09.03.25    காலை முரளி            ஓம் சாந்தி  20.03.2004      பாப்தாதா,   மதுபன்


இந்த ஆண்டு விசேஷமாக ஜீவன்முக்தி ஆண்டாக கொண்டாடுங்கள், ஒற்றுமை மற்றும் ஒருநிலைப்படுத்தும் சக்தியின் மூலம் தந்தையை வெளிப்படுத்துங்கள்

இன்று அன்புக் கடல் நாலாப்புறங்களிலும் உள்ள அன்பான குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக் கின்றார். தந்தைக்கும் குழந்தைகளின் மீது உள்ளப்பூர்வமான அன்பு இருக்கிறது, குழந்தைகளுக்கும் திலாராம் தந்தையின் மீது உள்ளப்பூர்வமான அன்பு இருக்கிறது. இந்த பரமாத்ம அன்பு, உள்ளப் பூர்வமான அன்பு தந்தை மற்றும் குழந்தைகள் மட்டுமே அறிவர். பரமாத்ம அன்பிற்கு தகுதியான வர்கள் பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் தான். பக்த ஆத்மாக்கள் பரமாத்ம அன்பிற்கு ஏங்கிக் கொண்டிருக்கின்றனர், அழைத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியவான் பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் அந்த அன்பிற்கு பாத்திரமானவர்கள். குழந்தைகளுக்கு விசேஷ அன்பு ஏன் இருக்கிறது? என்பதை பாப்தாதா அறிவார். ஏனெனில் இந்த நேரத்தில் தான் அனைத்து பொக்கிஷங்களுக்கும் எஜமானராகிய தந்தையின் மூலம் அனைத்து பொக்கிஷங்களும் கிடைக்கிறது. பொக்கிஷங்கள் இந்த ஒரு பிறவிக்கு மட்டுமல்ல, அநேக பிறவிகளுக்கு இது அழிவற்ற பொக்கிஷம் உங்கள் கூடவே இருக்கும். பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் உலகத்தினர் போன்று வெறும் கையுடன் செல்ல மாட்டீர்கள், அனைத்து பொக்கிஷங்களும் கூடவே இருக்கும். எனவே இப்படிப் பட்ட அழிவற்ற பொக்கிஷங்களின் பிராப்திக்கான போதை இருக்கிறது தானே! மேலும் அனைத்து குழந்தைகளும் அழிவற்ற பொக்கிஷங்களை சேமித்திருக்கிறீர்கள் தானே! சேமிப்பின் போதை, சேமிப்பின் குஷி சதா இருக்கிறது. ஒவ்வொருவரின் முகத்திலும் பொக்கிஷங்கள் சேமிப்பின் ஜொலிப்பு தென்படுகிறது. தந்தையின் மூலம் என்ன பொக்கிஷங்கள் பிராப்தியாக கிடைத்திருக்கிறது? என்பதை அறிவீர்கள் தானே! தனது சேமிப்புக் கணக்கை என்றாவது சோதித்து பார்க்கிறீர்களா? அனைத்து குழந்தைகளுக்கும் ஒவ்வொரு பொக்கிஷத்தையும் தந்தை அளவற்று கொடுக்கின்றார். சிலருக்கு குறைவாக, சிலருக்கு அதிகம் கொடுப்பது கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் வற்றாத, கண்டமாகாத, அழிவற்ற பொக்கிஷங்களுக்கு எஜமானர்களாக இருக்கிறீர்கள். குழந்தை ஆவது என்றால் பொக்கிஷங்களுக்கு எஜமானர் ஆவதாகும். எனவே எவ்வளவு பொக்கிஷங்களை பாப்தாதா கொடுத்திருக்கின்றார் என்பதை வெளிப்படுத்துங்கள் (எமர்ஜ்).

அனைத்தையும் விட முதல் பொக்கிஷம் - ஞானச் செல்வம். ஆக அனைவருக்கும் ஞானச் செல்வம் கிடைத்திருக்கிறதா? கிடைத்திருக்கிறதா? அல்லது அடைய வேண்டுமா? நல்லது, சேமிப்பாகவும் இருக்கிறதா? அல்லது சிறிது சேமிப்பாகி இருக்கிறது, சிறிது செலவாகி விட்டதா? ஞானச் செல்வம் என்றால் புத்திசாலி ஆகி, திரிகாலதர்சி ஆகி காரியம் செய்வதாகும். ஞானம் நிறைந்தவர்களாக ஆக வேண்டும். நிறைந்த ஞானம் மற்றும் மூன்று காலங்களின் ஞானத்தை புரிந்து கொண்டு ஞானச் செல்வத்தை காரியத்தில் பயன்படுத்த வேண்டும். இந்த ஞானப் பொக்கிஷத்தின் மூலம் நடைமுறை வாழ்க்கையில், ஒவ்வொரு காரியத்தில் பயன்படுத்துவதன் மூலம் விதியின் மூலம் வெற்றி (சித்தி) கிடைக்கிறது - அநேக பந்தனங்களிலிருந்து முக்தி மற்றும் ஜீவன்முக்தி கிடைக்கிறது. அனுபவம் செய்கிறீர்களா? சத்தியயுகத்தில் ஜீவன்முக்தி கிடைக்கும் என்பது கிடையாது. இப்பொழுது இந்த சங்கமயுக வாழ்க்கையிலும் அநேக எல்லைக்குட்பட்ட பந்தனங்களிலிருந்து முக்தி கிடைத்து விடுகிறது. வாழ்க்கை பந்தனமற்றதாக ஆகிவிடுகிறத. அறிவீர்கள் அல்லவா - எத்தனை பந்தனங்களிலிருந்து விடுபட்டு விட்டீர்கள்! எத்தனை விதமான ஐயோ ஐயோ என்பதிலிருந்து முக்தியாகி விட்டீர்கள்! மேலும் சதா ஐயோ ஐயோ என்பது நீங்கி, ஆஹா ஆஹா என்ற பாடல் பாடிக் கொண்டே இருக்கிறீர்கள். ஒருவேளை ஏதாவது ஒரு விசயத்தில் வாயினால் அல்ல, சங்கல்பத்திலும், கனவிலும் கூட ஐயோ என்பது வந்து விட்டால் ஜீவன்முக்தி நிலையில்லை. ஆஹா, ஆஹா, ஆஹா. இவ்வாறு இருக்கிறீர்களா? தாய்மார்கள் ஐயோ ஐயோ என்று கூறுவதில்லை தானே? இல்லை தானே? அவ்வபொழுது வந்து விடுகிறதா? பாண்டவர்களுக்கு வருகிறதா? மனதில் கூறாவிட்டாலும், மனதில் சங்கல்பத்திலும் கூட ஏதாவது ஒரு விசயத்தில் ஐயோ என்று கூறினால் பறக்க முடியாது. ஐயோ என்றால் பந்தனம் மற்றும் பறப்பது, பறக்கும் கலை என்றால் ஜீவன் முக்தி, பந்தன் முக்தி. எனவே சோதனை செய்யுங்கள். ஏனெனில் பிராமண ஆத்மாக்கள் எதுவரை சுயம் பந்தனத்திலிருந்து விடுபடவில்லையோ, தங்கத்தினால் ஆன பந்தனம் அல்லது வைரத்தினால் ஆன பந்தனம் என்ற கயிறு கட்டப்பட்டிருந்தால் அனைத்து ஆத்மாக்களுக்காகவும் முக்தியின் கதவு திறக்க முடியாது. நீங்கள் பந்தன்முக்த் ஆவதன் மூலம் அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்திக்கான கதவு திறக்கப்பட்டு விடும். எனவே கதவு திறப்பதற்கு அல்லது அனைத்து ஆத்மாக்களையும் துக்கத்திலிருந்து, அசாந்தியிலிருந்து முக்தி கொடுக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

எனவே எனது பொறுப்பை நான் எந்த அளவிற்கு கடைபிடித்திருக்கிறேன்? என்று சோதியுங்கள். நீங்கள் அனைவரும் பாப்தாதாவுடன் உலக மாற்றம் செய்வதற்கான காரியத்தின் ஒப்பந்தம் எடுத்திருக்கிறீர்கள். ஒப்பந்தக் காரர்களாக இருக்கிறீர்கள், பொறுப்பாளர்களாக இருக்கிறீர்கள். தந்தை விரும்பினால் அனைத்தையும் செய்து விட முடியும். ஆனால் தந்தைக்கு குழந்தைகளின் மீது அன்பு இருக்கிறது, ஆனால் தனியாக செய்ய விரும்பவில்லை. அவதாரம் எடுத்தவுடனேயே குழந்தைகளாகிய உங்களையும் அவதரித்து விட்டார். சிவராத்திரி கொண்டாடினீர்கள் அல்லவா! யாருக்கு கொண்டாடினீர்கள்? பாப்தாதாவிற்கு மட்டுமா? உங்கள் அனைவருக்காகவும் கொண்டாடினீர்கள் அல்லவா! தந்தைக்கு ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் துணையாக இருக்கிறீர்கள். இந்த போதை இருக்கிறதா - ஆரம்பத்திலிருந்து கடைசி வரை துணையாக இருக்கின்றோம்? பகவானுக்கு துணையாக இருக்கிறீர்கள்.

ஆக இந்த ஆண்டின் கடைசி சந்திப்பில் அனைத்து குழந்தைகளிடத்திலும் இதைதேய விரும்புகின்றார் - என்ன விரும்புகிறேன் என்று கூறட்டுமா? செய்ய வேண்டியிருக்கும். வெறுமனே கேட்டால் மட்டும் போதாது, செய்ய வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் சரி தானே? ஆசிரியர்கள் கை உயர்த்துங்கள். ஆசிரியர்கள் விசிறி அசைத்துக் கொண்டிருக்கின்றனர், வெப்பமாக இருக்கிறது. நல்லது, அனைத்து ஆசிரியர்களும் செய்வீர்களா மற்றும் செய்விப் பீர்களா? செய்விக்கவும் வேண்டும், செய்யவும் வேண்டும்? நல்லது. காற்றும் வீசிக் கொண்டிருக்கிறது, கைகளையும் அசைத்துக் கொண்டிருக்கிறீர்கள். காட்சி நன்றாக இருக்கிறது. மிக்க நன்று. ஆக பாப்தாதா இந்த சீசனின் கடைசியில் ஒரு புது விதமான தீபாவளி கொண்டாட விரும்புகின்றார். புரிந்ததா! புது விதமான தீபாவளி கொண்டாட விரும்புகின்றார். நீங்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட தயாராக இருக்கிறீர்களா? யார் தயாராக இருக்கிறீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். அப்படியே ஆம் என்று கூறி விடக் கூடாது. பாப்தாதாவை மகிழ்விப்பதற்காக கை உயர்த்தக் கூடாது, மனதார உயர்த்த வேண்டும். நல்லது. பாப்தாதா தனது மன ஆசைகளை நிறைவேற்றக் கூடிய எரியும் தீபங்களை பார்க்க விரும்புகின்றார். பாப்தாதாவின் ஆசை தீபங்களின் தீபாவளி கொண்டாட விரும்புகின்றார். புரிந்ததா! எப்படிப்பட்ட தீபாவளி? தெளிவானதா?

பாப்தாதாவின் ஆசை தீபம் எது? இந்த ஆண்டு சீசன் முடிவடைந்து விட்டது. பாப்தாதா கூறியிருந்தார் - நீங்கள் அனைவரும் கூட சங்கல்பம் செய்திருந்தீர்கள், நினைவிருக்கிறதா? சிலர் அந்த சங்கல்பத்தை சங்கல்பம் வரை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறீர்கள், சிலர் சங்கல்பத்தை பாதி நிறைவேற்றியிருக்கிறீர்கள், சிலர் யோசிக்கின்றனர், ஆனால் அது யோசனை அளவில் இருக்கிறது. அந்த சங்கல்பம் என்ன? ஒன்றும் புதிய விசயமல்ல, பழைய விசயம் - சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றம். உலக விசயம் விட்டு விடுங்கள், ஆனால் பாப்தாதா சுய மாற்றத்தின் மூலம் பிராமணக் குடும்பத்தின் மாற்றம், இதை பார்க்க விரும்புகின்றார். இப்பொழுது இதை கேட்க விரும்பவில்லை - இப்படி இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கும், இவர் மாறினால் நான் மாறுவேன், இவர் செய்தால் நான் செய்வேன் .. இதில் பிரம்ம பாபா விசேஷமாக கூறிக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு குழந்தையும் இதில் எனக்கு சமம் அர்ஜுன் ஆகுங்கள். இதில் முதலில் நான். இந்த நான் நன்மைக்கான நான் ஆகும். மற்றபடி எல்லைக்குட்பட்ட நான், நான் கீழே விழ வைத்து விடும். இதற்கு கதையும் இருக்கிறது - முதலில் நான் அர்ஜுன், அர்ஜுன் என்றால் நம்பர் ஒன். வரிசைக்கிரமம் கிடையாது, முதல் நம்பர். ஆக நீங்கள் இரண்டாம் நம்பர் ஆக விரும்புகிறீர்களா அல்லது முதல் நம்பர் ஆக விரும்புகிறீர்களா? சில காரியங்களில் பாப்தாதா பார்த்தார் - கேளியான விசயமாகும், குடும்ப விசயத்தை கூறுகிறேன். குடும்பத்தினர் அமர்ந்திருக் கிறீர்கள் அல்லவா! அப்படிப்பட்ட சில காரியங்கள் செய்கிறீர்கள், பாப்தாதாவிடம் செய்தி வருகிறது, சில காரியம், சில நிகழ்ச்சிகள் விசேஷ ஆத்மாக்களின் பொருட்டு நடைபெறும். ஆக பாப்தாதாவிடம், தாதிகளிடம் செய்தி வருகிறது, ஏனெனில் சாகாரத்தில் தாதிகள் இருக்கின்றனர். பாப்தாதாவிடம் சங்கல்பம் வந்தடைகிறது. என்ன சங்கல்பம் வந்தடைகிறது? இதில் எனக்கும் பெயர் ஏற்பட வேண்டும், நான் குறைந்தவனா என்ன? எனக்கு ஏன் பெயர் கிடைக்கவில்லை? தந்தை கூறுகின்றார் - ஹே அர்ஜுன் என்பதில் உன்னுடைய பெயர் ஏன் இல்லை? இருக்க வேண்டும் தானே! அல்லது இருக்கக் கூடாதா? இருக்க வேண்டுமா? எதிரில் மகாரதிகள் அமர்ந்திருக்கின்றனர், இருக்க வேண்டும் அல்லவா! இருக்க வேண்டுமா? ஆக பிரம்மா பாபா எது செய்து காண்பித்தாரோ, யாரையும் பார்க்கவில்லை, இவர் செய்யவில்லை, அவர் செய்யவில்லை, பார்க்கவில்லை. முதலில் நான். இதில் நான். முன்பே கூறியிருந்தேன் அநேக விதமான ராயல் ரூபத்தின் நான், கூறியிருந்தேன் அல்லவா! அவை அனைத்தும் அழிந்து விடும். எனவே இந்த சீசனின் கடைசியில் பாப்தாதாவின் ஆசை பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்று கூறிக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளும், அறிந்திருக்கும் ஒவ்வொரு பிராமண ஆத்மாவும், ஒவ்வொரு குழந்தையும் சங்கல்பத்தில் இருக்கும் எல்லைக்குட்பட்ட பந்தனத்திலிருந்து முக்தியடைய வேண்டும். பிரம்மா பாபாவிற்கு சமம் பந்தனங்களிலிருந்து முக்தி, ஜீவன்முக்தி. பிராமண வாழ்க்கை முக்தி, சாதாரண வாழ்க்கை யிலிருந்து முக்தி அல்ல, பிராமணன் சிரேஷ்ட ஜீவன் முக்தி - இந்த ஆண்டு விசேஷமாக இதை கொண்டாடுங்கள். ஒவ்வொரு ஆத்மாவும் எந்தளவிற்கு தனது சூட்சும பந்தனங்களை அறிவீர்களோ, அந்த அளவிற்கு மற்றவர்கள் அறிந்திருக்க முடியாது. பாப்தாதா அறிவார். ஏனெனில் பாப்தாதாவிடம் டி.வி இருக்கிறது. மனதிற்கான டி.வி. தேகத்திற்கான டி.வி அல்ல. அடுத்த சீசன் இருக்கும் தானே! அல்லது விடுப்பு கொடுத்து விடலாமா? ஒரு ஆண்டு விடுப்பு கொடுக்கலாமா? ஒரு ஆண்டு விடுப்பு கொடுக்க வேண்டுமா? கூடாதா? பாண்டவர்கள் ஒரு ஆண்டு விடுப்பு கொடுக்கலாமா? (தாதி கூறிக் கொண்டிருக்கிறார், மாதத்தில் 15 நாட்கள் விடுப்பு) நல்லது. மிகவும் நல்லது. விடுப்பு கொடுக்கக் கூடாது என்று யார் கூறுகிறீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். கொடுக்கக் கூடாதா? நல்லது. மேலே கேலரியில் அமர்ந்திருப்பவர்கள் கை அசைக்கவில்லை. (முழு சபையும் கை அசைக்கின்றனர்). மிகவும் நல்லது. தந்தை எப்பொழுதும் குழந்தைகளுக்கு சரி சரி என்று கூறுகிறார், சரி தானே! இப்பொழுது குழந்தைகள் தந்தைக்கு எப்பொழுது சரி என்று கூறுவீர்கள்? தந்தை சரி என்று கூறிவிட்டார். தந்தை இப்பொழுது ஒரு நிபந்தனை கொடுக்கின்றார், நிபந்தனை ஏற்றுக் கொள்வீர்களா? அனைவரும் சரி என்று கூறுங்களேன். பக்கா? சிறிது கூட கவனக் குறைவாக இருக்க மாட்டீர்களா? இப்பொழுது அனைவரின் முகத்தையும் டி.வி யில் எடுங்கள். நன்றாக இருக்கிறது. தந்தைக்கும் குஷி ஏற்படுகிறது அனைத்து குழந்தைகளும் சரி, சரி என்று கூறக் கூடியவர்களாக இருக்கிறீர்கள்.

ஆக பாப்தாதா இதைத் தான் விரும்புகின்றார் - யாரும் காரணம் கூறக் கூடாது. இந்த காரணம், இந்த காரணம், ஆகையால் இந்த பந்தனம் இருக்கிறது. பிரச்சனை அல்ல, சமாதான சொரூபம் ஆக வேண்டும். மேலும் கூட இருப்பவர்களையும் ஆக்க வேண்டும். ஏனெனில் நேரத்தில் நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊழல் எவ்வளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது! ஊழல், அட்டூழியம் மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிரேஷ்ட நிலைக்கான கொடி முதலில் ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் மனதில் பறக்க வேண்டும், அப்பொழுது தான் உலகில் பறக்கும். எத்தனையோ சிவராத்திரி கொண்டாடி விட்டீர்கள்! ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் இதே சங்கல்பம் செய்கிறீர்கள் - உலகில் தந்தையின் கொடி பறக்க வைக்க வேண்டும். உலகில் இந்த பிரத்ட்சதா கொடி பறக்க வைப்பதற்கு முன் ஒவ்வொரு பிராமணனும் தனது மனதில், இதய சிம்மாசனத்தில் சதா தந்தையின் கொடி பறக்க வைக்க வேண்டும். இந்த கொடி பறக்க வைப்பதற்கு இரண்டு வார்த்தைகள் ஒவ்வொரு காரியத்திலும் கொண்டு வர வேண்டியிருக்கும். காரியத்தில் கொண்டு வரவேண்டும், சங்கல்பத்தில் அல்ல, புத்தியில் அல்ல. உள்ளத்தில், காரியத்தில், சம்பந்தத்தில், தொடர்பில் கொண்டு வர வேண்டும். கடினமான வார்த்தை அல்ல, பொதுவான வார்த்தை. அது ஒன்று - அனைத்து சம்பந்தம், தொடர்பில் தங்களுக்குள் ஒற்றுமை. அநேக சம்ஸ்காரம் இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை. இரண்டாவது - எந்த சிரேஷ்ட சங்கல்பம் செய்தாலும் பாப்தாதாவிற்கு மிகவும் பிடித்திருக்கிறது, நீங்கள் சங்கல்பம் செய்யும் பொழுது பாப்தாதா அந்த சங்கல்பத்தை பார்த்து, கேட்டு மிகவும் குஷியடைகின்றார். ஆஹா ஆஹா ஆஹா குழந்தையே ஆஹா! சிரேஷ்ட சங்கல்பம் ஆஹா! ஆனால், ஆனால் என்று வந்து விடுகிறது. வரக் கூடாது, ஆனால் வந்து விடுகிறது. சங்கல்பத்தில் அதிகபட்சம் அதாவது 90 சதவிகிதம், சில குழந்தைகளிடம் மிக மிக நன்றாக இருக்கிறது. பாப்தாதா நினைக்கின்றார் இன்று இந்த குழந்தையின் சங்கல்பம் மிகவும் நன்றாக இருக்கிறது, முன்னேற்றம் ஏற்பட்டு விடும். ஆனால் வார்த்தையில் சிறிது குறைந்து விடுகிறது, செயலில் இன்னும் முக்கால்வாசி குறைந்து விடுகிறது, கலப்படம் ஆகிவிடுகிறது. என்ன காரணம்? சங்கல்பத்தில் ஏகாக்ரதா (ஒருநிலைப் படுத்துதல்), திடதன்மை இல்லை. ஒருவேளை சங்கல்பத்தில் ஏகாக்ரதா இருந்தால் ஏகாக்ரதா வெற்றியின் சாதனமாகும். அதில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. திடதன்மை வெற்றிக்கான சாதனமாகும். என்ன காரணம்? முடிவில் (ரிசல்ட்) ஒரே ஒரு விசயத்தை பாப்தாதா பார்த்தார் - மற்றவர்களை அதிகம் பார்க்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள் அல்லவா! (பாப்தாதா ஒரு விரலை நீட்டி காண்பித்தார்). இவ்வாறு செய்கிறீர்கள் எனில் ஒரு விரல் வேறு ஒரு பக்கம், நான்கு தன் பக்கம் இருக்கிறது. நான்கை பார்ப்பது கிடையாது, ஒன்றை மட்டும் அதிகம் பார்க்கிறீர்கள். ஆகையால் திடதன்மை மற்றும் ஏகாக்ரதா, ஒற்றுமை அசைந்து விடுகிறது. இவர் செய்தால் நான் செய்வேன், என்பது கூடாது. இதில் அர்ஜுன் ஆகிவிடுங்கள்.ஆனால் அதில் இரண்டாம் நம்பர் ஆகிவிடுகிறீர்கள். இல்லையெனில் தங்களது சுலோகனை மாற்றிக் கொள்ளுங்கள். சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றம் என்பதற்குப் பதிலாக உலக மாற்றத்தின் மூலம் சுய மாற்றம். பிறரது மாற்றத்தின் மூலம் சுய மாற்றம். மாற்றலாமா? மாற்றலாமா? வேண்டாமா? மீண்டும் பாப்தாதா ஒரு நிபந்தனை வைக்கின்றார், ஏற்றுக் கொள்வீர்களா? கூறட்டுமா? பாப்தாதா 6 மாதத்திற்கான ரிசல்ட் பார்ப்பார். பிறகு வருவேன், இல்ûயெனில் வரமாட்டேன். தந்தை சரி (ஹாஜீ) என்று கூறிவிட்டார் எனில் குழந்தைகளும் ஹாஜீ என்று கூற வேண்டும் அல்லவா! என்ன நடந்தாலும் சரி, பாப்தாதா கூறுகின்றார் - சுய மாற்றத்திற்காக எல்லைக்குட்பட்ட இந்த நான் என்பதிலிருந்து இறக்க வேண்டியிருக்கும், சரீரத்தில் அல்ல. சரீரத்திலிருந்து இறந்து விடக் கூடாது, நான் என்பதிலிருந்து இறந்து விட வேண்டும். நான் தான் சரி, நான் இப்படி இருக்கிறேன், நான் குறைந்தவனா என்ன, எனக்கும் எல்லாம் தெரியும், இந்த நான் என்பதிலிருந்து இறக்க வேண்டும். எனவே இறக்க வேண்டியிருக்கும், இந்த இறப்பு மிகவும் இனிமையான இறப்பாகும். இது இறப்பு கிடையாது, 21 இராஜ்ய பாக்கியத்தில் உயிர் வாழ்வதாகும். ஏற்றுக் கொள்வீர்களா? ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இரட்டை அயல்நாட்டினர்? இரட்டை அயல்நாட்டினர் என்ன சங்கல்பம் செய்கிறீர்களோ, அதை செய்வதில் தைரியம் வைக்கின்றனர், இது விசேஷதா ஆகும். பாரதவாசிகள் மும்மடங்கு தைரியசாலிகள், அவர்கள் டபுள் (இரட்டை) என்றால் இவர்கள் மும்மடங்கு ஆகும். ஆக பாப்தாதா இதைத் தான் பார்க்க விரும்புகின்றார். புரிந்ததா! இது தான் பாபதாதாவின் சிரேஷ்ட ஆசை தீபமாகும், ஒவ்வொரு குழந்தையின் உள்ளுக்குள் ஏற்றப்பட்டு இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறார். இப்பொழுது இந்த முறை இந்த தீபாவளி கொண்டாடுங்கள். 6 மாதங்களுக்குப் பிறகு கொண்டாடினாலும் பரவாயில்லை. பிறகு பாப்தாதா தீபாவளிக்கான விழா பார்ப்பார், தனது நிகழ்ச்சியையும் பார்ப்பார். செய்தே ஆக வேண்டும். நீங்கள் செய்யவில்லையெனில் பின்னால் வருபவர்கள் செய்வார்களா என்ன? மாலை உங்களுடையது அல்லவா! 16108 ல் நீங்கள் பழையவர்கள் தான் வருவீர்கள் அல்லவா! புதியவர்கள் பின்னால் வருவார்கள். ஆம் சிலர் கடைசியில் வந்தாலும் வேகமாக வருவார்கள். சிலர் உதாரணமாக இருப்பார்கள். கடைசியில் வந்தாலும் வேகமாக செய்வார்கள், முதலாவதாக வருவார்கள். ஆனால் மிகச் சிலர் மட்டுமே. மற்றபடி நீங்கள் தான் இருப்பீர்கள். நீங்கள் தான் ஒவ்வொரு கல்பத்திலும் ஆகியிருக்கிறீர்கள், நீங்கள் தான் ஆக வேண்டும். எங்கு அமர்ந்திருந்தாலும், அயல்நாட்டில் அமர்ந்திருந்தாலும், உள்நாட்டில் அமர்ந்திருந்தாலும் நீங்கள் நீண்ட காலம் உறுதியான நிச்சயபுத்தி உடையவர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் தான் அதிகாரிகள். பாப்தாதாவிற்கு அன்பு இருக்கிறது அல்லவா! யார் நீண்ட காலம் நல்ல முயற்சியாளர்களாக இருக்கிறார்களோ, சம்பூர்ன முயற்சி யாளர்கள் அல்ல, ஆனால் நல்ல முயற்சியாளர்களாக இருப்பவர்களை பாப்தாதா விட்டு சென்று விடமாட்டார், கூடவே அழைத்துச் செல்வார். ஆகையால் உறுதியான நிச்சயம் செய்யுங்கள் - நான் தான் இருந்தேன், நான் தான் இருக்கிறேன், நான் தான் கூடவே இருப்பேன். சரி தானே! பக்கா தானே? சுப சிந்தனை, சுப சிந்தன், சுபபாவனை, மாறும் பாவனை, உதவி செய்யும் பாவனை, கருணை உள்ளத்திற்கான பாவனை வெளிப்படுத்துங்கள். இப்பொழுது உள்ளடங்கி இருக்கிறது, வெளிப் படுத்துங்கள்.அதிக போதனைகள் கொடுக்காதீர்கள், மன்னியுங்கள். ஒவருவருக்கொருவர் போதனை கொடுப்பதில் புத்திசாலிகளாக இருக்கிறீர்கள். ஆனால் மன்னிப்பின் கூடவே போதனை கொடுங்கள். முரளி கூறுவதில், கோர்ஸ் செய்விப்பதில் அல்லது நீங்கள் என்ன நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் போதனை கொடுங்கள். ஆனால் தங்களுக்குள் காரிய விவகாரங்கள் செய்யும் போது மன்னிப்பு மற்றும் போதனை செய்யுங்கள். வெறும் போதனை செய்யாதீர்கள், கருணை உள்ளமுடையவராகி போதனை செய்தால் உங்களது கருணை அப்படி வேலை செய்யும் பிறரது பலவீனமும் மன்னிக்கப்பட்டு விடும். புரிந்ததா, நல்லது.

இப்பொழுது ஒரு விநாடி மனதிற்கு எஜமானராகி மனதை எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ அவ்வளவு நேரம் ஒருநிலைப்படுகிறதா? செய்ய முடியுமா? இப்பொழுது இந்த ஆன்மிக பயிற்சி செய்யுங்கள். முற்றிலும் மனம் ஒருநிலையாகி இருக்க வேண்டும். சங்கல்பத்திலும் குழப்பம் கூடாது. நிலையாக இருக்க வேண்டும். நல்லது.

நாலாப்புறங்களிலும் உள்ள அனைத்து அழிவற்ற அளவற்ற பொக்கிஷங்களுக்கு எஜமானர்கள், சதா சங்கமயுக சிரேஷ்ட பந்தன்முக்த், ஜீவன்முக்த் ஸ்திதியில் நிலைத்திருக்கக் கூடிய, சதா பாப்தாதா வின் ஆசையை பூர்த்தி செய்யக் கூடிய, சதா ஒற்றுமை மற்றும் ஒருநிலைப்படுத்தும் சக்தி நிறைந்த மாஸ்டர் சர்வசக்திவான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

நாலாப்புறங்களிலும் தூரத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு, யார் அன்பு நினைவுகள் அனுப்பி உள்ளனரோ, அவர்களுக்கும் பாப்தாதா மிக மிக உள்ளப்பூர்வமான அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். கூடவே அதிக குழந்தைகள் மதுவனத்தின் புத்துணர்விற்கான நல்ல நல்ல கடிதம் அனுப்பியிருக்கின்றனர், அந்த குழந்தைகளுக்கும் விசேஷ அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:
கடந்தவைகளை சிந்தனையில் கொண்டு வராமல் முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.

இன்று வரை என்னவெல்லாம் நடந்ததோ, அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கடந்தவைகளை சிந்திக்காமல் இருப்பது தான் தீவிர முயற்சியாகும். ஒருவேளை ஒருவர் கடந்ததை சிந்திக்கிறார் எனில் நேரம், சக்தி, சங்கல்பம் அனைத்தும் வீண் ஆகிவிடுகிறது. இப்பொழுது வீண் ஆக்கக் கூடிய நேரம் அல்ல. ஏனெனில் சங்கமயுகத்தின் இரண்டு நிமிடம் அதாவது இரண்டு விநாடி வீண் ஆக்கினால் அநேக ஆண்டு வீண் ஆக்கி விட்டீர்கள். ஆகையால் நேரத்தின் மகத்துவத்தை அறிந்து இப்பொழுது கடந்தவைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். முற்றுப்புள்ளி வைப்பது என்றால் அனைத்து பொக்கிஷங்களிலும் நிறைந்தவர் (புல்) ஆவதாகும்.

சுலோகன்:
ஒவ்வொரு சங்கல்பமும் சிரேஷ்டமாகும் போது தனக்கும், உலகிற்கும் நன்மை ஏற்படும்.

அவ்யக்த இஷாரே: சத்தியதா மற்றும் பண்பாடு என்ற நாகரீகத்தை தாரணை செய்யுங்கள்.

ஞானத்தின் எந்த ஒரு விசயத்தையும் அதிகாரத்தின் கூடவே, சத்தியம் மற்றும் பண்பாட்டுடன் பேசுங்கள், சங்கோசத்துடன் அல்ல. பிரத்ட்சப்படுத்துவதற்கு முதலில் தன்னை பிரத்ட்சப்படுத் துங்கள், பயமற்றவர்களாக ஆக்குங்கள். சொற்பொழிவின் போது வார்த்தைகள் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு சக்திசாலியாக இருக்க வேண்டும் அதில் தந்தையின் அறிமுகம் மற்றும் அன்பு கலந்திருக்க வேண்டும். அந்த அன்பு காந்தம் போன்று ஆத்மாக்களை பரமாத்மா வின் பக்கம் ஈர்க்க வேண்டும்.