07-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் தன்னை தான் சங்கமயுக பிராமணர் எனப் புரிந்து கொள்வதன் மூலம் சத்யுகத்தின் மரம் (உலகம்) உங்கள் பார்வையில் தென்படும். மேலும் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.

கேள்வி:
யார் ஞானத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்களின் அடையாளம் என்ன?

பதில்:
அவர்கள் தங்களிடையே ஞானத்தின் விசயங்களைப் பற்றித் தான் பேசுவார்கள், ஒரு பொழுதும் பிற விசயங்களைப் பற்றி சிந்தனை செய்யமாட்டார்கள். ஏகாந்தமாகச் (தனிமை) சென்று ஞானத்தை ஆழமாக சிந்தனை செய்வார்கள்.

கேள்வி:
இந்த உலக நாடகத்தில் எப்படிப்பட்ட இரகசியத்தை குழந்தைகள் நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள்?

பதில்:
இந்த உலகத்தில் ஒரு சிவபாபாவைத் தவிர வேறு எந்த பொருளும் நிலையானது இல்லை, பழைய உலகத்தைச் சேர்ந்த ஆத்மாக்களை புது உலகிற்கு அழைத்துச் செல்வதற்கு யாராவது ஒருவர் வேண்டுமல்லவா! இது கூட நாடகத்தின் இரகசியம் எனக் குழந்தைகள் நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்காக புருஷோத்தம சங்கமயுகத்தில் வரக் கூடிய தந்தை புரிய வைக்கின்றார். நாம் பிராமணர்களாக இருக்கின்றோம் எனக் குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். தன்னை பிராமணர் என புரிந்துள்ளீர்களா அல்லது இதையும் மறந்து விட்டீர்களா? பிராமணர்களுக்கு தன்னுடைய குலம் மறப்பதில்லை. நாம் பிராமணராக இருக்கின்றோம் என்ற நினைவு. உங்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். இந்த ஒரு விசயத்தை நினைத்தாலே நீங்கள் கரை சேர்ந்து விடுவீர்கள். சங்கமயுகத்தில் நீங்கள் புதுப்புது விசயங்களைக் கேட்கின்றீர்கள். ஆகவே இதனைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும், இதைத்தான் ஞானத்தை ஆழமாக சிந்திப்பது எனக் கூறப்படுகிறது. நீங்கள் ஞானி, யோகிகள். உங்களுடைய ஆத்மாவில் முழு ஞானமும் நிறைந்துள்ளது ஆகவே உங்கள் மூலம் ஞான இரத்தினங்கள் வெளிப்பட வேண்டும். தன்னைத் தான் சங்கமயுக பிராமணர் எனப் புரிந்து கொள்ள வேண்டும், சிலருக்கு இது கூடப் புரியவில்லை. தன்னைத் தான் சங்கமயுகத்தைச் சேர்ந்தவர் எனப் புரிந்து கொண்டால் சத்யுகத்தின் மரம் உங்கள் பார்வையில் தென்படும், அளவற்ற மகிழ்ச்சியும் ஏற்படும். தந்தை எதைப் புரிய வைக்கின்றாரோ அதனை உங்களுக்குள் திரும்பத் திரும்ப சிந்தனை செய்ய வேண்டும். நாம் சங்கமயுகத்தில் இருக்கின்றோம், இது கூட உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. சங்கமயுகத்தின் படிப்புக்கும் நேரம் தேவைப்படுகிறது. இந்த ஒரேயொரு படிப்பு தான் நரனிலிருந்து நாராயணராக, நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக ஆக்கக் கூடியது. நாம் மீண்டும் தேவதைகளாக, சொர்க்கவாசியாக ஆகின்றோம் என்ற நினைவின் மூலமாக மகிழ்ச்சி ஏற்படும். சங்கமயுக வாசியாக இருந்தால் தான் சொர்க்கவாசியாக ஆவீர்கள். இதற்கு முன் நரகவாசியாக இருந்தீர்கள் அப்பொழுது மிகவும் கெட்ட நிலையில், கெட்ட காரியம் செய்தீர்கள், இப்பொழுது அதனை நீக்க வேண்டும். மனிதனிலிருந்து தேவதையாக, சொர்க்கவாசியாக ஆக வேண்டும். யாருடைய மனைவியாவது இறந்து விட்டால், அவரிடம் உங்கள் மனைவி எங்கே? எனக் கேட்டால் சொர்க்கவாசியாகி விட்டார் என சொல்வர்கள். சொர்க்கம் என்றால் என்ன? இது அவர்களுக்குத் தெரியாது. ஒருவேளை இறந்தவர்கள் சொர்க்கவாசியானால் மகிழ்ச்சியடைய வேண்டுமல்லவா! இப்பொழுது குழந்தைகள் நீங்கள் இந்த விசயங்களை அறிந்துள்ளீர்கள். நாம் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கின்றோம், பாவனமாகின்றோம் என்ற சிந்தனை உள்ளுக்குள் இருக்க வேண்டும். சொர்க்கத்தின் பிராப்தியை தந்தையிடமிருந்து அடைந்து கொண்டிருக்கிறோம். இதனை அடிக்கடி சிந்தனை செய்ய வேண்டும் மறக்கக் கூடாது. ஆனால் மாயா மறக்க வைத்து ஒரேயடியாக கலியுகவாசியாக ஆக்கிவிடுகிறது. முற்றிலும் கலியுகவாசி போன்று நடைமுறை மாறிவிடுகிறது. பிறகு மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. முகத் தோற்றம் சடலத்தைப் போன்று தென்படுகிறது. அனைவரும் காமத்தின் நெருப்பில் எரிந்து சடலம் போல் ஆகிவிட்டனர் என தந்தை கூறுகின்றார். நாம் மனிதனிலிருந்து தேவதையாக ஆகின்றோம், ஆகவே அவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டுமல்லவா! எனவே அதீந்திரிய சுகத்தின் அனுபவத்தைப் பற்றி கோபியர்களிடம் கேளுங்கள் என மகிமை செய்யப்படுகிறது. நமக்கு அவ்வாறு உணர்வு ஏற்படுகிறதா? என நீங்கள் தன் மனதைக் கேளுங்கள். நீங்கள் ஈஸ்வரிய அமைப்பு (மிஷன்) அல்லவா! ஈஸ்வரிய அமைப்பு என்ன காரியம் செய்கின்றது? முதலில் சூத்திரனிலிருந்து பிராமணராக, பிராமணரிலிருந்து தேவதையாக ஆக்குகின்றது. நாம் பிராமணராக இருக்கின்றோம், இதனை மறக்கக் கூடாது. அந்த பிராமணர்கள் தன்னைப் பற்றிக் கேட்டால் உடனே நாங்கள் பிராமணர்கள் எனக் கூறுவார்கள். அவர்கள் குக வம்சத்து பிராமணர்கள், நீங்கள் முக வம்சாவளி பிராமணர்கள், உங்களுக்கு மிகவும் நஷா இருக்க வேண்டும். பிரம்மா போஜனம்.. என்று மகிமையும் பாடப்படுகிறது. நீங்கள் யாருக்காவது பிரம்மா போஜனம் கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைகின்றனர்! நாம் தூய்மையான பிராமணர்களால் செய்த போஜனம் சாப்பிடுகிறோம். மனம்- வார்த்தை-கர்மம் தூய்மையாக இருக்க வேண்டும். எந்த விதமான தூய்மையற்ற காரியமும் செய்யக் கூடாது, நேரம் பிடிக்கிறது, பிறந்ததிலிருந்து யாரும் இவ்வாறு ஆவதில்லை, இதற்கு சிறிது காலம் ஆகின்றது. ஒரு வினாடியில் ஜீவன் முக்தி என மகிமை செய்யப்படுகிறது, தந்தையின் குழந்தையானவுடனேயே ஆஸ்தி கிடைத்து விடும். ஒருமுறை புரிந்து கொண்டு இவர் தான் நமது பிரஜாபிதா பிரம்மா எனக் கூறுகின்றனர். பிரம்மா மற்றும் சிவபாபா, நம்பிக்கையின் மூலம் வாரிசாக ஆகின்றனர். பிறகு ஒருவேளை ஏதாவது தலை கீழான காரியம் செய்தால் தண்டனைகள் மிகவும் அடைய வேண்டும். எவ்வாறு காசியில் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர், இவ்வாறு தண்டனை அடைவதால் கணக்கு வழக்கு முடிகின்றது என நம்புகின்றனர். முக்திக்காக குகைகளில் அமர்ந்தனர், இங்கு அவ்வாறு எந்த விசயமும் இல்லை. மனதால் என்னை நினைவு செய்யுங்கள் என சிவபாபா குழந்தைகளுக்கு கூறுகின்றார், எவ்வளவு சகஜமாக இருக்கிறது! இருந்தாலும் மாயாவின் சுழற்சி ஏற்படுகிறது, உங்களுடைய யுத்தம் அதிகமாக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. உடல் பலத்தால் செய்யும் யுத்தத்தில் கூட இவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இங்கு வந்தது முதல் யுத்தம் ஆரம்பமாகி விட்டது. பழைய குழந்தைகள் எவ்வளவு காலமாக யுத்தம் செய்கின்றனர்! யாரெல்லாம் புது குழந்தைகளாக வந்திருக் கிறீர்களோ அவர்களோடும் மாயாவின் யுத்தம் நடக்கிறது. அந்த யுத்த காலத்தில் யாராவது இறந்து விட்டால் அதற்குப் பதிலாக வேறு யாரையாவது சேர்த்துக் கொள்வார்கள். இங்கு கூட சிலர் இறக்கின்றனர், ஆனாலும் புதியதாக சேர்ந்து குழந்தைகள் அதிக மாகின்றனர். தர்மத்தின் மரம் பெரியதாக வளரத் தான் வேண்டும். இவர் தந்தையாகவும், சுப்ரீம் டீச்சராகவும், சத்குருவாகவும் இருக்கின்றார் என்ற நினைவு இருக்க வேண்டும் என தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். கிருஷ்ணரை சத்குரு, தந்தை, டீச்சர் எனக் கூற முடியாது.

நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். மகாரதிக் குழந்தைகள் சேவையில் இருக்கின்றார்கள், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது, எங்கு அழைப்பு கிடைத்தாலும் ஓடி விடுகின்றனர். கண்காட்சி சேவை கமிட்டியில் நல்ல நல்ல குழந்தை கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கிறது, ஆகவே சேவை செய்து கொண்டே இருந்தால் இவர்கள் ஈஸ்வரிய அமைப்பைச் சேர்ந்த நல்ல குழந்தைகள் எனக் கூறுவார்கள். நாம் சேவை செய்கின்றோமா? என தன் மனதைக் கேளுங்கள், நாங்கள் இறை தந்தையின் சேவையில் மட்டுமே இருக்கிறோம் எனக் கூறப்படுகிறது. இறை தந்தையின் சேவை என்ன? அனைவருக்கும் மன்மனாபவ என்ற செய்தியைக் கொடுக்க வேண்டும், அவ்வளவு தான். உங்களுடைய பெயர் சுயதர்ஷன சக்கரதாரி அதனைப்பற்றி சிந்தனை செய்ய வேண்டும். சுயதர்ஷன சக்கரம் நிற்காது அல்லவா! நீங்கள் சைத்தன்யமான லைட் ஹவுஸ், உங்களுக்கு மகிமையும் செய்யப்படுகிறது. எல்லையற்ற தந்தையின் புகழையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள், அவர் தான் ஞானக்கடல் பதீதபாவன், கீதையின் பகவானாக இருக்கிறார். அவர் தான் ஞானம் மற்றும் யோக பலத்தால் காரியத்தை செய்விக்கின்றார், இதில் யோக பலத்திற்கு மிகவும் மகத்துவம் இருக்கிறது. பாரதத்தின் பழமையான யோகம் மிகவும் புகழ் வாய்ந்தது, அதனை நீங்கள் கற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள். சந்நியாசிகள் ஹடயோகியாக இருப்பதால் அவர்கள் பதீத மானவர்களை பாவனமாக்க முடியாது. ஒரு தந்தையிடம் மட்டுமே ஞானம் இருக்கிறது. ஞானத்தின் மூலமாகவே நீங்கள் பிறவி எடுக் கின்றீர்கள். கீதை தந்தைக்கு சமமானதாகக் கூறப் படுகிறது, தாய்-தந்தையல்லவா! நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் பிறகு தாய்-தந்தையும் வேண்டுமல்லவா! மனிதர்கள் மகிமை பாடுகின்றனர், ஆனாலும் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார் இதனுடைய அர்த்தம் மிகவும் ஆழமானது. இறை தந்தை என கூறப்படுகிறது, பிறகு தாய் தந்தை என ஏன் அழைக்கப்படுகிறது? சரஸ்வதி இருந்தாலும் நடைமுறையில் உண்மையான தாயாக பிரம்மா புத்திரர் இருக்கின்றார் என பாபா புரிய வைக்கின்றார். கடல் மற்றும் பிரம்மா புத்திரர் இருக்கின்றனர், முதலில் இவர்களுக்குள் சந்திப்பு ஏற்படுகிறது, பாபா இவருக்குள் வந்திருக் கிறார், இவை எவ்வளவு ஆழமான விஷயங்களாகும்! நிறைய குழந்தைகளின் புத்தியில் இந்த விசயங்கள் இல்லாததால் சிந்தனை செய்வதில்லை. மிகவும் சாதாரண புத்தியுடையவர்கள், சாதாரண பதவியடைகின்றனர். தன்னைத் தான் ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள் என அவர்களுக்கும் தந்தை புரிய வைக்கின்றார். இதுவும் சகஜமல்லவா! நம் ஆத்மாக்களின் தந்தை பரமாத்மா. மனதால் என்னை மட்டும் நினைவு செய்வதால் பாவங்கள் அழியும் என ஆத்மாக் களாகிய உங்களுக்கு அவர் கூறுகின்றார். இது முக்கியமான விசயமாகும். மந்த புத்தி யுடையவர்கள் பெரிய விசயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே கீதையில் கூட மன்மனாபவ என்ற வார்த்தை இருக்கிறது. பாபா, நினைவு யாத்திரை மிகவும் கடினமாக இருக்கிறது என நிறைய பேர் எழுதுகின்றனர், அடிக்கடி மறந்து விடுகின்றனர், ஏதாவது விசயங்களில் தோல்வியடைகின்றனர். மாயா மற்றும் ஈஸ்வரிய குழந்தைகளுக்கு இடையில் இது குத்துச்சண்டையாக இருக்கிறது, இதனைப் பற்றி யாருக்கும் தெரியாது, மாயா மீது வெற்றி யடைந்து கர்மாதீத் நிலையடைய வேண்டுமென பாபா புரிய வைக்கின்றார். முதன் முதலில் நீங்கள் கர்மத்தின் சம்மந்தத்தில் வந்தீர்கள், அரை கல்பத்திற்குப் பிறகு நீங்கள் கர்மபந்தனத்தில் வந்து விட்டீர்கள். முதன் முதலில் நீங்கள் தூய்மையான ஆத்மாவாக இருந்தீர்கள், கர்மபந்தனத்தின் சுகமோ அல்லது துக்கமோ இல்லை, பிறகு சுகமான சம்மந்தத்தில் வந்தீர்கள். நாம் முதலில் சம்மந்தத்தில் வந்தோம், இப்பொழுது துக்கத்தில் இருக்கிறோம், பிறகு நிச்சயமாக சுகத்திற்குச் செல்வோம் என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். புதிய உலகத்தில் இருந்த பொழுது எஜமானராக, தூய்மையாக இருந்தோம், இப்பொழுது பழைய உலகத்தில் அழுக்காகி விட்டோம். மீண்டும் நாம் தேவதைகளாக ஆகின்றோம், இதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.

என்னை நினைவு செய்தால் உங்களுடைய பாவங்கள் நீங்கும், நீங்கள் என்னோடு வீட்டிற்கு வருவீர்கள், சாந்தி தாமம் வழியாக சுகதாமம் செல்வீர்கள் என தந்தை கூறுகின்றார். முதலில் வீட்டிற்குச் செல்ல வேண்டும், என்னை நினைவு செய்வதால் நீங்கள் தூய்மையாக ஆவீர்கள், நீங்கள் வீட்டிற்கு வருவதற்காக பதீத பாவனான நான் உங்களை தூய்மையாக்குகிறேன் என தந்தை கூறுகின்றார். இப்பொழுது காலச்சக்கரம் முடிகின்றது, இதில் நாம் இத்தனை பிறவிகள் எடுத்தோம், இப்படிபட்ட விசயங்களை தனக்குத்தான் சொல்லிப் பார்க்க வேண்டும். இப்பொழுது பதீத நிலையிலிருந்து பாவனமாக்குவதற்காக தந்தை வந்திருக்கிறார். யோக பலத்தின் மூலமாகவே பாவனம் ஆவீர்கள், இந்த யோக பலம் மிகவும் புகழ் வாய்ந்தது, இதனை தந்தை மட்டுமே கற்றுத் தருகிறார், இதில் சரீரத்தால் செய்வதற்கான விசயம் ஒன்றுமில்லை. எனவே முழு நாளும் இந்த விசயங்களை சிந்தனை செய்யவேண்டும். ஏகாந்தமாக எங்கு வேண்டு மானாலும் அமர்ந்து புத்தியில் இதனை சிந்திக்க வேண்டும். ஏகாந்தமாக இருப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. மேல் மாடியில் சென்று சிந்தனை செய்யலாம், பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. முன்பெல்லாம் நீங்கள் காலை முரளி வகுப்பு முடிந்தவுடன் மலைமேல் சென்று வந்தீர்கள், வகுப்பில் கேட்ட விசயங்களை சிந்தனை செய்வதற்காக மலைகளின் மேல் சென்று அமர்ந்தீர்கள். யார் ஞானத்தில் ஆர்வமாக இருக்கிறார்களோ, அவர்கள் தங்களுக்குள் ஞானத்தின் விசயங்களை மட்டுமே பேசுவார்கள். ஞானம் இல்லையெனில் பரசிந்தனை செய்வார்கள். கண்காட்சியில் நீங்கள் எத்தனை பேருக்கு வழிகாட்டுகின்றீர்கள், நம்முடைய தர்மம் மிகவும் சுகம் தரக் கூடியது என நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தையை நினைவு செய்யுங்கள் என பிற தர்மத்தைச் சேர்ந்தவர்களுக்குப் புரிய வையுங்கள். இவர்கள் முஸ்லீமாக இருக்கிறார்கள், இவர்கள் வேறு தர்மத்தினராக இருக்கிறார்கள் என நினைக்காதீர்கள். ஆத்மாவைப் பாருங்கள், ஆத்மாவுக்குப் புரிய வையுங்கள், கண்காட்சியில் புரிய வைக்கும் பொழுது நான் ஆத்மா, சகோதர ஆத்மாவிற்குப் புரிய வைக்கின்றேன் என்ற பயிற்சி செய்யுங்கள். இப்பொழுது நமக்கு தந்தையிடமிருந்து பிராப்தி கிடைக்கின்றது. தன்னைத் தான் ஆத்மா என்று புரிந்து என்னுடைய சகோதர ஆத்மாவிற்கு ஞானம் தருகிறேன் என்ற நினைவோடு, இப்பொழுது நீங்கள் தந்தையிடம் செல்ல வேண்டும், நீண்ட காலமாகப் பிரிந்து விட்டீர்கள் எனக் கூற வேண்டும். அந்த இடம் சாந்திதாமம், இங்கு துக்கம், அசாந்தி இருக்கிறது தன்னைத்தான் ஆத்மா என்ற பயிற்சி செய்வதால் பெயர், தோற்றம், தேகத்தின் அனைத்து விசயங்களும் மறந்து விடும். இவர்கள் முஸ்லீமாக இருக்கிறார்கள் என ஏன் நினைக்கின்றீர்கள்? ஆத்மா எனப் புரிந்து புரிய வையுங்கள். இந்த ஆத்மா நன்றாக இருக்கிறார்களா, இல்லையா? எனப் புரிந்து கொள்ள முடியும். கெட்டவர்களாக இருந்தால் விலகி விட வேண்டும் என ஆத்மாவிற்காக கூறப்படுகிறது. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையின் குழந்தைகள், இங்கு நடித்து விட்டீர்கள். இப்பொழுது மீண்டும் வீடு திரும்ப வேண்டும், பாவனமாக வேண்டும், தந்தையை அவசியம் நினைவு செய்ய வேண்டும். பாவனமாக, பாவனமான உலகில் எஜமானராக ஆவீர்கள், மனப்பூர்வமாக வாக்குறுதி செய்ய வேண்டும். வாக்குறுதி செய்யுங்கள் என தந்தையும் கூறுகின்றார். நீங்கள் தங்களுக்குள் சகோதர ஆத்மாக்கள், சாகாரத்தில் வந்த பிறகு சகோதரன், சகோதரியாக ஆகின்றீர்கள். சகோதரன்-சகோதரி ஒரு பொழுதும் விகாரத்தில் செல்லமாட்டார்கள். தூய்மையாகி மேலும் தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் உலகிற்கு எஜமானராக ஆவீர்கள். மாயாவிடம் தோல்வியடைந்தாலும் உடனடியாக நிமிர்ந்து நில்லுங்கள் எனப் புரிய வைக்கப்படுகிறது. எந்தளவு உறுதியாக நிற்கின்றீர்களோ அவ்வளவு பிராப்தி ஏற்படும். இலாபம் மற்றும் நஷ்டம் இருக்கிறதல்லவா! அரைக் கல்பத்திற்கு சேமிப்பு பிறகு இராவண இராஜ்ஜியத்தில் நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கும் கணக்கு இருக்கிறதல்லவா! தோல்வியால் நஷ்டம், வெற்றியால் இலாபம் ஏற்படுகிறது. ஆகவே தன்னைத் தான் முழுமையாக சோதனை செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். அங்கு மகிமை மட்டும் செய்கின்றனர், எதையும் புரியாமல் செய்கின்றனர். நீங்களும் மகிமை செய்கின்றீர்கள் அல்லவா! ஆனால் நீங்கள் பூஜை செய்வதில்லை. ஒரு தந்தையை நினைப்பதே முறையானதாகும் எனக் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு தந்தையே வந்து கற்பிக்கின்றார், நீங்கள் எந்த விதமான கேள்வி கேட்பதற்கும் அவசியமில்லை, காலச்சக்கரத்தின் நினைவில் இருக்க வேண்டும். எப்படி நாம் மாயாவை வெற்றியடைந்தோம், பிறகு தோல்வியடைந்தோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாயாவிடம் தோல்வியடைவதால் 100 மடங்கு தண்டனை ஏற்படுமென தந்தை புரியவைக்கின்றார். சத்குருவிற்கு நிந்தனை ஏற்படுத்த வேண்டாம், இல்லையெனில் பிராப்தியைப் பெற முடியாது. இது சத்ய நாராயணரின் கதையாகும். இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. கீதையைத் தனியாகவும், சத்ய நாராயணரின் கதையை தனியாகவும் காட்டியுள்ளனர். இந்த கீதை நரனிலிருந்து நாராயணராக ஆக்கக் கூடியது.

நான் உங்களை நரனிலிருந்து நாராயணராக ஆவதற்கான கதை சொல்கிறேன் என தந்தை கூறுகின்றார் இதனை கீதை என்றும், அமரநாத் கதை என்றும் சொல்லலாம் தந்தை மட்டுமே மூன்றாவது கண்னை கொடுக்கின்றார். நாம் தேவதையாக ஆகின்றோம் எனவே குணங்களையும் அவசியம் கொண்டு வர வேண்டும் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த உலகில் எந்த பொருளும் நிலையானது இல்லை. ஒரு சிவபாபா மட்டுமே என்றும் நிலையானவர், மற்ற அனைத்தும் கீழே இறங்கி வர வேண்டும். ஆனால் அவரும் சங்கமயுகத்தில் வந்து அனைவரையும் அழைத்துச் செல்கிறார்.

பழைய உலகத்தைச் சேர்ந்த ஆத்மாக்களை புது உலகத்திற்கு அழைத்துச் செல்ல ஒருவர் வேண்டு மல்லாவா! ஆகவே நாடகத்திற்குள் இவையனைத்தும் இரகசியங்களாகும். தந்தை வந்து தூய்மை யாக்குகிறார், எந்தவொரு மனிதரையும் பகவான் எனக் கூற முடியாது. ஆத்மாவின் இறக்கைகள் துண்டிக்கப்பட்டதால் பறக்க முடிவதில்லை என தந்தை புரிய வைக்கின்றார். தந்தை வந்து ஞானம் மற்றும் யோகத்தின் இறக்கைகளைத் தருகின்றார். யோக பலத்தின் மூலம் உங்களுடைய பாவங்கள் அழிந்துவிடும், புண்ணிய ஆத்மாவாக ஆவீர்கள். ஆகவே, முதலில் உழைக்க வேண்டும், மனதால் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், சார்ட் எழுதுங்கள் என தந்தை கூறுகின்றார். யாருடைய சார்ட் நன்றாக இருக்கிறதோ, அவர்கள் எழுதுவார்கள் மற்றும் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். இப்பொழுது அனைவரும் முயற்சி செய்கின்றனர், சார்ட் எழுதவில்லையெனில் யோகத்தில் சக்தி நிறையாது. சார்ட் எழுதுவதால் நிறைய இலாபம் இருக்கிறது. சார்ட்டில் முக்கிய விசயங்களையும் குறிப்பிட வேண்டும். சேவை எவ்வளவு செய்தோம்? மேலும் நினைவில் எவ்வளவு நேரம் இருந்தோம் இவ்விரண்டு விசயங்களையும் சார்ட்டில் எழுதவேண்டும். கடைசி நேரத்தில் வேறு எந்தப் பொருளின் நினைவும் வரக் கூடாது, அந்தளவு முயற்சி செய்ய வேண்டும். தன்னைத் தான் ஆத்மா எனப் புரிந்து புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும், இதற்கான முயற்சியை செய்ய வேண்டும். நல்லது.

இனிமைலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்;தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஏகாந்தத்தில் அமர்ந்து ஞானத்தை சிந்தனை செய்ய வேண்டும். நினைவு யாத்திரையில் இருந்து, மாயா மீது வெற்றியடைந்து கர்மாதீத் நிலையடைய வேண்டும்.

2. பிறருக்கு ஞானத்தை சொல்லும் போது நான் ஆத்மா, சகோதர ஆத்மாவிற்கு ஞானம் தருகிறேன் என்ற நினைவு புத்தியில் இருக்க வேண்டும். பெயர், தோற்றம், தேகம் அனைத்தையும் மறக்க வேண்டும். பாவனம் (துôய்மை) ஆவதற்கான வாக்குறுதி செய்து, பாவனமாகி பாவனமான உலகிற்கு எஜமானர் ஆக வேண்டும்.

வரதானம்:
சுயம் தாங்கள் இச்சா மாத்ரம் அவித்யா (இச்சை என்றால் என்னவென்றே அறியாத) நிலை உடையவராக ஆகி தந்தைக்கு சமானமாக இடையறாது தானம் செய்பவராகவும் பரோபகாரியாகவும் ஆவீர்களாக.

எப்படி பிரம்மா தந்தை சுயம் தனது நேரத்தையும் சேவைக்காக கொடுத்தார். சுயம் பணிவுடைய வராக ஆகி குழந்தைகளுக்கு மதிப்பு கொடுத்தார். தான் செய்த செயல்களுக்காக கிடைக்கப்பெற்ற பெயரினுடைய பிராப்தியையும் தியாகம் செய்தார். பெயர், மதிப்பு, புகழ் அனைத்திலும் பரோபகாரி ஆனார். தன்னுடையதை தியாகம் செய்து மற்றவர்களுக்கு பெயர் வாங்கித் கொடுத்தார். சுயம் தன்னை எப்பொழுதும் சேவாதாரியாக வைத்து கொண்டார். குழந்தைகளை எஜமானராக ஆக்கினார். குழந்தைகளின் சுகத்தில் தான் தனது சுகம் இருப்பதாக கருதினார். இது போல தந்தைக்கு சமானமாக இச்சா மாத்ரம் அவித்யா அதாவது (மஸ்த் ஃபகிர்) போதையுள்ள துறவியாகி அகண்ட பரோபகாரி ஆகுங்கள். அப்பொழுது உலக நன்மையின் காரியத்தில் தீவிர வேகம் வந்து விடும். சங்கதிகளும் கதைகளும் முடிந்து போய் விடும்.

சுலோகன்:
ஞானம், குணம் மற்றும் தாரணையில் சிந்து (கடல்) ஆகுங்கள். ஸ்மிருதி (நினைவில்) பிந்து புள்ளி ஆகுங்கள்.

தங்களது சக்திசாலி மனசா மூலமாக (சகாஷ்) சக்தி கொடுக்கும் சேவை செய்யுங்கள்.

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தங்களது சிறந்த சக்திசாலி எண்ணங்கள் மூலமாக சக்தி கொடுங்கள். பலவீனமானோருக்கு பலம் கொடுங்கள். தங்களது முயற்சியின் நேரத்தை மற்றவர்களுக்கு சகயோகம் கொடுப்பதில் ஈடுபடுத்துங்கள். மற்றவர்களுக்கு சகயோகம் கொடுப்பது என்றால் தன்னுடையதை சேமிப்பு செய்து கொள்வது. இப்பொழுது அப்பேர்ப்பட்ட அலைகளை பரப்புங்கள் - ஸேல்வேஷன் வசதிகள் பெறுவது அல்ல. நிவாரணம் கொடுக்க வேண்டும். கொடுப்பதில் பெறுவது அடங்கி உள்ளது.