09-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உலகத்தின் இராஜ்யம்
உடல் பலம் மூலம் பெறப்படுவதில்லை. அதற்கு யோக பலம் வேண்டும்.
இதுவும் ஒரு விதிமுறையாகும்.
கேள்வி:
சிவபாபா தன் மீது தானே எந்த
மாதிரி வியப்படைகிறார்?
பதில்:
பாபா சொல்கிறார், பாருங்கள்
எத்தகைய அதிசயம்! - நான் உங்களுக்குப் படிப்பு சொல்லித்
தருகிறேன். இதை நான் யாரிடமும் ஒருபோதும் படித்ததில்லை. எனக்கு
எந்த ஒரு தந்தையும் கிடையாது. எனக்கு எந்த ஓர் ஆசிரியரும்
கிடையாது. குருவும் கிடையாது. நான் சிருஷ்டிச் சக்கரத்தில்
மறுபிறவி எடுப்ப தில்லை. பிறகும் கூட உங்களுக்கு அனைத்துப்
பிறவிகளின் கதையைச் சொல்கிறேன். நான் சுயம் 84 பிறவிகளின்
சக்கரத்தில் வருவதில்லை. ஆனால் சக்கரத்தின் ஞானத்தை மிகச்
சரியாகத் தருகிறேன்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களை சுயதரிசனச் சக்கரதாரி
ஆக்குகிறார். அதாவது நீங்கள் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை
அறிந்து கொள்கிறீர்கள். இதற்கு முன் அறிந்து கொள்ளவில்லை.
இப்போது பாபாவிடமிருந்து நீங்கள் தெரிந்து கொண்டு விட்டீர்கள்.
84 பிறவிகளின் சக்கரத்தில் நீங்கள் நிச்சயமாக வருகிறீர்கள்.
குழந்தை களாகிய உங்களுக்கு 84 பிறவிகளின் சக்கரத்தினுடைய
ஞானத்தை நான் தருகிறேன். நான் சுயதரிசனச் சக்கரதாரி. ஆனால்
நடைமுறையில் 84 பிறவிகளின் சக்கரத்தில் நான் வருவதில்லை. ஆக,
இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும், சிவதந்தையிடம் ஞானம்
முழுவதும் உள்ளது. நீங்கள் அறிவீர்கள், நாம் பிராமணர்கள்
இப்போது சுயதரிசனச் சக்கரதாரி ஆகிறோம். பாபா ஆவதில்லை. பிறகு
அவருக்கு அனுபவம் எங்கிருந்து வந்தது? நமக்கோ அனுபவம்
கிடைக்கின்றது. பாபா எங்கிருந்து அனுபவம் கொண்டு வருகிறார்,
உங்களுக்குச் சொல்வதற்கு? நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும்
இல்லையா? பாபா சொல்கிறார், என்னை ஞானக்கடல் எனச் சொல்கின்றனர்.
ஆனால் நானோ 84 பிறவிச் சக்கரத்தில் வருவதில்லை. பிறகு என்னிடம்
இந்த ஞானம் எங்கிருந்து வந்தது? ஆசிரியர் கற்பிக்கிறார் என்றால்
நிச்சயமாக தான் படித்திருக்கிறார் இல்லையா? இந்த சிவபாபா
எப்படிப் படித்தார்? இவருக்கு எப்படி 84 பிறவிச் சக்கரத்தைப்
பற்றித் தெரிய வந்தது - அவரே 84 பிறவிகளில் வருவதில்லை எனும்
போது? பாபா விதை வடிவமாக இருக்கும் காரணத்தால் அறிந்துள்ளார்.
தாமே 84 பிறவிச் சக்கரத்தில் வருவதில்லை. ஆனால் உங்களுக்கு
அனைத்தையும் புரிய வைக்கிறார். இதுவும் கூட எவ்வளவு அற்புதம்!
பாபா ஏதாவது சாஸ்திரம் படித்துள்ளார் என்பதெல்லாம் கிடையாது.
டிராமாவின் அனுசாரம் அவருக் குள் இந்த ஞானம் அடங்கியுள்ளது. அதை
உங்களுக்குச் சொல்கிறார். ஆக, அற்புதமான ஆசிரியர் ஆகிறார்
இல்லையா? வியப்படைய வேண்டும் அல்லவா! அதனால் இவருக்குப்
பெரிய-பெரிய பெயர்கள் கொடுத்துள்ளனர். ஈஸ்வர், பிரபு,
அந்தர்யாமி முதலானவை. நீங்கள் வியப்படைகிறீர்கள், ஈஸ்வரனுக்குள்
எப்படி ஞானம் முழுவதும் நிறைந்துள்ளது என்று. அவருக்குள்
எங்கிருந்து வந்தது, அதை உங்களுக்குப் புரிய வைக்கிறார்?
அவருக்கோ எந்த ஒரு தந்தையும் இல்லை, அவர் மூலம் பிறவி
எடுத்திருப்பார், அல்லது புரிந்து கொண்டிருப்பார் எனச்
சொல்வதற்கு. நீங்கள் அனைவரும் சகோதர-சகோதரர்கள். அந்த ஒருவர்
எப்படி உங்களுடைய தந்தை ஆகிறார், விதை வடிவமாக உள்ளார். எவ்வளவு
ஞானத்தை அமர்ந்து குழந்தைகளுக்குச் சொல்கிறார்! அவர் சொல்கிறார்,
84 பிறவிகளை நான் எடுப்பதில்லை, நீங்கள் எடுக்கிறீர்கள். ஆக,
நிச்சயமாகக் கேள்வி எழும் தானே - பாபாவை, உங்களுக்கு எப்படித்
தெரிந்தது? பாபா சொல்கிறார் - குழந்தைகளே, அநாதி டிராமாவின்
அனுசாரம் எனக்குள் முதலிலேயே இந்த ஞானம் உள்ளது. அதை
உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். அதனால் தான் நான்
உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் எனச் சொல்லப்படுகிறேன். தானே
சக்கரத்தில் வருவ தில்லை, ஆனால் அவருக்குள் முழு சிருஷ்டியின்
முதல்-இடை-கடை பற்றிய ஞானம் உள்ளது. ஆக, குழந்தைகளாகிய
உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! அவருக்கு 84 பிறவிச்
சக்கரத் தின் ஞானம் எங்கிருந்து கிடைத்தது? உங்களுக்கோ
தந்தையிடமிருந்து கிடைத்தது. தந்தை யிடம் முதலிலேயே ஞானம்
உள்ளது. அவர் நாலேட்ஜ்ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) என்றே
சொல்லப்படுகிறார். யாரிடமும் படித்ததும் இல்லை. இருந்த போதிலும்
அவருக்கே முதலிலேயே இயல்பாகவே தெரியும். அதனால் ஞானம்
நிறைந்தவர் எனச் சொல்லப்படுகிறார். இது அதிசயம் இல்லையா? அதனால்
இது உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பு எனப் பாடப் படுகின்றது.
குழந்தைகளுக்கு வியப்பாக உள்ளது பாபாவைப் பற்றி அறியும் போது
அவர் ஏன் நாலேட்ஜ்ஃபுல் என்று சொல்லப்படுகிறார்? - ஒன்றோ, இது
புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இரண்டாவது என்ன விஷயம்? இந்தச்
சித்திரத்தை நீங்கள் காட்டுகிறீர்கள் என்று சொன்னால் யாராவது
கேட்பார்கள், பிரம்மாவிற்குள் அவரது ஆத்மா இருக்கும். இவரோ
நாராயணன் ஆகிறார். அவருக்குள்ளும் அவரது ஆத்மா இருக்கும்.
இரண்டு ஆத்மாக்கள் இல்லையா? ஒன்று பிரம்மா, இன்னொன்று
நாராயணனுடையது. ஆனால் சிந்தனை செய்வீர்களானால் இவர்கள் ஒன்றும்
இரண்டு ஆத்மாக்கள் கிடையாது. ஆத்மா ஒன்று தான். இது தேவதாவின்
ஓர் எடுத்துக் காட்டாகக் காட்டப்படுகின்றது. இந்த பிரம்மாவே
தான் விஷ்ணுவாக, அதாவது நாராயணனாக ஆகிறார். இவை ஆழமான விஷயங்கள்
எனச் சொல்லப் படும். பாபா மிகவும் ஆழமான ஞானத்தைச் சொல்கிறார்.
அதை அவரைத் தவிர வேறு யாராலும் கற்றுத் தர முடியாது. ஆக,
பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கு ஒன்றும் இரண்டு ஆத்மாக்கள்
கிடையாது. அதேபோல் சரஸ்வதி மற்றும் லட்சுமி - இந்த இருவருக்கும்
இரண்டு ஆத்மாக்களா அல்லது ஒன்றா? ஆத்மா ஒன்று தான், சரீரங்கள்
இரண்டு. இந்த சரஸ்வதி தான் பிறகு இலட்சுமி ஆகிறார். அதனால் ஓர்
ஆத்மாவாகவே எண்ணப் படுகிறது. 84 பிறவிகளை ஓர் ஆத்மா தான் எடுக்
கின்றது. இது மிகவும் புரிந்து கொள்வதற்கான விஷயமாகும்.
பிராமணர் தான் பிறகு தேவதா வாகவும், தேவதாக்கள் தான் பிறகு
சத்திரியராகவும் ஆகின்றனர். ஹம் ஸோ என்பதன் அர்த்தம் எவ்வளவு
நன்றாக உள்ளது! இவை ஆழத்திலும் ஆழமான விஷயங்கள் எனச் சொல்லப்
படும். இதிலும் கூட முதல்-முதலிலோ இந்தப் புரிதல் வேண்டும்,
அதாவது நாம் ஒரு தந்தையின் குழந்தைகள். ஆத்மாக்கள் அனைவரும்
உண்மையில் பரந்தாமத்தில் வசிப்பவர் கள். இங்கே பாகத்தை
நடிப்பதற்காக வந்துள்ளனர். இது ஒரு விளையாட்டாகும். பாபா
உங்களுக்கு இந்த விளையாட்டின் சாரத்தை அமர்ந்து சொல்கிறார்.
பாபாவோ முதலிலேயே இதை அறிந்திருக்கவே செய்கிறார். அவருக்கு
யாரும் கற்றுத் தரவில்லை. இந்த 84 பிறவிச் சக்கரத்தை அவர் தான்
அறிவார். அதை இந்த சமயத்தில் உங்களுக்குச் சொல்கிறார். பிறகு
நீங்கள் மறந்து போகிறீர்கள். பிறகு அதன் சாஸ்திரம் எப்படி
உருவாக முடியும்? பாபாவோ எந்த ஒரு சாஸ்திரத்தையும் படித்ததில்லை.
பிறகு எப்படி வந்து புதுப்புது விஷயங்களைச் சொல் கிறார்?
அரைக்கல்பம் பக்தி மார்க்கம். இந்த விஷயமும் சாஸ்திரங்களில்
இல்லை. இந்த சாஸ்திரங்களும் கூட டிராமா அனுசாரம் பக்தி
மார்க்கத்தில் உருவாகியுள்ளன. உங்கள் புத்தியில்
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இந்த டிராமாவினுடைய எவ்வளவு பெரிய
ஞானம் உள்ளது! அவர் அவசியம் மனித உடலின் ஆதாரத்தை எடுத்தாக
வேண்டும். சிவபாபா இந்த பிரம்மாவின் உடலில் அமர்ந்து இந்த
சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானத்தைச் சொல்கிறார். மனிதர்களோ
பொய்யாக சிருஷ்டியின் ஆயுளையே எவ்வளவு நீண்டதாகக் கூறி விட்டனர்.
புது உலகம் தான் பிறகு பழைய உலகமாக ஆகின்றது. புது உலகம்
சொர்க்கம் எனச் சொல்லப் படுகின்றது. பழைய உலகம் நரகம் எனச்
சொல்லப்படுகின்றது. உலகமோ ஒன்று தான். புது உலகில் தேவி-
தேவதைகள் உள்ளனர். அங்கே அளவற்ற சுகம் உள்ளது. முழு
சிருஷ்டியும் புதியதாக ஆகின்றது. இப்போது இது பழையது எனச்
சொல்லப் படுகின்றது. பெயரே அயர்ன் ஏஜ்டு வேர்ல்டு. எப்படி ஓல்டு
டில்லி மற்றும் நியு டில்லி எனச் சொல்லப்படுகிறது. பாபா புரிய
வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நியு வேர்ல்டில்
நியு டில்லி இருக்கும். இதுவோ பழைய உலகத்தில் (ஓல்டு வேர்ல்டு)
நியு டில்லி எனச் சொல்லி விடுகின்றனர். இதை நியு என்று எப்படிச்
சொல்ல முடியும்? பாபா புரிய வைக்கிறார், புது உலகத்தில் புது
டில்லி இருக்கும். அதில் இலட்சுமி- நாராயணர் ஆட்சி செய்வார்கள்.
அது சத்யுகம் என்று சொல்லப்படும். நீங்கள் இந்த பாரதம்
முழுவதிலும் இராஜ்யம் செய்வீர்கள். உங்கள் சிம்மாசனம் யமுனை
நதிக்கரையில் இருக்கும். பின்னால் இராவண இராஜ்யத்தின்
சிம்மாசனமும் இங்கே தான். இராம இராஜ்யத்தின் சிம்மாசனமும் இங்கே
தான் இருக்கும். பெயர் டில்லி என்று இருக்காது. அது ஃபரிஸ்தான்
(தேவதைகளின் இராஜ்யம்) எனச் சொல்லப்படுகின்றது. பிறகு எப்படி
இராஜா இருக்கிறாரோ, அவர் தம்முடைய சிம்மாசனத்திற்கு அதுபோல்
பெயர் வைக்கிறார். இச்சமயம் நீங்கள் அனைவரும் பழைய உலகத்தில்
இருக்கிறீர்கள். புது உலகிற்குச் செல்வதற்காகப் படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் மனிதரில் இருந்து தேவதையாக ஆகிக்
கொண்டிருக் கிறீர்கள். படிப்பு சொல்லித் தருபவர் பாபா.
நீங்கள் அறிவீர்கள், உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை கீழே இறங்கி
வந்து இராஜயோகம் கற்பித்திருக்கிறார். இப்போது நீங்கள்
சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இப்போது கலியுகமாகிய பழைய உலகம்
முடிந்து போகும். பாபா இதனுடைய கணக்கையும் சொல்லியிருக்கிறார்.
நான் பிரம்மாவின் உடலில் வருகிறேன். மனிதர்களுக்கோ இது தெரியாது
- எந்த பிரம்மா என்று. பிரஜாபிதா பிரம்மா பற்றிக்
கேட்டிருக்கிறார்கள். நீங்கள் பிரம்மாவின் பிரஜைகள் அல்லவா?
அதனால் தங்களை பி.கே. எனச் சொல்லிக் கொள்கிறீர்கள். உண்மையில்
நிராகாராக இருப்பதால் சிவபாபாவின் குழந்தைகள் சிவவம்சி நீங்கள்.
பிறகு சாகாரத்தில் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள்
சகோதர-சகோதரிகள் ஆகிறீர்கள். வேறு எந்த ஒரு சம்மந்தமும்
கிடையாது. இச்சமயம் நீங்கள் இந்தக் கலியுக உறவுகளை
மறக்கிறீர்கள். ஏனென்றால் அதில் பந்தனம் உள்ளது. நீங்கள் புது
உலகத்திற்குச் செல்கிறீர்கள். பிராமணர் களுக்கு உச்சிக் குடுமி
இருக்கும். குடுமி என்பது பிராமணர்களின் அடையாளம். இது
பிராமணர்களாகிய உங்களுடைய குலம். அவர்கள் கலியுக பிராமணர்கள்.
பிராமணர்கள் அதிகமாக வழிகாட்டிகளாக உள்ளனர். அதில் ஒரு சாரர்
ஈமச் சடங்குகள் செய்கின்றனர். மற்றொரு சாரார் கீதை சொல்கின்றனர்.
இப்போது பிராமணர்கள் நீங்கள் இந்த கீதையை சொல்கிறீர்கள்.
அவர்களும் கூட கீதை சொல்கின்றனர். நீங்களும் கீதை சொல்கிறீர்கள்.
வித்தியாசத்தைப் பாருங்கள், எவ்வளவு உள்ளது! நீங்கள்
சொல்கிறீர்கள், கிருஷ்ணரை பகவான் எனச்சொல்ல முடியாது என்று.
அவரிடம் தெய்வீக குணங்கள் உள்ளன. அவரையோ இந்தக் கண்களால் காண
முடியும். சிவனுடைய ஆலயத்தில் பார்ப்பீர்கள், சிவனுக்குத்
தன்னுடைய சரீரம் எதுவும் கிடையாது. அவர் பரம (மிக மேலான) ஆத்மா
அல்லது பரமாத்மா. ஈஸ்வர், பிரபு, பகவான் முதலிய சொற் களுக்கு
எந்த ஓரு அர்த்தமும் வெளிப்படுவதில்லை. பரமாத்மா தான் சுப்ரீம்
ஆத்மா. நீங்கள் நான்-சுப்ரீம் மிக மேலானவரல்ல). உங்கள் ஆத்மா
மற்றும் அந்த ஆத்மாவுக்கிடையில் வேறுபாடு பாருங்கள், எவ்வளவு
உள்ளது! ஆத்மாக்கள் நீங்கள் இப்போது பரமாத்மாவிடம் கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள். இவரோ தந்தை அல்லவா? அந்தப் பரமபிதா
பரமாத்மாவை நீங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள், ஆசிரியர்
என்றும் சொல்கிறீர்கள், மேலும் குரு என்றும் கூட சொல்கிறீர்கள்.
அனைத்தும் ஒருவர் தான். வேறு எந்த ஓர் ஆத்மாவும் தந்தை,
ஆசிரியர், குரு ஆக முடியாது. ஒரு பரமாத்மா மட்டுமே சுப்ரீம்
எனச் சொல்லப்படுகிறார். ஒவ்வொரு வருக்கும் முதலில் தந்தை
வேண்டும். பிறகு ஆசிரியர் வேண்டும். பிறகு கடைசியில் குரு
வேண்டும். பாபாவும் சொல்கிறார் - நான் உங்களுக்கு தந்தையாகவும்
ஆகிறேன். பிறகு ஆசிரியர் ஆகிறேன். பிறகு நானே உங்களுக்கு சத்கதி
அளிக்கும் சத்குரு வாகவும் ஆகிறேன். சத்கதி அளிக்கும் குரு
ஒருவரே! மற்ற குருமார் அநேகர் உள்ளனர். பாபா சொல்கிறார், நான்
உங்கள் அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன். நீங்கள் அனைவரும்
சத்யுகத்திற்குச் செல்வீர் கள். மற்ற அனைவரும்
சாந்திதாமத்திற்குச் சென்று விடுவார்கள். அதைப் பரந்தாமம் எனச்
சொல்கின்றனர். சத்யுகத்தில் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம்
இருந்தது. வேறு எந்த ஒரு தர்மமும் இல்லை. மற்ற அனைத்து
ஆத்மாக்களும் முக்திதாமம் சென்று விடுகின்றனர். சத்கதி எனச்
சொல்லப்படுவது சத்யுகம். பாகத்தை நடித்து நடித்துப் பிறகு
துர்கதியில் வந்து விடு கின்றனர். நீங்கள் தான்
சத்கதியிலிருந்து பிறகு துர்கதியில் வந்து விடுகிறீர்கள்.
நீங்கள் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். இராஜா-ராணி
எப்படியோ அப்படியே பிரஜைகளும் அச்சமயம் இருப்பார்கள். 9 இலட்சம்
பேரே முதலில் வருவார்கள். 9லட்சம் பேரே 84 பிறவி களை
எடுப்பார்கள் இல்லையா? பிறகு மற்றவர்கள் வந்து கொண்டே
இருப்பார்கள். இது கணக்கிடப்படுகின்றது. அதை பாபா புரிய
வைக்கிறார். அனைவரும் 84 பிறவிகள் எடுப்ப தில்லை. முதல்-முதலில்
வருபவர்கள் தான் 84 பிறவிகளை எடுக்கின்றனர். பிறகு மற்றவர்கள்
குறைவு-குறைவாக எடுத்துக் கொண்டே வருகின்றனர். அதிக பட்சம் 84
பிறவிகள். இந்த விஷயங்களை வேறு மனிதர்கள் யாரும்
தெரிந்திருக்கவில்லை. பாபா தான் வந்து புரிய வைக்கிறார்.
கீதையில் பகவான் வாக்கு என்பதாக உள்ளது. இப்போது நீங்கள்
புரிந்து கொண்டு விட்டீர்கள் - ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை
ஒன்றும் கிருஷ்ணர் படைக்கவில்லை. இதையோ பாபா தான் ஸ்தாபனை
செய்கிறார். கிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகளின் கடைசியில் இந்த
ஞானத்தைக் கேட்டு பிறகு முதல் நம்பரில் வந்தது. இந்த விஷயங்கள்
புரிந்து கொள்ள வேண்டிய வையாகும். தினந்தோறும் படிக்க வேண்டும்.
நீங்கள் பகவானுடைய மாணவர்கள். பகவான் வாக்கு அல்லவா! - நான்
உங்களை இராஜாவுக்கெல்லாம் மேலான ராஜா ஆக்குகிறேன். இது பழைய
உலகம். புதிய உலகம் என்றால் சத்யுகம். இப்போது கலியுகம். பாபா
வந்து கலியுக பதீதத்திலிருந்து சத்யுக பாவன தேவதா ஆக்குகிறார்.
அதனால் கலியுக மனிதர்கள் அழைக்கின்றனர் - பாபா, வந்து எங்களைப்
பாவனமாக்குங்கள். கலியுக பதித்திலிருந்து சத்யுக பாவனமாக
ஆக்குங்கள். வேறுபாடு பாருங்கள், எவ்வளவு இருக்கிறது!
கலியுகத்தில் உள்ளது அளவற்ற துக்கம். குழந்தை பிறந்ததும் சுகம்
வந்தது, நாளை இறந்தால் துக்கம் நிறைந்தவராக ஆகி விடுவார்கள்.
ஆயுள் முழுவதும் எவ்வளவு துக்கம் ஏற்படுகின்றது! இதுவே
துக்கத்தின் உலகம். இப்போது பாபா சுகத்தின் உலகத்தை ஸ்தாபனை
செய்து கொண்டிருக்கிறார். உங்களை சொர்க்கவாசி தேவதையாக
ஆக்குகிறார். இப்போது நீங்கள் புருஷார்த்தம் சங்கமயுகத்தில்
இருக்கிறீர்கள். உத்தமத்திலும் உத்தம புருஷ் அல்லது நாரி
ஆகிறீர்கள். நீங்கள் வருவதே இந்த இலட்சுமி-நாராயணனாக ஆவதற்கு.
மாணவர்கள் ஆசிரியரிடம் யோகம் (தொடர்பு) வைக்கின்றனர். ஏனென்றால்
இவர் மூலம் நாம் படித்து இன்னாராக ஆவோம் எனப் புரிந்து
கொண்டுள்ளனர். இங்கே நீங்கள் பரமபிதா பரமாத்மா சிவனிடம் யோகம்
வைக்கிறீர்கள். அவர் உங்களை தேவதா ஆக்குகிறார். தங்களுடைய
தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் எனச் சொல்கிறார். நீங்கள்
அவருடைய சாலிகிராம் குழந்தைகள். தன்னை ஆத்மா என உணர்ந்து
தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் தான் ஞானம் நிறைந்தவர். தந்தை
உங்களுக்கு உண்மையான கீதை சொல்கிறார். ஆனால் அவர் படித்ததில்லை.
அவர் சொல்கிறார், நான் யாருடைய குழந்தையும் இல்லை, யாரிடமும்
படித்ததில்லை. எனக்கு குரு யாரும் கிடையாது. நான் பிறகு
குழந்தைகளாகிய உங்களுடைய தந்தை, ஆசிரியர், குருவாக இருக்கிறேன்.
அவர் பரம ஆத்மா என்று சொல்லப் படுகிறார். இந்த முழு
சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றி அறிந்துள்ளார். எதுவரை அவர்
சொல்ல வில்லையோ, அதுவரை நீங்கள் முதல், இடை, கடை பற்றிப்
புரிந்து கொள்ள முடியாது. இந்தச் சக்கரத்தை அறிந்து கொள்வதால்
நீங்கள் சக்கரவர்த்தி இராஜா ஆகிறீர்கள். உங்களுக்கு இந்த பாபா
(பிரம்மா) கற்பிக்கவில்லை. இவருக்குள் சிவபாபா பிரவேசமாகி
ஆத்மாக்களுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். இது புது விஷயம்
இல்லையா? இது நடப்பது சங்கம யுகத்தில் தான். பழைய உலகம்
முடிந்து போகும். சிலருடைய பொருள்கள் மண்ணோடு மண்ணாகிப் போகும்,
சிலருடையதை இராஜா அபகரித்துக் கொள்வார்...... குழந்தைகளுக்குச்
சொல்கிறார், அநேகருக்கு நன்மை செய்வதற்காக. மீண்டும் தேவதை
ஆக்குவதற்காக இந்தப் பாடசாலை, மியுசியம் திறந்து வையுங்கள்.
அங்கே அநேகர் வந்து சுகத்தின் ஆஸ்தியைப் பெறுவார்கள். இப்போது
உள்ளது இராவண இராஜ்யம் இல்லையா? இராமராஜ்யத்தில் இருந்தது சுகம்,
இராவண இராஜ்யத்தில் உள்ளது துக்கம். ஏனென்றால் அனைவரும் விகாரி
ஆகி விட்டுள்ளனர். அதுவே நிர்விகாரி உலகம். இந்த
இலட்சுமி-நாராயணர் முதலானவர்களுக்கும் கூட குழந்தை கள் உள்ளனர்
இல்லையா? ஆனால் அங்கே இருப்பது யோகபலம். பாபா உங்களுக்கு யோக
பலத்தைக் கற்றுத் தருகிறார். யோகபலத்தால் நீங்கள் உலகத்தின்
மாலிக் (எஜமான்) ஆகிறீர்கள். புஜ பலத்தால் யாரும் உலகத்தின்
மாலிக் ஆக முடியாது. சட்டம் அதுபோல் சொல்லவில்லை. குழந்தைகள்
நீங்கள் நினைவின் பலத்தினால் முழு உலகத்தின் இராஜ்யத்தையும்
பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு உயர்ந்த படிப்பு! பாபா
சொல்கிறார் - முதல்-முதலில் பவித்திரதாவுக்கான உறுதி மொழி
எடுத்துக் கொள்ளுங்கள். பவித்திரமாவதால் தான் பிறகு நீங்கள்
பவித்திர உலகத்தின் மாலிக் ஆவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) கலியுக சம்மந்தங்கள் இச்சமயம் பந்தனங்கள்.
அவர்களை மறந்து தன்னை சங்கமயுக பிராமணர் என உணர வேண்டும்.
உண்மையான கீதையைக் கேட்கவும் சொல்லவும் வேண்டும்.
2) பழைய உலகம் முடிந்துவிடப் போகிறது. அதனால் தன்னுடையவை
அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அநேகரின்
நன்மைக்காக, மனிதர்களை தேவதை ஆக்குவதற்காக இந்தப் பாடசாலை
அல்லது ஆன்மீக அருங்காட்சியகத்தைத் (மியுசியம்) திறந்து வைக்க
வேண்டும்.
வரதானம்:
பாபாவின் கட்டளை எனப் புரிந்து அன்பால் ஒவ்வொரு விஷயத்தையும்
சகித்துக் கொள்ளக் கூடிய சகிப்புத் தன்மை உள்ளவர் ஆகுக.
குழந்தைகளில் அநேகர் சொல்கின்றனர் - நான் தான் சரி. பிறகும்
கூட நான் தான் சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் இந்த
சகித்துக் கொள்வது அல்லது சாவது தான் தாரணை யின் பாடத்தில்
நம்பர் பெறுவதாகும். எனவே சகித்துக் கொள்வதில் பயப்படா தீர்கள்.
குழந்தை கள் பலர் சகித்துக் கொள்கின்றனர், ஆனால் நிர்பந்தத்தால்
சகித்துக் கொள்வது மற்றும் அன்பினால் சகித்துக் கொள்வது - இந்த
இரண்டுக்குமிடையில் வேறுபாடு உள்ளது. பிரச்சினை யின் காரணத்தால்
சகித்துக் கொள்கிறீர்கள். ஆனால் பாபாவின் கட்டளை - சகிப்புத்
தன்மை உள்ளவர் ஆகுங்கள். ஆக, கட்டளை என உணர்ந்து அன்பினால்
சகித்துக் கொள்வது என்றால் தன்னை மாற்றிக் கொள்வதாகும் -
இதற்குத் தான் மதிப்பெண்கள்.
சுலோகன்:
யார் எப்போதும் குஷி என்ற டானிக்கை அருந்துகிறார்களோ அவர்களே
ஆரோக்கியமாக இருப்பார்கள்.
|
|
|