09.11.25    காலை முரளி            ஓம் சாந்தி  30.11.2007      பாப்தாதா,   மதுபன்


சத்தியம் மற்றும் தூய்மையின் சக்தியை சொரூபத்தில் கொண்டு வந்து பாலகன் மற்றும் எஜமான் என்பதில் சமநிலை வையுங்கள்

இன்று சத்தியமான தந்தை, சத்யமான ஆசிரியர், சத்குரு தனது நாலாபுறமும் உள்ள சத்தியம் மற்றும் சக்தியின் சொரூபமான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஏனெனில் சத்யத் தின் சக்தி சர்வ சிரேஷ்டமானது. இந்த சத்திய சக்தியின் ஆதாரம் சம்பூரண தூய்மை மனம், சொல், செயல் சம்மந்தம் தொடர்பு கனவிலும் கூட தூய்மையின்மை என்பது பெயரளவிலும் இல்லாத நிலை. அத்தகைய தூய்மையின் வெளிப்பாடு என்னவாக தென்படும்? அத்தகைய பவித்ர ஆத்மா வின் முகத்திலும், நடத்தையிலும் தெய்வீகத்தன்மை வெளிப்படையாகத் தென்படும் அவர்களின் கண்களில் ஆன்மீக பொலிவு முகத்தில் சதா மலர்ந்த முகம், செயலெனும் நடத்தையில் ஒவ்வொரு அடிலும் பாப்சமான் கர்மயோகி அத்தகைய சத்யவாதியாக சத்யமான தந்தை மூலமாக இந்த சமயத்தில் நீங்கள் அனைவரும் மாறுகின்றீர்கள். உலகிலும் அனேகர் தந்தை சத்யவாதி என சொல்வார்கள். உண்மையே பேசுவார்கள். ஆனால் முழுமையான தூய்மையே உண்மையான சத்தியத்தின் சக்தியாகும் அந்த நிலையையே நீங்கள் அனைவரும் அடைந்து கொண்டிருக் கின்றீர்கள். இந்த சங்கமயுகத்தின் உயர்ந்த பிராப்தி சத்யத்தின் சக்தியும், தூய்மையின் சக்தியுமே ஆகும். இதன் பலனாகவே சத்யுகத்தில் நீங்கள் பிராமணலிருந்து தேவதையாக உடலாலும் உயிரா லும் தூய்மையாகின்றீர்கள் சிருஷ்டி சக்கரம் முழுவதிலும் யாருமே உடலாலும், உயிராலும் தூய்மையானவர் ஆவதில்லை. ஆத்மாவால் தூய்மை ஆவார்கள் ஆனால் தூய உடல் கிடைக்காது. அத்தகைய சம்பூரணத் தூய்மையை இப்போது நீங்கள் அனைவரும் கையாளு கின்றீர்கள். உற்சாகமாக சொல்கின்றீர்களா, உற்சாகமாக என்ன சொல்கின்றீர்கள் நினைவில் உள்ளதா? நினைவு செய்யுங்கள் அனைவரும் உளமாற சொல்கின்றீர்கள். அனுபவத்துடன் சொல்வீர்கள், தூய்மை எங்கள் பிறப்புரிமை என்று, பிறப்புரிமை சுலபமாக கிடைக்கின்றது ஏனெனில் தூய்மை, சத்யத்தை பெறுவதற்காக நீங்கள் அனைவரும் முதலில் தனது சத்ய சொரூப மான ஆத்மாவைத் தெரிந்து கொண்டீர்கள். தனது சத்யமான தந்தை, சத்யமான ஆசிரியர், சத்குருவைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள். தெரிந்தும் விட்டது அடைந்தும் விட்டீர்கள். எதுவரையில் ஒருவர் தனது சத்ய சொரூபம் மற்றும் சத்ய தந்தையை தெரிந்து கொள்ள வில்லையோ அதுவரையில் சம்பூரண தூய்மை மற்றும் சத்யத்தின் சக்தி வர முடியாது.

நீங்கள் அனைவரும் சத்யம் மற்றும் தூய்மை சக்தியின் அனுபவிகள் தானே? அனுபவிதானே? அனுபவியா? இவர்கள் முயற்சி செய்கின்றார்கள் ஆனால் யதார்த்தமான முறையில் தனது சொரூபத்தையோ தன் தந்தையின் யதார்த்த சொரூபத்தையோ தெரிந்து கொள்ளவில்லை. நீங்கள் அனைவரும் இப்போது தூய்மையினை யதார்த்தமான முறையில் சுலபமாக கடைபிடித்தால் இதன் பலனாக தேவதைகளின் தூய்மை இயல்பாக இயற்கையாக உள்ளது. அத்தகைய இயல்பான இற்கையை நீங்களே பெறுகின்றீர்கள். ஆகவே தூய்மையும் சத்தியத்தின் சக்தியும் இயல்பான இயற்கையாக வந்து விட்டதா? என சோதனை செய்யுங்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? தூய்மை எமது பிறப்புரிமை என கருதுபவர்கள் கை உயர்த்துங்கள் பிறப்புரிமையா முயற்சி செய்ய வேண்டியுள்ளதா? முயற்சி செய்ய வேண்டியதில்லை தானே. சுலபம் தானே. ஏனெனில் சுலபமாக கிடைப்பதுதான் பிறப்புரிமை. கடினமாக இருக்காது. உலகினர் இயலாது என்பர் ஆனால் நீங்கள் இயலாததையும் சுலபமாக்கி விட்டீர்கள்.

புதியதாக வந்துள்ள குழந்தைகள் முதல் முறையாக வந்திருப்பவர்கள் கை உயர்த்துங்கள் புதிய குழந்தைகள் வந்துள்ளீர்கள் நல்லது முதன் முறையாக வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள் ஏனெனில் பாப்தாதா சொல்கின்றார் லேட்டாக வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏனெனில் பாப்தாதா சொல்கின்றார் லேட்டாக வந்துள்ளீர்கள் ஆனாலும் டூ லேட்டாக வரவில்லை மேலும் புதிய குழந்தைகளுக்கு பாப்தாதாவின் வரதானம் லாஸ்ட்டாக வந்தாலும் ஃபாஸ்ட்டாக முயன்று ஃபாஸ்ட்டாக முதல் டிவிசனில் வந்து விடலாம். முதல் நம்பர் அல்ல முதல் பிரிவில் வரலாம். ஆகவே புதிய குழந்தைகளுக்கு அவ்வாறு முதலில் வருமளவிற்கு தைரியம் உள்ளதா, கை உயர்த்துங்கள். பாருங்கள் டி.வியில் உங்கள் கைகள் தெரிகிறது நல்லது ! தைரியம் உள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள். தைரியம் இருந்தால் தந்தையின் உதவி எப்போதுமே இருக்கும். மேலும் பிராமண பரிவாரத்தில் அனைவரது சுபபாவனையும் சுபகாமனாவும் உங்கள் அனைவருக் கும் கூடவே இருக்கிறது. ஆகையால் யார் யார் முதலில் வந்துள்ளார்களோ பாப்தாதா மற்றும் பரிவாரத்தின் சார்பாக மீண்டும் பன்மடங்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். முதன் முறையாக வந்துள்ள உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி இருக்கிறதல்லவா. பாப்தாதா வதனத்தில் தாதியுடன் ஒரு ரிசல்ட்டை பார்த்தார். என்ன ரிசல்ட்டை பார்த்தார்? நீங்கள் அனைவரும் தெரிந்துள்ளீர்கள் நாம் எஜமான் மற்றும் பாலகன் என்பதை (ஏற்றுக் கொண்டீர்கள்) ஆம் தானே எஜமானும் பாலகனும் தானே அனைவரும் கை உயர்த்துங்கள். சிந்தித்து கை உயர்த்துங்கள். அப்படியே உயர்த்திவிடாதீர்கள். கணக்கு தர வேண்டும் நல்லது. கையை கீழே போடுங்கள் பாப்தாதா பார்க்கின்றார் பாலகன் என்ற நம்பிக்கை பெருமிதம் சுலபமாகவே உள்ளது. ஏனெனில் பாலகன் ஆனதால் தான் பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்று சொல்கின்றீர்கள். மேலும் நாள் முழுவதும் என்னுடைய பாபா என்னுடைய பாபா இதே நினைவில் வருகின்றது மறந்தாலும் இடையிடையே நினைவு வருகின்றது. சேவையிலும் பாபா பாபா என்ற சொல்லே இயல்பாக வாயிலிருந்து வெளிப்படுகின்றது. பாபா எனும் சொல் வரவில்லையெனில் ஞானத்தின் தாக்கம் இல்லை என்பதாகும். நீங்கள் செய்யும் சேவை எதுவாயினும் சொற்பொழிவு, கோர்ஸ், விதவிதமான தலைப்பில் பேசுவீர்கள், எதுவாயினும் உண்ûமான சேவையின் பலன் கேட்பவரும் நானும் பாபாவின் குழந்தை என்பதை அனுபவம் செய்ய வேண்டும். அவர்கள் வாயிலிருந்தும் பாபா பாபா எனும் சொல் வெளிப்பட வேண்டும். இங்கு ஏதோ சக்தி உள்ளது என்று சொல்லக்கூடாது. நன்றாக உள்ளது என்பதல்ல. எனது பாபா என்பதை அனுபவம் செய்ய வேண்டும். இதுவே சேவையின் உடனடி பலனாகும். பாலகன் எனும் நம்பிக்கை, பெருமிதம் நன்றாகவே உள்ளது. ஆனால் எஜமான் எனும் நம்பிக்கை பெருமிதம் வரிசைக்கிரமமாகவே உள்ளது. பாலகனும், எஜமானும் எனும் உணர்வு நடைமுறையில் நடத்தை மற்றும் முகத்தில் சில சமயம் தெரிகிறது சிலசமயம் குறைகிறது உண்மையில் நீங்கள் இரட்டை எஜமான். ஒன்று பாபாவின் பொக்கிஷங் களுக்கு எஜமான் அனைவரும் பொக்கிஷங்களுக்கு எஜமான் தானே? மேலும் தந்தை அனை வருக்கும் ஒரே மாதிரி கொடுத்துள்ளார். சிலருக்கு லட்சம், சிலருக்கு ஆயிரம் என்றல்ல அனை வருக்கும் அனைத்து பொக்கிஷமும் அளவிலாது கொடுத்துள்ளார். குறைவாக அல்ல. பாப்தாதா அனைவருக்கும் அனைத்து பொக்கிஷமும் ஒரேயளவில் கொடுத்துள்ளார். இரண்டாவது சுயராஜ்ய அதிகாரி நீங்கள் எனவே பாப்தாதா பெருமையுடன் சொல்கிறார் எனது ஒவ்வொரு குழந்தையும் ராஜா குழந்தை, நீங்கள் ராஜா குழந்தைகள் தானே. பிரஜை அல்ல. இராஜயோகியா, பிரஜா யோகியா? ராஜா யோகிதானே ஆக சுயராஜ்யத்தின் அதிகாரி. ஆனால் பாப்தாதா தாதியுடன் ரிசல்ட்டை பார்த்தார் - அதில் பாலகன் எனும் பெருமிதம் எவ்வளவு அதிகம் உள்ளதோ அதைவிட குறைவாகவே எஜமான் எனும் பெருமிதம் உள்ளது ஏன்? சுயராஜ்யத்தின் அதிகாரி எனும் பெருமிதம் சதா இருந்ததெனில் இடையிடையே வருகின்ற தடைகள் வராது. பொதுவாக பார்க்கும்பொழுது இன்னல்கள், தடைகள் வருவதற்கான ஆதாரமே மனம் தான் இன்னலுக்கு ஆளாகிறது எனவே தான் பாப்தாதாவின் மகா மந்திரமும் மன்மனாபவ என்பதாகும். தன் மனாபவ (உடல்) தன் மனாபவ (செல்வம்) அல்ல மன்மனாபவ சுயராஜ்ஜியத்தின் எஜமான் நீங்கள் என்றால் மனம் எஜமானாகாது. மனம் உங்களது சேவகன். ராஜா அல்ல. ராஜா என்றால் அதிகாரி. அடிமையை ராஜா என சொல்ல முடியாது. ரிசல்ட்டில் என்ன பார்த்தார்? மனதிற்கு எஜமான் நான் ராஜ்யதிகாரி. இந்த நினைவு இந்த ஆத்ம நிலை குறைவாக உள்ளது. எப்போதும் இருப்பதில்லை. முதல் பாடம் தான். நீங்கள் படித்த முதல் பாடம் என்ன? நான் ஆத்மா, பரமாத்மா பாடம் இரண்டாவது ஆனால் முதல் பாடம் நான் எஜமான் ராஜா இந்த கர்மேந்திரியங்களின் அதிகாரி ஆத்மா, சக்திசாலி ஆத்மா. சர்வசக்திகளும் ஆத்மாவின் இயல்பான குணங்கள். பாப்தாதா பார்க்கின்றார் நான் யார்? எப்படிப்பட்டவன் இந்த இயல்பான ஆத்மா சொரூபம் நினைவில் நிற்பது, நடப்பது, செயல்படுவது முகத்தின் மூலம் அனுபவம் செய்வது இன்னல்களை ஒதுக்குவது இவற்றில் கவனம் இப்போது குறைவு நான் ஆத்மா என்பது மட்டுமல்ல. எப்படிப்பட்ட ஆத்மா. நான் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மா என்பது நினைவிருந்தால் எந்த இன்னல் போன்ற தடைகளுக்கு எதிரில் வருவதற்கான சக்தியே இருக்காது இப்போதும் ரிசல்ட்டில் ஏதேனும் தடை இன்னல் தென்படுகின்றது தெரிகிறது ஆனால் நடத்தை முகத்தில் நம்பிக்கையின் பெருமிதம் ஆன்மீக பெருமை மேலும் தென்படி வேண்டும் இதற்கான மாளிக் எஜமான் எனும் பெருமிதத்தை மீண்டும் மீண்டும் சோதனை செய்க, சோதனை செய்ய ஒரு நொடி போதும் செயல் செய்தாலும் எந்த ஒரு செயலை ஆரம்பிக்கும் போதும் எஜமான் எனும் அதாரிட்டியுடன் கர்மேந்திரியங்கள் மூலம் செயல்படுபவன் கட்டுபடுத்தும் சக்தியும், ஆளுமை சக்தியும் உள்ள ஆத்மா நான் என நினைத்தும் ஆரம்பித்தேனா அல்லது சாதாரண செயலை ஆரம்பித்தேனா? இந்த நினைவுகளுடன் செயலை ஆரம்பிப்பது சாதாரணமாக செயலை ஆரம்பிப்பது இதனிடையே வேறுபாடு அதிகம் உள்ளது. சாதாரண ஒரு பதவியில் உள்ளவர்களே செயலை செய்யும்போது அவர்களது சீட்டில் நிலை பெற்று செயல்படு கின்றார்கள் அவ்வாறே தனது எஜமான் தன்மையெனும் சுயராஜ்யதிகாரி இருக்கையில் அமர்ந்து ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். இந்த எஜமான் எனும் அத்தாரிட்டியின் சோதனையை மேலும் அதிகரியுங்கள் இந்த எஜமான் அத்தாரிட்டியின் அடையாளம் எப்போதும் ஒவ்வொரு செயலும் டபுள் லைட் நிலையில் குஷியுடன் அனுபவம் ஆகும். வெற்றி சுலபமாக அனுபவம் ஆகும். இதுவரையிலும் கூட ஆங்காங்கே அதிகாரிக்கு பதிலாக அடிமை ஆகின்றனர். அடிமையின் அடையாளம் என்ன? மீண்டும் மீண்டும் சொல்வார்கள் எனது சம்ஸ்காரம், விரும்பவில்லை ஆனால் எனது சம்ஸ்காரம் எனது இயல்பு சுபாவம்.

பாப்தாதா முன்பே கூறியுள்ளார் எனது சம்ஸ்காரம் எனது இயல்பு என்று சொல்கின்றீர்களே இந்த பலவீனமான சம்ஸ்காரம் உங்களுடையதா? எனது சம்ஸ்காரமா? இது இடையில் வந்த இராவணன் சம்ஸ்காரம் இராவணனின் பிரசாதம் அதனை எனது என்று சொல்வதே தவறு பாபாவின் சம்ஸ்காரம் எதுவோ அதுவே உங்களது சம்ஸ்காரம் இவ்வாறு எனது எனது எனும் போது அது அதிகாரி ஆகி நீங்கள் அடிமை ஆகின்றீர்கள். தந்தைக்கு நிகராக ஆக வேண்டுமெனில் அது எனது சம்ஸ்காரம் அல்ல. பாபாவின் சம்ஸ்காரம் எதுவோ அதுவே எனது சம்ஸ்காரம் பாபாவின் சம்ஸ்காரம் என்ன? விஸ்வ கல்யாணகாரி சுபபாவனை நல் விருப்பம் வைப்பவர் அந்த சமயம் பாபாவின் சம்ஸ்காரத்தில் எதிரில் கொண்டு வாருங்கள். இலட்சியம் பாப்சமான் ஆக வேண்டும் ஆனால் இலட்சணமோ இராவணனுடையது. கலப்படம் ஆகிறதே பாபாவின் சம்ஸ்காரம் சில எனது முந்தைய சம்ஸ்காரம் சில இரண்டும் கலந்ததால் இடையூறு ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. மேலும் சம்ஸ்காரம் உருவானது எப்படி, அது எல்லோருக்கும் தெரியும். மனம் புத்தியின் எண்ணம் மற்றும் செயலால் சம்ஸ்காரம் அமைகிறது முதலில் மனம் நினைக் கின்றது, புத்தி உதவி செய்கின்றது. பிறகு நல்லதோ, கெட்டதோ சம்ஸ்காரம் ஆகிறது பாப்தாதா தாதியுடன் ரிசல்ட்டை பார்க்கும் போது எஜமான் எனும் இயல்பான பெருமிதம் பாலகன் எனும் பெருமிதத்துடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. எனவே சமாதானம் செய்வதற்காக யுத்தம் செய்ய வேண்டியிருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். பிராமணர்கள் தான் இடையிடையே போர் புரியும் சத்திரியன் ஆகின்றார்கள். சத்திரியன் ஆகக் கூடாது. பிராமணன் தேவதை ஆக வேண்டும். சத்திரியர்கள் நிறைய வருவார்கள். அவர்கள் பின்னால் வருவார்கள் நீங்கள் அதிகாரி ஆத்மாக்கள் ரிசல்ட்டை கேட்டீர்களா எனவே மீண்டும் மீண்டும் நான் யார் என்பதை நினைவில் கொண்டு வாருங்கள் இருக்கின்றீர்கள் என்பதல்ல அதனை நினைவின் சொரூபத்தில் கொண்டு வாருங்கள். சரியா நல்லது ரிசல்ட்டை கேட்டீர்கள் இப்போது இன்னல், தடை வீண் எண்ணம், மன பதட்டம், வீண் செயல், வீண் சம்மந்தம், வீண் நினைவு இந்த அனைத்து பெயரை யும் அழியுங்கள், அழிக்க வையுங்கள் சரிதானே, செய்வீர்களா? செய்வோம் எனில் திடமான எண்ணம் எனும் கை உயர்த்துங்கள். இந்த கையை உயர்த்துவது சாதாரணமாக விட்டது. எனவே கை உயர்த்த சொல்லவில்லை மனதில் திட எண்ணம் என்ற கை உயர்த்துங்கள். இந்த உடலில் கை அல்ல. அது அனேகம் பார்த்தாயிற்று. எப்போது அனைவர் மனதிலும் திட எண்ணம் எனும் கை உயருமோ அப்போதே உலகின் மூலை முடுக்கெல்லாம் அனைவரது மகிழ்ச்சியெனும் கை உயரும். நமது சுக வள்ளல் அமைதியின் வள்ளல் தந்தை வந்து விட்டார் எனும் (தந்தையின் வெளிப்பாட்டிற்கான முழக்கம் எழும்பும்) எழுப்பினீர்களா? உறுதியா? ஆசிரியர்கள் எழுப்பினீர் களா? பாண்டவர்கள் எழுப்பினீர்களா? உறுதியா? நல்லது தேதி குறித்தீர்களா? தேதி குறிக்கவில்லையா? எவ்வளவு நாட்கள் வேண்டும்? ஒரு வருடமா, 2 வருடமா? எத்தனை வருடம் வேண்டும்? பாப்தாதா கூறு கின்றார் அவரவர் தனது சக்திக்கேற்ப முன்னேற்றத்தின் வேகத்திற்கேற்ப முழுமை யெனும் நாளை தன்க்குத்தானே குறியுங்கள். பாப்தாதா இப்போதே செய்யுங்கள் என சொல்வார். ஆனால் அவரவர் சக்திக்கேற்ப முயற்சிக்கேற்ப தேதி குறித்து சமயத்திற்கேற்ப மனம், சொல், செயல் சம்மந்தத்தில் நிலையின் முன்னேற்றம் எப்படி உள்ளதென? சோதனையும் செய்யுங்கள் ஏனெனில் தேதி குறித்து விட்டால் தானாகவே கவனம் செல்லும்.

மேலும் நாலாபுறத்திலும் அனைவரிடமிருந்தும் செய்திகளும் வந்தன. இமெயிலும் வந்தன. பாப்தாதாவிடம் இமெயில் வருவதற்கு முன்பாகவே வந்து சேர்ந்து விடுகின்றது. உள்ளமெனும் இமெயில் மிகவும் வேகமானது. அது முதலில் வந்து விடுகின்றது. யாரெல்லாம் அன்பு நினைவுகள், தன் மனோநிலை குறித்தும் சேவை குறித்தும் செய்தி அனுப்பினீர்களோ அவற்றையெல்லாம் பாப்தாதா ஏற்றுக் கொண்டார். அனைவரும் அன்பு நினைவுகளை மிகுந்த ஊக்கம், உற்சாகத்துடன் அனுப்பியுள்ளீர்கள். அவர்கள் அனைவருக்கும் பாப்தாதா உள்நாடு, வெளிநாடு எங்கும் பதிலுக்கு அன்பு நினைவுகள் ஆசிகளுடன் அன்பும், சக்தியும் நிறைந்த பேரொளியை வழங்கிக் கொண்டிருக் கின்றார். அனைத்தும் கேட்டீர்கள் கேட்பது எவ்வளவு சுலபமோ அவ்வாறே கேட்பதிலிருந்து விடுபட இனிய அமைதியான மனோ நிலையில் தான் விரும்பிய பொழுது எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் எஜமானனாகி முதலில் மனதிற்கு எஜமானாகுங்கள் எனவே தான் மனதை வென்றவர் உலகை வென்றவர் என்று சொல்லப்படுகின்றது. இப்போது கேட்டீர்கள், பார்த்தீர்கள் ஆத்மா ராஜா ஆகி மனம் புத்தி சம்ஸ்காரத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா? மனம் புத்தி சம்ஸ்காரம் மூன்றிற்கும் எஜமானனாகி கட்டளை பிறப்பியுங்கள். இனிய அமைதி என்று கட்டளை யிட்ட மாத்திரமே அதிகாரிக்கு மூன்றும் கட்டுப்படுகிறதா? இப்போதே அதிகாரி எனும் மனோ நிலையில் நிலை பெறுங்கள் (பாப்தாதா டிரில் செய்வித்தார்) நல்லது.

நாலாபுறமும் உள்ள சதா சுயமரியாதையில் உள்ளவர்கள் சத்தியத்தின் சக்தி சொரூபங்கள் தூய்மையின் சித்தி சொரூபங்கள் என்றென்றும் ஆடாது அசையாது உறுதியாக அனுபவிகள் தன்னை மாற்றி உலகை மாற்றுபவர்கள், சதா அதிகாரி நிலை மூலம் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை மூலமாக அதிகாரம் பெற்றுக் கொண்டே நாலா புறமும் உள்ள பாப்தாதாவின் லக்கி, லவ்லி ஆத்மாக்களுக்கு பரமாத்மாவின் அன்பு நினைவுகள் மற்றும் உளப் பூர்வமாக ஆசிகளும் பெறும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு நமஸ்காரம்.

ஆசீர்வாதம்:
தன்னைத் தானே மாற்றியமைத்து உலகின் ஆதார மூர்த்தியாகி உயர் பதவிக்கு அதிகாரி ஆகுக!

உயர் பதவி பெற பாப்தாதாவின் அறிவுரை இதுவே முதலில் தன்னை மாற்றுங்கள் தன்னை மாற்றுவதை விடுத்து இன்னல்களும், பிற ஆத்மாக்களும் மாற வேண்டும் என நினைப்பது இவர் மாறட்டும் இவர் உதவி செய்யட்டும் என்று ஏதேனும் ஆதாரத்தை தேடினால் அதன் பலனும் ஆதாரத்திலேயே அமையும். எத்தனை பேர் ஆதாரமாக இருந்து மாற்றுவார்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் சேமிப்பு கணக்கின் பங்கு சென்று சேரும் எனவே நானாகவே என்னை மாற்றிக் கொள்வேன் எனும் இலட்சியத்தை சதா வையுங்கள். நானே உலகின் ஆதார மூர்த்தி யாவேன்.

சுலோகன்:
குழுவில் ஊக்கம் உற்சாகத்துடன் உயர்ந்த எண்ணங்களின் வெற்றியும் இணைந்தே உள்ளது.


அவ்யக்த சமிக்ஞை - அசரீரி அல்லது விதேகி ஸ்திதியின் பயிற்சியை அதிகப்படுத்துங்கள்

பலவீனமான ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றி சக்தியூட்டுவதைப் போன்று தன்னை உடலில் இருந்து விடுபட்ட அசரீரி ஆத்மா என உணரும் போது இந்த சாட்சி நிலை சக்தி நிரப்புகின்ற வேலை செய்கின்றது. எவ்வளவு நேரம் சாட்சி நிலை பெறுவீர்களோ அவ்வளவு நேரமும் தந்தையின் துணையும் நினைவு வரும் அதாவது தந்தையும் துணையாக இருக்கின்றார்.