08.12.24    காலை முரளி            ஓம் சாந்தி  13.02.2003      பாப்தாதா,   மதுபன்


நிகழ்கால நேரத்தில் தனது கருணையுள்ளம் மற்றும் வள்ளல் சொரூபத்தை வெளிப்படுத்துங்கள்

இன்று வரம் கொடுக்கும் வள்ளல் பாபா தனது ஞான வள்ளல், சக்தி வள்ளல், குணங்களின் வள்ளல், பரமாத்ம செய்தி கொடுக்கும் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழந்தை யும் மாஸ்டர் வள்ளலாகி ஆத்மாக்களை தந்தையின் நெருக்கத்தில் கொண்டு வருவதற்கு மனதார முயற்சி செய்து கொண்டி ருக்கின்றனர். உலகில் அநேக விதமான ஆத்மாக்கள் இருக்கின்றனர். எந்த ஆத்மாக்களுக்கு ஞானாமிர்தம் தேவை, எந்த ஆத்மாக்களுக்கு சக்தி தேவை, குணம் தேவை. குழந்தைகளாகிய உங்களிடம் அனைத்து பொக்கிஷங்கள் அழிவற்று இருக்கிறது. ஒவ்வொரு ஆத்மாவின் விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்கிறீர்கள். நாளுக்கு நாள் முடிவிற்கான நேரம் நெருக்கத்தில் வருகின்ற காரணத்தினால் இப்பொழுது ஆத்மாக்கள் ஏதாவது புது ஆதரவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் புது ஆதரவு கொடுப்பதற்கு நிமித்தமாக இருக்கிறீர்கள். குழந்தைகளின் ஆர்வம்-உற்சாகத்தைப் பார்த்து பாப்தாதா குஷியடை கின்றார். ஒருபுறம் அவசியமாகவும், மற்றொருபுறம் ஆர்வம்-உற்சாகம் இருக்கிறது. அவசியமான நேரத்தில் ஒரு துளிக்கும் மகத்துவம் இருக்கும். ஆக இந்த நேரத்தில் நீங்கள் கொடுத்த அஞ்ச-, செய்திக்கும் மகத்துவம் இருக்கிறது.

நிகழ்காலத்தில் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் கருணையுள்ளம் மற்றும் வள்ளல் சொரூபத்தை வெளிப்படுத்தும் நேரமாகும். பிராமண ஆத்மாக்களாகிய உங்களது அநாதி சொரூபத் திலும் வள்ளல் சன்ஸ்காரம் நிறைந்திருக்கிறது. ஆகையால் கல்ப விருட்ச சித்திரத்தில் நீங்கள் விருட்சத்தின் வேர் பகுதியில் காண்பிக்கப் பட்டுள்ளீர்கள். ஏனெனில் வேர் மூலமாகத் தான் முழு மரத்திற்கும் அனைத்தும் சென்றடைகிறது. உங்களது ஆதி சொரூபம் தேவதை சொரூபம். அதன் பொருளே தேவதை என்றால் கொடுக்கக் கூடியவர்கள். உங்களது மத்திய சொரூபம் பூஜ்ய சிலையாகும். ஆக மத்திய காலத்திலும் பூஜ்ய ரூபத்தில் நீங்கள் வரதானம் கொடுப் பவர்களாக, ஆசிர்வாதம் கொடுக்கும் வள்ளல் ரூபத்தில் இருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய உங்களது விசேஷ சொரூபமே வள்ளல் ஆகும். இப்பொழுதும் பரமாத்மாவின் செய்தி கொடுப்பவர்களாகி உலகில் தந்தையை பிரத்ட்சயப்படுத்தும் செய்தி பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் சோதனை செய்யுங்கள் - அநாதி, ஆதி வள்ளலுக்கான சம்ஸ்காரம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் சதா வெளிப்படையான (எமர்ஜ்) ரூபத்தில் இருக்கிறதா? வள்ளல் சம்ஸ்காரமுடைய ஆத்மாக்களின் அடையாளம் - ஒருவர் கொடுத்தால் நான் கொடுக்கிறேன், ஒருவர் செய்தால் நான் செய்வேன் என்று எண்ணத்திலும் கூட ஒருபோதும் அவர்கள் நினைக்கமாட்டார்கள். நிரந்தர திறந்த களஞ்சியமாக இருப்பார்கள். ஆக நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளின் வள்ளலுக்கான சம்ஸ்காரத்தை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். என்ன பார்த்திருப்பார்? வரிசைக்கிரமமாக இருக்கவே செய்கிறீர்கள். இப்படி இருந்தால் நானும் இதை செய்வேன் என்று ஒருபோதும் இந்த சங்கல்பம் செய்யாதீர்கள். வள்ளல் சம்ஸ்காரமுடையவர்களுக்கு அனைத்து தரப்பி-ருந்தும் தானாகவே சகயோகம் பிராப்தியாக கிடைக்கும். ஆத்மாக்கள் மூலம் மட்டுமல்ல, இயற்கையும் கூட சரியான நேரத்தில் சகயோகி ஆகிவிடும். யார் சதா வள்ளல் ஆகிறார்களோ, அந்த புண்ணியத்தின் பலன் சரியான நேரத்தில் சகயோகம், சரியான நேரத்தில் வெற்றி அந்த ஆத்மாவிற்கு எளிதாக பிராப்தியாக கிடைக்கும், இதுவும் சூட்சும கணக்காகும். ஆகையால் வள்ளலுக்கான சம்ஸ்காரம் வெளிப்படையான ரூபத்தில் வைத்துக் கொள்ளுங்கள். புண்ணியத்தின் கணக்கு ஒன்றுக்கு 10 மடங்கு பலன் கொடுக்கிறது. ஆக முழு நாளும் குறிப்பெடுங்கள் - சங்கல்பத்தின் மூலம், வார்த்தைகளின் மூலம், சம்பந்தம்-தொடர்பின் மூலம் புண்ணிய ஆத்மாவாகி புண்ணியத்தின் கணக்கு எவ்வளவு சேமித்திருக்கிறேன்? மன சேவையும் கூட புண்ணிய கணக்கை சேமிப்பு செய்கிறது. வார்த்தைகளின் மூலம் ஒரு பலவீன ஆத்மாவை குஷிபடுத்துகிறீர்கள், குழப்பமானவரை பெருமையின் நினைவு ஏற்படுத்துகிறீர்கள், மனம் உடைந்த ஆத்மாவை தனது வார்த்தைகளின் மூலம் ஊக்கம்-உற்சாகத்தில் கொண்டு வருகிறீர்கள், சம்பந்தம்-தொடர்பில் வரும் ஆத்மாக்களுக்கு தனது சிரேஷ்ட சகவாசத்தின் அனுபம் செய்விக்கிறீர்கள், இந்த விதியின் மூலம் புண்ணிய கணக்கு சேமிக்க முடியும். இந்த பிறவியில் அந்த அளவிற்கு புண்ணியம் சேமிக்க முடியும்-அரை கல்பம் அந்த புண்ணியத்தின் பலன் அனுபவிக்கிறீர்கள். மேலும் அரை கல்பம் உங்களது ஜடச்சித்திரம் (சிலை) பாவி ஆத்மாக்களை வாயுமண்டலத்தின் மூலம் பாவத்தி-ருந்து விடுவிக்கிறீர்கள். பதீத பாவனியாக ஆகிவிடுகிறீர்கள். ஆக பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் சேமித்திருக்கும் புண்ணிய கணக்கை பார்த்துக் கொண்டி ருக்கின்றார்.

நிகழ்காலத்தில் சேவையில் குழந்தைகளின் ஆர்வம்-உற்சாகத்தைப் பார்த்து பாப்தாதா குஷியடை கின்றார். மெஜாரிட்டி குழந்தைகளிடம் சேவையில் ஆர்வம் நன்றாக இருக்கிறது. அனைவரும் அவரவர்களது சேவைக்கான திட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு பாப்தாதா மனதார வாழ்த்துக் கொடுக் கின்றார். நன்றாக செய்து கொண்டிருக்கிறீர்கள் மற்றும் நன்றாக செய்து கொண்டிருப்பீர்கள். அனைத்தையும் விட நல்ல விசயம் - அனைவரின் சங்கல்பம் மற்றும் நேரம் பிசியாக ஆகிவிட்டது. ஒவ்வொருவரிடமும் இந்த இலட்சியம் இருக்கிறது - நாலாபுறங்களின் சேவையின் மூலம் இப்பொழுது முறையீடு செய்வதை அவசியம் நிறைவேற்ற வேண்டும்.

பிராமணர்களின் திட சங்கல்பத்தில் சக்தி அதிகம் இருக்கிறது. பிராமணர்கள் திட சங்கல்பம் செய்து விட்டால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது! அனைத்தும் நடைபெற்று விடும். யோகாவை ஜுவாலா ரூபம் ஆக்கி விட்டால் போதும். யோகா ஜுவாலா ரூபம் ஆகிவிட்டால் ஜுவாலாவிற்கு வசமாகி ஆத்மாக்கள் தானாகவே வந்து விடுவார்கள். ஏனெனில் ஜுவாலா (ஒளி) கிடைப்பதன் மூலம் அவர்களுக்கு வழி தென்படும். இப்பொழுது யோகா செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் யோகா ஜுவாலா ரூபம் கிடையாது. சேவையில் ஆர்வம்-உற்சாகம் நன்றாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் யோகாவில் ஜுவாலா ரூபம் இப்பொழுது அடிக்கோடிட வேண்டும். உங்களது திருஷ்டியில் அந்த மாதிரியான ஜொ-ப்பு வந்து விட வேண்டும் திருஷ்டியின் மூலம் ஏதாவது ஒரு அனுபவம் செய்ய வேண்டும்.

பாப்தாதாவிற்கு, அயல்நாட்டினர் காலத்தின் அழைப்பு என்ற சேவை, அதற்கான விதி நன்றாக இருக்கிறது, சிறிய குழுவை நெருக்கத்தில் கொண்டு வந்தீர்கள். இவ்வாறு ஒவ்வொரு மண்டலம், ஒவ்வொரு கிளை நிலையம் தனித்தனியாக சேவை செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால் சிலர் அனைத்து வர்க்கங்களின் குழு உருவாக்குங்கள். சேவை அதிகம் பரந்து இருக்கிறது. ஆனால் பரந்த சேவையின் மூலம் நெருக்கத்தில் வரக் கூடிய தகுதியான ஆத்மாக்களின் குழுவை தேர்ந் தெடுங்கள் என்று பாப்தாதா கூறியிருக்கின்றார். மேலும் அந்த குழுவை நேரத்திற்கு தகுந்தவாறு நெருக்கத்தில் கொண்டு வந்து கொண்டே இருங்கள். அவர்களுக்கு சேவையில் ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். ஆனால் அவர் களுக்கு சக்திசா-யான பாலனை, குழு ரூபத்தில் கிடைப்பது கிடையாது. தனித்தனியாக, இயன்ற அளவு பாலனை கிடைத்துக் கொண்டிருக்கிறது. குழுவில் ஒருவருக்கொருவர் பார்த்தும் ஆர்வம் ஏற்படுகிறது. இவரால் இது செய்ய முடிகிறது எனில் என்னாலும் இதை செய்ய முடியும், நானும் செய்வேன் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. இப்பொழுது குழுவாகி சேவையின் நடைமுறை ரூபத்தை பாப்தாதா பார்க்க விரும்புகின்றார். நன்றாக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் அவர்களது வர்க்கத்தை, ஏரியாவை, மண்டலத்தை, கிளை நிலையத்தில் செய்து கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா குஷியடைகின்றார். இப்பொழுது சிலரை எதிரில் அழைத்து வாருங்கள். இல்லறத்தில் இருப்பவர்களின் ஆர்வமும் பாப்தாதாவிடம் வந்து சேர்கிறது. இரட்டை அயல்நாட்டினரும் இரட்டை காரியத்தில், சேவை மற்றும் சுய முயற்சியில் ஆர்வம் நன்றாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போதும் பாப்தாதாவிற்கு குஷி ஏற்படுகிறது.

அயல்நாட்டில் நிகழ்கால வாயுமண்டலத்தைப் பார்க்கும் போது பிராமணர்கள் பயப்படவில்லை தானே? நாளை என்ன நடக்கும்? நாளை என்ன நடக்கும்? இவ்வாறு யோசிக்கவில்லை தானே? நாளை நல்லதே நடக்கும். நல்லது நடக்கிறது, நல்லதே நடக்கும். உலகில் எந்த அளவிற்கு குழப்பம் ஏற்படுமோ, அந்த அளவிற்கு பிராமணர்களின் நிலை உறுதியானதாக இருக்கும். அப்படி இருக்கிறது தானே? இரட்டை அயல்நாட்டினர் குழப்பத்தில் இருக்கிறீர்களா? அல்லது உறுதியாக இருக்கிறீர்களா? குழப்பத்தில் இல்லை தானே. உறுதியாக இருப்பவர்கள் கை உயர்த்துங்கள். உறுதியாக இருக் கிறீர்களா? நாளை ஏதாவது நடந்து விட்டால்? அப்போதும் உறுதியாக இருப்பீர்கள் அல்லவா! என்ன நடக்கும், எதுவும் நடக்காது. பிராமணர்களாகிய உங்கள் மீது பரமாத்மாவின் குடைநிழல் இருக்கிறது. நீர்புகாதது (வாட்டர்புரூப்) இருக்கிறது. எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் தண்ணீர் மூலம் நீர்புகாததாக இருக்கும். அதே போன்று எவ்வளவு தான் குழப்பம் இருக்கட்டும், ஆனால் பிராமண ஆத்மாக்கள் பரமாத்மாவின் குடைநிழலுக்குள் சதா புரூப் ஆக இருக்கிறீர்கள். கவலையற்ற சக்கரவர்த்திகள் அல்லவா! அல்லது என்ன நடக்குமோ என்ற கவலை சிறிது இருக்கிறதா? இல்லை, கவலையற்ற வர்கள். சுய ராஜ்ய அதிகாரியாகி, கவலையற்ற சக்கரவர்த்தியாகி, ஆடாத-அசையாத இருக்கையில் செட் ஆகியிருங்கள். இருக்கையை விட்டு கீழே இருங்காதீர்கள். அப்செட் ஆவது என்றால் இருக்கை யில் செட் ஆகவில்லை. இருக்கையில் செட் ஆகியிருப்பவர்கள் கனவிலும் கூட அப்செட் ஆக முடியாது.

தாய்மார்கள் என்ன நினைக்கிறீர்கள்? இருக்கையில் செட் ஆவது, அமருவதற்கு வருகிறதா? அசைந்து விடுவது கிடையாது தானே! பாப்தாதா இணைந்த ரூபத்தில் இருக்கிறார். சர்வசக்திவான் உங்களுடன் இணைந்திருக்கும் போது உங்களுக்கு என்ன பயம் இருக்கிறது! தனியாக இருப்பதாக நினைத்தால் குழப்பத்தில் வந்து விடுவீர்கள். இணைந்து இருந்தீர்கள் எனில் எவ்வளவு தான் குழப்பம் ஏற்பட்டாலும் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். தாய்மார்களே, சரி தானே? சரி தானே, இணைந்து இருக்கிறீர்கள் தானே! தனியாக கிடையாது தானே? தந்தையின் பொறுப்பாகும், நீங்கள் இருக்கையில் செட் ஆகிவிட்டால் தந்தையின் பொறுப்பாகி விடும். அப்செட் ஆகிவிட்டால் நீங்கள் பொறுப்பாகி விடுகிறீர்கள்.

ஆத்மாக்களுக்கு செய்தி மூலம் அஞ்ச- கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள் எனில் வள்ளல் சொரூபத்தில் நிலைத்திருப்பீர்கள். வள்ளலுக்குக்கான புண்ணியத்தின் பலன் சக்தி கிடைத்துக் கொண்டே இருக்கும். நடந்தாலும், சுற்றினாலும் நான் ஆத்மா செய்விப்பவன். இந்த கர்மேந்திரியங் கள் செய்யக் கூடிய வேலைக்காரர்கள். இந்த ஆத்ம நினைவின் அனுபவம் சதா வெளிப்படையான (எமர்ஜ்) ரூபத்தில் இருக்க வேண்டும். நான் ஆத்மாவே தான் என்று இருந்து விடக் கூடாது. கிடையாது, நினைவு எமர்ஜ் ஆக இருக்க வேண்டும். மெர்ஜ் ரூபத்தில் இருக்கிறது, ஆனால் எமர்ஜ் ரூபத்தில் இருப்பதன் மூலமம் அந்த போதை, குஷி மற்றும் கட்டுபட்டுத்தும் சக்தி இருக்கும். மஜாவும் ஏற்படும். ஏன்? சாட்சியாக இருந்து காரியம் செய்விக்கிறீர்கள். எனவே அடிக்கடி சோதனை செய்யுங்கள் - செய்விப்பவராகி காரியம் செய்வித்துக் கொண்டிருக்கிறேனா? ஒரு அரசர் தனது வேலைக்காரர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார், கட்டளையிட்டு செய்விப்பார். அதே போன்று ஆத்மா செய்விக்கக் கூடியது என்ற சொரூபத்தின் நினைவு இருந்தால் அனைத்து கர்மேந்திரியங்களும் கட்டுப்பாட்டில் இருக்கும். மாயாவின் கட்டுப்பாட்டில் இருக்காது, உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும். இல்லையெனில் மாயை பார்க்கும் - செய்விக்கக் கூடிய ஆத்மா சோம்பலுடன் இருக்கிறது என்று நினைத்து மாயை கட்டளையிட ஆரம்பித்து விடும். சில நேரம் சங்கல்ப சக்தி, சில நேரம் வார்த்தைகளின் சக்தி மாயாவின் கட்டளைப்படி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ஆகையால் ஒவ்வொரு கர்மேந்திரியத்தையும் தனது கட்டுப்பாட்டில் நடத்துங்கள். விரும்பவில்லை, ஆனால் நடந்து விட்டது என்று கூறக்கூடாது. எது விரும்புகிறீர்களோ அதுவே நடைபெறும். இப்பொழுதி-ருந்தே இராஜ்ய அதிகாரி ஆவதற்கான சன்ஸ்காரம் உருவாக்கும் போது தான் அங்கும் இராஜ்யம் செய்வீர்கள். சுய இராஜ்ய அதிகாரி என்ற இருக்கை விட்டு ஒருபோதும் கீழே இருங்காதீர்கள். கர்மேந்திரியங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் ஒவ்வொரு சக்தியும் உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும். எந்த சக்தி எந்த நேரத்தில் அவசியமோ, அந்த நேரத்தில் சரி என்று கூறி ஆஜராகி விடும். நீங்கள் பொறுமை சக்திக்கு கட்டளையிடுகிறீர்கள், ஆனால் காரியம் முடிந்த பின் அது வருகிறது என்று இருக்கக் கூடாது. ஒவ்வொரு சக்தியும் உங்களது கட்டளைப்படி சரி என்று இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு சக்தியும் பரமாத்மாவின் கொடுப்பினை ஆகும். எனவே பரமாத்மா வின் கொடுப்பினை உங்களது பொருளாக ஆகிவிட்டது. தனது பொருளை எப்படி பயன்படுத்த, எப்போது பயன்படுத்த நினைக்கிறீர்களோ, அவ்வாறு இந்த சர்வசக்திகள் உங்களது கட்டளையை ஏற்று நடக்கும், அனைத்து கர்மேந்திரியங்களும் உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும். இது தான் சுய இராஜ்ய அதிகாரி, மாஸ்டர் சர்வசக்திவான் என்று கூறப்படுகிறது. பாண்டவர்கள் இவ்வாறு இருக்கிறீர்களா? மாஸ்டர் சர்வ சக்திவான்களாகவும் இருக்கிறீர்கள் மற்றும் சுய இராஜ்ய அதிகாரி களாகவும் இருக்கிறீர்கள். வாயி-ருந்து வெளிப்பட்டு விட்டது என்று கூறக் கூடாது. வெளிப்படுவதற்கு கட்டளையிட்டது யார்? பார்க்க விரும்பவில்லை, பார்த்து விட்டேன். செய்ய விரும்பவில்லை, செய்து விட்டேன். இது யாருடைய கட்டளைப்படி நடக்கிறது? இது அதிகாரி என்று கூறலாமா? அல்லது அடிமை என்று கூறலாமா? எனவே அதிகாரி ஆகுங்கள். நல்லது.

பாப்தாதா கூறுகின்றார் - இப்பொழுது மதுவனத்தில் அனைவரும் மிக மிக குஷியாக இருக்கிறீர்கள். இதே போன்று சதா குஷியாக இருக்க வேண்டும். ஆன்மிக ரோஜா. பாருங்கள், நாலாபுறங்களிலும் பாருங்கள். அனை வரும் மலர்ந்திருக்கும் ஆன்மிக ரோஜாவாக இருக்கின்றனர். வாடியவர்களாக அல்ல, மலர்ந்திருக்கும் ரோஜாக்கள். எனவே இதே போன்று குஷியான மற்றும் அதிஷ்டம் நிறைந்த முகத்துடன் இருக்க வேண்டும். ஒருவர் உங்களது முகத்தைப் பார்த்தும் கேட்க வேண்டும் - மிகவும் குஷியாக இருக்கிறீர்களே, உங்களுக்கு என்ன கிடைத்தது? ஒவ்வொருவரின் முகமும் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். சித்திரம் அறிமுகம் கொடுப்பது போன்று உங்களது முகமும் தந்தை கிடைத்து விட்டார் என்று தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். நல்லது.

அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? அயல்நாட்டினரும் வந்து சேர்ந்து விட்டீர்கள். அங்கு நன்றாக இருக்கிறது அல்லவா? (சகோதரி மோகினி, நியூயார்க்) பிரச்சனைகளை கேட்பதி-ருந்து தப்பித்து விட்டாய். நன்றாக செய்தீர்கள், அனைவரும் ஒன்றாக வந்து சேர்ந்து விட்டீர்கள். மிக நன்றாக செய்தீர்கள். நல்லது, இரட்டை அயல்நாட்டினருக்கு இரட்டை போதை இருக்கிறது அல்லவா! இவ்வாறு இருக்கிறதா! நான் இரட்டை அயல்நாட்டினர். இரட்டை போதை - சுய இராஜ்ய அதிகாரி மற்றும் உலக இராஜ்ய அதிகாரி. இரட்டை போதை இருக்கிறது தானே! பாப்தாதாவிற்கும் நன்றாக இருக்கிறது. எந்த ஒரு குரூப்பிலும் அயல்நாட்டினர் இல்லையெனில் அது நன்றாக இல்லை. உலகத் தந்தை அல்லவா, ஆகையால் உலகத்தினர் வேண்டும். அனைவரும் வேண்டும். தாய்மார்கள் இல்லையெனில் அதுவும் அழகில்லை. பாண்டவர்கள் இல்லையென்றால் அதுவும் அழகு குறைந்து விடுகிறது. எந்த ஒரு கிளைநிலையத்தில் எந்த பாண்டவரும் இல்லாமல் தாய்மார்கள் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமா? பாண்டவர்கள் இருந்து சக்திகள் இல்லையென்றாலும் சேவை நிலையம் அலங்காரத்துடன் இருக்காது. இருவரும் தேவை. குழந்தைகளும் தேவை. நமது பெயர் ஏன் பயன்படுத்தவில்லை என்று குழந்தைகளும் கூறுகின்றனர். குழந்தைகளின் அழகும் இருக்கிறது.

நல்லது. இப்பொழுது ஒரு விநாடியில் நிராகாரி ஆத்மாவாகி நிராகார தந்தையின் நினைவில் மூழ்கி விடுங்கள். (டிரில்)

நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து சுய இராஜ்ய அதிகாரி, சதா சாட்சி இருக்கையில் செட்டாகி இருக்கக் கூடிய ஆடாத-அசையாத ஆத்மாக்களுக்கு, சதா வள்ளல் என்ற நினைவின் மூலம் அனை வருக்கும் ஞானம், சக்தி, குணம் கொடுக்கக் கூடிய கருணையுள்ளம் உடைய ஆத்மாக்களுக்கு, சதா தனது முகத்தின் மூலம் தந்தையின் சித்திரத்தை காண்பிக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா குஷியான, அதிஷ்டசா-யான ஆன்மிக ரோஜா, ஆத்ம ரோஜா குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாதிகளிடம்: (சேவையின் கூடவே அனைத்து இடங்களிலும் 108 மணி நேர யோகா நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது) இந்த யோகா ஜுவாலை மூலம் தான் விநாச ஜுவாலையின் வேகம் அதிகரிக்கும். இப்பொழுது பாருங்கள் - நிகழ்ச்சியை உருவாக்குகிறார்கள், பிறகு யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். யோகாவின் மூலம் விகர்மம் விநாசம் ஆகும், பாவ காரியத்தின் சுமைகள் அழிந்து விடும். சேவையின் மூலம் புண்ணியத்தின் சேமிப்பு அதிகரிக்கும். ஆக புண்ணியத்தின் கணக்கு சேமித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கடந்த கால சம்ஸ்காரத்தின் சுமை எதுவெல்லாம் இருக்கிறதோ, அது யோகா ஜுவாலையின் மூலம் அழியும். சாதாரண யோகா மூலம் அல்ல. இப்பொழுது யோகா செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் பாவம் அழியும் அளவிற்கு ஜுவாலா ரூபம் இல்லை. ஆகையால் சிறிது நேரத்திற்கு அழிந்து விடுகிறது, பிறகு மீண்டும் வெளிப்பட்டு விடுகிறது. அதனால் தான் இராவணனைப் பாருங்கள், அடிப்பார்கள், எரிப்பார்கள், பிறகு எலும்பையும் தண்ணீரில் கலந்து விடுவார்கள். முற்றிலும் அழிந்து விட வேண்டும். பழைய சம்ஸ்காரம், பலவீன சம்ஸ்காரம் முற்றிலுமாக அழிந்து விட வேண்டும். ஆனால் அழியவில்லை. அடிக்கிறீர்கள், ஆனால் அழியவில்லை. அடி வாங்கிய பிறகு மீண்டும் உயிர் பெற்று விடுகிறது. சன்ஸகார மாற்றத்தின் மூலம் தான் உலக மாற்றம் ஏற்படும். இப்பொழுது சம்ஸ்காரங்களின் லீலை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. சம்ஸ்காரம் இடையிடையே வெளிப்படுகிறது அல்லவா! பெயர், அடையாளம் அழிந்து விட வேண்டும். சம்ஸ்கார மாற்றம் - இது தான் அடிக்கோடு இடுவதற்கான விசேஷ விசயமாகும். சம்ஸ்காரம் மாறவில்லை எனில் வீண் சங்கல்பமும் இருக்கிறது, நேரமும் வீணாகிக் கொண்டி ருக்கிறது. வீண் என்றால் நஷ்டமாகும். ஆகியே தீர வேண்டும். சம்ஸ்காரம் ஒத்துப்போதல் என்ற மகா நடனம் பற்றி பாடப்பட்டிருக்கிறது. இப்பொழுது நடனம் ஆடுகிறீர்கள், மகா நடனம் ஆட வில்லை. (மகா நடனம் ஏன் ஆடவில்லை?) அடிக்கோடு இடவில்லை, திடதன்மை இல்லை. விதவிதமான சோம்பல் இருக்கிறது. நல்லது.

வரதானம்:
கர்மயோகி ஆகி ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தை மற்றும் காரியத்தை சிரேஷ்டம் ஆக்கக் கூடிய நிரந்தர யோகி ஆகுக.

கர்மயோகி ஆத்மாவின் ஒவ்வொரு காரியமும் யோகயுக்த், யுக்தியுக்த் ஆக இருக்கும். ஏதாவது ஒரு காரியம் யுக்தியுக்த் ஆக இல்லையெனில் யோகயுக்த் ஆக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சாதாரணம் அல்லது வீண் காரியம் ஏற்பட்டு விடுகிறது எனில் நிரந்தர யோகி என்று கூற முடியாது. கர்மயோகி என்றால் ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு வார்த்தை சதா சிரேஷ்ட மாக இருக்க வேண்டும். சிரேஷ்ட காரியத்தின் அடையாளம் - தானும் திருப்தி, மற்றவர் களும் திருப்தி. அப்படிப்பட்ட ஆத்மாக்கள் தான் நிரந்தர யோகி ஆகிறார்கள்.

சுலோகன்:
தனக்குத் தானே பிரியமானவர், உலகத்தினருக்கு பிரியமானவர் மற்றும் பிரபுவிற்குப் பிரியமான ஆத்மா தான் வரதானி மூர்த்தி.