08-11-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் ஆத்ம
உணர்வுடையவரானால் அனைத்து நோய்களும் நீங்கி விடும். மேலும்,
நீங்கள் டபுள் கிரீடம் அணிந்து உலகத்திற்கே அதிபதியாகி
விடுவீர்கள்.
கேள்வி:
பாபாவிற்கு முன் எப்படிப்பட்ட
குழந்தைகள் அமர வேண்டும்?
பதில்:
ஞான டான்ஸ் ஆடக் கூடியவர்கள்.
ஞான டான்ஸ் ஆடக் கூடிய குழந்தைகள் பாபா முன்பு அமரும் போது
பாபாவின் முரளியும் அவ்வாறு இருக்கும். ஒரு வேளை முன்னால்
உட்கார்ந்துக் கொண்டு இங்கும் அங்கும் யாராவது பார்த்தால் இந்த
குழந்தை எதையும் புரிந்துக் கொள்ள வில்லை என பாபா புரிந்துக்
கொள்வார். நீங்கள் எப்படிப்பட்ட வரை அழைத்து வந்துள்ளீர்கள்,
பாபாவிற்கு முன்பு கொட்டாவி விடுகின்றனர் என்று பாபா
பிராமணிகளைப் பார்த்து கேட்பார். குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட
தந்தை கிடைத்திருக்கிறார் என்றால் மகிழ்ச்சியில் நடனமாட
வேண்டாமா !
பாடல்:
தூரதேசத்தில் வசிக்கக் கூடியவரே.....
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள்.
துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர், தாயும் நீயே தந்தையும் நீயே.....
என்று யாரை நாம் நினைவு செய்கிறோமோ அவரே ஆன்மீகத் தந்தை என்று
ஆன்மீகக் குழந்தைகள் புரிந்துக் கொள்கின்றனர். மீண்டும் வந்து
எங்களுக்கு சுகத்தை அளியுங்கள். நாங்கள் துக்கத்தில்
இருக்கின்றோம். இந்த முழு உலகமும் துக்கமாக இருக்கின்றது.
ஏனென்றால் இது கலியுக பழைய உலகம் ஆகும். பழைய உலகம் மற்றும்
பழைய வீட்டில், புது உலகில் புது வீட்டில் இருந்தது போன்று
அவ்வளவு சுகம் இருக்க முடியாது. நாம் தான் உலகத்திற்கே
அதிபதியாக ஆதி சனாதன தேவி தேவதையாக இருந்தோம், நாமே 84 பிறவிகள்
எடுத்தோம் என குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துக் கொள்கிறீர்கள்.
குழந்தை களே நீங்கள் எத்தனை பிறவிகள் எடுத்து நடித்தீர்கள்
என்று உங்களின் பிறவிகள் பற்றித் தெரிய வில்லை என்று பாபா
கூறுகின்றார். மனிதர்கள் 84 லட்சம் பிறவிகள் எடுக்கிறோம் என
நினைக் கிறார்கள். ஒவ்வொரு மறுபிறவியும் எத்தனை வருடங்களை
உடையது, 84 லட்சம் என்ற கணக்குப் படி பார்த்தால் சிருஷ்டி
சக்கரம் மிகவும் பெரியதாக இருக்கும். ஆத்மாக்களாகிய நம்முடைய
தந்தை நம்மை படிக்க வைக்க வந்துள்ளார் என குழந்தைகளாகிய நீங்கள்
அறிகிறீர்கள். நாமும் தூர தேசத்தில் வசிக்கக் கூடியவர்கள் தான்.
நாம் இங்கே வசிக்கக் கூடியவர்கள் கிடையாது. நாம் இங்கே
நடிப்பதற்காக வந்திருக்கிறோம். பாபாவைக் கூட நாம் பரந்தாமத்தில்
நினைக்கிறோம். இப்போது இந்த வேற்று தேசத்தில் வந்திருக்கிறோம்.
சிவனை தந்தை என்கிறோம். இராவணனை தந்தை என கூற முடியாது.
பகவானைத் தான் தந்தை என்பார்கள். தந்தையின் மகிமைகள் தனி. 5
விகாரங்களை யாராவது மகிமை செய்வார்களா? தேக உணர்வு மிகப் பெரிய
நோயாகும். நாம் ஆத்ம உணர்வு அடைந்தால் எந்த நோயும் இருக்காது.
மேலும் நாம் உலகத்திற்கே அதிபதி யாகலாம். இந்த விசயங்கள்
உங்களுடைய புத்தி யில் இருக்கின்றது. சிவபாபா ஆத்மாக்களாகிய
நம்மைப் படிக்க வைக்கின்றார் என குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள். எவ்வளவோ சத்சங்கங்கள் இருக்கின்றது.
வேறு எங்கும் தந்தையே வந்து எங்களுக்கு இராஜயோகத்தைக்
கற்பிக்கின்றார் என புரிய வைக்க முடியாது. இராஜ்யத்திற்காக
படிக்க வைப்பார்கள். ராஜாவாக மாற்றக்கூடியவர் ராஜாவாக இருக்க
வேண்டும் அல்லவா? டாக்டர் படிக்க வைத்து தனக்கு சமமாக டாக்டராக
மாற்றுகிறார். சரி, நம்மை டபுள் கிரீடம் உடையவராக மாற்றுவதற்கு
டபுள் கிரீடம் உடையவராக மாற்றக் கூடியவர் எங்கிருந்து வருவார்?
எனவே மனிதர்கள் கிருஷ்ணருக்கு டபுள் கிரீடத்தை காண்பித்து
விட்டனர். ஆனால் கிருஷ்ணர் எப்படி படிக்க வைப்பார்? நிச்சயமாக
பாபா சங்கமத் தில் வந்திருப்பார் வந்து இராஜ்யத்தை உருவாக்கி
இருப்பார். பாபா எப்படி வருகிறார், இது உங்களைத் தவிர வேறு
யாருடைய புத்தியிலும் இருக்காது. தூர தேசத்திலிருந்து பாபா
வந்து நம்மை படிக்க வைக் கின்றார். இராஜ யோகத்தைக்
கற்பிக்கின்றார். எனக்கு ஒளி அல்லது ரத்தினங்கள் பொதிந்த
கிரீடம் எதுவும் இல்லை என பாபா கூறுகின்றார். அவர் ஒரு போதும்
இராஜ்யத்தைப் பெறுவதில்லை, டபுள் கிரீடம் உடையவராக மாறுவதில்லை.
மற்றவர்களை மாற்றுகின்றார். ஒரு வேளை நான் ராஜாவாக மாறினால்
பிறகு ஏழையாகவும் மாற வேண்டி யிருக்கும் என்று பாபா கூறுகிறார்.
பாரத வாசிகள் தான் பணக்காரர்களாக இருந்து இப்போது ஏழைகளாகி
இருக்கிறீர்கள். நீங்கள் கூட டபுள் கிரீடம் உடையவராக
மாறுகிறீர்கள் என்றால் உங்களை மாற்றுபவர் கூட டபுள் கிரீடம்
உடையவராக இருக்க வேண்டும். அவருடன் தொடர்பு ஏற்பட முடியும்.
யார் எப்படி இருக்கிறார்களோ அவர்தான் தனக்குச் சமமாக
மாற்றுவார்கள். சன்னியாசிகள் முயற்சி செய்து சன்னியாசியாக
மாற்றுவார். நீங்கள் இல்லறத்தில் இருப்பவர்கள். அவர்கள்
சன்னியாசி. பிறகு நீங்கள், அவர்களை பின்பற்றுபவர்களாக இருக்க
முடியாது. இவர்கள் சிவானந்தாவைப் பின்பற்றுபவர்கள் என்று
கூறுகிறார்கள். ஆனால் சன்னியாசிகள் மொட்டை யடித்துக்
கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அது போல் பின்பற்றுவதில்லை. எனவே
நீங்கள் எப்படி பின்பற்றுபவர்கள் என்று கூறிக் கொள்கிறீர்கள்.
பின்பற்றுபவர்கள் என்றால் உடனே உடையை கழற்றி விட்டு காவி உடையை
அணிய வேண்டும். நீங்களோ இல்லறத்தில் விகாரங்களில்
இருக்கிறீர்கள். பிறகு சிவானந்தாவைப் பின்பற்றுபவர்கள் என்று
எப்படிக் கூறுகிறீர்கள்? சத்கதி அளிப்பது குருவின் வேலையாகும்.
இன்னாரை நினைவு செய் என்று குரு ஒரு போதும் கூற மாட்டார்.
அப்படியானால், அவரே குரு கிடையாது. முக்தி தாமம் செல்வதற்கு
யுக்தி வேண்டும்.
உங்களுடைய வீடு முக்தி தாமம் மற்றும் நிராகார உலகம் ஆகும் என்று
குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்க பட்டிருக்கிறது.
ஆத்மாவிற்குத் தான் நிராகார ஆத்மா என்று பெயர். சரீரம் 5
தத்துவங்களால் உருவாக்கப்பட்டது. ஆத்மாக்கள் எங்கிருந்து
வருகிறது. பரந்தாமம் நிராகார உலகத்தில் இருந்து அங்கே நிறைய
ஆத்மாக்கள் இருக்கின்றது. அதற்கு இனிமையான அமைதியான வீடு என்று
பெயர். அங்கே ஆத்மாக்கள் சுக துக்கத்தில் இருந்து
விடுபட்டிருக்கிறது. இதை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். நாம்
இனிமையான அமைதியான வீட்டில் வசிப்பவர்கள். இங்கே இந்த நாடக சாலை
இருக்கிறது. அங்கிருந்து நாம் நடிப்பதற்காக வந்திருக்கிறோம்.
இந்த நாடக சாலையில் சூரியன், சந்திரன், நட்சத்திரங் கள் போன்ற
விளக்குகள் இருக்கின்றன. யாரும் எண்ண முடியாது. இந்த நாடக மேடை
எவ்வளவு மைல் தூரத்தில் இருக்கிறது. விமானத்தில் மேலே
செல்கிறார்கள். ஆனால் அதில் போய் திரும்பி வரும் அளவிற்கு
பெட்ரோல் போட முடியாது. இவ்வளவு தொலைவு போக முடியாது. இவ்வளவு
மைல் வரை செல்லலாம். திரும்ப முடியவில்லை என்றால் விழுந்து
விடுவோம் என அவர்களுக்குத் தெரியும். சமுத்திரம் அல்லது ஆகாய
தத்துவத்தின் முடிவு வரை அடைய முடியாது. இப்போது பாபா
உங்களுக்கு தன்னுடைய முடிவைக் காண்பிக்கிறார். ஆத்மா இந்த ஆகாய
தத்துவத்தைக் கடந்து செல்கிறது. எவ்வளவு பெரிய ராக்கெட் உள்ளது.
ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும் போது ராக்கெட் போன்று
பறக்க ஆரம்பித்து விடுவீர்கள். எவ்வளவு சிறிய ராக்கெட். சூரியன்
சந்திரனைக் கூட கடந்து மூல வதனத்தில் சென்று விடுவீர்கள்.
சூரியன் சந்திரனின் முடிவை அறிந்துக் கொள்வதற்கு எவ்வளவு
முயற்சி செய்கிறார்கள். தூரத்தில் உள்ள நட்சத்திரங்கள்
பார்ப்பதற்கு எவ்வளவு சிறியதாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு
பெரியது அது. நீங்கள் பட்டம் விடும் போது மேலே செல்ல செல்ல
எவ்வளவு சிறியதாகத் தெரிகிறது. அது போன்று தான். உங்களுடைய
ஆத்மா அனைத்தையும் விட வேகமானது என்று பாபா கூறுகிறார். ஒரு
நொடியில் ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு கருவில் நுழைந்து
விடுகிறது. ஒருவருடைய கர்மத்தின் கணக்கு வழக்கு லண்டனில்
இருக்கிறது என்றால் நொடியில் லண்டன் சென்று பிறவி எடுக்கிறார்.
நொடியில் ஜீவன் முக்தி என்று கூறப் பட்டிருக்கிறது அல்லவா!
பிள்ளை கருவிலிருந்து வெளியே வந்ததும் அதிபதியாகி விட்டது. வாரி
சாகி விட்டது. குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைத் தெரிந்துக்
கொண்டீர்கள் என்றால் உலகத் திற்கே அதிபதி ஆகிவிட்டீர்கள்.
எல்லையற்ற தந்தை தான் வந்து உங்களை உலகத்திற்கே அதிபதி
யாக்குகின்றார். பள்ளிக் கூடத்தில் வக்கீலுக்கு படித்தால்
வக்கீலா கிறார்கள். இங்கே நீங்கள் டபுள் கிரீடம் உடையவராக
மாறுவதற்காக படிக்கிறீர்கள். ஒரு வேளை பாஸ் செய்து விட்டால்
டபுள் கிரீடம் உடையவராக நிச்சயம் மாறுவீர்கள். மீண்டும்
நிச்சயம் சொர்க்கத்திற்கு வருவீர்கள். பாபா எப்போதும் அங்கே
தான் இருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். ஓ, கடவுளே! என்று
கூறும் போது நிச்சயம் பார்வை மேலே போகிறது. கடவுள் என்றால்
நிச்சயம் அவருடைய நடிப்பு என்றும் சிறிது இருக்கும் அல்லவா?
இப்போது நடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை தோட்டக்காரன் என்று
கூறுகிறார்கள். முட்களை மலராக மாற்றுகிறார். ஆகையால் குழந்தை
களாகிய உங்களுக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். பாபா வேற்று
நாட்டிற்கு வந்திருக்கிறார். தொலை தூரத்தில் வசிக்கக் கூடியவர்.
வேற்று தேசத்தில் வந்திருக்கிறார். பாபா தான் தூர தேசத்தில்
வசிக்கக் கூடியவர். மேலும் ஆத்மாக்களும் அங்கிருக்கிறார்கள்.
இங்கே நடிப்பதற்காக வருகிறார்கள். வேற்று தேசம் என்பதன் பொருள்
யாருக்கும் தெரியவில்லை. மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் என்ன
கேட்கிறார் களோ அதை சத்தியம் சத்தியம் என்று கூறிக் கொண்டே
இருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா எவ்வளவு
நன்றாகப் புரிய வைக் கின்றார். ஆத்மா அசுத்தம் ஆகியதால் பறக்க
முடியவில்லை. தூய்மையாகாமல் வீட்டிற்குப் போக முடியாது. பதீத
பாவனர் என்று ஒரு தந்தைக்குத் தான் கூறப்படுகிறது. அவர்
சங்கமத்தில் வந்தே ஆக வேண்டும். நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும். பாபா நம்மை எவ்வளவு டபுள் கிரீடம் உடையவராக
மாற்றிக் கொண்டிருக்கிறார். இதை விட உயர்ந்த வகுப்பு வேறு
எதுவும் இல்லை. நான் டபுள் கிரீடம் உடைய வராக மாறுவதில்லை என
பாபா கூறுகிறார். நான் ஒரு முறை தான் வருகிறேன். வேற்று
தேசத்தில் வேற்று உடலில். நான் சிவன் கிடையாது என்று இந்த
தாதாவும் கூறுகிறார். என்னை லக்கிராஜ் என்று கூறுகிறார்கள்.
பிறகு அர்ப்பணம் ஆன உடன் பாபா பிரம்மா என்று பெயர் வைத்து
விட்டார். இவருக்குள் பிரவேசம் ஆகி நீ உன்னுடைய பிறவிகளைப்
பற்றித் தெரிந்துக் கொள்ள வில்லை என்று இவருக்கு கூறினார். 84
பிறவிகளின் கணக்கு வேண்டும் அல்லவா? அவர்களோ 84 லட்சம் பிறவிகள்
என்று கூறிவிட்டனர். நிச்சயமாக அது முடியாது. 84 லட்சம்
பிறவிகளின் ரகசியத்தைப் புரிய வைப்பதற்கு ஆயிரக்கணக்கான
வருடங்கள் ஆகிறது. நினைவும் இருக்காது. 84 லட்சம் உயிரினங்கள்
என்றால் பசு பட்சி அனைத்தும் அதில் வந்து விடும். மனிதப் பிறவி
தான் மோசமானது என்று கூறப்பட்டிருக்கிறது. விலங்குகள் ஞானத்தைப்
புரிந்துக் கொள்ள முடியாது. தந்தையே வந்து உங்களுக்கு ஞானத்தை
கற்றுத் தருகின்றார். நான் இராவணனின் ராஜ்யத்தில் வருகிறேன்
என்று அவரே கூறுகிறார். மாயை உங்களை எவ்வளவு கல்புத்தி உடைய
தாக மாற்றி விட்டது. இப்போது மீண்டும் பாபா உங்களை தங்க புத்தி
உடையவராக மாற்று கின்றார். இறங்கும் கலையில் நீங்கள் கல் புத்தி
உடையவராக மாறி விட்டீர்கள். இப்போது மீண்டும் பாபா ஏறும்
கலையில் கொண்டு செல்கிறார். வரிசைக்கிரமம் இருக்கிறது அல்லவா.
ஒவ்வொருவரும் அவரவர் முயற்சியின்படி புரிந்துக் கொள்ள வேண்டும்.
நினைவு தான் முக்கியமான விசயம் ஆகும். இரவு தூங்கும் போது இதைப்
பற்றி சிந்தியுங்கள். பாபா நான் உங்களுடைய நினைவில்
தூங்குகிறேன். நான் இந்த உடலை விடுகிறேன். தங்களிடம்
வருகின்றோம். இப்படி பாபாவை நினைவு செய்து செய்து தூங்கி
விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி வருகிறது பாருங்கள். காட்சிகள் கூட
கிடைக்கலாம். ஆனால் இந்த காட்சி போன்றவைகளைப் பார்ப்பதில்
மகிழ்ச்சி அடையக் கூடாது. பாபா நாங்கள் உங்களைத் தான் நினைவு
செய்கிறோம். உங்களிடம் வர விரும்புகின்றோம். நீங்கள் பாபாவை
நினைவு செய்து செய்து மிகவும் ஓய்வாகச் சென்று விடுவீர்கள்.
சூட்சும வதனத்திற்குக் கூட செல்லலாம். முடியும். மூல
வதனத்திற்கு போக முடியாது. இப்போது திரும்பிச் செல்வதற்கான
நேரம் எங்கே வந்து விட்டது. ஆம், காட்சிகள் கிடைத்தது. பிந்து,
பிறகு சிறிய சிறிய ஆத்மாக்களின் மரம் தென்படும். உங்களுக்கு
வைகுண்டத் தின் காட்சிகள் கிடைத் திருக்கிறது அல்லவா? காட்சிகள்
கிடைத்ததால் நீங்கள் வைகுண்டத்திற்குச் சென்று விடுவீர்கள்
என்பது கிடையாது. இல்லை. அதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்.
நீங்கள் முதன் முதலில் இனிமையான வீட்டிற்குச் செல்வீர்கள் என்று
உங்களுக்குப் புரிய வைக்கப்படு கிறது. அனைத்து ஆத்மாக்களும்
நடிப்ப திலிருந்து விடுபட்டு விடுவார்கள். எது வரை ஆத்மா
தூய்மையாகவில்லையோ அது வரை போக முடியாது. மற்றபடி காட்சிகளைப்
பார்ப்பதால் எதுவும் கிடைப்பதில்லை. மீராவிற்கும் கூட காட்சி
கிடைத்தது. வைகுண்டத்திற்குச் சென்று விடவில்லை. சத்யுகம் தான்
வைகுண்டமாக இருக்கிறது. இப்போது நீங்கள் வைகுண்டத்திற்கு
அதிபதியா வதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபா
காட்சிகள் பார்ப்பதில் அவ்வளவாக செல்ல விடுவதில்லை. ஏனென்றால்
நீங்கள் படிக்க வேண்டும் அல்லவா? தந்தை படிக்க வைக்கின்றார்.
அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். வினாசம் எதிரில் இருக்கிறது.
மற்றபடி அசுரர்களுக்கும் தேவதைகளுக்கும் போர் ஏற்படவில்லை.
அவர்கள் உங்களுக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
ஏனென்றால், உங்களுக்குப் புதிய உலகம் வேண்டும். மற்றபடி நீங்கள்
மாயை யுடன் போரிடுகிறீர்கள். நீங்கள் மிகவும் பிரசித்தமான போர்
வீரர்கள். தேவிகளுக்கு ஏன் இவ்வளவு புகழ் பாடுகிறார்கள் என்று
யாருக்கும் தெரியவில்லை. இப்போது நீங்கள் பாரதத்தை யோக பலத்தால்
சொர்க்கமாக மாற்றுகிறீர்கள். இப்போது உங்களுக்குப் பாபா
கிடைத்து விட்டார். ஞானத்தினால் புதிய உலகம் உருவாகிறது என
உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக் கின்றார். இந்த லஷ்மி
நாராயணன் புது உலகத்திற்கு அதிபதியாக இருந்தனர் அல்லவா? இது
பழைய உலகம் ஆகும். பழைய உலகத்தின் அழிவு முன்பு கூட
அணுகுண்டுகள் மூலமாக நடந்தது அல்லவா? மகாபாரத போர் நடந்தது.
அச்சமயம் பாபா இராஜயோகத்தையும் கற்பித்துக் கொண்டிருந்தார்.
இப்போது நடைமுறையில் பாபா இராஜயோகத்தை கற்பித்துக் கொண்டிருக்
கிறார் அல்லவா? பாபா தான் உங்களுக்கு உண்மையைத் தெரிவிக்கிறார்.
உண்மையான தந்தை வருகின்றார் என்றால் நீங்கள் எப்போதும்
மகிழ்ச்சியில் நடனம் ஆடுகிறீர்கள். இது ஞான நடனம் ஆகும். எனவே
யாருக்கு ஞான நடனத்தில் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் முன்னால்
அமர வேண்டும். யார் புரிந்துக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு
கொட்டாவி வரும். இவர்கள் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை என
புரிந்துக் கொள்ளலாம். ஞானத்தில் எதுவும் புரிந்துக்
கொள்ளவில்லை என்றால் இங்கும் அங்கும் பார்த்துக்
கொண்டிருப்பார்கள். பாபாவும் நீங்கள் யாரை அழைத்து
வந்திருக்கிறீர்கள் என பிராமணியைக் கேட்பார். யார் கற்றுக்
கொள்கிறார்களோ கற்பிக் கிறார்களோ அவர்கள் முன்னால் அமர வேண்டும்.
அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். நாமும் நடனம் ஆட வேண்டும். இது
ஞான நடனம் ஆகும். கிருஷ்ணர் ஞானத்தைக் கூறவும் இல்லை. நடனமும்
ஆட வில்லை. முரளி ஞானத்தினுடையது அல்லவா? எனவே இரவு தூங்கும்
போது தந்தையை நினையுங் கள். சக்கரத்தை புத்தியில் நினைத்துக்
கொண்டே இருங்கள் என பாபா புரிய வைக்கிறார். பாபா நாங்கள் இந்த
உடலை விட்டு விட்டு உங்களிடம் வருகிறோம். இவ்வாறு நினைத்துக்
கொண்டே தூங்கினால் என்ன நடக்கிறது என பாருங்கள். முன்பு
சுடுகாட்டை உருவாக்கி விடுவார்கள். பிறகு ஒரு சிலர் அமைதியில்
சென்று விடுவர். சிலர் நடனம் ஆடினர். பாபாவைப் பற்றி
தெரியவில்லை என்றால், அவரை எப்படி நினைவு செய்ய முடியும்?
மனிதர்கள் தந்தையைப் பற்றி அறியவில்லை என்றால் எப்படி தந்தையை
நினைக்க முடியும்? நான் யார் எப்படி இருக்கிறேன். என்று என்னைப்
பற்றி யாருக்கும் தெரியவில்லை என பாபா கூறுகின்றார்.
இப்போது நீங்கள் எவ்வளவு புரிந்துக் கொண்டீர்கள். நீங்கள்
குப்தமான (மறைமுக) படை வீரர்கள். போர் வீரர்கள் என்ற பெயரைக்
கேட்டு தேவிகளுக்கு வாள், அம்பு போன்றவைகளைக் கொடுத்
திருக்கின்றார். நீங்கள் யோக பலத்தின் வீரர்கள். யோக பலத்தினால்
உலகத்திற்கு அதிபதி யாகிறீர்கள். உடல் வலிமையினால் எவ்வளவு
முயற்சி செய்தாலும் வெற்றி அடைய முடியாது. பாரதத்தின் யோகம்
பிரசித்தமானது. இதை பாபா தான் வந்து கற்பிக்கின்றார். இதுவும்
யாருக்கும் தெரியவில்லை. உட்கார்ந்தாலும் எழுந்தாலும் பாபாவைத்
தான் நினைவு செய்துக் கொண்டே இருங்கள். யோகா செய்ய முடியவில்லை
என்கிறார்கள். யோகா என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்.
குழந்தைகள் பாபாவை நினைக்கிறார்கள் அல்லவா? என்னை மட்டும்
நினையுங்கள் என்று சிவபாபா கூறுகின்றார். நான் தான் சர்வ
சக்திவான் என்னை நினைப்பதால் நீங்கள் சதோபிரதானமாகி விடுவீர்கள்.
சதோபிரதானமாகி விடும் போது ஆத்மாக்களின் ஊர்வலம் கிளம்பும்.
தேனீக்களின் ஊர்வலம் இருக்கிறது அல்லவா? இது சிவபாபாவின்
ஊர்வலம். சிவபாபாவிற்குப் பின் அனைத்து ஆத்மாக்களும் கொசுக்
கூட்டத்தை போன்று பறக்கும். மற்றபடி இந்த சரீரம் அனைத்தும்
அழிந்து போகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு,
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாபாவுடன் இனிமையிலும்
இனிமையாகப் பேச வேண்டும். பாபா நாங்கள் இந்த சரீரத்தை விட்டு
விட்டு உங்களிடம் வருகிறோம். இவ்வாறு நினைத்துக் கொண்டே தூங்க
வேண்டும். நினைவு தான் முக்கியமாகும். நினை வினால் தான்
தங்கபுத்தி உடையவர் ஆவீர்கள்.
2. 5 விகாரங்கள் என்ற நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக
ஆத்ம அனிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். அளவு கடந்த
குஷியில் இருக்க வேண்டும், ஞான டான்ஸ் செய்ய வேண்டும்.
வகுப்பில் சோம்பேறித்தனத்தை பரப்பக் கூடாது.
வரதானம்:
சேவை மூலம் அனேக ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தை அடைந்து சதா
முன்னேறி செல்லக்கூடிய மகாதானி ஆகுக.
மகாதானி ஆகுவது என்றால் பிறருக்கு சேவை செய்வது என்பதாகும்.
பிறருக்கு சேவை செய்வதனால் சுயத்தின் சேவை தானாகவே நடைபெறுகிறது.
மகாதானி ஆகுவது என்றால் தன்னை செல்வந்தர் ஆக்குவதாகும். எத்தனை
ஆத்மாக்களுக்கு சுகம், சக்தி மற்றும் ஞானத்தின் தானம்
வழங்குவீர்களோ, அத்தனை ஆத்மாக் களுடைய பிராப்திகளின் சப்தம்
அல்லது நன்றி என்ன வெளிப்படுகிறதோ, அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
ஆகிவிடும். இந்த ஆசீர்வாதங்கள் தான் முன்னேறுவதற்கான சாதனம்
ஆகும். யாருக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றனவோ, அவர்கள் சதா
குஷியாக இருப்பார்கள். எனவே, தினமும் அமிர்தவேளையில் மகாதானி
ஆகுவதற்கான புரோகிராமை உருவாக்குங்கள். தானமே செய்யாத ஒரு நேரம்
அல்லது நாள் இருக்கக் கூடாது.
சுலோகன்:
இப்பொழுது கிடைக்கும் பிரத்யட்ச பலனானது ஆத்மாவிற்கு பறக்கும்
கலைக்கான பலம் கொடுக்கிறது.
அவ்யக்த சமிக்ஞை - அசரீரி அல்லது விதேகி ஸ்திதியின் பயிற்சியை
அதிகப்படுத்துங்கள்
தந்தைக்கு சமீபமாக மற்றும் சமமாக ஆகுவதற்காக தேகத்தில்
இருக்கும்பொழுதே விதேகி ஆகுவதற்கான பயிற்சி செய்யுங்கள்.
எவ்வாறு கர்மாதீத் ஆகுவதற்கான உதாரணமாக சாகாரத்தில் பிரம்மா
பாபாவைப் பார்த்திருக் கின்றீர்கள், அதுபோல் தந்தையைப்
பின்பற்றுங்கள். எதுவரை இந்த தேகம் உள்ளதோ,
கர்மேந்திரியங்களுடன் இந்த கர்மசேத்திரத்தில் நடிப்பு நடித்துக்
கொண்டிருக் கின்றீர்களோ, அதுவரை கர்மம் செய்யும்பொழுது
கர்மமேந்திரி யங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு,
விடுபட்டுவிடுங்கள், இந்தப் பயிற்சி விதேகி ஆக்கிவிடும்.