08.03.26 காலை முரளி
ஓம் சாந்தி 18.01.2009 பாப்தாதா,
மதுபன்
40 வருட அவ்யக்த பாலனையின் ரிட்டர்ன் (கைம்மாறு) - 4 விசயங்கள்
- சுபசிந்தனையாளர் ஆகுங்கள், சுபசிந்தனை செய்யுங்கள், சுபமான
விருத்தி மூலம் சுபமான வாயுமண்டலத்தை உருவாக்குங்கள் மற்றும்
ஜீரோ(0) மற்றும் ஹீரோவின் நினைவில் இருங்கள்.
இன்று பாப்தாதா நாலாபுறங்களிலும் இருக்கும் தன்னுடைய சேவையில்
துணையாக இருக்கும் குழந்தைகளை சந்திப்பதற்காக
வந்திருக்கின்றார்கள். ஆதி சேவையில் துணையாக இருந்தவர்கள், அதன்
கூடவே, இப்பொழுது சேவையில் துணையாக இருக்கும் இன்னும் சிலர்
சேவையை நல்லவிதமாக விருத்தி செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.
பாப்தாதா தங்களுக்குத் துணையாக இருப்பவர்களைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றார்கள். மேலும், ஆஹா!
என்னுடைய விஷ்வ பரிவர்த்தன் சேவைக்குத் துணையாக இருப்பவர்கள்,
ஆஹா! என்ற பாடலை உள்ளத்தில் பாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இன்று அமிர்தவேளையில் இருந்து நாலாபுறங் களிலும் அன்பின்
மாலைகளை பாப்தாதாவிற்கு அணிவித்துக்கொண்டு இருந்தார்கள். மூன்று
விதமான மாலைகள் இருந்தன. ஒன்று தந்தைக்கு சமமாக ஆக வேண்டும்
என்ற ஊக்க உற்சாகத் தின் மாலை, இரண்டாவது பிரிந்து இருக்கும்,
பந்தனத்தில் இருக்கும் கோபிகைகளுடைய மாலை ஆகும். அவர்களுடைய
மாலைகளோ இருந்தன, ஆனால், ஜொலிக்கக்கூடிய, மிகவும் விலை
மதிப்பற்ற கண்ணீர் துளிகளின் மாலையும் இருந்தது. ஒவ்வொரு
கண்ணீர் துளியும் முத்துக்கு சமமாக ஜொலித்துக் கொண்டு இருந்தது.
மேலும், மூன்றாவது மாலை சில சில குழந்தைகளின் புகார்களின்
மாலையாக இருந்தது.
இன்று அமிர்தவேளையில் இருந்து அனைவருக்குள்ளும் விசேஷமாக அன்பு
நிறைந்திருந்தது தெரிந்தது. பாப்தாதா விராட ரூபம் போல் கரங்களை
விரித்து அனைத்துக் குழந்தைகளையும் கரங்களுக்குள் அணைத்துக்
கொண்டார்கள். இன்றைய தினம் அன்பின் கூடவே அனைத்து சக்தி களையும்
வில் (அர்ப்பணம்) செய்த தினமாகும். ஒரு குழந்தையின் (பிரகாஷ்மணி
தாதி), கைக்குள் கை கோர்த்து, கூடவே அனைத்து குழந்தைகளுக்கும்
(சக்தி சேனை மற்றும் பாண்டவர்களுக்கு) வில் பவர்ஸை (மனோ
சக்திகள்) வில் செய்தார். சில குழந்தைகள், பாண்டவர்கள் மற்றும்
சக்திகள், மறைமுகமான ரூபத்தில் உள்நோக்குமுகம் உடையவர்களாகி
முயற்சியில் தீவிர வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றார்கள்
என்பதை பாப்தாதா பார்த்தார்கள். வெளிப்படையாகத் தெரியவில்லை,
ஆனால், நல்ல முயற்சியாளர்களாக இருக்கின்றார்கள். பாப்தாதா இன்று
அனைத்து குழந்தைகளுடைய விசேஷ ரூபத்தைப் பார்த்தார்கள்,
அன்பினுடைய பாடம் அனை வருடைய முகங்களையும் ஜொலிக்க
வைத்துக்கொண்டு இருந்தது. குழந்தைகள் ஞான சொரூப ஆத்மாக்களாக
இருக் கின்றீர்கள், ஆனால், அன்பினுடைய பாடம் அவசியமானதாகும்.
ஏனெனில், அன்பானவர்கள் உழைப்பு குறைவாகவும் மற்றும் அன்பினுடைய
அனுபவத்தில் சகஜ மாகவும் இருப்பார்கள். அன்பின் சக்தியானது
எப்பேற்பட்ட மலை போன்ற பிரச்சனை வந்தாலும், அந்த மலையைக் கூட
பஞ்சு போல் ஆக்கிவிடுகிறது. அன்பு என்பது ஒரு குடை நிழல் ஆகும்.
குடை நிழலுக்குள் இருக்கும் காரணத்தினால் அவர்கள் சதா
பாதுகாப்பாக இருப்பார்கள். சகஜமாக இருப்பார்கள். அன்பினால்
பரமாத்மா அதாவது பகவானைக் கூட தன்னுடைய நண்பனாக்கி விடுவார்கள்.
இதன் ஞாபகார்த்தமாக இறை நண்பனைப் பற்றிய ஒரு கதை உள்ளது. இறைவனை
நண்பனாக்கி எந்த ஒரு பிரச்சனையையும் நண்பன் என்ற உறவினால்
சுலபமாக்கிவிடுவார்கள். தந்தையைத் தன்னுடைய துணைவன்
ஆக்கிவிடுவார்கள். ஞானம் விதை ஆகும், ஆனால், அன்பு என்ற
தண்ணீரானது விதையில் பிராப்தியின் பழத்தை (பலனை) கொடுக்கின்றது.
தந்தை யினுடைய அன்பான குழந்தைகள் தந்தையை நினைவு செய்வதை
உழைப்பாக நினைப் பதில்லை, ஆனால், மறப்பது கடினம் என்று நினைக்
கின்றார்கள். அன்பானவர்கள் ஒருபொழுதும் அன்பை மறக்க முடியாது.
உள்ளத்தின் அன்போடு என்னுடைய பாபா என்று கூறியவுடன் அனைத்து
பொக்கிஷங்களின் சாவி கிடைத்துவிடுகிறது. எனவே, பாப்தாதா கூட
அப்பேற்பட்ட அன்பானவர் களுக்கு முன்னால் ஆஜராகிவிடுகின்றார்கள்.
நினைவோ அனைவரும் செய்கின்றனர், ஆனால், சிலர் கொஞ்சம் கொஞ்சம்
உழைக் கின்றார்கள் மற்றும் சிலர் சதா அன்புக் கடலில் லவ்லீன் (மூழ்கிய
நிலை) ஆக இருக்கின்றார்கள். ஆத்மா பரமாத்மாவிற்குள் ஐக்கியம்
ஆகிவிடுகின்றது என்று உலகத்தினர் கூறுகின்றனர். ஆனால், ஆத்மா
பரமாத்மாவின் அன்பில் மூழ்கிவிடுகின்றது. ஐக்கியமாகுவதில்லை,
அன்பில் மூழ்கி விடுகின்றது.
இன்றைய தினம் அன்பில் லவ்லீனாகி இருக்கும் தினமாகும். உழைப்பு
முடிவடைந்து அன்பின் ரூபமாக மாறிவிடுகின்றது. பாப்தாதா அனைத்து
குழந்தை களின் ரிசல்ட்டையும் (முடிவையும்) பார்த்தார்கள்,
பெரும்பான்மை யினர் வீட்டுப்பாடம் செய்திருந்தார்கள். தந்தைக்கு
சமமாவதற்கான இலட்சியத்தை அடிக்கடி ரிவைசும் (திரும்பப் படித்தல்)
செய்தார்கள், ரியலைசும் (உணர்தல்) செய்திருந்தார்கள். 75
சதவிகிதம் குழந்தைகளுடைய ரிசல்ட் நன்றாக இருந்தது. மேலும்,
தந்தைக்கு சமமாக ஆகியே தீர வேண்டும், என்ன புயல் வேண்டுமானாலும்
வரட்டும், இது கலியுகம் முடிவடைவதற்கான சமயம் ஆகும், ஆகையால்,
புயல் வரும், பரிவர்த்தனைக்கான சமயம் அல்லவா, ஆனால்,
குழந்தைகளாகிய உங்களுக்கு புயல் என்பது என்ன? புயல் என்பது
புயல் அல்ல, ஆனால், பரிசு ஆகும். ஏனெனில், பாப்தாதாவின்
வரதானங்களை வழங்கும் கரம் முயற்சி செய்யும் அனைத்து
குழந்தைகளுடைய தலை மீது உள்ளது. யார் திடசங்கல்பம் அதாவது
உறுதித் தன்மையின் சாவியை காரியத்தில் ஈடுபடுத்தி
இருக்கின்றார்களோ, அவர்கள் இப்போதைய ரிசல்ட்டின் அனுசாரம்
வெற்றியையும் அடைந்து இருக்கின்றார்கள், ஆனால், சதா
காலத்திற்காக புயலைப் பரிசாக்கி, பிரச்சனைக்கு சமாதான ரூபம்
கொடுத்து முன்னேறிச் செல்லுங்கள். பாப்தாதா இப்போதைய
ரிசல்ட்டைப் பார்த்து குஷி அடைகின்றார்கள். என்ன யோக தபஸ்யா
செய்திருக் கின்றீர்களோ, அதில், ஆகியே தீரவேண்டும் என்ற
இலட்சியம் திடமாக வைத்தீர்கள்.
40 வருட அவ்யக்த பாலனை முடிவடைந்துவிட்டது. 40 வருடங்களில்
முதலில் என்ன வருகிறது - (40) பிந்து, ஜீரோ. நான் ஹீரோ,
உண்மையான ஹீரோ, மகான் ஹீரோ ஆவேன் மற்றும் ஹீரோ நடிகராகி ஒவ்வொரு
காரியத்தையும் ஹீரோ போல் செய்ய வேண்டும் என்பதை ஜீரோ நினைவு
படுத்துகின்றது. எனவே, ஜீரோ, ஹீரோ - இவை சதா நினைவு இருக்க
வேண்டும் மற்றும் மீதம் இருப்பது 4. இதில் 4 விசயங் களை
வாழ்வில் இயல்பாக செய்ய வேண்டும், உறுதித்தன்மையோடு செய்ய
வேண்டும். செய்வீர்களா? தயாரா? என்ன தேர்வு வேண்டுமானாலும்
வரட்டும், ஆனால், 4 விசயங்களை தன்னுடைய வாழ்வில் செய்தே
ஆகவேண்டும். பக்கா? (உறுதி) பக்கா? பக்கா? பின்னால்
இருப்பவர்கள் உறுதியானவர்கள் தானே! பக்குவப் படாதவர்களை மாயை
சாப்பிட்டு விடும். ஆகையால், பக்காவாக இருக்க வேண்டும். முதல்
விசயம் - சுபசிந்தனையாளர், யாருடைய பலவீனத்தைப் பார்த்தாலும்
அல்லது கேட்டாலும் கருணை உள்ளம் உடையவராகி, சுப சிந்தனை யாளராகி
அவர்களுக்கு சகயோகம் கொடுத்தே ஆகவேண்டும். பலவீனத்தைப்
பார்க்கக்கூடாது, ஆனால், சகயோகம் கொடுத்தே ஆகவேண்டும்.
இப்பேற்பட்டவர்களையே சுபசிந்தனை யாளர் என்று கூறப்படுகின்றது.
இதில் உறுதியாக இருப்பீர்கள் அல்லவா. உதவியை வழங்கும் வள்ளலாகி,
கருணை உள்ளம் உடையவராகி சகயோகம் கொடுங்கள். அவர்களிடம் இருந்து
ஒதுங்கவோ அல்லது அவர்களை வெறுக்கவோ கூடாது, மன்னிக்க வேண்டும்.
தன்வசத்தில் இல்லாதவர்கள் மீது ஒருபொழுதும் வெறுப்பு
காட்டப்படுவதில்லை. ஆதரவு அளிக்கப்படுகின்றது. எனவே,
சுபசிந்தனையாளராக இருக்க வேண்டும். இரண்டாவது - சுபசிந்தனை.
பெரும்பான்மை குழந்தைகளிடம் அவ்வப்போது வீண் எண்ணங்கள் அதிகமாக
வருகின்றன, அதில் அவர்களுடைய சேமிக்கப்பட்ட சக்திகள்
வீணாகிவிடுகின்றன என்பதை தற்சமயம் பாப்தாதா பார்க்கின்றார்கள்.
ஆகையினால், சுபசிந்தனைக்காக சுவமானத் தின் ஏதாவது ஏதாவது
பட்டத்தை தன்னுடைய மனதிற்கு வீட்டுப்பாடமாகக் கொடுங்கள்,
மனதிற்கான கால அட்டவணையை உருவாக்குங்கள். கர்மத்திற்கான
காலஅட்டவணையை உருவாக்குகின்றீர்கள், ஆனால், மனதிற்கான கால
அட்டவணையை உருவாக்குங்கள். அமிர்த வேளையில் சந்திப்பைக்
கொண்டாடிய பிறகு மனதிற்கு ஏதாவது ஏதாவது சுவ மானத்தைக்
கொடுங்கள். ஆனால் சொல்லப்பட்டுள்ளது, - 12 - 13 முறை
அனைவருக்கும் நேரம் கிடைக்கின்றது. அதில் ரியலைசும் (உணர்வது)
செய்யுங்கள், ரிவைசும் (ஞாபகப் படுத்துவது) செய்யுங்கள்,
அப்பொழுது மனம் பிஸியாக இருப்பதால் வீண் எண்ணத்தில் நேரம்
செலவழியாது, உழைக்க வேண்டியதிருக்காது, ஒவ்வொரு சமயமும், இந்த
சங்கமயுகம் என்ன போதைக்கான யுகமோ, அந்த போதையில் இருப்பீர்கள்.
எனவே, இரண்டாவது - சுபசிந்தனை. சோதனை செய்யுங்கள் மற்றும்
மாற்றம் செய்யுங்கள். மூன்றாவது - சுபமான விருத்தி. அசுபமான
விருத்தி வாயுமண்டலத்தில் அசுத்தத்தைப் பரப்புகின்றது,
ஆகையினால், சுபமான விருத்தி இருக்க வேண்டும். நான்காவது -
என்னுடைய வேலை குறிப்பாக பிறரைப் பார்க்காமல் இருப்பது,
என்னுடைய வேலை சுபமான வாயுமண்டலத்தை உருவாக்குவது ஆகும் என்ற
இந்தப் பொறுப்பை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். எப்பொழுதாவது
வாயுமண்டலத் தில் துர்மணம் வீசும்பொழுது என்ன செய்கின்றீர்கள்?
நறுமணத்தைப் பரப்புகின்றீர்கள் அல்லவா. துர்மணத்தை
சகித்துக்கொள்ள முடிவதில்லை, ஆகையினால், ஏதாவது ஏதாவது
நறுமணத்திற்கான சாதனத்தைப் பயன்படுத்துகின்றீர்கள். அவ்வாறு
சாதாரண வாயுமண்டலம் அல்லது அசுபமான வாயுமண்டலம் மாறியே
தீரவேண்டும். சிறியவர்களோ, புதியவர்களோ ஆனால் அனைவருக்கும்
பொறுப்பு உள்ளது. நான் சுபமான வாயுமண்டலத்தை உருவாக்கியே
ஆகவேண்டும் என்ற திட சங்கல்பம் செய்ய வேண்டும். இந்த
உறுதிமொழியானது தந்தையை பிரத்யட்சம் செய்யும். உறுதி மொழி
செய்கின்றீர்கள், பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்கள், ஆனால்,
உறுதிமொழியில் அவ்வப் பொழுது உறுதித்தன்மை இருப்பதில்லை.
ஆகையினால், என்ன வெற்றியை அடைய விரும்பு கின்றீர்களோ, எவ்வளவு
அடைய விரும்பு கின்றீர்களோ, அவ்வளவு கிடைப்பதில்லை. முழு
விஷ்வத்தினுடைய, இயற்கையினுடைய, ஆத்மாக்களுடைய, ஆத்மாக்களில்
பிராமண ஆத்மாக் களும் வந்துவிடுகின்றனர், ஒவ்வொருவரும்
தன்னுடைய சேவை ஸ்தானத்தில் அத்தகைய வாயுமண்டலத்தை
திடத்தன்மையுடன் உருவாக்குங்கள். ஏதாவது தியாகம் செய்ய
வேண்டியது இருந்தாலும் செய்யுங்கள். இவர்கள் தியாகம் செய்தால்
நான் செய்வேன் என்பது கூடாது. அமைப்பு (சிஸ்டம்) சரியாகத் தான்
உள்ளது ஆனால்....ஆனால்..... ஆனால் என்று சொல்லாதீர்கள். நான்
செய்தே ஆக வேண்டும். நான் விஷ்வத்தை மாற்றம் செய்பவர், இந்த
சுவமானம் உள்ளது அல்லவா. அனைவரும் விஷ்வத்தை மாற்றம்
செய்பவர்கள் ஆவீர்கள் அல்லவா. கை உயர்த்துங் கள். நல்லது,
விஷ்வத்தை மாற்றம் செய்பவர்கள் தானே! மிகவும் நல்லது.
இருக்கின்றீர்கள் மற்றும் இருப்பீர்கள், ஆனால், இந்த வருடத்தில்
பாப்தாதா சின்ன மற்றும் பெரிய சேவைக் கேந்திரத்தை வலம் வந்தால்
வாயுமண்டலம் எவ்வாறு இருக்கும்? என்பதை முதலில் பாப்தாதா
பார்க்க விரும்புகின்றார்கள். எவ்வாறு இன்றைய தினம் அன்பு
மற்றும் சக்திக்கான தினமாக உள்ளதோ, அவ்வாறு கிராம கிராமத்தில்
இருக்கும் சென்டர், பெரிய சென்டர் ஆகிய அனைத்து இடங்களின் வாயு
மண்டலம் சைத்தன்ய கோவில் போன்று இருக்க வேண்டும். நெகட்டிவை (எதிர்மறையானதை)
பாஸிட்டிவாக (நேர்மறையானதாக) மாற்ற வேண்டும், இதில் முதலில்
நான் என்பது இருக்க வேண்டும். முதலில் நீங்கள் என்று
சொல்லக்கூடாது. முதலில் நான் என்பது வரவேண்டும். ஏனெனில்,
பாப்தாதா மற்றும் அட்வான்ஸ் பார்ட்டி மற்றும் தற்சமயத்தின்
இயற்கை கூட எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றது. ஏற்பாடு
செய்யக்கூடியவர்கள் நீங்கள் ஆவீர்கள். நீங்கள் எதிர்பார்த்துக்
கொண்டு இருக்கக்கூடாது, ஏற்பாடு செய்ய வேண்டும்.
இன்று நாலாபுறங்களிலும் பயம் பரவி இருக்கின்றது.
பெரும்பான்மையான உலகத்தினரின் உள்ளத்தில் நாளை என்ன ஆகுமோ என்ற
ஒரே எண்ணம் மட்டுமே உள்ளது. நாளை என்ன ஆகும் என்பது
உங்களுக்குத் தெரியும். எனவே, மாற்றம் செய்வதில் முதலில் நான்
நிமித்தம் ஆவேன் என்ற இந்த சங்கல்பத்தை யார் செய்வீர் கள்?
இதில் கை உயர்த்துங்கள். செய்தாக வேண்டும், செய்தாக வேண்டும்.
மாற வேண்டும். பாதுகாவலர் ஆகவேண்டியதிருக்கும். ஏதாவது விட
வேண்டியது இருக்கும். மேலும், அன்பைப் பெறவேண்டிய திருக்கும்.
மனதின் கையை உயர்த்தினீர் களா அல்லது இந்தக் கையை
உயர்த்தினீர்களா? யார் மனதின் கையை உயர்த்தினீர்கள்? ஏனெனில்,
மனம் மாறிவிட்டது என்றால் விஷ்வம் மாறிவிடும். எனவே, இந்த
வருடத்தின் சுலோகன் என்னவாக இருக்கும்? என்ன சுலோகன் இருக்கும்?
நோ பிராப்ளம். வெற்றிக் கொடி உள்ளத்தில் பறக்கும் மற்றும்
அனைவரும் சதா மனதில் குஷியின் நடனம் ஆடுவீர்கள், மனதினுடைய
நடனமே குஷியாக இருப்பதாகும். எனவே, ஒவ்வொரு நேரமும் குஷியின்
நடனம் ஆடுவீர்கள். மேலும், வள்ளலின் குழந்தைகளாக இருப்பதனால்
யார் வந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஏதாவது குணத்தின் பரிசு
கொடுங்கள். அப்பொழுது ஒரு நொடியில் அந்த திடமான எண்ணம், வள்ளல்
தன்மையின் எண்ணம் லிஃப்ட் ஆகிவிடும் மேலும், ஒரு நொடியில்
பரந்தாமம், சூட்சும வதனம், ஸ்தூல மதுபன் சாகார வதனம், எங்கு
விரும்புவீர்களோ, அங்கு உழைப் பில்லாமல் ஒரு நொடியில் சென்று
சேர்ந்துவிடுவீர்கள். யார் எதிரில் வந்தாலும் அவர்களை வெறும்
கையுடன் அனுப்பக்கூடாது. முகத்தின் மூலம், நடத்தை மூலம், வாய்
மூலம் ஏதாவது ஏதாவது குணத்தின் பரிசு இல்லாமல் சந்திக்கக்
கூடாது.
இந்த வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் ரிசல்ட்டை தன்னிடமும்
வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் யக்ஞத்தில் டீச்சர் மூலம் ஓ.கே.
என்ற கார்டு அனுப்ப வேண்டும். நீளமான கடிதம் அனுப்பக் கூடாது.
ஓ.கே. என்று எழுதி கார்டு அனுப்ப வேண்டும். நீளமான கார்டு
அனுப்பக் கூடாது. உலகத்தில் என்ன கார்டு வழக்கத்தில் உள்ளதோ,
அது கிடையாது, டீச்சர் மூலம் வரதானத்தின் கார்டு என்ன
கிடைக்கிறதோ, அதை அனுப்ப வேண்டும். குணங்களின் பரிசு,
சக்திகளின் பரிசு எத்தனை உள்ளது? பட்டியலை எண்ணுங்கள், எவ்வளவு
பெரிய பட்டியலாக உள்ளது. மேலும், எவ்வளவு கொடுப்பீர்களோ,
அவ்வளவு குறையாது ஆனால், அதிகரிக்கும். சூ மந்திரம் என்று
சொல்கின்றனர் அல்லவா. அது போல் இது சிவ மந்திரம் ஆகும்,
ஒருபொழுதும் எந்த குணமும் உங்களிடம் குறையாது, ஆனால், இன்னும்
அதிகரிக்கும், ஏனெனில், தானம் கொடுத்தீர்கள் என்றால் கிரஹணம்
விலகிவிடும் என்ற பழமொழி உள்ளது.
இம்முறை யார் முதல் முறையாக வந்திருக்கின்றீர்களோ, அவர்கள்
எழுந்து நில்லுங்கள். நல்லது - (மத்திய பிரதேசத்தின் கவர்னர்
எதிரில் அமர்ந்திருக்கின்றார்) இந்தக் குழுவிற்கு வந்திருக்
கின்றீர்கள், நல்லது. பாப்தாதா இங்கு வருகை புரிந்திருக்கும்
உங்கள் அனைவருக்கும், சதா தந்தையிடம் குட் மார்னிங், குட் நைட்
அவசியம் செய்ய வேண்டும் என்ற இந்த வரதானத்தைக் கொடுத்துக்
கொண்டு இருக்கின்றார்கள். ஏனெனில், முதன்முதலில் கண் விழித்த
உடனேயே தந்தையைப் பார்த்தீர்கள் என்றால் முழு நாளும் நன்றாக
இருக்கும். முதல் முறை வந்திருக்கும் குழந்தைகளுக்கு
பாப்தாதாவினுடைய பல கோடி மடங்கு அன்பு நினைவுகள் மற்றும்
வாழ்த்துக்கள். நல்லது.
இப்பொழுது அனைவரும் சதா நான்கு விசயங்கள் என்ன சொல்லப்பட்டதோ
மற்றும் ஐந்தாவதான ஜீரோ மற்றும் ஹீரோ பற்றி என்ன சொல்லப்பட்டதோ,
இந்த விசயங்களை சிந்தனை செய்து மூழ்கிய நிலையில் இருக்கக்கூடிய
பிராமணனிலிருந்து ஃபரிஷ்தா ஆகும் ஆத்மாக்கள், தேவதை ஆகவேண்டும்.
ஃபரிஷ்தாவிலிருந்து தேவதை ஆவது என்பது உங்களுடைய பிறப்பதிகாரம்
ஆகும். எனவே, சதா சிநேகத்தின் அன்பில் மூழ்கி, லவ்லீன் ஆக
இருக்கக்கூடிய, சதா திடமான எண்ணத்தினுடைய சாவியை மனதில்,
புத்தியில், நினைவில் வைக்கக்கூடிய, ஏனெனில், இந்த சாவிக்குப்
பின்னால் மாயை அதிகமாக சுற்றிவருகின்றது. ஆகையினால், மனம்
மற்றும் புத்தியால் சதா சக்திசாலியாக இருக்கக்கூடிய
நாலாபுறங்களிலும் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பாப்தாதா வின்
அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாதிகளிடம் (ஜானகி தாதியிடம்):
சேவைக்கு சென்று வந்திருக்கின்றீர்கள், மிகவும் நல்லது. என்ன
செய்துகொண்டு இருக்கின்றீர்களோ, மிகவும் நன்றாக செய்துகொண்டு
இருக்கின்றீர்கள். ஜகதம்பா நடுவில் நின்றுகொண்டு கொடியை
அசைத்துக் கொண்டிருக்க, அவர்கள் பின்னால் அனைத்து சக்திகளும்
அவர்களுடன் நின்று கொண்டிருக்கும் சித்திரம் பாபாவிற்கு நினைவு
வருகிறது. அனைத்து பிராமணர்களில் சக்தி சேனையை அவ்வாறு தயார்
செய்யுங்கள், அவர்கள் நிமித்தமாக வேண்டும். அவர்கள் சேவைக்காக
வலம் வந்து வாயு மண்டலத்தை சக்திசாலி ஆக்கவேண்டும் மற்றும்
நாங்கள் வாயுமண்டலத்தை மாற்றிக் காட்டுவோம் என்ற இந்த உறுதியான
எண்ணத்தை நாங்கள் மேற்கொள்கின்றோம் என்ற திடமான எண்ணம் செய்ய
வேண்டும். இந்தக் கொடியை உயர்த்த வேண்டும். அப்பேற்பட்ட குழுவை
உருவாக் குங்கள், அவர்கள் சேவைக்காக சென்று வாயு மண்டலத்தை தனது
ஸ்திதி, பேச்சு மற்றும் தொடர்பின் மூலம் சரி செய்ய வேண்டும்.
அத்தகைய குழுவைத் தயார் செய்து காண்பியுங்கள். ஆகையினால்,
பாப்தாதாவிற்கு சித்திரம் நினைவு வந்தது, இது நடை முறையில்
நடக்க வேண்டும். நேரம் கிடைக்கவில்லை என்று சொல்லக் கூடாது.
நேரம் கிடைப்பதில்லை என்று எவரும் சொல்லமாட்டார்கள். ஒருவேளை,
சுபபாவனை இருந்தது என்றால் நேரம் கிடைக்கும். இத்தகைய குழுவை
பாப்தாதாவிற்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டு
இளைஞர்கள் குழு:
தற்சமய அரசாங்கத்திற்குக் கூட இளைஞர்களைப் பார்த்து மிகுந்த
ஊக்கமும், சங்கல்பமும் உள்ளது. ஏனெனில், இளைஞர்களுடைய விசேஷத்
தன்மையே என்ன விரும்பு வார்களோ, என்ன யோசிப்பார்களோ அதை செய்து
காண்பிப்பார்கள். இளைஞர்களிடம், சரீரத்தின் சக்தி மற்றும்
மனதின் சக்தி ஆகிய இரட்டை சக்திகள் உள்ளன. இளைஞர்கள் ஒன்று
சேர்ந்து குழுவாக என்ன விரும்பு கின்றார்களோ, அதை செய்ய
முடியும். நாலாபுறங்களிலும் உள்ள இளைஞர்கள் குறிப்பாக
தங்களுடைய பள்ளியில் படித்த தோழர்களின் சேவையை நன்றாக செய்து
கொண்டிருப்பதை பாண்டவ கவர்மெண்ட்டும் பார்த்துக்கொண்டு
இருக்கின்றது. பாப்தாதாவிடம் இளைஞர் துறையினுடைய சமாச்சாரம்
வந்துகொண்டு இருக்கின்றது. இந்த வருடத்தில் பிராமணர்களின்
மரியாதைகள் (நியமங்கள்) என்னவெல்லாம் உள்ளனவோ, அந்த ஒரு ஒரு
மரியாதையையும் பூரண ரூபத்தில், மனதால், பேச்சால், செயலால்
மற்றும் சம்பந்தம் தொடர்பால் - இந்த நான்கு ரூபத்திலும் பாலனை
செய்யக் கூடியவர்களாக ஆகவேண்டும் என்ற இந்தவொரு அடிஷனும் (கூடுதலாக)
செய்யுங் கள், இப்பேற்பட்ட குழுவை தயார் செய்யுங்கள். இந்த
வருடத்தில் எந்தவொரு மரியாதையையும் மீறிவிடக்கூடாது,
இப்பேற்பட்ட குழுவை உருவாக்குங்கள், தங்களுக்குள்
உருவாக்குங்கள். யார் சொல்வதை உடனே செய்கின்றார்களோ, அவர்களே
அர்ஜூனன் ஆவார்கள். விருப்பமா? யார் செய்யப் போகின்றீர்கள்?
நீங்கள் செய்வீர் களா? கை உயர்த் துங்கள். செய்வீர்களா? அனைத்து
இளைஞர்களும் செய்வீர்களா? எத்தனை பேர் இருக்கின்றீர்கள்? (400)
தங்களுக்குள் ஒவ்வொரு குழுவிலும் உறுதி செய்யுங்கள், பிறகு,
இவர்கள் மரியாதை புருúஷôத்தமர்கள் என்று அரசாங்கத்திடம்
காண்பிக்கலாம். அரசாங்கம் கூட விரும்புகின்றது ஆனால்,
செய்யமுடிவதில்லை, நீங்கள் செய்து காண்பியுங்கள். உதாரணம் ஆகிக்
காண்பியுங்கள். வீட்டுப்பாடம் கிடைத்து விட்டது அல்லவா.
நாலாபுறங்களிலும் உள்ள பிராமண ஆத்மாக்கள் இந்த வருடத்தில்
அதிசயம் செய்து காண்பிக்க வேண்டும் என்பதையே பாப்தாதா விரும்பு
கின்றார்கள். வீண் எண்ணத்தினுடைய குழப்பம் கூட இருக்கக்கூடாது.
சுத்த சங்கல்பத்தை அந்தளவு சேமிப்பு செய்யுங்கள், வீணான எண்ணம்
வருவதற்கான நேரமே கிடைக்கக் கூடாது. பொக்கிஷம் உள்ளது அல்லவா.
சுத்த சங்கல்பத்தின் பொக்கிஷம் அந்தளவு சேமிப்பாகி இருக்கின்றதா?
இருக்கின்றதா? கை உயர்த்துங்கள். சக்திகளும் உள்ளனர், நல்லது,
சக்திகள் கூட உதாரணம் ஆகவேண்டும் மற்றும் பாண்டவர்களும் உதாரணம்
ஆகவேண்டும். நல்லது. பாப்தாதாவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ஆசீர்வாதம்:
சூட்சுமான எண்ணங்களின் பந்தனங்களி-ருந்தும் விடுபட்டு உயர்ந்த
மனோநிலையை அனுபவம் செய்யும் பந்தனமற்றவர் ஆகுக
குழந்தைகள் எந்தளவிற்கு பந்தனமற்றவராக இருப்பார்களோ, அந்தளவு
உயர்ந்த மனோநிலையில் இருக்க முடியும். எனவே மனம்-சொல்-செயலாலும்
எந்த ஒரு சூட்சுமமான கயிறும் என்ன கட்டியிருக்காமல் இருக்கிறதா
- ஒரு தந்தையின்றி வேறொன்றும் நினைவில் இல்லாத நிலை - தனது
தேகம் நினைவில் வந்தாலும் அதனைத் தொடர்ந்து தேகத்தின் உறவுகள்,
பொருட்கள் என உலகமே ஒன்றன் பின் ஒன்றாக வந்து விடும். நான்
நிர்பந்தன் ஆத்மா இந்த வரதானத்தை நினைவில் வைத்து உலகம்
முழுவதையும் மாயையின் வலையி-ருந்து விடுவிக்கும் சேவை
செய்யுங்கள்.
சுலோகன்:
ஆத்ம உணர்வின் நிலை மூலமாக உடல் மற்றும் மனதின் இன்னல்களை
களைபவரே உறுதி வாய்ந்தவர்.
அவ்யக்த இஷாரா - நிச்சயத்தின் அஸ்திவாரத்தை உறுதியாக்கி சதா
பயமற்றவராக, கவலையற்றவராக இருங்கள்
இன்னல்களின் வேலை வருவது, நம்பிக்கை உடைய ஆத்மாவின் வேலை
சமாதான சொரூபமாகி இன்னலை மாற்றம் செய்வது. ஏன்? பிராமண
ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவரும் பிராமண பிறவி எடுத்தவுடனேயே
நாங்கள் மாயாவை வென்றவர்கள் என மாயையிடமே சவால் விட்டவர் கள்.
ஆகவே இன்னல் என்பது மாயையின் ரூபம். சாவல் செய்வதர்களை மாயை
எதிர் கொள்ளவே செய்யும். ஆனால் நீங்கள் நம்பிக்கையுடன் வெற்றி
செரூபமாகி எதுவும் புதியதல்ல என புரிந்து கடந்து சென்றால்
கவலையற்ற இராஜா ஆவீர்கள்.