09-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் இப்பொழுது
முள்ளிலிருந்து மலராகி உள்ளீர்கள். நீங்கள் எப்பொழுதும்
அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். நீங்கள் யாருக்குமே
துக்கம் கொடுக்க முடியாது.
கேள்வி:
நல்ல முதல்தரமான
முயற்சியாளர்களாக இருக்கும் குழந்தைகள் எந்த ஒரு வார்த்தையை
திறந்த மனதுடன் கூறுவார்கள்?
பதில்:
பாபா நாங்கள் பாஸ் வித் ஆனர்
ஆகிக் காண்பிப்போம். நீங்கள் கவலையற்று இருங்கள் என்று
கூறுவார்கள். அவர்களுடைய பதிவேடு கூட நன்றாக இருக்கும்.
இப்பொழுது நாங்கள் முயற்சியாளராக உள்ளோம் என்ற இந்த வார்த்தை
ஒரு பொழுதும் அவர்கள் வாயிலிருந்து வெளிப்படாது. மாயை
சிறிதளவும் அசைத்து விடாத அளவிற்கு முயற்சி செய்து
அப்பேர்ப்பட்ட மகாவீர் ஆக வேண்டும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தை
மூலமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை ஆத்மா என்று
உணர்ந்திருக்க வேண்டும். நிராகார தந்தையின் நிராகார
குழந்தைகளாகிய ஆத்மாக்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகத் தில் சாகார (உடலுடன் கூடிய) ஆசிரியர் தான் கற்பிக்கிறார்.
இங்கு இருப்பது நிராகார தந்தை, நிராகார ஆசிரியர் மற்றபடி
இவருக்கு (பிரம்மா) எந்த மதிப்பும் இல்லை. சிவபாபா எல்லை
யில்லாத தந்தை வந்து இவருக்கு மதிப்பு அளிக்கிறார். மிகவும்
மதிப்பிற்குரியவர் சிவபாபா ஆவார். அவர் சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்கிறார். எவ்வளவு உயர்ந்த காரியத்தைச் செய்கிறார். எந்த
அளவிற்கு தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று பாடப்படுகிறதோ
அந்த அளவிற்கு குழந்தைகள் கூட உயர்ந்தவர் ஆக வேண்டும்.
எல்லோரையும் விட உயர்ந்தவர் தந்தை என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். உண்மையில் இப்பொழுது சொர்க்கத்தின் ராஜ்யம்
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பது கூட உங்கள்
புத்தியிலுள்ளது. இது சங்கமயுகமாகும். சத்யுகம் மற்றும்
கலியுகத்திற்கு இடைப்பட்ட, புருஷோத்தமர் ஆவதற்கான சங்கமயுகம்
ஆகும். புருஷோத்தமர் என்ற வார்த்தையின் பொருள் கூட மனிதர்கள்
அறியாமல் இருக்கிறார் கள். உயர்ந்ததிலும் உயர்ந்த வர்களாக
இருந்தவர்கள் தான், பிறகு தாழ்ந்ததிலும் தாழ்ந்தவராக
ஆகியுள்ளனர். பதீதர்கள் மற்றும் பாவன மானவர்களுக்கிடையே எவ்வளவு
வித்தியாசம் உள்ளது. தேவதைகளின் பூசாரி யாக இருப்பவர்கள்
அவர்களே. நீங்கள் சர்வகுணங்களும் நிறைந்தவர்.... உலகத்தின்
அதிபதி என்று வர்ணனை செய்கிறார்கள். நாங்கள் விகாரக் கடலில்
மூழ்கி இருப்பவர்கள். பெயரளவில் கூறுவதற்காக மட்டுமே அவ்வாறு
கூறுகிறார்கள். புரிந்திருக் கிறார்களா என்ன? நாடகம் விசித்திர
மானது மற்றும் அதிசயமானது. இது போன்ற விஷயங்கள் நீங்கள் கல்ப
கல்பமாக கேட்கிறீர்கள். தந்தை வந்து புரிய வைக்கிறார். யாருக்கு
தந்தையிடம் முழுமையான அன்பு உள்ளதோ அவர்களுக்கு மிகுந்த
கவர்ச்சி ஏற்படுகிறது. இப்பொழுது ஆத்மா தந்தையை எவ்வாறு
சந்திப்பது? சந்திக்க வேண்டி இருப்பது சாகாரத்தில். நிராகார
உலகத்திலோ கவர்ச்சியின் விஷயமே கிடையாது. அங்கு எல்லோருமே
தூய்மையானவர்களாக இருப்பார்கள். துரு நீக்கப்பட்டு இருக்கும்.
கவர்ச்சியின் விஷயம் கிடையாது. அன்பினுடைய விஷயம் இங்கு
இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பாபாவை ஒரேயடியாகப் பிடித்துக்
கொள்ளுங்கள். பாபா நீங்களோ அற்புதம் செய்கிறீர்கள். நீங்கள்
எங்களுடைய வாழ்க்கையை இது போல ஆக்குகிறீர்கள். மிகுந்த அன்பு
வேண்டும். அன்பு ஏன் இருப்ப தில்லை. ஏனெனில் துரு ஏறி உள்ளது.
நினைவு யாத்திரையின்றி துரு நீங்குவதில்லை. அந்த அளவிற்கு
அன்பானவராக ஆவது இல்லை. மலர்களாகிய நீங்களோ இங்கேயே தான் மலர
வேண்டும். மலராக ஆக வேண்டும். அப்பொழுது தான் பின்னர் அங்கு
பிறவிதோரும் மலராக ஆகிறீர்கள். எவ்வளவு குஷி இருக்க வேண்டும் -
நாம் முள்ளிலிருந்து மலராக ஆகிக் கொண்டிருக் கிறோம். மலர்கள்
எப்பொழுதும் அனைவருக்கும் சுகம் கொடுக்கின்றன. மலர்களை அனைவரும்
தங்கள் கண்களில் ஒத்திக் கொள்கிறார்கள். அவற்றிலிருந்து
நறுமணத்தைப் பெறுகிறார்கள். மலர் களிலிருந்து வாசனைத் திரவியம்
தயாரிக்கிறார்கள். ரோஜா மலரிலிருந்து பன்னீர் தயாரிக் கிறார்கள்.
உங்களை முட்களிலிருந்து மலராக ஆக்குகிறார். மலராக ஆக்குபவர்
தந்தையாவார். குழந்தைகளாகிய உங்களுக்கு ஏன் குஷி இருப்பதில்லை.
பாபாவோ ஆச்சரியப் படுகிறார். பாபா நம்மை சொர்க்கத்தின் மலராக
ஆக்குகிறார். பூ கூட பழையதாக ஆகிவிடும் பொழுது ஒரேயடியாக
வாடிப்போகிறது. இப்பொழுது நாம் மனிதனிலிருந்து தேவதை யாகிறோம்
என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. தமோபிரதானமான மனிதர்கள்
மற்றும் சதோபிரதானமான தேவதைகளுக் கிடையே எவ்வளவு வித்தியாசம்
உள்ளது. இதுவும் தந்தையைத் தவிர வேறு யாருமே புரிய வைக்க
முடியாது.
நாம் தேவதையாக ஆவதற்காக படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள். படிப்பில் போதை இருக்கிறது அல்லவா?
நாம் பாபா மூலமாகப் படித்து உலகத்தின் அதிபதி ஆகிறோம் என்பதை
நீங்கள் புரிந்துள்ளீர்கள். உங்களுடைய படிப்பு
வருங்காலத்திற்கானது. வருங் காலத்திற்கான படிப்பைப் பற்றி
எப்பொழுதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? நீங்கள் தான் நாம்
புது உலகிற்காக, புதிய பிறவிக்காக படிக்கிறோம் என்று
கூறுவீர்கள். கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் இயக்கத்தை
பற்றிக் கூட தந்தை புரிய வைக்கிறார். கீதையில் கூட இருக்கிறது.
ஆனால் அதனுடைய பொருள் கீதையை வாசிப்பவர்களுக்கு தெரியுமா என்ன?
சத்யுகத்தில் கர்மம் அகர்மமாகி விடுகிறது. பிறகு இராவண
இராஜ்யத்தில் கர்மம் விகர்மமாக ஆரம்பிக்கிறது என்பதை இப்பொழுது
நீங்கள் தந்தை மூலமாக அறிந்துள்ளீர்கள். 63 பிறவிகள் நீங்கள்
இப்பேர்ப்பட்ட கர்மங்களை செய்தபடியே வந்துள்ளீர் கள்.
விகர்மங்களின் சுமை தலை மீது நிறைய உள்ளது. எல்லோருமே பாவ
ஆத்மாக்களாக ஆகி விட்டுள்ளார்கள். இப்பொழுது அந்த கடந்த
காலத்தின் விகர்மங்கள் எப்படி நீங்கும்? முதலில் சதோபிரதானமாக
இருந்தவர்கள் பிறகு 84 பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். தந்தை நாடகம் பற்றிய அறிமுகத்தை
அளித்துள்ளார். யார் முதன் முதலில் வருவார்களோ முதன் முதலில்
யாருடைய ஆட்சி இருக்குமோ அவர்கள் தான் 84 பிறவிகள் எடுப்பார்கள்.
பிறகு தந்தை வந்து இராஜ்ய பாக்யத்தை அளிப்பார். இப்பொழுது
நீங்கள் ஆட்சியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். நாம் எப்படி
84ன் சக்கரம் சுற்றி வந்துள்ளோம் என்பதை புரிந்துள்ளீர்கள்.
இப்பொழுது மீண்டும் தூய்மையாக வேண்டும். பாபாவை நினைவு செய்து
செய்து ஆத்மா தூய்மையாகி விடும். பின் இந்த பழைய உடல் முடிந்து
போய் விடும். குழந்தைகளுக்கு அளவற்ற குஷி இருக்க வேண்டும்.
தந்தை, தந்தையும் ஆவார், ஆசிரியரும் ஆவார் மற்றும் குருவும்
ஆவார் என்ற இந்த மகிமையை ஒரு பொழுதும் எங்குமே கேள்விப்படவில்லை.
அதுவும் மூவருமே உயர்ந்ததிலும் உயர்ந்தவர்கள். சத்தியமான தந்தை
சத்தியமான ஆசிரியர் மற்றும் சத்குரு மூவருமே ஒரே ஒருவர் தான்.
இப்பொழுது உங்களுக்கு உணர்வு ஏற்படுகிறது. ஞானக் கடலான பாபா
அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். அவர் நமக்கு கற்பித்து
கொண்டிருக்கிறார். வழிமுறைகளை உருவாக்கி கொண்டி ருக்கிறார்.
பத்திரிக்கைகளில் கூட மிக நல்ல குறிப்புகள் வெளி வந்து கொண்டே
இருக்கின்றன. வண்ண நிற படங்களுடன் கூடிய பத்திரிக்கைகள் கூட
வெளிப்படக்கூடும். எழுத்துக்கள் மட்டும் சிறியதாகி விடுகிறது.
படங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டு
மானாலும் அமைக்க முடியும். மேலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு
படத்தின் காரியம் பற்றிக் கூட நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
சிவபாபாவினுடைய தொழில் பற்றி அவசியம் அறிந்துள்ளீர்கள். குழந்தை
கள் தந்தையினுடைய தொழில் பற்றி அவசியம் தந்தை மூலமாகத் தான்
அறிவார்கள் அல்லவா? நீங்கள் ஒன்றுமே அறியாமல் இருந்தீர்கள்.
சிறிய குழந்தைகளுக்குப் படிப்பு பற்றி என்ன தெரியும்? 5 வயது
ஆன பிறகு படிக்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு படித்துப்படித்து
உயர்ந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு அநேக வருடங்கள் பிடிக்
கின்றன. நீங்கள் எவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்கள் மற்றும்
என்னவாக ஆகிறீர்கள் - உலகத்தின் அதிபதி. உங்களுக்கு எவ்வளவு
அலங்காரம் ஆகும். வாயில் தங்கக் கரண்டி. அந்த இடத்திற்கான பாடல்
இருக்கவே இருக்கிறது. இப்பொழுது கூட யாராவது நல்ல குழந்தைகள்
சரீரம் விடுகிறார்கள் என்றால் மிகவும் நல்ல வீட்டில் பிறவி
எடுக்கிறார்கள். பிறகு வாயில் தங்கக் கரண்டி ஆகி விடுகிறது.
முன்கூட்டியே யாரிடமாவது செல்வார்கள் அல்லவா? நிர்விகாரியிடம்
முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் தான் பிறவி எடுக்க வேண்டியுள்ளது.
மற்றபடி யாரெல்லாம் செல்வார்களோ அவர்கள் விகாரியிடம் தான் பிறவி
எடுப்பார்கள். ஆனால் கல்பத்தில் இந்த அளவு தண்டனைகள் அனுபவிக்க
மாட்டார்கள். மிகவும் நல்ல வீட்டில் பிறவி எடுப்பார்கள்.
தண்டனைகள் குறைந்து விடும். மற்றபடி சிறிதளவு மீதி இருக்கும்.
இந்த அளவு துக்கம் இருக்காது. இனி முன்னால் போகப்போக
பார்ப்பீர்கள். உங்களிடம் பெரியப்பெரிய வீட்டை சேர்ந்த
குழந்தைகள், இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் எப்படி வருகிறார்கள்
என்று. தந்தை உங்களுக்கு எவ்வளவு மகிமை செய்கிறார். நான் உங்களை
என்னை விடவும் உயர்ந்தவராக ஆக்குகிறேன். எப்படி ஒரு லௌகீகத்
தந்தை குழந்தைகளை சுகமுடைய வர்களாக ஆக்குகிறார். 60 வருடங்கள்
ஆகியது என்றால் அவ்வளவு தான். சுயம் வானபிரஸ்தத் திற்குச்
சென்று விடுகிறார்கள். பக்தியில் ஈடுபட்டு விடுகிறார்கள். ஞானமோ
வேறு யாருமே கொடுக்க முடியாது. ஞானத்தின் மூலம் நான்
அனைவருக்கும் சத்கதி செய்கிறேன். உங்கள் நிமித்தமாக
அனைவருக்கும் நன்மை ஆகி விடுகிறது. ஏனெனில் உங்களுக்காக அவசியம்
புதிய உலகம் வேண்டும். நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறீர்கள்.
இப்பொழுது சைவ உணவின் (வெஜிடேரியன்) மாநாட்டிற்கு கூட
குழந்தைகளுக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது. தைரியமாக இருங்கள்
என்று பாபா கூறிக் கொண்டே இருக்கிறார். டில்லி போன்ற நகரங்களில்
ஒரேயடியாக சப்தம் பரவி விட வேண்டும். உலகத்தில் குருட்டு
நம்பிக்கையின் பக்தி நிறைய உள்ளது. சத்யுக திரேதாவில் பக்தியின்
எந்த விஷயமும் இருப்பதில்லை. அந்த பிரிவே தனி. அரைக் கல்பம்
ஞானத்தின் பாக்கியம் அமைந்திருக்கும். உங்களுக்கு 21
பிறவிகளுக்கான ஆஸ்தி எல்லை யில்லாத தந்தையிடமிருந்து
கிடைக்கிறது. பிறகு 21 தலைமுறைகளுக்கு நீங்கள் சுகமாக இருப்பீர்
கள். முதுமை வரைக்கும் துக்கத்தின் பெயர் இருக்காது. முழு ஆயுள்
சுகமுடையவர்களாக இருப்பீர்கள். எந்த அளவிற்கு ஆஸ்தி
பெறுவதற்கான முயற்சி செய்வீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவியை
அடைவீர்கள். எனவே முழுமையாக புருஷார்த்தம் (முயற்சி) செய்ய
வேண்டும். வரிசைக்கிரமமாக மாலை எப்படி அமைகிறது என்பதை நீங்கள்
பார்க்கிறீர்கள். முயற்சிக்கேற்பவே அமையும். நீங்கள் அதிசயமான
மாணவர்கள் ஆவீர்கள். பள்ளிக் கூடத்தில் கூட எல்லைக்கோடு
வரைக்கும் குழந்தைகளை ஓட வைக்கிறார்கள் அல்லவா? பாபா கூறுகிறார்:
நீங்கள் எல்லைக் கோடு வரைக்கும் ஓடிச் சென்று மீண்டும் இங்கேயே
வரவேண்டியுள்ளது. நினைவு யாத்திரை மூலம் நீங்கள் ஓடிக் கொண்டே
செல்லுங்கள். பிறகு நீங்கள் முதல் நம்பரில் வந்து விடுவீர்கள்.
நினைவு யாத்திரை முக்கியமானது. பாபா நாங்கள் மறந்து விடுகிறோம்
என்று கூறுகிறார்கள். அட! தந்தை உங்களை இந்த உலகத்திற்கு
அதிபதியாக ஆக்குகிறார். அவரை நீங்கள் மறந்து விடுகிறீர்கள்!
புயல்கள் வரும் தான். தந்தை தைரியமூட்டுவார் அல்லவா? கூடவே இது
போர்க்களம் என்றும் கூறுகிறார். யுதிஷ்டிரர் என்று உண்மையில்
தந்தைக்குக் கூற வேண்டும். அவர் யுத்தத்தை கற்பிக்கிறார்.
எப்படி நீங்கள் போரிடலாம் என்பதை யுதிஷ்டிரரான தந்தை
உங்களுக்குக் கற்பிக்கிறார். இச்சமயம் யுத்த மைதானம் ஆகும்
அல்லவா? காமம் மகா எதிரி ஆகும். அதன் மீது வெற்றி அடைவதன் மூலம்
நீங்கள் உலகத்தை வென்றவராகி விடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார்.
நீங்கள் வாயால் எதுவுமே ஜெபிப்பது, செய்வது வேண்டாம். மௌனமாக
இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு உழைக்கிறார்கள்.
உள்ளுக்குள் ராம் ராம் என்று ஜெபிக்கிறார்கள். அதற்குத் தான்
தீவிர பக்தி என்று கூறப்படுகிறது. பாபா நம்மை தன்னுடைய
மாலையினுடையவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். நீங்கள் ருத்ர மாலையின் மணியாகக் கூடியவர்கள்!
அதை பிறகு பூஜிப்பார்கள். ருத்ரமாலை மற்றும் ருண்ட மாலையாகிக்
கொண்டிருக்கிறது. விஷ்ணுவின் மாலைக்கு ருண்ட என்று
கூறப்படுகிறது. நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆகிறீர்கள்.
எப்படி ஆகிறீர்கள் - ஓட்ட பந்தயத்தில் வெற்றி அடையும் பொழுது!
தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் 84ன் சக்கரத்தை அறிந்து
கொள்ள வேண்டும். தந்தையின் நினை வினால் தான் விகர்மங்கள்
விநாசம் ஆகும். நீங்கள் எப்பேர்ப்பட்ட கலங்கரை விளக்கம் ! ஒரு
கண்ணில் முக்தி தாமம் மற்றொரு கண்ணில் ஜீவன் முக்தி தாமம்.
இந்த சக்கரத்தை அறிந்து கொள்வதால் நீங்கள் சக்கரவர்த்தி ராஜா,
சுக தாமத்தின் அதிபதி ஆகிவிடுவீர்கள். இப்பொழுது ஆத்மாக்களாகிய
நாம் நமது வீட்டிற்குச் செல்வோம் என்று உங்களுடைய ஆத்மா
கூறுகிறது. வீட்டை நினைவு செய்து செய்து சென்று விடுவீர்கள்.
இது நினைவு யாத்திரை ஆகும். உங்களது யாத்திரையை பாருங்கள்
எவ்வளவு முதல்தரமானது. நாம் இவ்வாறு அமர்ந்தபடியே பாற்கடலில்
செல்வோம் என்பதை பாபா அறிந்துள்ளார். பாற்கடல் இப்பொழுது இல்லை.
யார் குளத்தை அமைத்தார்களோ அவசியம் அதில் அவர்கள் பாலை
ஊற்றியிருப்பார்கள். முன்பெல்லாம் பால் மிகவும் மலிவாக இருந்தது.
ஒரு பைசாவிற்கு செம்பு நிரம்ப எடுத்து வருவார்கள். பின் ஏன்
குளம் நிரம்பி இருக்காது. இப்பொழுது பால் எங்கே இருக்கிறது.
தண்ணீரே தண்ணீராகி விட்டுள்ளது. பாபா நேபாளத்தில்
பார்த்திருக்கிறார் - மிகப் பெரிய விஷ்ணுவின் படம் உள்ளது. கரு
நீலமாகவே அமைத்துள்ளார்கள். இப்பொழுது நீங்கள் நினைவு யாத்திரை
மூலமாகவும் மற்றும் சுயதரிசன சக்கரத்தைச் சுற்றுவதாலும்
விஷ்ணுபுரிக்கு அதிபதியாகிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆத்மாவினுடைய தாழ்ந்த தன்மை விடுபட்டுப் போய் விடும். பாபா
தினமும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார் - போதை ஏற வேண்டும்.
பாபா முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அட
! பாபா நாங்கள் பாஸ் வித் ஆனராகி காண்பிப் போம் நீங்கள்
கவலைப்படாதீர்கள் என்று திறந்த மனதுடன் கூறுங்களேன்! நல்ல
முறையில் படிக்கக் கூடிய முதல்தரமான குழந்தைகளின் கணக்கு கூட
நன்றாக இருக்கும். பாபா நீங்கள் கவலையற்று இருங்கள், நாங்கள்
இது போலாகிக் காண்பிப்போம் என்று பாபாவிடம் கூற வேண்டும். பாபா
கூட அறிந்துள்ளார் அல்லவா? நிறைய ஆசிரியர்கள் மிகவும்
முதல்தரமானவர் களாக இருக்கிறார்கள். எல்லோருமே ஃபர்ஸ்ட்
கிளாஸில் வர முடியாது. மிக நல்ல ஆசிரியர்கள் ஒருவர் மற்றவரை
அறிந்து இருப்பார்கள். எல்லோருமே மகாரதிகளின் வரிசையில் வர
முடியுமா? நல்ல மிகப் பெரிய சென்டர்கள் திறந்தீர்கள் என்றால்
மிகப் பெரிய மனிதர்கள் வருவார்கள். முந்தைய கல்பத்தில் கூட
உண்டி நிரம்பி இருந்தது. செல்வம் நிறைந்த பாபா அவசியம் உண்டியை
நிரப்புவார். இரண்டு தந்தைகளுமே குழந்தை குட்டி உடையவர்கள்.
பிரஜாபிதா பிரம்மா விற்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார் கள்.
ஒரு சிலர் ஏழைகள். மற்றொரு சிலர் சாதாரணமானவர்கள். வேறு சிலர்
செல்வந்தர்கள். முந்தைய கல்பத்தில் கூட இவர் மூலமாக இராஜ்யம்
ஸ்தாபனை ஆகி இருந்தது. இதற்கு தெய்வீக ராஜஸ்தான் என்று கூறப்
பட்டது. இப்பொழுதோ அசுர ராஜஸ்தானம் ஆகும். முழு உலகத்தில்
தெய்வீக ராஜ்ஸ்தானம் இருந்தது. இத்தனை கண்டங்கள் இருக்கவில்லை.
இதே டில்லி யமுனாவின் கரையோரமாக இருந்தது. அதற்கு பரிஸ்தான்
என்று கூறப்படுகிறது. அங்கு நதிகள் கொந்தளிக்குமா என்ன?
இப்பொழுது எவ்வளவு கொந்தளிக்கிறது. அணைக் கட்டுகள் உடைந்து
போகின்றன. இயற்கைக்கு நாம் அடிமையாகி விட்டது போல இருக்கிறோம்.
பிறகு நீங்கள் எஜமானராகி விடுவீர்கள். அங்கு அவமரியாதை செய்யும்
வகையில் மாயையின் பலம் இருப்பதில்லை. பூமி பிளக்கும் வகையில்
அதற்கு அந்த பலம் இருக்காது. நீங்கள் கூட மகாவீராக வேண்டும்.
அனுமாரை மகாவீர் என்று கூறுகிறார்கள் அல்லவா? நீங்கள் எல்லோரும்
மகாவீரர்கள். மகாவீரரின் குழந்தைகள் ஒரு பொழுதும் ஆடிப் போக
மாட்டார்கள். மகாவீரன் மற்றும் மகா வீராங்கனையின் கோவில்
அமைக்கப்பட்டுள்ளது. எல்லோருடைய படங்களையும் வைப்பார்களா என்ன?
ஒரு மாதிரி (மாடல்) அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள்
பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக் கிறீர்கள். எனவே
எவ்வளவு குஷி இருக்க வேண்டும். எவ்வளவு நல்ல குணங்கள் இருக்க
வேண்டும். அவகுணங் களை நீக்கிக் கொண்டே செல்லுங்கள்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். புயல்கள் வரும்.
புயல்கள் வந்தால் தானே மகாவீராங்கனையின் பலம் தென்பட முடியும்.
நீங்கள் எவ்வளவு வலிமையுடையவர்களாக ஆவீர்களோ அந்த அளவிற்கு
புயல்கள் வரும். இப்பொழுது வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப
நீங்கள் புருஷார்த்தம் செய்து மகாவீரராகிக் கொண்டிருக்
கிறீர்கள். தந்தை தான் ஞான கடலாக உள்ளார். மற்றபடி அனைத்து
சாஸ்திரங்கள் ஆகியவை பக்தி மார்க்கத்தின் பொருட்களாகும்.
உங்களுக்காக இருப்பது புருஷோத்தம சங்கமயுகமாகும். கிருஷ்ணருடைய
ஆத்மா இங்கு தான் வந்துள்ளது. இவர் பாகீரதன் ஆவார். அப்படியும்
நீங்கள் அனைவருமே பாகீரதன் ஆவீர்கள். பாக்கியசாலி ஆவீர்கள்
அல்லவா? பக்தி மார்க்கத்தில் தந்தை எவரொருவருடைய சாட்சாத்
காரத்தையும் செய்விக்க முடியும். இந்த காரணத்தினால் மனிதர்கள்
சர்வவியாபி என்று கூறி விட்டுள்ளார்கள். இதுவும் நாடகத்தின்
செயலாகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உயர்ந்த படிப்பைப்
படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஆத்மாவில் ஏறி இருக்கும் துருவை நினைவு யாத்திரை மூலம்
நீக்கி மிகவும் அழகானவராக வேண்டும் தந்தையின் கவர்ச்சி
எப்பொழுதும் இருக்கும் வகையில் அன்பு இருக்க வேண்டும்.
2. மாயையின் புயல்களுக்கு பயப்படக் கூடாது. மகாவீராக வேண்டும்.
தங்களது அவகுணங்களை நீக்கிக் கொண்டே போக வேண்டும். எப்பொழுதும்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு பொழுதும் ஆடிப் போகக் கூடாது.
வரதானம்:
தூய்மையான எண்ணங்களின் சக்தியை சேமிப்பதன் மூலம் மனசா சேவையின்
சகஜமான அனுபவி ஆகுக.
உள்முகமாகி, தூய்மையான எண்ணங்களுடைய சக்தியை சேமிப்பு
செய்யுங்கள். இந்த தூய்மை யான எண்ணத்தின் சக்தி - உங்களுடைய
வீணான எண்ணங்களை எளிதில் அழித்துவிடும், மேலும் இந்த சக்தியின்
மூலம் மற்றவர்களையும் - சுப பாவனா, சுப காம்னா-வின் சுவரூபமாக
மாற்ற முடியும் (நல்லெண்ணம் மற்றும் நல்லாசிகள் நிறைந்தவர்களாக
மாற்ற முடியும்). தூய்மையான எண்ணங்களின் இருப்பைச் சேகரிக்க,
முரளியின் ஒவ்வொரு கருத்தையும் (பாயின்ட்) கேட்பதோடு, அதை
ஒவ்வொரு தருணத்திலும் சக்தியின் வடிவத்தில் பயன்படுத்துங்கள்.
எவ்வளவு தூய்மை யான எண்ணங்களின் சக்தியை சேமிக்கின்றீர்களோ,
அவ்வளவு மனசா சேவையின் சகஜமான அனுபவத்தைப் பெறுவீர்கள்.
சுலோகன்:
மனதிலிருந்து - பொறாமை மற்றும் வெறுப்பிற்கு நிரந்தரமாக விடை
கொடுத்து விடுங்கள், அப்போது வெற்றி கிடைக்கும்.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
இப்போது நீங்கள் உடல், மனம், செல்வம் மற்றும் நேரத்தை எவ்வளவு
செலவழிக்கிறீர்களோ, அதை விட மன சக்திகளால் சேவை செய்வதன் மூலம்
மிகக் குறைந்த நேரத்தில் அதிக வெற்றி கிடைக்கும். இப்போது
உங்களுக்காக சில சமயங்களில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி
யிருக்கிறது - உங்கள் குணத்தை மாற்றிக்கொள்வதில், குழுவில்
எல்லோருடனும் இணைந்து செல்வதில், அல்லது சேவையில் குறைந்த
வெற்றியைக் கண்டு மனமுடைவது போன்றவை - இவை அனைத்தும் முடிவுக்கு
வரும் (மனசா சேவையின் மூலமாக).