07-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அனைத்தையும் விட
மிக நல்ல தெய்வீக குணம் அமைதியாக இருப்பதாகும், அதிக
சப்தங்களில் வர வேண்டாம், இனிமையாகப் பேச வேண்டும்.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பேச்சுக்களிலிருந்து,
சைகையிலிருந்து அமைதிக்கு செல்கிறீர்கள். ஆகையால் அதிக
சப்தங்களில் வராதீர்கள்.
கேள்வி:
எந்த முக்கிய தாரணையின்
ஆதாரத்தில் அனைத்து தெய்வீக குணங்களும் தானாகவே வந்து விடும்?
பதில்:
முக்கியமானது தூய்மையின்
தாரணையாகும். தேவதைகள் தூய்மையாக இருக்கின்றனர், அதனால் தான்
அவர்களிடத்தில் தெய்வீக குணங்கள் உள்ளன. இந்த உலகில்
யாரிடத்திலும் தெய்வீக குணங்கள் இருக்க முடியாது. இராவண
இராஜ்யத்தில் தெய்வீக குணங்கள் எங்கிருந்து வரும்? இராயல்
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தெய்வீக குணங்களை தாரணை செய்து
கொண்டிருக்கிறீர்கள்.
பாடல்:
கள்ளங்கபடமற்றவராக,
தனிப்பட்டவராக இருக்கின்றார் ........
ஓம் சாந்தி.
சீர்கெட்டவர்களை சீர்படுத்தக் கூடியவர் ஒரே ஒருவர் தான் என்பதை
இப்பொழுது குழந்தைகள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் பலரிடம்
(குரு முதலானவர்களிடம்) செல்கின்றனர். எவ்வளவு தீர்த்த
யாத்திரைகள் செய்கின்றனர்! சீர்கெட்டவர்களை சீராக்குபவர்,
பதீதமானவர்களை பாவனமாக்குபவர் ஒரே ஒருவர் தான். சத்கதி வள்ளல்,
வழிகாட்டி, விடுவிப்பவரும் அவர் ஒருவரே. இந்த புகழ்
பாடப்படுகிறது, ஆனால் பல மனிதர்கள், பல தர்மங்கள், மடங்கள்,
சமயங்கள், சாஸ்திரங்கள் இருக்கின்ற காரணத்தினால் பல வழிகளைத்
தேடிக் கொண்டே இருக்கின்றனர். சுகம் மற்றும் அமைதிக்காக
சத்சங்கங்களுக்குக் செல்கின்றனர் அல்லவா! யார் செல்வ தில்லையோ
அவர்கள் மாயையின் போதையில் மூழ்கியிருப்பர். இது க-யுகத்தின்
கடைசி என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்யுகம்
எப்பொழுது ஏற்படும்? இப்பொழுது எப்படி இருக்கிறது? என்பதை
மனிதர்கள் அறியவில்லை. இதை எந்தக் குழந்தையும் புரிந்து கொள்ள
முடியும். புது உலகில் சுகம், பழைய உலகில் அவசியம் துக்கம்
இருக்கும். இந்தப் பழைய உலகில் பல மனிதர்கள், பல தர்மங்கள்
உள்ளன. நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் புரிய வைக்க முடியும்.
இது க-யுகமாகும், சத்யுகம் கடந்து விட்டது. அங்கு ஒரே ஒரு ஆதி
சநாதன தேவி தேவதா தர்மம் இருந்தது, வேறு எந்த தர்மமும் இல்லை.
பாபா பல முறை புரிய வைத்திருக் கின்றார். இருப்பினும் மீண்டும்
புரிய வைக்கின்றார். யார் வந்தாலும் அவர்களுக்கு புது உலகம்
மற்றும் பழைய உலகின் வித்தியாசத்தைக் காண்பிக்க வேண்டும்.
அவர்கள் என்ன வேண்டு மென்றாலும் கூறட்டும், சிலர் 10 ஆயிரம்
ஆண்டுகள் என்று கூறுகின்றனர், சிலர் 30 ஆயிரம் ஆண்டுகள் என்று
கூறுகின்றனர். பல வழிமுறைகள் இருக்கின்றன அல்லவா! இப்பொழுது
அவர் களிடத்தில் உள்ளது சாஸ்திரங்களின் வழிமுறைகளாகும். பல
சாஸ்திரங்கள், பல வழிமுறைகள். மனிதர்கள் வழிமுறைகள் அல்லவா!
சாஸ்திரங்கள் எழுதுவதும் மனிதர்கள் தானே! தேவதைகள் எந்த
சாஸ்திரங்களையும் எழுதுவது கிடையாது. சத்யுகத்தில் தேவி தேவதா
தர்மம் இருக்கிறது. அவர்களை மனிதர்கள் என்றும் கூற முடியாது.
ஆக உற்றார் உறவினர்களை சந்திக்கும் பொழுதும் அவர்களுக்கு
அமர்ந்து இதனைக்கூற வேண்டும். சிந்தனைக்கான விசயமல்லவா! புது
உலகில் எவ்வளவு குறைவான மனிதர்கள் இருப்பர்! பழைய உலகில்
எவ்வளவு விருத்தி யடைகிறது! சத்யுகத்தில் ஒரு தேவதா தர்மம்
மட்டுமே இருந்தது. மனிதர்களும் குறைவாக இருந்தனர். தெய்வீக
குணங்கள் தேவதைகளிடம் தான் இருந்தன, மனிதர்களிடத்தில் அல்ல.
அதனால் தான் மனிதர்கள் தேவதைகளின் முன் சென்று வணங்குகின்றனர்
அல்லவா! தேவதைகளின் மகிமை செய்கின்றனர். அவர்கள்
சொர்க்கவாசிகளாக இருக்கின்றனர், நாம் நரகவாசி, கலியுகவாசிகள்
என்பதை அறிந்திருக்கின்றனர். மனிதர்களிடத்தில் தெய்வீக குணங்கள்
இருக்க முடியாது. இன்னாரிடம் மிக நல்ல தெய்வீக குணங்கள்
இருப்பதாக யாராவது கூறினால் தெய்வீக குணங்கள் தேவதைகளிடம் தான்
இருக்கும் என்று கூறுங்கள். ஏனெனில் அவர்கள் தூய்மையானவர்கள்.
இங்கு தூய்மையாக இல்லாத காரணத்தினால் யாரிடத்திலும் தெய்வீக
குணங்கள் இருக்க முடியாது. ஏனெனில் அசுர இராவண இராஜ்யம் அல்லவா!
புது மரத்தில் தெய்வீக குணங் களுடைய தேவதைகள் இருப்பர், பிறகு
மரம் பழையதாக ஆகிவிடுகிறது. இராவண இராஜ்யத்தில் தெய்வீக
குணங்களுடையவர்கள் இருக்க முடியாது. சத்யுகத்தில் ஆதி சநாதன
தேவி தேவதை களின் இல்லற மார்க்கம் இருந்தது. இல்லற மார்க்கத்
தினருக்குத் தான் மகிமை பாடப்பட்டிருக் கிறது. சத்யுகத்தில்
நாம் தூய்மையான தேவி தேவதைகளாக இருந்தோம், சந்நியாச மார்க்கம்
கிடையாது. எவ்வளவு கருத்துகள் கிடைக்கிறது! ஆனால் அனைத்து
கருத்துகளும் யாருடைய புத்தியிலும் இருக்க முடியாது. கருத்துகளை
மறந்து விடுகிறீர்கள். அதனால் தான் தோல்வி அடைந்து
விடுகிறீர்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்வது கிடையாது. ஒரே
ஒரு தெய்வீக குணம் நல்லதாகும். யாரிடத் திலும் அதிகம் பேசக்
கூடாது, இனிமையாக பேச வேண்டும், மிகக் குறைவாகப் பேச வேண்டும்.
ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் பேச்சுக்களிலிருந்து சைகை,
சைகையிலிருந்து அமைதிக்குச் செல்ல வேண்டும். ஆக பேச்சை மிகவும்
குறைத்துக் கொள்ள வேண்டும். யார் மிகக் குறைவாக, மெதுவாக
பேசுகிறார்களோ அவர்கள் இராயல் வீட்டைச் (குலத்தைச்)
சார்ந்தவர்கள் என்று புரிந்து கொள்வர். வாயில் எப்பொழுதும்
இரத்தினங்கள் தான் வெளிப்பட வேண்டும்.
சந்நியாசி அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதலில்
புது மற்றும் பழைய உலகின் வித்தியாசம் கூற வேண்டும்.
சத்யுகத்தில் தெய்வீக குணங்களுடைய தேவதை கள் இருந்தனர், அவர்கள்
இல்லற மார்க்கத்தினர்களாக இருந்தனர். சந்நியாசிகளாகிய உங்களது
தர்மமே தனிப்பட்டது. இருப்பினும் புது உலகம் சதோ பிரதானமாக
இருக்கும், இப்பொழுது தமோ பிரதானமாக இருக்கிறது என்பதைப்
புரிந்திருக்கின்றனர் அல்லவா! ஆத்மா தமோ பிரதானமாக ஆகின்ற
பொழுது தமோ பிரதான சரீரம் தான் கிடைக்கிறது. இது பதீத உலகமாகும்.
அனைவரையும் பதீதமானவர்கள் என்று கூறலாம். அது பாவனமான, சதோ
பிரதான உலக மாகும். அந்த புது உலகம் தான் இப்பொழுது பழைய
உலகமாக ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அனைத்து மனித ஆத்மாக்களும்
நாஸ்திகர்களாக இருக்கின்றனர், அதனால் தான் குழப்பங்கள்
இருக்கின்றன. செல்வந்தரை (பாபாவை) அறியாத காரணத்தினால்
தங்களுக்குள் சண்டை யிட்டுக் கொண்டிருக் கின்றனர். படைப்பவர்
மற்றும் படைப்புகளை அறிந்தவர்கள் தான் ஆஸ்திகர்கள் என்று
கூறப்படு கின்றனர். சந்நியாசி தர்மத்தினர்கள் புது உலகை
அறியவேயில்லை. ஆக அங்கு வருவதும் கிடையாது. இப்பொழுது அனைத்து
ஆத்மாக்களும் தமோபிரதானமாக ஆகிவிட்டனர், பிறகு அனைத்து
ஆத்மாக்களையும் சதோ பிரதானமாக ஆக்குவது யார்? என்பதை தந்தை
புரிய வைத்திருக்கின்றார். அவ்வாறு தந்தை தான் ஆக்க முடியும்.
சதோ பிரதான உலகில் குறைவான மனிதர்கள் இருப்பர். மற்ற அனைவரும்
முக்தி தாமத்தில் இருப்பர். ஆத்மாக்களாகிய நாம் எங்கு வாசம்
செய்தோமோ அது பிரம்ம தத்துவமாகும். அது பிரம்மாண்டம் என்றும்
கூறப்படுகிறது. ஆத்மா அழிவற்றது ஆகும். இது அழிவற்ற நாடகமாகும்.
இதில் அனைத்து ஆத்மாக்களுக்கும் பாகம் இருக்கிறது. நாடகம்
எப்பொழுது ஆரம்பமானது? என்பதை ஒருபொழுதும் யாரும் கூற முடியாது.
இது அழிவற்ற நாடகம் அல்லவா! பழைய உலகைப் புதிதாக ஆக்குவதற்கு
தந்தை வர வேண்டியிருக்கிறது. தந்தை புது உலகைப் படைக்கின்றார்
என்பது கிடையாது. எப்பொழுது பதீதம் ஆகிறீர்களோ அப்பொழுது தான்
அழைக்கிறீர்கள். சத்யுகத்தில் யாரும் அழைப்பது கிடையாது.
இருப்பதோ பாவன உலகம் ஆகும். இராவணன் பதீதமாக ஆக்குகிறது,
பரம்பிதா பரமாத்மா வந்து பாவனம் ஆக்குகின்றார். கண்டிப்பாக
பாதிப் பாதி என்று தான் கூறலாம். பிரம்மாவின் பகல் மற்றும்
பிரம்மாவின் இரவு பாதி பாதியாகும். ஞானத்தின் மூலம் பகல்
ஏற்படுகிறது, அங்கு அஞ்ஞானம் கிடையாது. பக்தி மார்க்கம் இருள்
மார்க்கம் என்று கூறப்படுகிறது. தேவதைகள் மறுபிறப்பு எடுத்து
எடுத்து பிறகு இருளுக்கு வந்து விடுகின்றனர், அதனால் இந்த
ஏணிப்படியில் மனிதர்கள் எவ்வாறு சதோ, இரஜோ, தமோவில் வருகின்றனர்
என்று காண்பிக்கப்பட்டிருக் கிறது. இப்பொழுது அனைவரின் நிலையும்
இற்றுப் போன நிலையில் இருக்கிறது. மாற்றுவதற் காகத் தான் தந்தை
வந்திருக்கின்றார், அதாவது மனிதனை தேவதை ஆக்குவதற்காக.
எப்பொழுது தேவதைகள் இருந்தார்களோ அப்பொழுது அசுர குணமுடைய
மனிதர்கள் கிடையாது. இப்பொழுது இந்த அசுர குணமுடையவர்களை
தெய்வீக குணமுடையவர்களாக ஆக்குவது யார்? இப்பொழுது பல தர்மம்,
பல மனிதர்கள் உள்ளனர். சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
சத்யுகத்தில் ஒரே தர்மம் இருந்ததால் துக்கத்திற்கான விசயம்
ஏதுமில்லை. சாஸ்திரங்களில் பல கட்டுக் கதைகள் உள்ளன, அதை ஜென்ம
ஜென்மங்களாகப் படித்து வந்தீர்கள். இவையனைத்தும் பக்தி
மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும், இவைகளின் மூலம் என்னை அடைந்து
விட முடியாது என்று தந்தை கூறுகின்றார். நான் ஒரே ஒரு முறை
வந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்க வேண்டும். இவ்வாறே (தூய்மை
ஆகாமல்) யாரும் திரும்பிச் சென்று விட முடியாது. மிகவும்
தைரியமாக அமர்ந்து புரிய வைக்க வேண்டும், பிரச்சனைகளும் ஏற்படக்
கூடாது. அவர்களுக்கு தனது அகங்காரம் இருக்கிறது அல்லவா! சாது,
சந்நியாசிகளிடம் பின்பற்றுபவர்களும் (சிஷ்யர்களும்) இருப்பர்.
இவர்களுக்கும் கூட (புரிய வைப்பவர்களுக்கு) பிரம்மா குமாரிகளின்
மந்திரம் ஏற்பட்டு விட்டது என்று உடனேயே கூறிவிடுவர். இது
சிந்திக்க வேண்டிய விசயங்களாகும் என்று நல்ல மனிதர்கள் கூறுவர்.
மேளா, கண்காட்சிகளில் பல விதமான மனிதர்கள் வருகின்றனர்.
கண்காட்சி போன்றவை களில் யார் வந்தாலும் அவர்களுக்கு மிக
தைரியத்துடன் புரிய வைக்க வேண்டும். எவ்வாறு பாபா பொறுமையாக
புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார்! மிக ஆவேசமாக பேசக் கூடாது.
கண்காட்சிகளில் பலர் ஒன்றாகக் கூடி விடுகின்றனர் அல்லவா!
தாங்கள் சிறிது நேரம் கொடுத்து ஏகாந்தமாக (தனியாக) வரும் பொழுது
படைப்பவர் மற்றும் படைப்பின் இரகசியத்தைப் புரிய வைக்கிறோம்
என்று கூற வேண்டும். படைப்புகளின் முதல், இடை, கடையின் ஞானம்
படைப்பவராகிய தந்தை தான் புரிய வைக்கின்றார். மற்ற அனைவரும்
தெரியாது தெரியாது என்று தான் கூறிச் சென்றனர். எந்த மனிதரும்
செல்ல முடியாது. ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்பட்டு விடுகிறது,
பிறகு ஞானத்தின் அவசியம் கிடையாது. இந்த ஞானம் தந்தையைத் தவிர
வேறு யாரும் புரிய வைக்க முடியாது. புரிய வைப்பவர்கள்
வயதானவர்களாக இருந்தால் இவரும் அனுபவசாலி ஆவார், அவசியம்
சத்சங்கங்களுக்கு சென்றிருக்க வேண்டும் என்று மக்கள் புரிந்து
கொள்வர். குழந்தைகள் புரிய வைத்தால் இவர்களுக்கு என்ன தெரியும்
என்று கேட்பர். இப்படிப் பட்டவர்களுக்கு வயதானவர்களின் பிரபாவம்
ஏற்பட்டு விடுகிறது. தந்தை ஒரே ஒரு முறை வந்து இந்த ஞானத்தைப்
புரிய வைக்கின்றார். தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானமாக
ஆக்குகின்றார். தாய்மார்கள் அமர்ந்து அவர்களுக்குப் புரிய
வைக்கும் பொழுது அவர்கள் மகிழ்ச்சியடைந்து விடுவர். ஞானக்
கடலான தந்தை ஞானக் கலசத்தை தாய்மார்களாகிய நம்மிடம்
கொடுத்திருக்கின்றார் என்று கூறுங்கள். அதை நாம்
மற்றவர்களுக்கும் கொடுக் கின்றோம். மிகப் பணிவுடன் கூறிக்
கொண்டே இருக்க வேண்டும். சிவன் தான் ஞானக் கடல் ஆவார், அவர்
நமக்கு ஞானம் கூறுகின்றார். நான் தாய்மார்களாகிய உங்கள் மூலமாக
முக்தி, ஜீவன் முக்திக்கான கதவு திறக்கிறேன் என்று கூறுகின்றார்.
வேறு யாரும் திறக்க முடியாது. நாம் இப்பொழுது பரமாத்மா வின்
மூலம் படித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு எந்த மனிதனும்
கற்பிப்பது கிடையாது. ஞானக் கடலானவர் ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மா
ஆவார். நீங்கள் அனைவரும் பக்தியின் கடல்களாக இருக்கிறீர்கள்.
பக்தியின் அதிகாரத்தில் இருக்கிறீர்களே தவிர ஞானத்தில் அல்ல.
ஞானத்தின் அதிகாரியாக நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்.
மகிமையும் ஒருவருக்குத் தான் செய்கிறீர்கள். அவர் தான்
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். நாம் அவரைத் தான் ஏற்கிறோம்.
அவர் நமக்கு பிரம்மாவின் உடல் மூலமாகக் கற்பிக்கின்றார், அதனால்
தான் பிரம்மா குமார், குமாரிகள் என்று பாடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு மிக இனிய முறையில் அமர்ந்து புரிய வையுங்கள். எவ்வளவு
தான் படித்தவர்களாக இருக்கட்டும். பல கேள்விகள் கேட்கின்றனர்.
முதன் முதலில் தந்தையின் மீது தான் நம்பிக்கையை ஏற்படுத்த
வேண்டும். படைப்பவர் தந்தையா? இல்லையா? என்பதை முதலில் நீங்கள்
புரிந்து கொள்ளுங்கள். அனைவரையும் படைக்கக் கூடியவர் ஒரே ஒரு
சிவபாபா ஆவார், அவர் தான் ஞானக் கடலானவர். தந்தை, ஆசிரியர்,
சத்குருவாக இருக்கின்றார். படைப்பவராகிய தந்தை தான் படைப்பின்
முதல், இடை, கடையின் ஞானம் கொடுக்கின்றார் என்பதில்
நிச்சயபுத்தி ஏற்பட வேண்டும். அவர் தான் நமக்கு புரிய
வைக்கின்றார், அவர் அவசியம் சரியான முறையில் தான் புரிய
வைப்பார். பிறகு எந்த கேள்வியும் எழுப்ப முடியாது. தந்தை வருவதே
சங்கமத்தில். என்னை நினைவு செய்தால் பாவங்கள் அழிந்து விடும்
என்று மட்டுமே கூறுகின்றார். எனது வேலையே பதீதமானவர்களைப்
பாவனம் ஆக்குவதாகும். இப்பொழுது தமோ பிரதான உலகமாக இருக்கிறது.
பதீத பாவனனாகிய தந்தையின்றி யாரும் ஜீவன்முக்தி அடைந்து விட
முடியாது. அனைவரும் கங்கையில் குளிக்கச் செல்கின்றனர் எனில்
பதீதமாக இருக் கின்றனர் அல்லவா! கங்கையில் குளியுங்கள் என்று
நான் கூறுவது கிடையாது. என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று
நான் கூறுகிறேன். நாயகி களாகிய உங்கள் அனைவருக்கும் நாயகனாக
நான் இருக்கிறேன். அனைவரும் ஒரு நாயகனை நினைவு செய்கின்றனர்.
படைப்பு களைப் படைப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். ஆத்ம அபிமானியாகி
என்னை நினைவு செய்தால் இந்த யோக அக்னியின் மூலம் விகர்மம்
விநாசம் ஆகும் என்று அவர் கூறுகின்றார். இந்த யோகத்தை (நினைவு
யாத்திரை) தந்தை இப்பொழுது தான் கற்றுக் கொடுக்கின்றார், இந்த
நேரத்தில் தான் பழைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. விநாசம்
எதிரில் இருக்கிறது. இப்பொழுது நாம் தேவதைகளாக ஆகிக்
கொண்டிருக்கிறோம். தந்தை எவ்வளவு எளிதாகக் கூறுகின்றார்!
தந்தையிடமிருந்து நேரடியாக கேட்கிறீர்கள், ஆனால் ஒருமுக
நிலையில் இருக்க முடியாது. புத்தி மற்ற திசைகளின் பக்கம் ஓடிக்
கொண்டே இருக்கிறது. பக்தியிலும் இவ்வாறு ஏற்படுகிறது. முழு
நாளும் வீணாகி விடுகிறது. மற்றபடி யார் நேரத்தை சேமிக்கிறார்களோ
அவர்களது புத்தியும் அங்கே இங்கே என்று சென்று விடுகிறது.
அனைவருக்கும் இவ்வாறு ஏற்படுகிறது, மாயை அல்லவா!
சில குழந்தைகள் தந்தையின் எதிரில் அமர்ந்து தியானத்தில் சென்று
விடுகின்றனர், இதுவும் நேரம் வீண் அல்லவா! சேமிப்பு ஏற்படுவது
கிடையாது. என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள், இதன் மூலம்
விகர்மம் விநாசம் ஆகும் என்று தந்தை கூறுகின்றார். தியானத்தில்
செல்வதன் மூலம் புத்தியில் தந்தையின் நினைவு இருக்காது. இந்த
அனைத்து விசயங்களிலும் அதிக குழப்பங்கள் உள்ளன. நீங்கள் கண்களை
மூடவும் கூடாது. நினைவில் அமர வேண்டும் அல்லவா! கண்கள் திறந்து
வைப்பதற்கு பயப்படக் கூடாது. கண்கள் திறந்திருக்க வேண்டும்.
புத்தியில் நாயகனின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கண் களை
மூடி அமருவது என்பது நியமம் கிடையாது. நினைவில் அமருங்கள் என்று
தந்தை கூறுகின்றார். கண்களை மூடி அமருங்கள் என்று கூறுவது
கிடையாது. கண்களை மூடிக் கொண்டு, தலையை குனிந்து அமர்ந்தால்
பிறகு பாபா எப்படி பார்ப்பார்? ஒருபொழுதும் கண்களை மூடக் கூடாது.
கண்கள் மூடப்பட்டு விடுகிறது எனில் ஏதோ குறை மறைந்திருக்க
வேண்டும், வேறு யாரையாவது நினைவு செய்து கொண்டி ருப்பீர்கள்.
வேறு எந்த உற்றார் உறவினர்களை நினைவு செய்தால் குழந்தைகளாகிய
நீங்கள் நாயகிகளாக இல்லை என்று தந்தை கூறுகின்றார். உண்மையான
நாயகிகளாக ஆகின்ற பொழுது தான் உயர்ந்த பதவி அடைவீர்கள். அனைத்து
முயற்சியும் நினைவில் இருக்கிறது. தேக அபிமானத்தினால் தான்
தந்தையை மறக்கிறீர்கள். பிறகு ஏமாற்றம் அடைந்து கொண்டே
இருக்கிறீர்கள், மேலும் மிக இனிமையானவர்களாகவும் ஆக வேண்டும்.
சூழ்நிலையும் இனிமை யானதாக இருக்க வேண்டும், எந்த சப்தங்களும்
இருக்கக் கூடாது. யார் வந்தாலும் பார்க்க வேண்டும் - இவர்கள்
எவ்வளவு இனிமையாகப் பேசுகின்றனர்! என்று. மிகுந்த அமைதியுடன்
இருக்க வேண்டும். எந்த சண்டைசச்சரவும் இருக்கக் கூடாது.
இல்லையெனில் தந்தை, ஆசிரியர், குரு மூவரையும் நிந்திப்பதாக
ஆகிவிடுகிறது. பிறகு அவர்கள் பதவியும் குறைவாக அடைவார்கள்.
குழந்தைகளுக்கு இப்பொழுது அறிவு கிடைத்திருக்கிறது. உயர்ந்த
பதவி அடையச் செய்வதற்காகத் தான் நான் உங்களுக்கு படிப்பு
கற்பிக்கின்றேன். படித்து பிறகு மற்றவர்களுக்கும் கற்பிக்க
வேண்டும். நான் யாருக்கும் கூறுவது கிடையாது எனும் பொழுது என்ன
பதவி அடைவேன்? என்று தானும் புரிந்து கொள்ள முடியும். பிரஜைகளை
உருவாக்க வில்லையெனில் பிறகு என்ன அடைவீர்கள்? யோகா இல்லை,
ஞானம் இல்லையெனில் பிறகு அவசியம் படித்தவர்களின் முன் வேலை
செய்ய வேண்டியிருக்கும். தன்னைப் பாருங்கள் - இந்த நேரத்தில்
தோல்வியடைந்தால், குறைந்த பதவி அடைந்தால் கல்ப கல்பத்திற்கும்
குறைந்த பதவியாக ஆகிவிடும். தந்தையின் கடமை புரிய வைப்பது,
புரிந்து கொள்ளவில்லையெனில் தனது பதவியை குறைத்துக் கொள்கிறீர்
கள். மற்றவர்களுக்கு எப்படி புரிய வைக்க வேண்டும் என்பதையும்
பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். எந்த அளவு குறைவாக
மற்றும் அமைதியாகப் பேசுவீர்களோ அந்த அளவு நல்லதாகும். பாபா
சேவை செய்பவர்களின் மகிமையும் செய்கிறார் அல்லவா! மிக அதிக சேவை
செய்கிறீர்கள் எனில் பாபாவின் உள்ளத்தில் அமர முடியும்.
சேவையின் மூலம் தான் உள்ளத்தில் அமர முடியும் அல்லவா! நினைவு
யாத்திரையும் அவசியம் தேவை, அப்பொழுது தான் சதோ பிரதானமாக
ஆவீர்கள். அதிக தண்டனைகள் அடையும் பொழுது பதவியும் குறைந்து
விடும். பாவங்கள் அழியவில்லையெனில் அதிக தண்டனை அடைய
வேண்டியிருக்கும், பதவியும் குறைந்து விடும். இது தான் நஷ்டம்
என்று கூறப்படுகிறது. இதுவும் வியாபாரம் அல்லவா! நஷ்டம் அடைந்து
விடக் கூடாது. தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். உயர்ந்த
நிலையடைய வேண்டும். உயர்ந்த நிலையடையச் செய்வதற்காக பாபா என்ன
என்ன விசயங்களைக் கூறிக் கொண்டிருக்கின்றார்! இப்பொழுது யார்
செய்வார்களோ அவர்கள் அடைவார்கள். நீங்கள் ஃபரிஸ்தாக்களாக ஆக
வேண்டும், அப்படிப்பட்ட குணங்களையும் தாரணை செய்ய வேண்டும்.
நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அனைவரிடத்திலும் மிக பணிவுடன் மற்றும் அமைதியாகப் பேச
வேண்டும். வார்த்தைகள் மிக இனிமையாக இருக்க வேண்டும். சூழ்நிலை
அமைதியாக இருக்க வேண்டும். எந்த சப்தங்களும் இருக்கக் கூடாது,
அப்பொழுது தான் சேவையில் வெற்றி கிடைக்கும்.
2) உண்மையிலும் உண்மையான நாயகிகளாகி ஒரு நாயகனை நினைவு செய்ய
வேண்டும். நினைவின் பொழுது ஒருபொழுதும் கண்களை மூடிக் கொண்டு,
தலையை குனிந்து கொண்டு அமரக் கூடாது. ஆத்ம அபிமானியாகி இருக்க
வேண்டும்.
வரதானம்:
அனைத்து கஜானக்களையும் தனக்காகவும் மற்றும் மற்றவருக்காகவும்
பயன்படுத்தக்கூடிய அகண்ட மகாதானி ஆகுக
பாபாவின் பண்டாரா எப்படி எப்போதும் நடந்துக் கொண்டிருக்கின்றதோ,
தினமும் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றாரோ அதேபோல் உங்களது
அகண்ட நங்கூரமும் (துண்டிக்கப்படாத பண்டாரா) நடந்துக்
கொண்டேயிருக்க வேண்டும், ஏனெனில் உங்களிடம் ஞானத்தின்,
சக்தியின், குஷியின் நிறைந்த பண்டாரா உள்ளது. இதனை கூடவே
வைத்துக் கொண்டு பயன்படுத்துவதால் எந்தவித ஆபத்தும் கிடையாது.
இந்த கஜானா திறந்து இருந்தாலும் கூட திருடர்கள் வரமாட்டார் கள்.
மூடி வைத்தால் திருடர்கள் வருவார்கள். ஆகையால் தினசரி தனக்கு
கிடைக்கும் கஜானக் களைப் பார்த்து பிறகு தனக்காகவும்
மற்றவருக்காகவும் பயன்படுத்துங்கள். அப்போது அகண்ட மகாதானியாக
ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
கேட்பதை மனனம் செய்யுங்கள், மனனம் செய்வதால் தான் சக்திசாலி
ஆவீர்கள்
அவ்யக்த இஷாரா - இணைந்த ரூபத்தின் நினைவு மூலம் சதா வெற்றியாளர்
ஆகுங்கள்
சேவை மற்றும் ஸ்திதி, தந்தை மற்றும் நான், இந்த இணைந்த
ரூபத்தில் இருந்து சேவை செய்தால் சதா பரிஸ்தாவின் அனுபவம்
செய்வீர்கள். எப்போதும் பாபாவுடன் இருங்கள், மற்றும் பாபாவை
உதவியாளராக ஆக்கிக் கொள்ளுங்கள் - இது இரட்டை அனுபவங்களாகும்.
சுயத்தின் ஈடுபாட்டு டன் எப்போதும் கூடவே இருக்கும் அனுபவம்
செய்யுங்கள், மற்றும் சேவையில் எப்போதும் உதவியாளராக இருக்கும்
அனுபவம் செய்யுங்கள்.