10-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தையின் மூலம்
உங்களுக்கு எந்த ஒரே (அத்துவைதம்) வழி கிடைத்துக்
கொண்டிருக்கிறதோ அதன் படி நடந்து கலியுக மனிதர்களை சத்யுக
தேவதைகளாக ஆக்கக் கூடிய மேன்மையான காரியம் செய்ய வேண்டும்.
கேள்வி:
அனைத்து மனிதர்களும் ஏன்
துக்கமானவர்களாக ஆகியிருக்கின்றனர்? அதற்கான மூல காரணம் என்ன?
பதில்:
இராவணன் அனைவருக்கும் சாபம்
கொடுத்து விட்டதினால் தான் அனைவரும் துக்க மானவர்களாக
ஆகிவிட்டனர். தந்தை ஆஸ்தி கொடுக்கின்றார், இராவணன் சாபம்
கொடுக்கிறது என்பதை உலகத்தினர் அறியவில்லை. தந்தை ஆஸ்தி
கொடுத்ததால் தான் பாரதவாசிகள் இந்த அளவிற்கு சுகமானவர்களாக,
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகியிருந்தனர், பூஜைக்குரியவர்
களாக உள்ளனர். சாபம் அடைவதனால் பூஜாரிகளாக ஆகிவிடுகின்றனர்.
ஓம் சாந்தி.
குழந்தைகள் இங்கு மதுவனத்திற்கு பாப்தாதாவிடம் வருகின்றனர்.
மண்டபத்திற்குள் (ஹால்) நுழைகின்ற பொழுது முதலில் சகோதர,
சகோதரிகள் அமர்ந்திருப்பதை பார்க்கிறீர்கள், பிறகு பாப்தாதா
வந்திருப்பதை பார்க்கிறீர்கள் எனும் பொழுது தந்தையின் நினைவு
வந்து விடுகிறது. நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள்,
பிராமணர்கள் மற்றும் பிராமணிகள். அந்த பிராமணர்கள் பிரம்மா
பாபாவை அறியவேயில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் -
எப்பொழுது தந்தை வருகின்றாரோ அப்பொழுது பிரம்மா, விஷ்ணு,
சங்கரும் அவசியம் தேவை. திரிமூர்த்தி சிவ பகவானின் மகாவாக்கியம்
என்றும் கூறுகின்றனர். இப்பொழுது மூவரின் மூலமும் (மகா
வாக்கியம்) என்று கூறமாட்டார்கள் அல்லவா! இந்த விசயங்களை நல்ல
முறை யில் புத்தியில் தாரணை செய்ய வேண்டும். எல்லையற்ற
தந்தையிடமிருந்து அவசியம் சொர்க்கத் தின் ஆஸ்தி கிடைக்கிறது,
ஆகையால் அனைத்து பக்தர்களும் பகவானிடத்தில் என்ன விரும்பு
கின்றனர்? ஜீவன் முக்தி. இப்பொழுது இருப்பது ஜீவன் பந்தனம்.
வந்து இந்த பந்தனத்திலிருந்து விடுவியுங்கள் என்று அனைவரும்
தந்தையை நினைவு செய்கின்றனர். பாபா வந்திருக்கின்றார் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். கல்ப
கல்பத்திற்கும் தந்தை வருகின்றார். நீங்கள் தான் தாய், தந்தை
...... என்று அழைக்கவும் செய்கின்றனர். ஆனால் இதன் பொருளை
யாரும் அறியவில்லை. அழைப்பு நிராகார தந்தைக்காகத் தான் என்று
புரிந்து கொள் கின்றனர். பாடு கின்றனர், ஆனால் அடைவது எதுவும்
கிடையாது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அவரிடமிருந்து
ஆஸ்தி கிடைக்கிறது, பிறகு ஒரு கல்பத்திற்குப் பிறகு மீண்டும்
கிடைக்கும். தந்தை வந்து அரைக் கல்பத்திற்கான ஆஸ்தி
கொடுக்கின்றார், இராவணன் சாபம் கொடுக்கிறது என்பதை குழந்தைகள்
அறிவீர்கள். நாம் அனைவரும் சாபம் அடைந்திருக்கிறோம் என்பதை
உலகத்தினர் அறியவில்லை. இராவணனின் சாபம் ஏற்பட்டிருக்கிறது,
அதனால் தான் அனைவரும் துக்கமான வர்களாக இருக்கின்றனர்.
பாரதவாசிகள் சுகமானவர்களாக இருந்தனர் அப்போது இலட்சுமி -
நாராயணன் இருந்தார்கள். தேவதைகள் முன் சென்று தலை வணங்கு
கின்றனர். பூஜை செய் கின்றனர். ஆனால் சத்யுகம் எப்போது இருந்தது
என்பது யாருக்கும் தெரியாது. சத்யுகத்திற்கு மட்டுமே இலட்சம்
ஆண்டுகள் என்று காண்பித்து விட்டனர். அதன் பிறகு திரேதா,
துவாபர், கலியுகம் என்று கணக்கிட்டால் எத்தனை மனிதர்கள் (மக்கள்
தொகை) ஆகி விடுவர்! சத்யுகத்தில் மட்டுமே அதிக மனிதர்களாக
ஆகிவிடுவர். எந்த மனிதனின் புத்தியிலும் புரிதல் கிடையாது.
தந்தை வந்து புரிய வைக்கின்றார் - 33 கோடி தேவதைகள் என்றும்
பாடப் படுகிறது. அவர்கள் இவ்வாறு இலட்சம் ஆண்டுகளாக இருந்தனர்
என்பது கிடையாது. ஆக இதையும் மனிதர்களுக்குப் புரிய வைக்க
வேண்டும்.
பாபா நம்மை தூய புத்தியுடையவராக ஆக்குகின்றார் என்பதை இப்பொழுது
நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இராவணன் அசுத்த
புத்தியுடையவர்களாக ஆக்குகிறது. முக்கிய விசயம் இது வாகும்.
சத்யுகத்தில் இருப்பது தூய்மை, இங்கிருப்பது அசுத்தமாகும்.
இராம இராஜ்யம் எப்பொழு திலிருந்து? மற்றும் எதுவரை? என்பதும்
யாருக்கும் தெரியாது. இராவண இராஜ்யம் எப்பொழு திலிருந்து?
எதுவரை நடைபெறுகிறது? இங்கு தான் இராம இராஜ்யமும் இருந்தது,
இங்கேயே இராவண இராஜ்யமும் இருக்கிறது என்று
புரிந்திருக்கின்றனர். பல வழிமுறைகள் உள்ளன அல்லவா! எத்தனை
மனிதர்கள் இருக்கின்றார்களோ அவ்வளவு வழிமுறைகள் உள்ளன.
இப்பொழுது இங்கு குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரே வழி (அத்துவைதம்)
கிடைக்கிறது, அதை தந்தை தான் கொடுக்கின்றார். இப்பொழுது நீங்கள்
பிரம்மாவின் மூலம் தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
தேவதைகளின் மகிமை பாடப்படுகிறது - அனைத்து குணங்களும் நிறைந்த
வர்கள், 16 கலைகளிலும் முழுமையானவர்கள் ..... அவர்களும்
மனிதர்கள் தான், மனிதர்களின் மகிமை ஏன் பாடுகின்றனர்? அவசியம்
வேறுபாடு இருக்கும் அல்லவா! இப்பொழுது குழந்தை களாகிய நீங்களும்
வரிசைக்கிரமமான முயற்சியின் படி மனிதனை தேவதையாக்கும் கடமையை
கற்கிறீர்கள். கலியுக மனிதர்களை நீங்கள் சத்யுக தேவதைகளாக
ஆக்குகிறீர்கள், அதாவது சாந்திதாமம், பிரம்மாண்டத் திற்கு
மற்றும் உலகத்திற்கே எஜமானர்களாக ஆக்குகிறீர்கள், இது
சாந்திதாமம் கிடையாது அல்லவா! இங்கு காரியங்கள் அவசியம் செய்ய
வேண்டியிருக்கிறது. அது இனிமையான அமைதியான வீடாகும்.
ஆத்மாக்களாகிய நாம் இனிய வீடு, பிரம்மாண்டத்திற்கு எஜமானர்கள்
என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அங்கு
துக்கம், சுகத்திலிருந்து விடுபட்டு இருப்போம். பிறகு
சத்யுகத்தில் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறோம். இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் தகுதியானவர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். இலட்சியம், குறிக்கோள் மிகச் சரியாக
நமக்கு இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் யோக பலமுடையவர்கள்.
அவர்கள் புஜ பலமுடையவர்கள். நீங்களும் யுத்த மைதானத்தில்
இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் இரட்டை அகிம்சையாளர்களாக
இருக்கிறீர்கள். அவர்கள் இம்சை தருபவர்கள். காமம் தான் இம்சை
என்று கூறப்படுகிறது. இது இம்சை என்று சந்நியாசிகளும்
புரிந்திருக்கின்றனர், அதனால் தான் தூய்மையாகின்றனர். ஆனால்
உங்களைத் தவிர வேறு யாருக்கும் தந்தையின் மீது அன்பு கிடையாது.
நாயகன், நாயகிக்கிடையே அன்பு இருக்கும் அல்லவா! அந்த நாயகன்
நாயகிகள் ஒரே ஒரு பிறப்பிற்காக பாடப்படுகின்றனர். நீங்கள்
அனைவரும் நாயகனாகிய எனக்கு நாயகிகளாக இருக்கிறீர்கள். பக்தி
மார்க்கத்தில் நாயகனாகிய என் ஒருவனைத் தான் நினைவு செய்து
வந்தீர்கள். இப்பொழுது நான் கூறுகிறேன் - இந்த கடைசி பிறவியில்
தூய்மையாகுங்கள் மற்றும் யதார்த்த முறையில் நினைவு செய்யுங்கள்,
நினைவு செய்வதன் மூலம் தான் நீங்கள் விடுபட்டு விடுவீர்கள்.
சத்யுகத்தில் நினைவு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
துக்கத்தின் பொழுது தான் அனைவரும் நினைவு செய்கின்றனர். இது
நரகமாகும். இதை சொர்க்கம் என்று கூறமாட்டோம் அல்லவா!
செல்வந்தர்களாக இருக்கும் பெரிய மனிதர்கள் நமக்கு இதுவே
சொர்க்கம் என்று நினைக்கின்றனர். விமானம் போன்ற அனைத்து
பொருட்களும் இருக்கின்றன, எவ்வளவு குருட்டு நம்பிக்கையுடன்
இருக்கின்றனர்! நீங்கள் தான் தாய், தந்தை ....... என்று
பாடுகின்றனர். ஆனால் எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. எந்த
ஒரு சுகமான உலகம் கிடைத்தது? என்பதை யாரும் அறியவில்லை. பேசுவது
ஆத்மா அல்லவா! ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள் -
நமக்கு சுகமான உலகம் கிடைக்கவிருக்கிறது. அதன் பெயரே சொர்க்கம்,
சுகதாமம். சொர்க்கம் அனை வருக்கும் மிக இனிமையாக தோன்றுகிறது.
சொர்க்கத்தில் தங்கம், வைரத்தினால் எவ்வளவு மாளிகைகள் இருந்தன!
என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்திலும்
அளவற்ற செல்வம் எவ்வளவு இருந்தது! அதன் மூலம் தான் சோமநாத
கோயில் கட்டினர். ஒவ்வொரு சிலையும் இலட்சம் ரூபாய்
மதிப்புடையதாக இருந்தது. அவைகள் அனைத்தும் எங்கு சென்று விட்டன?
எவ்வளவு கொள்ளையடித்து சென்றனர்! முஸ்லீம் கொண்டு சென்று மசூதி
போன்ற வைகளில் பயன்படுத்தினர், அந்த அளவிற்கு அளவற்ற செல்வம்
இருந்தது. இப்பொழுது நாம் தந்தையின் மூலம் மீண்டும்
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது
குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்கிறது. நமது மாளிகை
தங்கத்தில் இருக்கும். வாசற் கதவிலும் பதிக்கப்பட்டிருக்கும்.
ஜெயினர்களின் கோயில்களிலும் இவ்வாறு உருவாக்கப் பட்டிருக்கும்.
முன்பு இருந்த வைரம் போன்று இப்பொழுது கிடையாது அல்லவா! நாம்
தந்தை யிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறோம்
என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். சிவபாபா வருவதே
பாரதத்தில் தான். பாரதத்திற்குத் தான் சிவபகவானின் சொர்க்க
ஆஸ்தி கிடைக்கிறது. கிறிஸ்துவிற்கு 3 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு
பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர்.
யார் இராஜ்யம் செய்தனர்? என்பது யாருக்கும் தெரியாது. மற்றபடி
பாரதம் மிகவும் பழமையானது என்பதை புரிந்து வைத்திருக்கின்றனர்.
ஆக இது தான் சொர்க்கமாக இருந்தது அல்லவா! சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்யக் கூடிய தந்தை என்று பாபாவை கூறுகின்றனர். அவசியம் தந்தை
வந்திருக்க வேண்டும், அவர் மூலம் தான் நீங்கள் சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக ஆகியிருக்க வேண்டும். ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டிற்குப்
பிறகும் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள், அரைக்
கல்பத்திற்குப் பிறகு மீண்டும் இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது.
சித்திரங்களில் இவ்வாறு தெளிவாக காண்பியுங்கள், இலட்சம்
ஆண்டுகள் என்பது புத்தியிலிருந்து நீங்கி விட வேண்டும்.
லெட்சுமி நாராயணன் ஒருவர் கிடையாது, அவர்களது இராஜ்யம்
இருக்கும் அல்லவா! பிறகு அவர்களது குழந்தைகள் இராஜாவாக
ஆகியிருப்பர். இராஜாக் களாக பலர் ஆவார்கள் அல்லவா! முழு
மாலையும் உருவாக்கப் பட்டிருக்கிறது. மாலையைத் தான்
நினைக்கின்றனர் அல்லவா! யார் தந்தைக்கு உதவியாளர்களாக ஆகி
தந்தையின் சேவை செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் மாலை
உருவாகிறது. அவர்கள் தான் முழு சக்கரத்திலும் வருகின்றனர்,
பூஜைக்குரிய மற்றும் பூஜாரிகளாக ஆகின்றனர். அவர் களது நினைவுச்
சின்னம் இதுவாகும். நீங்கள் பூஜைக்குரிய நிலையிலிருந்து
பூஜாரிகளாக ஆகிறீர்கள். பிறகு உட்கார்ந்து தனது மாலையை பூஜை
செய்கிறீர்கள். முதலில் மாலை தொட்டு தலைவணங்குவர். கடைசியில்
தான் மாலையை உருட்ட ஆரம்பிப்பர். நீங்களும் முழு சக்கரத் திலும்
வருகிறீர்கள், மீண்டும் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகிறீர்கள்.
இந்த ரகசியத்தை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். மனிதர்கள் சிலர்
சிலரது பெயரில், சிலர் வேறு சிலரது பெயரில் மாலை
உருட்டுகின்றனர்! அறிந்து கொள்வது எதுவும் கிடையாது. இப்பொழுது
உங்களிடத்தில் மாலையின் முழு ஞானமும் இருக்கிறது. வேறு
யாரிடத்திலும் இந்த ஞானம் கிடையாது. இவர்கள் யாருடைய மாலையை
உருட்டுகின்றனர் என்று கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள
மாட்டார்கள். யார் தந்தைக்கு உதவியாளர்களாக ஆகி சேவை
செய்கிறார்களோ அவர்களுக்கான மாலை இதுவாகும். இந்த நேரத்தில்
அனைவரும் அசுத்தமாக இருக்கின்றனர், யார் சுத்தமாக (தூய்மையாக)
இருந்தார்களோ அவர்கள் இங்கு வந்து வந்து (பல பிறவிகள் எடுத்து)
இப்பொழுது தூய்மை இல்லாமல் ஆகிவிட்டனர். மீண்டும் அனைவரும்
வரிசைக்கிரமமாக செல்வார்கள். வரிசைக்கிரமமாக வருகின்றனர்,
வரிசைக்கிரமமாக செல்கின்றனர்! எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய
விசயமாக இருக்கிறது! இது மரமாகும். எவ்வளவு கிளைகள், இலைகள்
உள்ளன! இப்பொழுது இந்த முழு மரமும் அழிந்து போக வேண்டும். பிறகு
உங்களது அஸ்திவாரம் போடப்படும். நீங்கள் இந்த மரத்தின்
அஸ்திவாரமாக இருக்கிறீர்கள். இதில் சூரியவம்சி, சந்திரவம்சி
இருவரும் இருக்கிறீர்கள். சத்யுகம், திரேதாவில் யார் இராஜ்யம்
செய்தார்களோ அவர்களது தர்மம் இப்பொழுது கிடையாது, சிலைகள்
மட்டுமே இருக்கின்றன. யாருக்கு சிலைகள் உள்ளனவோ அவர்களது
சரித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! இந்த பொருள்
இலட்சம் ஆண்டு பழமையானது என்று கூறிவிடுகின்றனர். உண்மையிலும்
பழமையிலும் பழமையானது ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் ஆகும்.
அதற்கு முன் வேறு எதுவும் இருக்கவே முடியாது. மற்ற அனைத்தும்
2500 ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்கும், கீழே தோண்டி
எடுக்கின்றனர் அல்லவா! பக்தி மார்க்கத்தில் யார் பூஜை
செய்கிறார்களோ அவர்கள் பழைய பொருட்களை எடுக் கின்றனர். ஏனெனில்
பூகம்பத்தின் பொழுது கோயில் போன்ற அனைத்தும் உள்ளே சென்று
விடுகிறது, பிறகு புதிதாக உருவாக்கப்படுகிறது. இப்பொழுது
காலியாக இருக்கக் கூடிய தங்கம், வைரச் சுரங்கங்கள் அங்கு
மீண்டும் நிறைந்து விடும். இந்த அனைத்து விசயங்களும் இப்பொழுது
உங்களது புத்தியில் இருக்கிறது அல்லவா! தந்தை உலகின் சரித்திர
பூகோளத்தை புரிய வைத்திருக்கின்றார். சத்யுகத்தில் எவ்வளவு
குறைவான மனிதர்கள் இருப்பர்! பிறகு அதிகமாகிறது. ஆத்மாக்கள்
அனைத்தும் பரந்தாமத்திலிருந்து வருகின்றன. ஆத்மாக்கள் வந்து
கொண்டே இருப்பதால் மரம் வளர்ச்சியடைகிறது. பிறகு எப்பொழுது
இற்று போன நிலை ஏற்பட்டு விடுகிறதோ அப்பொழுது இராமர் இருந்தால்
என்ன! இராவணன் இருந்தால் என்ன! இது தான் குடும்பம் என்று
பாடுகின்றனர். பல தர்மங்கள் இருக்கிறது அல்லவா! நமது குடும்பம்
எவ்வளவு சிறியதாக இருக்கிறது! இது பிராமணர்களுக்கான பரிவாரம்
ஆகும். அங்கு (உலகில்) எவ்வளவு தர்மங்கள் உள்ளன, மக்கள் தொகை
கூறுகிறது அல்லவா! அவர்கள் அனைவரும் இராவண வம்சத்தினர்கள்.
இவர்கள் அனைவரும் செல்வார்கள். பாக்கி மிகக் குறைவானவர்கள் தான்
இருப்பார்கள். இராவண வம்சத்தினர்கள் சொர்க்கத்திற்கு
வரமாட்டார்கள். அனைவரும் முக்கிதாமத்திலேயே இருப்பார்கள்.
மற்றபடி படிக்கக் கூடிய நீங்கள் மட்டுமே வரிசைக்கிரமமாக
சொர்க்கத்திற்கு வருவீர்கள்.
அந்த நிராகார மரம் எப்படி இருக்கிறது? இந்த மனித சிருஷ்டி மரம்
எப்படி இருக்கிறது? என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். இது உங்களது புத்தியில் இருக்கிறது.
படிப்பில் கவனம் செலுத்தவில்லையெனில் தேர்வில் தோல்வியடைந்து
விடுவீர்கள். படித்து மற்றும் கற்பித்துக் கொண்டேயிருந்தால்
குஷியும் ஏற்படும். ஒருவேளை விகாரத்தில் விழுந்து விட்டால்
மற்ற அனைத்தையும் மறந்து விடுவீர்கள். ஆத்மா எப்பொழுது தூய
தங்கமாக ஆகிறதோ அப்பொழுது தான் அதில் தாரணை நன்றாக ஏற்படும்.
தங்கப் பாத்திரம் என்றால் தூய்மையாக இருப்பதாகும். ஒருவேளை
யாராவது தூய்மை இல்லாதவராகி விட்டால் ஞானம் கூற முடியாது.
இப்பொழுது நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். இறைதந்தை
சிவபாபா ஆத்மாக் களாகிய நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றார்
என்பதை அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாம் இந்த
கர்மேந்திரியங்களின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
கற்பிக்கக் கூடியவர் தந்தை ஆவார், இப்படிப்பட்ட பாடசாலை முழு
உலகில் வேறு எங்கு இருக்க முடியும்! அவர் இறை தந்தையாக
இருக்கின்றார், ஆசிரியராக இருக்கின்றார், சத்குருவாகவும்
இருக்கின்றார். அனை வரையும் திரும்பி அழைத்துச் செல்வார்.
இப்பொழுது நீங்கள் தந்தையின் எதிரில் அமர்ந்திருக் கிறீர்கள்.
நேரடியாக முரளி கேட்பதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது!
எப்படி இந்த டேப் மிஷின் உருவாகி யிருக்கிறதோ இது ஒருநாள்
அனைவரிடத்திலும் வந்து விடும். குழந்தைகளின் சுகத்திற்காகவே
தந்தை இப்படிப்பட்ட பொருட்களை உருவாக்குகின்றார். ஒன்றும்
பெரிய விசய மில்லை அல்லவா! இவர் கருநீலமுடைய அரசர் அல்லவா!
முதலில் தூய்மையாக (வெள்ளை யாக) இருந்தார், இப்பொழுது
கருநீலமாக ஆகிவிட்டார், அதனால் தான் சியாம் சுந்தர் என்று
கூறுகின்றனர். நாம் அழகாக இருந்தோம், இப்பொழுது அசுத்தமாக
ஆகிவிட்டோம், மீண்டும் அழகாக ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஏன் ஒருவர் மட்டும் ஆகின்றார்? ஒரே ஒருவரை மட்டும் ஏன் பாம்பு
தீண்டியது? பாம்பு என்று மாயையைக் கூறப்படுகிறது அல்லவா!
விகாரத்தில் செல்வதன் மூலம் அசுத்தமாக ஆகிவிடுகிறீர்கள்.
எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும்! எல்லையற்ற தந்தை
கூறுகின்றார் - இல்லறத்தில் இருந்தாலும் இந்த கடைசி பிறவி யில்
எனக்காக தூய்மையாகுங்கள். குழந்தைகளிடத்தில் இவ்வாறு
யாசிக்கிறேன். தாமரை மலர் போன்று தூய்மையாக ஆகுங்கள், மற்றும்
என்னை நினைவு செய்தால் இந்த கடைசிப் பிறவியில் தூய்மையாக
ஆவீர்கள் மற்றும் தூய்மையாக இருப்பதன் மூலம் பழைய விகர்மங்களும்
அழிந்து விடும். இது யோக அக்னியாகும். இதன் மூலம் ஜென்ம
ஜென்மங்களுக்கான பாவங்கள் எரிந்து விடும். சதோ
பிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோவிற்கு வருகிறீர்கள் எனில்
கலைகள் குறைந்து கொண்டே செல்கிறது. கறைகள் படிந்து கொண்டே
செல்கிறது. என் ஒருவனை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று
இப்பொழுது தந்தை கூறுகின்றார். மற்றபடி நதிகளில் குளிப்பதனால்
தூய்மை ஆகிவிடமாட்டீர்கள். தண்ணீரும் தத்துவம் அல்லவா! 5
தத்துவங்கள் என்று கூறப்படு கிறது. இந்த நதிகள் எப்படி பதீத
பாவனியாக ஆக முடியும்? நதிகள் கடலிலிருந்து உருவாகின்றன.
முதலில் கடல் தான் பதீத பாவனியாக ஆக வேண்டும் அல்லவா! நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) வெற்றி மாலையில் வருவதற்காக தந்தைக்கு உதவியாளர்களாக ஆகி
சேவை செய்ய வேண்டும். ஒரு நாயகனுடன் உண்மையான அன்பு வைக்க
வேண்டும். ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்.
2) தனது மிகச் சரியான இலட்சியம், குறிக்கோளை முன் வைத்து
முழுமையான முயற்சி செய்ய வேண்டும். இரட்டை அகிம்சையாளராகி
மனிதனை தேவதையாக்கும் சிரேஷ்ட காரியம் செய்து கொண்டே இருக்க
வேண்டும்.
வரதானம்:
வெற்றியெனும் பெருமிதத்துடன் என்றென்றும் மலர்ந்த முகத்துடன்
அனைத்து ஈர்ப்புகளிலிருந்தும் விடுபட்டவராகுக
வெற்றி ரத்தினங்களின் நினைவாக தந்தையின் கழுத்தில் மாலையாக
இன்று வரையிலும் பூஜை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே என்றென்றும்
தந்தையின் கழுத்தில் மாலையாக விளங்கும் வெற்றி ரத்தினம் எனும்
பெருமிதம் இருக்கட்டும். நாம் உலகிற்கே எஜமானரின் குழந்தைகள்.
நமக்கு கிடைத்தது வேறு எவருக்கும் கிடைக்க முடியாது. இந்த
குஷியும் பெருமிதமும் சதா உடனிருந்தால் எந்தவித
ஈர்ப்பிலிருந்தும் விலகியிருப்பீர்கள். சதா வெற்றி யாளரே
என்றென்றும் முக மலர்ச்சியுடனிருப்பார். ஒரு தந்தையின் நினைவின்
ஈர்ப்பில் மட்டுமே ஈர்க்கப்படுவார்.
சுலோகன்:
ஒருவர் நினைவில் மூழ்குவதே ஏகாந்தவாசி ஆவதாகும்.
அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும்
ஏகாக்ரதாவை தனதாக்குங்கள்
இப்போது அனைவரும் ஒன்றினைந்து ஒருவருக்கொருவர் தைரியம் கொடுத்து
இறுதி நேரத்தை அருகே கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் வையுங்கள்.
ஆத்மாக்களுக்கு முக்தி கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் இந்த எண்ணம்
செயலில் வரும்போதே அது நிகழும். எங்கு ஒற்றுமை, உறுதித் தன்மை
இருக்குமோ அங்கே நடக்காத காரியமும் நடந்தேறும்..