என்று புரிய வைக்கப்படுகிறது. நேரம்
கிடைப்பதில்லை என்று கூறிவிடு கின்றனர். அமைதி மற்றும்
சுகத்தின் ஆஸ்தி கொடுப்பதற்காக நான் உங்களை என்னுடைய வராக
ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். சில குடும்பங்களில்
தங்களுக்குள் ஒன்றாக இருக்கின்றனர், மிக அன்பாக நடந்து
கொள்கின்றனர். அனைவரின் வருமானமும் ஒன்றாக சேர்த்து
விடுகின்றனர். எந்த குழப்பமும் இருப்பது கிடையாது, ஆனால் இதை
சொர்க்கம் என்று கூற முடியாது அல்லவா! சத்யுகத்தில் ஒரு
வீட்டில் கூட நோய் அல்லது துக்கம் இருக்கவே இருக்காது. பெயரே
சொர்கம்! அங்கு அனைவரும் சுகமாக இருப்பர். சதா சுகத்திற் கான
ஆஸ்தியடைவதற்காக நீங்கள் தந்தையிடம் வந்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. பாபா, நீங்கள் பதீத பாவன்,
எங்களையும் பாவனம் ஆக்குங்கள் என்று கூறுகிறீர்கள். தந்தையின்
கூடவே குழந்தைகளாகிய நீங்களும் இறைவனின் உதவியாளர்களாக
இருக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சுய இராஜ்யம் அடைவதற்காக இப்போதிலிருந்தே தூய்மைக்கான
அஸ்திவாரத்தை உறுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறு தந்தை
பதீத பாவனோ அவ்வாறு தந்தைக்கு சமம் பாவனம் (தூய்மை) ஆக வேண்டும்.
2) தனது அமைதி என்ற சுய தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
எவ்வளவு முடியுமோ தேக அபிமானத்தை விட்டு விட்டு ஆத்ம
அபிமானியாக இருக்க வேண்டும். ஆழ்ந்த அமைதியில் அதாவது
அசரீரியாக இருக்கக் கூடிய பயிற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
பிற ஆத்மாக்களுக்கு சேவை செய்வதுடன் கூடவே
தனக்கும் சேவை செய்து வெற்றி மூர்த்தி ஆகுக
சேவையில் வெற்றி மூர்த்தியாக வேண்டுமெனில் பிறருக்கு செய்யும்
சேவையுடன் தனக்கும் சேவை செய்யுங்கள். பிறருக்கு சேவை செய்ய
செல்லும் போது தனது பழைய சம்ஸ்காரங் களையும் முழுமையாக எரித்து
சம்பலாக்குகிறேன் என நினையுங்கள். எந்தளவிற்கு பழைய
சம்ஸ்காரங்களை அறவே அழிப்போமோ அப்போதே நன் மதிப்பைப் பெற
முடியும். அனைத்து ஆத்மாக்களும் மனதார உங்களுக்கு நமஸ்காரம்
செய்வார்கள். வெளிமுகமாக மேலோட்டமாக நமஸ்கரிப்பரல்லாது
மனமுவந்து நமஸ்கரிப்பவர்களை உருவாக்க வேண்டும்.
சுலோகன்:
எல்லையில்லா சேவை செய்யும் இலட்சியம் வைத்தால்
எல்லைக்குட்பட்ட பந்தனங்கள் அனைத்தும் அறவே நீங்கி விடும்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
எதுவரை உங்களது நினைவு ஜுவாலா ரூபமாகவில்லையோ அது வரையில்
வினாச ஜுவாலை முழுமையாக ஜுவாலா ரூபமாகாது. இது அலை பாய்கிறது,
பிறகு சீதளமடைகிறது ஏனெனில் ஜுவாலா மூர்த்தியும் ஆதார
மூர்த்தியுமான ஆத்மாக்களே இப்போது சதா ஜுவாலா ரூபமாகவில்லை.
இப்போது ஜுவாலா ரூபமாவேன் எனும் திட எண்ணம் வைத்து குழுவாக
அமர்ந்து மனம்-புத்தியின் ஒரு முகத்தன்மையின் மூலம் சக்தி
வாயந்த யோக அதிர்வலை களை (வைப்ரேஷன்) நாலாபுறமும் பரப்புங்கள்.