06.10.24 காலை முரளி
ஓம் சாந்தி 24.02.2002 பாப்தாதா,
மதுபன்
பாபாவைப் பிரத்தியட்சம் செய்வதற்காகத் தனது மற்றும்
மற்றவர்களின் உள்ளுணர்வை நேர்மறையானதாக ஆக்குங்கள்
இன்று உலகிற்கு நன்மை செய்பவராகிய பாப்தாதா தம்முடைய
நாலாபுறத்தின் குழந்தை களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து
கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் மனதின் ஊக்கத்தைப்
பார்த்துக் கொண்டும் இருக்கிறார், கேட்டுக் கொண்டும்
இருக்கிறார். அனை வரின் மனதிலும் லட்சியம் ஒன்று தான் -
சீக்கிரம்-சீக்கிரம் பாபாவுக்கு சமமாக ஆக வேண்டும்.
லட்சியத்தைப் பார்த்து, தைரியத்தைப் பார்த்து, சிரேஷ்ட
சங்கல்பத்தைப் பார்த்து பாப்தாதா குஷியாக உள்ளார். அதோடு கூடவே
இதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் - லட்சியம் அனைவருக்கும்
உயர்ந்ததிலும் உயர்ந்ததாக உள்ளது. ஆனால் பிரத்தியட்ச ரூபத்தில்
லட்சணம் நம்பர்வார் உள்ளது. லட்சியம் மற்றும் லட்சணம் சமமாக
இருக்க வேண்டும், அதாவது பாபாவுக்கு சமமாக ஆக வேண்டும்.
சேவையின் ஸ்டேஜில் நிமித்தமாக இருக்கும் குழந்தைகள் சதா ஒரே
சங்கல்பத்தில் இருக்கிறார்கள் - அதாவது பாபாவை எப்படிப்
பிரத்தியட்சம் செய்வது, அது எப்போது நடைபெறும்? அந்த மாதிரி
சங்கல்பம் நடைபெறு கிறது இல்லையா? பாபா பிறகு குழந்தைகளிடம்
கேட்கிறார் - குழந்தைகள் நீங்கள் அனைவரும் சம்பன்ன- சம்பூர்ண
சொரூபத்தில் சுயம் எப்போது பிரத்தியட்சம் ஆவீர்கள்?
குழந்தைகளுக்கு பாபாவின் கேள்வி - அந்தத் தேதியையும்
தீர்மானித்து விட்டீர்களா? அல்லது அந்தத் தேதியைத் தீர்மானிக்க
வேண்டாமா?
இரட்டை வெளிநாட்டினர் சொல்கிறார்கள்- எந்த ஒரு புரோகிராமின்
தேதியும் ஒரு வருடத்துக்கு முன்பாகவே தீர்மானிக்கப்படுகிறது
என்று தான் சொல்கிறார்கள் இல்லையா? ஆகவே பாபா கேட்கிறார் -
தன்னைப் பிரத்தியட்சம் செய்வதற்கான தேதியைத் தீர்மானித்து
விட்டீர்களா? மீட்டிங்ஸ் நிறையவே செய்து விட்டீர்கள் இல்லையா?
செய்து கொண்டே இருக்கிறீர்கள். இன்று இன்ன மீட்டிங் உள்ளது.
நாளை இன்னது உள்ளது. இப்போதும் எவ்வளவு பேர் மீட்டிங்குக்கு
வந்துள்ளனர்! மூன்று மீட்டிங் காரர்கள் இன்றும் அமர்ந்துள்ளனர்.
இதுவோ மிக நன்று. ஆனால் இந்த மீட்டிங்கின் தேதி என்ன? என்ன
யோசிக்கிறீர்களோ, அதுவே வார்த்தையாக வேண்டும், அதுவே கர்மமாக
வேண்டும். சங்கல்பம், பேச்சு, கர்மம் மூன்றும் சிரேஷ்ட
லட்சியத்தின் பிரமாணம் இருக்க வேண்டும். பாப்தாதா பார்க்கிறார்
- இந்த அனைத்து உலக நன்மைக்காக நிமித்தமாக உள்ள குழந்தைகள்,
சர்வ ஆத்மாக்களின் கல்யாண்காரி பிரத்தியட்ச ரூபத்தில் ஸ்டேஜ்
மீது எப்போது வருவார் கள்? ஒவ்வொருவரும் குப்த
புருஷôர்த்தத்தில் உள்ளனர். ஈடுபாட்டில் உள்ளனர். இதையும்
பாப்தாதா பார்க்கிறார். ஆனால் இந்த விசேஷ சங்கல்பத்தின்
ஈடுபாட்டில் எப்போது மூழ்குவீர்கள்? ஈடுபாடோ உள்ளது. ஆனால்
நிரந்தரமாக இந்த சங்கல்பத்தை நிறைவு செய்வதில் மூழ்கி இருக்க
வேண்டும், அதாவது நிரந்தரமாக இதே சங்கல்பத்தை முழுமை
செய்வதற்கான நடைமுறை சொரூபத்தில் இருக்க வேண்டும். இப்போது
சங்கல்பம் மற்றும் பிரத்தியட்ச கர்மத்தில் வேறுபாடு உள்ளது.
நடக்கத் தான் வேண்டும். மேலும் செய்ய வேண்டியதும் குழந்தைகள்
தாம். பாபாவோ முதுகெலும்பாக இருக்கவே செய்கிறார்.
ஆக, பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் - அனைத்திலும் தீவிர
வேகத்தின் சேவை - உள்ளுணர்வு மூலம் வைப்ரேஷனைப் பரப்புவது.
உள்ளுணர்வு மிகத் தீவிர ராக்கெட்டை விடவும் வேகமானது.
உள்ளுணர்வு மூலம் வாயு மண்டலத்தை நீங்கள் மாற்ற முடியும். எங்கே
விரும்புகிறீர்களோ, எத்தனை ஆத்மாக்களுக்காக விரும்புகிறீர்களோ,
உள்ளுணர்வு மூலம் இங்கே அமர்ந்தவாறே சென்று சேர்ந்து விட
முடியும். உள்ளுணர்வு மூலம் திருஷ்டி மற்றும் சிருஷ்டியை
உங்களால் மாற்ற முடியும். ஆனால் ஒரு விஷயம், உள்ளுணர்வு மூலம்
சேவை செய்வதில் தடையை ஏற்படுத்துகிறது, உள்ளுணர்வு மூலம்
வைப்ரேஷன் பரவுகிறது. உங்கள் ஜட சித்திரங்கள் இப்போது வரையிலும்,
கடைசிப் பிறவி வரையிலும் வைப்ரேஷன் மூலம் சேவை செய்து கொண்டி
ருக்கின்றன இல்லையா? பார்த்திருக்கிறீர்கள் இல்லையா?
கோவிலில் பார்த்திருக்கிறீர்கள் இல்லையா? இரட்டை வெளிநாட்டினர்
கோவில் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கவில்லை என்றால்
பார்த்து விடுங்கள். ஏனென்றால் உங்கள் கோவில் தான் இல்லையா?
குமாரிகள், உங்களுடைய கோவில்களா அல்லது இந்தியாக் காரர் களின்
கோவில்களா? அனைவரின் கோவில்கள். நல்லது. வாழ்த்துகள்.
கோவில்களின் மூர்த்தி கள் பிரத்தியட்ச ரூபத்தில் வைப்ரேஷன்கள்
மூலம் சேவை செய்து கொண்டிருக் கின்றன. அதாவது ஆத்மாக்கள்
நீங்கள் கோவிலின் சைதன்ய மூர்த்திகள் சேவை செய்து கொண்டிருக்
கிறீர்கள். எவ்வளவு பக்தர்கள் வைப்ரேஷன் மூலமாகத் தங்களின்
அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்து கொண்டி ருக்கிறார்கள்!
எனவே ஹே சைதன்ய மூர்த்திகளே! இப்போது தங்கள் சுப பாவனையின்
உள்ளுணர்வு, சுப ஆசைகளின் உள்ளுணர்வு மூலம் வாயுமண்டலத்தில்
வைப்ரேஷன்களைப் பரவச் செய்யுங்கள். ஆனால், ஆனால் என்று சொல்வது
நன்றாக இல்லை. ஆனால் எனச் சொல்ல வேண்டி உள்ளது. பாண்டவர்கள்,
ஆனால் என்ற சொல் நன்றாக உள்ளதா? நன்றாக இல்லை! ஆனால், ஆனால்
உள்ளதா அல்லது முடிந்து போனதா? இதற்காக அனைத்திலும் சகஜ விதி -
இப்போது தங்களுக்குள் சோதித்துப் பாருங்கள் - ஒரு விநாடியில்
சோதித்துப் பார்க்க முடியும். அவ்வப்போது செய்யுங்கள். ஒரு
விநாடி கொடுக்கட்டுமா என்ன? அல்லது சொல்வதில் விநாடி கிடைத்து
விட்டதா? இப்போது தங்களுக்குள் சோதித்துப் பாருங்கள். என்னுடைய
உள்ளுணர் வில் எந்த ஆத்மாவுக்காகவும் ஏதேனும் எதிர்மறை
வைப்ரேஷன் உள்ளதா? உலகத்தின் வாயு மண்டலத்தை மாற்ற வேண்டும்.
ஆனால் தன்னுடைய மனதில் எந்த ஓர் ஆத்மாவுக்காகவும் வீணான
வைப்ரேஷன் அல்லது உண்மையான வைப்ரேஷனும் கூட எதிர்மறையாக இருக்கு
மானால் அவர் உலக மாற்றத்தைச் செய்ய முடியாது. தடை ஏற்பட்டுக்
கொண்டே இருக்கும். தாமதமாகி விடும். வாயுமண்டலத்தில் சக்தி
வராது. குழந்தைகள் அநேகர் சொல்கின்றனர் - அவரே இப்படித் தான்
இருக்கிறார் இல்லையா? இப்படித் தானே இருக்கிறார்? ஆக, வைப்ரேஷனோ
இருக்கும் இல்லையா? பாபாவுக்கும் கூட ஞானம் கொடுக்கிறார்கள்.
பாபா, உங்களுக்குத் தெரியாது, அந்த ஆத்மாவே அப்படித் தான்.
ஆனால் பாபா கேட்கிறார் - அவர் கெட்டவர், தவறானவர், அப்படி
இருக்கக் கூடாது. ஆனால் கெட்டது, தவறானதைத் தனது உள்ளுணர்வில்
வையுங்கள் என்று பாபா இதை அனுமதிக்கிறாரா என்ன? - இதை பாபா
ஏற்றுக் கொள்ளவில்லை என்று யார் புரிந்து கொண்டிருக்கிறார்களோ,
அவர்கள் ஒரு கையை உயர்த்துங்கள். டி.வி.யில் காட்டுங்கள். (தாதியிடம்)
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? நல்லது. கை
உயர்த்தியிருக்கிறோம் என்பதை நினைவு வைக்க வேண்டும். இரட்டை
வெளிநாட்டினர் கை உயர்த்தினீர்களா? பாப்தாதாவின் டி.வி.யிலோ
வந்து கொண்டு தான் இருக்கிறது. எது வரை ஒவ்வொரு பிராமண
ஆத்மாவுக்கும் தனது உள்ளுணர்வில் எப்படிப்பட்ட ஆத்மாவுக்காகவும்
வைப்ரேஷன் எதிர்மறை யாக உள்ளதோ, அது வரை உலக நன்மைக்காக
உள்ளுணர்வின் மூலம் வாயுமண்டலத்தில் வைப்ரேஷனைப் பரவச் செய்ய
முடியாது. இதைப் பக்காவாகப் புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு தான்
சேவை செய்தாலும், தினம் எட்டு-எட்டு சொற்பொழிவுகள் செய்தாலும்,
யோக சிவிர் நடத்தினாலும், அநேக விதமான கோர்ஸ்கள் நடத்தினாலும்,
யாருக்காகவாவது தனது உள்ளுணர்வில் ஏதேனும் கெட்ட, எதிர்மறையான
வைப்ரேஷன் வைக்காதீர்கள். நல்லது, அவர் கெட்டவர், நிறைய தவறுகள்
செய்கிறார், அநேகருக்கு துக்கம் தருகிறார் என்றால் நீங்கள்
அவரது துக்கம் கொடுப்பதில் பொறுப்பாவதற்கு பதிலாக அவரை
மாற்றுவதில் உதவியாளராக ஆக முடியாதா? துக்கத்தில் உதவி செய்யக்
கூடாது, அவரை மாற்றம் செய்வதில் நீங்கள் உதவியாளர் ஆகுங்கள்.
இவர் மாற மாட்டார் என்று நீங்கள் புரிந்து கொள்கிற மாதிரி
அப்படி ஓர் ஆத்மா கூட இருக்கிறாரா? உங்களது தீர்ப்பில் அவர்
மாறக்கூடியவர் இல்லை என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் நம்பர்வாரோ
இருக்கத் தானே செய்கிறார்கள்? இல்லையா? ஆக, இவர் மாறவே மாட்டார்
என நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்? நீங்கள் ஏன் தீர்ப்பு
சொல்கிறீர்கள்? அதற்கு பாபா தாம் நீதிபதி இல்லையா? நீங்கள்
அனைவரும் ஒருவர் மற்றவருக்கு நீதிபதி ஆகி விட்டீர்களா? பாபாவும்
கூட பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார், இவர் இப்படி, இவர்
இப்படி, இவர் இப்படி பிரம்மா பாபாவைப் பிரத்தியட்சமாப்
பார்த்திருக்கிறீர்கள், எவ்வளவு தான் அடிக்கடி தவறு
செய்யக்கூடிய ஆத்மாவாக இருந்தாலும் பாப்தாதா (விசேஷமாக சாகார
ரூபத்தில் பிரம்மா பாபா) குழந்தைகள் அனைவருக்குமே அன்பு
நினைவுகள் கொடுத்தார், குழந்தைகள் அனைவருக்குமே இனிமை யிலும்
இனிமையான என்று சொன்னாôர் இரண்டு-நாலு பேர் கசப்பானவர்கள்,
மற்றவர்கள் இனிமையானவர்கள் என்று அந்த மாதிரி சொன்னாரா? பிறகும்
அப்படிப்பட்ட ஆத்மாக் களுக்காகவும் சதா இரக்க மனம் உள்ளவராக
ஆனார். மன்னிக்கும் கடலாக ஆனார். ஆனால் நல்லது, நீங்கள் உங்களது
உள்ளுணர்வில் யாரைப் பற்றியாவது எதிர்மறை உணர்வுகள் வைத்தீர்கள்
என்றால் இதனால் உங்களுக்கு என்ன லாபம்? உங்களுக்கு இதில் லாபம்
இருக்குமானால் பிறகு அப்படியே வையுங்கள். அதில் லாபம் இல்லை
தான், பிரச்சினையாக உள்ளதென்றால் அந்த விஷயம் எதிரில் வரும்.
பாப்தாதா பார்க்கிறார், அந்தச் சமயம் அவருக்குக் கண்ணாடியைக்
காட்ட வேண்டும். ஆக, எந்த விஷயத்தில் தனக்கு நன்மை எதுவும்
இல்லையோ, ஞானம் நிறைந்தவர் ஆவது வேறு விஷயம், இது தவறு, இது சரி
என்ற ஞானம் உள்ளது. ஞானம் நிறைந்தவர் ஆவது தவறில்லை. ஆனால்
உள்ளுணர்வில் தாரணை செய்வது தவறு. ஏனென்றால் தனக்குள்ளே மூட்
ஆஃப், வீண் சங்கல்பம், நினைவு சக்தி குறைவு, நஷ்டம் ஏற்பட்டு
விடுகிறது. இயற்கையையே தூய்மைப் படுத்துகிறவர்கள் நீங்கள் எனும்
போது இவர்களோ ஆத்மாக்கள். உள்ளுணர்வு, வைப்ரேஷன், வாயுமண்டலம்
என்ற மூன்றுக்கு மிடையில் சம்பந்தம் உள்ளது. உள்ளுணர்வு மூலம்
வைப்ரேஷன் உருவாகின்றது. வைப்ரேஷன் மூலம் வாயுமண்டலம் உருவாகும்.
ஆனால் முக்கியமானது உள்ளுணர்வு. சீக்கிரம்-சீக்கிரம் பாபாவின்
பிரத்தியட்சம் ஆக வேண்டும் என நீங்கள் புரிந்து கொண்டிருக்
கிறீர்கள் என்றால் தீவிர முயற்சி - அனைவரும் தங்கள்
உள்ளுணர்வைத் தங்களுக்காக, மற்றவர்களுக்காக, நேர்மறையாக தாரணை
செய்யுங்கள். ஞானம் நிறைந்தவராக தாராளமாக ஆகுங்கள், ஆனால் தனது
மனதில் எதிர்மறையானதை தாரணை செய்யாதீர்கள். எதிர்மறை என்பதன்
அர்த்தம் - குப்பை. அவ்வப்போது உள்ளுணர்வை சக்திசாலி ஆக்குங்கள்.
வைப்ரேஷனை சக்திசாலி ஆக்குங்கள். வாயுமண்டலத்தை சக்திசாலி
ஆக்குங்கள். ஏனென்றால் அனைவரும் அனுபவம் செய்திருக்கிறீர்கள்,
வாய்மொழி மூலம் மாற்றம், கற்பிப்பதன் மூலம் மாற்றம் மிகவும்
மெதுவாக ஏற்படுகிறது. மாற்றம் ஏற்படுகிறது, ஆனால் மிக மெதுவான
வேகத்தில். அதி வேகத்தை விரும்புகிறீர்கள் என்றால் ஞானம்
நிறைந்தவர் ஆகி, மன்னிக்கும் சொரூபம் ஆகி, இரக்க மனம் உள்ளவராகி,
சுப பாவனை, சுப விருப்பத்தின் மூலம் வாயு மண்டலத்தை மாற்றுங்கள்.
பாருங்கள், நீங்கள் அனைவரும் பிரத்தியட்சமாகப் பார்த்திருக்
கிறீர்கள், மதுபனுக்கு யாரெல்லாம் வருகிறார்களோ, அனைத்திலும்
அதிகமாக எந்த விஷயத்தின் பிரபாவம் ஏற்படு கிறது?
வாயுமண்டலத்தின் பிரபாவம். இங்கேயும் அனைவரும் நம்பர்வார்
இருந்தாலும், பிரம்மா பாபாவின் கர்ம பூமி, பாப்தாதாவின் வரதான
பூமி, அது வாயுமண்டலத்தை மாற்றி விடுகிறது. அனுபவம் உள்ளது
இல்லையா? ஆக, வைப்ரேஷன் மூலமாக உருவாக்குவது தான் தீவிர வேக
மனதின் முத்திரையாகும். வாயுமண்டலம் மனதில் முத்திரையாகி
விடுகிறது. கேள்விப்பட்ட விஷயம் மறந்து போகலாம். ஆனால் வாயு
மண்டலத்தினால் மனதில் பதிந்த முத்திரை மறக்காது. அப்படித் தானே?
ஆக, பாப்தாதா கேட்டுக் கொண்டே இருக்கிறார், பிரத்தியட்சதா
எப்போது ஏற்படும்? உங்களுக்குள் ஆன்மிக உரையாடலோ நன்றாகவே
செய்கிறீர்கள். நல்லது. சொல்லுங்கள், பாண்டவர்கள் இப்போது என்ன
செய்வீர்கள்? வாயுமண்டலத்தை சக்திசாலியாக ஆக்க வேண்டும்.
சேவாகேந்திரமாக இருந்தாலும் சரி, வேறு எந்த இடமாக இருந்தாலும்
சரி, இல்லறத்தில் இருந்தாலும் வாயு மண்டலம் சக்தி சாலியாக
இருக்க வேண்டும். நாலாபுறத்திலும் உள்ள வாயுமண்டலம் சம்பூர்ண
நிர்விக்னமாக, இரக்க மனம், சுப பாவனை, சுப விருப்பத்துடன
கூடியதாக ஆகி விடுமானால் பிரத்தி யட்சதாவுக்குத் தாமதமாகாது.
இப்போது பாப்தாதா என்ன தேதி கொடுத்திருக்கிறாரோ, அது
பாப்தாதாவுக்கு நினைவுள்ளது. கணக்கையோ கேட்பார் இல்லையா?
ஒவ்வொருவரும் தனது கணக்கையோ வைத்துள்ளார் இல்லையா? கணக்கில்
இதைத் தான் சோதனை செய்வார் இல்லையா? உள்ளுணர்வில், பார்வையில்,
பேச்சில் இரக்க மனம், சுப பாவனை, சுப விருப்பம் உள்ள ஆத்மாவாக
எத்தனை சதவிகிதம் இருந்தீர்கள்? இப்போதும் 15 நாட்களோ இருக்கும்
இல்லையா? அதிகம் தான். யார் செய்யவில்லையோ, 15 நாளில் செய்து
விட்டால் பாஸ் ஆகி விடுவீர்கள். நடந்து முடிந்ததற்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மற்றும் இரக்கத்தின் கடல் ஆக
வேண்டும். மன்னிப்பின் கடல் ஆக வேண்டும். (பாப்தாதா டிரில்
செய்ய வைத்தார்)
அனைவரும் கேட்டீர்களா? நல்லது. மூன்று மீட்டிங்குகளில் கலந்து
கொள்ள வந்திருப் பவர்கள், ஸ்பார்க் மீட்டிங்கில்
வந்திருப்பவர்கள் கை உயர்த்துங்கள். நல்லது. மிகவும் நல்லது.
இப்போது இந்த விஷயத்தைப பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் -
வாயுமண்டலத்தை எப்படி நடைமுறையில் சிரேஷ்டத்திலும்
சிரேஷ்டமானதாக ஆக்க முடியும்? ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? அத்தகைய வாயுமண்டலத்தை
உருவாக்குவதற்காக என்னென்ன புத்தியில் வைக்க வேண்டும் என்னென்ன
கர்மத்தில் செய்ய வேண்டும், சம்பந்தம்-தொடர்பில் என்ன செய்ய
வேண்டும் என்று? தன்னைத்தான் பிஸியாக வைக்கிறீர்கள், இது நல்ல
விஷயம் தான். ஆனால் பாப்தாதா இந்த நடைமுறை அனுபவத் தைப்
பார்க்க விரும்புகிறார் - எப்படி நடைமுறையில் செய்தீர்கள், அதன்
பலன் என்னவாக வெளிப்பட்டது? இடையில் ஏதேனும் தடை வந்ததென்றால்
என்ன வந்தது? இந்த அனுபவத்தை நடைமுறையில் செய்து பாருங்கள்.
வெறுமனே பாயின்ட்டுகள் மட்டும் வெளிப்படுத்தக் கூடாது, இதைச்
செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று. அப்படி இல்லை.
செய்யுங்கள். அனுபவம் செய்து உதாரணமாகிக் காட்டுங்கள் மற்றும்
அந்த உதாரணம் மற்றவர்களுக்கும் சகயோகம் கொடுக்கும். சரி தானே?
இவர் (ரமேஷ் பாயி) நிமித்தமாக உள்ளார் இல்லையா? நல்லது.
இப்போதும் 15 நாள் உள்ளது. இன்னும் கடைசி வரவில்லை. இப்போது
அதிக காலம் சென்று விட்டது. ஆனால் கொஞ்சம் மிஞ்சியுள்ளது
என்றால் ஸ்பார்க் காரர்கள் அது போல் நடைமுறையில் செய்து
பாருங்கள் மற்றும் மற்றவர்களுக்குக் காட்டுங்கள். சரியா? செய்ய
முடியுமா? நல்லது. சரி. மிக நன்று. நல்லது.
அடுத்த மீட்டிங் டிரான்ஸ்போர்ட் துறையினுடையது - டிரான்ஸ்போர்ட்
துறையினர் அனைவருக்கும் சுகம் கொடுப்பார்கள். டிரான்ஸ்போர்ட்
துறையினர் கை உயர்த்துங்கள். நல்லது. சகோதரிகள், சகோதரிகள்
இல்லாமல் வேகம் இருக்காது. ஆக, டிரான்ஸ்போர்ட் காரர்கள் என்ன
செய்வார்கள்? வெறுமனே யாத்திரை செய்வீர்களா? டிரான்ஸ்போர்ட்
துறையினர் அந்த மாதிரி தங்களுக்குள் புரோகிராம் தயார்
செய்யுங்கள் - எந்த ஓர் ஆத்மா வையும் துக்கத்தின்
உலகத்திலிருந்து அப்பால் கொண்டு சென்று கொஞ்ச நேரத்துக்காவது
சாந்தியின் யாத்திரை செய்விப்பதாக இருக்க வேண்டும். பரந்தாமம்
வரை செல்வதோ கஷ்டம். ஆனால் துக்க உலகத்தின் சாந்தி யாத்திரையோ
உங்களால் செய்ய முடியும். இந்தப் பிளான்களை நிறைய
உருவாக்குங்கள். நாலு விதமான யாத்திரை செய்பவர்களுக்கும்
பாப்தாதாவின் செய்தியையோ கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கொண்டு சேர்க்கத் தான் செய்வீர்கள். ஏனென்றால் எந்த ஒரு
வர்க்கத்தினரும் விடுபடக் கூடாது இல்லையா? வர்க்கங்களின்
கண்டுபிடிப்பைக் கொண்டு வந்தது நல்லது தான். இது நன்றாக உள்ளது.
புகார் வராது. எந்த ஒரு வர்க்கமும் விடுபடாது. ஒவ்வொருவரும்
தங்களின் வர்க்கத்தை முன்னேற்றுவதற்கான ஊக்கமோ வைக்கிறீர்கள்
தானே? இது மிக நன்று. ஆனால் இப்போது என்னென்ன வர்க்கங்கள்
உருவாகியுள்ளனவோ, எவ்வளவு காலமாக வர்க்கம் நடந்து வந்துள்ளதோ,
ஒன்றரை இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளதா, அதிகமாக ஆகியுள்ளதா?
(10-12 ஆண்டுகள்) வர்க்கங்களின் சேவைக்கு 10-12 ஆண்டுகள் ஆகிறது,
நல்லது. அதிக காலம் ஆகி விட்டது. வர்க்கத்தினருக்காக
பாப்தாதாவுக்கு ஒரு சங்கல்பம் உள்ளது. பாப்தாதா 2-3 தடவை
சொல்லியிருக்கிறார். ஆனால் நடக்கவில்லை. ஒவ்வொரு
வர்க்கத்தினரும் நீண்ட காலமாகச் சேவை செய்து கொண்டிருக்
கிறீர்கள். யாருக்கெல்லாம் சேவை செய்தீர்களோ, அவர்களில் சிலர்
விசேஷ சேவை செய்பவராக, சகயோகியாக இருக்கலாம். பாதி யோகியாக
இருக்கலாம். அவ்வப்போது வருபவராக இருக்கலாம். தொடர்ச்சியாக (ரெகுலர்)
வராமலிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு வர்க்கத்தில்
இருந்தும் குறைந்தது 5 பேராவது இங்கே எதிரில் வர வேண்டும்.
மதுபனை அனைவரும் பார்க்கட்டும். வர்க்கத்தினர் 10-12 பேர்
ஆனாலும் 5 பேராவது பக்கா ஆத்மாவாக இருக்க வேண்டும். நல்ல
சகயோகியாக சேவையில் நிமித்தமாக இருக்கக் கூடியவர்கள் 5-5
பேராவது தேர்வு செய்ய முடியுமா? முடியும் என்றால் கொண்டு
வாருங்கள். (எப்போது கொண்டு வருவீர்கள்?) அது தாதிகளிடம் தான்
உள்ளது. (பாப்தாதாவின் புரோகிராமில் கொண்டு வரவா?) அவர்கள்
பிறகு அந்த மாதிரி பாப்தாதாவுடன் சந்திக்கத் தகுதியுள்ளவராக
இருக்க வேண்டும். 5 பேர் கொண்டு வர முடியும். அதிகம்
சொல்லவில்லை. 5 பேர் போதும். அவர்களை தாதிமார் தேர்வு
செய்வார்கள்.
இஞ்சினியர்கள் - இஞ்சினியர்களின் வேலையே பிளான் உருவாக்குவது
தான். ஆக, தீவிர புருஷôர்த்தத் திற்கான ஏதேனும் பிளான் தயார்
செய்திருக்கிறீர்களா, அல்லது சேவைக் கானது மட்டும் தயார்
செய்திருக் கிறீர்களா? இஞ்சினியர்கள் ஒவ்வொரு மாதமும் தீவிர
புருஷôர்த்தத்திற்கான ஏதாவது புதுப்புது பிளான் உருவாக்க
வேண்டும். ஆலோசனை கொடுக்க வேண்டும். பிறகு முடிவை தாதிமார்
செய்வார்கள். தாதிமார் உங்களோடு இருக்கிறார்கள். ஆனால்
இஞ்சினியர்கள் மற்றும் சயின்ஸ் (விஞ்ஞானிகள்) அந்த மாதிரி
ஏதாவது பிளான் தயார் செய்ய வேண்டும் - சீக்கிரம்-சீக்கிரமாகப்
புது உலகம் வந்து விட வேண்டும். இதே மீட்டிங் செய்து கொண்டே,
பிளான் உருவாக்கிக் கொண்டே இருப்பீர்கள் என்றால் எது வரை?
ஏதாவது தீவிர வேகத் தின் பிளான் உருவாக்குங்கள். ஏனென்றால்
உங்கள் வர்க்கத்தின் லட்சியமோ இது தான் - தங்களின் ராஜ்யம்
சீக்கிரம்-சீக்கிரம் வந்து விடுகிற மாதிரி அத்தகைய ஒரு பிளான்
தயார் செய்ய வேண்டும். எனவே அப்படிப்பட்ட பிளானையும் தயார்
செய்யுங்கள் மற்றும் சேவையிலும் கூட குறைந்த சமயத்தில் அதிக
வெற்றி பிரத்தியட்சமாகக் காணப்பட வேண்டும். அந்த மாதிரி பிளான்
தயார் செய்யுங்கள். அப்படிப்பட்ட பிளான் உருவாக்குவீர்கள்
இல்லையா? கடைசி சந்திப்பில் அனைத்து ரிப்போர்ட்டையும் கேட்போம்
- ஒவ்வொரு வர்க்கத்தினரும் வெற்றியைத் தீவிரப் படுத்து வதற்கான
பிளான் என்ன உருவாக்கி யிருக்கிறீர்கள்? தயார் செய்தால் மட்டும்
போதாது. 15 நாள் அதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும்.
நடைமுறையில் கொண்டு வர வேண்டும். சரியா? இப்போது நடை முறையில்
வர வேண்டும் இல்லையா? அனைவரும் ஒருவருக் கொருவர் பேசிக்
கொள்கிறார்கள் - பாப்தாதாவோ அனைவரின் ஆன்மிக உரையாடலையும்
கேட்டுக் கொண்டே இருக்கிறார். அனைவரும் சொல்கிறார்கள்,
பிரத்தியட்சம் ஆக வேண்டும், பிரத்தியட்சம் ஆக வேண்டும். ஆனால்
முதலில் நீங்களோ பிரத்தியட்சம் ஆகுங்கள். பாபாவும் கூட உங்கள்
மூலமாகப் பிரத்தியட்சம் ஆவார் இல்லையா? நல்லது -- இப்போதே
உங்கள் உள்ளுணர்வை ஒருமுகப் படுத்த முடியுமா? எங்கேயும்
உள்ளுணர்வு குழப்பத்தில் வந்துவிடக் கூடாது. அசையாத தாக.
ஒருமுகப்பட்டதாக, சக்திசாலியாக இருக்க வேண்டும். (பாப்தாதா
டிரில் செய்ய வைத்தார்) நல்லது.
நாலாபுறமும் உள்ள சேவை செய்யக்கூடிய குழந்தைகள் அனைவருக்கும்,
சதா தங்களின் சிரேஷ்ட வைப்ரேஷன் மூலமாக சேவை செய்யக்கூடிய
தீவிர வேகத்தின் புருஷார்த்தம் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு,
சதா மன்னிக்கும் மாஸ்டர் கடல், சதா சுப பாவனை, சுப
விருப்பத்தின் மூலம் மிக பலவீனமான ஆத்மாக்களையும் கூட சக்திசாலி
ஆக்கக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் குழந்தைகளுக்கு பாப்தாதாவின்
மிக-மிக அன்பு நினைவுகள் மற்றம் நமஸ்தே!
வரதானம்:
சமயத்திற்கேற்றவாறு ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெறக்கூடிய
ஞானம், யோகம் நிறைந்த ஆத்மா ஆகுக.
ஞானத்தின் அர்த்தம் புரிதல் என்பதாகும். யார்
சமயத்திற்கேற்றவாறு புத்திசாலித்தனமாகக் காரியம் செய்து வெற்றி
பெறுகிறார்களோ, அவர் தாம் புத்திசாலி எனச் சொல்லப்படுவார்.
புத்திசாலியின் அடையாளம், அவர் ஒரு போதும் தோல்வியடைய மாட்டார்.
மேலும் யோகி யின் அடையாளம், சுத்தமான, தெளிவான (க்ளீன், க்ளியர்)
புத்தி உள்ளவராக இருப்பார். யாருடைய புத்தி சுத்தமாக, தெளிவாக
உள்ளதோ, அவர் ஒரு போதும் சொல்ல மாட்டார் – தெரியவில்லையே, ஏன்
இப்படி ஆகி விட்டது! இந்த வார்த்தையை ஞானி மற்றும் யோகி
ஆத்மாக்கள் பேச மாட்டார்கள். அவர்கள் ஞானம் மற்றும் யோகத்தை
ஒவ்வொரு கர்மத்திலும் கொண்டு வருவார்கள்.
சுலோகன்:
யார் தங்களின் ஆதி அநாதி சம்ஸ்கார-சுபாவத்தை ஸ்மிருதியில்
வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தாம் ஆடாத-அசையாதவராக
இருப்பார்கள்.