08.02.26 காலை முரளி
ஓம் சாந்தி 31.12.2008 பாப்தாதா,
மதுபன்
இந்த புத்தாண்டில் மாற்றியமைக்கும் சக்தியின் வரதானத்தால்
எதிர்மறையை நேர்மறையயாக மாற்றியமைத்து சங்கல்பம், சுவாசம்,
சமயம் அனைத்தையும் பயனுள்ளதாக்குங்கள், வெற்றி
மூர்த்தியாகுங்கள்
இன்று புதிய வாழ்வை தருகின்ற தந்தை நாலாபுறமும் புதிய வாழ்வினை
பெற்றுள்ள தனது குழந்தைகளைப் பார்த்து மகிழ்கின்றார். புதிய
யுகத்தைப் படைக்கவே இந்த புதிய வாழ்க்கை உலகினர் புத்தாண்டை
கொண்டாடுகின்றனர். புதிய வாழ்வை பெற்றுள்ள நீங்கள் அனைவரும்
ஆத்மாக்களுக்கு வாழ்த்துக்களையும் தருகின்றீர்கள் புதிய யுகம்
வந்தே வந்து விட்டது எனும் சந்தோஷ செய்தியும் தருகின்றீர்கள்.
குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாபா ஆஸ்தியாக பொன்னுலகையே
பரிசாக தருகின்றார். அந்த பொன்னுலகின் பரிசுகள் யாவும் நமது
பிறப்புரிமை யெனும் பெருமிதம் உங்களனைவருக்கும் உள்ளது. இன்றைய
உலகில் ஒருவருக்கு எவரேனும் மிகப் பெரிய பரிசே தரலாம். அது
என்னவாக இருக்கும் கிரீடம் அரியாசனம் ஆனால் உங்களுடைய
பொன்னுலகின் பரிசுக்கு முன்னால் அவை எம்மாத்திரம் அது பெரிதாமா.
உங்கள் உள்ளத்தில் நமக்கு பாபா மிக உயர்ந்த புதிய யுகமெனும்
பரிசே தருகின்றார் எனும் மகிழ்ச்சி உள்ளது நம்பிக்கை உள்ளது
கவலையற்றவராகவும் உள்ளீர்கள். இதனை யாராலும் மாற்ற முடியாது.
இந்த உறுதியான நம்பிக்கை எப்போதும் நினைவில் உள்ளதா எப்போதும்
உள்ளதா அல்லது அவ்வப்போது குறைந்து விடுகின்றதா? பிறப்புரிமை
பிறப்புரிமைதான் அதனை யாராலும் தடுக்க முடியாது. இன்று நீங்கள்
அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்து புத்தாண்டை கொண்டாட
வந்துள்ளீர்கள். இந்த புதிய ஆண்டில் என்ன இலட்சியம்
வைத்துள்ளீர்கள்? இப் புத்தாண்டில் விசேஷமாக என்ன செய்ய
உள்ளீர்கள்? இப்புத்தாண்டில் பாப்சமான் ஆக வேண்டும், சம்பன்னம்
மற்றும் சம்பூர்ணம் ஆகியே தீர வேண்டும் அதற்காக என்ன முயற்சி
செய்ய வேண்டியிருந்தாலும் நிச்சயமாக பாப்சமான் ஆகியே தீர
வேண்டும். சொல்லுங்கள் அனைவர் மனதிலும் இந்த எண்ணம் உறுதியாக
உள்ளதா? தலையசையுங்கள் தந்தையும் இதனையே விரும்புகின்றார்.
ஒவ்வொரு குழந்தைகளும் பாப்சமான் ஆக வேண்டும் தந்தை தந்தை தான்.
ஆனால் குழந்தைகள் தந்தையை விட உயர்ந்தவர்கள். பாப்சமான் ஆக
வேண்டு மெனில் பாபாவை பின்பற்ற வேண்டும். சிந்தியுங்கள் பிரம்மா
பாபா எப்படி முழுமை அடைந்தார்? அவரிடம் என்ன சிறப்பம்சம்
இருந்தது? முழுத்தன்மைக்கான சிறப்பம்சம் என்ன? பிரம்மா பாபா
தனது ஒவ்வொரு சமயத்தையும் பயன்படுத்தினார் ஒவ்வொரு சுவாசம்,
ஒவ்வொரு நொடியும் பயன்படுத்தினார் ஆகவே பாப்சமான் ஆக இந்த
வருடம் என்ன என்ன இலட்சியம் வைப்பீர்கள் பயன்படுத்த வேண்டும்,
வெற்றி மூர்த்தி ஆகியே தீர வேண்டும். வெற்றி நமது கழுத்தின்
மாலை வெற்றி நமது தந்தையின் ஆஸ்தி இந்த இலட்சியத்துடன் சோதனை
செய்க. ஒவ்வொரு நாளும் தன்னை சோதனை செய்க வெற்றி மூர்த்தியாகி
நேரம், பொக்கிஷம், சக்திகள் குணம் யாவும் பயன்படுத்தினேனா ?
ஏனெனில் இன்றைய பயனாலேயே நாளையும் சேமிப்பாகும் இப்போது நல்ல
பயயன்பாட்டால் 21 பிறவிக்கு சேமிப்பாகும் தெரியுமல்லவா முன்பும்
கூறினேன், நேரத்தை நல்லவிதமாக பயன்படுத்தினால் நாளையும் ராஜ்ய
பாக்யம் முழுமையாக ராஜ்ய பாக்யம் கிடைக்கும் சுவாசத்தை
பயன்படுத்தினால் 21 பிறவி ஆரோக்யம் கிடைக்கும். ஒருபோதும்
ஆரோக்ய குறைவு எதுவும் ஏற்படாது. அத்துடன் சேமிக்கும்
பொக்கிஷங்கள் அனைத்திலும் பெரிய பொக்கிஷம் ஞானம், ஞானம் என்றால்
புரிதல், ஞானகஜானாவை பயன்படுத்தினால் எதிர் காலத்தில் நல்ல
புத்திசாலி ஆவீர்கள். மந்திரி மூலம் ஆலோசனை கேட்கும் அவசியம்
இருக்காது. தானாகவே நீண்ட காலம் நிலையான இராஜ்யம் செய்வீர்கள்
எந்த தடையும் இருக்காது. தடைகளற்ற நீண்ட நிலையான இராஜ்யம் அதுவே
ஞான பொக்கிஷத்தை சேமித்ததற் கான பலன் ஒரு பிறவியில் பயன்னள
வகையில் பயன்படுத்தியதால் அனேக பிறவி வெற்றி எமும் பழம்
உண்டீர்கள். அவ்வாறே கிடைத்துள்ள சக்திகளை தனக்காகவும்
பிறருக்காகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தியதால் நாளை நமது
ராஜ்யத்தில் ஒரு போதும் குறைவில்லாது சர்வ சக்திகளும்
நிறைந்திருக்கும் அவ்வாறே குணம் தானம் செய்வதால் இறுதி 84வது
பிறவியிலும் ஜட சித்திரங்களை அமைத்து இறுதி வரையிலும் என்ன
மகிமை பாடு கின்றார்கள் சர்வகுண சம்பன்னம். ஒவ்வொரு
வெற்றிகரமான பிராப்திகளுக்கும் அனேக பிறவிகள் அதிகாரி ஆவீர்கள்.
ஆக இவ்வாண்டு என்ன செய்வீர்கள்? இலட்சியம் வையுங்கள் ஒவ்வொரு
சுவாசம், ஒவ்வொரு நொடி பயனற்று வீண் ஆகக் கூடாது. சேமிப்பாக
வேண்டும் சேமிக்கும் நேரம் மிகக் குறைவு ஒரு சிறிய பிறவி
பலனுக்கான நேரம் 21 பிறவி இவ்வாண்டு பாப்சமான் ஆவதற்கான
இலட்சியம் உள்ளதா? அனைவருக்கும் பாப்சமான் ஆகும் இலட்சியம்
உள்ளதா ஆகவேண்டும் என்பதல்ல. ஆகியே தீர வேண்டும் இதில் அதிக
கவனம் வையுங்கள். நல்லது குழந்தைகளும் ஆவீர்கள் சிறிய சிறிய
குழந்தைகளும் ஆவீர்கள் குழந்தைகளின் கிரீடம் நன்றாக உள்ளது (குழந்தைகள்
அனைவரும் கிரீடம் அணிந்துள்ளனர்) மிக நன்றாக உள்ளது. இந்த ஆண்டு
இலட்சியமும் உள்ளது. தந்தையை பின்பற்ற வேண்டும் மந்திரமும்
உள்ளது. பயனுள்ளதாக்கி வெற்றி மூர்த்தி ஆக வேண்டும். இதற்காக
பாப்தாதா குழந்தைகளுக்கு அதிக முயற்சிக்கான கடினம் தரவில்லை.
மிக எளிய வழி தருகின்றார் எளிய விதி என்ன? எந்த எண்ணம்
வந்தாலும் இது பாபாவின் எண்ணத்துடன் ஒத்துப் போகிறதா என சோதனை
செய்க பேசும் போதும் சோதனை செய்க பாப்சமான் ஆக வேண்டும் ஆக
எண்ணம், சொல், செயல், சம்மந்தம், தொடர்பு யாவிலும் முதலில்
சோதனை செய்க. சிந்தியுங்கள் இது பாப்சமான் உள்ளதா? பிறகு
செயல்படுங்கள் பிரம்மா பாபாவை பின்பற்றுங்கள் தந்தையை
பின்பற்றுக என்றே சொல்லப்பட்டுள்ளது. அனேக குழந்தை கள் மிக
நல்ல நல்ல விளையாட்டு காண்பிக்கின்றனர். தெரியுமா என்ன
விளையாட்டு காட்டு கின்றனர்? பின்பற்றுவதில்லை ஆனால் என்ன
சொல்கின்றனர்? நான் விரும்பவில்லை நடந்து விட்டது. முதலில்
சிந்தியுங்கள், சிந்திப்பது மட்டுமல்ல சொரூபமாகுங்கள்.
சொரூபமாகி விட்டால் நான் நினைக்கவில்லை நடந்து விட்டது என
சொல்லமாட்டீர்கள் செய்பவர் சிந்திப்பவர் சிரேஸ்ட ஆத்மா நீங்கள்
தானே, எஜமான் நடந்து விட்டது என்றால் கர்மேந்திரியங்கள் மீது
கட்டுப்பாடு இல்லை.
ஆக இந்த ஆண்டு இந்த சுலோகனை நினைவில் வையுங்கள் பாப்சமான்
செய்தே ஆக வேண்டும் தந்தையைப் போன்று ஆகியே தீர வேண்டும்.
கடினமில்லையே ? தந்தை எப்படி செய்தாரோ அப்படி செய்யுங்கள்.
காப்பியடிப்பது சுலபம் தானே. சிந்திக்க வேண்டியதில்லை நிச்சயம்
பிரம்மா பாபா எப்படி பரிஸ்தா ஆனாரோ அப்படியே பரிஸ்தாவாகி தேவதை
ஆக வேண்டும். சில குழந்தைகள் சொல்கின்றனர் போகப்போக
எதிர்ப்புகள் அதிகம் வருகின்றது எதிர்ப்புகளின் காரணத்தால் நிலை
தடுமாறுகிறது. தன் தரத்திலிருந்து கீழே இறங்கி விடுகிறோம் ஆனால்
நினைவில் வையுங்கள் பாப்சமான் ஆக வேண்டுமெனில் யக்ஞ ஆரம்பத்தில்
பிரம்மா பாபாவிற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தன. அத்தனையும்
தன்னிலையிலிருந்து மாற்றினாரா? ஒவ்வொன்றும் புத்தம் புதியது,
சவாலாக இருந்தது. இப்போது உலகம் நிறைய மாறிவிட்டது. அன்று
பிரம்மா பாபா தனிமையில் எந்தளவு தன் சுய மரியாதையெனும் சீட்டில்
அமர்ந்து தன்னிலையில் எதிர்ப்புகளை களைந்தார், எதிர்கொண்டார்.
எங்கே தன்னிலை இருக்குமோ அங்கே எதிர்ப்பு ஒன்று செய்ய முடியாது.
முன்பு என்ன சொன்னார்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள்,
இப்போது என்ன சொல்கிறார்கள் அதிசயம் செய்கின்றார்கள். இவ்வளவு
மாற்றம் வந்தது காரணம் என்ன? பிரம்மா பாபா சுயமரியாதையெனும்
சீட்டில் அமர்ந்து திட எண்ணம் எனும் சாஸ்திரங்கள் மூலமாக
எதிர்புகளை முடியடித்தார் ஆகவே இந்த ஆண்டு நீங்கள் என்ன
செய்வீர்கள்? சமமாக வேண்டும் அல்லவா. எதிர்ப்புகள் எத்தனை
வந்தாலும் நீங்கள் தன்னிலையில் நிலைத்திருந்தால் எதிர்ப்புகள்
யாவும் நீங்கி விடும். தைரியம் உள்ளதா? பிரம்மா பாப்சமான் ஆகியே
தீர வேண்டும் அதற்கு கை உயர்த்தினீர்கள், ஆனால் அவ்வளவு தைரியம்
உள்ளதா? முதலில் தன்னுள் மாற்றம் பிறகு சொந்த பந்தங்களின்
ஆத்மாக்கள் பிறகு உலக ஆத்மாக்களின் மாற்றம் இவர்கள் அனைவரையும்
தனது நல்லாசை, நல் விருப்பங்கள் மூலம் திட எண்ணங்கள் மூலம்
மாற்றிடல் வேண்டும். இந்த ஆண்டில் பாப்தாதா முக்கியமாக ஒரு
சக்தியை வரதானமாகத் தருகின்றார். என்னுடைய பாபா என்று உளமாற
சொன்ன மாத்திரமே சக்தி முன்னால் வந்து நிற்கும். மேலோட்டமாக
அல்ல. உளமாற அதிகாரத்துடன் என்னுடைய பாô என்ற உடனேயே சக்தி
உங்கள் முன்பாக வந்து நிற்கும். எந்த சக்தி அது? மாற்றும் சக்தி,
மாற்றியமைக்கும் சக்தியால் முக்கியமாக எதிர்மறையை நேர்மறையாக
மாற்றிவிடுங்கள். எதிர்மறையான எண்ணம், எதிர்மறையான நடத்தையை
பார்த்தவுடனேயே நேர்மறையாக மாற்றிவிடுங்கள். நேர்மறையாக
பார்ப்பது, பேசுவது, செய்வது நல்லாசை, நல் விருப்பத்தாலேயே
சுலபமாகும். எதிர்ப்பு வந்தாலும் உங்களுடைய மாற்றி யமைக்கும்
சக்தி உங்களுக்கு சுலபமாகவே வெற்றியûத் தேடித்தரும். புரிந்ததா,
இந்த ஆண்டு முக்கியமாக சிறப்பு வரதானமாக மாற்றியமைக்கும்
சக்தியை உறுதியுயடன் செயல்படுத்துங்கள். மாற்றம் செய்ய முடியுமா?
உங்களுடைய சவால் நினைவுள்தா? உலகை மாற்றுபவர் தான். உலகையே
மாற்றபவர் எனப் பெயர் கொண்ட உங்களுக்கு தன்னை மாற்றுவது கடினமா
என்ன? மனதில் ஏதேனும் கஷ்டம் வந்தால், வருவதில்லை ஆனால் நீங்கள்
வரவழைக்கின்றீர்கள். மாஸ்டர் சர்வ சக்திவானுக்கு முன்னால்
கடினம் என்ன? ஆனால் நீங்கள் ஒரு தவறு செய்து கடினமாக்கி
விடுகின்றீர்கள். இப்போது இங்கே திடீரென இருள் சூழ்ந்து
விடுகின்றது, தவறாக இருளை விலக்க முயற்சித்தால் இருள் விலகுமா?
சரியான விதிமுறை உள்ளது வெளிச்சத் திற்கான ஸ்விட்சை தட்டினால்
நொடியில் இருள் அகன்று விடும். நீங்களும் தவறு செய்து
விடுகின்றீர்கள், நடந்து முடிந்த விசயத்தைப் பற்றி ஏன்ன, என்ன
எப்படி என்ற இந்த கேள்வியின் வரியையில் சென்று விடுகின்றீர்கள்.
சிறியதை பெரியதாக்கி பெரியது கடினமாகிறது. சிறிய தாக்குங்கள்
சுலபமாகிவிடும். பாபா எந்த சக்தியையும் செயல்படுத்த சுலபமான
விதி கற்பித் துள்ளார். நான் மாஸ்டர் சர்வ சக்திவான் தனது இந்த
நினைவெனும் இருக்கையில் அமர்ந்து விடுங்கள். இந்த இருக்கையில்
அமர்ந்து விட்டால் தடுமாற மாட்டீர்கள். சீட்டில் அமராததால்
தடுமாறுகின்றீர்கள். சீட்டில் அமர்ந்தால் தடுமாறாது. 63
பிறவிகளான சம்ஸ்காரம் வெளிப்படு கின்றது. 63 பிறவியாக என்ன
இருந்தது? அவ்வப்போது நிலைபெறுதல் அவ்வப்போது துடுமாற்றம். ஆகவே
எப்போதும் சுயமரியாதையெனும் சீட்டில் செட்டாகி விடுங்கள்.
இவ்வாண்டு என்ன செய்வீர்கள். புத்தாண்டில் அனைவருக்கும் பரிசு
தருவீர்கள் தானே? என்ன பரிசு தருவீர்கள்? வாழ்த்துக்களும்
தருவீர்கள், பரிசும் என்ன தருவீர்கள்? உங்களிடம் அனேக பரிசுகள்
இருக்குமே. எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கொடுக்கலாம்.
பௌதீக பரிசுகள் அல்பகாலமே இருக்கும். ஆனால் நீங்கள் அழியாத
பாப்சமான் ஆவதற்கான அழியாத பரிசை கொடுங்கள். மனதால் சக்திகளை
பரிசாக வழங்குங்கள். வார்த்தையால் ஞானத்தை பரிசாக வழங்குங்கள்.
செயல் மூலம் குணங்களை பரிசாக வழங்குங்கள். அனைவரிடமும்
இருக்கிறதல்லவா? உள்ள தென்றால் தலை அசையுங்கள். பொக்கிசம்
அதிகம் உள்ளது, குறைவில்லை ஆக எவருடனும் செயல் செய்யுங்கள்
செயலில் வந்தாக வேண்டும். இவ்வாண்டு நன்றாக பரிசை வழங்குங்கள்.
ஆனால் அது அழியாது இருக்க வேண்டும். கேட்டீர்கள் அல்லவா யாரும்
வெறும் கையுடன் போக கூடாது. பரிசை மனதல் கொடுங்கள் சொல்லால்
கொடுங்கள், செயலால் கொடுங்கள். இதற்காக நீங்கள் எப்போதும்
ஒன்றில் கவனம் தர வேண்டும். எப்போதும் மனதில் சக்திகளை
சேமிப்பில் செயல்படும் வகையில் வைக்க வேண்டும் எத்தனை சக்திகள்
உள்ளது. பட்டியல் உள்ள அல்லவா! சொல்லிற்காக எப்போதும் மனதில்
ஞான சிந்தனை செய்து நினைவில் வைக்க வேண்டும். நடத்தை, முகம்,
செயல், குணம் யாவிலும் சொரூபமாக வேண்டும் சதா தன்னை குண
மூர்த்தி, ஞான மூர்த்தி சக்தி சொரூபமென நினைவில் வைக்க வேண்டும்.
சக்திகள் இருக்கிறது ஞானமும் இருக்கிறது என கவனக் குறைவாக
இருக்கலாகாது. நடைமுறை சொரூபமாக வேண்டும் ஒவ்வொருவரையும்
ஈஸ்வரிய குடும்பத்தை சார்ந்தவர் எனும் உள்ளுணர்வில் பார்க்க
வேண்டும். இந்த ஆண்டு சமமாகியே தீர வேண்டும். இதற்கு கை
உயர்த்தினீர்கள். பாப்தாதாவின் வதனத்தில் அனைவர் கைகளும்
தெரியும். அங்கே இந்த சிறிய டி.வி இல்லை மிகப் பெரிய டி.வி
உள்ளது ஒரு நொடியில் அனைத்து சென்டரின் ரிசல்ட்டையும் பார்க்க
முடியும். பாப்சமான் ஆக வேண்டும் என்று உங்களுக்கு இருக்கின்ற
உற்சாகம் பாபாவிற்கு குஷிதான். அதிர்ஷ்டசாலிகள், மலர்ந்த முகம்
உடையவர்கள். ஒருபோதும் வாடி வதங்கிய முகம் கூடாது. உங்களை யார்
பார்த்தாலும் சதா குஷியாகவே பார்க்க வேண்டும். எவ்வளவு தான்
வேலையில் பிசியாக இருந்தாலும், தவறை திருத்திக்
கொண்டிருந்தாலும், புரியவைத்துக் கொண்டிருந்தாலும் முகத்தில்
கலக்கமும், சொல்லில் ஆவேசமும் கூடாது. இவ்வாண்டு இந்த மாற்றம்
செய்து காண்பியுங்க. பரிசு தருவீர்கள். ஆண்டு முழுவதும்
எப்போதும் மலர்முகத்துடன் இருக்க வேண்டும். விசயம் எது
வந்தாலும் சில சகோதர சகோதரிகள் சொல்கின்றார்கள், அனைவரும்
ஆன்மீக உரையாடல் செய்கின்றார்கள் தானே அப்போது சொல்கிறார்கள்
அவகத்தை காட்டவில்லையென்றால் புரிந்து கொள்ள மாட்டார்கள் மாறவே
மாட்டார்கள். முதலிலேயே தன் மனதில் இவர் மாற மாட்டார் என்ற
பாவனை ûத்து விட்டால் அவருக்கு முதலிலேயே அந்த வைப்ரேசன் சென்று
விடுகின்றது எனவே இந்த ஆண்டு கோபமோ அதன் குழந்தை குட்டிகளே
அனைத்திற்கும் விடை கொடுத்து அனுப்பி விடுங்கள் முடியுமா,
ஆவேசம் கூடாது. பாபா கேட்கின்றார். சரி சமயத்திற்கேற்ப வேலை
ஆகவேண்டு மென்று, மாற வேண்டுமென்பது கோபப்படுகிறீர்களே அவர்கள்
மாறுகிறார்களா? கோபப்பட்டால் யாரேனும் மாறியுள்ளார்களா,
பட்டியல் எடுங்கள் மேலும் முறைத்துக் கொள்வார்கள், மாறுவ தில்லை
மனதில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பெரியவராக இருந்தால் மனதில்
எதிர்பபு, வெளியில் சொல்ல முடியாது, சிறியவராயின் அழுவார்கள்.
ஆக இவ்வாண்டு என்னென்ன செய்வீர்கள்? அதையெல்லாம் பாபா
சொல்கிறார், பிடித்துள்ளதா? செய்வீர்களா? இப்போது கை
உயர்த்துங்கள் செய்வீர்களா? தொலைக்காட்சி இயக்குபவர்கள் போட்டோ
எடுங்கள். கை உயர்த்துங்கள் சிறிது உயர்த்துங்கள் டி.வி
எடுக்கின்றார்கள் நல்லது.
பாப்தாதா நேரத்தைப் பார்க்கின்றார். நேரம் மிக வேகமாக ஓடிக்
கொண்டிருக்கின்றது. நேரத்தை யார் எதிர் கொள்வது? நீங்கள் தானே
எதிர் கொள்ள வேண்டும் துக்கத்தில், பக்தியில் நேரத்தின்
கூக்குரல் குறைவாகவே கேட்கின்றீர்கள். தைரியம் இழந்துள்ளீர்கள்,
அவர்களுக்கு சிறகுகள் கொடுத்தால் பறப்பார்கள். தைரியம் ஊக்கம்
உற்சாகம் எனும் சிறகுகள் கொடுங்கள் நல்லது.
பாப்தாதாவின் வீட்டுப் பாடத்தை நாலாபுறமும் உள்ள குழந்தைகள்
நடைமுறைப்படுத்தி காண்பிப்பீர்களா. குழந்தைகள் அனைவருக்கும்
உளமார்ந்த அன்பு மற்றும் பன்மடங்கு அன்பு நினைவுகள் பெற்றுக்
கொள்க மேலும் அத்தகைய தகுதிவாய்ந்த குழந்தைகளுக்க பாப்தாதாவின்
நமஸ்காரம்.
இந்த ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் சுயமாற்றம், உலக
மாற்றத்திற்கான நாளாகவே கொண்டாடிக் கொண்டிருங்கள். ஒவ்வொரு
நாளும் புதிய மாற்றம் ஒவ்வொரு நாளும் புதிய சேவை, ஊக்கம்,
உற்சாகம், ஒரு நாளும் கவலை கூடாது, என்றென்றும் தனக்காக,
உலகிற்காக, சேவைக்காக புதுமை இவ்வாறாக திட சங்கல்பத்துடன்
நேரத்தை மிக அருகே கொணர்ந்து சம்பூர்ண பாப்சமானாகி பறந்து
பறக்க வையுங்கள் நல்லது ஓம் சாந்தி
ஆசீர்வாதம்:
ஒவ்வொருவருடைய கருத்திற்கும் மதிப்பளித்து உலகின் நன் மதிப்பை
பெறும் பாலகன் மற்றும் எஜமானன் ஆகுக !
சிறியவரோ பெரியவரோ எவராயினும் அனைவர் கருத்திற்கும் அவசியம்
மதிப்பளியுங்கள். ஏனெனில் எவருடைய கருத்தையும் புறக்கணிப்பது
தன்னைத் தானே புறக்கணிப்பதாகும். அவரது வீணான கருத்தை
புறக்கணிப்பதேயானாலும் முதலில் மரியாதை கொடுங்கள். சுயமரியாதை
கொடுங்கள் பிறகு அறிவுரை தாருங்கள். இதுவே விதி முறை. இத்தகைய
மதிப்பளிக்கும் சம்ஸ்காரத்தை தன்னுள் நிரப்பிக் கொண்டால் உலகின்
மதிப்பு உங்களுக்கு கிடைக்கும் இதற்காக பாலகனிலிருந்து எஜமானாக
எஜமானிலிருந்து பாலகனாகுக. புத்தியை எல்லையில்லா பேரளவில் நன்மை
செய்யும் நிலையில் நிரப்புக.
சுலோகன்:
நெற்றியில் என்றென்றும் துணைவனின் நினைவெனும் திலகம் அணிவதே
சுமங்கலியின் அடையாளம் ஆகும்.
அவ்யக்த இஷாரா: ஒற்றுமை மற்றும் விசுவாசத்தின் விசேஷதா மூலம்
வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்
ஒற்றுமை கெண்டுவர இரு விசயங்களை கையாள வேண்டும். ஒன்று ஏக்னாமி
எப்போதும் ஒருவர் பெயரை உச்சரிப்பது இரண்டாவது எண்ணம், நேரம்,
ஞான பொக்கிசங்களை எக்கனாமி சிக்கனம் செய்வது எப்போது இவ்வாறு
அனைவரும் ஏக்னாமி, எக்கனாமியை கையாளுவீர்களோ அப்போது ஒரு
தந்தையிடம் நமது அனைத்து விதமான வேற்றுமைகளும் உள்ளடங்கி விடும்.