10-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தனது
முன்னேற்றத்திற்காக தினந்தோறும் அன்றைய கணக்கைப் பாருங்கள் -
முழு நாளிலும் நடத்தை எப்படி இருந்தது? யக்ஞத்திற்கு நேர்மையாக
இருந்தேனா? என சோதித்துப் பாருங்கள்.
கேள்வி:
எந்தப் குழந்தைகள் மீது தந்தைக்கு
மரியாதை இருக்கிறது? அந்த மரியாதையின் அடையாளம் என்ன?
பதில்:
எந்த குழந்தைகள் தந்தையிடம்
உண்மையானவராக, யக்ஞத்திற்கு நேர்மையாக, எதையும் மறைக்காதவராக
இருக்கின்றனரோ, அந்தக் குழந்தைகள் மீது தந்தைக்கு மரியாதை
இருக்கிறது. மரியாதை இருக்கும் காரணத்தால் செல்லமாக அன்புடன்
அவர்களை மேலே தூக்கி விடுகிறார், சேவைக்கும் அனுப்பி வைக்கிறார்.
குழந்தைகளுக்கு உண்மையைச் சொல்லி ஸ்ரீமத் (உயர்ந்த வழி)
எடுத்துக் கொள்ளும் புத்திசாலித்தனம் இருக்க வேண்டும்.
பாடல்:
சபையில் எழுந்த தீபம். . . .
ஓம் சாந்தி.
இப்போது இந்த பாடல் தவறாக உள்ளது, ஏனென்றால் நீங்கள் தீபம்
அல்ல. ஆத்மாவை உண்மையில் தீபம் என சொல்லப்படுவதில்லை. பக்தர்கள்
பல பெயர்களை வைத்து விட்டனர். தெரியாத காரணத்தால் தெரியாது,
தெரியாது என சொல்லவும் செய் கின்றனர், எங்களுக்குத் தெரியாது,
நாங்கள் நாஸ்திகர்கள். என்றாலும் கூட எந்தப் பெயர் தோன்றுகிறதோ
அதனை வைத்து விடுகின்றனர். பிரம்மம், ஜோதி, கல், முள் இவைகளில்
கூட பரமாத்மா இருப்பதாக சொல்லி விடுகின்றனர், ஏனெனில் பக்தி
மார்க்கத்தில் யாரும் தந்தையை சரியாகத் தெரிந்து கொள்ள
முடிவதில்லை. தந்தையே வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்க
வேண்டியுள்ளது. சாஸ்திரங்களில் கூட தந்தையைப் பற்றிய அறிமுகம்
இல்லை, எனவே நாஸ்திகர் என்று கூறப் படுகிறது. இப்போது
குழந்தைகளுக்கு தந்தை அறிமுகம் கொடுத்துள்ளார், ஆனால் தன்னை
ஆத்மா எனப் புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்வதில் மிகவும்
புத்தியின் வேலை உள்ளது. இந்த சமயம் புத்தி கல்லாக உள்ளது.
ஆத்மா வில் தான் புத்தி உள்ளது. கர்மேந்திரியங்கள் மூலம்
ஆத்மாவின் புத்தி தங்கம் போன்று உள்ளதா அல்லது கல்லாக உள்ளதா
என்பது தெரிந்து விடும். அனைத்தின் ஆதாரம் ஆத்மாவில் உள்ளது.
மனிதர்கள் ஆத்மாவே பரமாத்மா, அதில் எதுவும் ஒட்டாது, ஆகவே என்ன
வேண்டுமானலும் செய்யுங்கள் என சொல்லி விடுகின்றனர். மனிதர்களாக
இருந்தும் தந்தையைத் தெரிந்து கொள்ளவில்லை. மாயையாகிய இராவணன்
அனைவரின் புத்தியையும் கல்லாக்கி விட்டது என்று தந்தை
சொல்கிறார். நாளுக்கு நாள் அதிகமாக தமோபிரதானமாகி வருகின்றனர்.
மாயையின் வேகம் அதிகமாக உள்ளது, திருந்துவதே இல்லை. இரவில் முழு
நாளுக்கான தனது கணக்கு வழக்கைப் பாருங்கள் - நான் என்ன செய்தேன்?
என்று. நாம் தேவதைகள் போல உணவு உண்டோமா? நடத்தை சட்டப்படி
இருந்ததா? அல்லது அனாதை கள் போல இருந்ததா? இவ்வாறு
குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது. தினந் தோறும் தனது
கணக்கு வழக்கைப் பார்க்காவிட்டால் உங்களுடைய முன்னேற்றம்
ஏற்படாது. பலரை மாயை அடித்து விடுகிறது. இன்று என்னுடைய
புத்தியின் தொடர்பு இன்னாருடைய பெயர் ரூபத்தில் போனது, இன்று
இந்த பாவ கர்மம் நடந்தது என்று எழுதுகின்றனர். இப்படி உண்மையை
எழுதுபவர்கள் கோடியில் மிகச் சிலரே உள்ளனர். நான் யார், எப்படி
இருக்கிறேன் என என்னை யாரும் முழுமையாகத் தெரிந்து கொள்வதில்லை.
தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்தால்
கொஞ்சம் புத்தியில் ஏறும். நல்ல நல்ல குழந்தைகள் இருக்கின்றனர்,
மிகவும் நன்றாக ஞானம் சொல்கின்றனர், ஆனால் யோகம் (நினைவு)
கொஞ்சமும் இல்லை என தந்தை சொல்கிறார். முழுமையாக புரிந்து
கொள்ளவில்லை, புரிந்து கொள்ள முடிவதில்லை, ஆகையால் பிறருக்கு
புரிய வைக்கவும் முடிவதில்லை. முழு உலகின் மனிதர்கள்
படைப்பவரைப் பற்றியோ, படைப்பைப் பற்றியோ முற்றிலும் தெரிந்து
கொள்ளவில்லை எனும் போது ஒன்றுமே தெரிந்து கொள்ள வில்லை என்று
தான் அர்த்தம். இதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. நாடகம்
மீண்டும் நடக்கும். 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இந்த சமயம்
வரும், மேலும் நான் வந்து புரிய வைக்க வேண்டியிருக்கும்.
இராஜ்யத்தை எடுப்பது என்பது குறைந்த விஷயம் அல்ல. மிகவும்
உழைப்பு தேவை. மாயை நன்றாக போர் செய்கிறது, பெரிய யுத்தம்
நடக்கிறது. மல் யுத்தம் நடக்கிறதல்லவா! மிகவும் புத்திசாலியாக
உள்ளவர்கள்தான் மல் யுத்தம் செய்கின்றனர். என்றாலும் கூட ஒருவர்
மற்றவரை மயக்கமடையச் செய்கின்றனர் அல்லவா. பாபா மாயையின்
புயல்கள் நிறைய வருகின்றன, இப்படியெல்லாம் நடக்கிறது
என்றெல்லாம் சொல்கின்றனர். அதுவும் மிகச் சிலரே உண்மையை
எழுதுகின்றனர். பலர் மறைத்து விடுகின்றனர். நான் பாபாவுக்கு
எப்படி உண்மையை சொல்வது? எப்படி ஸ்ரீமத் எடுப்பது? என்ற புத்தி
இல்லை. விவரிக்க முடிவதில்லை. மாயை மிகவும் பலம் வாய்ந்தது
என்பது தந்தைக்குத் தெரியும். உண்மையை சொல்வதில் வெட்கம்
உண்டாகிறது, சொல்லவே வெட்கப்படும் படியான காரியம் அவர்களால்
ஏற்பட்டு விடுகிறது. தந்தையோ மிகவும் மரியாதை கொடுத்து மேலே எழ
வைக்கிறார். இவர் மிகவும் நல்லவர், இவரை ஆல் ரவுண்ட் (எல்லா
விதமான) சேவைக்கு அனுப்பி வைப்பேன். அவ்வளவு தான், தேக
அகங்காரம் வருகிறது, மாயையின் அடி கிடைக்கிறது இவர் விழுந்தார்.
பாபா எழ வைப்பதற்காக மகிமையும் செய்கிறார். செல்லமாக அன்புடன்
மேலே எழுப்புவேன். நீங்கள் மிகவும் நல்லவர். ஸ்தூலமான சேவையும்
கூட செய்வதில் வல்லவர். ஆனால் இலக்கு மிகவும் உயர்ந்தது என
சரியான விதத்தில் அமர்ந்து கூறுகிறார். தேகம் மற்றும் தேகத்தின்
சம்மந்தங் களை விட்டு விட்டு தன்னை அசரீரியான ஆத்மா எனப்
புரிந்து கொள்வது - இந்த முயற்சி புத்தியின் வேலையாகும்.
அனைவரும் முயற்சியாளர்கள். எவ்வளவு உயர்ந்த இராஜ்யம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் தந்தையின் குழந்தைகளாகவும்,
மாணவர்களாகவும், பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். இவர் முழு
உலகிற்கும் தந்தை ஆவார். அனைவரும் அந்த ஒருவரை அழைக்கின்றனர்.
அவர் வந்து குழந்தைகளுக்குப் புரிய வைத்தபடி இருக்கிறார்.
என்றாலும் கூட அந்த அளவு மரியாதை இருப்பதில்லை. பெரிய பெரிய
மனிதர்கள் வருகின்றனர், எவ்வளவு மரியாதையுடன் கவனித்துக்
கொள்கின்றனர். எவ்வளவு பகட்டு இருக் கிறது. இந்த சமயத்தில்
அனைவருமே தூய்மையற்றவர்கள். ஆனால் தம்மைப் பற்றி புரிந்து
கொள்வதில்லை. மாயை மிகவும் துச்ச புத்தியாக ஆக்கி விட்டது.
சத்யுகத்தின் ஆயுள் இவ்வளவு நீண்டது என்று சொல்லி விடுகின்றனர்,
அவர்களை 100 சதவிகிதம் புத்தியற்றவர்கள் என்று தந்தை சொல்கிறார்.
மனிதர் களாக ஆகி என்ன காரியங்களை செய்கின்றனர்! 5 ஆயிரம்
வருடங்களின் விஷயத்தை இலட்சக்கணக்கான வருடங்கள் என்று சொல்லி
விடுகின்றனர். இதையும் தந்தை வந்து புரிய வைக்கிறார். 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்பு இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம்
இருந்தது. இவர்கள் தெய்வீக குணமுடைய மனிதர்கள், ஆகையால் அவர்களை
தேவதைகள் என்றும், அசுர குணமுடையவர்களை அசுரன் என்றும்
சொல்லப்படுகிறது. அசுரர்கள் மற்றும் தேவதைகளுக்கிடையே இரவு
பகலுக்கான வேறுபாடு உள்ளது. எவ்வளவு சண்டை சச்சரவுகள்
ஏற்படுகிறது! ஏற்பாடுகள் நன்றாக நடக்கிறது. இந்த யக்ஞத்தில்
முழு உலகமும் சுவாஹா ஆக வேண்டும். இதற்காக இந்த அனைத்து
ஏற்பாடுகளும் தேவை அல்லவா! குண்டுகள் போட ஆரம்பித்தால்
நிறுத்தப்படுமா என்ன! சிறிது நேரத்தில் அனைவரிடமும் நிறைய
குண்டுகள் சேர்ந்து விடும், ஏனெனில் வினாசம் உடனடியாக நடக்க
வேண்டும் அல்லவா! பிறகு ஆஸ்பத்திரிகள் போன்றவை இருக்காது.
யாருக்கும் தெரியாது. சித்தி வீடு போன்றதல்ல. வினாசம்-
காட்சிகள் போன்றவை ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. எங்கும் தீ
பிடித்திருக்கும் காட்சி ஏற்படுகிறது, முழு உலகத்தின் தீயை
பார்க்க முடியுமா! முழு உலகமும் அழியப்போகிறது. எவ்வளவு பெரிய
உலகமாக இருக்கிறது. ஆகாயம் எரியாது. இந்த பூமிக்குள்
என்னவெல்லாம் இருக்கிறதோ, அனைத்தும் அழிந்து விடும். சத்யுகம்
மற்றும் கலியுகத்திற்கும் இரவு-பகலுக்குண்டான வித்தியாசம்
இருக்கிறது. எவ்வளவு அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள்,
விலங்குகள் இருக் கின்றன, எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன! இது
கூட குழந்தைகளுடைய புத்தியில் கஷ்டப் பட்டுத் தான் நிற்கிறது.
5 ஆயிரம் ஆண்டு களின் விஷயம் சிந்தித்துப் பாருங்கள்.
தேவி-தேவதை களின் இராஜ்யம் இருந்தது அல்லவா! எவ்வளவு குறைந்த
மனிதர்கள் இருந்தார்கள். இப்போது எவ்வளவு மனிதர்கள்
இருக்கிறார்கள்! இப்போது கலியுகமாகும், இது கண்டிப்பாக அழிய
வேண்டும்.
இப்போது பாபா ஆத்மாக்களுக்கு கூறுகின்றார் - என்னை மட்டும்
நினைவு செய்யுங்கள். இதையும் புரிதலோடு நினைவு செய்ய வேண்டும்.
அப்படியே சிவ-சிவ என்று நிறைய பேர் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள். சிறிய குழந்தைகள் கூட சொல்லி
விடுகிறார்கள் ஆனால் புத்தியில் எந்தப் புரிதலும் இல்லை. அவர்
புள்ளியாக இருக்கின்றார் என்று அனுபவத்தின் மூலம் சொல்வதில்லை.
நாமும் அவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கிறோம். இப்படி புரிதலோடு
நினைவு செய்ய வேண்டும். முதலில் நான் ஆத்மா - என்பதை உறுதி
செய்யுங்கள். பிறகு பாபாவின் அறிமுகத்தை நல்ல விதத்தில்
புத்தியில் தாரணை செய்யுங்கள். உள் நோக்கு முகமுடைய குழந்தைகள்
தான் நான் ஆத்மா புள்ளியாக இருக்கின்றேன் என்பதை நல்ல விதத்தில்
புரிந்து கொள்ள முடியும். ஆத்மாவாகிய நமக்குள் 84 பிறவிகளின்
நடிப்பு எப்படி நிரம்பியுள்ளது, பிறகு எப்படி ஆத்மா
சதோபிரதானமாக ஆகிறது என்ற ஞானம் இப்போது கிடைத்துக்
கொண்டிருக்கிறது. இவை யனைத்தும் மிகவும் உள்நோக்கு முகமுடையவர்
களாக ஆகி புரிந்து கொள்ள வேண்டிய விஷயங் களாகும். இதில் தான்
நேரம் பிடிக்கிறது. இது நம்முடைய கடைசிப் பிறவி என்பதை
குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். இப்போது நாம் வீட்டிற்குச்
செல்கிறோம். நாம் ஆத்மா என்பது புத்தியில் உறுதியாக இருக்க
வேண்டும். சரீர உணர்வு குறைந்தால் தான் பேசுவதில் மாற்றம்
இருக்கும். இல்லையென்றால் நடத்தை முற்றிலும் மோசமானதாகி
விடுகிறது ஏனென்றால் சரீரத்திலிருந்து பிரிவதே இல்லை.
தேக-அபிமானத்தில் வந்து எதையாவது சொல்லி விடுகிறார்கள்.
யக்ஞத்தில் மிகுந்த நேர்மை வேண்டும். இப்போது நிறைய அலட்சியம்
இருக்கிறது. சாப்பாடு, வழக்கம், சூழ்நிலை எதுவும் மாறவில்லை.
இன்னும் அதிக நேரம் வேண்டும். சேவாதாரிக் குழந்தைகளைத் தான்
பாபா நினைவு செய்கின்றார், அவர்கள் தான் பதவியையும் அடைய
முடியும். சும்மா வெறுமனே தங்களை சந்தோஷப்படுத்திக் கொள்வது
என்பது கடலையை மெல்லுவது போன்ற தாகும். இதில் மிகுந்த உள்
நோக்குமுகம் என்பது வேண்டும். புரிய வைப்பதற்கும் யுக்தி
வேண்டும். கண்காட்சியில் யாராவது புரிந்து கொள்கிறார்களா என்ன.
உங்களுடைய விஷயம் சரியானது தான் என்று மட்டும் சொல்லி
விடுகிறார்கள். இங்கேயும் கூட வரிசைகிரமம் என்பது இருக்கிறது.
நாம் குழந்தை களாக ஆகியுள்ளோம், நமக்கு பாபாவிடமிருந்து
சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்ற நிச்சயம் இருக்கிறது.
ஒருவேளை நாம் பாபாவினுடைய சேவையை முழுமையாக செய்தோம் என்றால்
நம்முடைய தொழிலே இது தான் ஆகும். முழு நாளும் ஞான சிந்தனை
நடந்து கொண்டே இருக்கும். இந்த பாபா(பிரம்மா) கூட ஞான சிந்தனை
செய்வார் அல்லவா. இல்லையென்றால் இவர் எப்படி பதவி அடைவார்.
குழந்தைகளுக்கு இருவரும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு இஞ்சின் கிடைத்திருக்கிறது ஏனென்றால் ஏற்றம் பெரியது
அல்லவா. மலையின் மீது செல்கிறார்கள் என்றால் வண்டிக்கு இரண்டு
இஞ்சின் பொருத்து கிறார்கள். சில நேரங்களில் போகப்போக வண்டி
நின்று விடுகிறது என்றால் வழுக்கி கீழே வந்து விடுகிறது.
நம்முடைய குழந்தைகளுக்கும் அப்படியே ஆகும். ஏறி-ஏறி, உழைத்து-
உழைத்து பிறகு ஏற்றத்தில் (உயரமாக) ஏற முடிவதில்லை. மாயையின்
கிரகணம் அல்லது மாயையின் புயல் ஏற்படும்போது ஒரேயடியாக கீழே
விழுந்து துண்டு- துண்டாகி விடுகிறார்கள். கொஞ்சம் சேவை
செய்தால் அகங்காரம் வந்து விடுகிறது, கீழே விழுந்து
விடுகிறார்கள். தந்தையின் கூடவே தர்ம ராஜனும் இருக்கிறார், நாம்
இப்படி செய்வ தினால் நம்மீது மிகப்பெரிய தண்டனை வந்து விடுகிறது
என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இதைவிட வெளியில் இருப்பதே
நல்லது. தந்தை யினுடையவராக ஆகி ஆஸ்தி எடுப்பது குறைந்த விஷயம்
அல்ல. தந்தையினுடையவராக ஆகி பிறகு அப்படிப்பட்ட (தவறான) காரியம்
எதையும் செய்து விட்டால் பெயர் கெட்டுப் போய்விடு கிறது.
மிகுந்த அடி விழுகிறது. வாரிசு ஆவது ஒன்றும் சாதாரண விஷயம்
அல்ல. பிரஜைகளில் கூட நிறைய பேர் செல்வந்தர் களாக ஆகிறார்கள்.
அஞ்ஞான காலத்தில் கூட சிலர் நல்லவர்களாக இருக்கிறார்கள், சிலர்
எப்படியெல்லாமோ இருக்கிறார் கள். தகுதியற்ற குழந்தைகளை, என்
முன்னால் நிற்காதே சென்று விடு என்று சொல்வார்கள். இங்கே ஓரிரு
குழந்தைகளின் விஷயம் அல்ல, இங்கே மாயை மிகவும் பலசாலியாக
இருக்கிறது. இங்கே குழந்தைகள் மிகவும் உள் நோக்குமுகமாக இருக்க
வேண்டும், அப்போது தான் யாருக்கும் புரிய வைக்க முடியும்.
அவர்கள் உங்களுக்கு பலியாவார்கள். பிறகு நாம் தந்தைக்கு இவ்வளவு
நிந்தனை ஏற்படுத்தினோம் என்று பச்சாதாபப் படுவார்கள்.
சர்வவியாபி என்று சொல்பவர்கள் அல்லது தன்னைத் தான் ஈஸ்வரன்
என்று சொல்பவர்களுக்கு தண்டனை என்ன குறைவாகவா இருக்கும்.
அவர்கள் அப்படியே தண்டனை அடையாமல் சென்று விடுவார்களா என்ன?
அவர்களுக்கு இன்னும் கஷ்டமாகும். நேரம் வரும்போது பாபா இவர்கள்
அனைவரிடமும் கணக்கு கேட்பார். இறுதி தீர்ப்பு நேரத்தில்
அனைவருடைய கணக்கு வழக்கும் முடிகிறது அல்லவா! இதில் மிகவும்
பரந்த புத்தி வேண்டும்.
மனிதர்கள் யார்-யாருக்கெல்லாம் அமைதியின் பரிசு கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்! இப்போது உண்மையில்
அமைதியை உருவாக்குபவர் ஒரே ஒருவர் தான். தூய்மை, அமைதி, செல்வம்
நிறைந்த உலகம் பகவானுடைய ஸ்ரீமத்படி ஸ்தாபனை ஆகிக் கொண்டி
ருக்கிறது என்று குழந்தைகள் எழுத வேண்டும். ஸ்ரீமத் என்பது
புகழ் வாய்ந்ததாகும். ஸ்ரீமத் பகவத் கீதை சாஸ்திரத்திற்கு
எவ்வளவு மதிப்பளிக்கின்றார்கள். யாராவது மற்றவருடைய சாஸ்திரத்
தையோ கோயிலையோ ஏதாவது செய்துவிட்டால் எவ்வளவு சண்டை போடுகிறார்
கள். இப்போது இந்த முழு உலகமும் எரிந்து சாம்பலாகி விடும்
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர் கள். இந்த கோயில்-மசூதி போன்ற
அனைத்தையும் எரித்துக் கொண்டே இருப்பார்கள். இவை யனைத்தும்
நடப்பதற்கு முன்னால் தூய்மையாக ஆக வேண்டும், இந்தக் கவலை
எப்போதும் இருக்க வேண்டும். குடும்பத்தையும் பார்க்க வேண்டும்.
இங்கே நிறைய பேர் வருகிறார்கள். இங்கே செம்மறி ஆட்டுக்
கூட்டத்தைப் போல் இருக்கக் கூடாது. ஏனெனில் இது விலைமதிப்பு
மிகுந்த வாழ்க்கையாகும், இதை மிகவும் பாதுகாத்து வைக்க வேண்டும்.
குழந்தைகள் போன்றோரை அழைத்து வருவது நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வளவு குழந்தைக ளை எங்கே வைத்து பராமரிப் பது! குழந்தைகளுக்கு
விடுமுறை கிடைக்கிறது என்றால் வேறு எங்கு செல்வது, மதுபனிற்கு
பாபாவிடம் செல்லலாம் என்று நினைக்கிறார்கள். இது தர்ம சாலையைப்
போல் ஆகி விடும். பிறகு எப்படி பல்கலைக்கழகமாக இருக்க முடியும்?
பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார், பிறகு குழந்தைகள் யாரையும்
அழைத்து வரக்கூடாது என்று எப்போதாவது கட்டளை பிறப்பிப்பார்.
இந்த பந்தனம் கூட குறைந்து போய் விடும். தாய்மார் களின் மீது
இரக்கம் ஏற்படுகிறது. சிவபாபா மறைமுகமாக இருக்கின்றார்
என்பதையும் குழந்தைகள் தெரிந்துள்ளனர். இவர் (பிரம்மா) மீது
கூட யாருக்கும் மதிப்பிருக்கிறதா என்ன? எங்களுக்கு சிவபாபாவோடு
நேரடி தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறார்கள். சிவபாபா தான்
இவர் மூலமாக புரிய வைக்கின்றார் என்பதைக் கூட புரிந்து
கொள்வதில்லை. மாயை மூக்கைப் பிடித்து தலைகீழான காரியங்களை
செய்ய வைத்து விடு கிறது, விடுவதே இல்லை. இராஜ்யத்தில் அனைவரும்
வேண்டும் அல்லவா. இவை யனைத்தும் கடைசியில் காட்சி ஏற்படும்.
தண்டனைகளின் காட்சியும் ஏற்படும். இந்த காட்சிகள் அனைத்தும்
குழந்தைகள் முன்பே பார்த்திருக்கிறார்கள். இருந்தாலும் கூட
பாவம் செய்வதை விடுவதில்லை. நிறைய குழந்தைகள் நான் மூன்றாம்
பிரிவில் தான் வருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டதைப் போல்
இருக்கிறார்கள், ஆகையினால் பாவம் செய்வதை விடுவதே இல்லை.
இன்னும் நன்றாக தங்களுடைய தண்டனைக்காக ஏற்பாடு செய்து
கொண்டிருக்கிறார்கள். இதைப் புரிய வைக்க வேண்டியதாக இருக்கிறது.
நாங்கள் மூன்றாம் பிரிவினராகத் தான் ஆவோம் என்று கங்கணம்
கட்டிக் கொள்ளாதீர்கள். நாங்கள் இலஷ்மி-நாராயணரைப் போலத்தான்
ஆவோம் என்ற கங்கணம் கட்டிக் கொள்ளுங்கள். சிலர் நல்ல கங்கணம்
கட்டிக் கொள்கிறார்கள். இன்று நாங்கள் எதையுமே செய்யவில்லை
என்று சார்ட் எழுதுகிறார்கள். இதுபோன்ற சார்ட்டை நிறைய பேர்
வைத்தார்கள், அவர்கள் இன்று இல்லை. மாயை மிகவும் பச்சாதாபப்பட
வைக்கிறது. அரைக்கல்பம் நான் சுகம் கொடுக்கின்றேன், பிறகு மாயை
துக்கம் கொடுக் கிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உள் நோக்கு முகமானவராக ஆகி சரீர உணர்விலிருந்து
விடுபட்டிருக்கும் பயிற்சி செய்ய வேண்டும். உணவு, பானங்கள்
மற்றும் நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும், வெறுமனே தனக்குத்
தானே மகிழ்ச்சியடைந்து அலட்சியமாகி விடக்கூடாது.
2) ஏற்றம் (இலக்கு) மிகவும் உயர்ந்ததாகும், ஆகையினால் மிக-மிக
எச்சரிக்கையாக நடக்க வேண்டும். எந்தவொரு கர்மத்தையும்
கவனத்துடன் செய்ய வேண்டும், அகங்காரத்தில் வரக் கூடாது.
தலைகீழான காரியங்களை செய்து தண்டனைகளுக்கு ஏற்பாடு
செய்யக்கூடாது. நாம் இந்த இலஷ்மி -நாராயணனைப் போல் ஆக வேண்டும்
என்ற கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும்.
வரதானம்:
ஆன்மிக தன்மையின் உயர்ந்த ஸ்திதியின் மூலமாக சுற்றுப்புற
சூழ்நிலையை ஆன்மிகமாக ஆக்கக்கூடிய சகஜ புருஷார்த்தி (எளிய
முயற்சியாளர்) ஆகுக!
ஆன்மிக ஸ்திதியின் மூலமாக தன்னுடைய சேவா கேந்திரத்தில்
அப்படிப்பட்ட ஆன்மிக வாய்வு மண்டலத்தை உருவாக்குங்கள், அதன்
மூலமாக தனக்கும் வரக்கூடிய ஆத்மாக்களுக்கும் சகஜ மான
முன்னேற்றம் ஏற்பட முடியும். ஏனெனில் யாரெல்லாம் வெளியிலிருந்து
களைப் படைந்து வருகிறார்களோ அவர்களுக்கு அதிகப்படியான (எக்ஸ்ட்ரா)
சகயோகம் அவசியம் ஏற்படுகிறது. ஆகையினால் அவர்களுக்கு ஆன்மிக
வாய்வு மண்டலத்திற்கான உதவியை கொடுங்கள், சகஜ புருஷார்த்தியாக
ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள். இந்த இடம் எளிமையாக (ஈசியாக)
முன்னேற்றத்தை செய்விக்கின்றது என்பது வரக்கூடிய ஒவ்வொரு
ஆத்மாவிற்கும் அனுபவம் ஆக வேண்டும்.
சுலோகன்:
வரதானியாகி சுப பாவனை மற்றும் சுபமான விருப்பத்திற்கான
வரதானத்தைக் கொடுத்துக்கொண்டே இருங்கள்.
அவ்யக்த பிரேரணை : - கம்பயிண்ட் ரூபத்தின் நினைவின் மூலம் சதா
வெற்றியாளர் ஆகுங்கள்.
பாபா இணைந்து (கம்பயிண்ட்) இருக்கிறார் ஆகையால் ஊக்க
உற்சாகத்தோடு முன்னேறி கொண்டே செல்லுங்கள். பலகீனங்கள், உள்ளம்
உடைந்த நிலைகளை பாபாவுக்கு அர்ப்பணம் செய்து விடுங்கள்.
தன்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள், தன்னிடம் வெறும் ஊக்கம்
உற்சாகத்தை வையுங்கள். உற்சாகத்தினால் நடனமாடி கொண்டே இருங்கள்,
பாடிக்கொண்டே இருங்கள் மற்றும் பிரம்மா போஜனம்
சாப்பிட்டுக்கொண்டே இருங்கள்.