08-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஆன்மிக சேவை செய்து
தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். பாபாவிடம்
உண்மையான மனதை வையுங்கள். அப்போது பாபாவின் மனதில் இடம்
பெறுவீர்கள்.
கேள்வி:
ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சியை
யார் செய்ய முடியும்? ஆத்ம அபிமானியின் அடையாளங்களைச்
சொல்லுங்கள்.
பதில்:
யாருக்கு படிப்பின் மீதும் பாபா
மீதும் அசைக்க முடியாத அன்பு உள்ளதோ, அவர்கள் ஆத்ம அபிமானி
ஆவதற்கான முயற்சி செய்ய முடியும். அவர்கள் குளிர்ச்சியாக
இருப்பார்கள். யாரிடமும் அதிகம் பேச மாட்டார்கள். அவர்களுக்கு
பாபாவிடம் அன்பு இருக்கும். நடத்தை மிகவும் ராயலாக இருக்கும்.
நமக்கு பகவான் படிப்பு சொல்லித் தருகிறார், நாம் அவருடைய
குழந்தைகள் என்று அவர்களுக்கு நஷா (பெருமிதம்) இருக்கும்..
அவர்கள் சுகம் தருபவர்களாக இருப்பார்கள். ஒவ்வோர் அடியும்
ஸ்ரீமத் படி எடுத்து வைப்பார்கள்.
ஓம் சாந்தி.
குழந்தைகள் சேவை பற்றிய செய்தியையும் கேட்க வேண்டும். பிறகு
மிக முக்கியமான மகாரதிகள் புத்திசாலிகள் யார் இருக்கிறார்களோ,
அவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துக் கொள்ள வேண்டும்.
பாபாவுக்குத் தெரியும், புத்திசாலிக் குழந்தைகளுக்குத் தான்
விசார் சாகர் மந்தன் நடைபெறும். மேளா அல்லது கண் காட்சியின்
திறப்புவிழாவை யார் மூலமாகச் செய்விப்பது? என்னென்ன
பாயின்ட்டுகளைச் சொல்ல வேண்டும்? சங்கராச்சாரியார் முதலானவர்கள்
உங்களுடைய இந்த விஷயங்களைப் புரிந்து கொள்வார்களானால்
சொல்வார்கள், இங்குள்ள ஞானம் மிகவும் உயர்ந்தது என்று.
இவர்களுக்குக் கற்றுத் தருபவர் யாரோ சிறந்தவராகத் தான் இருப்பா
ரெனத்தோன்றுகிறது என்பார்கள். பகவான் கற்பிக்கிறார் என்று
சொன்னால் அவர்களோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆக, கண்காட்சி
முதலியவற்றைத் திறந்து வைப்பதற்காக யார் வருகிறார்களோ,
அவர்களுக்கு என்னென்ன புரிய வைக்கிறீர்கள் என்பதை அனைவருக்கும்
சொல்ல வேண்டும். அல்லது டேப்பில் சுருக்கமாக நிரப்ப வேண்டும்.
எப்படி கங்கே தாதி சங்கராச்சாரியாருக்குப் புரிய வைத்தார்களோ,
அப்படிபட்ட சேவாதாரிக் குழந்தைகள் பாபாவின் மனதில் இடம்
பெறுவார்கள். அவ்வாறே ஸ்தூல சேவையும் உள்ளது. ஆனால் பாபா வின்
கவனம் யார் ஆன்மீக சேவை மூலம் அநேகருக்கு நன்மை செய்கின்றனரோ
அவர்கள் மீது செல்லும். நன்மையோ ஒவ்வொரு விஷயத் திலும்
இருக்கலாம். பிரம்மா போஜன் தயாரிப்பதிலும் நன்மை உள்ளது,
யுக்தியுடன் தயார் செய்தால். அதுபோல் யோக யுக்தியுடன் உணவு
சமைப் பவர்கள் என்றால் பண்டாராவில் (சமயலறையில்) மிகுந்த சாந்தி
இருக்க வேண்டும். நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். யாராவது
வந்தால் உடனே அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பாபா
புரிந்து கொள்ள முடியும் - சேவாதாரிக் குழந்தைகள் யார்? யார்
மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியுமோ, அவர்களைத் தான்
அடிக்கடி சேவைக்காக அழைக்கவும் செய்கின்றனர். ஆக, சேவை
செய்பவர்கள் தான் பாபா வின் மனதில் இடம் பிடித்து
இருக்கிறார்கள். பாபாவின் கவனம் முழுவதும் சேவாதாரிக்
குழந்தைகள் பக்கம் தான் செல்கின்றது. அநேகரோ நேரடியாக முரளி
கேட்ட போதும் கூட எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. தாரணை
ஆவதில்லை. ஏனெனில் அரைக் கல்பத்தின் தேக அபிமானத்தின் நோய்
மிகவும் கடுமையானது. அதைப் போக்கு வதற்காக மிகச் சிலரே
நல்லபடியாகப் புருஷார்த்தம் செய்கின்றனர். அநேகரிடம் ஆத்ம
அபிமானி ஆவதற்கான முயற்சி சென்று சேர்வதில்லை. பாபா புரிய
வைக்கிறார் - குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆவதற்கு மிகுந்த முயற்சி
வேண்டும். சிலர் சார்ட்டும் கூட அனுப்பி வைக்கின்றனர் என்றாலும்
முழுமையாக அனுப்புவதில்லை. இருந்தாலும் கொஞ்சம் கவனம்
இருக்கிறது. ஆத்ம அபிமானி ஆவதற்கான கவனம் அநேகருக்குக் குறைவாக
உள்ளது. ஆத்ம அபிமானிகள் மிகவும் சாந்தமாக இருப்பார்கள்.
அவர்கள் இவ்வளவு அதிகமாக உரையாடல் செய்ய மாட்டார்கள்.
அவர்களுக்கு பாபாவிடம் அன்பு அந்த அளவுக்கு இருக்கும், கேட்கவே
வேண்டாம். ஆத்மா வுக்கு அவ்வளவு குஷி இருக்க வேண்டும்- எந்த ஒரு
மனிதருக்கும் ஒருபோதும் இல்லாத அளவு! இந்த லட்சுமி-
நாராயணருக்கோ ஞானம் கிடையாது. ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்குத்
தான் உள்ளது. உங்களுக்குத் தான் பகவான் படிப்பு சொல்லித்
தருகிறார். பகவான் நமக்குக் கற்பிக்கிறார் - இந்த நஷாவும்
உங்களில் ஏதோ ஓரிருவருக்கு உள்ளது. அந்த நஷா இருக்குமானால்
பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். அவர்கள் ஆத்ம அபிமானி எனச்
சொல்லப் படுவார்கள். ஆனால் அந்த நஷா இருப்பதில்லை. நினைவில்
இருப்பவர்களின் நடத்தை மிக நல்ல ராயலாக இருக்கும். நாம்
பகவானின் குழந்தைகள். அதனால் பாடலும் உள்ளது - அதிந்திரிய சுகம்
பற்றி கோப- கோபியரிடம் கேளுங்கள் என்று, அவர்கள் ஆத்ம
அபிமானியாக இருந்து பாபாவை நினைவு செய்வார்கள். நினைவு
செய்வதில்லை, அதனால் சிவபாபாவின் மனதில் இடம் பிடிப்பதில்லை.
சிவபாபாவின் மனதில் இல்லை என்றால் தாதாவின் மனதிலும் இடம் பெற
முடியாது. அவருடைய மனதில் இருப்பார்களானால் இவருடைய மனதிலும்
இருப்பார்கள். பாபா ஒவ்வொரு வரைப் பற்றியும் அறிவார்.
குழந்தைகள் தாங்களே கூடப் புரிந்து கொண்டுள்ளனர், நாம் என்ன
சேவை செய்கிறோம் என்று. சேவையின் ஆர்வம் குழந்தைகளுக்கு அதிகம்
இருக்க வேண்டும். சிலருக்கு சென்டரைப் பராமரிப்பதிலும் ஆர்வம்
உள்ளது. சிலருக்கு சித்திரங்களை உருவாக்கு வதில் ஆர்வம் உள்ளது.
பாபாவும் சொல்கிறார் - எனக்கு ஞானம் நிறைந்த ஆத்மாக்களாகிய
குழந்தைகளை மிகவும் பிடிக்கும். அவர்கள் தந்தையின் நினைவிலும்
இருப்பார்கள், மேலும் சேவை செய்வதற்கும் துடித்துக்
கொண்டிருப்பார்கள். சிலரோ முற்றிலும் சேவையே செய்வ தில்லை. பாபா
சொல்வதையும் ஏற்று நடப்பதில்லை. பாபாவோ அறிவார் இல்லையா - எங்கே
யார் சேவை செய்ய வேண்டும் என்று? ஆனால் தேக-அபிமானத்தின்
காரணத்தால் தனது வழிப்படி செல்கின்றனர். அதனால் அவர்கள்
பாபாவின் மனதில் இடம் பெறுவதில்லை. அஞ்ஞான காலத் திலும் கூட
எந்தக் குழந்தையாவது கெட்ட நடத்தையுடன் இருந்தால் தந்தையின்
மனதில் இருப்ப தில்லை. அவர்களைக் குழந்தை எனப் புரிந்து
கொள்கின்றார். சங்கதோஷத்தில் (தீய சேர்க்கை) கெட்டுப்
போகின்றனர். இங்கேயும் யார் சேவை செய்கின்றனரோ, அவர்கள் தாம்
பாபாவுக்குப் பிடித்தமானவர்கள். யார் சேவை செய்வதில்லையோ, அவர்
மீது பாபா அன்பு செலுத்த மாட்டார். அதிர்ஷ்டத்தின் அனுசாரம்
தான் படிப்பார் கள் எனப் புரிந்து கொண்டுள்ளார். பிறகும் கூட
அன்பு யார் மீது இருக்கும்? அதுவோ விதிமுறை இல்லையா? நல்ல
குழந்தைகளை மிகுந்த அன்போடு அழைப்பார்கள். நீ மிகவும் சுகம்
தருபவன், நீ தந்தை மீது அன்புள்ளவன் எனச் சொல்வார்கள். யார்
பாபாவை நினைவு செய்வதே இல்லை என்றால் அவர்களைப் பிதா சிநேகி
என்று எப்படிச் சொல்வார்கள்? தாதா சிநேகி ஆகக் கூடாது.
தந்தையின் சிநேகி ஆக வேண்டும். யார் தந்தையின் சிநேகியாக
உள்ளார்களோ, அவர்களின் பேச்சு-நடத்தை மிக இனிமையாக, அழகாக
இருக்கும். விவேகம் இப்படிச் சொல்கிறது-நேரம் உள்ளது என்றாலும்
சரீரத்தின் மீது எந்த நம்பிக்கையும் கிடையாது. உட்கார்ந்தவாறே
விபத்து ஏற்பட்டு விடுகின்றது. சிலர் ஹார்ட் ஃபெயிலாகி விடு
கின்றனர். சிலருக்கு நோய் வந்து விடுகிறது. மரணம் திடீரென்று
வந்து விடுகிறது இல்லையா? அதனால் சுவாசத்தின் மீதோ நம்பிக்கை
கிடையாது. இயற்கை சேதங்களின் ஒத்திகையும் நடைபெற்றுக்
கொண்டுள்ளது. காலம் தவறி மழை பெய்வதாலும் நஷ்டத்தை ஏற்படுத்தி
விடுகிறது. இந்த உலகமே துக்கம் தரக்கூடியது. பாபாவும் கூட
எப்போது மிகுந்த துக்கம் உள்ளதோ, இரத்த ஆறு ஓட இருக்கிறதோ,
அந்த மாதிரி நேரத்தில் வருகிறார். முயற்சி செய்ய வேண்டும்- நாம்
நமது முயற்சியைச் செய்து 21 பிறவிகளுக்கான நன்மையையோ அடைய
வேண்டும். அநேகருக்கு தங்களின் நன்மையைச் செய்து கொள்வதற்கான
அக்கறை கூடக் காணப் படுவதில்லை.
பாபா இங்கே அமர்ந்து முரளி நடத்துகிறார் என்றாலும் புத்தி
சேவாதாரிக் குழந்தைகளின் பக்கம் உள்ளது. இப்போது
சங்கராச்சாரியார் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
இல்லையென்றால் இவர்கள் இதுபோல் எங்கும் செல்ல மாட்டார்கள்.
மிகவும் கர்வத்தோடு இருக்கின்றனர். ஆகவே அவர்களுக்கு மதிப்பும்
கொடுக்க வேண்டியுள்ளது. மேலே சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும்.
கூடவே அவர்கள் அமர முடியும் என்பதில்லை. அவர்களுக்கு மதிப்பு
அதிகம் வேண்டியுள்ளது. பணிவுள்ளவர்கள் என்றால் அவர்கள் வெள்ளி
முதலியவற்றின் சிம்மாசனத்தை விட்டுவிடு வார்கள். பாபாவைப்
பாருங்கள், எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்! யாருமே அறிந்து
கொள்ள வில்லை. குழந்தைகளாகிய உங்களிலும் கூட அபூர்வமாக யாரோ
தான் அறிந்து கொண்டிருக் கிறார்கள். எவ்வளவு நிரகங்காரி பாபா!
இதுவோ தந்தை மற்றும் குழந்தைகளின் சம்மந்தம் இல்லையா? எப்படி
லௌகிக் தந்தை குழந்தைகளுடன் இருக்கிறார், சாப்பிடுகிறார்,
சாப்பிட வைக்கிறார். இவர் எல்லையற்ற தந்தை. சந்நியாசிகள்
முதலானவர்களுக்கு பாபாவின் அன்பு கிடைப்பதில்லை. குழந்தைகள்
நீங்கள் அறிவீர்கள், கல்ப- கல்பமாக நமக்கு எல்லையற்ற தந்தை யின்
அன்பு கிடைக்கிறது. பாபா நம்மை மலராக மாற்றுவதற்கு மிகுந்த
முயற்சி செய்கிறார். ஆனால் டிராமாவின் அனுசாரம் அனைவருமோ மலராக
மாறுவதில்லை. இன்று மிக நல்ல- நல்லவர்களெல்லாம் நாளை விகாரி ஆகி
விடுகிறார்கள். பாபா சொல்வார், அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால்
வெறென்ன செய்வார்கள்? அநேகருக்கு அசுத்த நடத்தை ஆகி விடுகிறது.
கட்டளைக்கு விரோதமாக நடக்கின்றனர். ஈஸ்வரனின் வழிப்படியும்
நடக்கவில்லை என்றால் அவர்களின் நிலை என்னவாக ஆகும்?
உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் தந்தை தான், வேறு யாரும் இல்லை.
பிறகு தேவதைகளின் சித்திரங்களில் பார்ப்பீர்களானால் இந்த
லட்சுமி-நாராயணர் தான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர்கள். ஆனால்
மனிதர்கள் இதையும் தெரிந்திருக்கவில்லை, அதாவது இவர்களை இதுபோல்
ஆக்கியவர் யார்? பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு படைப்பவர்
மற்றும் படைப்பின் ஞானத்தை நன்கு அமர்ந்து புரிய வைக்கிறார்.
உங்களுக்கோ உங்களுடைய சாந்திதாமம், சுகதாமம் தான் நினைவு
வருகிறது. சேவை செய்பவர்களின் பெயர்கள் நினைவில் வருகின்றன.
நிச்சயமாக யார் பாபாவின் கீழ்ப்படிதலான குழந்தைகளாக உள்ளனரோ,
அவர்களின் பக்கம் தான் மனம் செல்லும். எல்லையற்ற தந்தை ஒரே ஒரு
தடவை வருகிறார். அந்த லௌகிக் தந்தையோ ஜென்ம-ஜென்மாந்தரமாகக்
கிடைக்கிறார். சத்யுகத்திலும் கிடைக்கிறார். ஆனால் அங்கே இந்தத்
தந்தை (சிவபாபா) கிடைக்க மாட்டார். இப்போதைய படிப்பின் மூலம்
நீங்கள் பதவி பெறுகிறீர்கள். இதையும் குழந்தைகள் நீங்கள் தான்
அறிவீர்கள், பாபாவிடம் நாம் புது உலகத்திற் காகப் படித்துக்
கொண்டிருக்கிறோம். இது புத்தியில் நினைவிருக்க வேண்டும்.
மிகவும் சுலபம் தான். பாபா விளையாடிக் கொண்டிருக்கிறார் என
வைத்துக் கொள்ளுங்கள், திடீரென்று யாராவது வந்து விடுகிறார்கள்
என்றால் பாபா உடனே அங்கேயே அவர்களுக்கு ஞானம் கொடுக்கத் தொடங்கி
விடுவார். எல்லையற்ற தந்தையை அறிவீர்களா? தந்தை வந்துள்ளார்,
பழைய உலகத்தைப் புதியதாக ஆக்குவதற்காக. இராஜயோகம் கற்பிக்கிறார்.
பாரதவாசிகளுக்குத் தான் கற்பிக்க வேண்டும். பாரதம் தான்
சொர்க்கமாக இருந்தது. அங்கே இந்த தேவி-தேவதைகளின் இராஜ்யம்
இருந்தது. இப்போதோ நரகம். நரகத்திலிருந்து பிறகு சொர்க்கமாக
பாபா தான் உருவாக்குவார். இப்படி-இப்படி முக்கிய விஷயங்களை
நினைவு செய்து யாராவது வந்தால் அவர்களுக்கு அமர்ந்து புரிய
வையுங்கள். அப்போது எவ்வளவு குஷியாகி விடுவார்கள்! பாபா
வந்துள்ளார் என்று மட்டும் சொல்லுங்கள். இது கீதையில்
பாடப்பட்டுள்ள அதே மகாபாரத யுத்தம். கீதையின் பகவான்
வந்திருந்தார், கீதை சொல்லியிருந்தார். எதற்காக? மனிதரில்
இருந்து தேவதை ஆக்குவதற்காக. தந்தையாகிய என்னையும் ஆஸ்தியையும்
நினைவு செய்யுங்கள் என்று மட்டும் பாபா சொல்கிறார். இது துக்க
உலகம். இவ்வளவு புத்தியில் இருக்குமானால் கூட குஷி இருக்கும்.
ஆத்மாக்கள் நாம் பாபாவுடன் கூடவே சாந்திதாமத்துக்குச் செல்லப்
போகிறவர்கள். பிறகு அங்கிருந்து பாகத்தை நடிப்பதற்காக
முதல்-முதலில் சுகதாமத்திற்கு வருவோம். எப்படி கல்லூரி யில்
படிக்கின்றனர் என்றால் நாம் இதை-இதைப் படிக்கிறோம், பிறகு
இதுபோல் ஆவோம் என்பதைப் புரிந்துள்ளனர். வக்கீலாக ஆவோம், அல்லது
போலீஸ் சூப்பரின்டென்டன்ட் ஆவோம், இவ்வளவு பணம் சம்பாதிப்போம்.
குஷியின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். குழந்தை களாகிய
உங்களுக்கும் இந்தக் குஷி இருக்க வேண்டும். நாம் எல்லையற்ற
தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தி பெறுகிறோம். பிறகு நாம்
சொர்க்கத்தில் நமது மாளிகையைக் கட்டு வோம். நாள் முழுவதும்
புத்தியில் இந்தச் சிந்தனை இருக்குமானால் குஷியும் இருக்கும்.
தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வோம்.
எந்தக் குழந்தைகளிடம் ஞான செல்வம் உள்ளதோ, அவர்களின் கடமை தானம்
செய்வதாகும். செல்வம் உள்ளது, ஆனால் தானம் செய்வதில்லை என்றால்
அவர்கள் கஞ்சன் எனச் சொல்லப்படு வார்கள். அவர்களிடம் செல்வம்
இருந்தாலும் இல்லாதது போலத்தான். செல்வம் இருந்தால் அவசியம்
தானம் செய்ய வேண்டும். நல்ல- நல்ல மகாரதிக் குழந்தைகள் சதா
பாபாவின் மனதில் அமர்ந்துள்ளனர். ஒரு சிலரைப் பற்றி சிந்தனை
உள்ளது - இவர்கள் ஒருவேளை விட்டுப் போக லாம் என்று. சூழ்நிலைகள்
அதுபோல் உள்ளன. தேக அகங்காரம் அதிகமாக உள்ளது. எந்த சமயமும்
கையை விட்டுப்போய் தங்கள் வீட்டில் அமர்ந்து கொள்ளலாம். முரளி
வகுப்பை நன்றாக நடத்தலாம், ஆனால் தேக அபிமானம் அதிகம் உள்ளது.
கொஞ்சம் பாபா எச்சரிக்கை செய்தாலும் விட்டுப்போய் விடுவார்கள்.
இல்லையென்றால் பாடல் உள்ளது - எட்டி உதைத்தாலும் அன்பு
செய்யுங்கள்.......... இங்கே பாபா சரியான விஷயம் தான்
சொல்கிறார் என்ற போதிலும் கோபம் அதிகமாக வந்து விடுகிறது.
இப்படி-இப்படிக் குழந்தைகளும் உள்ளனர், சிலரோ உள்ளுக்குள்
மிகவும் நன்றி சொல்கின்றனர். சிலர் உள்ளுக்குள்ளேயே எரிந்து
இறந்து விடுகிறார்கள். மாயா வின் தேக அபிமானம் அதிகம் உள்ளது.
இப்படியும் அநேகக் குழந்தைகள் உள்ளனர்- முரளி கேட்பதே இல்லை.
வேறு சிலரோ முரளி கேட்காமல் இருக்க முடிவதில்லை. முரளி படிப்ப
தில்லை என்றால் தன்னுடைய பிடிவாதம் தான், நம்மிடமோ ஞானம் அதிகம்
உள்ளது என்று, வேறெதுவும் இல்லை.
ஆக, எங்கே சங்கராச்சாரியார் முதலானவர்கள் கண்காட்சிக்கு
வருகிறார்களோ, சேவை நன்கு நடைபெறுகிறது என்றால் அந்தச் செய்தியை
அனைவருக்கும் அனுப்ப வேண்டும். அப்போது எப்படி சேவை நடைபெற்றது
என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள், மேலும் அவர்களும் கற்றுக்
கொள்வார்கள். இவ்வாறு சேவைக்கான சிந்தனைகள் யாருக்கு
வருகின்றனவோ, அவர்களைத்தான் பாபா சேவாதாரிகள் எனப் புரிந்து
கொள்வார். சேவையில் ஒருபோதும் களைத்துப்போகக் கூடாது. இதுவோ
அநேகருக்கு நன்மை செய்வது இல்லையா? பாபாவுக்கோ இதே அக்கறை
உள்ளது. அனைவருக்கும் இந்த ஞானம் கிடைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். நாள்தோறும்
முரளியில் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்-இந்த ஆன்மிக சேவை
முக்கியமானது. கேட்க வேண்டும், மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
ஆர்வம் இருக்க வேண்டும். பேட்ஜ் எடுத்துக் கொண்டு நாள்தோறும்
கோவில்களுக்குச் சென்று புரிய வையுங்கள் - இந்த
லட்சுமி-நாராயணர் எப்படி இதுபோல் ஆனார்கள்? பிறகு அவர்கள் எங்கே
சென்றார்கள்? எப்படி இராஜ்ய பாக்கியத்தைப் பெற்றார்கள்?
கோவில்களின் வாசலில் சென்று அமர்ந்து கொள்ளுங் கள். யாராவது
வந்தால் கேளுங்கள் - இந்த லட்சுமி-நாரயணர் யார்? எப்போது இவ
ர்களின் இராஜ்யம் பாரதத்தில் இருந்தது? அனுமாரும் செருப்புகள்
வைக்குமிடத்தில் போய் அமர்ந்து கொண்டார் இல்லையா? அதற்கும் கூட
இரகசியம் உள்ளது இல்லையா? இரக்கம் வருகின்றது. சேவைக்கான
யுக்திகள் பாபா நிறைய சொல்கிறார். ஆனால் அவற்றை அபூர்வமாகச்
சிலர் தான் நடைமுறையில் கொண்டு வருகின்றனர். சேவை கள் நிறைய
உள்ளன. பார்வையற்றவர்களுக்கு ஊன்றுகோல் ஆக வேண்டும். யார் சேவை
செய்வதில்லையோ, புத்தி தூய்மையாக இல்லை என்றால் பிறகு தாரணை
ஆவதில்லை. இல்லை யென்றால் சேவை மிகவும் சுலபம். நீங்கள் இந்த
ஞான ரத்தினங்களின் தானம் செய்கிறீர்கள். யாராவது பணக்காரர்கள்
வந்தால் சொல்லுங்கள், நாங்கள் இந்தப் பரிசை உங்களுக்குக்
கொடுக்கிறோம். அதன் அர்த்தம் உங்களுக்குப் புரிய வைக்கிறோம்.
இந்த பேட்ஜ்கள் மீது பாபாவுக்கு அதிக மதிப்பு உள்ளது. வேறு
யாருக்கும் இவ்வளவு மதிப்பு கிடையாது. இதில் மிக நல்ல ஞானம்
நிரம்பியுள்ளது. ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால்
பாபாவும் கூட என்ன செய்ய முடியும்? பாபாவையும் படிப்பையும்
விட்டுவிடுவது என்பது பெரியதிலும் மிகப்பெரிய தற்கொலையாகும்.
பாபாவுடைய வராக ஆகிவிட்டுப் பிறகு அவர் கையை விடுவது என்றால்
இதுபோல் மகான் பாவ காரியம் வேறெதுவும் கிடையாது. அவர்களைப் போல்
அபாக்கியவான் வேறு யாரும் கிடையாது. குழந்தைகள் ஸ்ரீமத்படி
நடக்க வேண்டும் இல்லையா? நாம் உலகத்தின் எஜமானர் ஆகப் போகிறோம்
என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இது சாதாரண விஷயமல்ல. நினைவு
செய்வீர் களானால் குஷியும் இருக்கும். நினைவு இருப்பதில்லை
என்றால் பாவங்கள் பஸ்மமாகாது. தத்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள்
என்றால் குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். ஆனால் மாயா அதிக
விக்னங்களை ஏற்படுத்துகிறது. குழந்தைகளைக் கீழே விழச் செய்து
விடுகின்றது. பாபாவின் ஸ்ரீமத்தையே பெற்றுக் கொள்வதில்லை
என்றால் அவர்கள் என்ன பதவி பெறுவார்கள்? கொஞ்சம் வழிமுறை
மட்டும் பெற்றுக் கொண்டால் பிறகு அப்படியே இலேசான (குறைந்த)
பதவி தான் பெறுவார்கள். நல்லபடியாக வழிமுறை பெற்றுக்
கொள்வார்களானால் உயர்ந்த பதவி பெறுவார் கள். எல்லையற்ற இராஜதானி
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் செலவு முதலிய வற்றின்
எந்த விஷயமும் கிடையாது. குமாரிகள் வருகின்றனர். கற்றுக் கொண்டு
அநேகரைத் தங்களைப் போல் ஆக்குகின்றனர். இதில் கட்டணம்
முதலியவற்றின் விஷயமே கிடையாது.. பாபா சொல்கிறார், உங்களுக்கு
சொர்க்கத்தின் இராஜபதவி தருகிறேன். நான் சொர்க்கத்திற்கும்
வருவ தில்லை. சிவபாபாவோ கொடுக்கின்ற வள்ளல் இல்லையா? அவருக்கு
செலவுக்கு என்ன கொடுப் பார்கள்? இவர் (பிரம்மா) அனைத்தையும்
அவருக்குக் கொடுத்து விட்டார், வாரிசாக ஆக்கிக் கொண்டார்.
பதிலுக்குப் பாருங்கள், இராஜ்யம் கிடைக்கிறது இல்லையா? இது
முதல்-முதல் உதாரணம். முழு உலகத்திலும் சொர்க்கத்தின் ஸ்தாபனை
நடைபெறுகின்றது. செலவு ஒரு பைசா கூடக் கிடையாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தந்தையின் நண்பனாக (பிடித்தமானவராக) ஆவதற்காக மிக-மிக சுகம்
தருபவராக ஆக வேண்டும். தன்னுடைய பேச்சு- நடத்தையை மிகவும்
இனிமையாக, ராயலாக வைத்துக் கொள்ள வேண்டும். சேவை செய்யக்
கூடியவராக ஆக வேண்டும். அகங்காரமற்றவராகி சேவை செய்ய வேண்டும்.
2) படிப்பு மற்றும் பாபாவை விட்டுவிட்டு ஒருபோதும் தன்னையே
அழித்துக் கொள்ளும் மகாப்பாவியாக ஆகக் கூடாது. முக்கியமானது
ஆன்மிக சேவை, இந்த சேவையில் ஒருபோதும் களைத்துப் போகக் கூடாது.
ஞான ரத்தினங்களின் தானம் செய்ய வேண்டும். கருமி ஆகக் கூடாது.
வரதானம்:
சதா உண்மையான இருப்பிடம் மற்றும் உண்மையான சொரூபத்தின்
நினைவினால் விடுபட்டவராக, பற்றற்றவராக, அன்பானவராக ஆகுக.
நிராகாரி உலகம் மற்றும் நிராகாரி ரூபத்தின் நினைவு தான் சதா
பற்றற்றவராக மற்றும் அன்பானவராக ஆக்குகிறது. நாமே நிராகாரி
உலகத்தின் நிவாசி ஆவோம், இங்கே சேவைக்காக அவதாரம்
செய்திருக்கின்றோம். நாம் இந்த மரண உலகத்தைச் சேர்ந்தவர்கள்
அல்ல, ஆனால், அவதாரம் செய்திருப்பவர்கள். இந்த சிறியதொரு விஷயம்
மட்டும் நினைவு இருந்ததென்றால் விடுபட்டுவிடுவீர்கள். யார்
அவதாரம் செய்திருப்பதாகப் புரிந்து கொள்ளாமல் குடும்பஸ்தன் என
புரிந்திருக்கின்றார்களோ, அந்த குடும்பஸ்தரின் வண்டி சேற்றில்
மாட்டியிருக்கிறது. குடும்பஸ்தன் என்பது சுமையான நிலை ஆகும்
மற்றும் அவதாரம் என்பது முற்றிலும் இலகுவான நிலை ஆகும். அவதாரம்
என புரிந்து கொள்வதால் தன்னுடைய உண்மையான இருப்பிடம், உண்மையான
சொரூபம் நினைவிருக்கும் மற்றும் விடுபட்டும் விடுவீர்கள்.
சுலோகன்:
யார் தூய்மையாக மற்றும் விதிப்பூர்வமாக ஒவ்வொரு காரியமும்
செய்கின்றார்களோ, அவர்களே பிராமணர் ஆவார்கள்.
அவ்யக்த சமிக்ஞை : சத்தியம் மற்றும் பண்பு நிறைந்த கலாச்சாரத்தை
தனதாக்குங்கள்
யார் பணிவாக இருக்கின்றார்களோ, அவர்களே புதிய படைப்பை செய்ய
முடியும். சுபபாவனை மற்றும் சுபவிருப்பத்தின் விதையே நிமித்த
உணர்வு மற்றும் பணிவான உணர்வு ஆகும். எல்லைக்குட்பட்ட தன்மானம்
இருக்கக் கூடாது, ஆனால், பணிவு இருக்க வேண்டும். இப்பொழுது
தன்னுடைய வாழ்வில் சத்தியம் மற்றும் பண்பு நிறைந்த சமஸ்காரத்தை
தாரணை செய்யுங்கள். ஒருவேளை, விருப்பம் இல்லாமலேயே எப்பொழுதாவது
கோபம் அல்லது எரிச்சல் வந்தது என்றால் உள்ளத்தில் இருந்து
இனிமையான பாபா என்று சொல்லுங்கள், அப்பொழுது அதிகப் படியான உதவி
கிடைத்துவிடும்.