07-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நம்முடைய பாபா
நம்மை உலகின் எஜமானர்களாக ஆக்குவதற்காக வந்துள்ளார், நாம் அவர்
முன்னால் அமர்ந்திருக்கிறோம் என்ற போதை உங்களுக்கு இருக்க
வேண்டும்.
கேள்வி:
கர்மங்களின் ஆழமான கதியை
அறிந்தவர்கள் என்ன முயற்சி அவசியமாகச் செய்வார்கள்?
பதில்:
நினைவில் இருப்பதற்கான முயற்சி.
ஏனென்றால் நினைவின் மூலம்தான் பழைய கணக்கு வழக்கு முடியும்
என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரு வேளை ஆத்மா பழைய கணக்கு
வழக்கு, கர்ம போகத்தை முடிக்கவில்லை என்றால் தண்டனையை
அனுபவிக்க வேண்டியிருக்கும், மேலும் பதவியும் கீழானதாகி விடும்,
மறுபிறவியும் அப்படிப்பட்டதாகவே இருக்கும் என அவர்களுக்குத்
தெரியும்.
ஓம் சாந்தி.
பாப்தாதா நேரில் வந்துள்ளார் என்பதை பார்க்கும்போது
குழந்தைகளுக்கு எல்லை யற்ற குஷியின் அளவு அதிகரிக்கிறது. மேலும்
5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிவபாபா பிரம்மாவின்
உடலில் வந்துள்ளார் என்பதையும் குழந்தைகள் அறிவார்கள். என்ன
செய்வதற்காக? குழந்தைகளுக்கு இந்த போதை ஏறி விட்டுள்ளது.
சொர்க்கத்தின் எஜமானர் களாக ஆக்குவதற்காக தந்தை வந்துள்ளார்,
நம்மை தகுதி வாய்ந்தவர்களாக ஆக்கிக் கொண்டி ருக்கிறார் என
அனைத்து குழந்தைகளும் அறிவார்கள். நம்மை தமோபிரதானத் திலிருந்து
சதோபிரதானமாக ஆக்குவதற்கான யுக்திகளை மீண்டும் மீண்டும்
சொல்லிக் கொண்டிருக் கிறார். யுக்தி மிகவும் சகஜமானதேயாகும்.
முற்றிலும் சகஜமான நினைவை குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார்.
அஞ்ஞான காலத்தில் ஆண் குழந்தை பிறந்தால் நம்முடைய வாரிசு
பிறந்துள்ளது என புரிந்து கொள்கின்றனர். இந்த சமயத்தில் தந்தை
வந்து குழந்தை களாகிய நம்மை தத்தெடுக்கிறார் என நீங்கள்
அறிவீர்கள். நீங்கள் அனைவருமே சிவபாபாவின் குழந்தைகள் தான்.
ஆனால் நமக்கு சொல்வதற்காகவும், நாம் அவரிடமிருந்து (மகா
வாக்கியங்களை) கேட்பதற்காகவும் பாபா தன்னுடையவர்களாக எப்படி
ஆக்குவார்? சிவபாபா இந்த பிரம்மாவின் உடல் மூலம் சொல்கிறார் -
நான் உங்களுடைய தந்தையாய் இருக்கிறேன். உங்களை சொர்க்கத்தின்
எஜமானர்களாக ஆக்குகிறேன். தூய்மையற்ற உங்களின் ஆத்மா மட்டும்
முக்திக்கோ அல்லது ஜீவன்முக்தி தாமத்திற்கோ செல்ல முடியாது.
நீங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். அனைவரும் தந்தையின்
ஆஸ்தியை எடுக்க வேண்டும். அளவற்ற குழந்தைகள் உள்ளனர்,
அதிகரித்தபடி இருக்கின்றனர். தத்தெடுத்தபடி இருக்கிறார். ஓ
ஆத்மாக் களே இப்போது நீங்கள் என்னுடைய சந்தானங்கள் (குழந்தைகள்).
தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள், நமக்கு பாபா
கிடைத்திருக்கிறார், அவரை அரைக் கல்பம் நினைவு செய்தோம். இதனை
ஒருபோதும் மறக்காதீர்கள். அரைக் கல்ப காலம் ஆத்மா இந்த
சரீரத்தின் மூலம் நினவு செய்து வந்தது - ஓ பதித பாவனா, ஓ
துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே! என்றெல்லாம் ஏனென்றால்
இராவண இராஜ்யம் உள்ளதல்லவா. நாங்கள் மிகவும் சுகம்
நிறைந்தவர்களாக இருக்கிறோம், எங்களுக்கு இவ்வளவு கோடிகள் உள்ளன,
இவ்வளவு ஆலைகள் உள்ளன, அலுவலகம் முதலானவை உள்ளன என புரிந்து
கொண்டிருக்கும் இவை யனைத்தும் குறுகிய காலத்திற்கானதாகும்.
இறுதியில் மிகவும் ஐயோ, ஐயோ என அலறத் தொடங்கி விடுவார்கள்.
துக்கத்தின் மலைகள் விழும். இவ்வளவு செல்வங்கள் அனைத்தும்
அழிந்து போய் விடும். தந்தையிடமிருந்து உங்களுக்கு ஒரு
வினாடியில் ஆஸ்தி கிடைக்கும். உங்களுக்கு வினாடியில்
சொர்க்கத்தின் இராஜ்யத்தை கொடுக்கிறேன் என சொல்கிறார். இந்த
பழைய உலகம் அழிந்து விடும். சண்டைகள் மூளும். இயற்கையின்
சீற்றங்கள் ஏற்படும். சுத்தப்படுத்த வேண்டியுள்ளது அல்லவா.
உங்களுடைய ஆத்மாவும் கூட இப்போது தூய்மை யடைந்து
கொண்டிருக்கிறது. பாப்தாதா இருவரும் குழந்தைகள் எவ்வளவு
உழைக்கின்றனர் என புரிந்துக் கொள்ள முடியும். தந்தையிடமிருந்து
ஆஸ்தியை எடுப்பதற்காக முற்றிலும் மிகச் சிறிய முயற்சியைக்
கொடுக்கின்றனர். தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு தந்தையை
நினைவு செய்யுங்கள். அந்த ஆன்மீகத் தந்தை சரீரமற்றவர்,
ஆத்மாக்களாகிய நாம் அவரை அழைக்கிறோம் அல்லவா. தூய்மை இழந்துள்ள
உங்களுடைய ஆத்மா எப்படி தூய்மையாகும் என தந்தை கேட்கிறார்.
பதீத பாவனர் ஒரு தந்தை அல்லவா. நீரோட்டம் உள்ள நதி தூய்மை
படுத்தக் கூடியது என்றால் உடனே சென்று வர முழுக்குப் போட்டு (ஸ்நானம்
செய்து) வேண்டும். பலர் கங்கா ஸ்நானம் செய்கின்றனர் என்றாலும்
கூட ஏன் தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர்? இரவும் பகலும் இதையே
பாடிக்கொண்டிருக்கின்றனர் - பதித பாவன சீதா ராம் அதாவது
பக்தர்கள் அல்லது சீதைகள் அனைவரையும் காப்பாற்றக்கூடிய ஒரு
ராமன் பரமபிதா பரமாத்மா ஆவார். பதித பாவனர், பதிகளுக் கெல்லாம்
பதி அவரே ஆவார். அவர் வரும்போது வந்து தூய்மையாக ஆக்குவார். ஆக
என்னுடைய ஸ்ரீமத்படி நீங்கள் நடக்க வேண்டும், வேறு யாருடைய
வழியிலும் நடக்காதீர்கள் என இப்போது தந்தை சொல்கிறார்.
பக்தியின் மூலம் பகவான் கிடைப்பார் என அவர்கள் சொல்கின்றனர்,
பக்தியின் மூலம் பகவான் கிடைப்பார் என்றால் பக்தர்களைக்
காப்பாற்ற பகவான் வருவார் என ஏன் சொல்கின்றனர்? பக்தர்களுக்கு
என்ன, ஆபத்து வந்துவிட்டதா, அதிலிருந்து காப்பாற்றுவதற்கு?
ஏதாவது ஆபத்து ஏற்படும்போது பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
நீங்கள் எவ்வளவு துர்க்கதியை அடைந்து விட்டீர்கள் என தந்தை
சொல்கிறார். இது கொடுமையான நரகம், அனைவரும் துக்கம்
மிக்கவர்களாக நோயாளிகளாக உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் பாருங்கள்
என்னென்ன நடக்கிறது என. துக்கமோ துக்கம், ஆகையால் பாபா எங்கள்
துக்கத்தை நீக்குங்கள், சுகத்தைக் கொடுங்கள் என அழைக்கின்றனர்.
பாரதத்தில்தான் எப்போதும் சுகம் நிறைந்திருந்தது, இப்போது
துக்கம் உள்ளது. இது பாரதத்தின் விஷயம்தானாகும், மற்ற கண்டங்களே
தனிப்பட்டவை. அவை பின்னர்தான் வருகின்றன. சிலர் 60 பிறவிகள்,
சிலர் அதை விடவும் குறைந்த பிறவிகளும் எடுக்கின்றனர். தேவதா
தர்மத்தவர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றனர். ஆக, இந்த கணக்கின்படி
அரைக் கல்பத்திற்குப் பின் வரக்கூடியவர்கள் 84 பிறவி
எடுப்பதில்லை. பாதியளவு பிறவிகள் எடுக்கின்றனர். அனைவரும் 84
பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுகின்றனர் என்பதல்ல. மனிதர்
களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி விடுகின்றனர். இப்போது
குழந்தை களாகிய நீங்கள் தந்தையின் மூலம் அழிவற்ற ஞான
ரத்தினங்களினால் (புத்தியை) பையை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
ரத்தினங்கள் மிகவும் விலை மதிப்பு வாய்ந்தவை ஆகும். தந்தை
மிகவும் சகஜமாகப் புரிய வைக்கிறார். தந்தை சொல்கிறார் - ஓ பதீத
பாவனா ! வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என நீங்கள் அழைத்து
வந்தீர்கள், இப்போது தந்தை வந்திருக்கிறார். நாம்
தூய்மையடைந்தோம் என்றால் சொர்க்கத்தின் எஜமானர்கள் ஆவோம் என
இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சிவபாபா நம்மை
கல்புத்தியிலிருந்து தங்க புத்தியாக, கல் போன்றவர் களை தங்கம்
போல (அஞ்ஞானிகளை ஞானமுள்ளவர்களாக) ஆக்குவதற்காக வந்துள்ளார்.
பக்தி மார்க்கத்தின் சிலைகள் அனைத்தும் கல்லால் ஆக்கப்
படுகின்றன. கற்களுடன் மண்டையை உடைத்துக் கொள்கின்றனர். தந்தை
சொல்கிறார் - நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் லாபம்
எதுவுமில்லை. முன்னர் நீங்கள் உங்களை பலி கொடுத்துக் கொண்டிருந்
தீர்கள். என்றாலும் என்ன லாபம் இருந்தது? மீறிப்போனால் தேவியின்
காட்சி கிடைக்கும், பிறகு எப்படி இருந்தீர்களோ அப்படியே இருந்து
விடுகிறீர்கள். பதித பாவன தந்தை சங்கம யுகத்தில் ஒரு முறை
வருகிறார். சத்யுகத்தில் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள்
இருப்பதே இல்லை. கழுத்தை வெட்டிக்கொள்ளுங்கள், இதை அதை செய்யுங்
கள் என தந்தை சொல்வதில்லை. பக்தி மார்க்கத்தில் பல விதமாக
என்னென்ன செய்கின்றனர்! முன்னர் தேவிகளுக்கு முன்பாக மனிதர்களை
பலி கொடுத்துக் கொண்டிருந்தனர். நீங்கள் நடத்தை
திருந்தியவர்களாக (பூஜைக்கு தகுதி யானவர்களாக மாறி) இருந்த போது
தேவதை களாக இருந்தீர்கள். இப்போது எவ்வளவு கல்புத்தியாகி
இருக்கிறீர்கள். உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தைக்
கொடுத்திருந்தேன். எவ்வளவு தங்கம், வைர வைடூரியத்தாலான
மாளிகைகள் இருந்தன, அளவற்ற செல்வங்கள் இருந்தன. அதனை என்ன
செய்தீர்கள்? இப்போது நீங்கள் எவ்வளவு துக்கம் மிக்கவர்களாக ஆகி
யுள்ளீர்கள். நீங்கள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தவர்களாக
இருந்தீர்கள் அல்லவா. இப்போது நீங்கள் ரஜோ, தமோவில் மட்டும்
வந்துள்ளீர்கள். நீங்கள் தேவதா தர்மத்தவர்களாக இருந்தீர்கள்,
பிறகு தம்மை இந்துக்கள் என ஏன் சொல்லிக் கொள்கிறீர்கள்? மற்ற
அனைத்து தர்மத்தவர்களும் தத்தமது தர்மத்தையே ஏற்றுக்
கொள்கின்றனர். தர்மம் ஒன்றுதான் இருக்குமல்லவா. முஸ்லிம்களின்
முஸ்லிம் தர்மமும், கிறிஸ்தவர்களின் கிறிஸ்து தர்மமும் நடந்து
வருகிறது. உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் மிகவும் சுகம்
மிக்கவர்களாக, தூய்மை யானவர்களாக, முழுமையான விகார மற்றவர்களாக
இருந்தீர்கள். இப்போது எவ்வளவு விகாரிகளாக ஆகி விட்டுள்ளீர்கள்.
நாம் முழுமையான விகாரமற்றவர்களாக இருந்தோம், பிறகு முழுமையான
விகாரிகளாக எப்படி ஆனோம் என யாருக்கும் தெரியாது. 84 பிறவிகள்
எடுத்து சதோவிலிருந்து தமோ ஆனார்கள், இப்போது முற்றிலும்
தமோபிரதானமாக தூய்மையற்றவர் களாக இருக்கின்றனர்.
சத்யுகத்திலிருந்து கலியுகம் கண்டிப்பாக வர வேண்டும். அனைத்து
தர்மங்களும் சதோ-ரஜோ- தமோவில் வரவே வேண்டும். வளர்ச்சியை அடைய
வேண்டும். நீங்களும் மரத்தில் இருக் கிறீர்கள் அல்லவா. (கல்ப
விருட்ச) மரத்தில் பாருங்கள் - கடைசியில் பிரம்மா
நின்றிருக்கிறார், மரத்தின் உச்சியில் பிரம்மாதான் 84 பிறவிகள்
எடுத்துச் சென்று கடைசியில் நின்றிருக்கிறார். நீங்களும் கூட
கீழே பிராமணர்களாக அமர்ந்திருக்கிறீர்கள், பிறகு கடைசியில்
தூய்மையற்ற சூத்திரர்களாக ஆகி யுள்ளீர்கள். பிறகு கீழே
இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும்
சூத்திரர்களாக இருந்தீர்கள், இப்போது பிராமணர்களாக
ஆகியுள்ளீர்கள். இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஆகும். இப்போது மரத்தில் புரிந்துக் கொள்ளக்கூடிய மிக நல்ல
அறிவு மிக்க விசயங்கள் நிறைந்துள்ளது. இப்போது நீங்கள் இராஜ
யோகத்தின் தபஸ் செய்து கொண்டிருக்கிறீர்கள், உங்களுடைய நினைவுச்
சின்னம்தான் நின்று கொண்டுள்ளது. இது சைதன்யமான (உயிரோட்டமிக்க)
தில்வாடா, அது ஜடம். சத்யுகத்தில் இது இருக்கவில்லை. இந்த
சமயத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் தம்முடைய நினைவுச் சின்னத்தைப்
பார்க்கிறீர்கள். நீங்கள் நடைமுறையில் உண்மை யிலும் உண்மையான
தில்வாடா கோவிலில் சைதன்யத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்.
சொர்க்கத் தின் ஸ்தாபனை நடந்து கொண்டி ருக்கிறது. பிறகு
சொர்க்கத்தில் வந்துவிட்டால் இந்த கோவில் முதலான எதுவும்
இருக்காது. இந்த மம்மா பாபா மற்றும் குழந்தைகளாகிய நாம்
அமர்ந்திருக்கிறோம். அதே போல இருக்கும் உங்கள் கோவில் இது.
பெயரே மதுபன் என வைக்கப்பட்டுள்ளது, சைதன்யமான தில்வாடா கோவில்
ஆகும். பிறகு பக்தி மார்க்கம் தொடங்கும் போது இந்த கோவிலை
கட்டுவார்கள். தந்தை உங்களை மிகவும் செல்வந்தர்களாக
ஆக்கியிருந்தார். பிறகு நீங்களே அவருடைய கோவிலைக்
கட்டுகிறீர்கள். சிவனின் கோவில் களை ஒருவர் மட்டும்
கட்டுவதில்லை, அனைவருமே கட்டுகின்றனர் - தம் தகுதிக்கும்
சக்திக்கும் தகுந்தாற்போல.
நாம் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், பின்னர் துவாபரத்தில்
பூஜாரிகள் ஆகி விட்டோம் என நீங்கள் அறிவீர்கள். உங்களை இவ்வளவு
செல்வந்தர்களாக ஆக்கிய சிவபாபாவுக்கு பக்தியில் நீங்கள்தான்
அவருடைய கோவிலைக் கட்டுவீர்கள். இந்த விஷயங்களை இப்போது நீங்கள்
தான் அறிகிறீர்கள். ஆக இப்போது முயற்சி செய்து
ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக ஆக வேண்டும். சத்யுகத்தில்
மஹாராஜாக்கள் என சொல்லப்படுகின்றனர். திரேதாவில் ராஜாக்கள் என
சொல்லப்படுகின்றனர். பிறகு உலகம் தூய்மையை இழக்கும்போது
மஹாராஜாக் களும், ராஜாக்களும் கூட தூய்மையற்றவர்களாக ஆகின்றனர்.
அவர்கள் விகாரமற்ற மஹாராஜாக் களின் கோவில்களைக் கட்டி பூஜை
செய்கின்றனர். முதன் முதலாக சிவனின் கோவிலைக் கட்டுகின்றனர்,
பிறகு தேவதைகளின் கோவிலைக் கட்டுகின்றனர், தாமே கோவிலை கட்டி
பூஜிக்கின்றனர், 84 பிறவிகள் அனுபவிக்கின்றனர் அல்லவா. அரைக்
கல்பத்திற்கு (தன்னுடைய நினைவுச் சின்னமாக) நீங்கள்
பூஜைக்குரியவர்களாகவும், பிறகு அரைக் கல்பம் பூஜாரி களாகவும்
ஆகிறீர்கள். பகவானைக் குறித்து மனிதர்கள் அவரே
பூஜைக்குரியவராகவும், அவரே பூஜாரியாகவும் ஆவதாக கூறுகின்றனர்.
அனைத்தும் அவரே கொடுக்கிறார், அவரே எடுத்தும் கொள்கிறார்.
நல்லது, அவர்தான் கொடுத்தார், பின்னர் எடுத்துக் கொண்டார்
என்றால் பிறகு ஏன் கவலை ஏற்படுகிறது? நீங்களோ டிரஸ்டி ஆகி
விட்டீர்கள். பிறகு அழ வேண்டிய அவசியம் என்ன? தந்தை அமர்ந்து
ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் வரிசைக்
கிரமமாக ஆத்ம அபிமானி ஆகிறீர்கள். சிலரோ தந்தையை நினவு செய்வதே
இல்லை. ஆத்ம உணர்வுள்ளவர்களாக இருப்பதே இல்லை. நீங்கள்
ஆத்மாக்கள், பரமாத்மா உங்களுக்கு கற்பிக்கிறார் எனவே இங்கே
எவ்வளவு புரிய வைக்கப்படுகிறது. ஆத்மாவில்தான் சம்ஸ்காரங் கள்
உள்ளன. ஆத்மாதான் வக்கீல் முதலானவர்களாக ஆகிறது, ஆத்மா
மாஜிஸ்டிரேட் (நீதிபதி) ஆகிறது. நாளை என்ன ஆகப் போகிறீர்கள்?
ஆத்மா தந்தையை நல்ல விதமாக நினைவு செய்து கொண்டே இருந்தது
என்றால் பிறகு அமரலோகத்தில் சென்று பிறவி எடுப்பீர்கள். பிறகு
மரணலோகத்தில் அடுத்த பிறவி எடுக்க மாட்டீர்கள். ஒரு வேளை ஏதாவது
கணக்கு வழக்கு மீதமிருந்திருந்தது என்றால் தண்டனையை அனுபவிக்க
வேண்டியிருக்கும். கர்மங்களின் விளைவை அனுபவித்து முடிக்க
வேண்டும், பிறகு உயர்ந்த பதவி கிடைக்காது. இந்த கர்மங் களின்
ஆழமான விளைவுகள் குறித்து தந்தைதான் அமர்ந்து புரிய வைக்கிறார்.
சத்யுகம் சதோபிரதானமானது என்பதை கூட குழந்தைகள் அறிவார்கள்.
அனைத்து பொருட்களுமே அங்கே சதோபிரதானமாக இருக்கும். கிருஷ்ணர்
பசுக்களை வளர்த்துக் கொண்டிருந்தார் என சொல்கின்றனர். ராஜாக்கள்
பசுக்களை மேய்ப்பார்களா என்ன? இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்காது.
சத்யுகத்தில் பசுக்கள் கூட மிகவும் முதல் தரமாக இருக்கும்,
அவற்றை காமதேனு என சொல்லப்படுகிறது. ஜகதம்பா சரஸ்வதியும் கூட
காமதேனு ஆவார். 21 பிறவிகளுக்கு அனைவரின் மன விருப்பங்களையும்
நிறைவேற்றுகிறார். நீங்களும் கூட காமதேனு ஆவீர்கள். அந்தப்
பெயரையே பிறகு அதிகமாக பால் கொடுக்கும் பசுக்களுக்கு வைத்து
விட்டனர், ராஜாக்களின் வீடுகளில் மிகவும் முதல் தரமான பசுக்கள்
இருக்கும். இங்கேயே ராஜாக்களிடம் நல்ல நல்ல பசுக்கள்
இருக்கும்போது சொர்க்கத்தில் எவ்வளவு அழகாக இருக்கும். அங்கே
துர்நாற்றம் எதுவும் முற்றிலுமாக இருக்காது.
நான் வந்திருக்கிறேன், உங்களை நறுமணம் வீசும் மலர்களாக்கி உடன்
அழைத்துச் செல்வேன் என இப்போது தந்தை குழந்தைகளுக்குச்
சொல்கிறார். பதித பாவனா வாருங்கள் என்றுதான் என்னை
அழைக்கிறார்கள். தூய்மை இல்லாத உலகில் தூய்மையற்ற சரீரத்தில்
வாருங்கள். இவர் தூய்மையை இழந்தவர் அவர் தூய்மையான ஃபரிஸ்தா.
ஒப்பிட்டுக் காட்டுகிறார். நீங்களும் கூட தூய்மையற்றவரிலிருந்து
இப்படி தூய்மையான ஃபரிஸ்தாவாக ஆவீர்கள். சத்யுகத்தின்
தேவதைகளின் மூர்த்திகள் என சொல்கிறோம். ஃபரிஸ்தாக்கள்
சூட்சுமவதன வாசிகள் ஆவர். தந்தை எவ்வளவு சகஜமான படிப்பை
சொல்லிக் கொடுக்கிறார். இங்கே வரும் போது வெளியில் உள்ள எந்த
ஒரு நண்பர்கள், உறவினர்கள், வீடு வாசல், வேலை தொழில் முதலான
நினைவுகளும் வரக்கூடாது. தந்தையின் முன்பாக வந்திருக்கிறீர்கள்
அல்லவா ! இங்கே வந்ததே நினைவின் மூலம் வருமானத்தை
சேமிப்பதற்காக எனும்போது அதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும்.
நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்காக பழைய அனைத்து கணக்கு
வழக்குகளையும் யோக பலத்தின் மூலம் முடிக்க வேண்டும். டிரஸ்டிகள்
ஆகி அனைத்தையும் பராமரிக்க வேண்டும். எந்த விஷயத்தைக்
குறித்தும் கவலைப்படக் கூடாது. ஆத்ம அபிமானி ஆக வேண்டும்.
2. இது வருமானத்தை சேமிக்கக்கூடிய நேரமாகும், இதில் வீடு வாசல்,
வேலை தொழில் முதலான எந்த நினைவும் வரக்கூடாது. ஃபரிஸ்தா
ஆவதற்காக ஒரு தந்தையின் நினைவில் இருக்கக்கூடிய முழுமையிலும்
முழுமையான முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
நினைவின் சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்கள் மூலமாக
வாயுமண்டலத்தை அமைக்கக்கூடிய வெற்றி இரத்தினம் ஆவீர்களாக.
சேவை செய்யக்கூடிய ஆத்மாக்களின் நெற்றியில் வெற்றியின் திலகம்
இடப்பட்டே இருக்கிறதுதான். ஆனால் எந்த இடத்தில் சேவை செய்ய
வேண்டியிருக்கிறதோ அந்த இடத்தில் முன்கூட்டியே ‘ஸர்ச்லைட்’ டின்
வெளிச்சத்தை பரப்ப வேண்டும். நினைவின் ‘ஸர்ச்லைட்’ மூலமாக
எப்பேர்ப்பட்ட வாயுமண்டலம் அமைந்து விடும் என்றால் அநேக
ஆத்மாக்கள் சுலபமாக சமீபத்தில் வந்து விடுவார்கள். பிறகு
குறைந்த நேரத்தில் வெற்றி ஆயிரம் மடங்கு ஏற்பட்டு விடும்.
இதற்காக நான் வெற்றி இரத்தினம் ஆவேன் என்ற திடசங்கல்பம்
செய்யுங்கள். அப்போது ஒவ்வொரு செயலிலும் வெற்றி அடங்கி
இருக்கும்.
சுலோகன்:
எந்த சேவை சுயத்தை அல்லது மற்றவர்களை அமைதியை
இழக்கச் செய்கிறதோ அது உண்மையில் சேவை அல்ல, சுமை ஆகும்.
அவ்யக்த இஷாரா : ஜூவாலா சொரூப ஸ்திதியில் இருந்து கொண்டு,
சக்திசாலி நினைவின் அனுபவம் செய்யுங்கள்
ஜுவாலை ரூபம் ஆக வேண்டும் என்றால் இப்பொழுது வீடு திரும்ப
செல்ல வேண்டும் என்ற இதே ஈடுபாடு எப்பொழுதும் இருக்க
வேண்டும்.செல்ல வேண்டும் என்றால் உபராம் விடுபட்ட நிலை. தனது
நிராகாரி வீடு செல்ல வேண்டும் என்னும் பொழுது அப்படியே நமது
வேடத்தை அமைக்க வேண்டும். எனவே செல்ல வேண்டும் என்றால்
அனைவரையும் திரும்ப கூட்டி செல்ல வேண்டும் - இந்த நினைவு
மூலமாக இயல்பாகவே சர்வ சம்பந்நங்களா, அனைத்து இயற்கையின்
கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டவர்களாக அதாவது சாட்சி ஆவதன்
மூலமாக எளிதாகவே தந்தைக்கு ஸாத்தி துணையாளராக மற்றும் தந்தைக்கு
சமானமாக ஆகி விடுவீர்கள்.