08-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இறைவனின் உதவிக் கரமாய் சேவை செய்யக் கூடிய உண்மையான மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள், நீங்கள் அனைவருக்கும் அமைதிக்கான தீர்வை (வேண்டுதலை) வழங்க வேண்டும்.

கேள்வி:
குழந்தைகள் உங்களிடம் யாரேனும் அமைதிக்கான தீர்வை வேண்டுதல் செய்தால் அவர்களுக்கு எந்த விசயத்தைப் புரிய வைக்க வேண்டும்?

பதில்:
உங்களுக்கு இங்கேயே அமைதி வேண்டுமா? இது அமைதியான உலகம் அல்ல, என்று தந்தை கூறுகின்றார் இதை அவர்களிடம் கூறுங்கள். அமைதியானது சாந்திதாமத்தில் மட்டுமே கிடைக்கும், அதனை மூல வதனம் என கூறப்படுகிறது. ஆத்மா சரீரத்தில் இல்லாத போது அமைதி இருக்கும். சத்யுகத்தில் தூய்மை, சுகம், அமைதி இவையனைத்தும் இருக்கும். தந்தை தான் வந்து இந்த பிராப்தியை கொடுக்கின்றார், நீங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். அனைத்து மனிதர்களும் எனக்குள் ஆத்மா இருக்கிறது என புரிந்துள்ளனர். ஜீவாத்மா என கூறுகின்றனர் அல்லவா! முதலில் ஆத்மா, பிறகு சரீரம் கிடைக்கிறது. யாரும் தன்னுடைய ஆத்மாவை பார்த்ததில்லை, ஆனால் ஆத்மா என்பதை மட்டும் புரிந்துள்ளனர். எவ்வாறு ஆத்மாவைப் புரிந்து கொள்ள முடியும் ஆனால் பார்க்க முடியாது அதே போல் பரமபிதா பரமாத்மாவுக்காகவும் கூறப் படுகிறது, பரமாத்மா எனில் பரமாத்மா. அவரைப் பார்க்க முடியாது. தன்னையும், தன்னுடைய தந்தையையும் பார்க்க முடியாது. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டுவிட்டு இன்னொரு சரீரத்தை எடுக்கின்றது எனக் கூறுகின்றனர். ஆனால் சரியானபடி புரிந்து கொள்ளவில்லை. 84 இலட்சம் பிறவிகள் என கூறுகின்றனர், உண்மையில் 84 பிறவிகள் மட்டுமே. ஆனாலும் எந்தெந்த ஆத்மாக் கள் எத்தனை பிறவிகள் எடுக்கின்றனர் எனத் தெரியாது. ஆத்மா தந்தையை அழைக்கிறது ஆனால், பார்த்ததில்லை, சரியானபடி புரிந்து கொள்ளவில்லை. தன்னைப் பற்றியே புரிந்து கொள்ள வில்லையெனில் அவர்களுக்கு புரிய வைப்பது யார்? இதைத் தான் தன்னை உணர்வது என கூறப்படுகிறது, இதனை தந்தையைத் தவிர யாரும் உணர வைக்க முடியாது. ஆத்மா என்பது என்ன?, எப்படிப் பார்ப்பது? எங்கிருந்து வந்தது, எப்படி பிறவி எடுக்கிறது, இவ்வளவு சின்னஞ்சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளின் பங்கு எவ்வாறு பதிவாகி உள்ளது, இதனைப் பற்றி யாருக்கும் தெரியாது. தன்னைப் பற்றியும், தந்தையைப் பற்றியும் புரிந்து கொள்ளவில்லை. இந்த இலட்சுமி- நாராயணர் கூட மனித நிலையின் உயர் நிலையாகும், இவர்கள் இந்த உயர்ந்த நிலையை எப்படி அடைந்தார்கள்? என யாருக்கும் தெரியாது. மனிதர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டு மல்லவா! இவர்கள் வைகுண்டத்தில் எஜமானராக இருந்தனர் என கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இதனை எப்படி அடைந்தார்கள்? பிறகு எங்கு சென்றார்கள்? என எதுவும் தெரிந்து கொள்ள வில்லை. இப்பொழுது நீங்கள் அனைத்தும் அறிந்துள்ளீர்கள், இதற்கு முன் உங்களுக்கும் எதுவும் தெரியாது. எவ்வாறு குழந்தைகளுக்கு பாரிஸ்டர் பட்டத்தைப் பற்றி தெரியாதல்லவா? படித்த பிறகு பாரிஸ்டர் ஆகின்றனர். ஆக இந்த இலட்சுமி-நாராயணரும் படிப்பின் மூலமாகவே இவ்வாறு ஆகின்றனர். பாரிஸ்டர் ஆக, டாக்டராக ஆவதற்கு அனைவரிடமும் புத்தகம் இருக்கிறதல்லவா! இதற்கான புத்தகம் கீதையாகும். இதனைக் கூறியது யார்? இராஜயோகத்தைக் கற்றுக் கொடுத்தது யார்? இது யாருக்கும் தெரியாது. இதில் பெயரை மாற்றி விட்டனர். சிவ ஜெயந்தியும் கொண்டாடப் படுகிறது, அவரே வந்து உங்களை கிருஷ்ணபுரியின் எஜமானராக ஆக்குகிறார். கிருஷ்ணர் சொர்க்கத்தின் எஜமானராக இருந்தார் அல்லவா! ஆனால், சொர்க்கத்தைப் பற்றி கூட யாருக்கும் தெரியாது. பிறகு கிருஷ்ணர் துவாபரயுகத்தில் கீதை சொன்னதாக ஏன் கூறுகின்றனர்? கிருஷ்ணரை துவாபர யுகத்திலும், இலட்சுமி-நாராயணரை சத்யுகத்திலும், இராமரை திரேதா யுகத்திலும் கொண்டு வந்து விட்டனர். இலட்சுமி- நாராயணருடைய இராஜ்யத்தில் எந்த விதமான இடர்ப்பாடுகளும் இருந்ததாகக் காட்டப்படவில்லை, கிருஷ்ணருடைய இராஜ்யத்தில் கம்சன், இராமருடைய இராஜ்யத்தில், இராவணன் இருந்ததாகக் காட்டியுள்ளனர். இராதை-கிருஷ்ணரே பிறகு இலட்சுமி- நாராயணராக ஆகின்றனர், என்பது யாருக்கும் தெரியவில்லை. இது தான் முற்றிலும் அறியாமை இருளாகும். அறியாமை இருள் என்று கூறப்படுகிறது. ஞானம் ஒளி என்று கூறப்படுகிறது. இப்பொழுது ஒளியேற்றுபவர் யார்? அவர் தான் தந்தையாவார். ஞானமானது பகல் என்றும் பக்தியானது இரவு என்றும் கூறப்படுகிறது. இந்த பக்தி மார்க்கமானது பல பிறவிகளாக நடைபெற்று வருகிறது என்றும் உங்களுக்குத் தெரியும் ஏணிப் படியில் இறங்கி வந்து, கலைகளும் குறைந்து விட்டது. கட்டிடம் புதியதாக உருவானாலும் பிறகு நாளடைவில் அதன் ஆயுட்காலம் குறைந்து விடும். முக்கால் பங்கு பழையதாக ஆகி விட்டாலும் பழமையானது என்று தான் கூறுவார்கள். இவர் தான் அனைவருக்கும் தந்தையாக, அனைவருக்கும் சத்கதி கொடுப்பவராகவும், அனைவருக்கும் படிப்பினை தருபவராக இருக்கின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். உங்களிடத்தில் இலட்சியமும் இருக்கிறது. நீங்கள் இந்த கல்வியைக் கற்று தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்வீர் கள் மற்ற அனைவரும் முக்திதாமத்திற்குச் சென்று விடுவார்கள்;. சுத்யுகத்தில் அநேக தர்மங்கள் இல்லை என்பதை காலச் சக்கரத்தின் சித்திரத்தில் புரிய வைக்கின்றீர்கள். அந்த நேரத்தில் மற்ற ஆத்மாக்கள் நிராகாரமான உலகத்தில் இருப்பார்கள். இந்த ஆகாயம் வெற்றிடமாக இருக்கிறது, அனைத்திலும் பரமாத்மா இருக்கின்றார் எனக் கூற முடியாது. காற்றிலும், ஆகாயத்திலும் பகவான் இருப்பதாக மனிதர்கள் புரிந்துள்ளனர். இப்பொழுது தந்தை வந்து புரிய வைக்கின்றார். தந்தையிடம் பிறவி எடுத்த பிறகு உங்களுக்கு கல்வியைத் தருவது யார்? தந்தையே ஆன்மீக டீச்சராகி கற்பிக்கின்றார். நன்றாகப் படித்து முடித்து விட்டால் பிறகு உங்களை தன்னோடு அழைத்துச் செல்வார், பிறகு நீங்கள் இவ்வுலகிற்கு வருவீர்கள். இப்பொழுது வேகமாக ஓடுங்கள் என தந்தை கூறுகின்றார். நல்ல முறையில் தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றவர்களுக்கும் கல்வியைக் கொடுங்கள், இல்லையெனில் இவ்வளவு பேருக்கு எப்படி கற்பிக்க முடியும்? தந்தைக்கு அவசியம் உதவியாளராக ஆவீர்கள் தானே! இறைவனின் உதவியாளர்கள் என பெருமையாகக் கூறப்படு கிறதல்லவா! ஆங்கிலத்தில் கூட சால்வேசன் ஆர்மீ (மீட்புப்படை) எனக் கூறப்படுகிறது. எதற்காக மீட்க வேண்டும்? அமைதி வேண்டும் என்று அனைவரும் கேட்கின்றனர். மற்றபடி அவர்கள் (மீட்பு படை) அமைதியை வழங்குகிறார்களா என்ன? யார் அமைதியை வேண்டுகிறார்களோ அவர்களிடம் கூறுங்கள்- இந்த உலகத்தில் அமைதி வேண்டுமா? என தந்தை கேட்கின்றார். இந்த உலகம் சாந்தி தாமம் இல்லையே. அமைதி சாந்திதாமத்தில் மட்டும் தானே கிடைக்கும். அதுவே மூலவதனம் எனக் கூறப்படுகிறது. ஆத்மா சரீரத்தில் இல்லையெனில் அமைதி இருக்கும். தந்தை மட்டுமே வந்து இந்த பிராப்தியைத் தருகின்றார். புரிய வைப்பதற்கு உங்களிடம் நல்ல யுக்தி வேண்டும். கண்காட்சியில் கவனித்துப் பார்த்தால் நிறைய பேருடைய தவறுகள் தென்படும், ஏனென்றால் புரிய வைப்பவர்கள் வரிசைப்படி தான் இருக்கின்றார்கள் அல்லவா! அனைவரும் ஒரே மாதிரி இருந்தால் நிமித்த சகோதரி! இன்னாரை சொற்பொழிவு செய்ய அனுப்புங்கள் என எழுதுவதற்கு அவசியம் இருக்காது. அட, நீங்களும் பிராமணர் தானே என கூறினால், பாபா இன்னார் என்னை விட திறமை சாலி எனக் கூறுகின்றனர். திறமை மூலமாக மனிதர்கள் உயர் நிலை அடைகின்றார்கள் அல்லவா! வரிசைப்படி தான் இருக்கின்றனர். பரிட்சையில் ரிசல்ட் வெளிவரும் போது உங்களுக்கு தன்னைப் பற்றிய காட்சி கிடைக்கும், பிறகு புரிந்து கொள்வீர்கள். நாம் ஸ்ரீமத்படி நடக்கவில்லை. எந்த விதமான பாவமும் செய்யாதீர்கள், தேகதாரிகளின் மீது பற்றுதல் வைக்காதீர்கள் என தந்தை கூறுகின்றார். இது பஞ்ச தத்துவத்தால் ஆன சரீரமாக இருக்கிறது. பஞ்ச தத்துவங்களை பூஜை செய்வது நினைவு செய்வது கூடாதல்லவா! இந்த கண்களால் பார்த்தாலும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மாவிற்கு இப்பொழுது ஞானம் கிடைத் திருக்கிறது. இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், பிறகு வைகுண்டத்திற்கு வருவோம். ஆத்மாவை புரிந்து கொள்ள முடியும் பார்க்க முடியாது. திவ்யமான பார்வையால் தனது வீடு மற்றும் சொர்க்கத்தைப் பார்க்க முடியும். குழந்தைகளே! மன்மனாபவ, மத்யாஜீ பவ! அதாவது தந்தை மற்றும் விஷ்ணுபுரியை நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகின்றார். உங்களுடைய இலட்சியமும் இதுவாகும். இப்பொழுது நாம் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும், மற்ற அனைவரும் முக்திக்குச் செல்வார்கள் என குழந்தைகள் அறிந்துள்ளீர்கள் அனைவரும் சத்யுகத்திற்கு வர முடியாது. உங்களுடையது தெய்வீகமான தர்மம் ஆகும். இங்கு உள்ளவை மனித தர்மமாகும். மூலவதனத்தில் மனிதர்கள் இருப்பதில்லை. இங்கு தான் மனித உலகம் இருக்கிறது. மனிதர்களே தமோபிரதானமாகவும் மற்றும் சதோபிரதானமாகவும் ஆகின்றனர், நீங்கள் முதலில் சூத்திர குலத்தில் இருந்தீர்கள், இப்பொழுது பிராமண குலத்தில் இருக்கின்றீர்கள். இந்தக் குலங்கள் அனைத்தும் பாரதவாசி களுக்குரியது. வேறு தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை பிராமண வம்சி, சூரிய வம்சி எனக் கூற மாட்டார்கள். இந்த நேரம் அனைவரும் சூத்திர குலத்தில் உள்ளனர். உலக மரம் இற்றுப் போய் விட்டது. நீங்கள் பழைய நிலை அடைந்த பிறகு முழு மரமும் இற்றுப் போய், தமோபிரதானமாகி விட்டது பிறகு முழு மரமும் எவ்வாறு சதோபிரதானமாக முடியும். சதோபிரதானமான புதிய மரத்தில் (உலகத்தில்) தேவி-தேவதை தர்மம் மட்டுமே இருக்கும், பிறகு நீங்கள் சூரிய வம்சியிலிருந்து சந்திர வம்சியாக ஆகின்றீர்கள். மறுபிறவியில் வர வேண்டுமல்லவா! பிறகு வைசியராக, சூத்திர வம்சியாக.. ஆகின்றீர்கள். இவையனைத்தும் புதிய விசயங்கள் ஆகும்.

நமக்கு கற்பிக்கின்றவர் ஞானக்கடலாக இருக்கின்றார், அவரே பதீத பாவனராக அனைவருக்கும் சத்கதி தரக் கூடிய வள்ளலாக இருக்கிறார். நான் உங்களுக்கு ஞானத்தைத் தருகிறேன். நீங்கள் தேவி-தேவதைகளாக ஆன பிறகு இந்த ஞானம் இருக்காது என தந்தை கூறுகின்றார். அஞ்ஞானி களுக்குத் தான் ஞானம் கொடுக்கப் படுகிறது, அனைத்து மனிதர்களும் அஞ்ஞானம் என்ற இருளில் இருக்கின்றனர், நீங்கள் வெளிச்சத்தில் இருக்கின்றீர்கள். 84 பிறவிகளின் கதையை நீங்கள் அறிந்துள்ளீர்கள். குழந்தைகள் உங்களிடம் முழு ஞானம் இருக்கிறது. பகவான் இந்த உலகத்தை ஏன் படைத்தார்?. மோட்சம் எங்களுக்கு கிடைக்காதா என்று மனிதர்கள் கேட்கின்றனர். அட, இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட விளையாட்டாக இருக்கிறது, அனாதி நாடகம் அல்லவா! ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கிறது என நீங்கள் புரிந்துள்ளீர்கள், இதில் கவலைப் படுவதற்கு என்ன இருக்கிறது?. ஆத்மா மீண்டும் அடுத்த நடிப்பை நடிக்கும்; இறந்தவர்கள் திரும்பக் கிடைத்தால் அழலாம், திரும்ப வரமாட்டார்கள் எனில் அழுவதால் என்ன இலாபம் இருக்கிறது ! இப்பொழுது நீங்கள் அனைவரும் பற்றுதலை வெல்ல வேண்டும். சுடுகாடு போன்ற உலகத்தில் ஏன் பற்றுதல் வேண்டும், இதில் துக்கம் தான் இருக்கிறது. இன்று குழந்தையாக இருந்து, நாளை அதே குழந்தை தந்தையின் சொத்துக்களை அபகரிக்கத் தயங்குவதில்லை, தந்தையிடம் சண்டை போடுகின்றனர். இதைத் தான் அனாதை (காப்பாற்றுபவர் இல்லாத) உலகம் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கு அறிவுரை சொல்ல யாருமில்லை. தந்தை அப்படிப்பட்ட நிலையைப் பார்த்து செல்வந்தராக ஆக்குவதற்கு வந்திருக்கிறார். தந்தை வந்து அனைவரையும் பொக்கிஷம் நிறைந்தவராக ஆக்குகிறார். அனைத்து சண்டை சச்சரவுகளையும் நீக்குகிறார். சத்யுகத்தில் எந்த சண்டை சச்சரவும் இராது. முழு உலகத்தின் சச்சரவுகளையும் நீக்குகிறார், பிறகு வெற்றி ழுழக்கம் ஏற்படும். இங்கு மாதர்கள் அதிகமாக இருக்கின்றனர், இவர்களை அடிமையாக நடத்துகின்றனர், கங்கணம் அணிவிக்கும் பொழுது கணவரே உன்னுடைய ஈஸ்வரன், குரு என கூறுகின்றனர். முதலில் திரு, பிறகு திருமதி எனக் கூறுகின்றனர். தந்தை இப்பொழுது மாதர்களை முன் வைக் கின்றார். உங்களை யாரும் வெல்ல முடியாது. உங்களுக்கு தந்தை அனைத்து நெறிமுறை களையும் கற்றுத் தருகிறார். பற்றுதலை வென்ற இராஜாவின் ஒரு கதை இருக்கின்றது, அவையனைத்தும் உருவாக்கப்பட்ட கதைகளாகும். சத்யுகத்தில் திடீர் மரணம் ஏற்படாது. சரியான நேரப்படி ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரத்தை எடுக்கும். இப்பொழுது இந்த சரீரம் முதுமையடைந்து விட்டது, பிறகு புதியதை எடுத்து சிறிய குழந்தையாக பிறக்க வேண்டும் என காட்சி கிடைக்கும். அதனால் மகிழ்ச்சியோடு சரீரத்தை விடுவார்கள். இங்கு எவ்வளவு வயதானலும், நோய், வாய்பட்டாலும் சரீரத்தை விட்டால் நல்லது என நினைத்தாலும் இறக்கும் நேரத்தில் அழுகின்றனர். இப்பொழுது நீங்கள் அப்படிப்பட்ட இடத்திற்குச் செல்கின்றீர்கள், அங்கு அழுவது என்ற பெயரே கிடையாது. அங்கு மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். உங்களுக்கு எவ்வளவு அளவற்ற மகிழ்ச்சி இருக்க வேண்டும். அட, நாம் உலகிற்கு எஜமானராக ஆகின்றோம்! பாரதம் முழு உலகிற்கும் எஜமானராக இருந்தது, இப்பொழுது துண்டு, துண்டாக ஆகி விட்டது. நீங்களே பூஜிக்கத்தகுந்த தேவதைகளாக இருந்து பிறகு பூஜாரியாக ஆகிவிட்டீர்கள். பூஜிக்கத்தகுந்தவராக, பூஜாரியாக பகவான் ஆவதில்லை. அவரும் பூஜாரியாக ஆகிவிட்டால் பூஜிக்கத்தகுந்தவராக யாரால் ஆக்க முடியும்? நாடகத்தில் தந்தையின் பங்கு வேறுபட்டது. ஒருவர் மட்டுமே ஞானக் கடல், அவர் எப்பொழுது வந்து ஞானத்தைத் தருகின்றாரோ, அனைவருக்கும் சத்கதி தருகின்றாரோ, அப்பொழுது மகிமையும் ஏற்படுகிறது, அவசியம் அவர் இங்கு வர வேண்டும். நமக்கு படிப்பை கற்றுத் தருபவர் யார்? என்பதை முதலில் புத்தியில் பதிய வைக்க வேண்டும்.

திரிமூர்த்தி, காலச்சக்கரம், மற்றும் கல்ப மரம் இவை முக்கிய சித்திரம் ஆகும். நாம் சத்யுகத்தில் வர முடியாது. நாம் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என கல்ப மரத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொள்வார்கள், இந்த காலச்சக்கரத்தை பெரியதாக உருவாக்க வேண்டும். அதில் தெளிவாக எழுதப்பட வேண்டும். சிவபாபா பிரம்மா மூலமாக தேவதை தர்மம் மற்றும் புதிய உலகத்தை உருவாக்குகின்றார், சங்கரர் மூலமாக பழைய உலகின் அழிவு பிறகு விஷ்ணு மூலமாக புது உலகின் பரிபாலனை செய்ய வைக்கின்றார், இதனைத் தெளிவு படுத்த வேண்டும். பிரம்மா விலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா இருவருக்கும் தொடர்பு இருக்கிறதல்லவா! பிரம்மா-சரஸ்வதி பிறகு இலட்சுமி-நாராயணராக ஆகின்றனர். ஏறும் கலை ஒரு பிறவியிலும், இறங்கும் கலை 84 பிறவிகளிலும் ஏற்படுகிறது. சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது சரியானதா, நான் கூறுவது சரியானதா? என தந்தை கேட்கின்றார். உண்மையான சத்திய நாராயணன் கதையை நான் கூறுகின்றேன். சத்திய தந்தை மூலமாக நாம் நரனிலிருந்து நாராயணராக ஆகின்றோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. மனிதர்களை இங்கு தந்தை, டீச்சர்,குரு, என கூறுவதில்லை, இதுவே முக்கிய விஷயமாகும். குருவை பாபா, டீச்சர் என்றோ கூற முடியுமா? இங்கு சிவபாபா விடம் ஜென்மம் எடுத்த பிறகு சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார். பிறகு தன்னோடு அழைத்துச் செல்வார். எந்த மனிதரையும் தந்தை டீச்சர், குரு எனக் கூற முடியாது. இங்கு ஒரே ஒரு தந்தையை மட்டுமே பரமதந்தை எனக் கூறப்படுகிறது. லௌகீக தந்தையை பரம தந்தை எனக் கூறமாட்டார்கள். ஆனாலும், அனைவரும் அந்த தந்தையைத் தான் நினைவு செய்கின்றனர். துக்கத்தில் அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர், சுகமாக இருக்கும் பொழுது நினைவு செய்வதில்லை. ஆக அந்த தந்தை தான் வந்து சொர்க்கத்திற்கு எஜமானராக ஆக்குகின்றார். நல்லது

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்;தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்ட இந்த சரீரத்தைப் பார்த்தாலும் தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். எந்த தேகதாரியின் மீதும் பற்றுதல் வைக்கக் கூடாது. எந்த வித பாவமும் செய்யக் கூடாது.

2. இந்த உருவாக்கப்பட்ட நாடகத்தில் ஒவ்வொரு ஆத்மாவின் பங்கும் துவக்கமும் முடிவுமில்லாமல் (அழிவற்றதாக) இருக்கிறது, ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரத்தை எடுக்கிறது, எனவே சரீரத்தை விடுவதில் கவலை வேண்டாம், பற்றுதலை வெல்ல வேண்டும்.

வரதானம்:
சம்பூரண பலியாகுதல் (ஆகுதி) மூலம் பரிவர்த்தனை விழாவைக் கொண்டாடக்கூடிய திடசங்கல்பதாரி ஆகுக.

பூமியே பிளந்தாலும் தர்மத்தை விடாதீர்கள் என்ற பழமொழி உள்ளதுபோல் எவ்வித சூழ்நிலை வேண்டுமானாலும் வரட்டும், மாயாவினுடைய மகாவீர் ரூபம் முன்னால் வரட்டும், ஆனால், தாரணைகளை விடக்கூடாது. சங்கல்பத்தின் மூலம் தியாகம் செய்யப்பட்ட பயனற்ற பொருட்களை சங்கல்பத்திலும் கூட சுவீகாரம் செய்யக்கூடாது. சதா தன்னுடைய சிரேஷ்டமான சுவமானம், சிரேஷ்டமான நினைவு மற்றும் சிரேஷ்டமான வாழ்க்கையினுடைய சக்திசாலி சொரூபத்தின் மூலம் சிரேஷ்டமான நடிகராகி சிரேஷ்டத்தன்மையின் விளையாட்டை விளையாடிக் கொண்டே இருங்கள். பலவீனங்களின் அனைத்து விளையாட்டும் முடிவடைய வேண்டும். எப்பொழுது அப்பேற்பட்ட சம்பூரண பலி செய்வதற்கான சங்கல்பம் திடமாக இருக்குமோ, அப்பொழுது பரிவர்த்தனை விழா நடக்கும். இந்த விழாவின் தேதியை இப்பொழுது குழுவாக சேர்ந்து தீர்மானித்திடுங்கள்.

சுலோகன்:
உண்மையான வைரம் ஆகி தன்னுடைய அதிர்வலைகளின் ஜொலிப்பை விஷ்வத்தில் பரப்புங்கள்.

அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஏகாக்ரதாவை தனதாக்குங்கள்

இப்பொழுது சாதாரண சேவைகள் செய்வது, இது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. ஆனால், சீர்கெட்டதை சீர்திருத்துவது, வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டுவருவது - இதுவே பெரிய விசயம் ஆகும். முதலில், ஒரே வழி, ஒரே பலம், ஒரே நம்பிக்கை மற்றும் ஒற்றுமை - உடன் இருப்பவர்களிடத்தில், சேவையில், வாயுமண்டலத்தில் இருக்க வேண்டும் என்பதையே பாப்தாதா கூறுகின்றார்கள்.