09.02.25    காலை முரளி            ஓம் சாந்தி  18.01.2004      பாப்தாதா,   மதுபன்


உலகிற்கு அதிகாரியின் நேரடிக் குழந்தை - இந்த நினைவிலிருந்து சர்வசக்திகளையும் கட்டளைப்படி நடத்துங்கள்

இன்று நாலாப்புறங்களிலும் அனைத்து குழந்தைகள் அன்பு என்ற அலைகளில் மூழ்கியிருக் கின்றனர். அனைவரின் உள்ளத்திலும் விசேˆமாக பிரம்மா பாபாவின் நினைவு இருக்கிறது. அமிர்த வேளையிலிருந்து சாகார பாலனை அடைந்த இரத்தினங்கள் மற்றும் அலௌகீக பாலனை அடைந்த இரத்தினங்கள் இருவரின் உள்ளப்பூர்வமான நினைவுகளின் மாலைகள் பாப்தாதாவிடம் வந்தடைந்து விட்டது. அனைவரின் உள்ளத்திலும் பாப்தாதாவின் நினைவு என்ற கண்ணாடி தென்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தந்தையின் உள்ளத்தில் அனைத்துக் குழந்தைகளின் அன்பு நினைறந்த நினைவு கலந்திருக்கிறது. அனைவரின் உள்ளத்திலும் ஒரே ஒரு அன்பு நிறைந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது - என்னுடைய பாபா மேலும் தந்தையின் உள்ளத்தில் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது - என்னுடைய இனிமையிலும் இனிமையான குழந்தை கள் தானாகவே ஒலிக்கப்படும் இந்த பாடல், எல்லையற்ற பாடல் எவ்வளவு பிரியமானதாக இருக்கிறது! பாப்தாதா நாலாப்புறங்களிலும் உள்ள குழந்தைகளின் அன்பு நிறைந்த நினைவிற்கு கைமாறாக உள்ளப்பூர்வமான அன்பு நிறைந்த ஆசிர்வாதங்கள் பலகோடி மடங்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இப்பொழுதும் கூட உள்நாடு மற்றும் அயல்நாட்டு குழந்தைகள் அன்புக் கடலில் மூழ்கியிருப்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்த நினைவு நாள் விசேˆமாக குழந்தைகளை சக்திசாலி யாக ஆக்கக் கூடிய நாளாகும். இன்றைய நாள் பிரம்மா பாபாவின் மூலம் கிரீடத்தை அணிந்து கொண்ட நாள். பிரம்மா பாபா குழந்தைகளை நிமித்தமாக, உலக சேவைக்கான பொறுப்பு கிரீடத்தை அணிவித்தார். தான் குப்தமாக ஆகி குழந்தைகளை சாகார ரூபத்தில் நிமித்தம் ஆக்கினார், நினைவு திலகமிட்டார். சுயம் அவ்யக்த சொரூபம் ஆனார், பிரகாச கிரீடம் அணிந்து கொண்டார். சுயம் செய்விப்பவராகி குழந்தைகளை செய்பவர்களாக ஆக்கினார். ஆகையால் இந்த நாளை நினைவு நாள் மற்றும் சக்திசாலியான நாள் என்று கூறப்படுகிறது. நினைவு மட்டும் கிடையாது, நினைவின் கூடவே அனைத்து சக்திகளும் குழந்தைகளுக்கு வரதானமாக கிடைத்திருக் கிறது. அனைத்து குழந்தைகளின் அனைத்து நினைவு சொரூபங்களை பார்த்துக் பாப்தாதா கொண்டிருக்கின்றார். மாஸ்டர் சர்வசக்திவான் சொரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றார். சக்திவான்களாக அல்ல, சர்வ சக்திவான். இந்த சர்வசக்திகள் தந்தையின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் வரதான ரூபத்தில் கிடைத்திருக்கிறது. தெய்வீக பிறப்பு எடுத்தவுடனேயே பாப்தாதா வரதானம் கொடுத்திருக்கின்றார் - சர்வசக்திவான் பவ! இது ஒவ்வொருவரின் பிறந்த நாள் வரதான மாகும். இந்த சக்திகளை வரதானத்தின் ரூபத்தில் காரியத்தில் பயன்படுத்துங்கள். சக்திகள் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் காரியத்தில் பயன்படுத்துவதில் வரிசைக் கிரமம் ஏற்பட்டு விடுகிறது. ஒவ்வொரு சக்தி என்ற வரதானத்தையும் சரியான நேரத்தில் கட்டளையிட முடியும். வரதாதாவின் வரதானங்களின் நினைவு சொரூபமாகி சரியான நேரத்தில் கட்டளையிட்டீர்கள் எனில் ஒவ்வொரு சக்தியும் ஆஜராகியே தீரும். பிராப்தியான அடைந்த வரதானம், எஜமான் என்ற நினைவு சொரூபத்திலிருந்து நீங்கள் கட்டளையிடுங்கள், பிறகு சக்திகள் சரியான நேரத்தில் காரியத்தில் பயன்படவில்லை - இது நடக்கவே நடக்காது. ஆனால் எஜமான், மாஸ்டர் சர்வசக்திவான் என்ற நினைவு இருக்கையில் செட் ஆக வேண்டும். இருக்கையில் இல்லாமல் கட்டளையிட்டால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். குழந்தைகள் கூறுகின்றோம் - பாபா, நாம் உங்களை நினைவு செய்யும் போது நீங்கள் ஆஜராகி விடுகிறீர்கள், எதிரில் வந்து விடுகிறீர்கள். பாபாவே ஆஜராகி விடும் போது சக்திகள் ஏன் ஆஜராகாது! விதிப்பூர்வமாக, எஜமான் என்ற அதிகாரத்துடன் கட்டளையிடுங்கள். இந்த சர்வசக்திகள் சங்கமயுகத்தின் பரமாத்மாவின் விசேˆ சொத்தாகும். சொத்து யாருக்காக இருக்கும்? குழந்தைகளுக்காகத் தான் சொத்து இருக்கும். எனவே அதிகாரத்துடன், நினைவு சொரூபம் என்ற இருக்கையிலிருந்து கட்டளையிடுங்கள். ஏன் கடின உழைப்பு செய்கிறீர்கள், கட்டளையிடுங்கள். உலகிற்கு அதிகாரியின் நேரடிக் குழந்தை - இந்த நினைவின் போதை சதா வெளிப்படையாக இருக்க வேண்டும்.

தன்னைத் தான் சோதியுங்கள் - உலகின் சர்வசக்திவானின் அதிகாரி ஆத்மா என்ற நினைவு தானாகவே இருக்கிறதா? இருக்கிறதா? அல்லது அவ்வபோது இருக்கிறதா? இன்றைய நாட்களில் அதிகாரம் அடைவதில் தான் சண்டையே நடக்கிறது. ஆனால் உங்கள் அனைவருக்கும் பரமாத்ம அதிகாரம், பரமாத்ம சக்திகள் பிறந்தவுடனேயே பிராப்தியாக கிடைக்கிறது. எனவே தனது அதிகார சக்தியில் இருங்கள். தானும் சக்திசாலியாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து ஆத்மாக் களுக்கும் சக்தி கொடுங்கள். அனைத்து ஆத்மாக்களும் இந்த நேரத்தில் அனைத்து ஆத்மாக்களும் சக்திகளை யாசிப்பவர்களாக இருக்கிறார்கள். உங்களது சிலைக்கு முன் சென்று யாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தந்தை கூறுகின்றார் -ஹே சக்திசாலி ஆத்மாக்களே! அனைத்து ஆத்மாக்களுக்கும் சக்தி கொடுங்கள். இதற்கு ஒவ்வொரு குழந்தையும் ஒரு விசயத்தில் அவசியம் கவனம் கொடுப்பது அவசியமாகும் - பாப்தாதா சிக்னல் கொடுத்திருக்கின்றார், பாப்தாதா ரிசல்ட் பார்க்கும் பொழுது மெஜாரிட்டி குழந்தைகளின் சங்கல்பம் மற்றும் நேரம் வீணாகிறது. மின்சாரத் தின் தொடர்பு சிறிது தளர்ந்தால் அல்லது கசிவு ஏற்பட்டால் விளக்கு சரியாக எரியாது. அதே போன்று இந்த வீணானவைகள் என்ற கசிவு சக்திசாலி ஸ்திதியை சதா கால நினைவாக உருவாக்க விடாது. ஆகையால் வீணானவைகளை சிறந்தவைகளாக மாற்றுங்கள். பட்ஜெட் கணக்கு உருவாக்குங்கள். முழு நாளும் எவ்வளவு வீண் ஆனது, சிறந்தவையாக எவ்வளவு ஆனது என்று சதவிகிதம் பாருங்கள். 40 சதவிகிதம் வீண் ஆனது என்று வைத்துக் கொள்ளுங்கள் அல்லது 20 சதவிகிதம் வீண் என்றால் அதை சேமியுங்கள். சிறிது தானே வீண் ஆகிறது, பாக்கி முழு நாளும் நன்றாக இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஆனால் வீணாக்கும் இந்த பழக்கம் நீண்ட காலமாக இருக்கின்ற காரணத்தினால் கடைசி நேரத்தில் ஏமாற்றி விடும். வரிசைக்கிரமமாக ஆக்கி விடும், நம்பர் ஒன் ஆக்க விடாது. ஆரம்பத்தில் பிரம்மா பாபா சுய பரிசோதனையின் காரணத்தினால் தினமும் இரவில் சபை கூட்டினார். எந்த சபை? குழந்தைகளுடையது அல்ல, தனது கர்மேந்திரி யங்களின் சபை கூட்டினார். முக்கிய மந்திரியாகிய மனமே, உனது இந்த நடத்தை நன்றாக இல்லை, கட்டளைப்படி நட என்று கட்டளையிடுங்கள். ஹே சம்ஸ்காரமே! கட்டளைப்படி நட, காரணத்தை கேட்டு நிவாரனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அலுவலக சபை கூட்டினார். இவ்வாறு தினமும் தனது சுய இராஜ்ய சபை கூட்டுங்கள். சில குழந்தைகள் பாப்தாதாவிடம் இனிமையிலும் இனிமையான உரையாடல் செய்கின்றனர். தனிப்பட்ட உரையாடல் செய்கின்றனர். கூறட்டுமா? எனக்கு எனது எதிர்கால சித்திரத்தை காண்பியுங்கள், நான் என்ன ஆவேன்? என்று கேட்கின்றனர். ஆதி இரத்தினங்களுக்கு நினைவிருக்கும், ஆரம்பத்தில் ஜெகதம்பாவிடம் அனைத்து குழந்தைகளும் தனது சித்திரம் கேட்டனர், மம்மா! நான் என்ன ஆவேன் என்ற எங்களது சித்திரம் கொடுங்கள். பாப்தாதாவிடமும் உரையாடல் செய்யும் போது தங்களது சித்திரம் கேட்கின்றனர். உங்கள் அனைவருக்கும் கூட மனம் இருக்கும் - எனது சித்திரம் கிடைத்து விட்டால் நன்றாக இருக்கும். ஆனால் பாப்தாதா கூறுகின்றார் - பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு விசித்திர மான கண்ணாடி கொடுத்திருக்கின்றார். என்ன கண்ணாடி? நிகழ்காலத்தில் நீங்கள் சுய இராஜ்ய அதிகாரிகள் அல்லவா! இருக்கிறீர்களா? சுய இராஜ்ய அதிகாரிகள் தானே? ஆம் எனில் கை உயர்த்துங்கள். சுய இராஜ்யம், அதிகாரிகளாக இருக்கிறீர்களா? நல்லது. சிலர் கை உயர்த்தாமல் இருக்கிறீர்கள். சிறிது இருக்கிறீர்களா என்ன? நல்லது. அனைவரும் சுய இராஜ்ய அதிகாரிகள், வாழ்த்துக்கள். ஆக சுய இராஜ்ய அதிகாரத்தின் சார்ட் உங்கள் எதிர்கால பதவியின் முகத்தை காண்பிக்கும் கண்ணாடி ஆகும். இந்த கண்ணாடி அனைவருக்கும் கிடைத்திருக்கிறது தானே? தெளிவாக இருக்கிறதா? எந்த கருப்பு கரைகள் படிய வில்லை தானே! நல்லது. கருப்பு கரைகள் இருக்காது, ஆனால் சில நேரங்களில் சூடான நீரின் மூடுபனி போன்று கண்ணாடியில் பதிந்து விடுகிறது. பனி கண்ணாடியில் படியும் போது கண்ணாடி தெளிவாக தென்படுவது கிடையாது. குளிக்கும் போது அனைவருக்கும் அனுபவம் இருக்கும். அதே போன்று ஏதாவது ஒரு கர்மேந்திரி யமும் கூட இன்று வரை உங்களது கட்டுப்பாட்டில் இல்லையெனில், கட்டுப்பாட்டில் இருக்கிறது, ஆனால் அவ்வப்பொழுது இருப்பது கிடையாது. கண்களாக இருக்கட்டும், வாயாக இருக்கட்டும், காதாக இருக்கட்டும், காலாக இருக்கட்டும், காலும் அவ்வபொழுது கெட்ட சகவாசத்தின் பக்கம் சென்று விடுகிறது. ஆக காலும் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஆகிவிடுகிறது அல்லவா! குழுவில் அமர்ந்து விடுவார்கள், இராமாயணம் மற்றும் பாகவதத்தின் தலைகீழான கதை கேட்பார்கள், சரியானதை கேட்கமாட்டார்கள். ஆக எந்த ஒரு கர்மேந்திரியமும் சங்கல்பம், நேரம் சகிதமாக கட்டுப்பாட்டில் இல்லையெனில், சுய இராஜ்யத்தில் கட்டுப்படுத்தும் சக்தியில்லையெனில் உலக இராஜ்யத்தை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்? இராஜாவாக எப்படி ஆவீர்கள்? அங்கு அனைத்தும் மிகச் சரியாக இருக்கும். கட்டுப்படுத்தும் சக்தி, ஆளும் சக்தி அனைத்தும் தானாகவே சங்கமயுகத்தின் முயற்சியின் பலனாக கிடைக்கும். எனவே சங்கமயுகம் அதாவது நிகழ்காலத்தில் கட்டுப்படுத்தும் சக்தி, ஆளும் சக்தி குறைவாக இருந்தால், முயற்சி குறைவு எனும் போது எப்படிப்பட்ட பிராப்தி கிடைக்கும்? கணக்கு பார்ப்பதில் புத்திசாலிகள் அல்லவா! ஆக இந்த கண்ணாடியில் தனது முகம் பாருங்கள், தனது தோற்றம் பாருங்கள். இராஜாவாக தென்படுகிறதா? இராயல் குடும்பத்தினராக தென்படுகிறதா? இராயல் பிரஜையாக தென்படுகிறதா? சாதாரண பிரஜையாக தென்படுகிறதா? எப்படிப்பட்ட தோற்றம் தென்படுகிறது? சித்திரம் கிடைத்து விட்டதா? இந்த சித்திரத்தின் மூலம் சோதனை செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் நீண்ட கால முயற்சியின் மூலம் நீண்ட கால இராஜ்ய பாக்கியம் பலனாக கிடைக்கும். கடைசி நேரத்தில் எல்லையற்ற வைராக்கியம் வந்து விடும் என்று நீங்கள் நினைத்தீர்கள் எனில் கடைசி நேரம் வரும் பொழுது நீண்ட காலமாக இருக்குமா? அல்லது குறுகிய காலமாக இருக்குமா? நீண்ட காலம் என்று கூற முடியாது அல்லவா! எனவே 21 பிறவிகள் முழுமையாகவே இராஜ்ய அதிகாரி ஆக வேண்டும், சிம்மாசனத்தில் அமரா விட்டாலும் சரி, ஆனால் இராஜ்ய அதிகாரியாக இருக்க வேண்டும். இந்த நீண்ட காலம் (முயற்சி) நீண்ட கால பிராப்திக்கு தொடர்பு இருக்கிறது. ஆகையால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். இப்பொழுது விநாசத்திற்கான தேதி முடிவாக வில்லை, தெரியவில்லை. 8 ஆண்டுகளில் ஏற்படுமா, 10 ஆண்டுகளில் ஏற்படுமா? தெரியவே யில்லை. வரக் கூடிய கால கட்டங்களில் ஆகிவிடுவேன், கிடையாது. உலகத்தின் இறுதி பற்றி யோசிப்பதற்கு முன் தனது பிறவியின் இறுதி காலம் பற்றி யோசியுங்கள். உங்களிடம் தேதி முடிவாகி இருக்கிறதா? இந்த தேதியின் எனக்கு மரணம் ஏற்படும் என்று யாருக்காவது தேதி முடிவாகியிருக்கிறதா? யாரிடமாவது இருக்கிறதா? இல்லை அல்லவா! உலக இறுதி ஏற்பட்டே தீரும், சரியான நேரத்தில் நடந்தே தீரும். ஆனால் முதலில் தனது இறுதி காலம் பற்றி யோசியுங்கள் மற்றும் ஜெகதம்பா சுலோகன் நினைவு செய்யுங்கள் - என்ன சுலோகன்? ஒவ்வொரு நிமிடமும் தனது இறுதி நிமிடம் என்று நினையுங்கள். திடீரென்று நடைபெறும். உலகம், உங்களது இறுதி நேரத்திற்கான தேதி கூறப்படமாட்டாது. அனைத்தும் திடீரென்று நடைபெறும் விளையாட் டாகும். ஆகையால் சபை கூட்டுங்கள், ஹே இராஜாக்களே! சுய இராஜ்ய அதிகாரி இராஜாக்களே! தனது சபை கூட்டுங்கள். கட்டளைப்படி நடத்துங்கள். ஏனெனில் சட்டம் ஒழுங்கு இருக்கும் என்று எதிர்காலத்திற்கான புகழ் பாடப் பட்டிருக்கிறது. இயற்கையாகவே இருக்கும். அன்பு மற்றும் சட்டம் இரண்டும் சமநிலையில் இருக்கும். இயற்கையாகவே இருக்கும். இது சட்டம் என்று இராஜா எந்த ஒரு சட்டத்தையும் உருவாக்கமாட்டார். இன்றைய நாட்களில் சட்டம் உருவாக்கிக் கொண்டிருக் கின்றனர். இன்றைய நாட்களில் காவல் துறையினரும் சட்டத்தை மீறி விடுகின்றனர். ஆனால் அங்கு இயற்கையாகவே அன்பு மற்றும் சட்டம் சமநிலையில் இருக்கும்.

ஆக இப்பொழுது சர்வசக்திவான் என்ற இருக்கையில் செட் ஆகியிருங்கள். பிறகு இந்த கர்மேந்திரியங்கள், சக்திகள், குணங்கள் அனைத்தும் உங்கள் சரி ஐயா, சரி ஐயா என்று கூறும், ஏமாற்றாது. இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்? அடுத்த நினைவு நாளன்று எந்த விழா கொண்டாடுவீர்கள்? ஒவ்வொரு மண்டலமும் இந்த விழா கொண்டாடுகிறீர்கள் அல்லவா! பாராட்டு விழாவும் அதிகம் கொண்டாடி விட்டீர்கள். இப்பொழுது சதா ஒவ்வொரு சங்கல்பம் மற்றும் நேரத்தின் வெற்றி விழா கொண்டாடுங்கள். இந்த விழா கொண்டாடுங்கள். வீணானவைகள் அழிந்து விட வேண்டும். ஏனெனில் நீங்கள் வெற்றி மூர்த்தி ஆவதன் மூலம் ஆத்மாக்களுக்கு திருப்தி என்ற வெற்றி பலனாக கிடைக்கும். நிராசையிலிருந்து நாலாபுறங்களிலும் சுப ஆசை களின் தீபம் ஏற்றப்பட்டு விடும். ஏதாவது வெற்றி கிடைத்தால் தீபம் ஏற்றுவார்கள் அல்லவா! இப்பொழுது உலகில் ஆசைகளின் தீபத்தை ஏற்றுங்கள். ஒவ்வொரு ஆத்மாவிற்குள் ஏதாவது ஒரு நிராசை இருக்கவே செய்கிறது, நிராசையின் காரணத்தினால் குழப்பம் இருக்கிறது, டென்சன் இருக்கிறது. ஹே அழிவற்ற தீபங்களே! இப்பொழுது ஆசை தீபங்களின் தீபாவளி கொண்டாடுங்கள். முதலில் தன் மீது பிறகு அனைவரின் மீது. கேட்டீர்களா!

மற்றபடி பாப்தாதா குழந்தைகளின் அன்பைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். அன்பு என்ற பாடத்தில் சதவிகிதம் நன்றாக இருக்கிறது. நீங்கள் இவ்வளவு முயற்சி செய்து இங்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்? உங்களை அழைத்து வந்தது யார்? புகைவண்டி அழைத்து வந்ததா, விமானம் அழைத்து வந்ததா அல்லது அன்பு அழைத்து வந்ததா? அன்பு என்ற விமானத்தின் மூலம் வந்தடைந்து விட்டீர்கள். ஆக அன்பு என்ற விசயத்தில் தேர்ச்சி அடைந்து விட்டீர்கள். இப்பொழுது சர்வசக்திகளில் மாஸ்டராக இருக்கிறேன் என்பதில் தேர்ச்சி பெற வேண்டும். பிறகு இந்த இயற்கை, இந்த மாயை, இந்த சன்ஸ்காரம் போன்ற அனைத்தும் உங்களது வேலைக்காரர்களாக ஆகிவிடும். ஒவ்வொரு நேரமும் எதிர்பார்க்கும் - எஜமானரே! என்ன கட்டளை கொடுக்கிறீர்கள்! பிரம்மா பாபாவும் எஜமானராகி உள்ளுக்குள்ளேயே இவ்வாறு சூட்சும முயற்சி செய்தார், அது உங்களுக்கும் தெரியும் - சம்பன்னம் ஆகிவிட்டார், பறவை பறந்து விட்டது. கூண்டு திறக்கப்பட்டு விட்டது. சாகார உலகின் கணக்கு வழக்கு, சாகார உடலின் கூண்டு திறக்கப்பட்டு விட்டு, பறவை பறந்து விட்டது. இப்பொழுது பிரம்மா பாபாவும் மிக பாசத்துடன், அன்புடன் குழந்தைகளே! சீக்கிரம் வாருங்கள், சீக்கிரம் வாருங்கள், இப்பொழுதே வாருங்கள் என்று வரவேற்றுக் கொண்டிருக்கின்றார். இறக்கை கிடைத்து விட்டது தானே! அனைவரும் ஒரு விநாடியில் தனது மனதில் இந்த டிரில் செய்யுங்கள், இப்பொழுதே செய்யுங்கள். அனைத்து எண்ணங்களையும் நிறுத்தி விடுங்கள், இந்த டிரில் செய்யுங்கள். ஓ பாபா, இனிமையான பாபா, அன்பான பாபா, நான் உங்களுக்குச் சமமாக அவ்யக்த ரூபதாரி ஆகியே விட்டேன் (பாப்தாதா டிரில் செய்வித்தார்)

நல்லது. நாலாப்புறங்களிலும் உள்ள அன்பான மற்றும் சக்திசாலியான குழந்தைகளுக்கு, நாலாப் புறங்களிலும் உள்ள சுய இராஜ்ய அதிகாரி மற்றும் உலக இராஜ்ய அதிகாரி குழந்தைகளுக்கு, நாலாப்புறங்களிலும் உள்ள மாஸ்டர் சர்வசக்திவான் என்ற இருக்கையில் செட்டாகி இருக்கும் தீவிர முயற்சியாளர் குழந்தைகளுக்கு, சதா எஜமானராகி இயற்கை, சன்ஸ்காரம், சக்திகள், குணங் களுக்கு கட்டளையிடக் கூடிய உலக இராஜ்ய அதிகாரி குழந்தைகளுக்கு, தந்தைக்குச் சன்ம் சம்பூர்னதா, சம்பன்னதாவை நெருக்கத்தில் கொண்டு வரக் கூடிய உள்நாடு, வெளி நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் மூலை முடுக்கில் இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு சக்திசாலியான நாளுக்கான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

இப்பொழுது பாப்தாதாவிற்கு யாருடைய நினைவு விசேˆமாக வந்து கொண்டிருக்கிறது? ஜனக் குழந்தை. நான் சபையில் அவசியம் ஆஜராவேன் என்று செய்தி அனுப்பியிருக்கிறது. இலண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் அனைத்து பாரதத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குழந்தை களுக்கு ஒவ்வொருவரின் பெயர் மற்றும் விசேˆதா சகிதமாக அன்பு நினைவுகள். உங்களுக்கு எதிரில் அன்பு நினைவுகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நல்லது.

இன்று மதுவனத்தில் உள்ளவர்களையும் நினைவு செய்தேன். இவர்கள் முன்னால் முன்னால் வந்து அமர்கிறீர்கள் அல்லவா! மதுவனத்தில் உள்ளவர்கள் கை உயர்த்துங்கள். அனைவரும் மது வனத்தில் புஜங்கள் ஆவீர்கள். மதுவனத்தின் உள்ளவர்களுக்கு விசேˆமாக தியாகத்தின் பாக்கியம் சூட்சுமத்தில் கிடைக்கிறது. ஏனெனில் இருப்பது பாண்டவபவனில், மதுவனத்தில், சாந்திவனத்தில், ஆனால் சந்திப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, மதுவனத்தில் உள்ளவர்கள் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனதில் சதா மதுபன்வாலா (பாபா) நினைவு இருக்கிறது. இப்பொழுது மதுவனத்தில் வீணானவைகளின் பெயர், அடையாளம் சமாப்தி ஆக வேண்டும். சேவையில், ஸ்திதியில் அனைத்திலும் மகான். சரி தானே! மதுவனத்தில் உள்ளவர்களை மறப்பதே கிடையாது. ஆனால் தியாகத்திற்கான வாய்ப்பு கொடுக்கின்றார். நல்லது.

வரதானம்:
நெற்றியின் மூலம் திருப்தி என்ற பிரகாசத்தின் ஜொலிப்பு காண்பிக்கக் கூடிய சாட்சாத்கார மூர்த்தி பவ.

யார் சதா திருப்தியாக இருக்கிறார்களோ, அவர்களது நெற்றியிலிருந்து திருப்தி என்ற ஒளி சதா ஜொலித்துக் கொண்டே இருக்கிறது. அவரை உதாசீனமான ஒரு ஆத்மா பார்த்து விட்டால் அவரும் குஷியடைந்து விடுவார், அவரது உதாசீனம் நீங்கி விடும். யாரிடம் திருப்திக்கான குஷி என்ற பொக்கிˆம் இருக்கிறதோ, அவர் பின்னால் தானாகவே அனைவரும் ஈர்க்கப்படுவர். அவர்களது குஷியான முகம் சைத்தன்ய பலகை ஆகிவிடும், அநேக ஆத்மாக்களை உருவாக்கும் அறிமுகம் கொடுக்கும். ஆக இவ்வாறு திருப்தியாக இருக்கும் மற்றும் அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடிய திருப்திமணி ஆகுங்கள், இதன் மூலம் பலருக்கு சாட்சாத்காரம் ஏற்படும்.

சுலோகன்:
காயம் ஏற்படுத்துபவர்களின் வேலை காயம் ஏற்படுத்துவது, உங்களது வேலை தன்னை பாதுகாத்துக் கொள்வது.

அவ்யக்த இஷாரே: ஏகாந்த பிரியராக ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஏகாக்ரதாவை தாரணை செய்யுங்கள்

திறப்பு விழாவில் தேங்காய் உடைப்பது போன்று, ரிப்பன் கட் செய்து திறப்பு விழா செய்வது போன்று ஒரே வழி, ஒரே பலம், ஒரே நம்பிக்கை மற்றும் ஒற்றுமை என்ற ரிப்பன் கட் செய்யுங்கள். பிறகு அனைவரின் திருப்தி, மகிழ்ச்சி என்ற தேங்காய் உடையுங்கள். இந்த நீரை பூமியில் தெளியுங்கள், பிறகு பாருங்கள் வெற்றி எவ்வளவு கிடைக்கிறது.