07-01-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஒருபொழுதும்
சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது, ஒருவேளை யாராவது
தவறு செய்து விட்டார்கள் எனில் தந்தையிடம் கூறிவிட வேண்டும்,
தந்தை எச்சரிக்கை செய்வார்.
கேள்வி:
தந்தை எந்த ஒரு ஓப்பந்தம் (கான்ட்ராக்ட்)
எடுத்திருக்கின்றார்?
பதில்:
குழந்தைகளின் அவகுணங்களை நீக்கக்
கூடிய ஒப்பந்தம் ஒரே ஒரு தந்தை தான் எடுத்திருக்கின்றார்.
குழந்தைகளின் குறைகளை தந்தை கேட்கின்ற பொழுது அதை
நீக்குவதற்காக அன்பான முறையில் அறிவுரைகளைக் கொடுக்கின்றார்.
ஒருவேளை குழந்தைகளாகிய உங்களுக்கு மற்றவருடைய குறைகள்
தென்பட்டாலும் நீங்கள் தனது கையில் சட்டத்தை எடுத்துக் கொள்ளக்
கூடாது. சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதும் கூட தவறாகும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் புத்துணர்வு பெறுவதற்காக
தந்தையிடம் வருகிறீர்கள். ஏனெனில் எல்லையற்ற தந்தையிடமிருந்து
எல்லையற்ற உலகின் இராஜ்யம் அடைய வேண்டும் என்பதை குழந்தைகள்
அறிவீர்கள். இதை ஒருபொழுதும் மறந்து விடக் கூடாது, ஆனால் மறந்து
விடுகிறீர்கள். மாயை மறக்க வைத்து விடுகிறது. ஒருவேளை மறக்க
வைக்கவில்லையெனில் மிகுந்த குஷி இருக்கும். குழந்தைகளே! இந்த
பேட்ஜ்-ஐ அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள்,
சித்திரங்களையும் பார்த்துக் கொண்டே இருங்கள் என்று தந்தை
புரிய வைக்கின்றார். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.
ஞானம் பெறுவதற்கு இது தான் உகந்த நேரமாகும். இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே ....... என்று தந்தை கூறுகின்றார். இரவு
பகல் இனிமையிலும் இனிமையான என்று கூறிக் கொண்டே இருக்கின்றார்.
இனிமையிலும் இனிமையான பாபா என்று குழந்தைகள் கூறுவது கிடையாது.
இருவரும் கூற வேண்டும் அல்லவா! இருவரும் இனிமையானவர்கள் அல்லவா!
எல்லையற்ற பாப்தாதா. ஆனால் தேக அபிமானத்தில் உள்ள சிலர் பாபாவை
மட்டுமே இனிமையிலும் இனிமையானவர் என்று கூறுகின்றனர். சில
குழந்தைகள் கோபத்தில் வந்து சில நேரங்களில் பாப்தாதாவிற்கும்
ஏதாவது கூறி விடுகின்றனர். சில நேரம் தந்தைக்கு, சில நேரங்களில்
தாதாவிற்கு கூறுகின்றனர், விசயம் ஒன்று தான். சில நேரங்களில்
நிமித்தமான பிராமணியிடம், சில நேரங்களில் தங்களுக்குள் கோபப்
பட்டு விடுகின்றனர். ஆக எல்லையற்ற தந்தை அமர்ந்து
குழந்தைகளுக்கு அறிவுரைகளை கொடுக் கின்றார். ஒவ்வொரு ஊரிலும்
பல குழந்தைகள் உள்ளனர், அனைவருக்கும் எழுதிக் கொண்டே
இருக்கின்றார். நீங்கள் கோபப் படுகிறீர்கள் என்று உங்களைப்
பற்றிய ரிபோர்ட் வருகின்றது. இதைத் தான் தேக அபிமானம் என்று
எல்லையற்ற தந்தை கூறுகின்றார். குழந்தைகளே, ஆத்ம அபிமானியாக
ஆகுங்கள் என்று அனைவருக்கும் தந்தை கூறுகின்றார். அனைத்து
குழந்தை களுக்கும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுக் கொண்டு தான்
இருக்கிறது. இதிலும் யார் சக்தி வாய்ந்த பலசாலிகளாக
இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களிடம் மாயை சண்டையிடுகிறது.
மகாவீர், ஹனுமான் போன்றவர்களையும் அசைப்பதற்கு முயற்சித்ததாக
காண்பிக்கப் பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் தான் அனை வருக்கும்
சோதனை செய்கிறது. மாயையிடத்தில் வெற்றி, தோல்வி என்பது
அனைவருக்கும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. யுத்தத்தில்
அனைவருக்கும் நினைவு, மறதி ஏற்படுகிறது. யார் எந்த அளவிற்கு
நினைவில் இருக்கின்றார்களோ, நிரந்தரமாக தந்தையை நினைக்கும்
முயற்சி செய்கிறார்களோ அவர்கள் நல்ல பதவி அடைய முடியும்.
குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு தந்தை வந்திருக்கின்றார், அவ்வாறு
கற்பித்துக் கொண்டும் இருக்கின்றார். ஸ்ரீமத்படி நடந்து கொண்டே
இருக்க வேண்டும். ஸ்ரீமத்படி நடந்தால் தான் சிரேஷ்டம் ஆவீர்கள்.
இதற்கு யாரிடமும் சண்டையிட வேண்டிய அவசியம் கிடையாது.
சண்டையிடுவது என்றால் கோபப்படு வதாகும். தவறு போன்றவைகள்
நடக்கிறது எனில் பாபாவிடம் ரிபோர்ட் செய்ய வேண்டும். சுயம்
யாரிடத்திலும் கூறி விடக் (சுட்டிக்காட்ட) கூடாது, இது சட்டத்தை
கையில் எடுத்துக் கொள்வதாகும். அரசாங்கம் சட்டத்தை கையில்
எடுத்துக் கொள்ள விடுவது கிடையாது. யாராவது அடிக்கின்றனர் எனில்
அவர்களை அடித்து விடுவது கிடையாது. ரிப்போர்ட் செய்ய வேண்டும்,
பிறகு அவர்கள் மீது கேஸ்ஃபைல் ஆகிவிடும். இங்கும் குழந்தைகள்
எதிரில் எதுவும் கூறிவிடக் கூடாது, பாபாவிடம் கூறுங்கள்.
அனைவருக்கும் எச்சரிக்கை செய்பவர் ஒரே ஒரு பாபா ஆவார். மிக
இனிய யுக்தியை பாபா கூறுவார். இனிய முறையில் அறிவுரை கூறுவார்.
தேக அபிமானி ஆவதனால் தனது பதவியை குறைத்துக் கொள்கின்றனர். ஏன்
நஷ்டம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? எவ்வளவு முடியுமோ பாபாவை
மிக அன்பாக நினைவு செய்து கொண்டே இருங்கள். எந்த தந்தை உலக
இராஜ்யத்தை கொடுக்கின்றாரோ அந்த எல்லையற்ற தந்தையை மிகுந்த
அன்புடன் நினைவு செய்யுங்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்தால்
போதும். யாரையும் நிந்திக்கக் கூடாது. தேவதைகள் யாரையாவது
நிந்திக்கிறார்களா என்ன? சில குழந்தைகள் நிந்தனை செய்யாமல்
இருப்பதே கிடையாது. நீங்கள் பாபாவிடம் கூறுங்கள், பிறகு பாபா
மிக அன்பாக புரிய வைப்பார். இல்லையெனில் நேரம் வீணாகி விடும்.
நிந்தனை செய்வதற்குப் பதிலாக தந்தையை நினைவு செய்தால் மிகுந்த
நன்மை ஏற்படும். யாரிடத்திலும் வாதம், விவாதம் செய்யாமல்
இருப்பது மிகவும் நல்லதாகும்.
நாம் புது உலக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் உள்ளத்தில் புரிந்திருக்கிறீர்கள்.
உள்ளுக்குள் எவ்வளவு போதை இருக்க வேண்டும்! முக்கியமானது நினைவு
மற்றும் தெய்வீக குணங்கள். குழந்தைகள் சக்கரத்தை நினைக்கவே
செய்கிறீர்கள், அது எளிதாக நினைவிற்கு வந்து விடும். 84 பிறவிச்
சக்கரம் அல்லவா! உங்களுக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடை, கால
அளவு பற்றி தெரியும். பிறகு மற்றவர்களுக்கும் மிகுந்த அன்புடன்
அறிமுகம் கொடுக்க வேண்டும். எல்லையற்ற தந்தை நம்மை உலகிற்கு
எஜமானர் களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். இராஜயோகம்
கற்பித்துக் கொண்டிருக் கின்றார். விநாசமும் எதிரில் இருக்கிறது.
இருப்பது சங்கமயுகத்தில், இந்த நேரத்தில் தான் புது உலகம்
ஸ்தாபனை ஆகிறது மற்றும் பழைய உலகம் விநாசம் ஆகிறது. தந்தை
குழந்தைகளை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றார் - ஒவ்வொரு
அடியிலும் நினைவு செய்து செய்து சுகம் அடையுங்கள், தேகத்தின்
அனைத்து துக்கங்களும் நீங்கி விடும்....... அரைக் கல்பத்திற்கு
நீங்கி விடும். தந்தை சுகதாமத்தை ஸ்தாபனை செய்கின்றார். மாயை,
இராவணன் துக்கதாமத்தை ஸ்தாபனை செய்கிறது. இதையும்
குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக புரிந்திருக்கிறீர்கள்.
தந்தைக்கு குழந்தைகளின் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது!
ஆரம்பத்திலிருந்தே தந்தையின் அன்பு இருக்கிறது. எந்த குழந்தை
கள் காமச் சிதையின் மூலம் கருப்பாகி விட்டார்களோ அவர்களை வெள்ளை
யாக்குவதற்காக செல்கிறேன் என்பதை தந்தை அறிவார். தந்தை ஞானம்
நிறைந்தவர் ஆவார், குழந்தைகள் சிறிது சிறிதாக ஞானம் அடைகின்றனர்.
இருப்பினும் மாயை மறக்க வைத்து விடுகிறது. குஷியாக இருக்க
விடுவது கிடையாது. குழந்தைகளுக்கு நாளுக்கு நாள் குஷியின் அளவு
அதிகரிக்க வேண்டும். சத்யுகத்தில் குஷியின் அளவு அதிகமாக
இருந்தது. இப்பொழுது மீண்டும் நினைவு யாத்திரையின் மூலம்
அதிகரிக்கச் செய்ய வேண்டும். அது சிறிது சிறிதாக அதிகரிக்கும்.
வெற்றி, தோல்வி ஏற்பட்டு ஏற்பட்டு பிறகு வரிசைப்படியான
முயற்சியின் படி, முந்தைய கல்பத்தைப் போன்று தனது பதவியை
அடைவீர்கள். மற்றபடி கல்ப கல்பத்தில் ஏற்படுவது போன்று நேரம்
ஏற்படுகிறது. யார் கல்ப கல்பம் தேர்ச்சி பெறுகிறார்களோ அவர்களே
தேர்ச்சி பெறுவர். குழந்தைகளின் மனநிலையை பாப்தாதா சாட்சியாக
இருந்து பார்க்கின்றார், மேலும் புரிய வைக்கவும் செய்கின்றார்.
வெளியில் சென்டர்களில் இந்த அளவிற்கு புத்துணர்வுடன் இருப்பது
கிடையாது. சென்டரில் இருந்து விட்டு வெளி உலக சூழ்நிலைகளுக்குச்
சென்று விடுகிறீர்கள். ஆகையால் தான் இங்கு புத்துணர்வு
அடைவதற்காக குழந்தைகள் வருகிறீர்கள். குடும்ப சகிதமாக
அனைவருக்கும் அன்பு நினைவு கொடுங்கள் என்று தந்தை எழுதவும்
செய்கின்றார். அவர் எல்லைக்குட்பட்ட தந்தை, இவர் எல்லையற்ற
தந்தை ஆவார். பாபா மற்றும் தாதா இருவருக்கும் மிகுந்த அன்பு
இருக்கிறது, ஏனெனில் கல்ப கல்பத்திற்கு அன்பாக சேவை
செய்கின்றனர். உள்ளுக்குள் கருணை ஏற்படுகிறது. படிக்கவில்லை
அல்லது நடத்தை நன்றாக இல்லையெனில், ஸ்ரீமத் படி
நடக்கவில்லையெனில் கருணை ஏற்படுகிறது, இவர்கள் குறைந்த பதவி
அடைவர். மேலும் பாபா என்ன செய்ய முடியும்? அங்கு இருப்பதற்கும்
இங்கு இருப்பபதற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது. ஆனால்
அனைவரும் இங்கு இருந்து விட முடியாது. குழந்தைகள் அதிகரித்துக்
கொண்டே இருக்கின்றனர். அதற்கேற்ப ஏற்பாட்டையும் செய்து கொண்டே
இருக்கிறீர்கள். இந்த அபு மிக உயர்ந்த தீர்த்த ஸ்தானம் ஆகும்
என்பதையும் பாபா புரிய வைத்திருக்கின்றார். நான் இங்கு வந்து
தான் சிருஷ்டியை, 5 தத்துவங்களை தூய்மையாக ஆக்குகிறேன் என்று
தந்தை கூறுகின்றார். எவ்வளவு சேவை செய்கின்றார்! ஒரே ஒரு தந்தை
தான் வந்து அனைவருக்கும் சத்கதி செய்கின்றார். அதுவும் பலமுறை
செய்திருக்கின்றார். இதை அறிந்திருந்தும் கூட பிறகு மறந்து
விடுகிறீர்கள், அதனால் தான் மாயை மிகவும் பலம் வாய்ந்தது என்று
தந்தை கூறுகின்றார். அரைக் கல்பம் இதன் இராஜ்யம் நடைபெறுகிறது.
மாயை வீழ்த்தி விடுகிறது, பிறகு தந்தை தூக்கி நிறுத்துகின்றார்.
பாபா, நாம் வீழ்ந்து விட்டோம் என்று பலர் எழுது கின்றனர்.
நல்லது, மீண்டும் கீழே விழுந்து விடக் கூடாது. இருப்பினும்
மீண்டும் கீழே விழுந்து விடுகின்றனர். விழுந்து விடும் பொழுது
மீண்டும் எழுந்திருப்பதையே விட்டு விடுகின்றனர். மிகப் பலமான
அடி விழுந்து விடுகிறது. அனைவருக்கும் அடி விழவே செய்கிறது.
அனைவற்றிற்கும் ஆதாரம் படிப்பில் இருக்கிறது. படிப்பில்
யோகாவும் இருக்கிறது. இன்னார் எனக்கு இதை கற்பித்துக்
கொண்டிருக்கின்றார். நமக்கு தந்தை கற்பித்துக்
கொண்டிருக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். இங்கு நீங்கள் மிகுந்த புத்துணர்வு
அடைகிறீர்கள். யார் நம்மை நிந்திக்கிறார்களோ அவர்களே நமக்கு
உண்மையான நண்பர்கள் என்றும் பாடப் பட்டிருக்கிறது. பகவானின்
மகாவாக்கியம் - எனக்கு மிகுந்த நிந்தனை செய்கின்றனர். நான்
வந்து நண்பனாக ஆகிறேன். எவ்வளவு நிந்திக்கின்றனர்! அனைவரும்
எனது குழந்தைகள் என்று நான் நினைக்கிறேன். இவர்கள் மீது எனக்கு
எவ்வளவு அன்பு இருக்கிறது! நிந்திப்பது நல்லது அல்ல. இந்த கால
கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வித
விதமான மன நிலையுடைய குழந்தைகள் இருக்கின்றனர், அனைவரும்
முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஏதாவது தவறு ஏற்பட்டாலும்
முயற்சி செய்து தவறற்றவர்களாக ஆக வேண்டும். மாயை
அனைவரிடத்திலும் தவறு செய்யவைத்துக் கொண்டிருக்கிறது. குத்துச்
சண்டை அல்லவா! சில நேரங்களில் அந்த மாதிரி அடி விழுந்து
விடுகிறது, கீழே தள்ளி விடுகிறது. தந்தை எச்சரிக்கை
செய்கின்றார் - குழந்தைகளே! இவ்வாறு தோல்வி அடைபவர்களின்
வருமானம் முடிந்து விடும். 5-வது மாடியிலிருந்து கீழே விழுந்து
விடுகின்றனர். பாபா, இப்படிப்பட்ட தவறு மீண்டும் ஒருபொழுதும்
நடக்காது, மன்னித்து விடுங்கள் என்று கூறுகின்றனர். பாபா எப்படி
மன்னிப்பார்? முயற்சி செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார்.
மாயை மிகவும் பிரபலமானது என்பதை பாபா அறிவார். பலரை
தோல்வியடையச் செய்யும். தவறுகள் பற்றி அறிவுரை கூறி
தவறற்றவர்களாக ஆக்குவது தான் ஆசிரியரின் கடமையாகும். யாராவது
தவறு செய்து விட்டால் சதா அந்த தவறு ஏற்பட்டுக் கொண்டே இருக்க
வேண்டும் என்பது கிடையாது. நல்ல குணங்களுக்குத் தான் மகிமை
பாடப்படுகிறதே தவிர தவறுகளுக்கு அல்ல. அழிவற்ற வைத்தியர் ஒரே
ஒரு தந்தை ஆவார். அவர் வைத்தியம் செய்வார். குழந்தைகளாகிய
நீங்கள் ஏன் தங்களது கையில் சட்டம் எடுத்துக் கொள்கிறீர்கள்?
யாரிடத்தில் கோபத்தின் அம்சம் இருக்கிறதோ அவர்கள் நிந்தனை
செய்து கொண்டே இருப்பர். விழிப்படையச் செய்வது தந்தையின்
காரியம், நீங்கள் விழிப் படையச் செய்பவர்கள் கிடையாது.
யாரிடத்திலாவது கோபம் என்ற பூதம் இருக்கிறது. யாரையாவது நிந்தனை
செய்கின்றனர் எனில் தனது கையில் சட்டம் எடுத்துக் கொள்கின்றனர்,
இதன் மூலம் அவர்கள் சீர்திருத்தி விட மாட்டார்கள். மேலும்
அதிகமாக சீர்கெட்டு விடுவார்கள். உப்பு நீராக ஆகிவிடுவார்கள்.
அனைத்து குழந்தை களுக்காக தந்தை அமர்ந்திருக்கின்றார். சட்டம்
தனது கையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களை நிந்தனை செய்வது மிகப்
பெரிய தவறாகும். அனைவரி டத்திலும் ஏதாவது தவறுகள் இருக்கவே
செய்கிறது. அனைவரும் சம்பூர்ணம் ஆகவில்லை. சிலரிடத்தில் இந்த
அவகுணம், சிலரிடத்தில் வேறு சில அவகுணங்கள் இருக்கின்றன. அவை
அனைத்தையும் நீக்கும் ஒப்பந்தம் (பொறுப்பை) தந்தை
எடுத்திருக்கின்றார். இது உங்களது காரியம் கிடையாது.
குழந்தைகளின் குறைகளை தந்தை கேட்கும் பொழுது அதை நீக்குவதற்காக
அன்பாக போதனைகளை கொடுக்கின்றார். இதுவரை யாரும் சம்பூர்ணம்
அடையவில்லை. அனைவரும் ஸ்ரீமத் மூலம் விழிப்படைந்து
கொண்டிருக்கின்றனர். கடைசியில் சம்பூர்ணம் ஆவீர்கள். இந்த
நேரத்தில் அனைவரும் முயற்சியாளர்களாக இருக்கிறீர்கள். பாபா
எப்பொழுதும் நிலையானவராக இருக்கின்றார். குழந்தைகளுக்கு அன்பாக
போதனைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். கல்வி கொடுப்பது
தந்தையின் கடமையாகும். பிறகு அதன்படி நடப்பது நடக்காதது
அவரவர்களது அதிர்ஷ்டத்தில் இருக்கிறது. பதவி எவ்வளவு குறைந்து
விடுகிறது! ஸ்ரீமத் படி நடக்காத காரணத் தினாலும், ஏதாவது தவறு
செய்கின்ற காரணத்தினாலும் பதவி குறைந்து விடும். நான் இந்த தவறு
செய்து விட்டேன் என்று உள்ளுக்குள் உள்ளம் உறுதிக் கொண்டே
இருக்கும். பிறகு நாம் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும்,
யாரிடத்திலாவது அவகுணம் இருக்கிறது எனில் அதை தந்தையிடம் கூற
வேண்டும். மற்றவர்களிடம் கூறுவது என்பது தேக அபிமானமாகும்.
தந்தையை நினைவு செய்யவில்லை. கலப்படமற்றவர்களாக ஆக வேண்டும்
அல்லவா! அந்த ஒருவரிடத்தில் கூறும் பொழுது அவர்கள் உடனேயே
மாறிவிடுவார்கள். திருத்தச் செய்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார்.
மற்ற அனைவரும் சீர்திருத்தமடையாதவர்கள். ஆனால் மாயை
அப்படிப்பட்டது, முகத்தை திருப்பி விடுகிறது. தந்தை ஒருபுறம்
முகத்தை (தன் பக்கம்) திருப்புகின்றார், மாயை தனது பக்கம்
முகத்தை திருப்பி விடுகிறது. விழிப்படையச் செய்து மனிதனை தேவதை
ஆக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார். மற்றபடி மற்றவர்களிடம்
கூறி பெயரை கெடுப்பது என்பது நியமத்திற்குப் புறம்பானது.
நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அவர் தான் தீர்மானம்
செய்யக் கூடியவர் ஆவார் அல்லவா! காரியங்களின் பலனும் தந்தை தான்
கொடுக்கின்றார். நாடகம் என்று இருந்தாலும் யாருடைய பெயரையாவது
பயன்படுத்த வேண்டும் அல்லவா! குழந்தைகளுக்கு அனைத்து
விசயங்களையும் தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார்.
நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் ஆவீர்கள் எவ்வளவு
விருந்தினர்கள் வருகின்றனர்! யாரிடம் அதிக விருந்தினர்கள்
வருகிறார்களோ அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். அனைவரும்
குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள், விருந்தினர்களாகவும்
இருக்கிறீர்கள். நான் குழந்தைகளை இவர்களைப் போன்று சர்வ
குணங்கள் நிறைந்த சம்பன்னமானவர்களாக ஆக்குவேன் என்று ஆசிரியரின்
புத்தியில் இருக்கிறது. நாடகப்படி தந்தை இந்த ஒப்பந்தத்தை
எடுத்திருக்கின்றார். குழந்தைகளும் ஒருபொழுதும் முரளி தவற விடக்
கூடாது. முரளிக்கும் மகிமை இருக்கிறது அல்லவா! ஒரு முரளி தவற
விட்டாலும் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது போலாகும். இது
எல்லையற்ற தந்தை யின் பள்ளியாகும். இங்கும் ஒரு நாள் கூட தவற
விடக் கூடாது. தந்தை வந்து கற்பிக்கின்றார் என்பது உலகத்தினர்
யாருக்கும் தெரியாது. சொர்க்கத்தின் ஸ்தாபனை எப்படி ஏற்படுகிறது?
என்பதும் யாருக்கும் தெரியாது. அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
இந்த படிப்பு மிக மிக அளவற்ற வருமானத்தை ஏற்படுத்தக் கூடியது.
பல பிறவிகளுக்கு இந்த படிப்பின் பலன் கிடைத்து விடும்.
விநாசத்தின் தொடர்பும் உங்களது படிப்பில் இருக்கிறது. உங்களது
படிப்பு முழுமை யடையும் பொழுது யுத்தமும் ஆரம்பமாகி விடும்.
படிப்பு படித்து படித்து, தந்தையை நினைவு செய்கின்ற பொழுது
நீங்கள் முழு மதிப்பெண் எடுத்து விடுகிறீர்கள். தேர்வு
வருகின்ற பொழுது யுத்தம் ஏற்பட்டு விடும். உங்களது படிப்பு
முடிவடையும் பொழுது யுத்தம் ஆரம்பமாகி விடும். புது உலகிற்கான
முற்றிலும் புதிய ஞானம் இதுவாகும், அதனால் தான் மனிதர்கள் பாவம்
குழப்ப மடைகின்றனர். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மற்றவர்களது அவகுணத்தைப் பார்த்து அவர்களை இகழக் கூடாது.
ஒவ்வொரு இடத்திலும் (எல்லோரிடமும்) அவர்களது அவகுணத்தைப் பற்றி
கூறக் கூடாது. தனது இனிமைத் தன்மையை விட்டு விடக் கூடாது.
கோபத்தில் வந்து யாரையும் எதிர்க்கக் கூடாது.
2) அனைவரையும் சீர்திருத்தக்கூடியவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே.
ஆகையால் அந்த ஒரே ஒரு தந்தையிடம் மட்டுமே அனைத்தையும் கூற
வேண்டும், ஒருவரை மட்டுமே நினைவு செய்பவர்களாக ஆக வேண்டும்.
முரளி ஒருபொழுதும் தவற விடக் கூடாது.
வரதானம்:
சதா துணையின் ஸ்மிருதியை, சாட்சி நிலையை அனுபவம் செய்யக்கூடிய
சிவமய சக்தி சொரூபம் இணைந்தவர் ஆகுக.
எப்படி ஆத்மா, சரீரம் இரண்டும் இணைந்தே உள்ளனவோ, எது வரை இந்த
சிருஷ்டி மீது பார்ட் உள்ளதோ, அது வரை தனியாக ஆவதில்லையோ, அதே
போல் சிவன் மற்றும் சக்தி இரண்டுக்குமிடையில் அவ்வளவு ஆழமான
சம்பந்தம் உள்ளது. யார் சதா சிவமய சக்தி சொரூபத்தில்
நிலைத்திருந்தவாறு செல்கிறார் களோ, அப்போது அவர்களின்
ஈடுபாட்டில் மாயா விக்னத்தை ஏற்படுத்த முடியாது. அவர்கள் சதா
துணையின் மற்றும் சாட்சி நிலையின் அனுபவம் செய்வார்கள்.
சாகாரத்தில் யாரோ கூடவே இருப்பது போல் அத்தகைய அனுபவம் ஏற்படும்.
சுலோகன்:
தடையற்ற மற்றும் ஏக்ரஸ் ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக
ஏகாக்ரதாவின் அப்பியாசம் செய்யுங்கள்.
அவ்யக்த இஷாரா : இந்த அவ்யக்த மாதத்தில் பந்தன் முக்த்தாக
இருந்து ஜீவன் முக்த் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்
தற்போதைய சமயத்தில் தன்னை, நான் டீச்சர், நான் சேவாதாரி என்று
புரிந்து கொள்வதற்கு பதிலாக அமிர்த வேளையில் இருந்து இந்த
அப்பியாசம் செய்யுங்கள் - நான் சிரேஷ்ட ஆத்மா மேலிருந்து
வந்திருக்கிறேன் - இந்தப் பழைய உலகத்தில், பழைய சரீரத்தில்
சேவைக்காக வந்திருக்கிறேன். நான் ஆத்மா - இந்தப் பாடத்தை
இன்னும் உறுதியாக ஆக்குங்கள். நான் தேகதாரி என்ற பாடம்
பக்காவாக (உறுதி) உள்ளது. ஆனால் நான் ஆத்மா தேகத்தை விட்டு
விடுபட்டு இருக்கிறேன் - இந்தப் பாடத்தைப் பக்கா (உறுதி)
ஆக்குங்கள்.