07.07.24    காலை முரளி            ஓம் சாந்தி  11.11.20      பாப்தாதா,   மதுபன்


சம்பூர்ண நிலையை அருகாமை மூலமாக வெளிப்படுத்தி மிகச் சிறந்த நேரத்தை அருகாமையில் கொண்டு வாருங்கள்

இன்று பாப்தாதா தம்முடைய மிகப் புனிதமான, மிக உயர்ந்த, மிக அதிர்ஷ்டசாலியான, மிக இனிமையான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். முழு உலகத்திலும் ஒவ்வொரு சமயமும் மிகப் புனிதமான ஆத்மாக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் கூட மிகப் புனிதமானவர்கள். ஆனால் சிரேஷ்ட ஆத்மாக்கள் நீங்கள் இயற்கையை வென்றவர் ஆகி, இயற்கையையும் கூட சதோப்ரதான் ஆக்கி விடுவீர்கள். உங்களது பவித்திரதாவின் சக்தி, இயற்கையையும் கூட சதோபிரதான பவித்திரமாக (தூய்மை) ஆக்கி விடும். எனவே ஆத்மாக் கள் நீங்கள் அனைவரும் இயற்கையின் இந்த சரீரத்தையும் கூட பவித்திரமானதாகப் பெறுகிறீர் கள். உங்களது பவித்திரதாவின் சக்தி உலகின் ஜட, சைதன்யமான அனைத்தையும் பவித்திர மாக்கி விடுகிறது. எனவே உங்களுக்கு சரீரமும் கூட பவித்திரமானதாகக் கிடைக்கிறது. ஆத்மாவும் பவித்திரம், சரீரமும் பவித்திரம் மற்றும் இயற்கையின் சாதனங்களும் சதோபிர தான் பாவனமாக ஆகின்றன. எனவே உலகில் மிகப் புனிதமான ஆத்மாக்கள் நீங்கள். மிகப் புனிதமானவர்களாக இருக்கிறீர்களா? நாம் உலகிலேயே மிகப் புனிதமான ஆத்மாக்கள் என்று தன்னைத்தான் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? மிக உயர்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். ஏன் மிக உயர்ந்தவர்களாக இருக்கிறீர்கள்? ஏனென்றால் உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவானைப் பற்றி அறிந்து கொண்டு விட்டீர்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை மூலம் உயர்ந்தவரிலும் உயர்ந்த ஆத்மாக்களாக ஆகியிருக்கிறீர்கள். சாதாரண ஸ்மிருதி, உள்ளுணர்வு, திருஷ்டி, செயல் அனைத்தையும் மாற்றி சிரேஷ்ட ஸ்மிருதி சொரூபம், சிரேஷ்ட உள்ளுணர்வு, சிரேஷ்ட திருஷ்டி ஆகி விட்டது. யாரையாவது சந்திக்கிறீர்கள் என்றாலும் எந்த உள்ளுணர்வோடு சந்திக்கிறீர்கள்? சகோதரத்துவத்தின் உள்ளுணர்வோடு, ஆத்மிக திருஷ்டியோடு, நன்மையின் பாவனையோடு, பிரபு பரிவாரத்தின் பாவனையோடு. ஆக, மிக உயர்ந்தவர் ஆகி விட்டீர்கள் இல்லையா? மாறி விட்டீர்கள் இல்லையா? மேலும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! எந்த ஒரு சோதிடரும் உங்கள் ரேகையை வரையவில்லை. சுயம் பாக்கிய விதாதா உங்கள் பாக்கியத்தின் ரேகையை வரைந்துள்ளார். மேலும் எவ்வளவு பெரிய கேரண்டி (உறுதி) கொடுத்துள்ளார்! 21 பிறவிகளுக் கான பாக்கியத்தின் ரேகையினுடைய அவிநாசி கேரண்டியைப் பெற்றிருக்கிறீர்கள். ஒரு பிறவிக்கு இல்லை, 21 பிறவிகளுக்கு ஒரு போதும் துக்கம், அசாந்தியின் அனுபவம் இருக்காது. சதா சுகமாக இருப்பீர்கள். வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் இருக்க வேண்டும் - ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி. இந்த மூன்றுமே பாபா மூலம் உங்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளன. 21 பிறவிகளுக்கான கேரண்டி உள்ளது இல்லையா? அனைவரும் கேரண்டி பெற்றிருக்கிறீர்களா? பின்னால் இருப்பவர் களுக்கு கேரண்டி கிடைத்துள்ளதா? அனைவரும் கை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மிக நன்று. குழந்தை ஆவது என்றால் பாபா மூலம் ஆஸ்தி பெறுவதாகும். குழந்தை ஆகிக் கொண்டிருக்கவில்லை. ஆகிக் கொண்டிருக் கிறீர்களா என்ன? குழந்தை ஆகிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது ஆகி விட்டீர்களா? குழந்தை ஆக வேண்டிய தில்லை. பிறந்ததுமே ஆகி விட்டீர்கள். பிறந்ததுமே தந்தையின் ஆஸ்திக்கு அதிகாரி ஆகி விட்டீர்கள். ஆக, அத்தகைய சிரேஷ்ட பாக்கியத்தை பாபா மூலம் இப்போது அடைந்து விட்டீர்கள். மேலும் பிறகு உலகிலேயே மிகப்பெரும் செல்வந்தரும் கூட. பிராமண ஆத்மா, சத்திரியர் இல்லை, பிராமணர். பிராமண ஆத்மா நிச்சயத்துடன் அனுபவம் செய்கிறார் - நான் சிரேஷ்ட ஆத்மா. நான் இன்னார் இல்லை, ஆத்மா, உலகின் மிக உயர்ந்த செல்வந்தர். பிராமணர் என்றால் உலகிலேயே மிகப்பெரும் செல்வந்தர். ஏனென்றால் பிராமண ஆத்மாவுக்காக பரமாத்ம நினைவு மூலம் ஒவ்வோர் அடியிலும் பல கோடி மடங்கு வருமானம். ஆக, நாள் முழுவதிலும் எத்தனை அடி எடுத்து வைக்கிறீர்கள்? ஒவ்வோர் அடியிலும் பல மடங்கு. ஆக, நாள் முழுவதிலும் எத்தனை கோடி ஆகி விட்டது! அத்தகைய ஆத்மாக்களாக பாபா மூலம் ஆகி விட்டீர்கள். நான் பிராமண ஆத்மா என்னவாக இருக்கிறேன்? இந்த நினைவு இருப்பதே பாக்கியம். ஆக, இன்று பாப்தாதா ஒவ்வொருவரின் நெற்றியின் மீது பாக்கியத்தின் ஜொலிக் கின்ற நட்சத்திரத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் கூட தனது பாக்கியத்தின் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

பாப்தாதா குழந்தைகளைப் பார்த்துக் குஷியடைகிறாரா அல்லது குழந்தைகள் பாபாவைப் பார்த்துக் குஷியடைகிறார்களா? யார் குஷியடைகிறார்கள்? பாபாவா, குழந்தைகளா? யார்? (குழந்தைகள்) பாபா குஷியடைவதில்லையா? பாபா குழந்தைகளைப் பார்த்துக் குஷியடைவார் மற்றும் குழந்தைகள் பாபாவைப் பார்த்துக் குஷியடைவார்கள். இருவருமே குஷியடைகிறார் கள். ஏனென்றால் குழந்தைகள் அறிவார்கள் - இந்தப் பிரபுவின் சந்திப்பு, பரமாத்ம அன்பு, இந்தப் பரமாத்ம ஆஸ்தி, இந்தப் பரமாத்ம பிராப்திகள் இப்போது தான் பிராப்தியாகின்றன. இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை. அப்படித் தானே?

பாப்தாதா இப்போது ஒரு விசயத்தை மட்டும் குழந்தைகளை ரிவைஸ் செய்ய வைக்கிறார் - எந்த விசயமாக இருக்கும்? புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இதைத் தான் பாப்தாதா ரிவைஸ் செய்ய வைக்கிறார் - இப்போது சிரேஷ்ட சமயத்தை அருகில் கொண்டு வாருங்கள். இது உலக ஆத்மாக்களின் சப்தம். ஆனால் கொண்டு வருபவர்கள் யார்? நீங்களா அல்லது வேறு யாராவதா? அத்தகைய அழகிய சிரேஷ்ட சமயத்தை அருகில் கொண்டு வருபவர்கள் நீங்கள் அனைவரும் தானே? அப்படியென்றால் கை உயர்த்துங்கள். நல்லது, இப்போது இரண்டாவது விஷயமும் உள்ளது. அதையும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பதால் சிரிக்கிறீர்களா? நல்லது, அதற்கான தேதி என்ன? தேதியைத் தீர்மானம் செய்யுங்களேன். இப்போது வெளிநாட்டினருக்கான வாய்ப்பு. எனவே இந்தத் தேதியையோ தீர்மானித்தாகி விட்டது. ஆக, அந்தச் சமயத்தை அருகில் கொண்டு வரக்கூடிய ஆத்மாக்கள் சொல்லுங்கள். எந்த தேதி? தெரிகிறதா? உங்கள் பார்வையில் வர வேண்டும். அதன் பிறகு தான் உலகின் மீது வரும். பாப்தாதா அமிர்தவேளையில் சுற்றி வரும் போது பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டு இரக்கம் வருகிறது. மகிழ்ச்சியிலும் இருக்கிறார் கள், ஆனால் மகிழ்ச்சியுடன் கூடவே குழப்ப மடைந்தும் இருக்கிறார்கள். ஆக, பாப்தாதா கேட்கிறார் -- ஹே வள்ளலின் குழந்தைகள், மாஸ்டர் வள்ளல்களே, நீங்கள் எப்போது உங்கள் மாஸ்டர் வள்ளல் தன்மையின் பார்ட்டைத் தீவிர வேகத்தில் உலகின் முன்னால் பிரத்தியட்சம் செய்வீர்கள்? அல்லது இப்போது திரைக்கு உள்ளே தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்களா? உலக மாற்றத்திற்கான நிமித்த ஆத்மாக்கள் இப்போது உலகத் தின் ஆத்மாக்கள் மீது இரக்கம் கொள்ளுங்கள். நடக்கத் தான் போகிறது. இதுவோ நிச்சயிக்கப் பட்டதாகும். மேலும் நடக்கப் போவதும் நிமித்த ஆத்மாக்களாகிய உங்கள் மூலமாகத் தான். எந்த விசயத்தில் தாமதம்? பாப்தாதா இந்த ஒரு விழாவைப் பார்க்க விரும்புகிறார் - ஒவ்வொரு பிராமணக் குழந்தையின் மனதிலும் நிறைவு மற்றும் சம்பூர்ண நிலையின் கொடி ஏற்றப் பட்டிருப்பது தென்பட வேண்டும். பிராமணர்களுக்குள் சம்பூர்ண நிலையின் கொடி ஏற்றப்படும் போது தான் உலகத்தில் பாபாவை வெளிப்படுத்தும் கொடி ஏற்றப்படும். ஆக, இந்தக் கொடி யேற்று விழாவை பாப்தாதா பார்க்க விரும்புகிறார். எப்படி சிவராத்திரி அன்று சிவ அவதாரத்தின் கொடியை ஏற்றுகிறீர்கள். அது போல் இப்போது சிவசக்தி பாண்டவ அவதாரத்தின் முரசு ஒலிக்க வேண்டும். ஒரு பாடல் ஒலிக்கச் செய்கிறீர்கள் இல்லையா - சிவசக்திகள் வந்தனர் இப்போது உலகம் இந்தப் பாடலைப் பாட வேண்டும் - சிவனுடன் கூட சக்திகள் பாண்டவர்கள் பிரத்தியட்சம் ஆகி விட்டனர். திரைக்குள்ளேயே எது வரை இருப்பீர்கள்? திரைக்குள் இருப்பது நன்றாக இருக்கிறதா? கொஞ்சம்-கொஞ்சம் நன்றாக இருக்கிறது. நன்றாக இல்லை என்றால் திரையை விலக்குவது யார்? பாபா விலக்குவாரா? டிராமா விலக்குமா அல்லது நீங்கள் விலக்குவீர்களா? நீங்கள் விலக்குவீர்கள் என்றால் ஏன் தாமதம்? திரைக்குள் இருப்பது நன்றாக உள்ளது என்று அப்படிப் புரிந்து கொள்வதா? இப்போது பாப்தாதாவுக்கு இந்த ஒரே சிரேஷ்ட ஆசை தான் - அனைவரும் பாடல் பாட வேண்டும் - ஆஹா! வந்து விட்டார், வந்து விட்டார், வந்து விட்டார்! முடியுமா? பாருங்கள், தாதிகள் அனைவரும் சொல்கிறார்கள், முடியும் என்று. பிறகு ஏன் நடப்பதில்லை? காரணம் என்ன? அனைவரும் இது போலவே செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு காரணம் என்ன? (அனைவரும் சம்பன்னம் ஆகவில்லை) ஏன் ஆகவில்லை? தேதியைச் சொல்லுங்களேன். (தேதியோ பாபா நீங்கள் சொல்லுங்கள்) பாப்தாதாவின் மகாமந்திரம் நினைவிருக்கிறதா? பாப்தாதா என்ன சொல்கிறார்? இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லை. (தாதிஜி சொல்லிக் கொண்டிருக்கிறார் - பாபா, இறுதித் தேதியை நீங்களே சொல்லுங்கள்) நல்லது, பாப்தாதா என்ன தேதி சொல்கிறாரோ, அதில் தன்னைத்தான் மாற்றிக் கொண்டு கடைப்பிடிப்பீர்களா? பாண்டவர்கள் கடைப்பிடிப்பீர்களா? உறுதியாக? மேலே-கீழே செய்தால் என்ன செய்ய வேண்டியதிருக்கும்? (நீங்கள் தேதி கொடுப்பீர்களானால் தலைகீழாக ஆக்க மாட்டோம்) வாழ்த்துகள்! நல்லது. இப்போது பாப்தாதா தேதி சொல்கிறார், பாருங்கள். பிறகும் பாப்தாதா இரக்க மனம் உள்ளவர். தேதி சொல்கிறார், கவனமாகக் கேட்க வேண்டும்.

பாப்தாதா குழந்தைகள் அனைவரிடமும் இந்த சிரேஷ்ட பாவனை வைக்கிறார், நம்பிக்கை வைக்கிறார் - குறைந்தது 6 மாதத்தில், 6 மாதம் எப்போது முடிவடையும்? (மே மாதத்தில்) மே-யில் மே-மே (நான்-நான்) என்பது முடிந்து விட வேண்டும். பாப்தாதா பிறகும் மார்ஜின் (சமயத்திற்கான இடைவெளி) தருகிறார் - குறைந்தது 6 மாதத்தில், பாப்தாதா முன்பும் என்ன சொன்னாரோ, மேலும் முந்தைய சீசனில் என்ன வேலை கொடுத்தாரோ, அதாவது தன்னை ஜீவன் முக்த் ஸ்திதியின் அனுபவத்தில் கொண்டு வாருங்கள். சத்யுக சிருஷ்டியின் ஜீவன் முக்தி நிலை இல்லை, சங்கமயுகத்தின் ஜீவன் முக்த் ஸ்டேஜ். எந்த ஒரு விக்னம், பரிஸ்திதிகள், சாதனங்கள் அல்லது நான் மற்றும் எனது, தேக அபிமானத்தின் நான் மற்றும் தேக அபிமானத்தின் எனது சேவை, இவை அனைத்தின் பிரபாவத்தில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும். நானோ விடுபட்டு இருக்க விரும்பினேன், ஆனால் விக்னம் வந்து விட்டது இல்லையா, இந்த வியமே பெரியதாகி விட்டது இல்லையா என்று அந்த மாதிரி சொல்லக் கூடாது. சிறிய வியமோ சென்று விடும். இந்த மிகப்பெரிய பிரச்சினை இருந்தது, இது மிகப்பெரிய பேப்பராக (சோதனை) இருந்தது, பெரிய விக்னமாக இருந்தது, பெரிய பரிஸ்திதி இருந்தது. எவ்வளவு தான் பெரியதிலும் பெரிய பரிஸ்திதி, விக்னம், சாதனங்களின் கவர்ச்சி எதிரில் வந்தாலும் எதிர்கொள்ளத் தான் செய்யும் என்பதை முன்பே சொல்லி விட்டார். ஆனால் குறைந்தது 6 மாதத்தில், 75 சதவிகிதம் விடுபட முடியுமா? பாப்தாதா 100 சதவிகிதம் என்று சொல்லவில்லை. 75 சதவிகிதம். முக்கால் பாகமோ வர வேண்டும். அப்போது முழுமையாகச் சென்றடைவீர்கள் இல்லையா? ஆக, 6 மாதத்தில் - ஒரு மாதம் கூட இல்லை, 6 மாதம் கொடுக் கிறார். வருடத்தில் பாதி. அப்போது இந்தத் தேதியைத் தீர்மானிக்க முடியாதா? பாருங்கள், தாதிகள் சொல்லியிருக்கிறார்கள், தீர்மானியுங்கள். தாதிகளின் கட்டளையையோ ஏற்று நடக்க வேண்டும் இல்லையா? ரிசல்ட்டைப் பார்த்து பாப்தாதா தாமாகவே கவர்ச்சியில் வருவார். சொல்ல வேண்டிய தேவையும் இருக்காது. ஆக, 6 மாதம் மற்றும் 75 சதவிகிதம். 100 சொல்ல வில்லை. அதற்காகப் பிறகு பாதி சமயம் கொடுப்போம். ஆக, இதில் எவர்-ரெடியாக இருக்கிறீர் களா? எவர்-ரெடி இல்லை, 6 மாதத்தில் ரெடி. விருப்பம் உள்ளதா அல்லது கொஞ்சம் தைரியம் குறைவாக உள்ளதா? என்ன நடக்குமோ என்று தெரியவில்லையா? சிங்கமும் வரும், பூனையும் வரும், எல்லாமே வரும். விக்னங்களும் வரும், பரிஸ்திதிகளும் வரும். சாதனங்களும் அதிகரிக்கும். ஆனால் சாதனங்களின் பிரபாவத்தில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும். பிடித்திருந்தால் கை உயர்த்துங்கள். டி.வி.யைச் சுற்றி விடுங்கள். நன்றாகக் கை உயர்த்துங்கள். கீழே கையை வைக்கக் கூடாது. நல்ல காட்சியாக உள்ளது. நல்லது முன் கூட்டியே வாழ்த்துகள்.

இவ்வாறு சொல்லக் கூடாது-- நானோ அதிகம் சாக வேண்டி இருக்கும், இறந்து விடுங்கள் அல்லது உயிர் வாழுங்கள், ஆனால் ஆகியே தீர வேண்டும். இந்தச் சாவது இனிமையாகச் சாவ தாகும். இந்தச் சாவில் துக்கம் ஏற்படுவதில்லை. இந்தச் சாவது என்பது அநேகரின் நன்மைக் காகச் சாவதாகும். எனவே இந்தச் சாவதில் மஜா உள்ளது. துக்கம் இல்லை, சுகம் தான். எந்த ஒரு சாக்குப்போக்கும் சொல்லக் கூடாது. இது நடந்தது இல்லையா, அதனால் இப்படி ஆகி விட்டது. இந்தச் சாக்குப்போக்கு செல்லுபடியாகாது. சாக்குப்போக்கு சொல்வீர்களா என்ன? சொல்ல மாட்டீர்கள் இல்லையா? பறக்கும் கலையின் விளையாட்டை விளையாட வேண்டுமே தவிர வேறு எந்த விளையாட்டும் வேண்டாம். இறங்கும் கலையின் விளையாட்டு, சாக்குப் போக்கு சொல்வது, பலவீனத்தின் விளையாட்டு இவையனைத்தையும் முடித்துவிட வேண்டும். பறக்கும் கலையின் விளையாட்டுப் பந்தயம். சரி தானே? அனைவரின் முகங்களும் மலர்ந்து விட்டன. 6 மாதம் கழித்து மீண்டும் பாபாவைச் சந்திக்கும் போது முகங்கள் எப்படி இருக்கும்? அப்போதும் ஃபோட்டோ எடுப்போம்.

இரட்டை வெளிநாட்டினர் வந்துள்ளனர் இல்லையா? அதனால் இரட்டை உறுதிமொழி எடுப்பதற் கான நாள் வந்து விட்டது. வேறு யாரையும் பார்க்கக் கூடாது. தந்தையைப் பாருங்கள், பிரம்மா என்ற அம்மாவைப் பாருங்கள். மற்றவர்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவருக்காகவும் இரக்க பாவனை வைக்க வேண்டும். பலவீனமானவர்களுக்கு உங்கள் சுப பாவனையின் சக்திகளைக் கொடுங்கள். அவர்களின் பலவீனங்களைப் பார்க்காதீர்கள். உங்கள் தைரியம் என்ற கையை அவர்களுக்குக் கொடுங்கள். அவர்களை உயர்த்துங்கள். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ச்சியாக உங்கள் தைரியத்தின் கையைக் கொடுங்கள். தைரியத்தின் கை மிகவும் சக்தி வாய்ந்தது. மற்றும் பாப்தாதாவின் வரதானம் - குழந்தைகள் தைரியத்தின் ஓரு அடி எடுத்து வைக்கும் போது தந்தை ஆயிரம் அடிகளின் உதவியைத் தருகிறார். சுயநலமற்ற முயற்சியில் நான் முதலில் என்பது இருக்க வேண்டும். சுயநலமற்ற முயற்சி இருக்க வேண்டும். சுயநலம் இருக்கக் கூடாது. சுயநலமற்று இருப்பதில் யார் முன்னால் செல்கிறார்களோ, அவர்கள் பிரம்மா பாபாவுக்கு சமமானவர்கள்.

பிரம்மா பாபா மீதோ அன்பு உள்ளது இல்லையா? அதனால் தான் பிரம்மா குமாரி அல்லது பிரம்மா குமார் எனச் சொல்லிக் கொள்கிறீர்கள் இல்லையா? ஒரு விநாடியில் ஜீவன் முக்தியின் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சவால் விடுகிறீர்கள் என்றால் இப்போது ஒரு விநாடியில் தன்னை விடுவித்துக் கொள்வதற்கான கவனம் வைக்க வேண்டும். இப்போது சமயத்தை சமீபத்தில் கொண்டு வாருங்கள். உங்கள் சம்பூர்ண நிலையின் சமீபத்தை, சிரேஷ்ட சமயத்தை அருகில் கொண்டு வாருங்கள். நீங்கள் எஜமானர்கள் இல்லையா? இராஜாக்கள் இல்லையா? சுயராஜ்ய அதிகாரிகள் இல்லையா? எனவே கட்டளை இடுங்கள். இராஜாவோ கட்டளை இடுகிறார் இல்லையா? இதைச் செய்யக் கூடாது, இதைச் செய்ய வேண்டும். சரி, கட்டளை இடுங்கள். அவ்வப்போது மனதைப் பாருங்கள். ஏனென்றால் மனம் என்பது முதல் மந்திரி. எனவே ஹே ராஜா! தன்னுடைய மனம் என்ற மந்திரிக்கு ஒரு விநாடியில் கட்டளை இட்டு அசரீரி, விதேகி ஸ்திதியில் நிலைக்கச் செய்ய முடியுமா? ஒரு விநாடியில் கட்டளை இடுங்கள். (5 நிமிடம் டிரில்) நல்லது.

சதா லவ்லீன் மற்றும் லக்கி (அன்பான அதிர்ஷ்டம் நிறைந்த) ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவிடம் இருந்து கிடைத்துள்ள அனைத்துப் பிராப்திகளின் அனுபவி ஆத்மாக்களுக்கு, சுயராஜ்ய அதிகாரி ஆகி அதிகாரத்தின் மூலம் சுயராஜ்யம் செய்யக்கூடிய சக்திசாலி ஆத்மாக்களுக்கு, சதா ஜீவன்முக்த் ஸ்திதியின் அனுபவி, மிக உயர்ந்த ஆத்மாக்களுக்கு, பாக்கிய விதாதா மூலம் சிரேஷ்ட பாக்கியத்தின் ரேகை மூலம் அனைவரை விடவும் அதிர்ஷ்டசாலி ஆத்மாக்களுக்கு, சதா பவித்திரதாவின் திருஷ்டி, உள்ளுணர்வு மூலம் சுய மாற்றம் உலக மாற்றம் செயயக்கூடிய மிகவும் புனிதமான ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

இரட்டை வெளிநாட்டினர் விருந்தாளிகளுடன் (காலத்தின் அழைப்பு புரோகிராமுக்கு வந்துள்ள விருந்தாளிகளுடன்)

அனைவரும் தங்கள் இனிய வீட்டில், இனிய பரிவாரத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? இந்தச் சிறிய இனிய பரிவாரம் அன்பானதாக உள்ளது இல்லையா? மேலும் நீங்களும் எவ்வளவு அன்பானவராக ஆகி விட்டீர்கள்! முதலில் பரமாத்ம அன்புக்குரியவர் ஆகி விட்டீர்கள். ஆகி விட்டீர்களா, அல்லது இனிமேல் ஆவீர்களா? பாருங்கள், உங்கள் அனைவரை யும் பார்த்து அனைவரும் எவ்வளவு குஷி அடைந்து கொண்டிருக் கிறார்கள்! ஏன் குஷி அடைந்து கொண்டிருக்கிறார்கள்? அனைவரின் முகத்தையும் பாருங்கள், மிகவும் குஷி அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் குஷி அடைந்து கொண்டிருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் - இவர்கள் அனைவரும் இறைத்தூதுவர் ஆகி ஆத்மாக்களுக்குச் செய்தி கொடுப்பதற்கு நிமித்தமான ஆத்மாக்கள். (ஐந்து கண்டங்களைச் சேர்ந்தவர்கள்) ஆக, ஐந்து கண்டங்களில் செய்தி சென்று சேர்ந்து விடும், சுலபம் இல்லையா? பிளான் மிக நன்றாக உருவாக்கியிருக் கிறீர்கள். இதில் பரமாத்ம சக்தியை நிரப்பி மற்றும் பரிவாரத்தின் சகயோகம் பெற்று முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஆக, பிளானை நடை முறையில் கொண்டு வருவதில் தைரியம் உங்களுடையது மற்றும் உதவி பாபா மற்றும் பரிவாரத்தினுடையது. நிமித்தமாக மட்டும் ஆக வேண்டும் மற்றும் உழைக்க வேண்டியதில்லை. நான் பரமாத்ம காரியத்திற்கு நிமித்தமாக இருக்கிறேன். எந்த ஒரு காரியத்தில் வந்தாலும் பாபாவின் கருவி சேவைக்காகத் தயாராக உள்ளேன். நான் கருவி. நடத்துபவர் தாமாகவே நடத்துவார். இந்த நிமித்த பாவனை உங்கள் முகங்களில் நிர்மாண் (படைப்பு) மற்றும் நிர்மான் (பணிவு) பாவனையைப் பிரத்தியட்சம் செய்யும். செய்விப்பவர் நிமித்தமாக்கிக் காரியத்தைச் செய்விப் பார். மைக் நீங்கள் மற்றும் மைட் (சக்தி) பாபாவுடையது. அப்போது சுலபம் தான் தானே? ஆகவே நிமித்தமாகி நினைவில் ஆஜராகி விடுங்கள், போதும். ஆக, உங்கள் முகம், உங்கள் தோற்றம் தாமாகவே சேவைக்கு நிமித்தம் ஆகி விடும். வார்த்தை மூலம் மட்டும் சேவை செய்ய மாட்டீர்கள், ஆனால் தோற்றத்தின் மூலமாகவும் கூட உங்கள் உள்ளார்ந்த குஷி முகத்தின் மூலம் காணப்படும். இது தான் அலௌகிகத் தன்மை என்று சொல்லப்படும். இப்போது அலௌகிகமாக ஆகி விட்டீர்கள் தானே? லௌகிகத் தன்மையோ முடிந்து விட்டது இல்லையா? நான் ஆத்மா என்பது அலௌகிகத் தன்மை. நான் இன்னார் என்பது லௌகிகத் தன்மை. ஆக, யார் நீங்கள்? அலௌகிகமா லௌகிகமா? அலௌகிகமானவர் இல்லையா? நல்லது. பாப்தாதா மற்றும் பரிவாரத்தின் முன்னால் வந்து சேர்ந்து விட்டீர்கள். இந்த நல்ல தைரியம் வைத்திருக்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் கோடியில் ஒருவராக வெளிப்பட்டிருக் கிறீர்கள் இல்லையா? எத்தனை குரூப்புகள் இருந்தன! அதிலிருந்து எத்தனைப் பேர் வந்திருக் கிறீர்கள்? எனவே கோடியில் சிலராக வந்திருக்கிறீர்கள் இல்லையா? நல்லது, இந்த குரூப் பிடித்திருக்கிறது. மேலும் பாருங்கள், எவ்வளவு குஷி அடைந்து கொண்டிருக்கிறீர்கள்! உங்களை விடவும் இவர்கள் அதிகக் குஷி அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் சேவைக்கான பிரதிபலனை எதிரில் பார்த்துக் குஷி அடைந்து கொண்டிருக்கிறார்கள். குஷியடைந்து கொண்டி ருக்கிறார்கள் இல்லையா? - முயற்சிக்கான பலன் கிடைத்து விட்டது. நல்லது. இப்போதோ பாலக் ஸோ மாலிக் (குழந்தையிலிருந்து எஜமான்). பாலகன் மாஸ்டர். குழந்தை எப்போதும் மாஸ்டர் என்று தான் சொல்லப்படுகிறது. நல்லது.

வரதானம்:
பயனுள்ளதாக்குவதற்கான விதி மூலம் வெற்றிக்கான வரதானத்தைப் பெறக்கூடிய வரதானி மூர்த்தி ஆகுக.

சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியும் உள்ளது என்றால் வரதானமும் உள்ளது - பயனுள்ளதாக்குங்கள், வெற்றி பெறுங்கள். பயனுள்ளதாக்குவது விதை, வெற்றி என்பது பழம் (பலன்) விதை நன்றாக உள்ளது ஆனால் பழம் கிடைக்கவில்லை என்று இருக்க முடியாது. ஆக, எப்படி மற்றவர்களுக்குச் சொல்கிறீர்கள் - சமயம், சங்கல்பம், செல்வம் அனைத்தையும் பயனுள்ளதாக்குங்கள். இது போல் தங்களின் அனைத்துக் கஜானாக்களின் பட்டியலை சோதித்துப் பாருங்கள் - எந்தக் கஜானா பயனுள்ளதாக்கப்பட்டது, எது வீணாக்கப் பட்டது? பயனுள்ளதாக்கிக் கொண்டே இருப்பீர்களானால் அனைத்துக் கஜானாக்களாலும் நிரம்பிய வரதானி மூர்த்தி ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
பரமாத்ம விருது பெறுவதற்கு வீணானவற்றையும் எதிர்மறையானவற்றையும் தவிர்த்து விடுங்கள்.