08-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! அனைத்து
யுகங்களிலும் உத்தமானது இந்த சங்கமயுகமாகும், இங்கு தான்
ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மா தந்தையோடு சந்திப்பு
செய்கின்றீர்கள், இதுதான் மிகவும் உண்மையான கும்பமேளாவாகும்.
கேள்வி:
எப்படிப்பட்ட பாடத்தை தந்தை
மட்டுமே படிப்பிக்கின்றார், வேறு எந்த மனிதராலும் படிப்பிக்க
முடியாது?
பதில்:
ஆத்ம அபிமானி ஆவதற்கான பாடத்தை
ஒரு தந்தை மட்டுமே படிப்பிக்கின்றார், இந்தப் பாடத்தை வேறு
எந்த தேகதாரிகளாலும் படிப்பிக்க முடியாது. முதன் முதலில்
உங்களுக்கு ஆத்மாவின் ஞானம் கிடைக்கின்றது. நாம் ஆத்மாக்கள்
பரந்தாமத்திலிருந்து நடிகராகி நடிப்பதற் காக வந்தோம். இப்பொழுது
நாடகம் முடிகின்றது என நீங்கள் அறிந்துள்ளீர்கள், இந்த நாடகம்
முன்பே உருவாக்கப்பட்டது, இதனை வேறு யாரும் உருவாக்க வில்லை,
எனவே, இதற்கு ஆரம்பம் மற்றும் முடிவு என்பது இல்லை.
பாடல்:
அன்பான நாயகிகளே விழிப்படையுங்கள்.........
ஓம் சாந்தி.
இந்தப் பாடலை குழந்தைகள் பல முறை கேட்டிருப்பீர்கள். இதை நாயகன்
நாயகி களிடம் கூறுகின்றார், இவர் எப்போது சரீரத்தில்
வருகின்றாரோ அப்போது நாயகன் எனக் கூறப்படு கிறது. இல்லையெனில்
அவர் தந்தையாகவும், நீங்கள் குழந்தைகளாகவும் இருப்பீர்கள்.
நீங்கள் அனைவரும் பக்தைகள், பகவானை நினைவு செய்கின்றீர்கள்.
மணமகள், மணமகனை நினைவு செய்கின்றனர். அனைவருக்கும் அன்பான
மணமகனாக இவர் இருக் கின்றார். அவர் வந்து குழந்தைகளுக்குப்
புரிய வைக்கின்றார் - இப்போது விழிப்படையுங்கள், புதிய யுகம்
வருகின்றது என்று. புதிய உலகம் சத்யுகம், பழைய உலகம்
கலியுகமாகும். உங்களை சொர்க்கவாசியாக ஆக்குவதற்கு தந்தை
வந்திருக்கிறார். நான் உங்களை சொர்க்க வாசியாக ஆக்குவேன் என
வேறு எந்த மனிதரும் கூற முடியாது. சந்நியாசிகளுக்கு சொர்க்கம்
மற்றும் நரகத்தைப் பற்றி எதுவும் தெரியாது. மற்ற தர்மங்களைப்
போன்று சந்நியாசிகளுக்கும் ஒரு தர்மம் இருக்கிறது. அவர்கள்
யாருமே ஆதி சனாதன தேவி - தேவதா தர்மத்தை சேர்ந்தவர்கள் அல்ல.
பகவான் வந்து தான் ஆதி சனாதன தேவி - தேவதா தர்மத்தை
படைக்கின்றார். யார் நரகவாசியாக இருக்கின்றார்களோ அவர்களே
மீண்டும் சத்யுகத்தில் சொர்க்கவாசியாக ஆகின்றனர். இப்பொழுது
நீங்கள் நரகவாசி அல்ல, இப்போது நீங்கள் சங்கம யுகத்தில்
இருக்கின்றீர்கள். இடைப்பட்ட காலம் சங்கமயுகமாகும். சங்கம
யுகத்தில் நீங்கள் சொர்க்கவாசியாக ஆவதற்கு முயற்சி
செய்கின்றீர்கள், எனவே, சங்கம யுகத்திற்கு மகிமை இருக்கின்றது.
இதுவே அனைத்தையும் விட உத்தமமான கும்பமேளாவாகவும் இருக்கின்றது,
இந்நேரத்தையே புருஷோத்தம் எனக் கூறப்படுகிறது. நாம் அனைவரும்
ஒரு தந்தையின் குழந்தைகள், என நீங்கள் அறிந்துள்ளீர்கள்,
சகோதரத்துவம் என கூறப்படுகிற தல்லவா! அனைத்து ஆத்மாக்களும்
தங்களுக்குள் சகோதரர்கள். இந்து, சீனர்கள் அனைவரும் சகோதரர்கள்
எனக்கூறப்படுகிறது.அனைத்து தர்மத்தின் அடிப்படையில் சகோதரர்கள்
என்ற ஞானம் இப்பொழுது உங்களுக்குக் கிடைத்துள்ளது. நீங்கள்
தந்தையாகிய எனது குழந்தைகள் என தந்தை புரிய வைக்கின்றார்.
இப்போது நீங்கள் நேரில் வந்து கேட்கின்றீர்கள், அவர்கள் வெறும்
வாயால் மட்டுமே சொல்கின்றனர். அனைத்து ஆத்மாக்களின் தந்தை
ஒருவர் மட்டுமே, அவரை மட்டுமே நினைவு செய்கின்றனர். ஆண் மற்றும்
பெண் இருவரிடத்திலும் ஆத்மா உள்ளது. இதன் அடிப்படையில்
சகோதரர்களாவும் பிறகு சகோதரன்-சகோதரியாக பிறகு கணவன்-மனைவியாக
ஆகின்றனர். இவ்வாறு தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரியவைக்
கின்றார். ஆத்மாக்கள், பரமாத்மாவைப் பிரிந்து வெகு காலமாகி
விட்டதாகக் கூறப்படுகிறது, நதிகள் மற்றும் கடல் பிரிந்து
வெகுகால மாகிவிட்டதாகக் கூறுவதில்லை. பெரிய நதிகள் கடலுடன்
சேரத்தான் செய்கிறது. நதி என்பது கடலின் குழந்தை போன்றது என
குழந்தை களுக்குத் தெரியும். கடலிருந்து தண்ணீர், மேகமாகி பிறகு
மலைகளின் மீது மழையாகப் பொழிகின்றது, பிறகு நதிகளாக
உருவாகின்றது. ஆக அனைத்தும் கடலின் குழந்தைகளாக ஆகின்றது.
தண்ணீர் எங்கிருந்து உருவாகின்றது என பலருக்கும் தெரியாது.
இதையும் கற்றுத்தர வேண்டியுள்ளது. ஒரேயொரு தந்தை மட்டுமே ஞானக்
கடலாக இருக்கின்றார் எனக் குழந்தை கள் இப்போது புரிந்துள்ளனர்.
நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள், தந்தை ஒருவர் மட்டுமே எனவும்
புரிய வைக்கப்பட்டுள்ளது. ஆத்மா நிராகாரமாக இருக்கிறது, பிறகு
ஸ்தூலத்தில் வந்து மறுபிறவி எடுக்கின்றது. எப்போது தந்தை
சாகாரத்தில் வருகின்றாரோ அப்போதுதான் சந்திப்பும் செய்ய
முடியும். ஒருமுறை மட்டுமே தந்தையின் சந்திப்பு ஏற்படுகின்றது.
இந்த நேரம் வந்து அனைவரையும் சந்திக்கின்றார். இவர் தான் பகவான்
எனப் புரிந்து கொள்வார்கள். கீதையில் கிருஷ்ணருடைய
பெயரிடப்பட்டுள்ளது, ஆனால் கிருஷ்ணர் இங்கு வரமுடியாது. அவர்
எப்படி நிந்தனைக்கு ஆளாக முடியும்? கிருஷ்ணருடைய ஆத்மா இப்போது
இங்கு இருக்கின்றது. முதன் முதலில் உங்களுக்கு ஆத்மா பற்றிய
ஞானம் கிடைத் துள்ளது. நீங்கள் ஆத்மாக்கள், தன்னைத்தான் சரீரம்
எனப் புரிந்து இவ்வளவு காலம் கடந்து வந்து விட்டீர்கள், தந்தை
வந்து இப்பொழுது ஆத்ம அபிமானியாக ஆக்குகின்றார். சாது
சந்நியாசிகள் யாரும் உங்களை ஒருபோதும் ஆத்ம அபிமானியாக
ஆக்குவதில்லை. நீங்கள் குழந்தைகள், உங்களுக்கு எல்லையற்ற
தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. நாம் பரந்தாமத்தைச்
சேர்ந்தவர்கள், பிறகு இங்கு நமது பங்கை நடிப்பதற்கு
வந்திருக்கிறோம் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கின்றது.
இப்போது இந்த நாடகம் முடிகின்றது. இந்த நாடகத்தை வேறு யாரும்
உருவாக்கவில்லை, இந்த நாடகம் ஏற்கனவே உருவாக்கப்பட்டதாகும்.
இந்த நாடகம் எப்போது ஆரம்பமானது? எனக் கேட்கின்றனர், இது அனாதி
நாடகமாகும், இதற்கு ஆரம்பம், முடிவு இல்லை எனக் கூறுங்கள்.
பழையதிலிருந்து புதியதாகவும், புதியதிலிருந்து பழையதாகவும்
ஆகின்றது. இந்தப் பாடம் மிகவும் பக்காவாக உங்களிடம் இருக்கிறது.
புதிய உலகம் எப்போது உருவாகின்றது, பழைய உலகம் எப்போது
உருவாகின்றது என உங்களுக்குத் தெரியும். இது கூட சிலருடைய
புத்தியில் முழுமையாக இருக்கின்றது. இப்போது இந்த நாடகம்
முடியும், பிறகு மீண்டும் அப்படியே நடைபெறும் என உங்களுக்குத்
தெரியும். நமது 84 பிறவிகளின் பங்கு முடிந்துவிட்டது. தந்தை
இப்போது நம்மை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். தந்தை
வழிகாட்டியாகவும் இருக்கிறார் அல்லவா! நீங்கள் அனைவரும்
வழிகாட்டிகள். வழிகாட்டி யாத்திரைக்கு அழைத்துச் செல்ல
வந்திருக்கிறார். அவர்கள் ஸ்தூல வழி காட்டிகள், நீங்கள் ஆன்மீக
வழிகாட்டிகள். எனவே உங்களுடைய பெயர் பாண்டவ அரசாங்கமாகும்,
ஆனால், இரகசியமாக இருக்கிறது. பாண்டவர்கள், கௌரவர்கள்,
யாதவர்கள் என்ன செய்து சென்றார்கள் என்பது இந்த நேரத்திற்கான
விசயமாகும், அதுவும் மகாபாரத யுத்தத்திற்கான காலமாகும். அனேக
தர்மங்கள் இருக்கின்றன, உலகமும் தமோ பிரதானமாக இருக்கிறது,
பல்வேறு தர்மங்கள் நிறைந்த இந்த மரம் முற்றிலும் பழைய
தாகிவிட்டது. இந்த கல்ப மரத்தின் முதன்மையான அஸ்திவாரமாக ஆதி
சனாதன தேவி தேவதா தர்மம் இருக்கிறது என உங்களுக்குத் தெரியும்.
சத்யுகத்தில் மிகவும் கொஞ்சம் பேர், தான் இருப்பார்கள், பிறகு
அதிகமாகி விடுவார்கள். இது வேறு யாருக்கும் தெரியாது, உங்களில்
கூட வரிசைப்படிதான் உள்ளனர். மாணவர்களில் சிலர் நல்ல திறமை
சாலியாக இருப்பார்கள், நன்கு தாரணை செய்து பிறரையும் செய்ய வைப்
பதற்கான ஆர்வம் இருக்கும். சிலர் நன்றாக தாரணை செய்கின்றனர்,
சிலர் நடுத்தரமாக, சிலர் மூன்றாம், சிலர் நான்காம் வரிசையில்
உள்ளனர். கண்காட்சியில் மிகத் தெளிவாக புரிய வைப்பவர்கள் தேவை.
இரண்டு தந்தையைப் பற்றி முதலில் கூறுங்கள். ஒன்று எல்லையற்ற
பரலோகத் தந்தை, இன்னொன்று எல்லைக்குட்பட்ட லௌகீகத் தந்தை.
பாரதத்திற்கு எல்லை யற்ற ஆஸ்தி கிடைத்திருந்தது. பாரதம்
சொர்க்கமாக இருந்தது, பிறகு நரகமாகி விட்டது, இதனை அசுர
இராஜ்யம் எனக் கூறப்படுகிறது. பக்தியும் முதலில் முறை யானதாக
இருந்தது, ஒரு சிவபாபாவை மட்டுமே நினைவு செய்தனர்.
தந்தை கூறுகின்றார் குழந்தைகளே, புருஷோத்தம நிலை அடைய
வேண்டுமானால் தாழ்ந்த நிலை அடைய வைக்கும் விசயங்களைக்
கேட்காதீர்கள். ஒரு தந்தையிடமிருந்து மட்டுமே கேளுங்கள்.
ஒருவரிடமிருந்து மட்டுமே ஞானத்தைக் கேளுங்கள், வேறு யாரிடம்
கேட்டாலும் அது பொய்யானதாகும். தந்தை இப்பொழுது சத்தியத்தைக்
கூறி புருஷோத்தமராக ஆக்குகின்றார். தீய விசயங்களை நீங்கள்
கேட்டதனால் தான் தாழ்ந்த நிலை அடைந்தீர்கள். வெளிச்சம் என்பது
பிரம்மாவின் பகல், இருள் என்பது பிரம்மாவின் இரவாகும். இந்த
எல்லா விசயங்களையும் தாரணை செய்ய வேண்டும். ஒவ்வொரு
விசயத்திலும் வரிசைப்படி தான் இருக்கின்றது. மருத்து வர்கள்
சிலர் ஒரு அறுவை சிகிச்சை செய்ய 10, 20 ஆயிரம் வாங்கு கின்றனர்,
(சுமார் 50 வருடங் களுக்கு முன்பு) சிலருக்கு சாப்பிடுவதற்கே
வழியில்லை. வக்கீல் களும் அவ்வாறு இருக்கின்றனர். நீங்களும்
எவ்வளவு படித்து, படிப்பிக்கின்றீர்களோ அந்தளவு உயர்ந்த பதவி
அடைவீர்கள். வித்தியாசம் இருக்கிறதல்லவா! தாசன், தாசிகளும் கூட
வரிசைப்படிதான் ஆகின்றனர். எல்லா ஆதாரமும் படிப்பில் தான்
இருக்கின்றது. நாம் எவ்வளவு படிக்கின்றோம், எதிர்காலத்திற்காக,
பல பிறவிகளுக்காக, நான் என்ன ஆவேன்? என தன்னிடத்தில் கேளுங்கள்.
பல பிறவிகளுக்கும், கல்ப கல்பத்திற்கும் ஆக வேண்டுமானால்
படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். விஷத்தைக்
குடிப்பதை முற்றிலும் விடத்தான் வேண்டும். அழுக்கான ஆடைகளை
சுத்தமாக்குங்கள் என சத்யுகத்தில் சொல்வதில்லை. இப்போது
அனைவருடைய சரீரமும் அழுக்கடைந்து விட்டது, தமோபிரதானமல்லவா! இது
கூட புரிய வைப்பதற்கான விசயமல்லவா! அனைவரைக் காட்டிலும் பழைய
சரீரம் யாருடையது? நம்முடையதாகும். நாம் இந்த சரீரத்தை மாற்றிக்
கொள்கிறோம். ஆத்மா பதீத நிலை அடைகின்றது. சரீரமும் பதீதமாக,
பழமையாகிறது, ஆத்மா மாறுவதில்லை. சரீரத்திற்கு வயதாகி, மரணம்
ஏற்படுகிறது. இது கூட நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அனை
வருக்கும் நாடகத்தில் பங்கு உள்ளது. ஆத்மா அழியாததாக
இருக்கின்றது. நான் சரீரத்தை விடுகின்றேன் என ஆத்மா கூறுகின்றது.
ஆத்ம அபிமானியாக ஆகத்தான் வேண்டும். மனிதர்கள் அனை வரும் தேக
அபிமானி யாக உள்ளனர். அரைக்கல்பம் தேக அபிமானியாக, அரைக் கல்பம்
ஆத்ம அபிமானியாக இருக்கின்றோம்.
ஆத்ம அபிமானியாக இருப்பதன் காரணமாக சத்யுகத்தில் தேவதைகளுக்கு
பற்றுதலை வென்றவர் கள் என்ற பாடம் கிடைத்தது. ஏனென்றால் நாம்
ஆத்மாக்கள், இப்போது இந்த சரீரத்தை விட்டு விட்டு இன்னொரு
சரீரத்தை எடுப்போம் என அங்கு புரிந்திருப்பார்கள். பற்றுதலை
வென்ற இராஜாவின் கதையும் இருக்கின்றதல்லவா! தேவி-தேவதைகள்
பற்றுதலை வென்றவர்களாக இருப்பார்கள் என தந்தை புரியவைக்கின்றார்.
மகிழ்ச்சியோடு ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரம் எடுக்க
வேண்டும். குழந்தைகளுக்கு முழு ஞானமும் தந்தை மூலம்
கிடைக்கின்றது. நீங்கள் தான் சக்கரத்தில் சுற்றி வந்து
இப்பொழுது மீண்டும் சந்திக்கின்றீர்கள். யாரெல்லாம் மற்ற தர்மங்
களுக்கு மாறிச் சென்றுள்ளார்களோ அவர்களும் வந்து சந்திப்பார்கள்.
தனது பிராப்தியை கொஞ்ச மாவது அடைவார்கள். தர்மமும் மாறி விட்டது
அல்லவா! எவ்வளவு காலம் வேறு தர்மத்தில் இருந்திருப்பார்கள் எனத்
தெரியாது. இரண்டு மூன்று பிறவிகள் அங்கே எடுத்திருப்பார்கள்.
சிலர் இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறி மீண்டும் நமது
தர்மத்திற்கு வருகின்றார்கள். இவையெல்லாம் விஸ்தாரமான
விசயங்களாகும். இவ்வளவு விசயங்களை நினைவு செய்ய முடியவில்லை
யெனில் பரவாயில்லை, தன்னைத்தான் பாபாவின் குழந்தை எனப்புரிந்து
கொள்ளுங்கள் என தந்தை கூறுகின்றார். மிகவும் நல்ல குழந்தைகள்
கூட மறந்து விடுகின்றனர். தந்தையை நினைவு செய்வதில்லை. மாயா
இவ்விசயத்தில் மறக்க வைக்கின்றது. நீங்களும் முதலில் மாயாவின்
வாடிக்கையாளராக இருந்தீர்கள் அல்லவா! இப்பொழுது ஈஸ்வரனுடையவராக
ஆகி விட்டீர்கள். அதுவும் நாடகத்தில் ஒன்றாக இருக்கிறது.
தன்னைத்தான் ஆத்மா எனப்புரிந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
ஆத்மாக்கள் நீங்கள் முதன்முதலில் சரீரத்தில் வந்தபோது
தூய்மையாக இருந்தீர்கள், பிறகு மறு பிறவிகள் எடுத்து பதீத நிலை
அடைந்தீர்கள். நஷ்டமோஹா ஆகுங்கள் என தந்தை மீண்டும்
கூறுகின்றார். இந்த சரீரத்தின் மீது கூட பற்றுதல் வைக்காதீர்கள்.
இப்பொழுது உங்களுக்கு இந்தப் பழைய உலகிலிருந்து எல்லையற்ற
வைராக்கியம் வந்துவிட்டது. ஏனென்றால், இவ்வுலகில் அனைவரும்
ஒருவொருக்கொருவர் துன்பம் தருகின்றனர். எனவே, இந்த பழைய உலகை
மறந்து விடுங்கள். நாம் அசரீரியாக வந்தோம், மீண்டும் அசரீரியாகி
வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது இந்த உலகம் முடிந்தே தீரும்.
தமோபிரதானத்திலிருந்து சதோபிர தானமாக மனதால் என்னை நினைவு
செய்யுங்கள் (மன்மனாபவ) என தந்தை கூறுகின்றார். மனதால் என்னை
மட்டும் நினைவு செய்யுங்கள் என கிருஷ்ணர் கூற முடியாது.
கிருஷ்ணர் சத்யுகத்தில் வருகின்றார். என்னை பதீத பாவனரே என
கூறுகின்றனர் ஆகவே, இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள் என்ற
பாவனமா வதற்கான யுக்தியைக் கூறுகின்றேன் என தந்தை மட்டுமே
கூறுகின்றார். ஒவ்வொரு கல்பமும் பழைய உலகத்தில் பகவான் வந்து
இந்த யுக்தியைக் கூறுகின்றார். மனிதர்கள் நாடகத்தின்
ஆயுட்காலத்தை மிகவும் நீண்டதாக கூறுகின்றனர். ஆக, மனிதர்கள்
முற்றிலும் மறந்து விட்டனர். இது தான் புருஷோத்தம நிலை
அடைவதற்கான சங்கமயுகமாகும் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். மனிதர்களோ முற்றிலும் ஆழ்ந்த இருளில் தூங்கி
விட்டனர். இந்த நேரம் அனைத்தும் தமோபிரதானமாக இருக்கிறது.
இப்பொழுது நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிர
தானமாகின்றீர்கள். நீங்கள்தான் அனைவரையும் விட அதிக பக்தி
செய்தீர்கள். இப்பொழுது பக்தி மார்க்கம் முடிகின்றது.
மரணலோகத்தில் பக்தி இருக் கின்றது, பிறகு அமரலோகம் வரும்.
நீங்கள் இந்த நேரம் ஞானத்தை அடைகின்றீர்கள், பிறகு பக்தியின்
பெயர், அடையாளம் கூட இருக்காது. ஹே பகவானே! ஹே இராம்! இவை பக்தி
மார்க்கத் தின் வார்த்தைகளாகும். இங்கு எந்த சப்தமும் செய்ய
வேண்டியதில்லை தந்தை ஞானக் கடலாக இருக்கின்றார், ஏதாவது சப்தம்
வருகின்றதா! அவரைத்தான் சுகம், சாந்தியின் கடல் எனக்
கூறப்படுகின்றது. ஞானம் கூறுவதற்கு அவருக்கு சரீரம் அவசியம்
வேண்டு மல்லவா! பகவானின் மொழி என்னவென்று யாருக்கும் தெரியாது.
பாபா எல்லா மொழிகளிலும் பேசுவார் என்பதல்ல. ஹிந்தி மட்டுமே
அவருடைய மொழியாகும். பாபா ஒரு மொழியால் மட்டுமே
புரியவைக்கின்றார், பிறகு நீங்கள் மொழி பெயர்ப்பு செய்து புரிய
வைக்கின்றீர்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரை
சந்தித்தாலும் அவர்களுக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க
வேண்டும். ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தை தந்தை
உருவாக்குகின்றார். திரிமூர்த்தி பற்றி புரிய வைக்க வேண்டும்.
பிரஜாபிதா பிரம்மாவிற்கு எத்தனை பிரம்மாகுமார் - குமாரிகள்
இருக்கின்றனர். யார் வந்தாலும் நீங்கள் யாரிடத்தில்
வந்துள்ளீர்கள்? என முதலில் கேளுங்கள். போர்டும் வைக்கப்
பட்டிருக்கிறது. பிரஜாபிதா, அவரும் படைப்பாக இருக்கின்றார்.
இவரை பகவான் எனக் கூறமுடியாது. நிராகாரமானவரை மட்டுமே பகவான்
எனக் கூறப்படுகின்றது. இந்த பிரம்மா குமார், குமாரிகள்
பிரம்மாவின் குழந்தைகள். நீங்கள் இங்கு எதற்காக வந்துள்ளீர்கள்?
எங்களது தந்தை யிடம் உங்களுக்கு என்ன வேலை என கேட்க வேண்டும்.
தந்தையிடம் குழந்தைகளுக்கு மட்டுமே வேலை இருக்குமல்லவா! நாம்
தந்தையை நல்ல முறையில் புரிந்துள்ளோம். குழந்தைகள் தந்தையை
வெளிப்படுத்துவர் எனக் கூறப்படுகின்றது. நாம் அவருடைய
குழந்தைகளாக இருக்கின்றோம். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. புருஷோத்தம நிலை ஆவதற்காக தாழ்ந்த நிலை அடைய வைக்கும் தீய
விசயங்களை கேட்கக்கூடாது. ஒரு தந்தையிடமிருந்து மட்டுமே
முறையான கலப்படமில்லாத ஞானம் கேட்க வேண்டும்.
2. நஷ்டமோஹா ஆவதற்காக ஆத்ம அபிமானி ஆவதற்கு முழுமையான முயற்சி
செய்ய வேண்டும். இந்தப் பழைய உலகம் துன்பம் தரக்கூடியது, இதனை
மறக்க வேண்டும், இதிலிருந்து எல்லையற்ற வைராக்கியம் வரவேண்டும்
என்பது புத்தியில் இருக்க வேண்டும்
வரதானம்:
சங்கமயுகத்தின் அனைத்து பிராப்திகளையும் நினைவில் கொண்டு ஏறும்
கலையின் அனுபவம் செய்யும் சிறந்த பிராப்தம் உடையவர் ஆவீர்களாக.
பரமாத்ம சந்திப்பு மற்றும் பரமாத்ம ஞானத்தின் சிறப்பாவது -அழியாத
பிராப்திகள் ஏற்படுவது. அப்படியின்றி சங்கமயுகம் முயற்சி
செய்யும் வாழ்க்கை மற்றும் சத்யுகம் பிராப்தத்தை அனுபவிக்கும்
வாழ்க்கை என்பது அல்ல. சங்கமயுகத்தின் விசேஷத்தன்மை ஆவது -ஒரு
அடி எடுத்து வையுங்கள் மற்றும் ஆயிரம் அடிகள் பலனாக பெறுங்கள்.
எனவே புருஷார்த்தி வாழ்க்கை மட்டுமல்ல. ஆனால் சிரேஷ்ட பிராப்தி.
எனவே இந்த சொரூபத்தை எப்பொழுதும் முன்னால் வையுங்கள்.
பிராப்தத்தை பார்த்து சுலபமாகவே ஏறும் கலையின் அனுபவம்
செய்வீர்கள். அடைய வேண்டியதை அடைந்து விட்டேன் இந்த கீதத்தை
பாடினீர்கள் என்றால் (குட்கா, ஜுட்கா) மூச்சு திணறல், தூங்கி
விழுதல் போன்ற பலவீனங்கள் இருந்து விடுபட்டு விடுவீர்கள்.
சுலோகன்:
தைரியம் என்பது பிராமணர்களின் மூச்சு ஆகும். அதன் மூலம்
கடினத்திலும் கடினமான காரியம் கூட சுலபமாக ஆகிவிடும்.
அவ்யக்த சமிக்ஞை: கம்பைண்டு ரூபத்தின் நினைவின் மூலமாக
எப்பொழுதும் வெற்றியாளர் ஆகுங்கள்.
எப்படி பிரம்மா பாபாவை பார்த்தீர்கள் - தந்தையுடன் கூட சுயம்
தன்னை கம்பைண்டு ரூபத்தில் அனுபவம் செய்தார் மற்றும்
செய்வித்தார். இந்த இணைந்த சொரூபத்தை யாருமே பிரிக்க முடியாது.
அதேபோல நல்ல குழந்தைகள் எப்பொழுதும் தங்களை தந்தையுடன் இணைந்த
ரூபத்தில் இருக்கும் அனுபவம் செய்கிறார்கள். யாருக்குமே அவர்களை
பிரித்து விடக்கூடிய வலிமை இருக்காது.
|
|
|