06-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் இங்கு இருந்தாலும் புது உலகை நினைவு செய்ய வேண்டும் மற்றும் ஆத்மாவை பாவனம் ஆக்க வேண்டும்.

கேள்வி:
புத்தியின் பூட்டு திறக்கும் படியான எந்த ஒரு அறிவை தந்தை கொடுத்திருக்கின்றார்?

பதில்:
இந்த எல்லையற்ற அழிவற்ற நாடகத்தின் அறிவை தந்தை கொடுத்திருக்கின்றார், இதன் மூலம் கோத்ரெஜ் பூட்டினால் பூட்டப்பட்டிருந்த புத்தியானது திறக்கப்பட்டு விட்டது. கல்புத்தி யிலிருந்து தங்கப் புத்தி யுடையவர்களாக ஆகிவிட்டோம். இந்த நாடகத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கென்று அழிவற்ற பாகம் இருக்கிறது, யார் கல்பத்திற்கு முன்பு எவ்வளவு படித்தார்களோ அவ்வளவு தான் இப்பொழுதும் படிப்பார்கள், முயற்சி செய்து தனது ஆஸ்தியை எடுத்துக் கொள்வார்கள் என்ற அறிவை தந்தை கொடுத்திருக்கின்றார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை வந்து கற்றுக் கொடுக்கின்றார். எப்பொழுது தந்தையாக ஆனாரோ அப்பொழுதிலிருந்தே ஆசிரியராகவும், அப்பொழுதிலிருந்தே சத்குரு ரூபத்தில் கல்வியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். எப்பொழுது தந்தையாக, ஆசிரியராக, குருவாக இருக்கின்றார் எனும்பொழுது சிறு குழந்தையாக இல்லை அல்லவா! என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவராக, பெரியவர்களிலும் பெரியவராக இருக்கிறார். இவர்கள் அனைவரும் எனது குழந்தைகள் என்பதை தந்தை அறிவார். நாடகப்படி வந்து எங்களை தூய்மை யான உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அழைக்கவும் செய்தீர்கள். ஆனால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. தூய உலகம் என்று சத்யுகமும், அசுத்தமான உலகம் என்று கலியுகமும் கூறப்படுகிறது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். வந்து எங்களை இராவணனின் சிறையிலிருந்து, துக்கத்திலிருந்து விடுவித்து நமது சாந்திதாமம், சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றும் கூறுகின்றனர். இரண்டு பெயர்களும் நன்றாக இருக்கிறது. முக்தி, ஜீவன் முக்தி அல்லது சாந்திதாமம், சுகதாமம். சாந்திதாமம் எங்கு இருக்கிறது? சுகதாமம் எங்கு இருக்கிறது? என்பது குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் கிடையாது. முற்றிலும் புத்தி யற்றவர்களாக இருக்கின்றனர். உங்களது இலட்சியம், குறிக்கோள் புத்திசாலி ஆவதற்கானது. புத்தி யற்றவர்களுக்குத் தான் இவ்வாறு புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்ற இலட்சியம், குறிக்கோள் இருக்கும். மனிதனிலிருந்து தேவதை ஆவது தான் இலட்சியம் என்று அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மனிதர்களின் சிருஷ்டி ஆகும், அது தேவதைகளின் சிருஷ்டி ஆகும். சத்யுகத்தில் இருப்பது தேவதைகளின் சிருஷ்டியாகும், எனவே மனிதர்களின் சிருஷ்டி அவசியம் கலி யுகத்தில் தான் இருக்கும். இப்பொழுது மனிதனிலிருந்து தேவதையாக ஆக வேண்டும் எனில் அவசியம் புருஷோத்தம சங்கமயுகமும் இருக்க வேண்டும். அவர்கள் தேவதைகள், இவர்கள் மனிதர்கள். தேவதைகள் புத்திசாலிகள். தந்தை தான் இவ்வாறு புத்திசாலிகளாக ஆக்கியிருக்கின்றார். தந்தை உலகிற்கு எஜமானராக உள்ளார், உண்மையில் எஜமானராக ஆவது கிடையாது, ஆனால் இவ்வாறு பாடப்படுகிறது அல்லவா! எல்லையற்ற தந்தை எல்லையற்ற சுகம் கொடுக்கக் கூடியவர் ஆவார். எல்லையற்ற சுகம் இருப்பது புது உலகில் மற்றும் எல்லையற்ற துக்கம் இருப்பது பழைய உலகில். தேவதைகளின் சிலைகளும் உங்கள் முன் இருக்கிறது. அவர்களுக்கு மகிமையும் இருக்கிறது. இன்றைய நாட்களில் 5 தத்துவங்களுக்கும் பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்று தந்தை இப்பொழுது உங்களுக்குப் புரிய வைக்கின்றார். உங்களிலும் வரிசைக்கிரமமான முயற்சியின் படி அறிந்திருக்கிறீர்கள் - நமது ஒரு கால் சொர்க்கத்திலும், ஒரு கால் நரகத்திலும் இருக்கிறது. இங்கு தான் இருக்கிறீர்கள், ஆனால் புத்தி புது உலகில் இருக்கிறது, மேலும் யார் புது உலகிற்கு அழைத்துச் செல்வாரோ அவரையும் நினைவு செய்ய வேண்டும். தந்தையின் நினைவின் மூலம் தான் நீங்கள் தூய்மையாக ஆகிறீர்கள். இதை சிவபாபா வந்து புரிய வைக்கின்றார். அவசியம் சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர், ஆனால் சிவபாபா எப்பொழுது வந்தார்? வந்து என்ன செய்தார்? போன்ற எதுவும் தெரியாது. சிவராத்திரி கொண்டாடுகின்றனர் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றனர், எந்த வார்த்தை கிருஷ்ணருக்கு கூறப்படுகிறதோ அதை சிவபாபாவிற்கு கூறமாட்டார்கள். அதனால் அவருக்கு ராத்திரி என்று கூறுகின்றனர். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது அர்த்தம் புரிய வைக்கப் படுகிறது. கலியுகக் கடைசியில் அளவற்ற துக்கம் இருக்கிறது, பிறகு அளவற்ற சுகம் சத்யுகத்தில் இருக்கும். இந்த ஞானம் இப்பொழுது குழந்தை களாகிய உங்களுக்கு கிடைத்திருக்கிறது. நீங்கள் முதல், இடை, கடையை அறிவீர்கள். யார் கல்பத் திற்கு முன் படித்தார்களோ அவர்களே இப்பொழுதும் படிப்பார்கள், யார் எவ்வளவு முயற்சி செய்திருந் தார்களோ அவ்வளவு தான் முயற்சி செய்வார்கள் மற்றும் அவ்வாறே பதவியும் அடைவார்கள். உங்களது புத்தியில் முழு சக்கரமும் இருக்கிறது. நீங்கள் தான் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைகிறீர்கள். பிறகு நீங்கள் அவ்வாறே வீழ்ச்சியடையவும் செய்கிறீர்கள். தந்தை புரிய வைத்திருக் கின்றார் - மனித ஆத்மாக்கள் அனைவரும், மாலை அல்லவா! அனைவரும் வரிசைக்கிரமமாக வருகின்றனர். ஒவ்வொரு நடிகருக்கும் அவரவருக்கென்று - எந்த நேரத்தில் யார் என்ன பாகம் நடிக்க வேண்டும்? என்பது கிடைத்திருக்கிறது. இது அழிவற்ற, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும், இதை தந்தை வந்து புரிய வைக்கின்றார். இப்பொழுது தந்தை உங்களுக்கு என்ன புரிய வைக்கின்றாரோ அதை தனது சகோதரர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகும் தந்தை வந்து நமக்கு புரிய வைக்கின்றார், பிறகு நாம் நமது சகோதரர்களுக்குப் புரிய வைக்கின்றோம் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. ஆத்ம சம்மந்தத்தில் சகோதர, சகோதரர்களாக இருக்கிறோம். இந்த நேரத்தில் நீங்கள் உங்களை அசரீரி ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தூய்மை ஆவதற்கு ஆத்மா தான் தனது தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா தூய்மையாகின்ற பொழுது சரீரமும் தூய்மையானதாக கிடைக்கிறது. ஆத்மா அசுத்தமாகின்ற பொழுது அணிகலன்களும் கூட அசுத்தமானதாக ஆகிவிடு கிறது. வரிசைக்கிரமம் ஏற்படவே செய்கிறது. ஒருவரது முகம், நடத்தை போன்று மற்றொருவருக்கு கிடைப்பது கிடையாது. வரிசைக்கிரமமாக அனைவரும் அவரவர்களது பாகம் நடித்துக் கொண்டிருக் கின்றனர். வித்தியாசம் ஏற்பட முடியாது. நேற்று என்ன காட்சிகளை பார்த்திருப்பீர்களோ அந்த காட்சி களையே (ஸ்துôல) நாடகத்தில் பார்ப்பீர்கள். அதுவே திரும்பவும் நடைபெறும் அல்லவா! இது எல்லையற்ற மற்றும் பதியப்பட்ட நாடக மாகும். நேற்று உங்களுக்கு புரிய வைக்கப்பட்டது. நீங்கள் இராஜ்யம் அடைந்திருந்தீர்கள், பிறகு இராஜ்யத்தை இழந்து விட்டீர்கள். இப்பொழுது மீண்டும் இராஜ்யம் அடைவதற்காக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று பாரதம் பழைய நரகமாக இருக்கிறது, நாளை புதிய சொர்க்கமாக இருக்கும். இப்பொழுது நாம் புது உலகிற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. ஸ்ரீமத் மூலம் சிரேஷ்டமாக ஆகிக் கொண்டிருக் கிறோம். சிரேஷ்டமானவர்கள் அவசியம் சிரேஷ்ட உலகில் தான் இருப்பர். இந்த லெட்சுமி நாராயணன் சிரேஷ்ட மானவர்கள் எனில் சிரேஷ்டமான சொர்க்கத்தில் இருப்பர். யார் பிரஷ்டமானவர்களோ (இழிவானவர்கள்) அவர்கள் நரகத்தில் இருக்கின்றனர். இந்த ரகசியத்தை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இந்த எல்லையற்ற நாடகத்தை யாராவது நன்றாக புரிந்து கொள்ளும் பொழுது தான் புத்தியில் பதியும். சிவராத்திரியும் கொண்டாடுகின்றனர். ஆனால் எதையும் அறிந்து கொள்வது கிடையாது. ஆக இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை புத்துணர்வு ஊட்ட (நினைவூட்ட) வேண்டி யிருக்கிறது. பிறகு நீங்கள் மற்றவர்களுக்கும் நினைவூட்டுகிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது, பிறகு சத்கதியை அடைந்து விடுவீர்கள். தந்தை கூறுகின்றார் - நான் சொர்க்கத்திற்கு வருவது கிடையாது, தூய்மையற்ற உலகை மாற்றி தூய்மையான உலகை உருவாக்குவது தான் எனது பாகமாகும். அங்கு உங்களிடத்தில் அளவற்ற பொக்கிஷம் இருக்கும். இங்கு ஏழைகளாக இருக்கிறீர்கள். அதனால் தான் வந்து எல்லையற்ற ஆஸ்தி கொடுங்கள் என்று அழைக்கிறீர்கள். கல்ப கல்பத்திற்கும் எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறது, பிறகு ஏழைகளாக ஆகிவிடுகிறீர்கள். சித்திரங்களின் மூலம் புரிய வைக்கும் பொழுது தான் புரிந்து கொள்வர். முதல் நம்பரில் லெட்சுமி நாராயணன், பிறகு 84 பிறவிகள் எடுத்து மனிதர்களாக ஆகிவிட்டனர். இந்த ஞானம் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் இருந்தது, இதையே வைகுண்டம், சொர்க்கம், தெய்வீக உலகம் என்று கூறுகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது கூறமாட்டீர்கள். இப்பொழுது அசுர உலகமாக இருக்கிறது. அசுர உலகின் கடைசி, தெய்வீக உலகின் ஆரம்பமாகிய இப்பொழுது சங்கமமாக இருக்கிறது. இந்த விசயங்களை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், வேறு யாருடைய வாயின் மூலமும் இதை கேட்க முடியாது. தந்தை வந்து தான் இவரது வாயை பயன்படுத்திக் கொள்கின்றார். யாருடைய வாயை பயன்படுத்துவார்? என்பதையும் புரிந்து கொள்வது கிடையாது. தந்தை யார் மீது சவாரி செய்வார்? உங்களது ஆத்மா இந்த சரீரத்தில் சவாரி செய்கிறது அல்லவா! சிவபாபாவிற்கு தனக்கென்று சரீரம் கிடையாது, ஆக இவரது வாய் அவசியம் தேவைப்படுகிறது. இல்லையெனில் இராஜயோகம் எப்படி கற்றுக் கொடுப்பார்? பிரேரணையின் மூலம் கற்றுக் கொள்ளமாட்டீர்கள். ஆக இந்த அனைத்து விசயங்களையும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பரமாத்மாவின் புத்தியிலும் முழு ஞானம் இருக்கிறது அல்லவா! உங்களது புத்தியிலும் இது பதிவாக வேண்டும். இந்த ஞானத்தை புத்தியில் தாரணை செய்ய வேண்டும். உங்களது புத்தி சரியாக இருக்கிறது அல்லவா! என்று கேட்கின்றனர். புத்தி ஆத்மாவில் இருக்கிறது. ஆத்மா தான் புத்தியின் மூலம் புரிந்து கொள்கிறது. உங்களை கல்புத்தியுடையவர்களாக ஆக்கியது யார்? இராவணன், நமது புத்தியை எப்படி ஆக்கி விட்டான்? என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நேற்று நீங்கள் நாடகத்தை அறியாமல் இருந்தீர்கள், புத்தி கோத்ரெஜ் பூட்டினால் பூட்டப்பட்டு இருந்தது. காட் என்ற வார்த்தை வருகிறது அல்லவா! தந்தை என்ன புத்தி கொடுக் கின்றாரோ அது மாறி கல்புத்தியாக ஆகிவிடுகிறது. பிறகு மீண்டும் தந்தை வந்து பூட்டை திறக்கின்றார். சத்யுகத்தில் தங்கப் புத்தியுடையவர்களாக இருப்பர். தந்தை வந்து அனைவருக்கும் நன்மை செய்கின்றார். வரிசைக்கிரமமாக அனைவரின் புத்தியும் திறக்கப்படுகிறது. பிறகு ஒருவரின் பின் ஒருவராக வந்து கொண்டே இருக்கின்றனர். மேலேயே யாரும் இருந்து விட முடியாது. தூய்மை இல்லாதவர்கள் அங்கு இருக்க முடியாது. தந்தை தூய்மையாக்கி தூய்மையான உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு அனைவரும் தூய்மையான ஆத்மாக்களாகத் தான் இருப்பர். அது நிராகார உலகமாகும்.

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைத்தும் அறிந்து கொண்டீர்கள். ஆகையால் தனது வீடும் மிக அருகாமையில் தென்படுகிறது. உங்களுக்கு வீட்டின் மீது அதிக அன்பு இருக்கிறது. உங்களது அன்பு போன்று யாருக்கும் கிடையாது. உங்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. யாருக்கு தந்தையின் மீது அன்பு இருக்கிறதோ அவர்களுக்கு வீட்டின் மீதும் அன்பு இருக்கும். மூத்த குழந்தை கள் விசேஷமானவர்களாக இருப்பர் அல்லவா! இங்கு யார் நன்றாக முயற்சி செய்து விசேஷ குழந்தைகளாக ஆகிறார்களோ அவர்கள் தான் உயர்ந்த பதவி அடைவர் என்பதை நீங்கள் புரிந்திருக் கிறீர்கள். சிறியவர்கள், பெரியவர்கள் என்பது சரீரத்தினால் அல்ல. ஞானம் மற்றும் யோகத்தில் யார் மூழ்கியிருக்கிறார்களோ அவர்கள் தான் உயர்ந்தவர்கள். சில சிறிய சிறிய குழந்தைகளும் ஞான, யோகத்தில் தீவிரமாக இருக்கின்றனர், பெரியவர்களுக்கும் கற்பிக்கின்றனர். உண்மையில் நியமம் என்னவெனில் பெரியவர்கள் தான் சிறியவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இன்றைய நாட்களில் தலைகீழாக ஆகிவிடுகிறது. அனைத்து ஆத்மாக்களும் தலைகீழாக இருக்கின்றன. ஆத்மா பிந்துவாக இருக்கிறது, அதை எப்படி எடை போட முடியும்! நட்சத்திரமாக இருக்கிறது. மனிதர்கள் நட்சத்திரத் தின் பெயர் கேட்டதும் மேலே பார்ப்பர். நீங்கள் நட்சத்திரத்தின் பெயரைக் கேட்டதும் தன்னைப் பார்த்துக் கொள்கிறீர்கள். பூமியின் நட்சத்திரங்களாக நீங்கள் இருக்கிறீர்கள். அது ஆகாயத்திலுள்ள ஜட நட்சத்திரங்கள், நீங்கள் சைத்தன்யமாக இருக்கிறீர்கள். அவைகளில் மாற்றம் எற்பட முடியாது, நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள், எவ்வளவு பெரிய பாகம் நடிக்கிறீர்கள்! நடிப்பு நடித்து நடித்து பிரகாசம் மங்கி விடுகிறது, பேட்டரி சார்ஜ் குறைந்து விடுகிறது. பிறகு தந்தை வந்து விதவிதமான முறையில் புரிய வைக்கின்றார், ஏனெனில் உங்களது ஆத்மா ஒளியிழந்து விட்டது. எந்த சக்திகள் நிறைந்திருந்ததோ அதை இழந்து விட்டது. இப்பொழுது தந்தையின் மூலம் மீண்டும் சக்திகளை நிறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களது பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டிருக்கிறீர்கள். இதில் மாயையும் அதிக தடைகளை போடுகிறது, பேட்டரி சார்ஜ் செய்ய விடுவது கிடையாது. நீங்கள் சைத்தன்ய பேட்டரிகளாக இருக்கிறீர்கள். தந்தையிடத்தில் யோகா வைத்துக் கொள்வதன் மூலம் நாம் சதோ பிரதானமாக ஆவோம் என்பதை அறிவீர்கள். இப்பொழுது தமோ பிரதானமாக ஆகி விட்டோம். அந்த எல்லைக்குட்பட்ட படிப்பிற்கும் இந்த எல்லையற்ற படிப்பிற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. வரிசைக்கிரமமாக ஆத்மாக்கள் எப்படி மேலே செல்கின்றனர்! பிறகு தனது தகுந்த நேரத்தில் நடிப்பு நடிக்க வர வேண்டும்! அனைவருக்கும் அவரவர்களது அழிவற்ற பாகம் கிடைக் கிறது. நீங்கள் இந்த 84 பிறவிக்கான பாகம் எவ்வளவு முறை நடித்திருப்பீர்கள்! உங்களது பேட்டரி எத்தனை முறை சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும்! தனது பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டது என்பதை அறிந்த பின்பு சார்ஜ் செய்வதற்கு ஏன் தாமதப்படுத்த வேண்டும்? ஆனால் மாயை பேட்டரி சார்ஜ் செய்ய விடுவது கிடையாது. பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும் என்பதை மாயை மறக்க வைத்து விடுகிறது. அடிக்கடி டிஸ்சார்ஜ் செய்வித்து விடுகிறது. தந்தையை நினைவு செய்ய முயற்சி செய்கிறீர்கள், ஆனால் செய்ய முடிவது கிடையாது. உங்களிலும் யார் பேட்டரி சார்ஜ் செய்து சதோ பிரதான நிலையின் நெருக்கத்தில் வந்து விடுகிறார்களோ அவர்கள் மூலமும் சில நேரங்களில் மாயை தவறு செய்வித்து பேட்டரி டிஸ்சார்ஜ் செய்து விடுகிறது. இது கடைசி வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். பிறகு யுத்தத்தின் கடைசியில் அனைத்தும் அழிந்து விடும், பிறகு யாருடைய பேட்டரி எவ்வளவு சார்ஜ் ஆகியிருக்குமோ அதன் படி பதவி அடைவர். அனைத்து ஆத்மாக்களும் தந்தையின் குழந்தைகள் ஆவர், தந்தை வந்து தான் அனைவரின் பேட்டரியையும் சார்ஜ் செய்விக்கின்றார். எவ்வளவு அதிசயமான விளையாட்டு உருவாக்கப் பட்டிருக்கிறது! தந்தை யிடத்தில் யோகா வைப்பது அடிக்கடி துண்டிக்கப்படுகின்ற பொழுது எவ்வளவு நஷ்டமாகி விடுகிறது! துண்டிக்கப்படாமல் இருப்பதற்காகத் தான் முயற்சி செய்விக்கப்படுகிறது. முயற்சி செய்து செய்து எப்பொழுது இறுதி நிலையை எட்டி விடுகிறதோ பிறகு வரிசைக்கிரமமான முயற்சியின் படி உங்களது பாகம் முடிவடையும். கல்ப கல்பத்திற்கும் ஏற்படுவது போன்று! ஆத்மாக்களின் மாலை உருவாகிக் கொண்டே இருக்கிறது. ருத்ராட்ச மாலையும் இருக்கிறது, விஷ்ணுவின் மாலையும் இருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முதல் நம்பரில் அவர்களது மாலை வைப்பார் அல்லவா! தந்தை தெய்வீக உலகம் படைக்கின்றார் அல்லவா! எவ்வாறு ரூத்ர மாலை இருக்கிறதோ அதே போன்று ருண்ட மாலையும் இருக்கிறது. பிராமணர்களின் மாலை இப்பொழுது உருவாக்க முடியாது, மாறிக் கொண்டே இருக்கிறது. ருத்ர மாலை உருவாகும் பொழுது தான் முடிவாகும். பிராமணர்களுக்கும் மாலை இருக்கிறது, ஆனால் இந்த நேரத்தில் உருவாக்க முடியாது. உண்மையில் பிரஜாபிதா பிரம்மாவிற்கு அனைவரும் குழந்தைகளாக இருக்கிறீர்கள். சிவபாபாவின் குழந்தைகளுக்கும் மாலை இருக்கிறது, விஷ்ணுவின் மாலை என்றும் கூறுகிறோம். நீங்கள் பிராமணர்களாக ஆகிறீர்கள் எனில் பிரம்மா மற்றும் சிவனுக்கும் மாலை வேண்டும். இந்த அனைத்து ஞானமும் உங்களது புத்தியில் வரிசைக்கிரமமாக இருக்கிறது. அனைவரும் கேட்கிறீர்கள், ஆனால் சிலருக்கு அந்த நேரத்திலேயே காதுகளின் மூலம் வெளியேறி விடுகிறது, கேட்பதே கிடையாது. சிலர் படிப்பதே கிடையாது. பகவான் கற்பிக்க வருகின்றார் என்பது அவர்களுக்கு தெரிவதே கிடையாது. படிப்பதே கிடையாது, இந்த படிப்பை எவ்வளவு குஷியாக படிக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நன்ஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நினைவு யாத்திரையின் மூலம் ஆத்மா என்ற பேட்டரியை சார்ஜ் செய்து சதோ பிரதான நிலை அடைய வேண்டும். பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகிவிடுமளவிற்கு எந்த தவறும் செய்யக் கூடாது.

2) விசேஷ குழந்தை ஆவதற்காக தந்தையின் நினைவின் கூடவே வீட்டின் மீதும் அன்பு இருக்க வேண்டும். ஞானம் மற்றும் யோகாவில் மூழ்கியிருக்க வேண்டும். தந்தை என்ன புரிய வைக்கின்றாரோ அதை தனது சகோதரர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

வரதானம்:
ஒரு தந்தையை தனது உலகமாக ஆக்கிக் கொண்டு சதா ஒருவரின் ஈர்ப்பில் இருக்கக் கூடிய கர்மபந்தனங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுக.

எனக்கு ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற அனுபவத்தில் சதா இருங்கள். ஒரு தந்தை தான் எனக்கு உலகம், போதும். வேறு எந்த ஈர்ப்பும் கிடையாது, எந்த கர்மபந்தனமும் கிடையாது. தனது எந்த ஒரு பலவீன சன்ஸ்காரத்தின் பந்தனமும் இருக்கக் கூடாது. ஒருவர் மீது என்னுடையவர் என்ற அதிகாரம் வைக்கும் போது அவருக்கு கோபம் அல்லது அபிமானம் வந்து விடுகிறது - இதுவும் கர்மபந்தனமாகும். ஆனால் பாபா மட்டுமே என்னுடைய உலகம் என்ற நினைவு இருக்கும் போது அனைத்து என்னுடையது என்னுடையது என்பது ஒரு என்னுடைய பாபாவில் கலந்து விடும். மேலும் கர்மபந்தனங்களிலிருந்து எளிதாக விடுபட்டு விடுவீர்கள்.

சுலோகன்:
யாருடைய திருஷ்டி மற்றும் விருத்தி எல்லையற்றதாக இருக்கிறதோ அவர்களே மகான் ஆத்மாக்கள் ஆவர்.