07-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! குழந்தைகளாகிய
உங்களை கும்பிபாக் (மிகக் கொடூர) நரகத்திலிருந்து
விடுவிப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார். இதற்காகத்தான்
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அழைத்தீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள்
மிகப்பெரிய கைவினைஞர் எப்படி? உங்களுடைய கைவினை என்ன?
பதில்:
முழு உலகத்தையும் புதியதாக
மாற்றும் கைவினையை குழந்தைகளாகிய நாம் செய்கிறோம். அதற்காக நாம்
செங்கல் சிமெண்ட் போன்றவைகளை எடுப்பதில்லை. ஆனால் நினைவு
யாத்திரையினால் புதிய உலகத்தை உருவாக்குகின்றோம். நாம் புதிய
உலகத்தை வடித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி
இருக்கின்றது. நாம் தான் இந்த சொர்க்கத் திற்கு அதிபதி
ஆகின்றோம்.
ஓம் சாந்தி.
நீங்கள் அவரவர் ஊரிலிருந்து புறப்படும் போது நாம் சிவபாபாவின்
பள்ளிக் கூடத்திற்குச் செல்கிறோம் என்பது புத்தியில்
இருக்கின்றது என இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகக் தந்தை கூறுகின்றார். சாது சந்நியாசிகளை தரிசிக்கவோ
அல்லது சாஸ்திரங்களைக் கேட்கவோ வரவில்லை. நாம் சிவபாபாவிடம்
செல்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். உலகத்தில் இருக்கும்
மனிதர்கள் சிவன் மேலே இருக்கிறார் என நினைக் கிறார்கள். அவர்கள்
நினைக்கும் போது கண்களைத் திறந்து அமருவதில்லை. கண்களை மூடிக்
கொண்டு தியானத்தில் அமருகிறார்கள். சிவலிங்கத்தைப் பார்த்துக்
கொண்டு இருக்கலாம், சிவனுடைய கோவிலுக்குச் சென்றால் கூட சிவனை
நினைக்கும் போது மேலே பார்ப்பார்கள் அல்லது கோவில் நினைவு வரும்.
பலர் கண்களை மூடிக்கொண்டு அமருகிறார்கள். பார்வை எங்காவது பெயர்
உருவத்தில் சென்று விட்டால் நம்முடைய சாதனை தடைப்பட்டுவிடும்
என நினைக்கின்றார்கள். நாம் சிவபாபாவை நினைவு செய்தோம் என
நீங்கள் அறிகிறீர்கள். சிலர் கிருஷ்ணரை நினைக்கிறார்கள், சிலர்
இராமரை நினைக்கிறார்கள். சிலர் தன்னுடைய குருவை நினைக்கிறார்கள்.
குருவினுடைய சிறிய டாலரை செய்து அணிந்து கொள்கிறார்கள்.
கீதையைக் கூட சிறிய டாலரைப் போல செய்து அணிகிறார்கள். பக்தி
மார்க்கத்தில் அனைவரும் இவ்வாறே செய்கிறார்கள்.
வீட்டிலிருந்தும் நினைக்கிறார்கள். நினைவில் யாத்திரையும்
செல்கிறார்கள். சித்திரங்களை வீட்டில் வைத்தும் பூஜை
செய்கிறார்கள். ஆனால் இது கூட பக்தியின் பழக்கமாகிவிட்டது. பல
பிறவிகள் யாத்திரையாக செல்கிறார்கள். நான்கு தாமங் களுக்கும்
யாத்திரை செல்கிறார்கள். நான்கு தாமங்கள் என ஏன் கூறுகிறார்கள்.
கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு...... நான்கு
இடங்களையும் வலம் வருகின்றார்கள். பக்தி மார்க்கம் ஆரம்பிக்கும்
போது ஒருவரின் பக்தி செய்கிறார்கள். அதற்கு தூய்மையான பக்தி
என்று பெயர். சதோபிரதானமாக இருந்தனர். இச்சமயம் தமோபிரதானமாக
இருக்கிறார்கள். பக்தியும் அசுத்தமாக ஆகிவிட்டது. பல பேரை
நினைவு செய்து கொண்டு இருக்கிறார்கள். தமோபிர தானமான 5
தத்துவங்களினால் ஆன உடலையும் பூஜிக்கிறார் கள். அது
தமோபிரதானமான தத்துவங்களின் பூஜையாகும். ஆனால் இந்த விஷயங்களை
யாரும் புரிந்து கொள்ள முடியாது. இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் புத்தி எங்கேயாவது அலைந்து கொண்டு இருக்கின்றது. இங்கே
குழந்தைகளாகிய நீங்கள் கண்களை மூடிக்கொண்டு சிவபாபாவை
நினைக்கக்கூடாது. பாபா மிக மிக தொலை தேசத்தில் இருக்கக்கூடியவர்
என அறிகிறீர்கள். அவரே வந்து குழந்தை களுக்கு ஸ்ரீமத் தருகிறார்.
ஸ்ரீமத் படி நடந்தால் தான் உயர்ந்த தேவதைகளாக ஆவீர்கள்.
தேவதைகளின் இராஜ்யம் முழுவதும் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.
நீங்கள் இங்கே அமர்ந்து கொண்டு தேவி தேவதைகளின் இராஜ்யத்தை
உருவாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். அது எப்படி உருவாகின்றது
என்று உங்களுக்குத் தெரியாது. இப்பொழுது பாபா நமக்கு தந்தை
யாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் படிக்க வைக்கின்றார்.
பிறகு உடன் அழைத்தும் செல்கிறார். சத்கதியும் அளிக்கிறார் என
அறிகிறீர்கள். குருக்கள் யாருக்கும் சத்கதி அளிக்க முடியாது.
இங்கே இவர் ஒருவரே தந்தை, ஆசிரியர், சத்குரு என உங்களுக்குப்
புரியவைக்கப் பட்டுள்ளது. தந்தை ஆஸ்தி அளிக்கிறார், சத்குரு
பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
இந்த விஷயங்கள் அனைத் தையும் வயதான தாய்மார்கள் புரிந்து கொள்ள
முடியாது. அவர்களைப் பொருத்தவரை முக்கியமான விஷயம் தன்னை ஆத்மா
என உணர்ந்து சிவ தந்தையை நினைக்க வேண்டும். நாம் சிவபாபாவின்
குழந்தைகள், நமக்கு பாபா நமக்கு சொர்க்கத்தின் சொத்தைக்
கொடுப்பார். வயதான தாய்மார்களுக்கு இவ்வாறு கிளி போன்று புரிய
வைக்க வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பாபாவிடமிருந்து சொத்தை
அடைவதற்கு உரிமை இருக்கின்றது. மரணம் எதிரிலேயே
காத்திருக்கின்றது. பழைய உலகம் மீண்டும் நிச்சயமாக புதியதாக
மாற வேண்டும். புதியது பழையதாக வேண்டும். ஒரு வீடு கட்டுவதற்கு
ஒரு சில மாதங்களே ஆகின்றது. பிறகு பழையதாக மாறுவதில் நூறு
வருடங்கள் எடுக்கின்றது.
இந்த பழைய உலகம் இப்போது அழியப்போகின்றது என குழந்தைகளாகிய
நீங்கள் அறிகிறீர்கள். இந்த சண்டை போன்றவைகள் மீண்டும் 5000
வருடங்களுக்குப் பிறகு நடக்கும். இந்த விஷயங்கள் அனைத்தும்
வயதானவர்கள் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்குப் புரிய
வைக்க வேண்டியது டீச்சரின் வேலையாகும். அவர்களைப் பொருத்த வரை
தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினையுங்கள் என்ற ஒரு வார்த்தை
கூட போதும். ஆத்மாக்களாகிய நீங்கள் பரந்தாமத்தில்
வசிக்கக்கூடியவர்கள். பிறகு இங்கு சரீரத்தை ஏற்று நடித்துக்
கொண்டு இருக்கிறீர்கள். ஆத்மா இங்கு தான் சுக துக்கத்தின்
நடிப்பை நடிக்கின்றது. முக்கியான விஷயம் என்னை நினையுங்கள்
மற்றும் சுகதாமத்தை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். பாபாவை
நினைவு செய்வதால் பாவங்கள் விலகிப் போகும். மேலும்
சொர்க்கத்திற்குப் போகலாம். இப்போது யார் எவ்வளவு நினைவு
செய்கிறார் களோ அவ்வளவு பாவங்கள் நீங்கும். வயதானவர்கள் மறந்து
போகின்றார்கள். சத்சங் கங்களில் சென்று கதை கேட்கின்றார்கள்.
அவர்களுக்கு அடிக்கடி பாபாவின் நினைவை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிக் கூடத்தில் கல்வி கற்றுத் தரப்படுகிறது. கதை கூறப்படுவது
இல்லை. பக்திமார்க்கத்தில் நீங்கள் நிறைய கதை களைக்
கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அதனால் எந்த நன்மையும் இல்லை. சீ
சீ உலகத்திலிருந்து போக முடியாது. மனிதர்கள் படைக்கக்கூடிய
தந்தையையும் அவரது படைப்பையும் அறிய வில்லை. தெரியாது தெரியாது
என கூறுகிறார்கள். நீங்கள் கூட முன்பு தெரிந்திருக்கவில்லை.
இப்போது நீங்கள் பக்தி மார்க்கத்தை நன்கு தெரிந்து கொண்டீர்கள்.
பலர் வீட்டில் கூட மூர்த்திகளை வைக்கிறார்கள். அதே பொருள் தான்.
சில கணவன்மார்கள் மனைவியிடம் நீ வீட்டிலேயே சிலையை வைத்து பூஜை
செய் என்கிறார்கள். நீ வெளியே அலைந்து திரிந்து ஏன் செல்கிறாய்?
ஆனால் அவர்களுக்கு பாவனை இருக்கின்றது. இப்பொழுது தீர்த்த
யாத்திரை களுக்குச் செல்வது பக்தி மார்க்கத்தில் ஏமாற்றம்
அடைவது என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பல முறை 84
பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றியுள்ளீர்கள். சத்யுகம் திரேதாவில்
யாரும் யாத்திரை செல்வதில்லை. அங்கே எந்த கோவிலும் கிடையாது.
இந்த யாத்திரைகள் அனைத்தும் பக்திமார்க்கத்தினுடையதாகும். ஞான
மார்க்கத்தில் இது எதுவும் கிடையாது. அவைகளுக்கு பக்தி என்று
பெயர். ஞானத்தை அளிப்பவர் ஒருவரே வேறு யாரும் கிடையாது.
ஞானத்தினால் தான் சத்கதி கிடைக்கிறது. சத்கதி அளிப்பவர் ஒரே ஒரு
தந்தை தான். சிவ பாபாவிற்கு யாரும் ஸ்ரீ ஸ்ரீ என்று
கூறமாட்டார்கள். அவருக்கு எந்த பட்டமும் தேவையில்லை. அவரை
மகிமைப்படுத்துகிறார்கள், அவரை சிவபாபா என்று கூறுகின்றார்கள்.
சிவபாபா நாங்கள் பதீதமாகிவிட்டோம் எங்களை வந்து
தூய்மையாக்குங்கள் என நீங்கள் அழைக்கிறீர்கள். பக்தி
மார்க்கத்தின் புதை குழியில் கழுத்துவரை மாட்டிக் கொண்டு
இருக்கிறீர்கள். யாருக்குமே தெரியவில்லை. அப்போது தான் பாபா
எங்களை வெளியே எடுங்கள் என கூறுகின்றார்கள். பாபாவும்
நாடகத்தின் படி வரவேண்டியிருக்கிறது. இவர்கள் அனைவரையும் புதைக்
குழியிலிருந்து வெளியே எடுக்க கட்டுப்பட்டு இருக்கின்றேன் என
பாபா கூறுகின்றார். இதற்கு கும்பிபாக் (உயிர்வதை செய்பவர்கள்
செல்லும்) நரகம் என்று பெயர். ரௌரவ் (சித்தரவதைக்கு உட்படும்)
நரகம் என்றும் கூறு கின்றார்கள். இதை பாபா தான் புரிய
வைக்கின்றார். அவர்களுக்கு எதுவும் தெரியாது.
நீங்கள் பாபாவை எப்படி அழைக்கிறீர்கள்? திருமணம் போன்றவைகளுக்கு
அழைப்பு விடுப்பார் கள். நீங்கள் ஓ, பதீத பாவனா! பாபா, இந்த
பதீத உலகத்தில் இராவணனின் பழைய உலகத்தில் வாருங்கள் என
அழைக்கிறீர்கள். நாம் கழுத்து வரையிலும் மாட்டி இருக்கிறோம்.
பாபாவைத் தவிர வேறு யாரும் மீட்க முடியாது. தூரதேசத்தில்
வசிக்கக் கூடியவர் பாபா. இது இராவணனுடைய தேசம் என கூறுகிறார்கள்.
அனைவரின் ஆத்மாவும் தமோபிரதானம் ஆகியிருக்கிறது. ஆகவே தான்
வந்து பாவனமாக்குங்கள் என அழைக் கிறார்கள். பதீத பாவன சீதா ராம்
என பாடி கதறுகிறார்கள். அவர்கள் பவித்ரமாக இருக் கிறார்கள்
என்பது கிடையாது. இந்த உலகமே பதீதமாக இருக்கிறது. இராவண
இராஜ்யமாக இருக்கிறது. இதில் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்
கிறீர்கள். பிறகு பாபா எங்களை இந்த கும்பிபாக் நரகத்திலிருந்து
வெளியே எடுங்கள் எனவும் அழைத்தீர்கள். எனவே பாபா
வந்திருக்கிறார். எவ்வளவு உங்களுடைய கீழ்படிந்த வேலைக்காரனாக
இருக்கிறார். நாடகத்தில் அளவற்ற துக்கத்தை குழந்தைகளாகிய
நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நேரம் கடந்து கொண்டே இருக்கிறது.
ஒரு நொடி போன்று இன்னொறு நொடி இருக்காது. இப்போது தந்தை உங்களை
லஷ்மி நாராயணன் போன்று மாற்றுகிறார். மீண்டும் நீங்கள் அரை
கல்பத்திற்கு இராஜ்யம் செய்வீர்கள். நினைவில் கொண்டு வாருங்கள்.
இப்போது நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. மரணம் ஆரம்பித்து
விட்டால் மனிதர்கள் குழப்பம் அடைவார்கள். சிறிது காலத்திலேயே
என்னென்ன நடக்கும். பலர் சப்தத்தை கேட்டு ஹார்ட் ஃபெயில்
ஆகிவிடுவார்கள். எப்படி இறப்பார்கள் என்றால் கேட்காதீர்கள்.
பாருங்கள், எவ்வளவு வயதான தாய்மார்கள் வந்திருக்கிறார்கள்.
பாவம் ஒன்றுமே புரிந்துக் கொள்ள முடியாது. தீர்த்த
யாத்திரைகளுக்கு செல்கிறார்கள் அல்லவா? ஒருவருக் கொருவரைப்
பார்த்து நாமும் செல்லலாம் என தயாராகிறார்கள்.
பக்தி மார்க்கத்தின் தீர்த்த யாத்திரை என்றாலே கீழே இறங்குதல்
தமோபிரதானம் ஆகுதல் என பொருளாகும். உங்களுடையது மிகப்
பெரியதிலும் பெரிய யாத்திரை யாகும். நீங்கள் பதீத
உலகத்திலிருந்து பாவனமான உலகத்திற்குச் செல்கிறீர்கள். இந்த
குழந்தைகளுக்கு சிறிதாவது சிவபாபாவை நினைவு படுத்துங்கள்.
சிவபாபாவின் பெயர் நினை விருக்கிறதா? சிறிதளவாவது கேட்டாலாவது
சொர்க்கத்திற்கு வருவார்கள். இந்த பலன் நிச்சயம் கிடைக்கும்.
மற்றபடி படிப்பினால் தான் பதவி கிடைக்கும். அதில் நிறைய
வித்தியாசம் இருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தது,
குறைந்ததிலும் குறைந்தது. இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது.
பிரதம மந்திரி எங்கே? வேலைக்காரன் எங்கே? இராஜ்யத்தில்
வரிசைக்கிரமம் இருக்கிறது அல்லவா? சொர்க்கத் தில் கூட இராஜ்யம்
இருக்கும். ஆனால் அங்கே பாவ ஆத்மாக்கள், அழுக்கானவர்கள்,
விகாரிகள் இருக்க மாட்டார்கள். அதுவே நிர்விகார உலகம் ஆகும்.
தாங்கள் இந்த லஷ்மி நாராயணன் போல நிச்சயம் மாறுவோம் என நீங்கள்
கூறுகிறீர்கள். நீங்கள் கை உயர்த்துவதைப் பார்த்து
வயதனாவர்களும் கையைத் தூக்குகிறார்கள் எதையும் புரிந்துக்
கொள்ளவில்லை. இருப்பினும் பாபாவிடம் வந்திருக் கிறார்கள்
என்றால் சொர்க்கத்திற்குப் போவார்கள். ஆனால் அனைவரும் இவ்வாறு
மாற மாட்டார்கள். பிரஜைகளாகவும் மாறுவார்கள். நான் ஏழைப்
பங்காளன் என பாபா கூறுகின்றார். எனவே பாபா ஏழை குழந்தைகளைப்
பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். எவ்வளவு பெரிய பணக்காரர்களாக
கோடீஸ்வரனாக இருந்தாலும் அவர்களை விட இவர்கள் 21 பிறவிகளுக்கு
உயர்ந்த பதவி அடைவார்கள். இதுவும் நல்லதே. வயதான பெண்கள்
வருவதைப் பார்த்தால் பாபாவிற்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
கிருஷ்ணபுரிக்கு போவார்கள் அல்லவா? இது இராவணபுரி ஆகும். யார்
நன்ôறாகப் படிக்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணரை மடியில் வைத்து
தாலாட்டுவார்கள். பிரஜைகள் உள்ளே வர முடியாது. அவர்கள் எப்போதா
வது தரிசிப்பார்கள். போப் போன்றோர் ஜன்னல் வழியாக காட்சி
கொடுக்கும் போது லட்சக் கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து தரிசனம்
செய்வதற்காகக் கூடுகிறார்கள். ஆனால் அவரை நாம் என்ன தரிசிப்பது!
எப்போதும் தூய்மையாக இருப்பவர் ஒரே ஒரு தந்தையே! அவரே வந்து
தூய்மையாக மாற்றுகிறார். முழு உலகத்தையும் சதோபிரதானமாக
மாற்றுகிறார். அங்கே இந்த 5 பூதங்கள் இருக்காது. 5
தத்துவங்களும் சதோபிரதனாமாகி விடும். உங்களுக்கு அடிமையாகி
விடுகிறது. ஒரு போதும் இவ்வாறு நஷ்டத்தை ஏற்படுத்தும் அளவிற்கு
வெயில் இருக்காது. 5 தத்துவங்களும் முறைப்படி இயங்குகிறது.
அகால மரணம் கிடையாது. இப்போது நீங்கள் சொர்க்கத்திற்குச்
செல்கிறீர்கள் என்றால் நரகத்திலிருந்து புத்தியோகத்தை எடுக்க
வேண்டும். புதிய கட்டிடம் கட்டுகிறார்கள் என்றால் புத்தி பழைய
திலிருந்து விலகிப் போகிறது. புதியதன் பக்கம் புத்தி செல்கிறது
அல்லவா? அவ்வாறே இது எல்லையற்ற விஷயம் ஆகும். புது உலகம்
ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது. பழைய உலகம் அழிந்து
கொண்டிருக்கிறது. நீங்கள் புது உலகம் சொர்க்கத்தை உருவாக்கக்
கூடியவர்கள். நீங்கள் மிகவும் நல்ல கைவினைஞர்கள். உங்களுக்காக
சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய
நல்ல கைவினைஞர்கள். நினைவு யாத்திரையினால் புது உலகத்தை
உருவாக்குகிறீர்கள். நீங்கள் குப்த (மறைவாக) வேஷத்தில்
உங்களுடைய சொர்க்கத்தை உருவாக்குகிறீர்கள். நாம் இந்த பழைய உடலை
விட்டு விட்டு சொர்க்கத்தில் சென்று வசிப்போம் என அறிகிறீர்கள்.
அப்படி என்றால் எல்லையற்ற தந்தையை மறக்கக் கூடாது. இப்போது
நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்காகப் படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். தங்களின் இராஜ்யத்தை உருவாக்குவதற்காக
முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இராவணனின் இராஜ்யம்
அழியப் போகிறது. எனவே உள்ளுக்குள் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட
வேண்டும். நாம் இந்த சொர்க்கத்தை பல முறை உருவாக்கி இருக்கிறோம்.
இராஜ்யத்தை அடைந்திருக்கிறோம். பிறகு இழந்தும் இருக்கிறோம்.
இதையும் நினைவு செய்தால் மிகவும் நல்லது. நாம் சொர்க்கத்திற்கு
அதிபதியாக இருந்தோம். பாபா நம்மை இவ்வாறு மாற்றினார். பாபாவை
நினைவு செய்தால் உங்களுடைய பாவங்கள் விலகிப் போகும். எவ்வளவு
எளிய முறையில் நீங்கள் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்துக்
கொண்டிருக்கிறீர்கள். பழைய உலகத்தை அழிப்பதற்காக எவ்வளவு
பொருள்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இயற்கையின் ஆபத்துக்கள்,
ஏவுகணைகள் போன்றவைகள் பழைய உலகத்தை அழிக்கும். இப்போது
உங்களுக்கு சிரேஷ்டமான வழியைக் காண்பிப் பதற்காகவும்
சிரேஷ்டமான சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்காகவும் பாபா வந்திருக்
கிறார். பலமுறை நீங்கள் ஸ்தாபனை செய்திருக்கிறீர்கள் என்பது
புத்தியில் நினைவிருக்க வேண்டும். இராஜ்யத்தை அடைந்துள்ளீர்கள்.
இழந்தும் உள்ளீர்கள். இது புத்தியில் இருந்துக் கொண்டே இருக்க
வேண்டும். பிறருக்கும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். உலகியல்
விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். தந்தையை நினையுங்கள்.
சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள். இங்கே குழந்தைகள் நன்கு கேட்டு
பிறகு மற்றவருக்குக் கூற வேண்டும். பாபா என்ன கூறினார் என
நினைவு செய்ய வேண்டும். சிவபாபா மற்றும் சொத்தை நிச்சயமாக
நினைக்க வேண்டும். பாபா உள்ளங்கையில் சொர்க்கத்தை எடுத்து
வந்துள்ளார். தூய்மையாக மாற வேண்டும். தூய்மையாக மாற வில்லை
என்றால் தண்டனை அடைய வேண்டி யிருக்கும். பதவியும் குறைந்து
போகும். சொர்க்கத்தில் உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்றால்,
நன்கு தாரணை செய்யுங்கள். பாபா மிகவும் எளிய வழியைக்
காண்பிக்கிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பாபா சொல்வதை நன்கு கேட்டு பிறகு கூற வேண்டும்.
உலகீய விஷயங்களில் தங்களின் நேரத்தை இழக்கக் கூடாது
2. பாபாவின் நினைவில் கண்களை மூடிக் கொண்டு அமர வேண்டாம்.
ஸ்ரீ கிருஷ்ணரின் இராஜ்யத்தில் வருவதற்காக படிப்பை நன்கு
படிக்க வேண்டும்.
வரதானம்:
மனம், புத்தியை சச்சரவுகளி-ருந்து விலக்கி தந்தையின் சந்திப்பு
விழாவினை கொண்டாடுபவராக தொல்லையில்லாதவராகுக
சில குழந்தைகள் இந்த தொல்லையெல்லாம் நீங்கிய பிறகு எனது மனோ
நிலை மற்றும் சேவை யாவும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர்.
ஆனால் தொல்லைகள் யாவும் மலை போன்றது. மலை ஒரு போதும் நகராது.
ஆகவே தொல்லையி-ருந்து தனது மனம், புத்தியை விலக்கிக்
கொள்ளுங்கள். பறவையாகி மலையை கடநது மேல் நோக்கி பறந்து
செல்லுங்கள். அப்போதே மலையும் உங்களுககு சுலபமாக அனுபவம் ஆகும்.
தொல்லைமிகு உலகில் தொல்லைகள் வந்தே தீரும். நீங்கள்
விலகியிருந்தால் சந்திப்பின் விழாவினை கொண்டாடுவீர்கள்.
சுலோகன்:
இந்த மாபெரும் நாடக மேடையில் கதா நாயகனாக நடிப்பவரே கதா நாயகன்
ஆவார்.