07-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! வித விதமான
யுக்திகளை முன் வைத்து நினைவு யாத்திரையில் இருங்கள், இந்த
பழைய உலகத்தை மறந்து தங்களுடைய இனிமையான வீடு மற்றும் புதிய
உலகத்தை நினைவு செய்யுங்கள்
கேள்வி:
எந்தவொரு செயல் அல்லது முயற்சி
இப்போது தான் நடக்கிறது, அது முழு கல்பத் திலும் நடப்பதில்லை?
பதில்:
நினைவு யாத்திரையில் இருந்து
ஆத்மாவை தூய்மையாக்கும் முயற்சி, முழு உலகத்தை யும் தூய்மையற்ற
நிலையிலிருந்து தூய்மையாக்கும் செயல் முழு கல்பத்திலும் இந்த
சங்கம யுகத்தில் மட்டுமே நடக்கிறது. இந்த செயல் ஒவ்வொரு
கல்பத்திலும் திரும்பவும் நடக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள்
இந்த ஆரம்பமும் முடிவுமற்ற நாடகத்தின் அதிசயமான இரகசியத்தை
புரிந்து கொள்கிறீர்கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு
புரியவைக்கின்றார் ஆகையினால் ஆன்மீகக் குழந்தைகள் ஆத்ம-அபிமானி
அல்லது ஆன்மீக நிலையில் நிச்சய புத்தியுடைவர்களாக ஆகி அமர
வேண்டும் அல்லது கேட்க வேண்டும். ஆத்மா இந்த
கர்மேந்திரியங்களின் மூலம் கேட்கிறது என்பதை உறுதியாக நினைவு
செய்து கொண்டே இருங்கள் என்று பாபா புரிய வைத் திருக்கின்றார்.
சத்கதி மற்றும் துர்கதியினுடைய இந்த சக்கரம் ஒவ்வொருவருடைய
புத்தியில் இருக்க வேண்டும், இதில் ஞானம் மற்றும் பக்தி
அனைத்தும் வந்து விடுகிறது. ஞானம் மற்றும் பக்தி, சுகம் மற்றும்
துக்கம், பகல் மற்றும் இரவினுடைய விளையாட்டு எப்படி நடக்கிறது
என்பது நடக்கும்போதும் சுற்றும் போதும் புத்தியில் இருக்க
வேண்டும். நாம் 84 பிறவிகளின் நடிப்பை நடிக்கின்றோம். தந்தைக்கு
நினைவிருக்கிறது எனும்போது குழந்தைகளையும் நினைவில் இருக்க
முயற்சி செய்ய வைக்கின்றார், இதில் உங்களுடைய பாவ கர்மங்களும்
வினாசம் ஆகின்றது மற்றும் நீங்கள் இராஜ்யத்தையும் அடைகிறீர்கள்.
இந்த பழைய உலகம் இப்போது அழியப் போகிறது என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். பழைய கட்டடம் இருக்கிறது பிறகு புதிய
கட்டடம் கட்டுகிறார்கள் என்றால் இப்போது நாம் புதிய
கட்டடத்திற்குச் செல்வோம் என்ற நிச்சயம் உள்ளுக்குள் இருக்கிறது
அல்லவா. பிறகு புதிய கட்டடம் கட்டுவதற்கு ஒன்று அல்லது இரண்டு
வருடங்கள் பிடிக்கிறது. புது தில்லியில் அரசாங்க கட்டடங்கள்
போன்றவைகள் உருவாகின்றன என்றால் கண்டிப்பாக நாம் மாறி புது
தில்லிக்கு செல்வோம் என்று அரசு சொல்லும் அல்லவா. இந்த முழு
எல்லையற்ற உலகமும் பழையது என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துள்ளீர் கள். இப்போது புதிய உலகத்திற்குச் செல்ல
வேண்டும். பாபா யுக்திகளை கூறுகின்றார் – இப்படிப் பட்ட
யுக்திகளின் மூலம் புத்தியை நினைவு யாத்திரையில் ஈடுபடுத்த
வேண்டும். எந்த வீட்டிற்குச் செல்வதற்காக மனிதர்கள் வழி
தெரியாமல் அலைந்து கொண்டிருக் கிறார்களோ, அந்த வீட்டிற்கு
இப்போது நாம் செல்ல வேண்டும் ஆகையினால் இனிமையான வீட்டை நினைவு
செய்ய வேண்டும். இந்த துக்கதாமம் இப்போது அழிய வேண்டும்
என்பதும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இங்கே இருந்து கொண்டிருக்கலாம்
ஆனால் இந்த பழைய உலகம் பிடிக்கவில்லை. நாம் இப்போது புதிய
உலகத்திற்குச் செல்ல வேண்டும். காண்பதற்கு சித்திரங்கள் எதுவும்
இல்லாமலும் போகலாம் ஆனாலும் கூட இப்போது பழைய உலகத்தினுடைய
இறுதி, இப்போது நாம் புதிய உலகத்திற்கு செல்வோம் என்பதை
புரிந்து கொள்கிறீர்கள். பக்திமார்க்கத்தின் சித்திரங்கள்
எவ்வளவு அதிகமாக இருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது
உங்களுடையது மிகவும் குறைவாகும். இவை உங்களுடைய ஞான
மார்க்கத்தின் சித்திரங்களாகும் மற்றும் அவை அனைத்தும்
பக்திமார்க்கத்தின் சித்திரங்களாகும். பக்தி முழுவதும்
சித்திரங்களை வைத்தே நடக்கிறது. உங்களுடைய சித்திரங்கள்
உண்மையானவை களாகும், ஆகையினால் தவறானது என்ன, சரியானது என்ன
என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். பாபாவை ஞானக்கடல் என்று
சொல்லப்படுகிறது. உங்களுக்கு இந்த ஞானம் இருக்கிறது. முழு
கல்பத்திலும் நாம் எத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறோம், இந்த
சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.
நீங்கள் எப்போதும் பாபாவினுடைய நினைவு மற்றும் இந்த ஞானத்தில்
இருக்க வேண்டும். பாபா உங்களுக்கு படைப்பவர் மற்றும்
படைப்பினுடைய முழு ஞானத் தையும் கொடுக்கின்றார். எனவே
பாபாவினுடைய நினைவும் இருக்கிறது. நான் உங்களுடைய தந்தை,
டீச்சர், சத்குருவாக இருக்கின்றேன் என்று பாபா புரிய
வைத்திருக்கின்றார். நீங்கள் இதை மட்டும் புரிய வையுங்கள் -
நீங்கள் என்னை தூய்மையற்றவர் களை தூய்மை யாக்குபவர்,
விடுவிப்பவர், வழிகாட்டி என்று சொல்கிறீர்கள் அல்லவா, எங்கே
செல்வதற்கான வழிகாட்டி? என்று பாபா கேட்கின்றார். சாந்திதாமம்,
முக்திதாமம் செல்வதற்கான வழிகாட்டி ஆவார். பாபா அங்கே (முக்தி
தாமம்) வரை அழைத்துச் சென்று விட்டு விடுவார். குழந்தைகளுக்கு
படிப்பித்து, கற்றுக் கொடுத்து, மலர்களாக ஆக்கி வீட்டிற்கு
அழைத்துச் சென்று விட்டு விடுவார். பாபா வைத்தவிர வேறு யாரும்
அழைத்துச் செல்ல முடியாது. யார் எவ்வளவு தான் தத்துவ ஞானியாக
இருந்தாலும் அல்லது பிரம்ம ஞானியாக இருந்தாலும் அழைத்துச்
செல்ல முடியாது. நாம் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுவோம் என்று
அவர்கள் நினைக்கிறார்கள். சாந்திதாமம் நம்முடைய வீடு என்பது
உங்களுடைய புத்தியில் இருக்கிறது. அங்கே சென்று பிறகு புதிய
உலகத்தில் முதல்-முதலில் வருவோம். அவர்கள் அனைவரும் பிறகு
வரக்கூடியவர்களாவர். அனைத்து தர்மங்களும் எப்படி
வரிசைக்கிரமமாக வருகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர் கள்.
சத்யுகம்-திரேதாவில் யாருடைய இராஜ்யம் இருக்கிறது. அவர்களுடைய
தர்ம சாஸ்திரம் என்ன. சூரிய வம்சம் - சந்திரவம்சத்திற்கு ஒரே
சாஸ்திரம் தான் இருக்கிறது. ஆனால் அந்த கீதை ஒன்றும் உண்மையானது
அல்ல ஏனென்றால் உங்களுக்கு கிடைக்கின்ற ஞான மானது இங்கேயே
முடிந்து விடுகிறது. அங்கே எந்த சாஸ்திரமும் இல்லை. துவாபர
யுகத்திலிருந்து எந்த தர்மங்கள் வருகின்றனவோ அவற்றின்
சாஸ்திரங்கள் இருக்கின்றன. இருந்து கொண்டும் வருகின்றது.
இப்போது மீண்டும் ஒரு தர்மத்தின் ஸ்தாபனை நடக்கிறது மற்றவை
அனைத்தும் அழிந்து விடும். ஒரு இராஜ்யம், ஒரு தர்மம், ஒரு மொழி,
ஒரு வழி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அது ஒருவரின் மூலம் தான் ஸ்தாபனை ஆக முடியும். குழந்தைகளாகிய
உங்களுடைய புத்தியில் சத்யுகத்திலிருந்து கலியுக கடைசி
வரையுமான முழு ஞானமும் இருக்கிறது. இப்போது தூய்மையாவதற்காக
முயற்சி செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
தூய்மையற்றவர்களாக ஆவதற்கு உங்களுக்கு அரைக்கல்பம் ஆகியது.
உண்மையில் சொல்லப் போனால் முழு கல்பம் என்றே சொல்லலாம், இந்த
நினைவு யாத்திரையை நீங்கள் இப்போது தான் கற்றுக் கொள்கிறீர்கள்.
இது அங்கே இல்லை. தேவதைகள் தூய்மையற்ற நிலையிலிருந்து
தூய்மையாவதற்கு முயற்சி செய்வதில்லை. அவர்கள் முதலில் இராஜயோகம்
கற்றுக் கொண்டு இங்கிருந்து தூய்மையாக ஆகி செல்கிறார்கள். அதனை
சுகதாமம் என்று சொல்லப்படுகிறது. முழு கல்பத்திலும் இப்போது
மட்டுமே நாம் நினைவு யாத்திரையின் முயற்சி செய்கிறோம் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு தூய்மையற்ற உலகத்தை
தூய்மையாக்குவதற்காக இதே முயற்சி அல்லது நடிப்பு தான்
கல்பத்திற்கு பிறகு திரும்பவும் நடக்கும். கண்டிப்பாக
சக்கரத்தைச் சுற்றுவோம் அல்லவா. இது நாடகம், ஆத்மாக்கள்
அனைத்தும் நடிகர்கள் அவற்றில் அழிவற்ற நடிப்பு நிறைந்துள்ளது
என்பது போன்ற விசயங்கள் உங்களுடைய புத்தியில் இருக்கிறது.
எப்படி அந்த நாடகம் நடக்கிறதோ, அதுபோலாகும். ஆனால் அந்த ஃபிலிம்
தேய்ந்து பழையதாகி விடுகிறது. இது அழிவற்றதாகும். இது கூட
அதிசயமாக இருக்கிறது. எவ்வளவு சிறிய ஆத்மாவில் முழு நடிப்பும்
நிறைந்துள்ளது. பாபா உங்களுக்கு எவ்வளவு ஆழமான விசயங்களைப்
புரிய வைக்கின்றார். இப்போது யாராவது கேட்கிறார்கள் என்றால்
இவர்கள் மிகவும் அதிசயமான விசயங்களைப் புரிய வைக்கிறார்கள்
என்று சொல்கிறார்கள். ஆத்மா என்றால் என்ன, என்பதை இப்போது
புரிந்திருக்கிறோம். சரீரத்தை அனைவரும் புரிந்துக்
கொள்கிறார்கள். டாக்டர்கள் இதயத்தை கூட வெளியில் எடுத்து மாற்றி
விடுகிறார்கள். ஆனால் ஆத்மாவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
ஆத்மா தூய்மையற்ற நிலையிலிருந்து எப்படி தூய்மையாகிறது என்பதை
யாரும் தெரிந்திருக்கவில்லை. தூய்மையற்ற ஆத்மா, தூய்மையான ஆத்மா,
மகான் ஆத்மா என்று சொல்கிறார்கள் அல்லவா. ஹே ! தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவரே வாருங்கள் வந்து என்னை தூய்மை யாக்குங்கள்
என்று அழைக்கிறார்கள். ஆனால் ஆத்மா எப்படி தூய்மையாகும், அதற்கு
அழிவற்ற டாக்டர் வேண்டும். யார் மறுபிறவி அற்றவராக இருக்கிறாரோ
அவரை ஆத்மா அழைக்கிறது. ஆத்மாவை தூய்மை யாக்குவதற்கான மருந்து
அவரிடம் தான் இருக்கிறது. பகவான் படிப்பிக்கின்றார்,
கண்டிப்பாக உங்களை பகவான்-பகவதியாக ஆக்குவார் என்று
குழந்தைகளாகிய உங்களுக்கு குஷியில் மெய் சிலிர்த்து விட
வேண்டும். பக்தி மார்க்கத்தில் இந்த லஷ்மி- நாராயணனை
பகவான்-பகவதி என்று தான் சொல்கிறார்கள். எனவே எப்படி
ராஜா-ராணியோ அப்படி தான் பிரஜை கள் இருப்பார்கள் அல்லவா.
தனக்குச் சமமாக தூய்மையாகவும் ஆக்கு கின்றார். ஞானக்கடலாகவும்
ஆக்குகின்றார் பிறகு தன்னை விடவும் அதிகமாக, உலகத்திற்கு
எஜமானர்களாக மாற்றுகின்றார். தூய்மையான மற்றும் தூய்மையற்ற
முழுமையான நடிப்பை நீங்கள் நடிக்க வேண்டியிருக்கிறது. மீண்டும்
ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய வந்திருக்கின்றார்
என்று நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அதைத் தான் தர்மம் மறைந்து
விட்டது என்று சொல்கிறார்கள். இதனை ஆலமரத்தோடு
ஒப்பிடப்பட்டுள்ளது. நிறைய கிளைகள் வருகின்றன, தண்டு இல்லை.
இங்கே கூட எத்தனை தர்மங்களின் கிளைகள் வந்துள்ளன, அஸ்திவாரமான
தேவதா தர்மம் இல்லை. மறைந்திருக்கிறது. அந்த தர்மம் இருக்கிறது
ஆனால் தர்மத்தின் பெயரை மாற்றி விட்டார் கள் என்று பாபா
கூறுகின்றார். தூய்மையாக இல்லாத காரணத்தால் உங்களை தேவதைகள்
என்று சொல்ல முடியாது. இல்லாமல் இருந்தால் தான் பாபா வந்து
படைப்பை படைக்க முடியும். நாம் தூய்மையான தேவதைகளாக இருந்தோம்,
இப்போது தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளோம், என்று இப்போது நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள். ஒவ்வொரு பொருளும் இப்படி ஆகிறது.
குழந்தைகளாகிய நீங்கள் இதை மறக்கக் கூடாது. முதலில் முக்கிய
குறிக்கோள் தந்தையை நினைவு செய்வதாகும், இதன்மூலம் தான்
தூய்மையாக வேண்டும். எங்களை தூய்மை யாக்குங்கள் என்று தான்
அனைவரும் சொல்கிறார்கள். எங்களை ராஜா-ராணி ஆக்குங்கள் என்று
சொல்ல மாட்டார்கள். எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த
பெருமிதம் இருக்க வேண்டும். நாம் பகவானுடைய குழந்தைகள்,
கண்டிப்பாக நமக்கு ஆஸ்தி கிடைக்க வேண்டும் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். கல்பம்-கல்பமாக இந்த நடிப்பை
நடித்துள்ளீர்கள். மரம் வளர்ந்து கொண்டே தான் செல்லும். இது
சத்கதிக்கான பொருள் என்று பாபா சித்திரங்களை வைத்து கூட புரிய
வைத்திருக்கிறார். நீங்கள் வாயின் மூலமாக புரிய வைக்கின்றீர்கள்,
படங்களை வைத்தும் புரிய வைக் கின்றீர்கள். உங்களுடைய இந்த
சித்திரங்களில் சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் இரகசியம்
வந்து விடுகிறது. யார் சேவை செய்யக்கூடிய குழந்தைகளோ, அவர்கள்
தங்களுக்குச் சமமாக ஆக்கிக் கொண்டே செல்கிறார்கள். படித்து
படிப்பிக்க முயற்சி செய்ய வேண்டும். எந்தளவிற்கு அதிகம்
படிக்கிறார்களோ அந்தளவிற்கு உயர்ந்த பதவியை அடைவார்கள். நான்
முயற்சி என்னவோ செய்ய வைக்கின்றேன், ஆனால் அதிர்ஷ்டமும் இருக்க
வேண்டும் அல்லவா என்று பாபா கூறுகின்றார். ஒவ்வொருவரும்
நாடகத்தின்படி முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
நாடகத்தின் இரகசியத்தைக் கூட பாபா புரிய வைத்திருக்கிறார். பாபா,
தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார். கூடவே
அழைத்துச் செல்லக் கூடிய உண்மையிலும் உண்மையான சத்குருவாகவும்
இருக்கின்றார். அந்த தந்தை அழிவற்ற மூர்த்தி ஆவார். இந்த
புருவமத்தி ஆத்மாவின் அழிவற்ற சிம்மாசனம் அல்லவா, அதன்மூலம்
இந்த நடிப்பை நடிக்கிறது. எனவே தந்தை கூட நடிப்பை நடிக்க,
சத்கதி அடைய வைக்க சிம்மாசனம் வேண்டும் அல்லவா. நான் சாதாரண
உடலில் தான் வர வேண்டியிருக்கிறது என்று பாபா கூறுகின்றார்.
பகட்டான அலங்காரம் எதையும் வைத்துக் கொள்ள முடியாது. அந்த
குருக்களின் சீடர்கள் குருவிற்காக தங்க சிம்மாசனம், மாளிகை
போன்றவற்றை உருவாக்கு கிறார்கள். நீங்கள் என்ன உருவாக்குவீர்கள்?
நீங்கள் குழந்தை களாகவும் இருக்கின்றீர்கள், மாணவர் களாகவும்
இருக்கின்றீர்கள். எனவே நீங்கள் அவருக்காக என்ன செய்வீர்கள்?
என்ன கட்டுவீர்கள்? இவர் சாதாரணமானவராக இருக்கின்றார் அல்லவா.
விலைமாதர்களுக்கும் சேவை செய்யுங்கள் என்று குழந்தைகளுக்கு
சொல்லிக் கொண்டே இருக்கின்றார். ஏழைகளைக் கூட கடைத்தேற்ற
வேண்டும். குழந்தைகள் முயற்சியும் செய்கிறார் கள், பனாரசிற்கும்
சென்றார்கள். நீங்கள் அவர்களை விழிக்கச் செய்தீர்கள் என்றால்,
பிரம்மாகுமார-குமாரிகள் அதிசயம் செய்பவர்கள் என்று சொல்வார்கள்
- விலைமாதர்களுக்கும் கூட இந்த ஞானத்தைக் கொடுக்க வேண்டும்.
இப்போது நீங்கள் இந்த தொழிலை விட்டு-விட்டு சிவாலயத் திற்கு (சொர்க்கத்திற்கு)
எஜமானர்களாக ஆகுங்கள் என்று அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
இந்த ஞானத்தை கற்றுக் கொண்டு பிறகு கற்றுக் கொடுங்கள்.
விலைமாதர்கள் கூட பிறகு மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க
முடியும். கற்றுக் கொண்டு புத்திசாலிகள் ஆகி விட்டார்கள்
என்றால் பிறகு உங்களுடைய அதிகாரி களுக்குக் கூட புரிய
வைப்பார்கள். மண்டபத்தில் சித்திரங்கள் போன்றவற்றை வைத்து
அமர்ந்து கொண்டு புரிய வைத்தீர்கள் என்றால் ஆஹா விலைமாதர்களை
சிவாலய வாசிகளாக ஆக்குவதற்காக இந்த பிரம்மாகுமார-குமாரிகள்
பொறுப்பாகியுள்ளார்கள் என்று அனைவரும் சொல்வார்கள்.
குழந்தைகளுக்கு சேவைக்கான சிந்தனை இருக்க வேண்டும். உங்கள் மீது
மிகுந்த பொறுப்பு இருக்கிறது. அகலிகைகள், கூனிகள்,
காட்டுவாசிகள், விலைமாதர்கள் போன்ற இவர்கள் அனைவரையும்
கடைத்தேற்ற வேண்டும். சாதுக்களையும் கடைத்தேற்றினார் என்றும்
பாடப் பட்டுள்ளது. சாதுக்களை கடைத்தேற்றுவது கடைசியில் நடக்கும்
என்று புரிந்து கொள்கிறீர்கள். இப்போது அவர்கள்
உங்களுடையவர்களாக ஆகி விட்டால் முழு பக்திமார்க்கமே முடிந்து
விடும். புரட்சி ஏற்பட்டு விடும். சன்னியாசிகளே நாங்கள் தோற்று
விட்டோம் என்று தங்களுடைய ஆசிரமத்தை விட்டு விடுவார்கள். இது
கடைசி யில் நடக்கும். இப்படி-இப்படியெல்லாம் செய்யுங்கள் என்று
பாபா டைரக்ஷன் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். பாபா எங்கேயும்
வெளியில் செல்ல முடியாது. குழந்தைகளிடத்தில் சென்று கற்றுக்
கொள்ளுங்கள் என்று சொல்வார். புரிய வைப்பதற்கான யுக்திகளை
குழந்தை களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றார். மனிதர்களுடைய
வாயிலிருந்து ஆஹா-ஆஹா என்று வரும் அளவிற்கு காரியங்களைச் செய்து
காட்டுங்கள். சக்திகளிடத்தில் ஞான அம்பை பகவான் நிறைத்தார்
என்று பாடப்பட்டுள்ளது. இது ஞான அம்பாகும். இந்த ஞான அம்பு
உங்களை இந்த உலகத்திலிருந்து அந்த உலகத்திற்குக் கொண்டு
செல்கிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர் கள். எனவே
குழந்தைகளாகிய நீங்கள் பரந்த புத்தியுடையவர்களாக ஆக வேண்டும்.
ஒரு இடத்திலாவது உங்களுடைய பெயர் புகழடைந்தது என்றால்,
அரசாங்கத் திற்கு தெரிந்தது என்றால் பிறகு தாக்கம் வெளிப்படும்.
ஒரு இடத்திலிருந்து 5-7 அதிகாரிகள் வந்தார்கள் என்றால் அவர்கள்
நாளேடுகளில் போட ஆரம்பித்து விடுவார்கள். இந்த
பிரம்மாகுமார-குமாரிகள் விலைமாதர்களைக் கூட அந்த தொழிலிலிருந்து
விடுவித்து சொர்க்கத்திற்கு எஜமானர்களாக்குகிறார்கள். ஆஹா- ஆஹா
என்று நாளேடுகளில் வரும். செல்வம் போன்ற அனைத்தையும் அவர்கள்
கொண்டு வருவார்கள். நீங்கள் செல்வத்தை என்ன செய்வீர்கள்!
நீங்கள் பெரிய-பெரிய கிளை நிலையங் களை திறப்பீர்கள். பணத்தின்
மூலம் படங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டியிருக்கிறது.
மனிதர்கள் பார்த்துவிட்டு அதிசயிப்பார்கள். முதல்-முதலில்
உங்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
பாராளுமன்றத்திற்கு கூட உங்களுடைய சித்திரங்களை கொண்டு
செல்வார்கள். இதனை அதிகம் விரும்புவார்கள். மனிதர்களை எவ்வாறு
தேவதைகளாக்குவது என்று மனதில் விருப்பம் இருக்க வேண்டும். யார்
கல்பத்திற்கு முன் தேவதைகளாகி இருந்தார் களோ அவர்கள் தான்
மீண்டும் ஆவார்கள் என்பதையும் தெரிந்துள்ளீர்கள். இந்த செல்வம்
போன்ற அனைத்தையும் விட்டு விடுவது என்பது கடினமாகும். பாபா
கூறினார் (பிரம்மா பாபா)- என்னுடைய வீடு-வாசல்
நண்பர்கள்-உறவினர்கள் போன்ற எதுவுமே இல்லை, எனக்கு சிவபாபா
மற்றும் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை,
எனக்கு வேறு என்ன நினைவு வரும். அனைத்தையும் மாற்றி விட்டார்.
பிறகு புத்தி எங்கே செல்லும். பாபாவிற்கு ரதத்தை
கொடுத்திருக்கிறார். எப்படி நீங்கள் படிக்கிறீர்களோ, அப்படி
நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். ரதத்தை மட்டும் பாபாவிற்கு
கடனாக கொடுத்திருக்கிறேன்.
சூரிய வம்சத்தில் முதல்-முதலில் வருவதற்காக நாம் முயற்சி செய்து
கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இது
நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கான கதையாகும். ஆத்மாவிற்கு
மூன்றாவது கண் கிடைக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் படித்து விட்டு
ஞானத்தை கேட்டு தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம். மீண்டும்
ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக ஆவோம். நான் உங்களை இரட்டை
கிரீடதாரிகளாக மாற்றுகின்றேன் என்று சிவபாபா கூறு கின்றார்.
நாடகத்தின்படி கல்பத்திற்கு முன் போல உங்களுடைய புத்தி இப்போது
எவ்வளவு நன்றாக திறந்து விட்டது, இப்போது நினைவு யாத்திரையில்
இருக்க வேண்டும். சிருஷ்டி சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும்.
பழைய உலகத்தை புத்தியின் மூலம் மறக்க வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இப்போது நமக்காக புதிய உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது,
இந்த துக்கமான பழைய உலகம் அழிந்தே விட்டது என்பது புத்தியில்
இருக்க வேண்டும். இந்த உலகத்தின் மீது முற்றிலுமாக விருப்பம்
வரக் கூடாது.
2) எப்படி பிரம்மா பாபா தன்னுடைய அனைத்தையும் (பண்டமாற்ற
செய்வது) மாற்றி விட்டதால் புத்தி எங்கேயும் செல்ல வில்லை.
அதுபோல் தந்தையைப் பின்பற்ற வேண்டும். நாம் மனிதர்களை
தேவதைகளாக்கும் சேவை செய்ய வேண்டும், வேசியாலயத்தை சிவாலயமாக
ஆக்க வேண்டும் என்ற விருப்பமே மனதில் இருக்க வேண்டும்.
வரதானம்:
தேக அபிமானத்தின் ராயல் ரூபத்தை கூட முடித்து விடக்கூடிய சாட்சி
மற்றும் பார்வையாளர் ஆகுக.
மற்றவர்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது,
துண்டித்து விடுவது - இது கூட தேக அபிமானத்தின் ராயல் ரூபம்
ஆகும். இது தனக்கும் மேலும் மற்றவர்களுக்கும் அவமானம்
ஏற்படுத்துகிறது. ஏனெனில் யார் பேச்சை துண்டித்து விடுகிறாரோ
அவருக்கு தேக அபிமானம் வந்து விடுகிறது. எனவே பார்வையாளராக
இருந்து பார்ப்பது என்ற வரதானத்தை நினைவில் கொண்டு நாடகம் என்ற
கேடயத்தை பயன்படுத்துவதன் மூலம் அல்லது டிராமா என்ற
தண்டவாளத்தின் மீது ஒவ்வொரு செயல் மற்றும் சங்கல்பம் செய்தபடியே
நான் என்ற தன்மையின் இந்த ராயல் ரூபத்தை நீக்கிவிட்டு
ஒவ்வொருவருடைய வார்த்தைக்கும் மதிப்பு கொடுங்கள், சிநேகம்
கொடுங்கள். அப்பொழுது அவர் எக்காலத்திற்குமே உங்களுக்கு
ஒத்துழைப்பு அளிப்பவராக ஆகி விடுவார்.
சுலோகன்:
பரமாத்ம ஸ்ரீமத் என்ற தண்ணீரின் ஆதாரத்தில் கர்மம் என்ற விதையை
சக்திசாலி ஆக்குங்கள்.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு ஆத்மாவின் பொருட்டும் மனதின் மூலமாக
இயல்பாகவே சுபபாவனை மற்றும் நல்விருப்பங்களின் தூய அதிர்வலைகள்
சுயம் தனக்கும் மற்றவர்களுக்கும் அனுபவம் ஏற்படட்டும்.
மனதிலிருந்து ஒவ்வொரு நேரமும் அனைத்து ஆத்மாக்களின் பொருட்டு
ஆசிகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கட்டும். மனம் எப்பொழுதும் இதே
சேவையில் மும்முர மாக இருக்கட்டும். எப்படி வார்த்தைகளின்
சேவையில் பிஸியாக இருப்பதற்கான அனுபவம் உடையவர்களாக ஆகி
விட்டுள்ளீர்கள். சேவை கிடைக்கவில்லை என்றால் தங்களை காலியாக
இருப்பதாக அனுபவம் செய்கிறீர்கள். அதேபோல ஒவ்வொரு நேரமும்
வார்த்தைகளுடன் மனசா சேவையும் இயல்பாக நடந்து கொண்டே
இருக்கட்டும்.
|
|
|